
“கவி எப்படி ஏன்”என்று தடுமாறிக் கேட்க
“கார் ஆக்ஸிடென்ட்”
“ஆக்ஸிடென்ட்”என்று நிறுத்திட
“ஹ்ம்ம். ஆறு வருஷம் முன்னாடி ஊர் திருவிழாக்கு கிளம்பினப்ப நானும் வர்றேன் னு சொன்னா. டிக்கெட் போட்டு எல்லாம் ரெடியா இருக்கும் போது அவங்க பாட்டிக்கு சீரியஸ் னு ஃபோன் வந்தது. கிளம்பி போனா. ஹாஸ்பிடல் போகும் போது ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சாம் நியூஸ் ஒரு வாரம் கழிச்சு தான் எனக்கு தெரியும். கடைசியா அவ”என்றவனுக்கு முகம் வேதனையில் சுருங்க கண்கள் கலங்கியது. முகத்தை அழுத்தித் துடைத்துக் கொண்டவன் பேச முனையும் போது தடுத்தவள் “வேண்டாம் விட்டுடுங்க”என்றாள்.
“பார்த்து பார்த்து ரசிச்ச பொண்ணு. முகம் எல்லாம் சிதைஞ்சு இருந்ததா ஃப்ரெண்ட் சொன்னாங்க. ஃபேஸ் வாஷ் பண்ணாம என்னைப் பார்க்க விட மாட்டா. என் சிரிச்ச ஃப்ரெஷான முகம் தான் உன் நினைவுக்கு வரணும் ஒரு நாள் கூட இந்த டல் ஃபேஸை நீ பார்த்திட கூடாதுன்னு எல்லாம் கன்டிஷன் போட்டா. அதனால் தான் எனக்கு அந்த முகத்தை காட்டாமலேயே போயிட்டா போல.”
“ஆதி ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ண வேண்டாம் விடுங்களேன்”என்று அவனின் வேதனை தாளாமல் கூற
“ஹ்ம்ம்”என்றவன் “அவளுக்கு யார் அழுதாலும் பிடிக்காது அஸ்வி. அப்போ நான் அவளுக்கு பிடிக்காததை செய்வேனா. ம்ஹூம் செய்யக் கூடாது.”என்று புன்னகைத்தான் கண்ணீருடன்.
“அவ இல்லாததை உணரவே விடலை அவ நினைவுகள். ஏதாவது ஒரு விஷயத்தில் விதத்தில் ஞாபகம் வச்சுக்கிட்டே இருக்க வைப்பா. அப்படி தான் கடந்த ஐந்து வருஷத்தை கடந்தேன் நான். ஆனா ஆஃப்டர் மேரேஜ் ம்ஹூம் அப்படி கூட சொல்ல முடியாது.நீ ஊருக்கு போன அந்த டூ வீக்ஸ் ஓஓஓ காட் உன்னைத் தவிர வேற எந்த ஞாபகமும் இல்லடி எனக்கு. தட் கிஸ் அதுக்கு அப்புறம் அந்த டைரியை பார்த்ததும் எனக்கு குற்றவுணர்ச்சி ஆகிடுச்சு அஸ்வி. நான் எப்படி மறந்தேன். லயாவை எப்படி மறந்தேன். நான் லாயல் கிடையாது தானே அஸ்வி.என் லவ்க்கு நான் லாயல் இல்லை அஸ்வி”என்று புலம்ப தேஜா அவனை அழுத்தமாகப் பார்த்தாள்.
“ஏதாவது பேசு அஸ்வி.”என்று தவிப்புடன் கேட்க
” நான் கிளம்பறேன்” விறைப்பாய் சொல்லி விட்டு தனது ட்ராவல் பேக்கை அவள் எடுக்க, வெடுக்கென்று பிடுங்கி தூக்கியெறிந்தான் யுகா.
” இப்போ எதுக்கு தூக்கிப் போட்டீங்க? உங்களுக்கு என்ன தான் வேணும். அதான் சொல்லிட்டீங்கள்ள லயாவை மறக்க முடியாதுனு, அப்புறம் நான் எதுக்கு இங்கே?, நான் போறேன். ஒரு நிமிஷம் கூட இங்கே இருக்க மாட்டேன்” என்று கண்களில் நீர் நிறைந்து பேசியவளை விடாமல் அணைத்துக் கொண்டவன்,”சாரி” என்றான் கரகரத்தக் குரலில்.
