Loading

தன் அருகில் ருத்ரமூர்த்தியாய் நின்றிருந்த ரிஷிகேஷை பயத்தில் முகம் வெளுக்க நோக்கினாள் சகுந்தலா.

“ஹலோ… சகுந்தலா கேட்குதா?” என மறுமுனையில் கமலி கேட்கவும் சகுந்தலாவை முறைத்துக் கொண்டே அழைப்பைத் துண்டித்த ரிஷிகேஷ் சகுந்தலாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.

வலியில் கண்கள் கலங்க, கன்னத்தில் கை வைத்தபடி ரிஷிகேஷை அதிர்ந்து நோக்கினாள் சகுந்தலா.

ரிஷிகேஷோ சகுந்தலாவின் கைப்பேசியில் ஏதோ செய்ய, மறு நொடியே கமலி பேசிய அனைத்தும் அதில் ஓடவும் சகுந்தலாவிற்கு பயத்தில் முகம் வெளுத்தது.

இளக்காரப் புன்னகையுடன் அனைத்தையும் கேட்ட ரிஷிகேஷ் சகுந்தலாவின் தாடையைப் பற்றி தனக்கு அருகில் இழுத்தான்.

“என்ன? எல்லாம் சொல்லிட்டாளா உன் ஃப்ரெண்ட்? இப்போ அதுக்கு என்ன செய்யப் போற? இங்க இருந்து தப்பிக்கலாம்னு பார்க்குறியா?” எனக் கேட்டான் ரிஷிகேஷ் நக்கலாக.

சகுந்தலா பதில் ஏதும் கூறாது கண்ணீர் வடிக்க, “என்ன? உன்ன மட்டும் ஏன் இன்னும் மிச்சம் வெச்சிருக்கேன்னு பார்க்குறியா? உன்னால எனக்கு ஆக வேண்டியது நிறைய இருக்கு.” என்றான் ரிஷிகேஷ் வன்மத்துடன்.

ரிஷிகேஷ் கூறியதைக் கேட்டு சகுந்தலாவின் விழிகளில் குழப்பம்.

ஆனால் சற்று நேரத்திலேயே ரிஷிகேஷ் கூறியதன் அர்த்தத்தை முழுதாக உணர்ந்து கொண்டாள் சகுந்தலா.

சகுந்தலாவை அழைத்துக் கொண்டு அங்கிருந்த மருத்துவமனை ஒன்றுக்கு கிளம்பிய ரிஷிகேஷ் சகுந்தலாவை ஒரு அறையில் விட்டு விட்டு மருத்துவரைக் காணச் சென்றான்.

சகுந்தலாவோ மருத்துவமனை வந்த காரணம் புரியாமல் குழப்பத்துடன் நின்று இருந்தாள்.

போதாக்குறைக்கு கமலி கூறியவைகளும் நினைவு வந்து சகுந்தலாவை அச்சத்தில் ஆழ்த்தியது.

சில நிமிடங்கள் கழித்து ரிஷிகேஷுடன் உள்ளே வந்த மருத்துவர் சகுந்தலாவை அழைத்துச் சென்று ஏதேதோ பரிசோதனைகளை மேற்கொண்டார்.

வேறு வழியின்றி அனைத்துக்கும் ஒத்துழைத்த சகுந்தலாவிற்கு குழப்பம் மட்டுமே மிஞ்சியது.

சற்று நேரத்திலேயே பரிசோதனை முடிவுகளும் வந்து சேர, “அவங்க பர்ஃபெக்ட்லி ஆல்ரைட். ஒரு கருவ தாங்குற சக்தி அவங்க கருப்பைக்கு இருக்கு. எந்தப் பிரச்சினையும் இல்ல. ஆனா கொஞ்சம் வீக்கா இருக்காங்க. பட் நோ ப்ரோப்லம். நாம இன்னைல இருந்தே ப்ரொசீஜர ஆரம்பிக்கலாம்.” என்றார் மருத்துவர் ஆங்கிலத்தில்.

“என்ன ப்ரொஸீஜர்?” எனக் குழப்பமாகக் கேட்ட சகுந்தலாவின் இதயம் திக் திக் என அடித்துக் கொண்டது.

“IVF…” என மருத்துவர் கூறிய மறு நொடியே அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்ற சகுந்தலா, “நோ… இதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன்.” என்றாள் எழுந்து நின்று.

