
அத்தியாயம் – 16
“அண்ணாஸ் அண்ணிஸ், இன்னைக்கு எல்லாரும் ஃப்ரீயா இருக்கோம், நாம ஏதாச்சும் கேம் விளையாடலாமா” என்றாள் இனியா உற்சாகமாக
“என்ன கேம் இனியா” நித்திலா ஆர்வமாக கேட்க,…”ம்ம்ம்…. ஓடி பிடிச்சு விளையாடலாம் அண்ணி” என்றாள் இனியா…
“ஏன்மா இனியா,… எங்களை பார்த்தா சின்ன பசங்க மாதிரியா இருக்கு” என பாவமாக கேட்டான் வித்தார்த்…
“அச்சச்சோ… நீங்க அங்கிள்ஸ்ல, உங்களோட ஓட முடியாதே, அதை நான் மறந்துட்டேனே” இனியா அவன் அண்ணனுங்களை கலாய்க்க,…”ஏய்… யாரு அங்கிள், நான் லாம் ஓட ஆரம்பிச்சா நீ எல்லாம் தெறிச்சு ஓடிடுவ” என்றான் வித்தார்த் கெத்தாய்,…
“பார்க்கலாமே அதையும், விக்கி அண்ணா நீங்களும் ரெடி தானே” இனியா கேட்க,… சிறு தலையசைப்பில் தன் சம்மதத்தை தெரிவித்தான் விக்ராந்த்,…
சின்னவர்கள் வீட்டின் கார்டனில் இருக்க,…”இனியா வேற விளையாட்டே கிடைக்கலையா, ஷாரீ கட்டிக்கிட்டு எப்படி எங்களால ஓட முடியும்” சுமித்ரா கேட்க,… “டோன்ட் வொர்ரி சுமிகுட்டி, நீ கீழே விழுந்தா அந்த நொடியே உன்னை தாங்க நான் உன் பக்கத்துல இருப்பேன்” வித்தார்த் கண்ணடித்தபடி சொல்ல, சுமி முகம் சிவந்து போனாள்….
“ஹெலோ ஹெலோ…. இங்க ஒரு சின்ன பொண்ணு இருக்கேன், அது நியாபகத்துல இருக்கட்டும்” இனியா சொல்ல….. தொண்டையை செருமிக் கொண்டு… “சரி சரி,… ஸ்டார்ட் பண்ணலாமா” பேச்சை மாற்றினான் வித்தார்த்…..
“ஓகே…. நான் இங்கி பிங்கி வைப்பேன், லாஸ்ட்டா யார் வராங்களோ அவங்க தான் பிடிக்கணும், மத்தவங்க ஓடனும் ஓகே வா” இனியா சொல்ல,… “இவளுக்கு இன்னும் சின்ன குழந்தைன்னு மனசுல நினைப்பு, இங்கி பிங்கி வச்சி பார்க்க போறாளாம்” வித்தார்த் கடிந்து கொள்ள,…”அண்ணி இந்த அண்ணா சும்மா சும்மா ஏதாச்சும் சொல்லிகிட்டே இருக்காரு, ஆட்டத்தை விட்டு விலக்கிடலாமா” இனியா சுமித்ராவிடம் கேட்க,… “பாவம் இருந்துட்டு போகட்டும் இனியா, இனி பேசுனா பார்த்துக்கலாம்” சுமி சொன்னதால் விட்டுவிட்டாள் இனியா….
அடுத்ததாக இனியாவே தன்னுடன் சேர்த்து தன்னை சுற்றி நின்றவர்களுக்கும், இங்கி பிங்கி வைத்து பார்க்க கடைசியாக அவளே அதில் மாட்டிக் கொண்டாள்…
“ஹேய்… பார்ப்போம், எங்களை எப்படி பிடிக்கிறனு நீ” என வித்தார்த் சவாலுடன் இனியாவை தள்ளி விட்டு ஓட, அவனுடன் மற்றவர்களும் ஓடினர், இனியா தன் அண்ணன்களையும் அண்ணிகளையும் பிடிப்பதற்காக துரத்திக் கொண்டு ஓட, அவளது கையில் முதலில் மாற்றியது வித்தார்த் தான்….
