Loading

 

KKEN-31

ஏதாவது வாய் திறந்து எனக்கு ஒரு பதில் சொல்லுங்க. இல்லாட்டி எனக்கு பைத்தியமே புடிச்சுடும் போல இருக்கு.உணர்ச்சி மிகுந்த குரலில் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் பேசினாள் .

இத்தனை நேரம் சற்று தள்ளி நின்று அவளையே ஆழ்ந்து நோக்கியவன், இப்போது அவள் அருகில் வந்து நின்றான். சுவற்றின் அருகில் சாய்ந்து நின்றவள் அருகில் வந்து நின்றவன் மூச்சுக் காற்று அனலாய் வீசவும் அவனின் மன நிலையை அவள் புரிந்துக் கொண்டுவிட்டாள். குற்றவாளிகளின் கண்ணைப் பார்த்து புரிந்துகொள்ளும் சாமர்த்தியசாலிக்கு மனம் கவர்ந்தவனின் மனதைப் படிக்க முடியாதா என்ன?

“பேசணுமா? என்னடி பேசணும்? என்ன பேசணும் ?அன்னிக்கு நீ பேச வேண்டிய இடத்துல பேசி இருந்தீன்னா இன்னிக்கு இந்த நிலைமையே வந்துருக்காது. அன்னிக்கு எங்கம்மா உன்கிட்ட வந்து பேசும்போது என்ன பண்ண? வாயில கொழுக்கட்டையா வச்சிருந்த? ஒரே ஒரு  வார்த்தை அர்ஜுன் கிட்ட பேசிக்கோங்கன்னு சொல்லி இருக்கலாமில்ல?” அவனின் கோபம் அவளுக்குப் புரிந்தது.

  அர்ஜுனும் மதுவும், சர்தார் வல்லபாய்  படேல் அகாடமி, ஷிவ்ராம்பள்ளி-ஹைதராபாத்தில் ஐபிஎஸ் அகாடமியில் ஒன்றாகப் படித்தார்கள். இருவருக்கும் பல ஒற்றுமை இருந்தது. பொலிடிகல் சயின்ஸில் முதுகலை பட்டம் படித்து விட்டு வந்தவர்கள். வீரம், விவேகம், யோசிக்கும் திறன் எல்லாமே ஒன்று போல இருந்தது.  கூடாது என்று நினைத்தாலும் தமிழ் மாணவர்கள், கன்னட மாணவர்கள் இது போல என்று ஒரு மாதிரி ஒன்று சேர்ந்து விடுகிறார்கள்.

“என்னடி அர்ஜுன் உன்னையே லுக் விடறான் “

“அப்டியா? எனக்கு ஒன்னும் தெரிலையே “

“ஏய்! சும்மா நடிக்காதடி.”

போலீஸ் பயிர்சிக்கு வந்தாலும் கூட வெக்கம் உடன் சேர்ந்து தான் வருகிறது .

“ஏய்! உன்ன விட நான்தானே அழகா இருக்கேன். ஏண்டி அவன் என்னை பார்க்க மாட்டேங்கிறான் ?” இது இன்னொருத்தி .

“போடி! உங்க எல்லாரையும் விட நான்தான்  இன்னும் ஹைட் அண்ட் ஸ்மார்ட்.”

“ஏய் ஹைட்டா இருந்தா மட்டும் போதாதுடி. கொஞ்சம் அடக்க ஒடுக்கமா பொண்ணு மாதிரியும் இருக்கணும்.”

“நான் குளிக்கும்போது வந்து பாருடி., நான் பொண்ணா  இல்லையான்னு தெரிஞ்சுடும்”

கும்பலாக கும்மி அடித்துக் கொண்டிருந்தார்கள்.

அதற்குள் அங்கே அர்ஜுனும் அவன் நண்பர்களும் வந்து விடவும் மதுவின் தலை வெட்கத்தில் தானே கவிழ்ந்து கொண்டது.

“இதோ இதை பாருடி. இதுக்கு பேருதான வெட்கம்?”

சந்தேகமாக ஒருத்தி கேட்டாள் .

 முதலில் பார்த்து சிரித்து பேசிப் பழகி இருந்தாலும் அது காதலாக மாற, நண்பர்கள் கலாய்த்ததே பெருமளவில் காரணம். சாரி நான் தப்பாக சொல்லி விட்டேன். நண்பர்களின் உதவி தான் காரணம்.

“ஏய் பொலிடிகல் சயின்ஸ் பாதர்  யாருடி ? அர்ஜுன் தானே?”

