Loading

பூகம்பம் – 17

எனக்கு எங்க அண்ணன் இருக்கான்.?” என்றவளை முறைத்து “என் அண்ணன் கிட்ட பேசுனு சொன்னேன்..” என்றிட, அப்போதும் ஒன்றும் புரியாமல் “உனக்கு எங்கடி அண்ணன் இருக்கான்.? அப்படி இருந்தாலும் நான் ஏன் அவங்க கிட்ட பேசணும்.?” என்று ஆதிரா கேட்டது தான் தாமதம் அங்கிருந்த புத்தகத்தை எடுத்த காவ்யா அவளின் நடுமண்டையிலே அடித்தாள்.

“இந்த மூளை இப்படி கேட்குமா.? கேணத்தனமா ஏதாவது கேட்குமா.?” என்று விடாமல் காவ்யா அடிக்க, “எருமை எருமை விடுடி.. கொரங்கே இப்படி அடிக்கற.?” என்று தலையை தேய்த்து கொண்டு நகர்ந்து அமர்ந்தாள் ஆதிரா.

“அப்பறம் அடிக்காம கொஞ்சுவாங்களா.? உன் ஆளு எனக்கு அண்ணன் தானே.?” – காவ்யா

“ஓஓஓஓ நீ அப்படி வந்தீயா.?” – ஆதிரா

“வேணாம்டி அமைதியா போய்ரு” – காவ்யா

“சாரி சாரி இப்பவே உன் அண்ணன் கிட்ட பேசறேன்..” என்று ஹாலில் வைத்திருந்த அலைப்பேசியை எடுக்க ஆதிரா ஓட, ‘இதுக்கு மட்டும் எவ்ளோ அவசரம் பாரு’ என்று காவ்யா முணுமுணுத்தாள்.

“போன் பண்ணிரலாமா.?” – ஆதிரா

“முதல்ல நம்பர் வெச்சுருக்கீயா.?” – காவ்யா

“ரொம்ப டேமேஜ் பண்ணாத.. அதெல்லாம்  வெச்சுருக்கேன்..” – ஆதிரா

“ஹேய் எப்புறா.??” – காவ்யா

“நேத்து தான் சிவா மாமா போனுல இருந்து சுட்டுட்டேன்.. யூஸ் ஆகுமேனு” என்றவளை காறி துப்பிய காவ்யா “வெக்கமா இல்ல இதை வேற கெத்தா சொல்ற.?” என்று கேட்டாள் கேலியுடன்.

அதை கண்டு கொள்ளாமல் ரூபன் எண்ணிற்கு அழைப்பு விட, “ஏன்டி பயமா இல்லயா.?” என்று அதிமுக்கியமான வினாவை காவ்யா எழுப்பிட, “அதெல்லாம் உன்னைய மாதிரி ஆளுகளுக்கு தான் வரும்..” என்றாள் நக்கலாக.

ரூபன் வேலை செய்வதும் ஐடி கம்பெனியில் தான்.. அவனுக்கும் வொர்க் ப்ரம் ஹோம் என்பதை ஆதிராவும் அறிந்திருந்ததால் தான் உடனே அவனுக்கு அழைப்பும் விடுத்தது.

அப்போது தான் மடிக்கணினியின் அருகில் அமர்ந்த ரூபன் புது எண்ணில் இருந்த வந்த அழைப்பை யோசனையாக கண்டான்.. ‘யாருடா அது.? புது நம்பரா இருக்கே.?’ என்று குழப்பத்திலே அழைப்பையும் ஏற்று காதில் வைத்து “ஹலோ” என்றான்.

அவ்வளவுதான் ஆதிராவுக்கு இதயம் படபடவென அடிக்க தொடங்கியது.. நெடு நாட்கள் கழித்து கேட்ட ஆடவனின் குரலும் அவளை வாயடைக்க செய்திருந்தது. ஏதோ ஒரு தைரியத்தில் அழைத்து விட்டாள்.. ஆனால் பேச வார்த்தை வராமல் போக, மறுபடியும் “ஹலோ யாருங்க.?” என்று வந்த ரூபனின் வார்த்தையில் தடுமாறியவள் அழைப்பை துண்டித்தும் விட்டாள்.

