Loading

வெற்றி சிரிப்பை உதிர்த்து கொண்டு இருந்த நரேனை புரியாமல் பார்த்து கொண்டு இருந்தான் வினய்.

“இப்போ எதுக்கு நீ சிரிச்சிட்டு இருக்க.. சொல்லிடு தான் சிரிச்சு தொலையேன்.” என்று சற்று எரிச்சல் கலந்த குரலில் வினய் சொல்ல, அவன் தோளில் கையைப் போட்டான், நரேன்.

“ஒன்னும் இல்ல.. நான் சும்மா ஒரு சம்பில் தான் காமிச்சேன்.. அதுக்கே அந்த தியா மேடம் ஹாஸ்பிடல இருக்காங்க.. அப்றம் நம்ம ஹீரோ சார் அவங்கள நினச்சு கவலைப்ட்டுட்டு இருக்காரு..

இதை சொல்லும் போதே எனக்கு எவ்ளோ ஹப்பியா இருக்குன்னு வார்த்தையால சொல்ல முடியாது.. அவங்க இன்னும் கஷ்ட படுவாங்க.. நம்ம அத பாக்கலாம்..”, என்று வெற்றி வாகை சூடியவன் போல பேச,

“நீ என்ன பண்ண.. தியாவுக்கு உடம்பு சரி இல்லாம போனதுக்கும் உனக்கு என்ன சம்பந்தம்?.. எனக்கு புரியல.. ஒழுங்கா சொல்லு..”, என்று குழப்பமாக வினவ,

“ஒன்னும்.. இல்ல டா. நான் நேத்து அவ வீட்டு பக்கம் போனேன்.. அங்க என்ன நடந்துதுனு தெரியுமா..”, என்று நிறுத்த

“சொல்லு.. டா.. அங்க உனக்கு என்ன வேலை”, என்று பொறுமையின் எல்லையில் கேட்டான் வினய்.

“சொல்றேன் டா.. நான் சும்மா தான் போனேன்.. அவ என் நிழலை பார்த்து பயந்து கதவ பூட்டிடா.. அப்போ தான் எனக்கு மேட்டர் ஞாபகம் வந்தது.

நம்ம காலேஜ் படிக்கும் போது ஒரு முறை அவ உள்ள இருக்கறது தெரியாம யாரோ ரூம் கதவ சாத்தி.. அவளுக்கு மூச்சு முட்டி மயங்கி விழுந்துட்டாலே உனக்கு ஞாபகம் இருக்கா.

அதே தான் கதவ வெளிய இருந்து பூட்டிடு வந்டேன் அவ்ளோதான்.. நா சும்மா அவளுக்கு பயம் காட்டலாம்னு தான் பண்ணேன்.

ஆனா அவ அதுக்கே இவ்ளோ பாதிக்க படுவானு நிஜமாவே எனக்கு தெரியாது.. ஏன் சொல்றேனா இது என் லிஸ்ட்லயே இல்ல.. அதான். ஆனா இனிமேல் தான் என்னோட கேம் ஆரம்பிக்க போகுது.”, என்றவன் அதே சிரிப்போடு சென்று விட,

அவன் சென்ற திசையை பார்த்து கொண்டு இருந்தவனுக்கு இறைவனை வேண்டி கொள்வதை தவிர எந்த வழியும் தெரியவில்லை.

இரவு ஒருவரை ஒருவர் முறைத்து கொண்டே வரும், ஜெய் மற்றும் ஸ்வாதியை பார்த்த ரிதன்யா குழப்பமாக அவர்களிடம் வந்தாள்.

“என்ன ஆச்சு.. எங்க போய்ட்டு வரிங்க ரெண்டு பேரும்.. ஏன் உங்க முகம் ஓருமாதிரி இருக்கு.. ஏதாவது பிரச்சனையா”, என்று அடுக்கி கொண்டே போக,

“அதெல்லாம் ஒன்னு இல்ல ரிது.. நாங்க சும்மா தான் வெளிய போய்ட்டு வறோம்.. அப்றம் நாங்க சாப்ட்டோம்.. சோ குட் நைட்”, என்று வேகமாக சொன்னாள் ஸ்வாதி.

அவள் கூறுவது பொய் என்று அவள் முகத்தை வைத்தே கண்டுகொண்டாள் ரிதன்யா. இருந்தும்  அவளாக சொல்லாத போது எப்படி கேட்பது என்று நினைத்தவள் சரி என்று தலையசைத்துவிட்டு அங்கிருந்து அகன்றாள்.

