
“அகர் ஆப்கோ கிஸிசே பாத் கர்னா ஹே தோ அபி கர்லீஜியே.. பர்வத் கி ராஸ்தே மே சிக்னல் தோடா முஷ்கில் தா ! ஹமே வாபஸ் ஆனேகேலியே சுபஹ் ஹோங்கி” (யாருக்காவது கால் பண்ணி பேசணும்னா இப்பவே பண்ணிக்கோங்க மலையேற ஏற சிக்னல் கிடைக்கிறது கொஞ்சம் கஷ்டம் நாம கீழ இறங்க அதிகாலையாகிடும்) என்று வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் தன்முன் குழுமியிருந்தவர்களிடம் கூறிய வசீகரனுக்கு அழைப்பு வர அருகே இருந்தவனிடம்,
‘மச்சி ரிச்சர்ட்டோட கால் வருது நான் பேசிட்டு வரேன் அதுக்குள்ள அங்க அன்னதானம் கொடுத்துட்டு இருக்காங்க பாரு இவங்களை சாப்பிட வச்சுடு அப்புறம் லகேஜ்ல தேவையானதை மட்டும் எடுத்துக்க சொல்லு‘
‘டேய் டேய் மச்சான் எங்க என்னை விட்டுட்டு போற? இங்க்லீஷ்னா பரவால்ல எனக்கு உன் அளவு ஹிந்தி வராது… இவனுங்களுக்கோ தமிழ் இங்க்லீஷ் ரெண்டும் புரியல அப்புறம் எப்படி புரிய வைக்க?’ என்றான் விஜயசாரதி
“ப்ச் டேய் இவங்கள்ல நாலு பேருக்கு தான் இங்க்லீஷ் தெரியாது மத்தவங்களுக்கு ஃப்ளுயன்ட்டா பேசவராட்டியும் புரியும்! நீ இங்க்லீஷ்ல சொல்லு அவங்க ட்ரான்ஸ்லேட் பண்ணிப்பாங்க அதுக்குள்ள எல்லாருக்கும் மூங்கில் தடி வாங்கிடு அப்புறம் டார்ச் லைட் கொடுத்துடு.. மத்த இன்ஸ்ட்ரக்ஷன்ஸ்..” என்று பேசிக்கொண்டே சென்றவனிடம்,
‘மச்சி நான் அவங்களை சாப்பிட வைச்சுடறேன் ஆனா தடி எதுக்குடா?’ என்று அங்கே மூங்கில் கம்போடு மலையேறி கொண்டிருந்தவர்களை கண்டு சாரதி கேட்க ,
‘டேய் இந்த மலை ஏறுறது அவ்ளோ சாதாரணம் இல்ல மச்சான்.. வழி ரொம்பவே கஷ்டமானதா இருக்கும்.. தண்ணி சுலபமா கிடைக்காது போன முறை பகல்ல ஏறினதால பல பசங்க முடியாம ரொம்ப சோர்ந்துட்டாங்க இவங்கள்ல சிலர் வயசானவங்க அதான் இந்தமுறை நைட் ப்ளான் பண்ணினேன் உனக்கும் இது முதல்முறை தானே மேல ஏற ஏற குளிர் அதிகமாகும்.. கல்யாணம் வேற நெருங்கிட்டு இருக்கு ஸ்வெட்டர் எடுத்து வச்சிட்டல அஷ்மிதாக்கு சொல்லிட்ட தானே..?’
‘இருக்கு இருக்கு மச்சான்.. அதெல்லாம் சொல்லிட்டேன் உனக்கு எங்கடா ஸ்வெட்டர்?’
