என் ஜீவன் ஏங்குதே – 12

Loading

அத்தியாயம் – 12

மறுநாள் காலை விக்ராந்த் கட்டளையிட்டதின் பெயரில், அவனுக்கு வேண்டிய ஒவ்வொன்றையும் நித்திலா தான் செய்து கொண்டிருந்தாள்,….

“பேபி என் ஷர்ட் ரெடியா? பேபி என் டை எங்கே?.பேபி என் பிளேசர்? பேபி என் சாக்ஸ எங்க வச்ச? பேபி அந்த ஃபைலை எடுத்து கொடு, பேபி… பேபி… பேபி….” என வாய் ஓயாமல் வார்த்தைக்கு வார்த்தை ‘பேபி’ என்ற அழைப்பிலேயே அவனின் ஒவ்வொரு தேவையையும் அவளிடம் தான் கேட்டுக் கொண்டிருந்தான் விக்ராந்த்…. நித்திலாவும் சிறிதும் முகம் சுழிக்காமல் அவனுக்கு தேவையான ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்து கொண்டிருந்தாள்,….

​அலுவலகத்திற்குப் புறப்படத் தயாரான விக்ராந்த், அறையை விட்டு வெளியேறும் முன் நித்திலாவை ஒருமுறை தீர்க்கமாகப் பார்த்தான். அவள் அன்று அணிந்திருந்த உடை அவனை யோசிக்க வைத்தது.

“என்ன பேபி இன்னைக்கு புதுசா சல்வார் போட்டிருக்க” அவன் குரலில் ஒரு கேள்விக்குறி இருந்தது.

“என் இஷ்டம், நான் என்ன ட்ரஸ் வேணும்னாலும் போடுவேன், இதை ஏன் நீங்க கேட்கிறீங்க” என்றாள் முகத்தை சுளித்துக் கொண்டு….

“நோ பேபி,… எனக்கு இந்த ட்ரஸ் பிடிக்கல, நீ எப்போதும் போல ஷேரீயே வியர் பண்ணு” என்றான்….

அவனது ஆதிக்க மனப்பான்மை அவளுக்குக் கோபத்தை மூட்டியது.
“ப்ச்…. என்ன ட்ரஸ் போடணும்னு எனக்கு தெரியும், அதை நீங்க சொல்ல வேணாம்” அவள் சற்று எரிச்சல் பார்வையுடன் சொல்ல,….

“மறந்துட்டியா பேபி, இந்த ஆறு மாசம், என் விருப்பபடி தான் நீ இருக்கணும், நான் சொல்றதை மட்டும் தான் கேட்கணும்” விக்ராந்த் அவளை நெருங்கி வந்து, குரலைத் தாழ்த்தி அழுத்தமாகச் சொன்னான்..

“நான் ஒன்னும் உங்களுக்கு அடிமை இல்ல, ஒரு ட்ரஸ் கூட என் விருப்பத்துக்கு போடக் கூடாதா, நீங்க நடந்துக்கிறது எதுவும் எனக்கு சுத்தமா பிடிக்கல” என்றாள்….

விக்ராந்த் மெலிதாகச் சிரித்தான்.
“ஆர்கியூ பண்ணிக்கிட்டு இருக்க எனக்கு டைம் இல்ல பேபி, நான் உன்னை ட்ரஸ் சேஞ்ச் பண்ண சொல்லிட்டேன், நீயும் சரின்னு சொல்லிட்டு, நான் சொன்னதை செய்ற வேலையை பாரு, இல்லனா நான்” என பேசி கொண்டே போனவனை இடைவெட்டியவள்,… “இல்லனா,… இல்லனா என்ன பண்ணுவீங்க, அடிப்பீங்களா? இல்ல கொன்னுடுவீங்களா?” என்று அவள் எகிறினாள்….

