
அத்தியாயம் -19
சரி இப்ப சொல்லு.. எங்க இருக்கடா.?” என்று கனிவாகவே ரூபன் வினவ, ஆதிராவோ மீண்டும் “சொல்ல மாட்டேன்” என்றதில் கீழறங்கிய வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியதில் “ஆதி ரொம்ப விளையாடற.. எப்பவும் பொறுமையா இருக்க மாட்டேன்” என்றவன் பல்லை கடித்தான்.
“ப்ச் அபி இப்ப உனக்கு என்ன தான் வேணும்.?” – ஆதிரா
“நீ எங்க இருக்கனு கேட்டுட்டு இருக்கேன்.. அதுக்கு பதில் சொல்றீயா நீ.?” – ரூபன்
“நான் தான் நீ முதல்ல கேட்டதுமே பதில் சொல்லிட்டனே.? அப்பறம் எனத்துக்கு திட்டுட்டு இருக்க.?” – ஆதிரா
“எங்க பதில் சொன்ன.? சொல்ல மாட்டேனு தான் மறுபடியும் மறுபடியும் சொல்லி என் பொறுமையை சோதிச்சுட்டு இருக்க..” – ரூபன்
“ஹலோ உண்மையாவே நான் சொல்ல மாட்டேன் ரெஸ்டாரண்ட்டுல தான் இருக்கேன்” என்றதில் என்னது.? என்று அதிர்ந்து கத்திய ரூபன் “உன்னைய வெச்சுட்டு.? சொல்றதை தெளிவா சொல்றதுக்கு என்னடி.?” என்று உரிமையாகவே கடிந்து கொண்டான்.
(உண்மையாவே இப்படி ஒரு ரெஸ்டாரண்ட் இருக்கானு கேட்காதீங்க.. சத்தியமா ஊட்டி போற வழில இப்படி ஒண்ணு இருக்கு.. சாப்படலாம்னு அங்க போய் உட்கார்ந்த நேரம் என் அண்ணன் ஒருத்தன் போன் பண்ண..
எங்க இருக்கேனு கேட்க.. நானும் ஆதிரா சொன்னதை போலவே சொல்ல அவன் கடுப்பானது தான் மிச்சம்.. ஹஹஹஹ அதைய இப்ப நினைச்சாலும் ரொம்ப சிரிப்பா இருக்கு.. வீட்டுக்கு வந்து விடாம கொட்டு வாங்குனது எல்லாம்🤧🤧😒😒😒)
“ம்ம்ம்ம்க்க்கும் இவங்க இப்படி பேரு வெச்சதுக்கு நான் என்ன பண்ண முடியும்.?” என்று நொடித்து கொண்டு “நான் எங்க இருந்தா உங்களுக்கு என்ன.? நீங்க தான் என்னைய லவ் பண்ணலயே.?” என்று அதே பல்லவியை பாடினாள்.
இப்போது ஆடவனை மௌனம் குடி கொண்டு விட்டது.. வேணுமென்றே “நான் போனை வெக்கறேன்” என்று ஆதிரா கூறினாலும் அழைப்பை துண்டிக்காமல் இருக்க, அப்போதும் ரூபனிடம் பதில் இல்லை.
மூச்சை இழுத்து தன்னிலைப்படுத்தி “அபி இருக்கீயா.?” என்று மென்மையாக கேட்டதில் “என்கிட்ட பேசற நேரத்துல ஒரு நிமிசம் கூட என் காதலை நீ உணரலயா ஆதி.?” என்று அவளிடமே வினாவை எழுப்பினான்.
அவனிடம் இருந்து இப்படி ஒரு கேள்வி எழும் என்பதை நினைத்து பார்க்காதவள் புள்ளி மானை போல் துள்ளி எழுந்து தோழியை கட்டி கொண்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்திட, “லூசு என்னடி பண்ற.?” என்று கத்த வந்தவளின் வாயில் பிரியாணியை அள்ளி திணித்து “என்ஜாய் காவு.. இன்னைக்கு என் டிரீட்டு.. என்ன வேணாலும் வாங்கி சாப்பிட்டுக்கோ” என்றாள் ரூபனுக்கு கேட்காதவாறு.