‘ப்ச் இதைவிட அதிக குளிர் எல்லாம் பார்த்து இருக்கேன்டா இது எனக்கு நாலாவது முறை பழகிடுச்சு மலையை நெருங்கறப்போ ஈசனை தவிர வேற எதுவும் மனசுல இருக்காது அவர் அருள் இருந்தா மட்டுமே இங்க வரமுடியும் சொல்லுவாங்க உனக்கே புரியும் வா பார்த்துக்கலாம்‘
‘என்னடா பக்தி பழமா மாறிட்ட ஈசன் அருள்னு என்னென்னமோ சொல்ற காலேஜ்ல நீ இப்படி இல்லையே மச்சி‘ என்று அதிசயமாக நண்பனை பார்க்க,
‘சேச்சே அப்படி எல்லாம் இல்ல மச்சான் நானும் பல இடங்களுக்கு போயிருக்கேன் ஆனா இங்க வரும்போது மட்டும் மனசு என்னமோ ரொம்ப லேசான மாதிரி இருக்கும் அதுவும் சுத்தமான மூலிகை காத்து அப்புறம் பாசிடிவ் வைப் ப்ச் எப்படி சொல்ல அது ஒரு டிஃப்ரென்ட் பீல்டா இன்னைக்கு உனக்கே புரியும்‘
‘சரி மச்சி! நீ சொன்ன மாதிரி செய்யறேன் மத்ததெல்லாம் நீ கால் முடிச்சிட்டு வந்து இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கொடு‘
‘சரி நீயும் வீட்டுக்கு பேசிடு‘ என்றவன் சற்று தள்ளி ரிச்சர்ட்க்கு அழைத்து ‘Hey Richard what’s up?’ (எப்படி இருக்க?)
‘fantabulous dude !’ (நல்லா இருக்கேன்)
‘great! when the crew is starting… Is all the norms okay for them?’ (குழு எப்போ கிளம்பறாங்க விதிமுறைகள் எல்லாம் அவங்களுக்கு சம்மதமா?)
‘Yeah! they are absolutely up for it! and they are of eleven one amongst them is a police another a doctor.. will be more easier for you’ (எல்லாருக்கும் பரம சம்மதம் மொத்தம் பதினொரு பேர் வராங்க அதுல ஒரு போலீஸ் டாக்டர் இருக்காங்க உனக்கு ஈஸியா இருக்கும்)
‘yup! that’s cool .. okay send me their particulars will make sure of the requires and the budget which is of dollars’ (நிச்சயமா! சரி அவங்க விவரம் அனுப்பு நான் இங்க தேவையானதை எல்லாம் முடிச்சிட்டு உனக்கு அனுப்புறேன் பணம் டாலரில் செலுத்த வேண்டும்)
‘hm within a couple of days’ (ரெண்டு நாளில் அனுப்புறேன்)
hey is there any stipulation like the food, places etc (அவங்களுக்கு சாப்பாடு, பார்க்கும் இடங்கள் ஏதாவது குறிப்பா இருக்கா )
‘No no dude not much! but it would be better if the food is not that spicy’ (அப்படி எதுவும் இல்ல சாப்பாடு மட்டும் அதிக காரமில்லாம பார்த்துக்கோ )
‘No worries will take care’ நான் பார்த்துக்குறேன் என்று மேலும் சில நிமிடங்கள் அவரிடம் பேசிவிட்டு வைத்தவன் திருவேங்கடம் அகிலாண்டநாயகியின் ஒரே மகன் வசீகரன். முப்பது வயதை நெருங்கி கொண்டிருக்கும் ஒற்றை மகனை ஆசையாசையாக வளர்த்த திருவேங்கடம் அவனுக்கு சிறப்பான பள்ளியில் தொடங்கி கல்லூரி வரை அனைத்தும் தேர்வு செய்து படிக்க வைத்து வழிகாட்டினார்.
ஆனால் படிப்பு முடித்து தந்தையின் வற்புறுத்தலின் பெயரில் ஏர்ஃபோர்ஸில் சேர்ந்தவன் ட்ரைனிங் முடிந்து ஒரு வருடம் மட்டுமே பணியாற்றிய பின் வேலையை விட்டுவிட்டான்.
ஏன் என்று கேட்ட திருவிடம் அவனது ஒரு வருட சம்பளத்தை கொடுத்தவன் உங்களுக்காக ‘நீங்க சொன்ன ஸ்கூல், நீங்க தேர்ந்தெடுத்த படிப்பு, வேலைன்னு இருந்தது போதும் இதுக்குமேல என்னால இந்த வேலை பார்க்க முடியாது..!‘
‘ஏன்..??’