“என்ன அண்ணா, ரொம்ப பில்டப் பண்ணீங்க, இப்படி பொசுக்குன்னு அவுட்டாகிட்டீங்களே” இனியா கலாய்க்க,…”இந்த கல்லு தட்டிடுச்சி, அதுல பிடிச்சிட்ட,” என்றான் அப்போதும் தன் கெத்தை விட்டுக் கொடுக்காமல்…
அடுத்ததாக வித்தார்த் மற்றவர்களை பிடிக்க ஓட, தன் எண்ணம் படி தன் மனைவியையே கை வளைவுக்குள் கொண்டு வந்து அவுட் பண்ணும் சாக்கில் அவளிடம் சில்மிஷம் செய்தான்…. நல்லவேளையாக இனியா இதை பார்க்கவில்லை இல்லையென்றால் மீண்டும் அவர்களை கலாயோ கலாய் என்று கலாய்த்திருப்பாள்,…..
அடுத்து சுமித்ரா மற்றவர்களை விரட்டிக் கொண்டு ஓட, அவள் நித்திலாவை அவுட் செய்தாள்…
அடுத்து நித்திலா,…. இதுவரைக்கும் விக்ராந்த் மட்டும் தான் தோற்கவில்லை என அவனை தோற்கடிக்கும் எண்ணம் மட்டும் தான் அவளுள் இருந்தது, அதை மனதில் வைத்துக் கொண்டு அவனை விரட்டி கொண்டிருந்தாள், அவள் எண்ணம் இப்படி இருக்க, விக்ராந்தின் எண்ணமோ வேறாக இருந்தது, முடிந்த வரை மற்றவர்களின் பார்வையிலிருந்து தப்பிக்கும் எண்ணத்துடன் ஓடிக்கொண்டிருந்தான் அவன்,…. அவனது எண்ணம் புரியாமல் அவனை துரத்திக் கொண்டு ஓடினாள் நித்திலா….
மற்றவர்கள் சற்று தொலைவில் நின்று அவர்களை காணோமே என்று உற்று நோக்கி பார்த்திருந்தனர், வித்தார்த் தன் தம்பியின் எண்ணத்தை ஊகித்துக் கொள்ள, சுமியும், இனியாவும் தான் அவர்கள் போன வழியையே விழி மேல் விழி வைத்து பார்த்துக் கொண்டிருந்தனர்,…
இனியாவின் தலையில் தட்டிய வித்தார்த்….”என்ன பார்க்கிற, விளையாடியது போதும், உள்ளே போ” என்றான்,….
“ஆனா அண்ணியையும் அண்ணனையும் காணோமே” அவள் பாவமாய் கேட்க,… “உங்க அண்ணனையும் அண்ணியையும் பத்திரமா கண்டுபிடிச்சு நான் கூட்டிட்டு வரேன், இப்போ போறீங்களா” வித்தார்த் கிண்டல் பார்வையுடன் சொல்ல, முகத்தை வெட்டிக் கொண்டு போனாள் இனியா,….
இனியா சென்றபிறகு சுமியின் கரத்தை பற்றிக்கொண்டு, வித்தார்த் மறைவான இடத்திற்கு சென்றான்,… “விது என்ன பண்ணுறீங்க” சுமி பதற,…”ஷ்”என அவள் இதழில் விரல் வைத்து தடுத்தவன், தன் சில்மிஷ வேலைகளில் இறங்கினான்…
“இது நம்ம ரூம் இல்ல, யாராவது பார்த்தா அவ்ளோ தான், போதாததுக்கு நித்திலாவும் விக்ராந்தும் எங்கே போனாங்கன்னு தெரியல” அவள் அவர்களுக்காக வருத்தபட,…”அந்த கவலை உனக்கு வேணாம் சுமிகுட்டி, என் தம்பிகாரன் இந்நேரம் அவனோட சில்மிஷ வேலைகளை ஆரம்பிச்சிருப்பான், இங்க நான் ஆரம்பிக்க போறேன்” என அவளை நெருங்கினான் வித்தார்த்….
வித்தார்த் ஊகித்தது போலவே, விக்ராந்த் அந்த அடர்ந்த செடிகளுக்குப் பின்னால் நித்திலாவைத் தன் கைவளைவுக்குள் சிறைபிடித்திருந்தான்.