அவன் கண்கள் குறும்புடன் மின்னின… “உன்னை எப்படி பேபி நான் அடிப்பேன்? சத்தியமா அப்படி பண்ண மாட்டேன், உனக்கு நானே வேற ட்ரஸ் மாத்தி விடுவேன்” இந்த அதிரடியான பதிலைக் கேட்டு நித்திலா அதிர்ச்சியில் வாயைப் பிளந்து நின்றாள். அவளது திகைப்பைப் ரசித்தவன், மெதுவாக அவள் அருகில் வந்து அவளது திறந்திருந்த வாயை மூடிவிட்டபடி,..

“பார்த்து பேபி… கொசு உள்ளே போயிட போகுது” குறுஞ்சிரிப்புடன் சொன்னவன்,.. “என்ன பேபி ட்ரஸ் சேஞ்ச் பண்ணிடுவ தானே, இல்லனா நானே மாத்தி விடட்டுமா” அவனது குறும்பான அதே சமயம் எச்சரிக்கையான பேச்சில் பதறிப்போன நித்திலா,.. “இல்ல இல்ல… நான்… நானே சேஞ்ச் பண்ணிடறேன்” என்று பதற்றத்துடன் கூற விக்ராந்தின் முகத்தில் ஒரு வெற்றியாளனுக்குரிய புன்னகை அரும்பியது…

“தட்ஸ் மை பேபி,… ஓகே நீ சேஞ்ச் பண்ணிட்டு வா, நான் கீழே வெயிட் பண்றேன்” என வெளியேறினான் விக்ராந்த்,….

​அவன் சொன்ன அந்த மிரட்டலுக்குப் பயந்தும், வேறு வழியில்லாமலும் ஒரு புடவைக்கு மாறினாள் நித்திலா. கண்ணாடி முன் நின்றபோது அவளுக்கே தெரிந்தது, இந்த உடை அவளுக்கு எவ்வளவு எடுப்பாக இருக்கிறது என்று.

ஆனாலும், தன் விருப்பத்திற்கு மாறாக செயல்பட வேண்டியிருக்கிறதே என்ற ஆத்திரம் அவளைச் சிடுசிடுவென இருக்க வைத்தது. ​புடவையைச் சரி செய்துகொண்டு, கனத்த மனதுடன் அவள் கீழே இறங்கி வந்தாள்.

​கீழே காத்திருந்த விக்ராந்த், அவள் வருவதைக் கண்டதும் நிமிர்ந்து பார்த்தான். அவள் புடவையில் தேவதை போலத் தெரிந்ததைக் கண்டதும், அவனது முகம் சொல்ல முடியாத ஒரு திருப்தியைப் பிரதிபலித்தது. ‘இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்’ என்பது போல இருந்தது அவனது பார்வை.

அவன் தன்னை ரசிப்பதை உணர்ந்தும் நித்திலா அவனைக் கண்டுகொள்ளவே இல்லை. அவனது பார்வையைத் தவிர்த்துவிட்டு, இயந்திரத்தனமாக டைனிங் டேபிளுக்குச் சென்று அவனுக்குச் சாப்பாடு பரிமாறத் தொடங்கினாள்.

விக்ராந்த் அலுவலகம் சென்று கொண்டிருந்த நேரம், அவனையும் நித்திலாவையும் அழைத்தார் மரகத பாட்டி,…

“விக்ராந்த், நித்திலா உங்க ரெண்டு பேருக்கும் நான் பரிசு தர போறேன்” மரகதம் புன்னகையுடன் சொல்ல,…. “என்னது பரிசா,…?” ஆச்சரியமும் ஆர்வமுமாக கேட்டாள் நித்திலா,…

“ஆமாம்மா,…. ஒரு நிமிஷம் இரு” என்ற பாட்டி ஒரு சிறிய டப்பாவைத் திறந்தார். அதில் ‘N’ என்ற எழுத்து பொறிக்கப்பட்ட, சிறிய கற்கள் பதித்த ஒரு அழகான மோதிரம் மின்னியது. அதைப் பார்த்ததும் நித்திலா உற்சாகமானாள்.

“பாட்டி, சூப்பரா இருக்கு! ‘N’ன்னா நித்திலா… என் பேரு தானே?” என்று கேட்டுவிட்டு, ஆசையாகத் தன் விரலில் போட்டுப் பார்த்தாள்.