‘அப்பா எனக்கு மத்தவங்க போல நைன் டூ பைவ் ஜாப் செட் ஆகாது.. என்னோட பேஷன் புரிஞ்சிக்கோங்க நிச்சயம் இந்த வேலையில இருந்தா என்னால ஆத்மார்த்தமா செய்ய முடியாது.. இப்போ என்ன நீங்க கேட்ட மாதிரி உங்க திருப்திக்காக எல்லாமே செய்து ஏர் ஃபோர்ஸிலும் இருந்துட்டேன் காலம் முழுக்க நீங்களும் உங்க சர்கிள்ல என் பையன் இந்த கேடர்ல இருந்தான்னு பெருமை பேசிக்கலாம் ஆனா இதுக்கு மேல எனக்கு பிடிச்சதை தான் நான் செய்வேன் என்றவனுக்கு பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்வது பலதரப்பட்ட மனிதர்களுடன் பழகுவது புதுவிடயங்களை எக்ஸ்ப்ளோர் செய்வது என்று அவன் தேடுதலே வேறு! ஆனால் அங்கே அவனுக்கு கிரவுண்ட் வொர்க் கொடுத்து ஓரிடத்தில் கட்டி போட்டு ஒரே மாதிரியான பணியை செய் என்றால் எப்படி முடியும்..??’
என் பையனுக்கு பெஸ்ட் கிடைக்கனும்னு ஒவ்வொன்னும் பார்த்து பார்த்துதானே செய்தேன்.. அவனுக்கு மட்டுமா உங்க எல்லாருக்குமே அப்படிதானே! யாருக்கும் நான் குறை வைக்கலையே என்று வானத்திற்கும் பூமிக்கும் குதித்த திருவேங்கடத்தையும் குறை சொல்வதற்கு இல்லை.. முழுக்க முழுக்க குடும்ப நலனை மட்டுமே முன்னிறுத்தும் மனிதர் அவர்களுக்காகவே அனுதினமும் யோசிப்பவர்.
அதனாலேயே வேலையை விட்டு வந்த வசீகரன் தன் அடுத்தகட்ட நகர்வுகளை நிதானமாக கையாண்டான். முதலில் சில வருடங்கள் சென்னையில் புகழ்பெற்ற நிறுவனத்தில் பணியாற்றியவன் அதன்பின் சொந்தமாக sparkling adventures என்ற கம்பெனி தொடங்கி தனக்கு பிடித்த மலை ஏற்றத்தையே (Trekking) தொழிலாக கொண்டு கடந்த மூன்று வருடங்களாக வெற்றிகரமாக நடத்திவருபவன் பலருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்திருப்பதோடு நம்பகமான நிறுவனம் என்ற பெயரையும் பெற்றிருப்பவனின் நிறுவனம் பல இளைஞர்களிடையே பிரபலம்.
மலையேற்றம் செய்வதற்கான முறையான பயிற்சியும் உரிமமும் பெற்றிருப்பவன் தமிழ்நாட்டில் மட்டுமல்ல கேரளா ஆந்திராவிலும் பலமுறை ட்ரெக்கிங் செய்துள்ளான். மலையேற்றம் குறித்த சிறப்பு பயிலரங்கங்கள் எடுப்பவன் வித்யாசமான கலாச்சாரங்களை முயன்று பார்க்கும் அயல்நாட்டினருக்கும் அதற்கான வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கும் நிறுவனங்களுடன் டைஅப் வைத்து இதுவரை நான்குமுறை வெளிநாட்டினரை தமிழகத்திற்கு வரவழைத்து இருக்கிறான். ஆனால் இவை எதுவும் திருவேங்கடத்திற்கும் பசுபதிக்கும் தெரியாது.. இருவருடங்கள் பணிபுரிந்தவன் நிறுவனத்தில் இருந்து விலகி நண்பர்களுடன் சேர்ந்து தனிப்பட்ட முறையில் ப்ராஜக்ட்களை செய்து கொடுக்கிறான் என்று தான் தெரியும்.
