
அத்தியாயம் – 19
ஒருவழியாக வீட்டிற்கு காலை 7 மணிக்கு இருவரும் வந்து சேர,வீட்டில் கார்த்திக்,வர்ஷூ,விஜய் ,ஆதி,விஜயின் பெற்றோர் மட்டுமே இருந்தனர்.
தோழிகள் மூவரும் விடுதியிலே இறங்கிக் கொள்ள, கார்த்திக் வீட்டிற்கு பால் காய்ச்ச வேண்டும் என்பதால் விஜயின் குடும்பத்தார் அங்கேயே தேங்கினர்.
இவர்கள் வந்ததும் கார்த்திக் தனியாக ஹரியை அழைத்துக் கொண்டு போய் ,”ஒன்னும் பிரச்சனை இல்லையே” என கேட்க,
ஹரியோ,”அதெல்லாம் ஒன்னும் இல்லைடா” என்க..நிம்மதி பெருமூச்சு விட்ட கார்த்திக் அப்போது தான் ஹரியின் சட்டையில் இருந்த மண்கரையை பார்த்தான்.
“என்னடா சன்ரைஸ் தான பார்த்துட்டு வரீங்க,அதுக்கு எதுக்கு சன்ரைஸ் காபித்தூளை கொட்டி வச்ச மாதிரி உடம்பெல்லாம் மண்ணை அப்பிட்டு வந்திருக்க” என குழப்பமாக வினவ,
ஹரியோ மனதிற்குள்,’அய்யய்யோ கீழ விழுந்து புரண்டதுல மண்ணு ஒட்டிக்கிச்சே..இத எப்படி டா மறந்த…இவனுக்கு மட்டும் பீச்ல நடந்தது தெரிஞ்சுச்சு,பால் இல்லாமையே பொறாமைல பொங்கிருவான்..சமாளிடா ஹரி’ என கூறிக் கொண்டவன் ,”அது வந்து..நாங்க காரை நிறுத்திட்டு அங்க நின்னுட்டு இருந்தோமா..அப்போ அங்க வேகமா வந்த ஒரு கார் மழைல ரோட்டுல தேங்கியிருந்த சேரை எங்க மேல அடிச்சுட்டு போய்ருச்சு” என மகா மட்டமான காரணத்தை சொன்னவனை முறைத்த கார்த்திக், “இல்லை என்ன பார்த்தா லூசுன்னு தலையில எழுதி ஒட்டிருக்கா?? தெரியாமத்தான் கேக்குறேன் இங்க பங்குனி வெயில் பல்லைக் காட்டிட்டு அடிச்சிட்டு இருக்கு..வெயில்ல எல்லாரும் நொந்து நூடில்ஸ் ஆய்க்கிட்டு இருக்காங்க..உனக்கு மட்டும் எங்கடா ரோட்டுல தண்ணீர் தேங்குற அளவுக்கு மழை பேஞ்சுச்சு..அத கூட மன்னிச்சுருவேன் டா..சேத்துல அடிபட்டதுக்கும்,கடல் மண் ஒட்டிருக்கதுக்கும் கூட வித்தியாசம் தெரியாத ஞானசூனியம்னு நினைச்சுட்டியா டா த்ரோகி..பீச்க்கு போய் கும்மாலம் அடிச்சுட்டு வந்துட்டு என் கிட்ட கதை விடுறியா கொன்றுவேன் ” என மிரட்டினான்.
“இதோ வந்துட்டேன் மாப்பிள்ளை” என கூப்பிடாத விஜய்க்கு பதிலளித்த ஹரி அங்கிருந்து எஸ்கேப் ஆகினான்.
“என் கிட்ட மாட்டாமையா போய்ருவ!!அப்போ வச்சுக்கிறேன் உன்னை” என நினைத்த கார்த்திக் விஜயின் அம்மா சொன்னது போல் பக்கத்தில் இருந்த மற்ற இரு ப்ளாட்டிற்க்கும் பால் காய்ச்சிற்கு அழைக்க சென்றான்.