கமலி கூறியதை எல்லாம் கேட்டு விட்டு நல்ல வேளை தான் இன்னும் கருத்தரிக்காமல் இருக்கிறோம் என சந்தோஷப்பட்ட சகுந்தலாவுக்கு இச் செய்தி பெரும் அதிர்ச்சி.

சகுந்தலாவை இழுத்து தன் அருகே உட்கார வைத்த ரிஷிகேஷ் அவளின் கரத்தை அழுத்தமாகப் பற்றி தன் கோபத்தை வெளிப்படுத்தினான்.

வலியில் முகத்தை சுளித்த சகுந்தலாவின் விழிகள் கண்ணீர் சிந்தின.

“நீங்க எல்லா ஏற்பாட்டையும் பண்ணுங்க டாக்டர். நாங்க ரெடி தான்.” என்ற ரிஷிகேஷ் சகுந்தலாவை இழுத்துக் கொண்டு வெளியே வந்தான்.

அவன் இழுத்த இழுப்புக்கு வந்த யாரும் இல்லாத ஒரு இடத்துக்கு வந்து சகுந்தலாவை ஒரு மூலையில் தள்ளி நிற்க வைத்த ரிஷிகேஷ், “ஒழுங்கா நான் சொல்ற மாதிரி செய். இல்லன்னா கொன்னுடுவேன். கல்யாணம் ஆகி இத்தனை மாசம் ஆகியும் வயித்துல ஒன்னுமே இல்ல. உன்னால வெளிய நான் பொட்ட மாதிரி தலை குனிஞ்சு நிற்கணுமா?” எனக் கேட்டான் கோபமாக.

தனக்குத் தான் விந்து உற்பத்தியில் குறை உள்ளது என வெளியே சொல்லாமல் சகுந்தலா மீது பழியை சுமத்தினான் ரிஷிகேஷ்.

அவனுக்கு தற்போது தேவையாக இருந்தது எல்லாமே சமூகத்திற்கு முன் தான் ஆண்மை உள்ளவன் என்று காட்டுவதற்காக ஒரு பிள்ளை மட்டுமே.

மற்றபடி அவனுக்கு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று எல்லாம் ஆசை இல்லை.

அதுவும் இன்றி ஆண் குழந்தை பிறந்தால் தன் தொழிலை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல வைக்க வேண்டும் என்றும் பெண் குழந்தை பிறந்தால் தன் தொழிலுக்கே அப் பெண்ணைப் பயன்படுத்த வேண்டும் என்ற வக்கிரமான எண்ணத்தைக் கொண்டு இருந்தான் ரிஷிகேஷ்.

“ப்ளீஸ்ங்க… அதை மட்டும் செய்ய வேணாம்.” என சகுந்தலா கெஞ்ச, ரிஷிகேஷ் அதனைக் காதில் வாங்கினால் தானே.

பட்டென அவளின் கன்னத்தில் ஒன்று விட்ட ரிஷிகேஷ், “என்ன டி? என்னையே எதிர்த்துப் பேசும் அளவுக்கு தைரியம் வந்துடுச்சா? ஒழுங்கா ட்ரீட்மென்ட்டுக்கு கோப்பரேட் பண்ணு.” என மிரட்டினான்.

சகுந்தலா எவ்வளவோ மறுத்தும் பிரயோசனம் இன்றி IVF ஆரம்பமானது.

சகுந்தலாவோ ரிஷிகேஷின் உயிரணுவைத் தான் தன் கரு முட்டையுடன் சேர்த்து கருக்கட்ட வைக்கப் போவதாகவே நம்பிக் கொண்டு இருந்தாள்.

ஆனால் சகுந்தலா அறியவில்லை வெளியே மிருகத்தை விட மோசமாக நடப்பவன் ஒரு ஆண்மை குன்றியவன் என்று.

அடுத்து வந்த ஒரு மாதத்திலேயே கருவுற்றாள் சகுந்தலா.

அந்த ஒரு மாதமும் மட்டும் ரிஷிகேஷ் அவளைத் தொல்லை செய்யவில்லை.

ஆனால் தன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் தவறவில்லை.

கர்ப்பம் உறுதி அடைந்ததில் இருந்தே சகுந்தலாவின் மனதில் பெரும் அழுத்தம்.