என்னதான் திருவேங்கடம் வெளியில் பார்ப்பதற்கு கண்டிப்பானவராக இருந்தாலும் ஒரே மகன் மீது கொள்ளை ப்ரியம் கொண்டிருப்பவர் அவன் நலன் மட்டுமே அவருக்கு பிரதானம். அதனாலேயே முன் ஏர் எப்படியோ அப்படிதானே பின் ஏறும் இருக்கும் என்று தம்பி மகன்களை முன்னிருத்தி திருவேங்கடம் பேசவும் பலகட்ட வாக்குவாதத்திற்கு பின் விஜயசாரதி பணிபுரியும் நிறுவனத்தில் சேர்ந்ததன் மூலம் அவரது கோபத்தை தனித்திருந்தான் வசீகரன் ஆனால் இப்போது அதையும் விட்டுவிட்டதன் மூலம் நிலையாக ஒரு வேலையில் இல்லாது இருப்பது தெரிந்தால் வீட்டில் மீண்டும் பூகம்பம் வெடிக்கும் என்பதால் அதை தெரிவிக்கவில்லை.
ஆனால் நாயகிக்கும் அபிராமிக்கும் முதல்முறை வெளிநாட்டினரை அவர்கள் ஊருக்கே அழைத்து வந்து அங்கிருந்த திருமண மண்டபத்தில் தங்க வைத்ததில் முதலில் அதிர்ந்தவர்கள் பின் வசீகரனின் மிரட்டலில் வழிக்கு வந்திருந்தனர். அதேநேரம் அண்ணன் தம்பிகள் மூவருமே இவ்விடயத்தில் கூட்டு!
வசீயுடன் பலமுறை சர்வஜித் மலையேற்றம் சென்றுள்ளான் மாதம் இருமுறை அலுவலக வேலை என்று கூறி தமையனின் வழிகாட்டுதலோடு தன் அலுவலக நபர்களை அழைத்து சென்று வந்துள்ளான்.
அதேநேரம் அங்கே வயதான மூவர் சாரதியிடம் கேள்வி மேல் கேள்வியாக கேட்டுகொண்டிருந்தனர்.
‘ஆப்கோ ஏ பெஹ்லி பார் ஹே க்யா..??’ (இதுதான் நீங்க இங்க முதல்முறையா வருவதா?)
‘டேய் வசீ எதுக்குடா இவனுங்ககூட என்னை கூட்டிட்டு வந்த? சாப்பிட சொன்னா ஹிந்தி பேசியே சாவடிக்கிரானுங்களே..‘ என்று நொந்து கொண்டவன் அருகே ‘பைஹா இதர் தேக்கோ‘ என்றவனிடம்,
‘டேய் வளர்ந்து கெட்டவனே ஏன் தமிழ்நாட்டுக்கு வர நீ தமிழ் கத்துட்டு வர மாட்டியா நாங்க ஹிந்தி கத்துக்கணுமா… எனக்கு ஹிந்தி தெரியாது போடா‘ என்று முறைக்க,
‘க்யா..??’ என்றிட மற்றொருவனோ ‘பாய்சாப் யேஹான் ஸ்னான்கர் கஹான் ஹே?’ (இங்கே குளியலறை எங்க இருக்கு?) என்று கேட்கவும் காதை பொத்திக்கொண்டு,
‘தம்பி ஏக் காவ் மே ஏக் கிஸான் ரகு தாத்தா‘ என்றான் விஜயசாரதியும் ஆவேசமாக,
க்யா?
‘தெரில ஹிந்திடா! இதோ பார் இதுதவிர எனக்கு வேற ஹிந்தி தெரியாது அப்புறம் ஏன்டா உயிரை எடுக்குற..??’ என்று சீற மற்றொரு பெரியவர்,
‘பேட்டாஹ்..‘ என்று ஆரம்பிக்கவும்,
‘Do you know english?’ என்றான்.
‘ஹமே அங்க்ரேஸீ நஹி மாலும் ஹே!‘ எங்களுக்கு ஆங்கிலம் தெரியாது
‘அப்போ அமைதியா உட்கார் பெருசு உங்க ட்ரான்ஸ்லேட்டர் வருவான்‘ என்று வசீகரனுக்கு அழைத்து, ‘மச்சி முடிச்சிட்டியா..??’ என்றான் விஜயசாரதி.
வசீகரனின் கல்லூரி தோழன் அவன் பணியாற்றி கொண்டிருக்கும் நிறுவனத்தில் தான் வசீகரன் சில காலம் பணியாற்றினான். அவனுக்கும் மலையேற்றத்தில் பிடித்தம் உண்டு என்பதால் அவ்வப்போது அவனுடன் இணைந்து கொள்வதுண்டு..