மற்றவர்கள் அனைவரும் முன்னமே குளித்து தயாராகியிருக்க,ஹரியும் ஸ்ரீயும் குளிக்க சென்றனர்.
வெளியே வந்த கார்த்திக் முதலில் வலது பக்கம் இருந்த ப்ளாட்டிற்கு சென்றவன் அங்கிருந்த காலிங் பெல்லை அழுத்தினான்.
ஐந்து முறை தட்டியும் பதிலேதும் வரவில்லை என்பதால் நகரப் போனவன் கதவு திறக்கும் சப்தத்தில் அங்கேயே தேங்கினான்.
உள்ளிருந்த மரக்கதவை திறந்த அந்த ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மனி அவனை சந்தேகமாக பார்க்க,
அவனோ ஈஈஈ என இளித்துக் கொண்டு ,”ஹாய் ஆன்ட்டி,நாங்க பக்கத்து வீட்டிற்கு குடி வந்திருக்கோம் பால் காய்ச்ச போறோம்..நீங்களும் கண்டிப்பா வரணும்..” என கூறினான்.
இன்னும் அவனை குழப்பமாக பார்க்க, ‘ஒருவேளை காது டமாரமோ’ என நினைத்தவன் இன்னும் சப்தமாக முதலில் சொன்னதையே திரும்ப சொல்ல.
அவனை அப்பட்டமாக முறைத்தவர் காதை மூடிக்கொண்டு,”pourquoi criez-vous..je sais que tu es un voleur..sinon j’appelle la police(எதுக்கு இப்படி கத்துற..நீ திருடன் தான..இரு போலிஸ கூப்பிடுறேன்)” என பிரென்ச்சில அவர் கத்திவிட்டு உள்ளே செல்ல,
கார்த்திக்கோ ‘ஙே’ என முழித்துக் கொண்டு நின்றான். “என்ன இந்த கிழவி என்னை பாராட்டிட்டு போச்சா திட்டிட்டு போச்சா?? பார்க்க இந்தியா மாதிரி தான் இருக்கு ஆனா சைனிஸ்ல திட்டுச்சா இல்ல ஸ்பானிஷ்ல பேசுச்சான்னு தெரியலையே..” என புலம்ப, அது வரையில் அவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த வர்ஷூ, அங்கு வந்து ,”இவ்ளோ நாளா நீயும் ஹரி மாமாவும் இங்க தான இருக்கீங்க..பக்கத்து வீட்டு ஆன்ட்டி உனக்கு ப்ரெண்ட் இல்லையா” என வினவ..
“இல்லையே..நாங்களே எப்போ வருவோம் எப்போ போவோம்னு தெரியாது..இதுல்ல இந்தம்மாவ நான் எங்க சைட் அடிக்க..கொஞ்சம் நல்லா இருந்திருந்தாலாச்சும் தெரிஞ்சிருக்கும்..இது ஏதோ திருவாரூர் தேர் மாதிரி இருக்கு..இது ஆடி அசைஞ்சு வர்றதுக்குள்ள நாங்க போய் தூங்கிருப்போம்” என உளறிவிட,
அவன் கையில் கிள்ளிய வர்ஷூ,”நீயெல்லாம் திருந்தவே மாட்டியா பொறுக்கி” என திட்ட, “ஹிஹி சும்மா பேபி..உன்னை கடுப்பேத்தலாம்னு தான்..சரி அந்த ஆன்ட்டி ஏதோ சொல்லுச்சே உனக்கு புரிஞ்சிச்சா” எனக் பேச்சை மாத்தினான்.
அவன் மீது கடுப்பில் இருந்தவள் இந்த வாய்ப்பை பயன் படுத்திக் கொண்டு,’மவனே இரு உன்னை அந்த ஆன்ட்டி கையாலையே அடி வாங்க வைக்கிறேன்’ என நினைத்தவள்,”அதுவா ..அந்த ஆன்ட்டிக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்காம்..அதுனால நைட் பால்கனி வழியா உன்ன அவங்க வீட்டுக்கு வர சொல்லிருக்காங்க” என ஒரு பிட்டைப் போட்டாள்.