“சீ! என்ன இது?” தன்னையும் அறியாமல் முகத்தை மூடிக் கொண்டாள் மது.

அவர்கள் இருவருமே காதலித்தார்கள். ஆனால் அன்று முதல் இன்று வரை நான் உன்னை காதலிக்கிறேன் சொன்னதும் இல்லை. ஒத்துக் கொண்டதும் இல்லை. மதுதான் அவன் மீது இருந்த ஆசையை முதலில் வார்த்தைகளால் வெளிப்படுத்தினாள் . அவன் தான் செயலில் காட்டி விட்டானே இன்னும் என்ன?

ஒரு முறை ஓடும் பயிற்சி எடுக்கும்போது இவளுக்கு காலில் அடிபட்டு எலும்பில் லேசான விரிசல் விட்டிருந்தது. எழும்ப முடியாமல் தவித்தவளை  இவன்தான் தானே முன் வந்து தூக்கிக் கொண்டு அவசர உதவிப் பிரிவுக்கு அழைத்துசென்றான். அங்கே இருந்த கட்டிலில் அவளைப் படுக்க வைத்து விட்டு உச்சி கோதி  லேசாக முத்தமிட்டான்.

அவள் தன்னை  திட்டுவாளா என்ற பயம் எல்லாம் அவனுக்கு சுத்தமாக இல்லை . அதே போலத் தானே அவளும்,

“இவ்ளோ ஆசையா ஒரு முத்தம் கிடைக்க எத்தனை தடவை வேணுன்னாலும் விழலாம் இல்ல?” குறும்பாக அவள் அவனிடம் கேட்டாலும் அந்த ஒற்றை முத்தத்திற்காக அவள் ஏங்கியது பல ஆண்டுகள் என்பதை அவன் அறிவான். அவளுக்குத்தான் முத்தம் கொடுக்க யாரும் இல்லையே?

ஒரு முறை மகனை பார்க்க வந்திருந்த அன்னை  இவளையும் பார்த்தார். அவளுடன் பேச தனியே சந்தர்ப்பம் கிடைத்தது. அந்த சமயத்தை நன்றாகவே பயன்படுத்திக் கொண்டார் அவன் அன்னை. பெற்றோர்  படிப்பு, வசதி எல்லாவற்றையும் கேட்டு தெரிந்துக் கொண்டவள் தன்னுடைய உயரம் என்ன? மகனின் உயரம் என்ன? என்பதையும் தெளிவாக்கினாள் . உயரம் என்றால் ஹைட் இல்லீங்க. பணம்.

பிறகு என்ன?

என்னதான் கம்பீரமாக காவலாளி உடை அணிந்தாலும் தன்னை, அனாதை என்று சொல்லிக் காட்டினால்  போதும்., இவள் அமைதியாகி விடுவாள். என்னதான் ஊர் குருவி உயர உயரப் பறந்தாலும்… வார்த்தைகளை முடிக்காமலே  விட்டு விட்டாள்  அவளின் வருங்கால மாமியார்.

மதுவுக்குப் புரிந்தது. அர்ஜுன் என்னதான் அருகில் வந்தாலும் தானே ஒதுங்க ஆரம்பித்தாள். அதற்கு ஏற்றது  போல பரீட்சை, பிளேஸ்மென்ட் என்று வாழ்க்கை நகர ஆரம்பித்தது. எங்கே மற்றவர்களுடன் தொடர்பில் இருந்தால் அர்ஜுனைத் தவிர்க்க முடியாமல் போய்  விடுமோ என்று அனைவரிடமும் சற்று விலகியே இருக்க ஆரம்பித்தாள். ஏனோ மனம் மட்டும் அவனிடம் பேசிக் கொண்டிருக்கும். அவன் இன்னும் திருமணம் செய்துக் கொள்ளவில்லை. இவளுக்குத் தெரியும். இவளின் ஒவ்வொரு அசைவும் அவனுக்குத் தெரியும்.

 “அன்னிக்கு எங்கம்மா உன்ன பார்த்து அனாதைன்னு சொன்னா? வாய மூடிக்கிட்டு இருப்பியா? எனக்கு என்னோட அர்ஜுன் இருக்கான்னு சொல்ல மாட்ட ?”