அனைவரும் உணவை முடித்து வசீகரனுக்கு காத்திருக்க அவனோ வாட்ஸ்அப்பில் வந்த விபரங்களை பார்த்தவன் ‘வேலைக்கு செல்லும் பெண் வேண்டாம்‘ என்ற மெசேஜை அனுப்பிவிட்டு குழுவினரிடம் வந்திருந்தான்.
‘ஏ ஹே வெள்ளியங்கிரி பர்வத் இஸே தக்ஷின்கைலாஷ் பீ கெஹதா ஹே!‘ என்று தென்கையிலையின் அடிவாரத்தில் நின்று மலையை சுட்டி காட்டியவன், (இதுதான் வெள்ளியங்கிரி மலை இதை தென்கைலாயம் என்றும் சொல்லுவாங்க)
‘இஸ்மே ஜானேகேலியே ஹமே கம்சே கம் சாத் சே ஆட் பஜே லகேங்கி… ஸியாதா சாமான் மத் லோ பாணிக்கா போத்தல் ஔர்…‘ என்றவன் சாரதி கையில் இருந்த மூங்கில் தடியை வாங்கி ‘பெஹெலே இஸ்கோ பக்கட்‘ என்று வாங்கி வந்த மூங்கில் கம்புகளை தன் குழுவினரிடம் கொடுக்க, (இந்த மலையில் ஏறி இறங்க குறைந்தது ஏழில் இருந்து எட்டு மணிநேரம் வரையாகும்.. தேவையான தண்ணீர் எடுத்துக்கோங்க அப்புறம் இந்த தடி ரொம்ப அவசியம்)
‘ஏ கிஸ்லியே பஹாய்ஜான்‘ என்று ஒருவன் கேட்க, ‘எதுக்குண்ணா?’
‘ஏ பர்வத் மே ஜானா பஹுத் முஷ்கில் காம்தா! ராஸ்தே இத்னா ஸீதா நஹி ஹே! இஸ்லியே இஸ்கா ஸரூரத் படேங்கி‘ (இந்த மலையேறுவது கொஞ்சம் கடினம் வழி கரடுமுரடா இருக்கும் அதனால இது உங்களுக்கு அவசியம் தேவைப்படும்) என்றவன் அவர்களின் உடமைகளை அங்கிருந்த அறையில் பூட்டிவிட்டு அத்தியாவசியமானதை மட்டும் எடுத்து கொள்ள சொல்லி ‘சிவாய நமஹ‘ என்றவாறு தன் குழுவினருடன் கிளம்பி இருந்தான்
இங்கே பெண் குறித்த விபரங்களை மகனுக்கு அனுப்பிய திருவேங்கடம் அவன் பதிலுக்காக இரண்டு மணி நேரமாககாத்திருந்தவர் பின் கைபேசியை சார்ஜரில் போட்டுவிட்டு உணவை முடித்தவர் தம்பியுடன் அன்றைய கணக்கு வழக்கை பார்த்தவாறு வசீகரனுக்காக காத்திருக்க தொடங்கிவிட்டார்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
21
+1
1
+1
3
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.



தந்தை காட்டிய பாதையில் செல்லாமல் தனது மனம் விரும்பும் செயல்களை செய்ய எண்ணும் துடிப்பான நாயகன்.
அன்பான குடும்ப உறவுகளையும் விட்டு குடுக்காமல், அவர்கள் மனம் நோகாமல் அவர்கள் கூறிய படிப்பு வேலை என்று செய்து காட்டிவிட்டு அதையே மேற்கொண்டு தொடராமல் இதற்கு மேல் என் வாழ்க்கை என் விருப்பம் என்று தனது மனதையும் புரிய வைத்திருக்கின்றான்.
சாரதி பாவம் “ஹிந்தி தெரியாது போடா” 🤣🤣 சமாளிக்கவாது கொஞ்சமா கத்துக்கணும் பாஸ்.
விரும்பிய ஒன்றையே வேலையாக தேர்ந்தெடுக்கும் போது தான் நமக்கும் மனநிறைவு கிடைக்கும்.
பெண்ணின் தகவல்களை கண்டு என்ன மறுமொழி கூறுவானோ? பார்ப்போம்.
வித்தியாசமான ஹீரோ கேரக்டர் தான் போல …