“என்ன அண்ணன் சம்மதம் சொல்லிட்டாங்களா.?” என்று காவ்யா கேட்டதற்கு “எஸ்ஸூ.. என் நடிப்பு வீண் போகல” என்று சந்தோசத்தில் மிதந்து பின்பு “நீ சாப்பிடு நான் பேசிட்டு வர்றேன்” என்று அங்கிருந்து நகர்ந்து வேறிடம் சென்றாள் ஆதிரா.
“ம்ம்ம்க்க்க்கும் ஆளு வந்ததும் உயிர் நட்பை தனியா விட்டுட்டு போகுது பாரு.. காலங்காலமா தோழன் தோழிக்கு இதுதான் நடக்குது.. நான் தனியா இருந்தாலும் கெத்துடி கெத்து” என்று தனியாக வீரவசனம் பேசி கொண்டிருந்தவளிடம் வந்தான் ரஞ்சித்.
“என்ன சொன்னீங்க.? எனக்கு சரியா கேட்கல.?” என்று அவளுக்கே உரிய குறும்புடன் ஆதிரா கேட்டிட, “விளையாடாத ஆதி.. எனக்கு கோவம் வரும்” என்று சற்று கண்டிப்புடனே ரூபன் கூறினான்.
“ரொம்ப சாதுவா இருந்தீங்களே உங்களுக்குள்ள இப்படியொரு கோவ மன்னன் இருக்கானா என்ன.?” – ஆதிரா
“ரொம்ப பயந்து போய் உனக்கு போன் பண்ணுனா.. நீ விளையாடிட்டு இருக்க.?” – ரூபன்
“ஹே அபி.. அது சும்ம்ம்மா சொன்னது..” – ஆதிரா
“அது எனக்கு எப்படி தெரியும்.?” – ரூபன்
“தப்புதான்.. அதுல தான் ஒரு நல்லது நடந்துருக்கு” – ஆதிரா
“நல்லதா.?” – ரூபன்
“ம்ம்ம்ம் அதனால தான் உன் காதலை எனக்கு குடுத்துட்டீயே..” என்றதும் லேசாக குறுநகை புரிந்த ரூபன் “இல்லனாலும் மொத்த காதலையும் உனக்கு தான் குடுத்துருப்பேன்” என்றான் புன்னகை மலருடன்.
“ம்ம்ம்க்க்க்கும் இதெல்லாம் நல்லா பேசுங்க.. நான் கேட்டப்ப மட்டும் வாயை திறக்கறது இல்ல.. என்ன தான்டா உன் பிரச்சனை.?” என்று அலுத்து கொண்டு ஆதிரா கேட்டிட, “ஹலோ ஆதி.. நான் அமைதியா இருந்தாலும் நீ அப்படியே விட்டுட்டீயா என்ன.? என்று கேலியுடன் வினவினான் ரூபன்.
“அதெப்படி விட முடியும்.? இது என் வாழ்க்கை ஆச்சே.. அது உன்கிட்ட இருக்கறப்ப சரிதான் போடானு விட முடியுமா.?” – ஆதிரா
“பட் வீட்டுல மாப்பிள்ளை பார்த்துருக்காங்கனு சொன்ன.?” – ரூபன்
“ஆமா யாரு இல்லனு சொன்னா.?” – ஆதிரா
“லூசாடி நீ.?” – ரூபன்
அவனின் உரிமையான பேச்சில் தலையை லேசாக சாய்த்து “ஆமாடா.. உன் மேல லூசாகிட்டேன் தான்.. எப்ப என்னையும் உன் கூடயே கூட்டிட்டு போவ.?” என்று கேட்டதில் மறுபுறம் இருந்த ரூபன் தலையில் அடித்து கொண்டான்.
“ஆதி விளையாடாத.. வீட்டுல என்ன சொல்லிருக்க.?” என்று அதிலே ரூபன் நிற்க, “இன்னும் எதுவும் சொல்லல அபி.. முதல்ல நான் ரஞ்சித் கிட்ட பேசிட்டு அப்பறம் வீட்டுல பேசிருவேன்..” என்று தெளிவாக உரைத்தாள்.
“மேடம் தெளிவா தான் இருக்கீங்க போல.. பயம் எதுவும் இல்லயா.?” – ரூபன்
“ஏன் உனக்கு இருக்கா.?” – ஆதிரா
“இந்த நக்கல் தான் வேணாங்கறது..” – ரூபன்
“ஹஹஹ பயந்தா எப்படி.? பிடிச்சவன் கூட வாழ போற வாழ்க்கையை நினைச்சாலே தானா தைரியம் வந்துரும் அபி.. உனக்கு பயமா இருந்தா சொல்லு.. உனக்கும் சேர்த்து நானே பேசறேன்” என்றாள் குறும்புடன்.