ஜெய் தன் அறைக்கு சென்று விட்டான். இவர்களை கவனித்த ஜானகி தன் கையில் இரண்டு குவளைகளுடன் ஸ்வாதி இடம் வந்தவர், “எப்படியும் வெளியே ஒழுங்கா சாப்பிடு இருக்க மாட்டீங்க இதை குடி, அப்புறம் இது ஜெயிக்கு கொடு”,  என்று அவளிடம் அந்த பால் கோப்பைகளை திணித்துவிட்டு அவரும் சென்று விட்டார்.

செல்லும் முன் ‘இவர்களுக்குள் எந்த பிரச்சனை இருந்தாலும் அதை சரி செய்து விடு’, என்று இறைவனிடம் வேண்டியபடியே தன் அறைக்குச் சென்றார் ஜானகி.

வேறு வழியில்லாமல் அந்த குவளையை எடுத்துக்கொண்டு ஜெய் அறைக்குச் சென்றாள். கதவு தாழிடாமல் இருக்க உள்ளே சென்றவள் அவன் கட்டிலில் அமர்ந்து இருப்பதை பார்த்தாள்,,

“அத்தை இதை கொடுக்க சொன்னாங்க”, என்று கூறிவிட்டு அவன் முகத்தை பார்க்காமல் அதை வைத்து விட்டு செல்ல முயன்றாள்.

அதற்கு முன் அவள் கையை பிடித்து இருந்தான் ஜெய். அவள் ‘என்ன’ என்பது போல் புருவம் உயர்த்தி கேட்க அவளை தன் அருகில் அமர்த்திக் கொண்டான்.

அவன் செயலுக்காண காரணம் புரியவில்லை என்றாலும் அமைதியாக அமர்ந்திருந்தாள். “ஸ்.. சாரி”, என்று மெதுவாக சொன்னான்.

முதலில் தான் சரியாகத்தான் கேட்டோமா என்று குழப்பமாக அவன் முகத்தைப் பார்த்தவள், “என்ன சொன்னீங்க” என்று கேட்க, “உனக்கு என்ன கேட்டுச்சோ அதான் சொன்னேன்”, என்றான்.

அவன் பதில் புன்னகைத்தவள், “சரி இந்த சாரி எதுக்கு”, என்று அவனிடம் வினவினாள்.

“அது நான் தியாவ நினச்சு ரொம்ப கவலையாக இருந்தனா.. அந்த கோவத்ல உன் கிட்டையும் சண்டை போட்டுட்டேன் அதான் சாரி”, என்றான்.

அவள் எழுந்து அவன் எதிரே நின்று தலையை வருடி விட்டாள். “எதைப் பத்தி யோசிக்காம நிம்மதியா தூங்குங்க நான் இருக்கேன்”, என்று அவன் கண்களைப் பார்த்து சொன்னாள். பிறகு அவள் சென்றுவிட ஜெய் நித்ரா தேவியிடம் சரணடைந்தான்.

அடுத்த நாள் காலை, சூர்யா தடுத்தும் எதையும் கண்டு கொள்ளாமல், அலுவலகம் கிளம்பி சென்றுவிட்டாள் தியா.

அவளுக்கு ஓய்வு தேவை என்று மருத்துவர் கூறி இருந்ததால், அவளை ஒரு வாரம் வீட்டில் இருக்க சொன்னான்.. அவள் வழக்கம் போல அப்படி ஒருவன் இருப்பதை கண்டு கொள்ளாமல் சென்று விட்டாள்.

ஏனோ இத்தனை நாள் பொறுமை இன்று காற்றில் கரைய தொடங்கியது.. “அவளோட ஆரோகியத்த விட என் மேல இருக்க கோபம் பெருசா போயிருச்சுல” என்பதே அவன் மனதின் கேள்வி..

தியா மீது சற்று கோபம் வந்தது. இருந்தும் தன்னை சமன் செய்து கொண்டு கிளம்பி சென்றான். ஜெய்யிடம் தியாவை கவனித்து கொள்ளுமாறு கூறி இருந்தான்.

தியா பற்றிய சிந்தனையை விட்டு விட்டு, வேலையில் கவனம் செலுத்த முயல அவனால் முடிய வில்லை. வேறு வழி இல்லாமல் தியாவை காணச் சென்றான்.

ஜெய்யின் அலுவலகம் சென்றவன், நேராக தியாவின் அறைக்கே சென்றான். அவன் உள்ளே வருவதை கவனித்தும், நிமிர்ந்து பார்க்காமல் வேலையை செய்து கொண்டு இருந்தாள்.

