Loading

நவிலன் நிவேதாவின் குழந்தையைப் பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்து இரவு வனிதாவுக்கு போன் செய்தான் .

 

வனிதா போன் எடுக்கவில்லை. சரி ஏதாவது வேலையாக இருக்கும் என்று எண்ணி அரை மணி நேரம் பார்த்தான். அப்பொழுதும் அவள் திரும்ப அழைக்கவில்லை என்றவுடன் “பிஸியா டி ?”என்று மெசேஜ் செய்து இருந்தான் .

 

அவள் மெசேஜ் பார்த்திருந்தாள்.ஆனால், ரிப்ளை பண்ணவில்லை. அவனுக்கு ஒன்றும் புரியவில்லை .

 

திரும்பவும் கால் செய்தான்.அப்போதும் அவள் எடுக்கவில்லை .இரவு வரை மூன்று, நான்கு முறை அழைத்து இருந்தான்.. .

 

மெசேஜும் போட்டு இருந்தான்… மெசேஜ் பார்த்திருந்தாள் .. ஆனால்,பதில் இல்லை. போன் எடுக்கவில்லை .

 

அவனுக்கு ஒன்றும் புரியாமல், சரி என்று விட்டவன், தான் வந்ததை சொல்லவில்லை என்ற கோபம் என்பதை இரவே அவனே உணர்ந்து இருந்தான்.

 

மறுநாள் காலை அவள் காலேஜ் செல்லும் பொழுது பிரேம் வீட்டிற்கு வந்திருந்தான். பிரேம் வீடும் வனிதாவின் வீடும் அருகருகே இருப்பதால், அவளை பார்ப்பதற்காக வந்திருந்தான்.

 

 

அப்பொழுதும் அவனைப் பார்த்தும் பார்க்காததுப் போல் வனிதா சென்று விட்டாள் .

 

பிரேமிடம் பேசிக்கொண்டே அவளது பின்னாடியே வந்தவன் .”ரொம்ப தான் கோபம் போல?” என்றான்.

 

அவள் அமைதியாகவே வர.

 

“என்னடா பண்ணி தொலச்ச ?”என்றான் பிரேம் .

 

“ஒன்னும் இல்லடா மச்சான்.. நானே அவசர அவசரமா தான்  காலேஜ் முடிச்சுட்டு கிளம்பி வந்தேன். ”

 

“அதனாலதான் சொல்ல முடியலையா? நான் வீட்டுக்கு வந்துட்ட உடனே தானே உனக்கு கால் பண்ணி இருந்தேன் .எனக்கு உன்கிட்ட சொல்லணும் தோணுச்சு சொல்லியிருந்தேன் .

 

ஆனா ,உனக்கு சொல்லணும் என்று தோணல இல்ல  “என்று விட்டு நடந்து கொண்டே முனைவிக் கொண்டு சென்றாள் .

 

பிரேம் இருவருக்கும் இடையில் மாட்டிக் கொண்டு முழித்தான் .

 

“என்ன வனிதா அவன் உன்கிட்ட சொல்லல .ஆனா, நிவேதா குழந்தையைப் பாக்குறதுக்காக வந்திருந்தான். அது உனக்கு பிடிக்கலையா ?”என்று கேட்டான் பிரேம் .

 

“ஆமாண்டா மச்சான்.. நான் இவங்க கிட்ட சொல்லாம கொள்ளாம கிளம்பி  வந்துட்டேன் ..சொல்லாம போய் அவ குழந்தைப் பாத்துட்டு வந்துட்டேன் இல்ல ,அதான் மேடம்  மூஞ்சியைத் தூக்கி வச்சிட்டு சுத்தறாங்க ” என்று நவிலன் வேண்டும் என்று அவளை சீண்டுவதற்காக அவ்வாறு சொன்னான்.

 

கோபம் கொண்டு வனிதா ஒரு நிமிடம் நின்று அவனை அனல் கக்கும் விழிகளுடன் எரிக்கும் பார்வை பார்த்தவள் ,”இப்படி ஒரு எண்ணம் வேற இருக்கா ?உன் மனசுல ரொம்ப சந்தோஷம்!