” எதுவும் தேவை இல்லை நான் போறேன் என்னை விடுங்க, விட முடியுமா முடியாதா ஆதி… ப்ம்ச் விடுங்க” என்று திமிறியவளை விலக்கி
“சாரிடி” என்றதும் அவன் முகத்தையேப் பார்த்தவள்,” உங்க ஃபீல், உங்க வலி இதெல்லாம் எனக்கு புரியாம இல்லை ஆதி. லயா உங்க லைஃப் ல இருந்து பிரிக்க முடியாத ஆள் தான். நான் இல்லைன்னு சொல்லலை ஆனா நான்?!” என்று நிறுத்திட யுகாதித்தன் பதில் பேச முடியாமல் நின்றான்.
” எல்லாரும் இழந்த காதலையே நினைச்சுட்டு இருந்தா இருக்கிற வாழ்க்கையை யார் வாழறது ஆதி. கடந்த காலம் நினைவுகளா இருக்கட்டுமே… வானவில் போல வண்ண வண்ண நினைவுகளா ஹ்ம்ம்” என்று அவன் முகத்தை விட்டு விழிகளை அகற்றாமல் நிற்க
“சாரி” என்று அவள் நெற்றியில் இதழ் பதிக்க,” போடா” என்றாள் மெல்லிய குரலில்.
” போக மாட்டேன். நீயும் போகாத” அவளது கழுத்தில் இரு கரங்களையும் கோர்த்தவன்,” நிதர்சனம் புரியுது தான் ஆனாலும் என்னை மாத்திக்க முடியலை” என்று சிறுவன் போல உதடு பிதுக்கி சொல்ல
” உன்னை மாற சொல்லி நான் சொல்லலையே…உன் அப்பா அம்மா தாத்தா பாட்டி போல லயாவும் உன் லைஃப் ல ஒருத்தங்க அவங்க இல்லாமல் நீ இல்லை சரியா. ஏன் நானும் அப்படி தான். ஒரு வேளை நானும் லயா போல” எனும் போதே பட்டென்று அவள் வாய் மீது அடித்து விட்டான்.
” ஸ்ஸ்ஸ் ஆஆஆ?!” என்று கண்ணில் நீர் திரள பார்த்தவளை விட்டு விட்டு ஓரமாக சென்று அமர்ந்து கொண்டான்.
“பேசிட்டு இருக்கேனில்ல?” என்று மீண்டும் சண்டைக்குச் சென்றவளை முறைத்தவன்,” லயா மாதிரி நீயும் போயிடுவன்னா இப்போவே போயிடு, இதுக்கு மேல ஒரு இழப்பைத் தாங்கி வாழ என்னால் முடியாது” என்று கூறியவனின் குரலில் அத்தனை நடுக்கம்.
” ஓஓஓ ஹலோ அந்த நெனப்பு வேறயா உனக்கு. நான் எல்லாம் லயா மாதிரி உன்னை தனியா விட்டு போற ஆள் கிடையாது. நான் போற மாதிரி இருந்தா உன்னையும் சேர்த்து கூட்டிட்டு போயிடுறேன் சாவிலும் இணை பிரியாத தம்பதி எப்படி?” என்று சிரித்தவளை முறைத்து விட்டு,” சோடாபுட்டி” என்று அணைத்துக் கொண்டான்.
“உன் மனைவி கூட வாழறது எல்லாம் காதலுக்கு செய்ற நம்பிக்கை துரோகம் னா இந்த உலகத்தில் முக்கால்வாசி பேர் நம்பிக்கை துரோகிகள் தான் ஆதி. கடவுளே இந்த விஷயத்தில் துரோகியா தான் இருப்பார்” என்று சொல்லவும்
” நீ என்னை சமாதானம் செய்ய எவ்வளவு பேசற?”
” பின்ன…?!”என்றவள் அடுத்து பேசவில்லை.
“நீ என்ன சொல்ல வந்தேன்னு கேட்ச் பண்ணிட்டேன்” என்று சிரிக்க அவள் திருதிருவென விழித்தாள்.
” சொல்லவா ?!”என்றவனின் நெஞ்சில் முகம் புதைத்தவள்,” வாயைத் திறந்த நிஜமாவே ஊருக்குப் போயிடுவேன்” என்றாள் சிணுங்கலாய்.