அவள் நலமாக இருக்கிறாள், என்று அறிந்தும், “எல்லாம் ஓகே தானா ரதி. நீ நல்ல இருக்கறல.. எத்தவனுனா கூப்பிடு”, என்று அவன் சொல்லி கொண்டே போக , அவளிடம் எப்போதும் கிடைக்கும் பதில் தான் கிடைத்தது.

இப்போதும் சற்று கோபம் வந்து சென்றது, அவள் நன்றாகத்தான் இருக்கிறாள் என்று உணர்ந்தவன். ஜெய்யை காண சென்றான்.

அவனை பார்த்த ஜெய், “வா மச்சான்.. என்ன சார்க்கு கோவம்லாம் போயிருச்சா”, என்று தன் மடிகணினி மீது இருந்த பார்வையை அகற்றி கேட்டான் ஜெய்.

அவனை முறைத்தவரே எதிரே அமர்ந்தான் சூர்யா.. “நானும் ரதியும் எங்காச்சும் டூர் போகணும்.. அதுக்கு ஏற்பாடு பன்னு”, என்று அவன் பட்டென சொல்லிவிட,

“டேய்.. என்ன குச்சி மிட்டாய் வாங்கி தாணு சொல்லற மாதிரி சொல்ற.. அதெல்லாம் வேணாம்.. தியா வர்ரதுக்கு சம்மதிக்க மாட்டா..

அவளே சரின்னு சொன்னாலும் நான் அனுப்ப மாட்டேன்.. நீ எதுக்கு இப்போ திடீர்னு கேட்கற”, என்று வேகமாக அரம்பித்தவன் கேள்வியாக முடித்தான்.

“நேத்து டாக்டர் தான் சொன்னாங்க.. அவ என்னமோ மணவுளைச்சல் இருக்கலாம்.. அதான் எங்காச்சும் வெளிய போக சொன்னாங்க.. எனக்கும் அதுதான் சரின்னு தோணுது.. நீ தான் அவள சம்மதிக்க வைக்கணும்..” என்று சூர்யா சொல்லி விட,

” டேய் அந்த டாக்டருக்கு தான் அறிவில்ல உனக்கு மா இல்ல உங்க ரெண்டு பேரைப் பத்தி தெரிஞ்சிருந்தா அவங்கள தனியா வெளியே போங்கன்னு சொல்லி இருப்பார்களா?.

கொஞ்சம் யோசிச்சு பாரு அவங்க தியா மன உளைச்சல்ல இருக்கா னு தான சொன்னாங்க.. அது தான் நமக்கே தெரியுமே. நல்லா பேசிட்டு இருக்க உனக்கே மன கஷ்டம் இருக்கும் போது யார்கிட்டயும் எதையும் சொல்லாமல் இருக்க அவளுக்கும் இருக்காதா”, என்று. சூர்யாவை குத்திக் காட்டுவது போல சொன்னான் ஜெய். மௌனமாக அமர்ந்திருந்தான் சூர்யா.

“நீங்க இப்படி பேசிக்காம இருக்கும் போது உங்களை தனியாக அனுப்பினா இன்னும் பிரச்சனை பெருசுதான் ஆகும்.

அதுநாள் வெளியே எங்கேயும் போகவேண்டாம். போகவும் கூடாது.. ஏன்னா எனக்கு ரொம்ப பயமா இருக்கு அங்க போய் அவளுக்கு ஏதாவது முடியாம போச்சுனா.. உன்கிட்ட அவ வாய தொறந்து  சொல்ல மாட்டா.. அது உனக்கும் தெரியும் அப்படி அவளுக்கு ஏதாவது ஆச்சுன்னா என்ன பண்ண முடியும் உன்னால புரிஞ்சுக்க மச்சான்.. வேணாம்”, என்று பொறுமையாக நிலைமையை சொல்லி புரியவைக்க முயன்றான்.

ஆனால் சூர்யாவின் காதில், ” முடியாம போச்சுன்னா உன்கிட்ட சொல்ல மாட்டா”, என்று ஜெய் சொன்னது மட்டும் கேட்டுக்கொண்டே இருந்தது.

திடீர் என்று உள்ளே ஓடி வந்த பியூன், “சார்.. தியா மேடம் மயங்கி விழுந்துட்டாங்க..”, பதற்றமாக உள்ளே வந்த பியூன் சொல்ல, இருவரும் தியாவை பார்க்க சென்றனர்.

மயங்கி விழுந்த அவள் முகத்தில் தண்ணீர் தெளித்தும் அவள் கண் விழிக்க வில்லை. எனவே மருத்துவமனைக்கு செல்லலாம் என்று ஜெய் சொல்ல சூர்யாவும் ஜெய்யும் தியாவுடன் மருத்துவமனைக்கு சென்றனர்.