‘யாருடா இது.?’ என்று நினைத்த ரூபனும் அப்படியே விட்டும் விட்டான்.

போனை வைத்த பிறகே பெண்ணவளால் சீராக மூச்சு விட முடிந்தது.. ஆடவனின் குரலில் விவரிக்க இயலாத உணர்வுகள் அவளை ஆட்கொண்டது. எவ்வளவு நாட்களாகி விட்டது இந்த குரலை கேட்டு.? மனமும் மகிழ்ச்சியில் துள்ளியது. ஆர்ப்பரித்து குதித்தது.

“இதுதான் உன் தைரியமோ.?” என்று காவ்யாவின் வெடிச்சிரிப்பில் தான் ஒருத்தி தனனருகில் அமர்ந்திருக்கிறாள் என்பதையே உணர்ந்த ஆதிரா “அது.. அது..” என்று சமாளிக்க வழியின்றி அசடு வழிந்து தலையை குனிந்தாள்.

“சரி போனை குடு.. நான் பேசறேன்” – காவ்யா

“வேணாம்..” – ஆதிரா

“ஏன் லூசே.?” – காவ்யா

“நானே பேசறேன்..” – ஆதிரா

“பேசுவீயா.?” – காவ்யா

“ஏன் பேசாம என்ன.?” என்ற ஆதிரா மீண்டும் அழைப்பு விடுவிக்க, “ஹலோ மேடம் ஸ்பீக்கர்ல போடவும்” என்றதோடு நிற்காமல் போனை பிடுங்கி காவ்யாவே ஸ்பீக்கரில் போட்டாள்.

மறுபடியும் வந்த அழைப்பை புருவம் சுருங்க கண்ட ரூபன் ‘யாரு இப்படி விளையாடிட்டு இருக்கறது.?’ என்று சிந்தனையில் “ஹலோ யாருங்க நீங்க.?” என்று சாந்தமான குரலில் வினவிட, மெல்லிய குரலில் “பேசுடி பேசு” என்று தோழியை கிள்ளினாள் காவ்யா.

“ப்ச் இருடி” என்ற ஆதிரா எச்சிலை விழுங்கி “ஹலோ” என்ற குரலிலே யாரென்று கண்டு கொண்டான் அவளின் ரூபன். மறக்க கூடிய குரலா அவளுடையது.? இன்ப அதிர்ச்சியில் துள்ளி குதித்தது அவனின் மனது.

அதீத சந்தோசத்தில் “ஆதி” என்றழைத்திட, தானாக விரிந்து புன்னகை மொட்டை வெளியிட்டது மங்கையவளின் அதரங்கள். “ஆதியா.? பாருடா.. ம்ம்ம்ம் நடத்துங்க நடத்துங்க” என்று ஹஸ்கி குரலில் காவ்யா நக்கலடித்து சிரித்தாள்.

இம்முறை “ஹலோ இருக்கீங்களா.?” என்று ஆதிரா வினவ, அதில் சுயத்திற்கு வந்து “ம்ம்ம்ம் சொல்லுங்க ஆதி” என்றவனிடம் எதை சொல்வது.? என்று புரியாமல் இவள் தவிக்க, பெண்ணவளின் தவிப்பை அவன் உணர்ந்தது போல் “என் நம்பர் எப்படி கிடைச்சுச்சு.?” என்று பேச்சை வளர்த்தான்.

“சிபிஐ வெச்சு கண்டுபிடிச்சேன்..” – ஆதிரா

“கிண்டலா.?” – ரூபன்

“பின்ன கேட்கற கேள்வியை பாரு.. உங்க நம்பர் எனக்கு கிடைக்கறது என்ன உலக அதிசியமா.?” – ஆதிரா

சிவா அண்ணனிடம் வாங்கி இருப்பாளோ.? என்று நினைத்ததும் பதற்றம் அவனை தனக்குள் இழுத்து கொண்டு ‘அய்யோ சிவா அண்ணா என்ன நினைச்சிருப்பாங்க.?’ என்று பதறினாள்.