“அதெப்படி அவங்களோட பையன என்னோட ஆளுன்னு சொல்ல முடியும்?” அவள் கேட்ட கேள்வியில் அவனுக்கு கோபம் பறந்து சிரிப்பு வந்து விட்டது. மீசையின் ஓரத்தில் தெரிந்தும் தெரியாமலும் இருந்த அந்த குட்டி சிரிப்பை கடிக்காமல் இருக்க முடியுமா?

“ஸ்! ஆ! வலிக்குது டீ. “

“அதுக்குத்தான் இவ்ளோ அழகா இருக்கக் கூடாது.”

“அப்டியா? அது அன்னிக்கு பயந்து போய் சொல்லாம கொள்ளாம ஓடி வந்த போது தெரியலையா?”

இவள் அமைதியானாள்.

“இப்ப எதுக்கு அதப்பத்தி?”

“எங்க மறுபடியும் கேளு?”

“உங்க மூஞ்சிய பார்த்தாலே எனக்கு நான் போலீஸுன்னு மறந்து போயிடுது. “

ஸ்கர்ட்டும்  டீ ஷர்ட்டும் அணிந்திருந்தவள் சிறு பெண்ணாக அத்தனை அழகாக  இருந்தாள் . அதற்கு மேல் அவனால் பொறுக்க முடியவில்லை. எதுவாக இருந்தாலும் பிறகு பார்த்துக் கொள்ளலாம்.

“வாடி! என் புது பொண்டாட்டி. இன்னிக்கு நான் படுத்தற பாட்டுல ஒனக்கு இந்த உலகமே மறக்கும் பார்.”

“ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்

கூடி முயங்கப் பெறின்”

வள்ளுவனின் வாக்கை நிரூபித்தனர்.

அவளுக்கு அவனின் தொடுகையும் முத்தங்களும் தேவைப்பட்டது. அவனின் உதட்டு  முத்தங்களால் ஏதேதோ நினைவுகளை அவளை மறக்க  முயன்றாள் . போதை மருந்து கொடுத்திருந்தாலும் ஆழ்  மனதிற்கு என்ன நடந்தது என்று தெரியாமலா இருக்கும்? பாதியில் சட்டென எழுந்து விட்டாள் .

“சாரி அர்ஜுன்! என்னால… நான் பல பேர்…”

“அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம், இப்ப வா!”

“இல்ல அர்ஜுன்! நான் என்னை உனக்கு புதுசா கொடுத்திருக்கணும்.நான் வேண்டாம்.”

மெதுவாக அவளை அணைத்து முத்தமிட்டு தன்  முத்தங்களில் அவளை மூழ்கடித்து அந்த புது மலரின் முகத்தை கையில் ஏந்திக்  கொண்டான்.

“இப்ப ஓகே வா?”

“ம்!”

அவன் மார்பில் ஒண்டிக் கொண்டாள் .

தலைக் கோதி முத்தமிட்டவனிடம்,

“எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்”

“ஒனக்கு எந்த உண்மையும் தெரிய வேணாம்” பாந்தமாய்  அவள் வார்த்தைகளை கத்தரித்தான். அதிலேயே அவளுக்கு தெரிய வேண்டிய அதிபன் பற்றிய உண்மை தெரிந்து விட்டது.

“அதில்லடா! அந்த அதிபன் பத்தி எவ்ளோ டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணி வச்சுருக்கேன் தெரியுமா? அவன் சும்மா இல்லடா! அவன் ஒரு இன்டர்நேஷனல் க்ரீமினல். ஏகப்பட்ட இல்லீகல் டீலிங்ஸ் இருக்கு. அந்த மூணு பொண்ணுங்க மட்டும் இல்ல. ரொம்ப வருசமா எத்தனையோ பொண்ணுங்க செத்துருக்காங்க. யாருமே இது வரைக்கும் வந்து புகார் கொடுத்ததில்லை. எத்தனையோ கடத்தல் கேசு. பெரிய பெரிய ரவுடிங்க கூட இவனுக்கு பயப்படுவாங்க. எத்தனை பேர மிரட்டி வீட்டை புடிங்கி இருக்கான் தெரியுமா? அவன் என்ன நினைக்கறானோ அதுதான் நடக்கணும். இல்லனா ஈஸியா சுட்டுட்டு போய் கிட்டே இருப்பான். எவ்ளோ கஷ்டப்பட்டு சேகரிச்சேன் தெரியுமா? எல்லாம் வேஸ்ட்.”

அவன் மார்பில் மூக்கு உரச சினுங்கினாள் .