“பொய் சொல்லாத போலிஸ்னு கடைசில வந்துச்சே” என அவன் பாயின்டைப் பிடிக்க,
“அது நீ பார்க்க போலிஸ் மாதிரி நல்லா கம்பீரமா இருக்கனு சொன்னாங்க” என சமாளித்தவளை நம்பாமல் பார்த்தவன் ,”எதுக்கு வாசல் வழி வர சொல்லாம பால்கனி வழி வர சொல்லுச்சு” என அடுத்த சந்தேகத்தை கேட்க,”என்ன ஓவரா கேள்வி கேட்குற..ஒருவேளை அவங்க புருஷனுக்கு பயந்து அப்படி சொல்லிருக்கலாம்..என்னை என்னைக்கு நீ நம்பிருக்க..நம்பவே வேண்டாம் போ” என அவள் முகத்தை திருப்பிக் கொள்ள..
“அச்சோ அப்படிலாம் இல்லை பேபி..உன்ன நம்பாம இருப்பேனா??சும்மா கேட்டேன் ” என வழிந்தான்.
அவளும் விஷமமாக புன்னகைத்துக் கொண்டே தங்கள் வீட்டிற்குள் போக, இவனும் இன்னொரு வீட்டில் சென்று சொல்வதைக் கூட மறந்து விட்டு மனைவியே சரணம் என்று அவள் பின்னால் சென்று விட்டான்.
விஜயின் தாயார் கார்த்திக்கிடம் அவர்களிடம் சொல்லி விட்டாயா என வினவ,”சொல்லிட்டேன் அவங்களுக்கு வேலை இருக்காம் வரலை” என பொய்யுரைத்தான்.
அவரும் அதை நம்பிவிட்டு,”சரி வாங்க நாமளே காய்ச்சுவோம்” என முன்னே செல்ல அவரைத் தொடர்ந்து மூன்று பெண்களும் சென்றனர்.
ஸ்ரீ போய் அவரிடம்,”பெரியம்மா நான் பால் காய்ச்சுறேன்” என செல்லம் கொஞ்ச,பதிலுக்குஅவரும்,”அதுக்கென்னடா தங்கம் நீயே காய்ச்சு” என சீராட்டினார்
இந்த காட்சியை கண்ட கார்த்திக்கும்,ஹரியும் அதிர்ச்சியாகினர்.
விஜயின் தாயோ ஒரு கறார் பேர்வழி..முதலில் விஜய் ஆதி திருமணத்திற்கு சம்மதிக்க மாட்டேன் என ஒற்றைக் காலில் நின்றவர்,பின் ஏதோ மாயஜாலம் நடந்ததைப் போல் சம்மதம் தெரிவித்தார்.அதன் பின்பும் முதலில் ஆதிராவுடன் பேசாதவர், பின் அவளின் குணத்தை பார்த்து இப்போது தான் சிரித்து பேசும் அளவிற்கு வந்திருக்கிறார்..அப்படி பட்டவர் ஒரு வாரத்திற்கு முன் பார்த்த ஸ்ரீயை கொஞ்சுவதை கண்டு அதிசயித்த இருவரும்,இதில் ஏதோ மர்மம் இருக்கிறது,சீக்கிரம் அதை கண்டுபிடிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டனர்.
அனைவரையும் ஹாலில் அமரச் சொல்லிய ஸ்ரீ ,பாலை எடுத்து கிண்ணத்தில் ஊற்றி அடுப்பை பற்ற வைத்தாள்.
பால் பொங்கி வருவதற்கு காத்திருந்தவள் அதற்குள் தன் அலைபேசி அழைக்க,அதில் அழைத்திருந்த நந்துவுடன் பேசிக்கொண்டே சமயலறையை ஒட்டிருந்த அறைக்குள் சென்று அமர்ந்து பாலை மறந்து விட்டு கதை பேசத் தொடங்கினாள்.
ஹாலில் இருந்ததால் அவர்களுக்கு இவள் சென்றது தெரியவில்லை..
