Loading

அத்தியாயம்  4 ❤

அவனது கண்கள் அவளை ஏறிட்ட மாத்திரத்தில், அவளின் கண்களைப் பார்த்ததும் தடுமாறிப் போனான்.

அளவான உடல்வாகு ,

பளிங்கு நிறம்,

சாதாரண உயரத்திற்கும் குறைவு,

திருத்தப்பட்ட புருவம்,

ஆரஞ்சு சுளை போன்ற இதழ்கள்,

கூந்தலைக் காற்றில் பறக்க  விட்டிருந்தாள்.

அவள் இவனைப் புருவம் உயர்த்திப் பார்த்துக் கொண்டு இருப்பதையும்,அருகில் இருந்த தமிழ்  அழைப்பதையும்  கூட மறந்து அவளை இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தான் கார்த்திக்.

தமிழ் ” கார்த்திக் ” காதில் கத்த நிகழ் உலகத்திற்கு வந்தான்.

கார்த்திக் “ஆஆ  !!!! ஏன்டா காதுல இப்படி கத்துற ?” என்று காதை மூடிக் கொண்டான்.

எதிரில் அந்தப் பெண் இன்னும் தன்   அவனையே பார்ப்பது  தெரிந்ததும், தன்னை சமாளித்துக் கொண்டு,

அவளிடம் ,

” இடிச்சதுக்கு சாரிங்க. இவன் கூட பேசிட்டு வந்ததால கவனிக்கலை ”  அவளது கண்களை நேருக்கு நேராகப் பார்த்துக் கூறியவனை ,

சில நிமிடங்கள் உற்று நோக்கி விட்டு ,

” இட்ஸ் ஓகே ” என்றாள்.

தொலைவில் இருந்து அவளது தோழி

“மஹிமா. சீக்கிரம் வா ! லேட் ஆச்சு ” என்றதும் இவனை மறுமுறை ஒரு பார்வை பார்த்து விட்டு நடந்தாள்.

தமிழ் ”  அந்தப் பொண்ணை எதுக்கு அப்படி அசையாம நின்னுப் பாத்துட்டு இருந்த ? சைட் அடிச்சன்னுக் கூட சொல்லலாம் “

கார்த்திக் ” சைட் – லாம் இல்லை. சும்மா தான் குமரா  “

தமிழ்  ” இவருக்கு சைட் அடிக்கவே தெரியாது பாரு. நீ விட்ட ஜொள்ளுல ரயில்வே ஸ்டேஷனே மூழ்கிப் போச்சு “

கார்த்திக் ” ரொம்ப கலாய்க்காதடா. சாதாரணமா தான் பாத்தேன்.ஜொள்ளுலாம் இல்ல.

பேர் என்ன ? மஹிமா. அழகான பேர்”

தமிழ்  ” ஜொள்ளு விட்றதை இப்படியும் சொல்லலாமா மச்சி ?”

என்றதும் கார்த்திக் அவனை முறைக்க அத்தோடு தமிழ் அந்தப் பேச்சை விடுத்தான்.

” எப்படியும் தருண் மார்னிங் அங்கே ரீச் ஆகிடுவான். அவங்க நாம ஈவ்னிங் அவனுக்குக் கால் பண்ணி விவரம் கேட்கனும். மறந்துடக் கூடாது குமரா  “

இருவரும் தங்களது வீட்டை நோக்கி சென்றனர்.

மஹிமா தனது உடைமைகளை எடுத்துக் கொண்டு தோழிகளுடன் ஹாஸ்டலுக்கு சென்றாள்.

மஹிமா,  தனது பி.பி.ஏ படிப்பை வெளியூரில் நல்லபடியாக படித்து முடித்து விட்டு எம்.பி.ஏ  நுழைவுத் தேர்வில் நல்ல மார்க் எடுத்தாள்.

அங்கே சொந்த ஊரிலேயே ஒரு பிரபலமான கல்லூரியில் படித்துக் கொண்டு இருக்கும் போது சில தவிர்க்க முடியாத  பிரச்சினை ஏற்பட்டதால், ராமநாதன் அவளை வேறு ஒரு ஊரில் இருக்கும் கல்லூரியில் சேர்த்து விட்டதோடு அல்லாமல் ஹாஸ்டலில் தங்கிப் படிக்குமாறு அனுப்பி வைத்து விட்டார்.

கார்த்திக் சேர்ந்து இருக்கும் கல்லூரிக்குத் தான் அவளும் படிக்க  வந்திருக்கிறாள்.

தந்தை  ராமநாதன் மிக மிக கண்டிப்பானவர்.பிஸியான பிஸ்னஸ்மேன்.தாய் சுவர்ணலதா.மென்னையான குணம்

கொண்டவர்.வீட்டில் இவர்கள் மூவரைத் தவிர வேறு யாரும் இல்லை.

மஹிமா இயல்பிலேயே பிறருக்கு உதவும் குணம் கொண்டவள். ஆனால் அந்த நபர் உண்மையிலேயே உதவி வேண்டும் பட்சத்தில் , இல்லையெனில் அவளிடம் இருந்து எந்த உபகாரமும் பெற முடியாது.கோபம் சற்று அதிகமாகவே வரும்.அவள் கூறிவது தான் சரியாக இருக்கும் என்பது அவளது அசைக்க முடியாத நம்பிக்கை.கோபம் இருக்கும் இடத்தில் தான் நல்ல குணம் இருக்கும் என்று கூறுவார்கள்.குணத்தில் யாருக்கும் ஈடு இணையில்லாதவள்.

சில நேரங்களில் மற்றவர்களது யோசனையை ஏற்பாள். ஆனால் அதை செயல்படுத்த விரும்ப மாட்டாள்.

இதிலிருந்தே உங்களுக்குத் தெரிந்து இருக்கும் மஹிமாவின் குணம்.கோபக்காரி அதே சமயத்தில் பாசக்காரியும் கூட.அவளைப் போல் யாராலும் ஒருவர் மீது அன்பு செலுத்த முடியாது.கார்த்திக்கின் சாந்தம் மற்றும் விளையாட்டு குணத்திற்கும் நேர்மாறு.

 

                                     – தொடரும்.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
5
+1
1
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்