“ஆதி சிவா அண்ணன் கிட்ட இருந்தா வாங்குன.?” என்று ரூபன் கேட்டிட, “கொஞ்சம் திருத்தம் அவரு குடுக்கல.. நானே அவரு போன்ல இருந்து சுட்டுட்டேன்” என்றதை பார்த்து தான் ஆடவனின் மனது சீராக இயங்க தொடங்கியது.

“நீங்க சம்மதம்னு சொல்லாம எல்லாம் நான் சிவா மாமாகிட்ட எதுவும் சொல்ல போறது இல்லை.. பயப்படாதீங்க..” என்றிட, “ம்ம்ம்ம்” என்றதும், “இன்னும் நான் கேட்டதுக்கு பதில் வரலயே.?” என்று அவளின் கேள்வியில் நின்றாள்.

இப்போது மௌனம் குடி கொண்டு விட்டது அவனை.!! “ப்ச் இதுக்கு மட்டும் பதில் சொல்ல மாட்டிங்களே.?” என்று அலுத்து கொண்டு “நாளைக்கு நான் ஊட்டிக்கு ப்ரெண்ஸூக கூட டூர் போறேன்.. அதைய சொல்ல தான் கூப்பிட்டேன்” என்று உண்மையும் பொய்யும் கலந்து கூறினாள்.

சுற்றுலா செல்வது உண்மை.. ஆனால் அழைப்பிற்கான காரணம் பொய்யாயிற்றே.!! ‘அடிப்பாவி’ என்று வாயில் கை வைத்து கொண்டாள் காவ்யா.!! கண்சிமிட்டிய ஆதிரா சும்ம்ம்மா என்று வாயசைத்து விட்டு “இதுக்கும் பதில் இல்லயா.? சரி விடுங்க.. நான் போனை வெக்கறேன்” என்றாள் சலிப்புடன்.

“பார்த்து போய்ட்டு வா ஆதி.. தனியா எங்கையும் போகாதமா.. கொஞ்சம் வாலுத்தனத்தை குறைச்சுட்டு என்ஜாய் பண்ணிட்டு வா” என்று பதிலளித்து பெண்ணவளை மென்னகை புரிய வைத்து விட்டான் அவளின் காதலன்.

முதல் தடவை போனில் பேசியதில் காதலர்கள் இருவரும் மத்தாப்பு பூவாய் முறுவலித்தனர் போனை பார்த்தவாறே.!!!

சுற்றமும் மறந்து

போகிறேனடா(டி)

உன்னுடன் பேசுகையில்

மட்டும்.!!!

“சும்ம்மா சொல்ல கூடாதுடி அண்ணன் ரொம்ப சாந்தமா பேசறாரு..” என்று முதலில் கூறிய காவ்யா பின்பு “நல்லவேளை நான் கூட டூர் போக வேணாம்னு சொல்லிருவீயோனு பயத்துட்டேன்” என்று நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

“ஏன் போகாம இருக்கணும்.. போக தான் போறோம்.. நாளைக்கு ரஞ்சித்துக்கு இருக்குடி.. பார்த்துக்கறேன்” என்று ஆதிரா பொருமிட, ‘இவ என்ன பண்ண காத்திருக்காளோ.?’ என்று காவ்யாவால் நினைக்க தான் முடிந்தது.

சுற்றுலா செல்ல ஒவ்வொருவராக வர, ஆதிரா எப்போது வருவாள் என்று ஆவலாக காத்திருந்தான் ரஞ்சித். கடைசியாக தான் காவ்யாவும் ஆதிராவும் வர, தூரத்திலே ரஞ்சித்தை பார்த்து விட்ட ஆதிரா அடிக்க ஏதாவது கிடைக்குமா.? என்று சுற்றியும் பார்வையை

சுழல விட்டு தேடிட, ‘அய்யய்யோ’ என்று பதறி போனாள் காவ்யா.