இவ்வளவு நேரமா பால் காயுது என நினைத்த விஜயின் தாய் ,எழுந்து போய் அடுப்பை பார்க்க அதிர்ந்து போனார்.
பால் ஒரு பக்கம் வெள்ளம் போயிருக்க,பால் சட்டியே கருகிப் போயிருந்தது.அடுப்பை Full flameஇல் வைத்து விட்டு சென்றதால் விரைவிலே பால் பொங்கி சட்டி கருகியிருந்தது..
வேகமாக சென்று அதை அணைத்தவர்,”ஸ்ரீ மா இங்க வா” என கத்தினார்.
அவர் அழைத்ததும் தான் பாலைப் பற்றிய நினைவே வர அடித்துப் பிடித்து ஓடி வர,அங்கிருந்த அனைவரையும் பார்த்து ‘அய்யோ போச்சு போச்சு இன்னைக்கு செம அடி வாங்க போற ஸ்ரீ’ என பயந்து கொண்டே போனாள்.
கையிலிருந்த செல்போனையும் அவளையும் மாறி மாறி பார்த்தவர்,”என்னைக்கு தான் உங்களுக்கெல்லாம் பொறுப்பு வருமோ” என அதை மட்டும் கூறிவிட்டு வேறெதுவும் சொல்லாமல் வேறொரு பாத்திரத்தில் பாலை ஊற்றிவிட்டு அந்த இடத்தை சுத்தம் செய்தார்.
ஸ்ரீயின் முகம் வருத்தமடைவதை கண்டு அங்கிருந்த அனைவரும் அவளை கலாய்த்து ,சீண்டி அவளை சிரிக்க வைக்க,அந்த தாய் மட்டும் ‘முதல் நாளே இப்படி ஆய்ருச்சே..கடவுளே இவங்களுக்கு எந்த பிரச்சனையும் வராம நீதான் காப்பாத்தனும்” என மனம் வருந்த கடவுளிடம் வேண்டுதல் வைத்தார்..
ஒரு வழியாக பால் காய்ச்சி முடிந்த பின்,விஜய் சென்று ஹோட்டலில் அனைவருக்கும் உணவு வாங்கி வர அதை உண்டார்கள்..சிறிது நேரம் பேசி விட்டு,விஜய் குடும்பம் விடைபெற ,இவர்கள் நால்வர் மட்டும் இருந்ததால்,ஊரில் இருந்து கொண்டு வந்த தங்கள் பொருட்களை அடுக்கி வைத்து ,மளிகை பொருட்களை தனித்தனியாக கொட்டி வைத்து விட்டு வீட்டை சுத்தப் படுத்தினார்கள்.
இதற்கே மாலை ஆறு மணி ஆகி விட,களைத்துப் போய் அனைவரும் ஹாலில் ஒவ்வொரு மூலையில் அமர்ந்து இளைப்பாறினர்.
“ப்ரோ swiggy or zomato??? சீக்கிரம் சொல்லு..ஆல்ரெடி என்னோட வயிறு பசி தாங்காம உள்ளிருக்க குடல் ,குந்தானி எல்லாத்தையும் குஸ்கா மாதிரி சாப்பிட ஆரம்பிச்சிருச்சு..என்னையே சாப்பிட்டு அது ஏப்பம் விடுறதுக்குள்ள சீக்கிரம் என்ன ஆர்டர் பண்ணன்னு சொல்லு” என கார்த்திக் ஹரியிடம் வினவினான்.
“கொழுந்தனாரே நான் வேணும்னா சமைக்கட்டுமா” என ஹரியை முந்திக் கொண்டு பதிலளித்த ஸ்ரீயை கண்டு கையெடுத்து கும்பிட்ட கார்த்திக்,”நீங்க ஆணியே புடுங்க வேண்டாம் அண்ணியாரே..காலைல நீங்க பாலை பொங்க வச்சதுல இருந்தே நீங்க சமையல்ல எவ்வளவு பெரிய புலின்னு எனக்கு தெரிஞ்சிருச்சு..உனக்கு சோதனை எலி வேண்டும்னா உன் புருஷனை வச்சுக்கோ..என்னையும் என் பொண்டாட்டியையும் ஆளை விடு..நாங்க இன்னும் வாழவே ஆரம்பிக்கலை” என் வர்ஷூவை பார்த்து ஏக்கமாக கூறினான் கார்த்திக்.