ரிஷிகேஷை மீறி அவளால் ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியாதது மட்டும் அவ்வளவு திண்ணம்.

இன்னொரு பக்கமோ தனக்கு துணையாக ஒரு ஜீவன் வந்து விட்டதை எண்ணி அவளின் அகம் மகிழ்ந்தது.

முதல் மூன்று மாதங்களும் மருத்துவரின் அறிவுரைப்படி சகுந்தலாவை நெருங்கவில்லை ரிஷிகேஷ்.

ஆனால் அவள் முன்னாலேயே வேறு பெண்களுடன் உல்லாசமாக இருந்தான்.

ஏற்கனவே இவற்றை எல்லாம் பார்த்துப் பார்த்து சலித்து விட்ட சகுந்தலாவோ ரிஷிகேஷின் அட்டூழியங்களை எல்லாம் இப்போது கிஞ்சித்தும் கண்டு கொள்வதில்லை.

தன்னைத் தன் போக்கில் விட்டாலே போதும் என்று இருந்தது அவளுக்கு.

சகுந்தலாவின் எண்ணம் எல்லாம் குழந்தையை நல்லபடியாக பெற்று எடுத்து விட வேண்டும் என்பது மட்டும் தான்.

சிறந்த மருமகன் போல சகுந்தலாவின் வீட்டுக்குக் கூட அழைத்து தகவல் சொல்லி இருந்தான் ரிஷிகேஷ்.

மாதவன் மற்றும் சரசு இருவருமே சகுந்தலாவிற்கு அழைத்து தம் மகிழ்ச்சியை வெளிப்படுத்த, கடமைக்கு அவர்களுடன் பேசினாள் சகுந்தலா.

சரசு பலவாறு அறிவுரைகள் வழங்க, “ம்ம்ம்… ம்ம்ம்…” எனக் கேட்டுக் கொண்ட சகுந்தலாவோ எதனையும் காதில் வாங்கவே இல்லை.

இந்த மூன்று மாதத்தில் தன் வயிற்றில் வளரும் மகவுடன் மனதளவில் மிகவும் நெருக்கம் ஆகி விட்டாள் சகுந்தலா.

எப்போதும் குழந்தையுடன் ஏதாவது பேசிக் கொண்டே இருப்பாள்.

திருமணத்திற்குப் பின் புன்னகை என்றால் என்ன விலை எனக் கேட்கும் நிலைமையில் இருந்தவளின் முகத்தில் இப்போது எல்லாம் ஒரு பிரகாசம்.

அவளின் வயிறு வேறு வளர் பிறையாய் வளர்ந்து சகுந்தலாவிற்கு மேலும் அழகு சேர்த்தது.

இவ்வாறே முதல் மூன்று மாதங்கள் கழிய, தன் நிஜ முகத்தை சகுந்தலாவிடம் காட்டினான் ரிஷிகேஷ்.

அதுவும் சகுந்தலா எதிர்பார்க்காத அளவு மிகவும் மோசமாகக் காணப்பட்டது.

அன்று ஒரு நாளும் இல்லாமல் ஏதோ பார்ட்டி என்று கூறி சகுந்தலாவை அழைத்துச் சென்றான் ரிஷிகேஷ்.

லண்டன் வந்து இத்தனை காலத்திற்கும் இது தான் முதல் முறை அந்த வீடு எனும் சிறையில் இருந்து வெளியே செல்கின்றாள் சகுந்தலா.

இயற்கைக் காற்று முகத்தை மோத, அதனை ஜன்னல் வழியே ரசித்தவாறு வந்த சகுந்தலா ரிஷிகேஷ் தன்னை எங்கு அழைத்து வந்துள்ளான் என்பதைக் கவனிக்கவில்லை.

கார் திடீர் ப்ரேக் போட்டு நிற்கவும் திரும்பிப் பார்த்த சகுந்தலாவிற்கு அதிர்ச்சியில் இதயம் ஒரு நொடி துடிக்க மறந்தது.

அது ஒரு உயர்தர பார். அதுவும் பெரிய ஹோட்டல் போன்று கட்டி இருந்தனர்.

அங்கு தான் சகுந்தலாவை அழைத்து வந்து இருந்தான் ரிஷிகேஷ்.

“இ…இங்க எதுக்கு?” எனக் கேட்டாள் சகுந்தலா அச்சத்துடன்.