ஆதிராவின் செயலில் “ஹேய் திரா வன்முறை வேணாம்டி” என்று காவ்யா கூறிட, “எனக்கு வர்ற கோவத்துக்கு…” என்று சீறிய ஆதிராவிடம் காவ்யாவோ “நான் ஸ்நாக்ஸ் கொண்டு வந்துருக்கேன்.. சாப்பிட்டா சரியா போய்ரும்டி” என்று கூறி ரஞ்சித் வாங்க வேண்டிய அடிகளை இவள் வாங்கி கொண்டாள்.

“பிசாசு பிசாசு.. அவன் மேல கோவம் இருந்தா என்னைய ஏன்டி அடிக்கற.?” என்று காவ்யா பதறிட, “பேசாம வந்து தொலை” என்றவள் சிடுசிடுப்புடன் நடந்தாள்.

“ஹாய் ஆதிரா.. ஏன் லேட்டு.?” என்று கேட்ட ரஞ்சித்தை கடுமையாக முறைத்து எதுவும் பேசாமல் பேருந்தில் ஏறி விட, “ஆதிராவுக்கு என்ன ஆச்சு.? ஏன் பேசாம போறாங்க.?” என்று காவ்யாவிடம் கேட்டான்.

அவளோ மனதினுள் ‘நீ பண்ணுன வேலைக்கு கொஞ்சவா செய்வாங்க.. நான் வாங்குன அடியை நீ வாங்கி இருக்க வேண்டியது.. என் கெரகம் நான் வாங்கி தொலைச்சுட்டேன்’ என்று புலம்பி “வெக்கமா இருக்கும் ரஞ்சித்” என்று வாயில் வந்ததை உளறினாள்.

“வெக்கமா.? அதுக்கு ஏன் பேசாம போகணும்.?” – ரஞ்சித்

“அவ அப்படிதான் ரஞ்சித்” – காவ்யா

“காவ்யா விசயம் உங்களுக்கும் தெரிஞ்சுருச்சா.?” – ரஞ்சித்

“ம்ம்ம்ம் ஆதிரா சொல்லிட்டா..” – காவ்யா

“நான் கூட எல்லாம் முடிவு பண்ணுனதும் சொல்லிக்கலாம்னு நினைச்சேன்..” – ரஞ்சித்

“முடிவாகும்னு இன்னுமாயா நம்பிட்டு இருக்க..” – காவ்யா மைண்ட் வாய்ஸ்.

“நானும் இப்பவே என் ப்ரெண்ட்ஸ்கிட்ட சொல்றேன்..” என்று குஷியாக ரஞ்சித் நகர, ‘எதே.? அடேய் அடி வாங்கி செத்தராதடா..’ என்று பதறி “இப்பவே ஏன் சொல்லணும்.? இன்னும் ஆதிரா வீட்டுல இருந்து பதில் சொல்லலயே.. இப்ப சொன்ன ஆதிராவுக்கும் கொஞ்சம் சங்கடமா இருக்கும்.. அவளால என்ஜாய் பண்ண முடியாம போய்ரும்..” என்று தடுத்தாள்.

ஏனென்று கேட்க விரும்பாமல் “சரிங்க காவ்யா.. நான் எதுவும் சொல்லல.. நீங்களும் எதுவும் சொல்லிக்காதீங்க” என்று ஸ்நேகமாக புன்னகைத்து விட்டு சென்றான்.

‘இந்த பையன் ரொம்ப அப்பாவியா இருக்கானே.?’ என்ற யோசனையிலே பேருந்தில் ஏறி ஆதிராவின் அருகில் அமர்ந்தாள்.. “என்னடி.? அவன் கிட்ட என்ன பேசிட்டு வந்த.?” என்று பத்ரகாளியாக ஆதிரா முறைக்க, “இது என்ன வம்பா கிடக்கு.. நீ பேசுனா தான் நானும் பேசணுமா என்ன.?” என்றாள் அலுத்து கொண்டு.

“அப்ப அவன் கிட்டயே போய் உட்காரு..” என்று கடுப்பில் தோழியை தள்ளி விட, “அடியேய் கொன்றுவேன்.. சும்மா சும்மா என்கிட்டயே எகிறிட்டு நிற்காத..” என்று கூறி ஆதிராவின் முறைப்புடன் சேர்ந்து இலவச இணைப்பாக கிள்ளலையும் பெற்று கொண்டாள் காவ்யா.