“ஆஹான் சொல்றேன் மேடம் சொல்றேன்..” என்று ரூபனும் கேலியுடன் உரைத்து “வீட்டுக்கு வந்ததும் பேசலாம் ஆதிமா.. நீ உன் ப்ரெண்ட்ஸ் கூட என்ஜாய் பண்ணு.. மறுபடியும் இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பம் கிடைக்காம போகவும் வாய்ப்பு இருக்குமா” என்றதில் புன்னகை புரிந்தாள் பெண்ணவள்.
பின்பு “ம்ம்ம்ம்ம் ஆனா சொல்ல வேண்டியதை இன்னும் நீங்க சொல்லலயே” என்றிட, அவள் எதை கூறுகிறாள் என்பது முதலில் புரியாமல் முழித்தவன் பின்பு “அந்த மூன்று எழுத்தை சொன்னா தான் காதல் இருக்குனு அர்த்தம் இல்ல ஆதிமா..” என்று சொல்லாமல் சொல்லி விட்டான் அந்த வார்த்தையை இப்போது கூற மாட்டேன் என்று.!!
முகத்தை சுருக்கியவள் “சரிதான்.. பார்த்துருக்கறேன்” என்று செல்லமாக முணுமுணுத்தவள் “அன்னைக்கு மாதிரி அப்பறம் பேசறேனு சொல்லிட்டு பேசாம இருந்த மாதிரி இப்பவும் இருந்தீங்க தேடி வந்து சட்டையை பிடிச்சு கேட்பேன் ஏன்டா பேசலனு.?” என்று மிரட்டலுடன் போனை வைத்தாள்.
அவனவளின் மிரட்டலில் சின்ன சிரிப்புடன் அமர்ந்திருந்த ரூபனிடம் வந்த அசோக் “என்ன சார் கமிட்டா.? இனி நாங்க எல்லாம் உங்க கண்ணுக்கு தெரிய மாட்டோமே.?” என்று கண்சிமிட்டி வினவ, “டேய்” என்று கையை மடக்கி வலிக்காதவாறு அவனின வயிற்றில் குத்திய ரூபன் “முதல்ல சார் எப்ப ஊருக்கு போறீங்க.? அம்மாவை பார்க்கணும்னு ஆசையே இல்லையாடா.?” என்று பேச்சை மாற்றினான்.
உடனே அசோக்கின் முகம் சுருங்கி விட்டது.!! அவனுக்கு மட்டும் என்ன ஆசையா அவர்களை பார்க்காமல் இருக்க வேண்டும் என்று.!! தந்தையின் இறப்பிற்கு பிறகு குடும்ப பாரம் இவன் தலையில் ஏறி விட்டதே.!! உடன்பிறந்த இரு தமக்கைகளின் வாழ்வும் இவன் கையில்.!!
முதல் தமக்கைக்கு எப்படியோ திருமணம் செய்து வைத்து விட்டான்.. ஆனால் இரண்டாவது தமக்கையின் வாழ்வு மட்டும் இன்னும் நின்ற இடத்திலே கேள்வி குறியாக நிற்கிறது. தான் செல்லும் போதெல்லாம் அதை கூறி கண்ணீர் விடும் அன்னையையும், சிரிப்பை தொலைத்து மரித்து நிற்கும் தமக்கையையும் காண சகிக்காமல் தான் இங்கயே கிடக்கிறான்.
இவன் வீட்டிற்கு செல்லும் போதெல்லாம் இன்னும் திருமணமாகாமல் தமக்கை ஒருத்தி வீட்டில் இருப்பதையே மறந்து விட்டு அவளின் முன்பே உறவினர்கள் இவனை திருமணம் செய்து கொள்ள கூறுவதை கேட்டு இரவில் கணக்கின்றி தலையணையை நனைக்கும் தமக்கையின் கண்ணீர் துளிகளை பார்க்க விரும்பாமல் குடும்பத்தை பார்க்கும் எண்ணத்தை மறந்து விட்டிருந்தான்.