ஆனால், அந்த மோதிரம் அவளுக்கு மிகவும் பெரிதாக இருந்தது. “பாட்டி, இது ரொம்பப் பெரிய சைஸா இருக்கு பாருங்க,” எனச் சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு காண்பித்தாள்.

​பாட்டி சிரித்துக் கொண்டே, “அட இது உனக்கு இல்லம்மா, இது என் பேரனுக்கு!” என்றார். இதைக் கேட்டதும் நித்திலாவின் முகம் இன்னும் வாடிப் போனது.

​”ஏன்டா முகம் இப்படித் தொங்கிப் போச்சு? உனக்காக நான் வேற ஒன்னு வச்சிருக்கேன்,” என்று கூறி, ‘V’ என்ற எழுத்து பதித்த டாலருடன் கூடிய ஒரு தங்கச் சங்கிலியை அவளிடம் நீட்டினார். அந்த டாலரிலும் கற்கள் அழகாகப் பதித்து மின்னியது.

​”பாட்டி, ‘V’ன்னா உங்க பேரன் பேரு தானே?” நித்திலா குழப்பத்துடன் கேட்க, “ஆமாடாம்மா” என்றவர்,…”விக்கி கண்ணா,… இந்தாப்பா இந்த செயினை நீ நித்திலாவுக்கு போட்டு விடு, நித்திலா நீ விக்ராந்த்க்கு இந்த மோதிரத்தை போட்டு விடுடா” அவர் சொல்ல,…. “என்ன பாட்டி இது, புதுசா இருக்கு” என்றான் விக்ராந்த்,…

“புதுசுலாம் இல்லடா தம்பி பழசு தான்”அங்கு வந்த வித்தார்த் விக்ராந்திடம் சொல்ல,… “ஆனா மாமா, ரெண்டுமே பார்க்க புதுசா தான் இருக்கு” என்றாள் நித்திலா மோதிரத்தையும் சங்கிலியையும் பார்த்து…..

“அட அது இல்லம்மா,… அந்த ரிங்கும் ச்செயினும் புதுசு தான், ஆனா பாட்டி இந்த மாதிரி கிஃப்ட் தர ஐடியா பழசுன்னு சொன்னேன்” விளக்கமாக சொன்னவன்… “இங்க பாரு,… என் கழுத்துல S டாலர் போட்ட ச்செயின் இருக்கு, S னா சுமித்ரா, சுமி கழுத்துலயும் v டாலர் ச்செயின் போற்றுப்பா, நாங்க மட்டும் இல்ல, அப்பா, அம்மா, சித்தி, சித்தப்பா எல்லாருக்குமே பாட்டி இதே போல கிஃப்ட் கொடுத்திருக்காங்க” என்றான் வித்தார்த்,…

“ஓ… அப்படியா மாமா, ஆனா உங்களுக்கெல்லாம் ச்செயின் தானே தந்திருக்காங்க பாட்டி, இவருக்கு மட்டும் ஏன் ரிங் தராங்க” நித்திலா குழப்பமாய் கேட்க,… “ஏன்னா உங்க இவரு ச்செயின் போட மாட்டாரு, சின்ன வயசுல இருந்தே அவன் அப்படி தான், அதான் பாட்டி இந்த ஐடியா பண்ணிருப்பாங்க, என்ன பாட்டி நான் சொன்னது சரி தானே” வித்தார்த் பாட்டியிடம் கேட்க,… “சரியா சொன்னடா பேரான்டி” என்றார் மரகத பாட்டி…..

“சரிம்மா நித்திலா நீ அவனுக்கு மோதிரத்தை போட்டு விடு” பாட்டி சொல்ல,… சரி என மெல்ல தலையசைத்தவள், அவன் எதிரே அவனை பார்த்தபடி நின்றாள்,…. அவனது ஆழ்ந்த பார்வை அவளை என்னவோ செய்ய தலையை தாழ்த்திக் கொண்டாள், அவனோ மெல்ல தன் கரத்தை அவளை நோக்கி நீட்டினான்,….

