
“அவனை சும்மா விடக் கூடாது… ஏதாச்சு பண்ணனும்” தனது அகவானா கிளாம்பிங் ஸ்டே அலுவலக அறையில் அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்தாள் அகமொழி.
முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
“சேட்டனுங்ககிட்ட பிரச்சினை வேணாம் அகா. நம்ம ஸ்டேட்னா பரவாயில்ல. இங்க நமக்கு முட்ட ஏதாச்சு மந்திரிச்சு வச்சுட போறாங்க” என ரிஷான் பரிதாபமாக உரைத்தான்.
“அதே முட்டையை அவனுக்கு வச்சுட மாட்டேன். நீ வேற ஏன்டா பயந்து சாகுற…”
“பின்ன பயப்புடாம, நீயும் இவளும் சேர்ந்து எந்த ஏழரையையும் இழுத்துட கூடாதுன்னு நெஞ்சு பக்கு பக்குன்னு அடிக்குது…” என்றபடி ரூஹியை பார்க்க, அவளோ நகத்தைக் கடித்துத் துப்பிக்கொண்டிருந்தாள்.
ஏதோ பழி வாங்க யோசிக்கிறாள் என்பது அதிலேயே தெரிந்தது.
“ஆத்தாடி” என மிரண்டவன், “யம்மா பரதேவதைகளா எதுவும் செஞ்சு வைக்காதீங்க… அப்பா வேற கால் பண்ணாரு. கமிங் சண்டே எங்கேஜ்மென்ட் வைக்கலாம்னு சொல்லிருக்காரு. என்னை நாளைக்கு ஊருக்கு வர சொல்லிருக்காங்க… இப்ப தான் லோன் இல்லையே. கொஞ்சம் மேனேஜ் பண்ணலாம்…” என்றதில் அகமொழியும் தலையாட்டினாள்.
அந்நேரம் அவனுக்கு அலைபேசி அழைப்பு வர, “அப்பா தான் கால் பண்றாரு” என்றபடி வெளியில் சென்றான்.
ராகவன். வங்கியில் மேலாளராக பணிபுரிகிறார். ஒரே மகன். தோழியுடன் இணைந்து தொழில் செய்யப் போகிறேன் என்றவனை முடிந்தமட்டும் கண்டித்தார்.
அவனோ கை காலில் விழுந்து கெஞ்சி ஆரம்பித்த தொழில் அவனை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் சென்றதில் அவருக்கும் பெருமை தான்.
“சொல்லுங்கப்பா!”
“நீ எப்ப ஊருக்கு வர்ற ரிஷு?” ராகவன் கேட்டார்.
“நாளைக்கு காலைல கிளம்புறேன்பா”
“சரி சரி… நீ ஒன்னு பண்ணு நிச்சய மோதிரமும் நாளைக்கு காலைல போய் வாங்கிட்டு வந்துடு. உன் அத்தை மாமா, சண்டே தான் வரமுடியுமாம். அவங்களை விட்டுட்டு நாங்க மோதிரம் வாங்க போனா அப்பறம் சண்டைக்கு வருவாங்க. நீயே வாங்கிட்டு வந்தன்னு சொல்லிட்டா பிரச்சினை இல்ல”
“சரிப்பா… ஈவ்னிங் போய் வாங்கிடுறேன்” எனும்போதே அவனது தாய் மாதவி அலைபேசியைப் பறித்தார்.
“வேணாம் வேணாம்… நாளைக்கு காலைல 10 டு 11 நல்ல நேரம். அப்போ போய் வாங்கிடு” என்றதும் சரியென தலையசைத்தான்.
இங்கோ, இன்னும் கோபம் தீராது இருந்த தோழியைக் கண்ட ரூஹி, “என்னடி யோசிக்கிற?” எனக் கேட்க,
“எப்படி மனசாட்சியே இல்லாம பொய்ய உண்மை மாதிரியே ரிவியூ குடுத்து அடுத்தவங்க கனவை கலைக்க முடியுது இவங்களால. மனசே ஆறலைடி. நியாயம் கேட்க போனா, அந்த பைத்தியக்காரன் எப்படி ரூடா பிஹேவ் பண்றான் பாரு. அவனை சும்மாவே விடக்கூடாது.