அவனை முறைத்த வர்ஷூ,’அங்க சுத்தி இங்க சுத்தி அங்கேயே வந்து நிக்கிது பக்கி’ என முனுமுனுத்தவள்,”எதுக்கு வெளியில ஆர்டர் பண்ணனும் ,அதான் நான் இருக்கேன்ல நான் சமைக்கிறேன்” என்று கார்த்திக்கை பார்க்காமல் கூறியவளை கண்டு வாயை பிழந்த கார்த்திக், ஹரியை பார்த்து நக்கலாக ,”டேய் அண்ணா பார்த்தியா?? என் பொண்டாட்டியை ..அவ சமைக்கிறாளாம்..சமைக்க தெரிஞ்ச பொண்டாட்டி கிடைக்கலாம் ஒரு குடுப்பனை வேண்டும் டா.. உனக்குலாம் அது இந்த ஜென்மத்துல கிடைக்காது..
‘கோபாலன் படைச்சான் என் கிட்ட கொடுத்தான்
அனுபவி ராஜான்னு அனுப்பி வைச்சான்
என்னை அனுபவி ராஜான்னு அனுப்பி வைச்சான்'” என ஹரியிடம் தொடங்கி வர்ஷூவிடம் முடித்தவனை கொலைவெறியுடன் நோக்கியவள்,”உனக்கு எவ்ளோ தைரியம் இருந்த என் அப்பாவை பேர் சொல்லி கூப்பிட்டதும் இல்லாம,அவன் இவன்னு வேற சொல்லுவ??மவனே என் கிட்ட மாட்டாமையா போவ அப்போ நீ கைமா தான் டி” என அவனை எச்சரித்தவள் ,”நான் போய் சமைக்கிறேன்” என பொதுவாக அனைவரிடமும் சொல்லிவிட்டு எதிரில் இருந்த தங்கள் ஃப்ளாட்டிற்கு சென்றாள்.
அவள் போவதையே ஆவென்று பார்த்திருந்த ஸ்ரீயின் வாயை மூடிய கார்த்திக்,”ரொம்ப பொறாமை படாதீங்க அண்ணியாரே!!! அப்பறம் என்னோட வைரக்கட்டிக்கு எதாச்சும் ஆய்ரப் போகுது..சரி என் ஜிங்கிலி அங்க தனியா கஷ்ட பட போறா நான் போய் ஹெல்ப் பண்ணிட்டு வரேன்..பார்க்க பாவமா வேற இருக்கீங்க சோ இன்னைக்கு மட்டும் உங்களுக்கும் சேர்த்து சாப்பாடு எடுத்துட்டு வரேன்” என பெருந்தன்மையாக கூறிய கார்த்திக்கை ஸ்ரீ கொலை வெறியுடன் பார்க்க, அவள் கணவனோ ,’எல்லாம் உன்னால தான்..காலையில ஒரு பால் காய்ச்சுறேன்னு இப்படி இந்த பன்னாடை எல்லாம் என்னஒ காய்ச்சுற அளவுக்கு உன்னால என்ன பண்ண முடியுமோ அத பண்ணிட்ட..’ என அவளை பாசப் பார்வை பார்த்தவன்,
“ஓவரா ஆடாத டா..எனக்கும் ஒரு காலம் வரும் அப்போ என் பொண்டாட்டியும் நல்லா சமைச்சு எனக்கு போடுவா” என மனைவியை விட்டுக்கொடுக்காமல் பேசியவனை கண்டு,”வாய்ப்பில்லை ராஜா” என கார்த்திக் கிண்டலடித்தான்.