“ப்ச் பையன் ரொம்ப அப்பாவியா இருக்கான்டி.. என்ன சொன்னாலும் ஒண்ணுமே பேசாம சரினு சொல்றான்டி..” என்று ரஞ்சித்தை நினைத்து காவ்யா கூற, “அப்ப நீயே கல்யாணம் பண்ணிக்க..” என்று அவளின் தலையில் இடியை இறக்கினாள் ஆதிரா.

“ஙே.. எதே.? நானா.? போடிங்கககக.. என் வாய்ல நல்லா வருது.. மனிதாபிமானத்தோட கொஞ்சம் வருத்தப்பட்டா இப்படி இடியை இறக்கற.?” என்று காவ்யா எகிறிட, ஆதிராவோ தோளை குலுக்கினாள்.

இருபது பேர் அடங்கிய குழுவாக தான் ஊட்டிக்கு செல்வது.. பாதி பேர் அவளுடன் பள்ளியில் படித்தவர்கள்.. மீதி பேர் அவளுடன் வேலையில் இருப்பவர்கள்.. ஓரிருவர்கள் மட்டும் ஒரே வீதியில் வசிப்பவர்கள் என்ற முறையில் அறிமுகம்.

இப்படி சுற்றுலா செல்ல வேண்டும் என்பது அவர்களுடைய கனவு.. அந்த கனவும் இன்று நிறைவேறியதில் ஆட்டம் பாட்டம் என்று அவ்விடமே கலை கட்ட தொடங்கி இருந்தது.

இன்று விடுமுறை என்பதால் படுக்கையில் இருந்து இன்னும் எழாமல் ‘இன்னைக்கு தான் ஊட்டிக்கு போறேனு சொன்னாங்களே.? கிளம்பி இருப்பாங்களா.? நம்மளே போன் பண்ணி கேட்போமா.?’ என்று ஆழ்ந்த யோசனையில் இருந்தான் ரூபன்.

அழைப்பு விடலாம் என்று மனது உந்தினாலும் ஏதோ ஒன்று அவனை வேண்டாமென்று தடுத்தது.. தன் காதலை விட்டு விட அவன் தயாராக இல்லை.. மற்றவர்கள் புரிந்து கொள்ளா விட்டாலும் தன் இன்பம் துன்பம் இரண்டிலும் உடன் நிற்கும் அவனின் சிவா அண்ணனும் தவறாக நினைத்து விடுவாரோ.? என்ற பயம் தான் அவனை சூழ்ந்திருந்தது.

நீ என்னவள் என்று

உரிமை கொள்ளவும்

ஆசையடி.!

உன் மேல் பைத்தியமாக

காதல் கொள்ளவும்

விருப்பமடி.!

உந்தன் முகம் பார்த்து

எந்நாள் விடியவும்

ஏக்கமடி.!

எந்தன் ஆசை அனைத்தும்

கானல் நீராய்

மறைந்து விடுமோ

என்ற அச்சமும்

இதனுடன் உள்ளதடி.!!!!!

“வாப்பா.. இன்னைக்காவது இங்க வரணும்னு தோணுச்சே.?” என்று யாரிடமோ பேசுவது போல் அன்னையின் குரல் ரூபனின் செவியை அடைந்தாலும் யாரென்று பார்க்கும் ஆர்வம் இல்லாததால் அவனின் ஆதியின் நினைவிலே சுழன்றான்.

வந்தவனோ சிறுபுன்னகையுடன் “நான் வர்றப்ப எல்லாம் இதைய தான் சொல்றீங்கமா..” என்றவன் பின்பு “மருந்து மாத்திரை எல்லாம் சரியா சாப்படறீங்க தானே.?” என்று அன்பு கட்டளையில் வினவினான் அவன் அசோக். ரூபனின் நண்பன்.