 

நீ வந்ததை என்கிட்ட சொல்லலனு மட்டும் தான் யோசித்தேனே தவிர. உங்க பிரண்ட பாக்க போறதையும் , உங்க பிரண்டுக்கு பிறந்திருக்க குழந்தையைப் பாக்க போறதையும் நான் தப்பா நினைக்கல.

 

ரொம்ப சந்தோஷம், இந்த அளவுக்கு என்னை புரிஞ்சு வச்சிருக்க வரைக்கும்” என்று லேசாக உதடு துடிக்க, கலங்கிய விழிகளுடன் கூறிவிட்டு நகர்ந்து விட்டாள்.

 

இங்கு நவிக்கு “அச்சோ!” என்று இருந்தது.

 

அவன் அவளை சீண்டுவதற்காக மட்டுமே அவ்வாறு கூறினான் .. ஆனால், தான் சொன்ன வார்த்தை இன்னும் சண்டைக்கு வழி வகிக்கிறது என்றவுடன்’ ஐயோ!’ என்று இருந்தது..

 

அவனுமே அறிவான் . அவள் நிவேதாவை வைத்து தன்னிடம் சண்டை போடுகிறாளே தவிர ,தங்கள் இருவரின் உறவை எப்போதும் சந்தேகித்ததும் இல்லை .

 

தன்னை அவளிடம் பேச வேண்டாம் என்றும் சொல்லியதும் இல்லை என்று அவனுக்குமே தெரியும் .ஆனால் ,ஏற்கனவே கோவமாக இருப்பவளிடம் இன்னும் ரெண்டு கோபத்தை தூண்டி விட்டிருக்கிறோமே என்று வருந்தினான்.

 

பிரேம் தனது நண்பனை முறைத்துவிட்டு,” உனக்கு நாக்குல சனி டி மாப்ள..!

 

சனி தாண்டவம் ஆடுது போல மாட்டிட்டு முழி ,அது சாதாரணமாவே கோவக்கார புள்ள தான் ,அது உனக்கே தெரியும் .இப்போ இது தேவையா உனக்கு ?”என்று சிரித்து விட்டு தனது நண்பனை அழைத்துக் கொண்டு சென்றான்.

 

பஸ் ஸ்டாப்பிலும் அவளுக்காக வந்து நிற்க.  வனிதா கண்டும் காணாமல் இருந்து விட்டாள்.

 

அன்று மாலையே நவிலன் காலேஜ் செல்ல இருந்ததால் ,வனிதா காலேஜ் விட்டு வரும்போதும் பிரேமுடன் சென்று அவளை பார்க்க செய்தான்.

 

அப்பொழுதும் வனிதா கண்டுகொள்ளவில்லை .

 

சரி நேரமாகிறது என்று எண்ணியவன். “மச்சான் நைட் நான்  ஊருக்கு கிளம்புறேன்.

அங்க போயிட்டு உனக்கு போன் பண்றேன்” என்றான் மென் புன்னகையுடன்  தனது நண்பனுடன் அவளது பின்னாடி சென்ற படியே…

 

வனிதா ஒரு வார்த்தை கூட பேசவில்லை. தன்னிடம் சண்டைக்கு வருவாள் என்று எண்ணினான்.

 

ஆனால் ,அவள் பேசாமல் இருக்க..

 

” உன்னை பார்த்துக்கிறேன் டி .என்கிட்ட வராமலா போயிடுவ “என்று லேசாக அவளது அருகில் வந்து முனகி விட்டு நகர்ந்து விட்டான்.

 

அவனுக்கு உண்மையாகவே நேரம் ஆகிறது .நாளை டெஸ்ட் இருக்க. அதற்கு படிக்க வேண்டும். அவன் இங்கிருந்தால் படிக்கவும் முடியாது.

 

இங்கு எதுவும் எடுத்துக் கொண்டு வரவும் இல்லை. புக் அனைத்தும் அங்கு இருக்க. இப்பொழுது கிளம்பினால் தான் அங்கு  போய் கொஞ்சமாவது படிக்க முடியும் என்று இருந்ததால் தனது  நண்பன்  பிரேமிடம் சொல்லிவிட்டு வீட்டிற்கு சென்று கிளம்பியிருந்தான் .

