Loading

அத்தியாயம்  7 ❤

திடிரென்று தன்னிடம் வந்து, இப்படி தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறானே  ! என ஆச்சர்யமாகப் பார்த்தாள் மஹிமா.

கார்த்திக் அவளின் முன்னால் தனது கையை அசைத்து ,

” ஹலோ ! எக்ஸ்க்யூஸ்மி  ! “
அவளை அழைத்தான்.

அருகில் இருந்த ஶ்ரீதேவி,

” முதல்ல நீங்க யாரு  ? சம்பந்தமே இல்லாம, இவ கிட்ட வந்து பேசிட்டு இருக்கிங்க ? “

கார்த்திக் ” நாங்க ஆல்ரெடி மீட் பண்ணி இருக்கோம்ங்க “

ஶ்ரீதேவியிடம் கூறி விட்டு, மஹிமாவிடம் திரும்பினான்.

அவள் சற்று நிதானித்து ,

” எதுக்கு நீங்களாக வந்து  உங்களை  இன்ட்ரொடியூஸ் பண்ணிட்டு இருக்கிங்க ? “

இவ்வாறு கேட்டுக் கொண்டு இருந்த,மஹிமா அவனது பார்வையின் வீச்சைப் பொறுக்க முடியாமல் பேசுவதை நிறுத்தினாள்.

கார்த்திக் ” எதுக்கு இவ்ளோ நர்வஸ் ஆகுறிங்க  ? இப்போ என்ன  ! ஏற்கனவே ஒரு தடவை மீட் பண்ணோம். அதுனால தெரிஞ்சுருக்கும்னு பேசனேன் “

என்றதும் ,

மஹிமா அவசரமாக,

” நான் ஒன்னும் நர்வஸ் ஆகல “

அருகில் இருந்த ஶ்ரீதேவி வெறும் பார்வையாளராக மட்டுமே இருந்தாள்.

கார்த்திக் ” ஜஸ்ட் ரிலாக்ஸ்.உங்களோட புக் – னு நினைச்சு , என்னோடதை எடுத்துட்டு வந்துட்டிங்க “

அவன் கூறியதும் தனது பையை சோதனையிட அதில் அவனது புத்தகம் இடம் பெற்றிருந்தது.

” சாரி ” சொல்லி அவனிடம் புத்தகத்தைக் கொடுத்தாள்.

அதைப் பெற்றுக் கொண்டு,

கார்த்திக் ” பரவாயில்லைங்க ” எனக் கூறி, நண்பனை அழைத்துக் கொண்டு சென்றான்.

மஹிமாவிடம் ,

” மஹி  ! நீ  அவன் கிட்ட பேசும் போது மட்டும் ரொம்ப பயப்பட்ட  ! பதட்டப்பட்ட ! அது எப்படி இவனுக்கும் தெரிஞ்சுச்சு  ? “எனக் கேட்டாள்.

” தெரியல ” என்பது போல் தலையாட்டினாள் மஹிமா.

ஶ்ரீ ” அவன் உன்னை அந்த  அளவுக்கு கவனிச்சு இருக்கான். அவன்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாவே இரு “

மஹிமா ” இனிமேல் பேசறதுக்கு வாய்ப்பு கிடைச்சா தான  ! பாத்துக்கலாம்  “

ஶ்ரீதேவியிடம்  பதில் சொன்னாலும் தமிழின் புஜத்தில் அடித்துக் கொண்டே, அட்டகாசமான சிரிப்புடன் சென்று கொண்டிருந்த கார்த்திக்கை விட்டு அவளது கண்கள் விலகவில்லை.

தமிழ் ”  ஏதோ ரெண்டு தடவை தான் அந்தப் பொண்ணைப் பாத்த . ஆனா பல நாள் பழகுனவன் மாதிரி நீங்க நர்வஸ் ஆகுறிங்க , அப்படினு சொல்லிட்டு வர்ற  ! என்னடா நடக்குது இங்க  ? “

கார்த்திக் ” அதாவது மச்சி ! அந்தப் பொண்ணை ஃபர்ஸ்ட் டைம் பாத்தப்போ அமைதியா இருக்க மாதிரி காட்டிக்கனும்னு நினைச்சா.இப்போவும் அப்படி தான் நடந்துக்குறா. அதை வச்சு சொன்னேன்.வேற ஒன்னும் இல்ல “

தமிழ் ” ஓஹோ  ! ” என கார்த்திக்கை ஒரு தினுசாக பார்க்க,

“உண்மையாகவே ஒன்னும் இல்லடா. அவளைப் பாத்து அட்ராக்ட் ஆகல. என்னை நம்பு “

” இப்ப நான் எதுவுமே கேக்கலயே  ! ஏன் விளக்கிக் கழுவுற  ? “

கார்த்திக் ” சரி வா  ! க்ளாஸூக்குப் போகலாம் “

வகுப்பறைக்குள் இருவரும் நுழைந்த மாத்திரத்தில் ,

கார்த்திக் ” மச்சி தியா டா “

தமிழ் ” என்னது ! தியாவா  ! எங்க  ? “”

ஏப்ரல் ஃபூல் ” என கிண்டலடிக்க, 

”  போடா ! காலைல இருந்து நீ என்னை சோகமாக்கிக்கிட்டே இருக்க  ! ” நண்பனிடம் கோபத்தைக் காட்ட,

கார்த்திக் ” சாரி குமரா  ! நிஜமாகவே உன் தியா வந்துட்டாங்க  “

தமிழ் ”  நான் திரும்பிப் பாக்க மாட்டேன்.நீ ஏமாத்துற  ! “

கார்த்திக் ” திரும்பிப் பாருடா எருமை “

அவனது முகத்தை வலுக்கட்டாயமாக தியாவின் பக்கம் திருப்பினான்.

தியாவைப் பார்த்ததும் ,

முப்பத்திரண்டு பற்களையும் காட்டி சிரித்தான் தமிழ்.

கார்த்திக் ”  வாய மூடு மச்சி . நம்ம பிரேம் சார் வர்றாரு. ஏன் பல்லைக் காட்டுறனு அடிச்சுடப் போறாரு “

தமிழ் ” அய்யோ  ! ஃபர்ஸ்ட் ஹவர் அவரோடதா  !!!! ” என அதிர்ச்சியாக,

” என்ன சொல்ற தமிழ்  ? ”  பிரேம் என்ற பிரேம்குமார் அவனிடம் வந்தார்.

தமிழின் வாய் தந்தி அடிக்க ,

” ஒன்னும் இல்ல சார் ” எப்படியோ பூசி மெழுகி சமாளிக்க ,

‘ இவன் இப்படித்தான் ‘என்றுஅ வனை விட்டு விட்டுப் பாடத்தை நடத்த ஆரம்பித்தார்.

கார்த்திக்கும்,தமிழும் மாலை ஆனதும், தங்களது இல்லத்திற்கு செல்வதற்காக தங்களது இரு சக்கர வாகனத்தை எடுக்க வந்தனர்.

அப்போது ஒரு  பெண் கையில் வாழ்த்து அட்டை  மற்றும் ரோஜா பூவையும்  வைத்துக் கொண்டு கார்த்திக்கை அழைத்தாள்.

சற்றுத் தொலைவில் , தன் தோழியிடம் பேசிக் கொண்டு இருந்த மஹிமா யதேச்சையாக அதைப் பார்க்க நேர்ந்தது.

   – தொடரும்

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்