அவளை விஷமமாகப் பார்த்து புன்னகைத்த ரிஷிகேஷோ, “உள்ள வா… நீயே தெரிஞ்சிப்ப.” என்றவன் சகுந்தலா மறுத்து வாய் திறக்க முன்னே அவளை இழுத்துக் கொண்டு உள்ளே சென்றான்.

உள்ளே சென்ற சகுந்தலாவிற்கோ அங்கு கண்ட காட்சிகளில் குடலைப் பிரட்டிக் கொண்டு வந்தது.

ஏனெனில் அங்கு அரை இருளில் ஆண்களும் பெண்களும் அரை நிர்வாணமாக, மிக நெருக்கமாக ஆடிக் கொண்டும் எல்லை மீறிக் கொண்டும் இருந்தனர்.

ரிஷிகேஷ் உள்ளே வரவும் அவனைக் கண்டு கொண்ட ஒரு வெளிநாட்டு ஆடவன் ரிஷிகேஷை நெருங்கி அவனை அணைத்து விடுவித்தான்.

“வெல்கம் டியூட். ஆல் ஆர் வெய்ட்டிங் ஃபார் யூ.” என்ற ஆடவனோ பயத்துடன் ரிஷிகேஷின் பின்னால் ஒளிந்து இருந்த சகுந்தலாவை மேலிருந்து கீழாகப் பார்வையாலேயே துகில் இருந்தான்.

“இஸ் திஸ் தி கேர்ள் யூ மென்ஷன்ட்?” எனக் கேட்டான் அப் புதியவன் ரிஷிகேஷிடம்.

பதிலுக்கு, “யெஸ்…” எனக் கூறிக் கண் அடித்தான் ரிஷிகேஷ்.

“வாவ்… சோ ஹாட் அன்ட் செக்சி.” என்ற அவ் ஆடவனோ ரிஷிகேஷின் முன்னாலேயே சகுந்தலாவைப் பச்சையாக வர்ணத்தான்.

அதனைக் கேட்டு சகுந்தலாவின் கண்களில் கண்ணீர் குளம் கட்டியது.

அவ்வளவு கீழ்த்தரமான, மோசமான வார்த்தைகள் அவை.

போதாக்குறைக்கு சகுந்தலாவை அசைய முடியாதவாறு ரிஷிகேஷ் பிடித்து வைத்து இருந்தான்.

புதியவன் சொன்னது கேட்டு வெட்கமே இல்லாமல் வாய் விட்டு சிரித்த ரிஷிகேஷோ பெருமையாக தன் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டான்.

“இஸ் எவ்ரித்திங் ரெடி?” எனக் கேட்டான் ரிஷிகேஷ்.

“யெஸ்… ஆல் ஆர் ஈகர்லி வெய்ட்டிங் ஃபார் யுவர் அரைவல்.” என்ற அப் புதியவன் அங்கு இருந்த ஒரு அறையைக் கை காட்டினான்.

உடனே அவனுக்குத் தலை அசைத்து விட்டு சகுந்தலாவை இழுத்துக் கொண்டு சென்றான் ரிஷிகேஷ்.

ஏதோ பெரிய அசம்பாவிதம் நடக்கப் போவதை உணர்ந்த சகுந்தலா ரிஷிகேஷின் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ளப் போராடினாள்.

ஆனால் ரிஷிகேஷின் பிடியோ மேலும் இறுகியதே தவிர சகுந்தலாவை விட்ட பாடில்லை.

அவ் அறையை நோக்கி சகுந்தலாவை இழுத்துக் கொண்டு நடந்த ரிஷிகேஷின் மீது அங்கிருந்த பெண்கள் மாறி மாறி வந்து மிக நெருக்கமாக உரசினர்.

ரிஷிகேஷோ சகுந்தலாவை ஒரு கையால் பிடித்துக் கொண்டு மற்ற கையால் அப் பெண்கள் ஒவ்வொருவரையும் அணைத்து இதழ் முத்தம் இட்டு விட்டு விடுவித்தான்.

சகுந்தலாவிற்கோ இவற்றை எல்லாம் காணும் போது அங்கேயே உயிரை மாய்த்துக் கொள்ளத் தான் தோன்றியது.

ஆனால் அதற்குக் கூட வலி இல்லாமல் செய்து விட்டான் ரிஷிகேஷ்.

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
9
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்