எப்படியும் எந்த தப்பும் பண்ணாமலா ரிசார்ட் நடத்துவான். அதை பத்தி எல்லாம் நம்ம ரிவியூ குடுத்தா மூஞ்சியை எங்க கொண்டு போய் வச்சுப்பானாம். அவனும் அவன் ஆட்டிடியூடும். நம்மளை பத்தி வெறும் காசிப் மட்டும் தான் அவனால சொல்ல முடியும். ஆனா அவன மாதிரி பணக்காரங்க செய்ற தப்பெல்லாம் நம்ம ஆதாரத்தோடவே சொல்ல முடியும். அவன் பிசினஸை பத்தி உண்மையாவே ஒரு நெகட்டிவ் ரிவியூ குடுக்கணும்டி அப்ப தான் அவனுக்கு அறிவு வரும்” எனக் கோபத்தில் பொரிந்து தள்ளினாள் அகமொழி.
ரூஹி தான் சிரிப்பை அடக்கிக் கொண்டாள்.
“என்னடி?” அகமொழி காட்டத்துடன் கேட்க,
“இல்ல… எப்பவும் நான் தான் இப்படி யோசிப்பேன். என்னைத் திட்டி திட்டி இப்ப நீ ரிவெஞ்சுக்கு யோசிக்கிறியே அதான்” என நக்கல் செய்ததில்,
“போடிங்… பாவப்பட்ட வேலைக்காரனுக்கு எல்லாம் நீ எல்லா வேலையும் காட்டுவ. அங்க அவன் அவ்ளோ பேசுறான் பேந்த பேந்த முழிச்சுட்டு நின்னுட்டு இருக்க. பழி வாங்க கூட ஆள் பார்த்து தான பண்றீங்க?” என எகிறினாள்.
“அடியேய்… உன் பியான்ஸ் தாண்டி பயந்து சாவுறான். அவனும் பேச மாட்டுறான் என்னையும் பேச விட மாட்டுறான். நான் ஏதாச்சு பேச வந்தாலும் என் காலை மிதிக்கிறான்… அந்தத் தொடை நடுங்கிய வச்சு நீ எப்படி காலந்தள்ள போறன்னு எனக்கு தெரியலடி. இப்ப என்ன உனக்கு அவனைப் பழி வாங்கணும் அவ்ளோதான… நான் பார்த்துக்கறேன் விடு. நீ போய் நிச்சயத்துக்கு ஆகுற வேலையைப் பாரு” எனும்போதே ரிஷான் உள்ளே வந்தான்.
அகமொழி, “ரிஷு… சண்டே அன்னைக்கு லன்ச் ஆர்டர் குடுத்துடலாம்ல. எந்த ஹோட்டல்ல குடுக்கலாம்?” சிந்தனையை முயன்று நிச்சயத்தின் புறம் திருப்பினாள்.
“நான் ஒரு ஆப்ஷன் வச்சுருக்கேன். ஈவ்னிங் போய் அங்க டேஸ்ட் பார்த்துட்டு டிஷ் ஆர்டர் குடுத்துட்டு வந்துடலாம் அகா. லாஸ்ட் மினிட்ல ஏதாச்சு சொதப்புனா என் அத்தை மாமா நசநசன்னு வைப்பாங்க.”
சொன்னது போன்றே மாலையில் இருவரும் உணவகத்திற்குச் சென்றனர்.
பேமஸ்ஸான உணவகம் தான் அது. விலை கூடுதல் என்றாலும், நிச்சய உணவிற்கு அவள் விலையும் பார்க்கவில்லை.
ரிஷானும் நிச்சயத்திற்கான செலவை தானே செய்வதாகக் கூறிட, அவள் தடுக்கவும் இல்லை.
அதே உணவகத்தில் அர்ஜித் அகனுக்காக காத்திருந்தாள் சஹானா.
பீச் நிற டீ – ஷர்ட்டில் பின்னந்தலை கேசத்தை கோதியபடி உள்ளே நுழைந்தான் ஆடவன்.
அவனைக் கண்டதும் முகம் மலர்ந்த சஹானா, “ஹாய் அர்ஜித்!” என கை கொடுக்க, அவனும் முறுவலுடன் கை கொடுத்தான்.
இருவரும் எதிரெதிரே அமர்ந்திருக்க, இருவரும் தங்களது படிப்பு மற்றும் வேலை பற்றிய விவரங்களை பகிர்ந்து கொண்டனர்.
“நீங்கள் பெண்ணு பார்க்க வருமென்னு நினைச்சேன்” சஹானா கேட்க,
“பறஞ்ஞல்லோ. சீசன் டைம். குறைச்சு பிசி. எந்தா கழிக்குறே(சாப்புடுற)?” என்றான்.
இருவரும் தங்களுக்கு வேண்டியதை ஆர்டர் செய்திட, “ஹேண்ட் வாஷ் செய்தி்ட்டு வராம்” என அவன் எழுந்தான்.