“அண்ணி ஒரு நிமிஷம்” என்ற இனியாவின் குரலில் இருவரும் திரும்ப,… “ம்ம்ம்… இப்போ போடுங்க” என தன் செல்லில் புகைப்படம் எடுக்க தயாராக இருந்தாள் இனியா, நித்திலாவும் அவன் கரம் பற்றி மோதிரத்தை அணிவித்தாள்,….

“பாட்டி ரிங் சைஸ் சின்னதா இருக்குனு நினைக்கிறேன், பாருங்க எவ்ளோ டைட்டா இருக்குனு” அவனது கரத்தில், தான் அணிவித்த மோதிரத்தை பாட்டியிடம் காண்பித்தபடி கவலையுடன் சொல்ல.. பாட்டி அர்த்தத்துடன் சிரித்துவிட்டு,..  “ஆமாம்மா,… டைட்டா இருக்கணும்னு தான் அவன் சைஸ்க்கு கொஞ்சம் கம்மியா எடுத்தேன், அந்த மோதிரம் அவன் கையில எப்போதுமே இருக்கணும், அவனே கழட்ட நினைச்சாலும் அது கழட்ட வர கூடாது, அதான் சின்ன சைஸாவே வாங்கிட்டு வந்தேன்” என்றவர், “சரிப்பா,… இப்போ நீ நித்திலாக்கு அந்த செயினை மாட்டி விடு” பாட்டி சொல்ல, விக்ராந்தும் அதனை நித்திலாவின் கழுத்தில் போட்டு விட்டான், அவளது கழுத்திற்குச் சற்று கீழே ‘V’ என்ற டாலர் அவன் பெயரின் அடையாளமாக அழகாகத் தொங்கியது.

“நித்திலா,… நீயும் எப்போதும் இதை கழட்ட கூடாது, உன் கழுத்துல இருக்க தாலி எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு இந்த செயினும் உனக்கு முக்கியம், ஏன்னா ரெண்டையும் கட்டுனது உன் புருஷன் தான், இது எப்போதும் உன் நியாபகத்துல இருக்கணும்” என்றார் பாட்டி ஓருவித கண்டிப்புடன்,…..

விக்ராந்தின் பெயரின் முதல் எழுத்து தன் இதயத்திற்கு அருகில் துடிப்பதை நித்திலா உணர்ந்தாள்.

“பாட்டியோட தலைமையில் இந்த வீட்ல உள்ள எல்லாருக்கும் ரெண்டு தடவை கல்யாணம் நடந்துடுச்சு, பாட்டி எனக்கும் அப்படி பண்ணி வைப்பீங்க தானே” இனியா ஆர்வத்துடன் கேட்க,…. “அடி கழுதை” பாட்டி அடிக்க வர,… அவள் அங்கிருந்து ஓடியே விட்டாள்,…

அதற்கு பிறகு வந்த நேரங்களில் நித்திலா சுமித்ராவுடன் தான் நேரத்தை கழித்தாள், அவர்களுடன் ஊர்மிளாவும் இணைந்து கொண்டார்,…

“ஏன் அத்தை,… நீங்க என்கிட்ட ஒரு முக்கியமான விஷயத்தை  மறச்சிட்டீங்களே,” நித்திலா சீரியஸான முகத்துடன் ஊர்மிளாவிடம் கேட்க,….. “நானா,… எதை டா சொல்ற” என்றார் ஊர்மிளா புரியாமல்,…

“உங்க மேரேஜ் லவ் மேரேஜாமே, இதை பத்தி என்கிட்ட சொல்லவே இல்லையே நீங்க” சோகமான முகத்துடன் நித்திலா வினவ,… “யாரு… அந்த இனியா வாலு சொன்னாளா, வரட்டும் அவளுக்கு இருக்கு இன்னைக்கு” என தன் மகளை கடிந்து கொண்டார் ஊர்மிளா….