” போயேன் யார் வேண்டாம்னா?” சலுகையாய் ஒரு சீண்டல்.
“போன பிறகு நீ தான் அழுவ…!”
“அழ மாட்டேன் அடுத்த பஸ்ஸில் வந்திடுவேன்” என்றான்.
” பொய்…”
” நிஜமா…?!”
” ம்ஹூம் பொய் அதே பஸ்ஸில் வந்திடுவ தானே?” என்று கிண்டலாய் சிரிக்க,” புரிந்தா சரி. “என்றான்.
” சரி போதும் விடுங்க” . என்று விலகப் போனவளை விடாமல் இடையோடு கையிட்டுத் தூக்கியவன்,” சோடாபுட்டி அழுது அழுது இளைச்சுட்டப் போல வெய்ட்டே இல்லை” என்று கண்சிமிட்டினான்.
” ஹ்ம்ம்…, தலைவிக்கு பசலை நோய் கண்டுருச்சு”
“ஓஓஓ அப்போ தலைவன் பச்சையா” என்றதும் அவன் வாயை பொத்தியவள்,” சரியான ஏ சர்டிபிகேட் பார்ட்டி நீங்க” என்று விழிகளை மூடிக் கொண்டாள்.
” ஸ்டார்ட் பண்றதுக்குள்ள முடிவு பண்ணிடாதே சோடாபுட்டி. நாலு சாண்டில்யனும் ஏழு பாலகுமாரனும் கலந்தவனாக்கும் நானு” என்றதில் கலகலெவன்று சிரித்தாள்.
அவனை இயல்பாக்க அத்தனை பேச்சுக்கள் அவளின் முயற்சியை கண்டு கொண்டவன் அவளுக்கு இணங்கியே பேசினான். சற்று முன் கொண்ட வேதனையை அவளுக்காக அடக்கிக் கொண்டான்.
“நீங்க லயாவை நினைக்கலைன்னு யார் சொன்னது ஆதி. “என்றதில் திகைத்து பார்த்தான் யுகாதித்தன்.
********
அருண் கடந்ததை எல்லாம் நினைவில் கொண்டு வர மனது இன்னும் இன்னும் கனத்தது. அப்படி இருப்பது அவனுக்கேப் பிடிக்காமல் போக தன் மனநிலையை ஒரு வழியாக மாற்றிக் கொண்டு மனைவியைத் தேடி வந்தான்.
ப்ரதன்யா மகிழனை உறங்க வைத்துக் கொண்டிருக்க பின்னால் இருந்து அணைத்தான் அருண்.
“ஐடி பொண்டாட்டி அர்ஜென்ட்லி ஐ நீட் யூ ,வர முடியுமா?” என கிசுகிசுத்துவிட்டுச் செல்ல ,சில நொடிகள் எதுவும் புரியாமல் நின்றவள் சட்டென்று சுதாரித்தாள்.
” பிரசாத்!” என்று பல்லைக் கடித்தவள் அவனைக் கடித்து குதறும் வேகத்தில் அவர்கள் அறைக்குள் சென்றாள்.
“இப்போ என்ன சொல்லிட்டு வந்தீங்க?” என்று மூக்கு விடைத்துக் கேட்க
“ஏன் பிரதருக்கு காது கேட்கலையா?” என்றான் கிண்டலாக.
“இப்போ அறுவைக்கு வாய் பேச முடியாம போகப் போகுது” என்று கை முஷ்டியை இறுக்கிட
” ஏன் லிப்லாக் பண்ணப் போறீயா??” என்று அவன் சீண்டுவதை நிறுத்தவே இல்லை.
“அருண்?!” என்று பல்லைக் கடிக்க,” எப்புடி எப்புடி கூப்பிட்ட அங்கிள்… அருண் அங்கிள் எங்கே இப்போ கூப்பிடுங்க பிரதர்?”
” வேணாம் அங்கிள்” என்று விரல் நீட்டி எச்சரித்தவளைக் கண்டு அத்தனை சிரிப்பு அவனுக்கு.
“நீயெல்லாம் மனுஷனே கிடையாது. சரியான..”
“சரியான…” என்று புருவம் உயர்த்த
“மென்டல். அரைப் பைத்தியம் இல்லை இல்லை முழு பைத்தியம் “
” உன் மேல தானே?” என்று சிரிக்க,” போடா டேய் !!” என்று விட்டாள் அவன் கேலியில்.