தியாவை பரிசோதித்த மருத்துவர், சூர்யாவிடம் பேச வந்தார். “என்ன சார் நான் உன் கிட்ட சொன்னேன்ல்ல அவங்க ஹெல்த் கண்டிஷன் இப்போ கொஞ்சம் மோசமா இருக்கு. கவனமா பார்த்துகோங்க. இப்டி தான் அலட்சியமாக இருப்பீர்களா?”, என்று அவர் பொரிந்து தள்ள,

“இல்ல டாக்டர் அவங்க நார்மலா தான் இருந்தாங்க அதனால்தான் ஆஃபீஸ் போனாங்க..”, என்று கூறினான் சூர்யா.

” நல்லா சொன்னிங்க சார்.. அல்மோஸ்ட் ஒன் ஹார்க்கு மேல அவங்க மூச்சுவிட கஷ்டப்பட்டு இருக்காங்க. ரொம்ப முடியாம போய் தான் மயக்கம் வந்து இருக்கு. இது கூட தெரியாம இருந்து இருக்கீங்க சார் நீங்க உங்கலளாம் என்ன தான் பண்றதோ தெரியல”, என்று மீண்டும் சூர்யா மீது குறை சொன்னார் மருத்துவர்.

“டாக்டர் என்ன சொல்றீங்க ஒரு மணி நேரமாவ”, என்று ஜெய் கேட்க, ‘ஆம்’ என்பது போல் தலையசைத்துவிட்டு. “இனிமேலாவது கொஞ்சம் கவனமா இருங்க”, என்று கூறிய மருத்துவ அங்கிருந்து சென்றார்.

சூர்யா கடும் கோபத்தில் இருந்தான். காலையில் இருந்து நடந்த அனைத்தையும் நினைத்து பார்த்தான். இன்னும் இன்னும் கோபம் அதிகம் தான் ஆனது. ஆனால் தியா பற்றி சிந்தித்து கொண்டு இருந்த ஜெய், அவனை கவனிக்க தவறினான்.

சிறிது நேரத்தில் தியாவை அழைத்து செல்லலாம் என்று தகவல் வர, மணி அப்போதே ஐந்தாகி இருக்க, வீட்டிற்கே செல்லலாம் என்று கூறினான், ஜெய்.

ஜெய்யும் உடன் வர அவனை தடுத்தான்
சூர்யா. “என்ன “, என்று ஜெய் கேட்க, “நீ வர வேணாம்..”, என்று கூறிவிட்டான். “போடா.. நான் தியாவ வீட்டுல விட வருவேன்”, என்று பிடிவாதமாக அவன் சொல்ல, சூர்யாவின் பார்வையில் “சரி நான் வரல”, என்று கூறிவிட்டான்.

சூர்யா தியா இருவரும் வீட்டை நோக்கி சென்றனர். சூர்யாவின் முகத்தில் ஒரு கை கடுகை போட்டால் வெடித்து விடும். அந்த அளவிற்கு கோபமாக இருந்தான்.

வீட்டிற்குள் நுழைத்தவுடன் தியா அறைக்கு செல்ல போக, “நில்லு ரதி”, என்று கூறினான்.. அவள் கண்டு கொள்ளாமல் செல்ல முயல, “நில்லுனு சொல்றேன்ல”, என்று அவ்விடமே அதிர கத்தினான்.

இதற்கெல்லாம் அசருப்பவளா தியா. அவனை கடந்து செல்ல போனாள். அவள் கையை பிடித்திருந்தான். திரும்பியவள் அவனையும் கையையும் மாறி மாறி பார்த்தாள்.

அவன் விடுவது போல தெரியவில்லை. அவளே விடுவித்து கொள்ள நினைத்து கையை உருவினாள். அவள் செய்கை ஒவொன்றும் அவன் கோவத்தை அதிகரித்து கொண்டே இருந்தது. அதை அவள் அறியவில்லை.

மீண்டும் நகர போனவளை, தோளை பிடித்து தன் பக்கம் இழுந்தான்.. அவ்வளவு தான் தியாவிருக்கும் கோபம் வந்து விட்டது.

அவனை முறைத்தாள். “உன்னோட இந்த பார்வைக்கு.. இன்னைக்கு நான் பயப்பட போறது இல்ல.. எனக்கு பதில் வேணும்.. முடிவு தெரியணும்”, என்று அழுதமாக அவன் சொல்ல,

அவனிடம் இருந்து விடுபடத் தான் முயன்றாள் தியா. இருந்த கோபத்தில் அவளை தள்ளி விட்டான், சோபா மீது விழுந்தாள்.