“இனியாவை ஏன் அத்தை திட்டறீங்க, பாவம் சின்ன பொண்ணு, சரி நீங்க உங்க லவ் ஸ்டோரியை எடுத்து விடுங்க, ரொம்ப ஆர்வமா இருக்கு,” என்றாள் நித்திலா,….

“ஏன்டா,… உன்னோட சின்ன மாமா என்னை காதலிச்சு கல்யாணம் பண்ணிருப்பாருன்னு உனக்கு தோணுதா,” ஊர்மிளா கேட்க,… “ஏன் அத்தை இப்படி கேட்கிறீங்க” என்றாள் நித்திலா குழப்பமாய்,….

“உன் சின்ன மாமா முகத்தை நீ பார்த்திருக்கியா இல்லையா, எப்போ பார்த்தாலும் உர்ருன்னு, இஞ்சி தின்ன கரடி மாதிரி இருக்கும், அவரை போய் எப்படி டா நான் காதலிச்சு கல்யாணம் பண்ணிருப்பேன்னு நினைக்கிற” ஊர்மிளா சொன்னதில், நித்திலாவிற்கு அடக்க முடியாமல் சிரிப்பு வந்தது, சத்தமாக சிரித்தும்விட்டாள்,….

“அத்தை அப்போ நீங்க லவ் மேரேஜ் இல்லையா, அப்போ இனியா ஏன் அப்படி சொன்னா” நித்திலா சிரிப்பை அடக்கிக் கொண்டு கேட்க,…. “உன்கிட்ட மட்டும் இல்ல நித்தி, என்கிட்டயும் நான் இந்த வீட்டுக்கு வந்த புதுசுல இப்படி தான் சொன்னா, நானும் கூட அத்தை கிட்ட கேட்டேன், அவங்க சொன்ன பிறகு தான், இனியா என்கிட்ட விளையாடிருக்கான்னு புரிஞ்சது” என்றாள் சுமித்ரா….

“என்னது விளையாடிருக்காளா வரட்டும் அவ, என்கிட்டயே உல்லுலாய் விற்றுக்காளா” என செல்லமாக கோபித்துக் கொண்ட நித்திலா,…. “ஆனா அத்தை,… நீங்க மாமாவை பத்தி சொன்னதை நினைச்சு எனக்கு சிரிப்பு சிரிப்பா  வருது” என்றாள் நித்திலா சிரித்துக் கொண்டு,….

“இதுக்கே உனக்கு இவ்வளவு சிரிப்பு வருதா, இதை விட இன்னும் நிறைய சொல்லுவாங்க சின்ன மாமாவை பத்தி,” சுமித்ரா சொல்ல,…”அப்படியா” என்ற நித்திலா,…. ஊர்மிளா தன் கணவரை பற்றி சொன்ன அத்தனை செல்லப்பெயர்களையும் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தாள், சுமித்ராவும் அவளுடன் இணைந்து கொண்டாள், அன்று ஒரே கலாட்டாவாக தான் போனது,..

 

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 33

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
37
+1
2
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. நல்ல அழகான குடும்பம் ஜாலியா போகுது … விக்ராந்த் தான் என்ன பண்ண போறானோ … நித்திலா தான் பாவம் எல்லார் கூடவும் பழகிட்டு பிரியும் போது கஷ்டப்படனும் …

  2. விக்ராந்த் ஆறு மாசத்துக்கு நித்திலாவை பொண்டாட்டியா appoint செஞ்சிருக்கான். 🤭

    School baby மாதிரி வேலை ஏவிட்டு கிடக்கான். Baby baby nu செல்ல அழைப்பு வேற.

    பாட்டியின் தம்பதிகளுக்கான பரிசு தரும் வழக்கம் அருமை.

    விக்ராந்த் chain போட மாட்டாரோ!

    அன்னபூர்ணியை தவிர அனைவரும் அன்பாக இயல்பாக பழகுகின்றனர்.

    பிரியும் நேரம் விக்ராந்த் எதுவும் செய்வானா? அல்லது அப்பொழுதும் இயல்பாகவே agreement over 🤝 என்று கைக்குலுக்கி செல்வானா?