“இதோ பார் உன் போன்ல இன்னைக்கு ரிமைண்டர் போட்டு வச்சுக்கோ இன்னும் எண்ணி ஒரே மாசத்துல உன் பொண்டாட்டிய விட நல்லா சமைச்சு,உன் வாயலையே எனக்கு சமைச்சு கொடு ஸ்ரீனு சொல்ல வைக்கிறேன்..இது என் புருஷன் மேல சத்தியம்..அது வரைக்கும் உன் பொண்டாட்டி சமைக்கிறது ஒன்னும் எங்களுக்கு வேண்டாம்” என ஹரியின் உயிருக்கே உலை வைத்தாள் அவனின் தர்மபத்தினி.
‘அட சனியன் பிடிச்சவளே..நீ பணயம் வைக்க என் உயிர் தான் கிடைச்சுச்சா’ என ஹரி நொந்து கொள்ள,
“நல்ல சாப்பாட்டை மிஸ் பண்ணிட்டேன்னு ஃபீல் பண்ண போறீங்க…உங்க தலையெழுத்து அதான்னு இருக்கப்போ யார் மாத்த முடியும்..உங்களுக்கு கொடுத்து வச்சது அவ்ளோ தான்..அண்ட் ப்ரோ இப்பவே உன்ன நல்லா பார்த்துக்கிறேன் டா ..இன்னும் ஒரு மாசம் கழிச்சு இருப்பியோ இருக்க மாட்டியோ..உனக்கு என்னோட ஆழ்ந்த அனுதாபங்கள் டா அண்ணா ” என்று கூறியவன் சிட்டாக தன் வீட்டிற்கு பறந்து விட்டான்.
தன் வீட்டினுள் நுழைந்த கார்த்திக் ,சமயலறையை எட்டிப் பார்க்க அங்கு வர்ஷூ தீயாக வேலை பார்த்துக் கொண்டிருந்தாள், அதைக் கண்டு மனைவியை மனதிற்குள் மெச்சியவன்,’உனக்கு சமைக்க தெரியும்னு இத்தனை நாளா தெரியாம போச்சே என் சர்க்கரைக் கட்டி!!!!’ என கொஞ்சிக் கொண்டான்.
இவன் வந்துவிட்டதை உணர்ந்த வர்ஷூ,”வந்துட்டியா !!! உனக்காக தான் வெய்ட் பண்ணிட்டு இருந்தேன்..பூரி செய்யலாம்னு எல்லாம் ரெடி பண்ணிட்டேன்..ஒரே கச கசன்னு இருக்கு போய் குளிச்சிட்டு வந்துருறேன்..நீ என்ன பண்ற பூரியை குக்கர்ல வச்சிருக்கேன் 3 விசில் வந்ததும் ஆஃப் பண்ணிரு மறந்துராத” என சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
முதலில் ஒன்றும் புரியாமல் முழித்தவன் புரிந்த பின்போ,”என்னாதூஊஊ பூரிய குக்கர்ல வச்சிருக்கியாஆஆஆ!!!!!” என அதிர்ந்து போய் அங்கேயே தலையில் கைவைத்து அமர்ந்து விட்டான் கார்த்திக்….
அப்போது அவன் தங்கள் வீட்டில் மறந்து வைத்துவிட்ட அவன் கைபேசியை கொடுக்க வந்த ஸ்ரீ,இவர்களின் உரையாடலை கேட்டு பத்ரகாளியாக மாறியவள்,”டேய் கார்த்திக் பன்னி இவளுக்கு சப்போர்ட் பண்ணி என்ன என்ன பேசுன?? என்ன சொன்ன என்ன சொன்ன நான் உன் பொண்டாட்டிய பார்த்து பொறாமை படுறேனா?? கொஞ்சமாச்சும் மனசாட்சி இருக்காடா..உலகத்துலேயே பூரிய குக்கர்ல வச்சு சமைச்ச புண்ணியவதினு உன் பொண்டாட்டி பேரை தான் வரலாற்றுல பதிக்கப் போறாங்க..க்ரிஷ் இங்க வந்து நியாத்தை கேழுடா” என கத்தியவள் கார்த்திக்கின் அருகில் சென்று கையில் கிடைத்த புத்தகத்தை வைத்து அவனை அடிக்க ஆரம்பித்தாள்.