“என்ன தான் டி.. உன்னோட பிரச்சனை.. ஏன் என்ன இப்டி சித்ரவாதை பண்ற.. நீ என்ன செய்ஞ்சாலும் பொறுமையா இருக்கறதாலயா. சொல்லு.. டி..”, என்று சோபாவில் அமர்ந்து இருத்தவளின் கன்னம் பற்றி கேட்டான்.

“உடம்புக்கு முடியலனு கூட என்கிட்ட.. சொல்ல மாட்ட.. அவ்ளோதூரம் நான் வேண்டாம்ல.. அப்டி என்ன என் மேல நம்பிக்கை இல்லாம போயிருச்சு உனக்கு. என்ன நம்ப முடியாத அளவுக்கு நான் மோசமாவன்.. தான..

அப்றம் எதுக்கு என் கூட இருக்க.. வேணாம்
அவ்ளோ சகிச்சுட்டு நீ ஒன்னும் இருக்க வேணாம்.. டிவோர்ஸ்லாம் கூட கிடைக்க ரொம்ப நாள் ஆகும்.. நீ தாலிய கழட்டி குடு.. குடுத்துட்டு இங்க இருந்து போ..

உனக்கு எங்க போக தோணுதோ.. அங்க போ..”, என்று அவன் கத்தி கொண்டு இருக்க அவனையே பார்த்தாள் தியா.. ஆனா பேசவில்லை.

“நீ கழட்டி தர வேணாம்.. நான் தான கட்டுனேன் நானே எடுத்துக்கறேன். என்ன நம்பாதவ கழுத்துல நான் கட்டுன தாலி இருக்க வேணாம்…”, என்று அவள் கன்னத்தில் இருந்து கையை எடுக்க தியா எழுந்து நின்றாள்.

எதைப் பற்றியும் சிந்திகாமல் அவள் தாலியை எடுக்க முயன்றான், அவன் கை அவள் தாலியின் படும் ஒரு நொடிக்கு அவனை ஓங்கி அறைந்திருந்தாள் தியா..

அவள் அடித்த கன்னத்தில் கையை வைத்து கொண்டு அவளை பார்க்க, பத்ரகாளியாக மாறி இருந்தாள், “யாருடா உன்னா நம்புல.. நானா.. நானா உன்ன நம்புல.. சொல்லு டா.  நானா.. நானா”, என்று கத்தியவள் அவனை மீண்டும் மீண்டும் அறைந்தாள்.

அவனோ தடுக்கவில்லை. “சொல்லு டா.. நான் உன்னை நம்புன அளவுக்கு.. இந்த உலகத்துல யாராச்சும் உண்ண நம்பி இருப்பங்களா.. பதில் பேசு டா”, என்று சற்றும் கோபம் குறையாமல் கத்தினாள். இப்போது அமைதியாக இருப்பது சூர்யாவின் முறை ஆனது

“ஆனா நீ என்ன டா பண்ண.. என்ன பண்ண.. ஒண்ணா ரெண்டா.. எத்தனை முறை உண்ண நம்புனேன்.. ஒரு ஒரு முறையும் நீ என்ன பண்ண..”, என்று கத்தியவளுக்கு இப்போது கண்ணீரும் அவள் அனுமதி இல்லாமல் கரைபுரண்டு ஓடியது.

“இவ்ளோ நேரம் பேசுனில.. இப்போ பேசு.. இப்போ பேசு டா.. பேசு டா”, என்று தன் சட்டையை பிடித்து கதறி அழுதபடி பார்த்து நொறுங்கி போனான் சூர்யா.ஆத்திரம் குறையாமல் சூர்யாவை அடித்து கொண்டே இருந்தாள், தியா.

“பதில் பேசு டா.. இவ்ளோ நேரம் என்னலாம் பேசுன. இப்போ பேசு.”, என்று அவன் சட்டையை பிடித்து உளுக்கியவளின் குரலும் உடைந்து போனது.

அவள் அனுமதி இன்றியே கண்ணீர் வெளியேறி கொண்டும் இருந்தது. முழுவதும் உடைந்தவள் கீழே சரிந்தமரந்து அழ தொடங்கினாள். அவள் நிலை கண்டு பதறியவன்,

“ரதி.. என்ன பாரு.. சாரி மா”, என்று அவன் கூறிய எதுவும் அவள் செவிகளை எட்டவில்லை. கண்கள் எங்கோ நிலைகுத்த அழுது கொண்டே இருந்தாள். தியாவை இழுத்து தன்னோடு அணைத்துக் கொண்டான். தாயை கண்ட சேய்யை போல அவனுள் புதைந்து அழுது கொண்டு இருந்தாள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்