 

ஒரு வாரம் சென்று இருக்கும் .ஒரு வாரமாக அவனும் எப்படி எப்படியோ அவளுக்கு அழைத்து விட்டான் . பிரேமிடமும் “அவகிட்ட பேசுடா” என்றான் .

 

“என்னால  எல்லாம் உனக்காக அவ கிட்ட பேச முடியாது மச்சான்.உண்மையவே அந்த புள்ளைக்கு கண்ணு மண்ணு  தெரியாம கோவம் வரும் .. எதுக்கு எனக்கு தேவையில்லாத வேலை.. உங்களுக்கு நடுவுல பஞ்சாயத்து பண்ண போய் என்ன திட்டு வாங்கி கட்டிக்க சொல்ற ?”என்றான் மென் முறுவலுடன்.

 

“அதுவும் லவ்வர்ஸ்க்கு நடுவுல எல்லாம் பஞ்சாயத்து பண்ண போகக்கூடாது சாமி !”என்றான்.

 

நவிலன்  ,”நீ எல்லாம்  நண்பனே இல்ல டா” என்று திட்டி விட்டு வைத்து விட்டான்.

 

ஒரு வாரமாக அவன் செய்யும் மெசேஜை மட்டும் படிப்பவள் ,போன் செய்தாள் எடுப்பது இல்லை .

 

முதல் இரண்டு நாட்கள் மெசேஜ் ஆவது பார்த்தாள்.. அடுத்து வந்த நாட்களில் இருந்து மெசேஜ் கூட பார்க்காமல் இருக்க..

 

அவனுக்கு இன்னும் கஷ்டமாக இருந்தது. ஏற்கனவே தனது தோழியும் தன்னிடம் பேசாமல் இருக்க .இதைப்பற்றி அவளிடமும் இப்பொழுது சொல்ல முடியாத சூழலில் இருந்தவன்.

 

பைத்தியம் போல் திரிந்தான் . அவனுக்கு எக்ஸாம் நெருங்கி இருந்தது. இவர்களுக்கு முன்பாகவே அவனுக்கு வேறொரு யுனிவர்சிட்டி என்பதால் எக்ஸாம் ஒரு வாரத்திற்கு முன்பாகவே தொடங்கி இருந்தது .

 

நிவேதா மூன்று நாட்கள் குழந்தை டாக்டரிடம் இருந்துவிட்டு தன் மகளை அழைத்துக் கொண்டு தன் தாய் வீடு சென்று இருந்தாள்.

 

குழந்தைக்கு “சன்விகா “என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள் .ஏழாம் காப்பு இட்டு இருந்தார்கள். அவளுக்கு எக்ஸாம் நெருங்கிக் கொண்டிருக்க . எக்ஸாம் எழுத போவதாக வீட்டில் இருப்பவர்களிடம் கேட்டாள்.

 

“உன் புருஷன் ஒத்துக்கிட்ட தான் உண்டு ..எனக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை “என்று கவிதா ஒரே வார்த்தையாக சொல்லிவிட்டார்.

 

“குழந்தையை என்ன பண்ணுவ ?”என்று கேட்டார் கேள்வியாக கவிதா,

 

” ஏன் ம்மா?  நீ தான மா  சொன்னா.. படிக்க வைக்கிறேன்னு சொல்லி கல்யாணம் பண்ணி கொடுத்த?”

 

“ஆமா.. அதுக்கு என்ன இப்போ ?”என்றார்.

 

“இப்போ  பாப்பாவைத் தூக்கிட்டு ஒரு அஞ்சு நாள் என் கூட காலேஜ் கூட வர முடியாதா ? “என்று கேட்டாள் சிறிதும் குறையாத சீற்றத்துடன்.

 

” சரி டி உன் புருஷன் ஒத்துக்கிட்டா சரி” என்றார் ..

 

அவளும்  வசந்திடமும் இதைப் பற்றி பேச ..

 

வசந்த் ஒரே வார்த்தையாக “அடுத்த டைம் எழுதிக்கோ” என்றான் .

 

அவனை முறைத்து விட்டு அமைதியாகி விட்டாள் .

 

“ஏதாவது பேசு டி?” என்றான்.