”என்னோட பேபியை இவ்வளவு நெருக்கமாப் பார்த்து ரெண்டு நாளாச்சு… என்னை நீ மிஸ் பண்ணியா பேபி?” அவள் நெற்றியில் வழிந்திருந்த முடிக்கற்றைகளை மென்மையாகக் காதிற்குப் பின்னால் சொருகிவிட்டு, அவளது விழிகளுக்குள் ஆழமாகப் பார்த்து விக்ராந்த் கேட்டான்.
”ஹ்ம்ம்… ரொம்ப!” நித்திலாவின் அந்த ஏக்கமான பதிலில் விக்ராந்தின் இதயம் துள்ளியது.
“நைட் என் ஷர்ட்டை கட்டிபிடிச்சிக்கிட்டு தூங்குறதை பார்த்த போதே புரிஞ்சிகிட்டேன் பேபி, நீ என்னை எவ்வளவு மிஸ் பண்ணிருக்கணு” என்றவன்,… “இனிமே உன்னை விட்டு ஒரு செக்கேண்ட் கூட தள்ளி இருக்க மாட்டேன்” என்றவன் அவளது இதழை நெருங்கினான், இருவரும் சுற்றுப்புறம் மறந்து தங்கள் உலகில் சங்கமித்திருந்தனர்….
“அத்து போதும்” மூச்சு வாங்கியபடி சொன்ன அவளின் குரலை கேட்டு தான் அவளை பிரிந்தான் அவன்,….
“வீட்டுக்குள்ள போலாமா,” அவள் வார்த்தைக்கு கட்டுப்பட்டு அவளுடன் வீட்டினுள் நடந்தான் விக்ராந்த்,…. அவர்கள் வீட்டினுள் செல்வதை கவனித்த வித்தார்த்தும் நல்ல பிள்ளையாக தன் மனைவியுடன் அவர்கள் பின்னால் சென்றான்,…
“எங்க தம்பி போன” விக்ராந்திடம் வித்தார்த் வினவ,….”நான் எங்கே போனேன், எதுக்காக போனேன்னு உனக்கும் தெரியும், தெரிஞ்சிட்டே ஏன்டா அண்ணா கேட்கிற” என்றான் விக்ராந்த் அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில்….
“ஈஈஈ” என அவன் அசடு வழிய சிரிக்க,…”சரிடா அண்ணா நீ எப்போலருந்து லிப்ஸ்டிக் போட ஆரம்பிச்ச” விக்ராந்த் வினவ..
”என்னடா உளறுற?” வித்தார்த் பதற, விக்ராந்த் தன் போன் கேமராவை ஆன் செய்து அவன் முகத்தைக் காட்டினான்.
தன் உதட்டில் இருந்த அந்தச் சிறிய லிப்ஸ்டிக் கறையைப் பார்த்ததும் ‘அடச்சே தம்பி முன்னாடி இப்படி அசிங்க பட்டுவிட்டனே” அவன் அசடு வழிய சிரிக்க…. புருவம் உயர்த்தி நக்கலாக பார்த்தான் விக்ராந்த்,…
அதற்கு மேல் வித்தார்த் அங்கு நிற்கவில்லை, முற்றத்திலுள்ள சோபாவில் வந்து அமர்ந்து கொண்டான்,…
“ஓடுனதுல தாகம் எடுக்கும், நாங்க உங்களுக்கு லெமன் ஜூஸ் எடுத்துட்டு வரோம்” என சொல்லிவிட்டு நித்திலாவையும் தன்னுடன் சேர்த்து அழைத்து சென்றாள் சுமித்ரா,…. அவர்கள் சென்றதும் விக்ராந்தும் தன் அண்ணனுடன் வந்து அமர்ந்து கொண்டான்,…
இருவரும் தொழில் விஷயமாக பேசிக்கொள்ள…. திடீரென்று “நான்… நான் இப்போ வரேன்” சோர்வான குரலில் கூறிய விக்ராந்த், இருக்கையிலிருந்து எழுந்த அடுத்த கணம் தலை சுற்றி கீழே சரிந்து விழுந்தான்….