குளிக்க போன வர்ஷூ இவள் பேசியது கேட்டு அங்கே வர,”ஹேய் நிறுத்து டி..எதுக்கு இப்போ என்னை இழுக்குற..என் சமையல்ல என்ன குறைய கண்ட” என சண்டைக்கு வர,
ஹரியும் வந்து இந்த கூத்தில் கலந்து கொண்டான்.
“பின்ன எவன் டி பூரிய குக்கர்ல வச்சு சமைப்பான்..கொஞ்சமாச்சும் மண்டைல மசாலா இருக்கா” என ஸ்ரீ கேட்க,
“உன்னை விட நிறையாவே இருக்கு..இப்போ நம்ம சாதம் சாப்பிடுறோமே அது ஃபர்ஸ்ட் எப்படி இருக்கும் அரிசியா தான..அரிசில தண்ணிய ஊத்தி குக்கர்ல வச்சா அது பெரிசாகி சாதமா வர மாதிரி பூரி மாவை தண்ணில போட்டு குக்கர்ல வச்சா அதுவும் பெரிசாகி புஃப் புஃப்னு வரும்..இது கூட தெரியாம உனக்கு யாரு கல்யாணம் பண்ணி வச்சா?” என வர்ஷூ ஒரு விளக்கம் கொடுக்க ,அதைக் கேட்ட அங்கிருந்த மூவருக்கும் மயக்கம் வராத குறை தான்.
ஸ்ரீ கொஞ்சம் தெளிந்து,”சரி வா வந்து உன் ஸ்பெஷல் பூரி வெந்துருச்சான்னு பார்க்கலாம் ” என அவளை இழுத்துக் கொண்டு சமயலறைக்குள் போக,ஹரியும் கார்த்திக்கும் அவர்களை பின் தொடர்ந்தனர்.
உள்ளே சென்றவள் ,அடுப்பை அணைத்து விட்டு குக்கரை திறக்க,உள்ளிருந்ததை பார்த்து அதிர்ந்து விட்டாள்.
“என்ன கன்றாவி டி இது..பார்க்கவே வாமிட் வருது..பூரிக்கு எதுக்கு டி முழு பொட்டேடோவ தோல் கூட உறிக்காம உள்ள போட்டு வச்சிருக்க..இன்னும் வேற என்னென்னமோ போட்டு வச்சிருக்க” என முகத்தை சுளிக்க,அதை எட்டிப்பார்த்த கார்த்திக்கு வாந்தி வாயிற்கு வந்து விட்டது..முயன்று தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு நின்றான்..ஹரியோ இவர்களிருவரின் முகத்தை பார்த்து இந்த விஷப்பரீட்சை தனக்கு வேண்டாம் என நினைத்து தள்ளியே நின்று கொண்டான்.
வர்ஷூவோ அசால்டாக,”ஹேய் பூரிக்கு குருமா யாரு உங்க தாத்தாவா வைப்பாரு..அதான் எதுக்கு ரெண்டு வேலைன்னு உருளைக்கிழங்கு மசாலா பண்ண உருளைக்கிழங்கு,கீரை, அப்பறம் இந்த டப்பால இருந்த பொடி எல்லாத்தையும் போட்டுட்டேன்” என கூற,
அடுத்த அதிர்ச்சியை தாங்காமல் நெஞ்சைப் பிடித்துக் கொண்ட கார்த்திக்,”கீரையெல்லாம் எதுக்கு மா மசாலாக்கு” என வினவினான்.