பெங்களூர் வந்ததும் ரூபனுக்கு முதன் முதலில் அறிமுகமாகியது இவன் தான்.. இவனும் பிறந்த ஊரை விடுத்து இங்கு வேலைக்கு வந்திருப்பவன்.. இருவரும் தினமும் பேசி கொள்ளா விட்டாலும் அவர்களின் நட்பு இன்றளவும் நல்முறையிலே தொடர்கிறது. ரூபனின் நண்பன் என்ற முறையில் மங்கைக்கும் இவன் அறிமுகம்.

“ரூபன் எங்கமா.? நான் வந்தும் கூட காணோம்.? இன்னுமா அவன் தூங்கறான்.?” என்று அசோக் கேட்டதும், “இன்னும் வெளிலயே வரலபா.. நீ போய் பாரு” என்று ரூபனின் அறைக்கு இவனை அனுப்பி விட்டார்.

இவன் வந்ததையும் உணராமல் ரூபன் சிந்தனையிலே இருக்க, “ரூபன் சார் அப்படி என்ன சார் யோசனை.?” என்று தன்னருகில் வந்த குரலில் திடுக்கிட்டு சுயத்திற்கு வந்து “டேய் நீ எப்படா வந்த.?” என்று அதிர்வு மாறாமலே வினவினான்.

“ம்ம்ம்ம்க்க்கும் நான் வந்ததையும் கவனிக்காம அப்படி என்ன யோசனைல சார் இருந்தீங்க.?” – அசோக்

“ஒரு யோசனையும் இல்லை.. திடுதிடுப்புனு வந்து நின்னா இப்படி தான் கேட்க தோணும்..” – ரூபன்

“ஆஹான் இதைய நான் நம்பணுமா.?” – அசோக்

“என்னடா.?” – ரூபன்

“அதைய நான் கேட்கணும்.. உனக்கு என்ன தான்டா ஆச்சு.? போன் பண்ணுனாலும் எடுக்க மாட்டிங்கற.?” – அசோக்

“நீ எப்ப எனக்கு போன் பண்ணுன.?” – ரூபன்

“சுத்தம்.. உன் ஆதி ஞாபகத்துல இந்த உலகத்துல இருந்து வேற உலகத்துக்கு சார் போய்ட்டீங்களோ.?” என்று கேலியாக கேட்டதும், போர்வையை அவன் மீதெறிந்த ரூபன் “நீயே புதுசு புதுசா ஏதாவது சொல்லாதடா..” என்றான் வராத கோவத்துடன்.

“ஹஹஹஹ உன் மூஞ்சியை பார்த்தாலே தெரியுது.. என்ன கவலைடா.? உன் காதலை தங்கச்சி ஏத்துக்க மாட்டேனு சொல்லிட்டாங்களோ.?” என்று கேட்டதும், தன்னை மீறி “அடேய் நீ வேற.. விட்டா அவங்க இங்க வந்து என்னைய இழுத்துட்டு போனாலும் போயிருவாங்க” என்ற ரூபனின் கூற்றில் இதழுக்குள் சிரிப்பை அடக்கி “உனக்கு தாலி கட்டவா.?” என்று கேட்டான் அசோக்.

எதே.? ஏன்யா இப்படி.? என்று நொந்து கொண்டாலும் ‘என் ஆதி செஞ்சாலும் செய்வா’ என்று நினைத்தவன் நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் அவனிடம் கொட்டி “எனக்கு என்ன பண்றதுனே தெரில அசோக்.. ஒரு பக்கம் ஆதி காதல்.. இன்னொரு பக்கம் சிவா அண்ணனோட நம்பிக்கை.. அதற்காக ஆதியை விட்டு குடுக்கவும் மனசு வரலடா..

அது ஒரு பக்கம் யோசனைனா.. இன்னைக்கு ஊட்டி போறேனு நேத்து ஆதி போன் பண்ணுனாங்க.. கிளம்பிட்டாங்களானு கேட்க போன் பண்ணலாமா.? வேணாமானு யோசிச்சிட்டு இருந்தேன்..” என்றான் மீண்டும் அதே நினைவில்.