தன் தம்பியின் நிலைக் கண்டு பதறி போன வித்தார்த்…..”டேய் விக்கி,.. டேய் என்னாச்சுடா உனக்கு” அவன் கன்னத்தில் தட்டி எழுப்ப முயன்றான்…. வித்தார்த்தின் சத்தத்தில் வீட்டிலுள்ள அனைவரும் அங்கு கூடினர்…. அனைவரின் முகத்திலும் பதட்டமும் பயமும் தெரிய, சற்று நேரத்தில் எல்லாம் விக்ராந்த் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டான்…….
நித்திலாவை சுமித்ரா சமாதானம் செய்ய, அன்னலட்சுமியை ஊர்மிளா சமாதானம் செய்தார், லட்சுமணன் தன் மகனுக்கு என்ன ஆனதோ என அவர் ஒரு பக்கம் புலம்ப, சந்தானம் தான் அவரை ஆறுதல் படுத்தினார்,… இனியா ஒரு பக்கம் தன் தமையனை நினைத்து அழ, வித்தார்த் அவளுக்கு ஆறுதல் கூறினான்,….
பாட்டி அலைய வேண்டாம் என கவிதாவுடன் அவரை வீட்டில் விட்டு வந்தனர்,… மருத்துவமனை வந்ததிலிருந்து தன் பேரனுக்கு என்னாச்சு என்று நிமிடத்திற்க்கு ஒரு முறை போனில் அழைத்துக் கேட்டுக் கொண்டிருந்தார்….
அனைவரும் டாக்டரின் பதிலை எதிர்பார்த்து காத்திருந்த நேரம், மருத்துவரும் விக்ராந்தை பரிசோதித்து விட்டு வெளியே வந்தார்,… குடும்பம் மொத்தமும் அவரின் பதிலை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்….
”பயப்படுற அளவுக்கு எதுவும் இல்ல. சாதாரண மயக்கம் தான். அதிகப்படியான ஸ்ட்ரெஸ் (Stress), போதாக்குறைக்குத் தூக்கமின்மை… மத்தபடி அவர் நல்லா இருக்கார். தூங்குறதுக்கு இன்ஜெக்ஷன் போட்டுருக்கேன். அவர் எழுந்ததும் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகலாம்,” என மருத்துவர் கூற, நிலவரத்தை தெரிந்து கொண்ட பிறகு தான் அனைவரின் முகத்தில் நிம்மதி தெரிந்தது,…
“வேலை வேலைன்னு உடம்பை கெடுத்துகிட்டு, இப்போ இப்படி வந்து படுத்துக் கிடக்கிறான், யார் இவனை தூக்கம் இல்லாம வேலை பார்க்க சொன்னது” என தன் மகனை அந்நிலமையில் பார்க்க முடியாத லட்சுமணன் ஆதங்கத்துடன் சொன்னார்,…
“இது என்ன புதுசாவா அண்ணா நடக்குது, அவன் தொழில் ஆரம்பிச்ச நாட்கள்ல இருந்தே ஏதாச்சும் முக்கியமான பிராஜக்ட்னா இரவு பகல் பாராம தானே வேலை செய்வான், இந்த தடவை பையன் ஸ்ட்ரெஸ் ஆகுற அளவுக்கு பண்ணிருக்கான், நாம சொன்னா அவன் கேட்டுடுவானா, சின்ன வயசுல இருந்து அப்படியே வளர்ந்துட்டான்” என்றார் சந்தானம் ஒரு பக்கம் வேதனையாகவும் இன்னொரு பக்கம் அவனுக்கு சாதகமாகவும்…
“இதுக்கு முன்னாடி எப்படி வேணும்னாலும் இருந்துகட்டும், இப்போ அவனை நம்பி ஒரு பொண்ணு வந்துட்டா, அவளுக்காகவாச்சும் தன் உடல்நிலைல கவனம் செலுத்தனுமா இல்லையா” என்றார் லட்சுமணன் ஆதங்கத்துடன்…
“அவனே உடம்பு சரியில்லாம படுத்திருக்கான், அவனை எதுக்காக திட்டறீங்க, சும்மா போங்க நான் அவன்கிட்ட பேசுறேன்” என்றார் அன்னலட்சுமி…
“எல்லாம் நீ கொடுக்கிற செல்லம் தான், உன்னை மாதிரியே அவனையும் பிடிவாதக்காரனா வளர்த்து வச்சிருக்க” தன் மனைவியிடம் கடிந்து கொண்டு அவ்விடத்தை விட்டு அகன்றார் லட்சுமணன்,….