“ஏய் பச்சை கலர்ல இலையெல்லாம் போடுவாங்கள அது கூட தெரியாதா” என எல்லாம் தெரிந்தவள் போல் கெத்தாக கூற,
‘அடி சண்டாளி கொத்தமல்லி கருவேப்பிலைக்கும் கீரைக்கும் வித்தியாசம் தெரியாத மடச்சாம்பிராணி உனக்கு போய் எவ்வளவு பில்டப் கொடுத்தேன்..இப்படி ஒரே நிமிஷத்துல எல்லாத்தையும் நாசமாக்கிட்டையே’ என கார்த்திக் பொரும,
ஸ்ரீயோ “அது சரி எங்க கோதுமை மாவே காணோம் ..எதை போட்ட..பாத்திரம் விளக்க வச்சிருந்த சபீனா பொடியை எடுத்து எதும் கொட்டிட்டியா” என பீதியை கிளப்ப,
“ஓவரா பேசாத,நான் பூரி மாவு தான் கொட்டுனேன்” என ஒரு டப்பவை எடுத்து அவள் கைகளில் கொடுக்க,
அதை திறந்து பார்த்த ஸ்ரீ நொந்து போய்விட்டாள்,”அடியேய் நீ ஏலியனா டி..உண்மைய சொல்லு..கோதுமை மாவுக்கு பதிலா நீ கேப்பை மாவை போட்ருந்தா கூட உன்ன மன்னிச்சு விட்ருப்பேன் டி..இப்படி பாட்டி உடம்புக்கு பூசி குளிக்க குடுத்து விட்ட பாசிப்பயிறு பொடியை அள்ளி போட்ருக்கியே பாதகத்தி..இன்னும் ஒரு நிமிஷம் இதை பார்த்தா நான் பரலோகம் போய்ருவேன் நான் கிளம்புறேன் டி தெய்வமே” என கூறியவள் விட்டால் போதும் என ஓடி விட்டாள்.
ஹரி கார்த்திக்கின் முதுகை சுரண்டியவன் ,”பேச்சா டா பேசுன?? கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுன? அதான் கடவுள் வச்சான் பாரு பெரிய ஆப்பா…இதுல பாட்டு வேற அனுபவி இராஜான்னு அனுப்பி வச்சானாமுல்ல…நல்லா அனுபவி இராஜா அனுபவி..நான் உன்னை ஒன்னும் பண்ண மாட்டேன்..நீயே இந்த குக்கர்ல இருக்க அந்த கழனிதண்ணிய விட மோசமான ஐட்டத்தை பார்த்து செத்துப் போயிரு நான் கிளம்புறேன்” என அங்கிருந்து அகன்றான்.
“ஹேய் லூசுங்களா இப்படி விசில் வரதுக்கு முன்னாடியே திறந்து நான் சமைச்சதெல்லாம் வேஸ்டா போச்சு” என வர்ஷூ புலம்ப,
அவள் கழுத்தை நெறிப்பது போல் போனவன் ,”உன்ன கொல்றதுக்குள்ள ஒழுங்க ஓடி போய்ரு..கடுப்பைக் கிளப்பாம” என கூற,
பயந்து போனவள் மெதுவாக,”அப்போ பூரி” என்க,
“இன்னொரு வாட்டி அதை பூரின்னு சொன்ன சண்டை நாறி போய்ரும் சொல்லிட்டேன்..இனிமேல் பூரி சாப்பிடுறப்போலாம் இந்த கன்றாவி தான் டி கண்ணுல வரும்..போடி பைத்தியம்” என அவன் வெளியில் சென்று விட்டான்..
“போங்க உங்க யாருக்கும் இதோட அருமை தெரியலை” என புலம்பிய வர்ஷூ, குளிக்க சென்று விட்டாள்.
அதன் பின் swiggyயின் உபயத்தால் நால்வரும் வயிற்றை நிரப்பி விட்டு படுக்க செல்ல,ஹரிக்கு ஒரு போன் கால் வந்தது..
அதை தனியாக எடுத்து சென்று பேசியவன் முகம் பாறையாக இறுக,போனை அணைத்தவன் பால்கனியின் தரையிலே அமர்ந்து சுவரில் சாய்ந்து வானத்தை வெறித்தான்..கண்ணில் இருந்து ஒரு சொட்டு நீர் வெளியேறி அவன் கைகளில் பட்டுத் தெறிக்க வாய் மெதுவாக,”சந்து மா ஐ மிஸ் யூ டா” என புலம்பியது….
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
8
+1
+1