“காதல் எப்ப யார் மேல வரும்னு யாராலயும் கணிக்க முடியாதுனு சொல்லுவாங்க.. அது உன் விசயத்துல சரியா நடந்துருக்கு.. என்னைய கேட்டா உன் குழப்பம் தேவையே இல்லாத ஒன்று.. உன் ஆதியை நீ கல்யாணம் பண்ணுனா அவங்களைய உன்னால சந்தோசமா வெச்சுக்க முடியாதா என்ன.?

இல்ல நீங்க காதலிக்கறேனு சொன்னா சிவா அண்ணா என்ன உன் சட்டை புடிச்சு ஏன்டா இப்படி ஏமாத்துனேனு கேட்க போறாங்களா.? அவங்கள ஏமாத்த நீ ஒண்ணும் அவங்களுக்கு நம்பிக்கை எதுவும் குடுக்கலயே.. இல்ல உங்க அத்தை பொண்ணை கல்யாணம் பண்ண மாட்டேனு வாக்கு ஏதாவது குடுத்தீயா.? இல்லவே இல்லயல்ல.?

விசயம் தெரிஞ்சா எல்லாரும் முதல்ல கோவப்பட தான்டா செய்வாங்க.. பொண்ணு அவங்களே எல்லாத்தையும் ஏத்துக்க தயாரா இருக்கறப்ப உன் வீண் குழப்பம் தேவையா.?

அவங்க உனக்கானவங்கனு உன் மனசுல ஆழமா பதிஞ்சுருந்தா இப்படி போன் பண்ண யோசிச்சிட்டு இருப்பீயா என்ன.? உன் ஆதிக்கு இப்படி தோணுனதுல தானே நீ என்ன நினைப்பேனு கூட யோசிக்காம உனக்கு அவங்க போன் பண்ணிருக்காங்க..

அவங்க உன் ஆதிடா.. ரெண்டு பேரும் தான் லவ் பண்றீங்க.. நீ ஒண்ணும் அவங்கள வற்புறுத்தி காதலிக்க வைக்கலயே.? அப்பறம் எதுக்கு இந்த தயக்கம்.. உன்னால உன் ஆதியை விட முடிலனா தைரியமா மனசளவுல எல்லாத்தையும் ஃபேஸ் பண்ண தயாரா இரு.. இல்ல முடியாதுனு ஒரேயடியா மறுத்துரு” என்று நீளமாக பேசி முடிவை அவன் கையில் ஒப்படைத்தான் அசோக்.

நண்பனின் கூற்றில் ரூபனின் மனது நன்றாகவே தெளிந்தது. தயங்காமல் ஆதிராவுக்கு அழைக்க, “பேசுங்க சார் நான் வெளில இருக்கேன்” என்று தனிமையை குடுத்த அசோக் சிரிப்புடன் வெளியில் செல்ல போக, அவனை பிடித்திழுத்த ரூபன் “டேய் உட்காருடா..” என்றான் அவனை விடாமல்.

அசோக் பேசுவதற்குள் மறுபுறம் அழைப்பும் ஏற்கபட, தெளிவான மனதுடன் ரூபன் “ஹலோ ஆதிமா.. பத்ரமா போய்ட்டு வாங்கடா” என்று இவன் கூறியதும், “நான் சாக போறேன்.. உங்களைய தவிர வேற யாரையும் என்னால ஏத்துக்க முடியாது.. நீங்களும் என்னைய ஏத்துக்க மாட்டிங்கறீங்க.. நான் போறேன் அபி.. நான் போறேன்.. நீங்க நிம்மதியா இருங்க” என்று கண்ணீருடன் பேசிய ஆதிரா அப்போதே அழைப்பையும் துண்டித்து விட்டாள்.

ஸ்தம்பித்து போனான் ரூபன்.!!! அதிர்வில்  உறைந்து முழித்தான் அசோக்.. “ரெண்டு பேரும் சாப்பட வாங்கடா” என்ற மங்கையின் குரலில் தான் தன்னிலைக்கு வந்த இரு

வரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர் அதுவும் இன்னும் திகைப்பு மாறாமலே!!

அழகிய பூகம்பம் தொடரும்..

Click on a star to rate it!

Rating 4 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்