அடுத்த இரண்டு மணி நேரத்திற்க்கு பிறகு தான் கண்விழித்தான் விக்ராந்த், சிஸ்டர் அவன் கண்விழித்த செய்தியை அனைவரிடமும் வந்து சொல்ல, இதற்காகவே இத்தனை நேரம் காத்திருந்த நித்திலா அவனை காண ஓடினாள்,…..
சோர்வுடன் படுக்கையிலிருந்து எழுந்தமர்ந்து கொண்டிருந்த விக்ராந்த், வாசல் பக்கத்தில் கண்ணீர் வடிய நின்ற நித்திலாவை கண்டு,… “வா பேபி” என்றவாறு கை நீட்டி அழைத்தான்…..
இத்தனை நேரம் அவனது இந்த வார்த்தைகளை கேட்காமல் துவண்டு போயிருந்தவள்,… வேகமாக அவனிடம் ஓடிச்சென்று அவனது மார்பில் புகுந்து கதறி அழுதாள், அவ்வளவு நேரம் தான் அடக்கி வைத்திருந்த வேதனை மொத்தத்தையும் அதற்கு காரணமானவனிடமே கொட்டினாள்,….
“பேபி,… என்ன இது, எதுக்காக இப்படி அழற” அவள் முதுகை தடவி கொடுத்தபடியே அவன் கேட்க,… “நான்… நான் எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமா, உங்களுக்கு உங்களுக்கு மட்டும் ஏதாச்சும் ஆகிருந்தா, அப்றம் நான் உயிரோடவே இருக்க மாட்டேன்” என்றாள் அழுகையுடன்….
“பேபி… எனக்கு ஒன்னும் இல்ல, நான் நல்லா இருக்கேன்,” அவன் அவளை எவ்வளவோ சொல்லி தேற்றியும் அவளது அழுகை மட்டும் குறையவே இல்லை,….
அதில் கோபமடைந்தவன்,… “இப்போ அழுகையை நிறுத்த போறியா இல்லையா நிலா,” சற்று அதட்டலுடன் சொல்ல, அவள் மிரண்டு போய் அவனைப் பார்த்தாள்…
“ஸாரி பேபி” என்றவன் அவளை இறுக்கி அணைத்துக் கொள்ள, அவளுக்கும் அது தேவைப்பட்ட காரணத்தினால் அவளும் அவனுடன் ஒன்றி போனாள், தன் மகனைப் பார்க்க வந்த லட்சுமணன், கதவு இடுக்கின் வழியாக அவர்களின் அந்த ஆழமான அன்பைக் கண்டு, மனம் நிறைந்து புன்னகையுடன் சத்தமில்லாமல் அங்கிருந்து நகர்ந்தார்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
26
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


விக்ராந்த் அந்த ஆறு மாசம் 170 நாள் அந்த மாதிரி டயலாக் எல்லாம் சொல்ல மறந்து போயிட்டீங்க அப்டின்னு நினைக்கிறேன் … ரொமான்டிக்கா போற ஸ்டோரில அடுத்து என்ன நடக்குமோ ??
காதல், பாசம், அக்கறை எல்லாம் அதிகப்படியா நல்லா தான் இருக்கு. ஆனா நீ தான் ஆறு மாசத்துக்கு வாழ்வு தந்தவன் ஆச்சே! அத நினைச்சா தான் கொஞ்சம் பயமா இருக்கு.
அண்ணனும் தம்பியும் நல்லாவே romance செய்றீங்க. நித்திலாமா உனக்கு என்ன அம்னீஷியாவா அவன் சொன்ன sorry சொல்லிகிட்டே இருந்த ஆறு மாச கணக்கையும் மறந்துட்ட, வெளிநாட்டு காதலியை பற்றி சொன்னதையும் மறந்துட்ட இப்படி அவன் கூட ஊனாகி உயிராகி range ku இருக்கியே.