 

“அதான் ஒரே வார்த்தையா சொல்லிட்டீங்க இல்ல, அடுத்த டைம் எழுதிக்கோ. பாப்பாவை விட்டுட்டு போக வேணாம்னு அப்புறம் என்ன?”  என்று கேட்டாள் அடக்கப்பட்ட அழுகையுடன்.

 

“கோவமா ?”என்று கேட்டான்.

 

“அதெல்லாம் ஒன்னும் இல்லை” என்று விட்டு அமைதியாகி விட்டாள் ..

 

“லூசு சும்மா விளையாட்டுக்கு தாண்டி சொன்னேன். நீ என்ன சொல்றேன்னு பாக்குறதுக்காக , அப்புறம் என் அண்ணனும் ,என் வீட்ல இருக்கவங்களும் சொன்னதுக்கு என்ன டி  அர்த்தம் ?

 

நான் உன்ன குழந்தை பிறந்த உடனே எனக்கு குழந்தை தான் முக்கியம் என்று உன் படிப்பை வீணாக்கிடுவேன் என்ற மாதிரி தானே நீயும் நினைச்சி இருக்க ?” என்றான் லேசாக குரல் கம்ம தொண்டை அடைக்க.

 

அவனது தோளில் சாய்ந்தவள். “நான் எப்ப அப்படி சொன்னேன். ?நீங்க ஒரே வார்த்தையா அடுத்த டைம் எழுதிக்கன்னு சொன்னா நான் என்ன பேசுறது?” என்றாள்  குரல் உடைய லேசான அழுகையுடன் ..

 

“சும்மா தாண்டி சொன்னேன்” என்று அவளது நெற்றியில் இதழ் பதித்துவிட்டு, தனது மகளை தூக்கி கொஞ்சினான் .

 

“கார் அரேஞ்ச் பண்றேன் ..காலேஜ் போக வர. எக்ஸாம் எழுத மட்டும் இப்போ போ. டெய்லி காலேஜுக்கு இப்போ போக வேணாம் .

 

காலேஜ் பஸ்ல போக வேணாம்.காலேஜ் பஸ்ல போனா ஈவினிங் வர நீங்க அங்க இருக்குற மாதிரி இருக்கும் .வரும்போது அவுட் பஸ்ல வந்தாலுமே பாப்பா வச்சுட்டு கஷ்டம் .டெய்லியும் இங்கிருந்து எட்டு மணிக்கு மேல கிளம்புற மாதிரி கார் அரேஞ்ச் பண்றேன். அதுல போயிட்டு மதியம் எக்ஸாம் முடிச்ச உடனே கிளம்பி வந்துடு.

 

ஃபிரண்ட்ஸ் பார்க்கிறேன் என்று லேட் பண்ணிடாத டி. பாப்பாக்கு கஷ்டமா இருக்கும்ல எப்படியும் நீ எக்ஸாம் முடிச்சிட்டு வர வரைக்கும் கூட பால் கொடுக்க முடியாது”  என்றான் கவலையாக .

 

பூவாய் மலர்ந்த நிவேதா ,”அப்படிலாம் இல்ல .எக்ஸாம் முடிவதற்குள் நடுவுல ஒன்ஸ் ஃபீட் பண்ண அலோ பண்ணுவாங்க.

 

அப்படி இல்லன்னா பாப்பா அழுவுச்சின்னா நடுவுல இன்பார்ம் பண்வாங்க.. அப்போ  வந்து ஃபீட் பண்ணிட்டு போலாம். நான் விசாரிச்சிட்டேன் ” என்று மலராய் சிரித்தாள் .

 

“சரிடி நான் காருக்கு பேசிட்டேன்.. நீ எக்ஸாமுக்கு படிச்சா மட்டும் போதும் .. படிச்சிடுவ இல்ல.

மார்க் ஜஸ்ட் பாஸ் ஆனாலும் பரவால்ல. ஆனா நீ பாஸ் ஆகி இருக்கணும். அரியர் இல்லாம”என்றான்.

 

“உங்க  குடும்பத்து முன்னாடி உங்களை விட்டுக்கொடுத்துற மாட்டேன்” என்று அவனது நெற்றியோட நெற்றி முட்டி சிரித்தாள் .

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்