நண்பனின் குடும்ப நிலை ரூபனும் அறிந்திருந்ததால் மௌனமாக மனம் வருந்தி நிற்கும் அசோக்கிடம் ஆறுதலாக “கண்டிப்பா அக்காக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கும்டா.. கவலைப்படாத” என்று சமன்படுத்திட, அப்போதும் அசோக்கின் முகம் தெளிவடையவில்லை.
விரக்தியுடன் “எத்தனை தடவை தான் பொம்மை மாதிரி வர்றவங்க முன்னாடி அக்கா நிற்பாங்க.. எனக்கே வெறுத்துருச்சுடா.. அவ மனசு எவ்ளோ காயப்பட்டுருக்கும்.. அது புரியாம சொந்தக்காரங்க வேற அவ முன்னாடியே அவளை விட்டுட்டு என்னைய கல்யாணம் பண்ணிக்க சொல்றாங்க..
வீட்டுக்கு போலாம்னு கடலளவு ஆசை இருக்குடா.. ஆனா இதைய எல்லாம் நினைச்சா இங்கயே யாரும் இல்லாம இருந்தரலாம்னு தோணுது.. அக்காக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சு குடுக்காம என் கல்யாணத்தை எல்லாம் யோசிக்க மாட்டேன்..
ஒரு வேளை அவளுக்கு கல்யாணமாகாம போனாலும் நானும் கடைசி வரைக்கும் இப்படியே இருக்கவும் தயாரா இருக்கேன்.. இப்ப என் வாழ்க்கையை விட அவ வாழ்க்கையை நினைச்சு தான் ரொம்ப கவலையா இருக்கு..” என்றான் வேதனை பொங்க.
“லூசு மாதிரி பேசாதடா.. அதெல்லாம் அக்காக்கு நல்ல இடத்துல கல்யாணமாகும்.. என் வார்த்தை கண்டிப்பா பலிக்கும் பாரு..” என்று அவனை ஆறுதல்படுத்திய ரூபனின் மனதும் நண்பனுக்காக வருந்தியது இவனின் வாழ்வும் இப்படியே சென்று விடுமோ என்று.!!
ஆனால் கடவுள் தான் ஏற்கனவே இவனின் வாழ்வை ஒரு பெண்ணுடன் முடிச்சு போட்டு விட்டாரே.!!!
அது யாராக இருக்கும்.????? ஜொல்லுங்க பார்ப்போம்.. துருவினி or காவ்யா.???
நண்பனின் மனநிலையை கெடுக்க விரும்பாத அசோக் “என் பிரச்சனையை விடு.. தங்கச்சி என்ன சொன்னாங்க.?” என்று பேச்சை மாற்றிட, “சாதாரணமா சும்ம்ம்மா விளையாண்டேனு சொல்றாங்க.. என்னத்த சொல்றது.?” என்று நொந்தான் ரூபன்.
“ஹஹஹஹஹஹ உன் நிலைமையை நினைச்சா எனக்கு சிரிப்பா வருது ரூபன்.. நான் கூட அவங்க சொன்னதை உண்மைனு நம்பி பதறிட்டேன்..” என்ற அசோக்கை முறைத்த ரூபன் “நானும் பயத்துட்டேன்டா.. துருவினி சொன்னப்ப கூட நம்பல..” என்றான் அலுத்து கொண்டு.
“ஆனா அந்த பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணுடா..” – அசோக்
“யாரு ஆதிராவா.?” – ரூபன்
“இல்ல அவங்க தங்கச்சிடா.. அவங்க இடத்துல வேற யாராவது இருந்துருந்தா வீட்டுல போட்டு குடுத்துட்டு தான் மறுவேலை பார்த்துருப்பாங்க” – அசோக்
“ம்ம்ம்ம் துருவினி நல்ல பொண்ணுடா.. ஒரு தடவை தான் அவங்க கூட பேசுனேன்.. மறுபடியும் சிவா அண்ணா வீட்டுக்கு சாப்பட போனப்ப பார்த்தேன்.. அவ்ளோ பாசமா பேசுனாங்க” என்ற ரூபன் அன்றைய நினைவில் புன்னகைத்தான்.
“எப்படியோ நீ நல்லா இருந்தா அதுவே எனக்கு ரொம்ப சந்தோசம்டா” என்று உண்மையான அக்கறையில் அசோக் உரைத்திட, “உன் நல்ல மனசுக்கு நீயும் நல்லா இருப்ப பாரு..” என்று ரூபனும் கூறினான்.
தொடரும்..
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
1
+1
+1