” போடாவா…என்னையா?”
“இல்லை மகியை “
” பிரதருக்கு கொழுப்பு கூடிருச்சு” என்றவன் அவளைத் தன் பக்கம் இழுத்துக் கொண்டு, மகிக்கு தங்கச்சி பாப்பா வேணுமாம் “
” பழைய டயலாக் மேன்” என்றாள் கிண்டலாக.
“ஆனாலும் நமக்கு ஃப்ரெஷ் டி” என்று சிரித்தவன் ,”படம் பார்க்கலாமா மகி தான் தூங்கறானே!” என்று கேட்க
“என்ன படம்?” கோபமெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு உற்சாகம் ஆகிவிட்டாள்.
” தெர்ல ,நெட்ப்ளிக்ஸ் போடறேன் ஏதாவது செலக்ட் பண்ணிப்போம். அதுக்கு முதல்ல சிக்கன் பக்கோடா நான் பண்ணுவேனாம், நீ எனக்கு பிடிச்ச ஸ்வீட் கார்ன் வேக வச்சு தருவியாம். கொஞ்சம் எக்ஸ்ட்ரா பட்டர் அன்ட் ஸ்பைசி” என்று கண்சிமிட்ட ,”டன்” என்றாள் அவளும்.
இருவருமாய் இணைந்து உணவைத் தயாரிக்க, கந்தசாமி அழைத்து செந்தாளம்பட்டி வந்துவிட்டதாக தகவல் கூறினார். மகிழனுக்கு பள்ளி துவங்கி விடும் என்பதால் அவனை மட்டும் விட்டு விட்டு மீண்டும் ஊருக்கு கிளம்பி இருந்தார் கந்தசாமி.
“சரிங்கப்பா ரொம்ப அலையாதீங்க. எதுவா இருந்தாலும் கால் பண்ணுங்க” என்றான்.
“அதைச் சொல்ல தான் டா கூப்பிட்டேன். இனிமே நாளைக்கு மத்யானம் தான் கூப்பிடுவேன் அதுவரைக்கும் எனக்கும் கூப்பிடாத. சரியா?” என்று இணைப்பைத் துண்டிக்க அருணின் முகத்தில் விரிந்த புன்னகை.
“ப்ரதர் டைம் ஆச்சுடி “என்று அறையை மெல்லிய விளக்கொளியில் இருக்க வைத்தவன் தொலைக்காட்சியை ஓட விட்டான்.
“என்ன அங்கிள் அவசரம் வருவேன்ல ?”என்று தானும் வந்து அமர்ந்து கொண்டாள்.
“ஹேய் இந்த படம் பார்க்கலாம் மஜாவா இருக்கும் ” என்று அருண் ஒன்றை வைக்க
“அங்கிள், படம் முடியற வரை வாயையேத் திறக்கக் கூடாது. மீறி பேசினீங்க அவ்வளவு தான்” என்று கட்டளையிட்டு பார்க்கத் துவங்க இருவரும் அதில் ஒன்றிப் போனார்கள்.
“ப்ரதர்…!”
“ஹ்ம்ம்…” சிக்கன் பக்கோடாவை மென்றபடி பேச
“என் கூட ஹாப்பியா இருக்கியா நீ??”
“இப்ப எதுக்கு இந்த கேள்வி…?”
“சும்மா சொல்லேன். ஒரு ரீசனுக்காக தான் ” என்றவனை நிமிர்ந்து பார்த்து விட்டு, “இல்லை” என்றாள்.
“நிஜமாகவே ஹாப்பியா இல்லையா ?”அவன் குரலின் சுருதி இறங்கியது.
“ஹாப்பியா இருக்கேன், இல்லைன்றது தாண்டி உன் கூட இருக்கும் போது ஒரு உறுத்தல் இருந்துட்டே இருக்கு பிரசாத்” என்றாள் அவளும்.
“நான் ஏதாவது மிஸ்டேக் பண்றேனா தனு?” சீரியஸ் மோடிற்கு அவன் செல்ல
“அதெல்லாம் இல்லை. ப்ப்ச் நான் எப்படி சொல்ல என்றவள் சட்டென நீ ஏன் என்னை மேரேஜ் பண்ண?” என்று கேட்டுவிட்டாள்.
….. தொடரும்
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
5
+1
2
+1