“இங்க பாரு! நம்மளோட உழைப்பு என்னிக்குமே வீணாகாது. இவன் ஒரு ஆள் . இவன சுத்தி பல நூறு குற்றவாளிகள் . இவன் தான் வேர். அத வச்சு பல கிளைகளை ஈஸியா கண்டு புடிக்க முடியும். ரோட்டுல பிச்சைக்காரனா  உக்காந்திருப்பான். கடைசில பார்த்தா  அவனே பெரிய ஸ்லீப்பர் செல்லா  இருப்பான். தெரியாது ஒனக்கு? எங்கே இருந்து எப்படி எந்த கேஸுக்கு லிங்க் கிடைக்குன்னு சொல்லவே முடியாது. இப்ப நீ கண்டு புடிச்சுருக்கற பல விஷயங்கள் எதிர்காலத்துல உனக்கு ரொம்ப உதவியா இருக்கும். அதெல்லாம் இருக்கட்டும் . எனக்கு வேற ஒரு டவுட் இருக்கு டீ செல்லம்”

“என்னடா?” அவனை கட்டிக்  கொண்டு அவன் கழுத்தில் இருந்து  முகம் நிமிர்த்தி கேட்டாள் .

” நீ பாட்லும் என்னை இப்டி **பண்ணிட்டியே? எங்கம்மா கேட்டா  நான் என்ன பதில் சொல்லுவேன்?”

‘ம்! அதெல்லாம் யோசிக்க வேண்டியது என் வேல இல்ல. உன் வேல. அதோட நீ ஒன்னும் உங்கம்மாவை சரி கட்டாம  இங்க வந்துருக்க மாட்ட”

“எங்கப்பா கிட்ட பேசிட்டேன்” குரல் மென்மையாக மாறி இருந்தது.

“என்ன சொன்னாரு?”

“கமிஷனருக்கு மருமகளா மகாலஷ்மியைவிட வீரமா தன்  மேல எந்த தப்பும் இல்லன்னு நிரூபிச்சு வேலைக்கு சேரப் போற வீர லஷ்மிதான் வேணுமாம்.”

“உங்கம்மா?”

“அவங்க எல்லாம் ஒரு விஷயமே இல்ல. கட்டி புடிச்சு கன்னத்துல ஒரு முத்தம் கொடுத்து, மாம்!  ப்ளீஸ் மாம் ! அப்டி சொன்னாளே  போதும். சீமந்த புத்திரன் அழகுல மயங்கி ஓகே சொல்லிடுவாங்க.”

“தேங்க்ஸ் அர்ஜுன்.”

“எதுக்குடி?’

“இல்ல! நமக்கு பொறக்க போற குழந்தையும் என்ன மாதிரி இல்லாம தாத்தா பாட்டி அத்த  சித்தப்பா  இந்த மாதிரி நிறைய சொந்தங்களோட இருக்கனுன்னு ஆசைப் பட்டேன். உன்னால அதுவும் எனக்கு கிடைக்க போகுது. அதுக்குத்தான்”

“நீ சொல்லறதும் சரி தான். நாளைக்கு நமக்கு வற்ர மருமகளும் இதையே தான் ஆசை படுவா இல்ல? அதுக்கு நாம கடுமையா உழைக்கணுமே.”

இருவரும் கடினமாக உழைக்க ஆரம்பித்தனர்.

கட்டிலில் இருவரும் குழந்தைகள் ஆனால் பிழையா?

பிழையா ? இல்லையே!

மறு நாள் காலையில் உற்சாகமாய் கிளம்பி வந்த காதலியை கண் குளிரப் பார்த்தான் அர்ஜுன்.

“கம்மான் பேபி! லெட்ஸ்  கோ  ஆன் அ  புல்லட்டு!” வண்டி சாவியும் ஹெல்மட்டும் கொண்டு வந்தான்.

“போற வழில பாடிக்கலாம் டூயட்டு”

” அதெல்லாம்  இல்லம்மா”  நோ தலையாட்டி ஓடிப் போனாள்  மது.

வாழ்க்கையில் எத்தனையோ இழப்புகளையும் சோகங்களையும் உள்ளே வைத்துக் கொண்டு நமக்காக  உற்சாகமாய் நேர்மையாக வேலை பார்க்கும் காவலர்கள் அர்ஜுன் போலவும் மது போலவும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இப்படியே நாட்கள் செல்லச் செல்ல திடீரென்று ஒரு நாள் வெற்றிக்கு அந்த சந்தேகம் வந்தது.

என்னவாக இருக்கும்?

காதல் தொடரும் ..

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்