அகமொழி “டேய் எவ்ளோ நேரம்டா கை கழுவுவ. பசிக்குது வா…” எனக் கதவின் கைப்பிடியைப் பிடித்து கவனத்தை சிதற விட்ட நேரத்தில் வாஷ் ஏரியாவின் கனத்த கதவை அர்ஜித் சற்று வேகமாக இழுக்க, அவளும் வாரி முன்னே விழுந்தாள், அவன் மீதே.
“ஐயோ” அவன் நெஞ்சில் முட்டி தலைவலிக்க, நெற்றியைப் பிடித்தபடி எரிச்சலாக நிமிர்ந்தவள் திகைத்தாள்.
தன்மீது பூக்குவியலாய் வந்து விழுந்த பெண்ணை எதிர்பாராது திகைத்த அர்ஜித்தும், “ஏய்…” எனக் கத்தும்போதே அவளைக் கண்டுகொண்டு முகத்தில் அருவருப்பை வழிய விட்டான்.
“இப்படி தான் வெடுக்குன்னு கதவை திறப்பியா?” அகமொழி இன்னும் நெற்றியைத் தேய்க்க,
“ஞான் நின்டெ ரூம் கதவோ திறந்தேன்? பப்ளிக் பிளேஸில் பப்ளிக் டோர எங்ஙனே வேணாலும் திறக்காம். நீதான் நின்டெ கண்ண முன்னாடி பார்த்து வைக்கணும்…” என வெறுப்பை உமிழ்ந்தான்.
பின் சட்டென, அவளை மேலும் கீழும் ஒரு மாதிரியாகப் பார்த்து, “ஒருவேள என்மேல விழணம்னே இவிட நின்னதோ?” என அர்த்தமாகக் கேட்க, அவள் மீது சிறு பிழை இருந்ததால் அமைதி காத்த அகமொழிக்கு ஆத்திரம் தாண்டவமாடியது.
“இவர் பெரிய மன்மதரு… இவர் மேல வந்து நாங்க விழுகுறதுக்காக வாஷ் ரூம் வாசல்ல தவம் இருக்குறோம். போடா பட்டர்…” அவளது அசட்டைப் பேச்சும் ஆட்டிடியூட்டும் அவனது ஈகோவை வெகுவாய் தீண்டியது.
“யார்கிட்ட சண்டை இழுக்குறாளோ தெரியலையே” எனப் பதறி வெளியில் வந்த ரிஷான், அங்கும் கேரளத்துக்காரனைக் கண்டு நொந்தான்.
“என்னடி பிரச்சினை? நீ வா முதல்ல” என அவள் கையைப் பிடித்து இழுத்துச் செல்ல, திரும்பி அந்த ஆறடி ஆடவனை தீயாக முறைத்து விட்டே நகர்ந்தாள்.
வாய்க்குள்ளேயே அர்ஜித்தை அர்ச்சித்துக் கொண்டிருந்தாள்.
நாசிக்குள் சுழற்றிய சந்தன அத்தரின் மணம் வேறு கோபத்தைக் கிளறியது.
“அத்தருக்குள்ள முங்கி எந்திரிச்சுப்பான் போல… ச்சை!” தனக்குளேயே புலம்பியவளிடம்,
“அகா… அவனை விடு. நம்ம நல்ல மூட்ல ஆர்டர் குடுக்க வந்துருக்கோம் ப்ளீஸ்” என ரிஷான் கெஞ்சலாகக் கேட்க, அவளும் மூச்சை இழுத்து விட்டு மனதை ஒருநிலைப்படுத்த முயன்றாள்.
கை கழுவி விட்டு சஹானாவின் எதிரில் அமர்ந்த அர்ஜித்தின் முகம் மென்மையைத் தொலைத்திருந்தது.
சிடுசிடுவென தன் முன் இருந்தவனை விசித்திரமாக பார்த்த சஹானா “ஆர் யூ ஆல்ரைட்?” என வினவ, “ம்ம்” எனத் தலையாட்டியவன் முன்னே இருந்த சாண்ட்விச்சை பிரியமே இல்லாமல் உண்டான்.
இவர்கள் வலது பக்கம் அமர்ந்திருக்க, இரு டேபிள்கள் தள்ளி இடது பக்கமாக அமர்ந்திருந்தனர் ரிஷானும் அகமொழியும். லேசாய் பார்வையைத் திருப்பினாலும் அர்ஜித்தும் அகமொழியும் சந்தித்துக் கொள்ள இயலும்.
பெரியதாக கூட்டமும் இல்லாததால், அவர்கள் பேசுவது மெலிதாக வெளியில் கேட்கவும் செய்தது.
சர்வர் வந்தவர், “எங்கேஜ்மெண்ட் எப்போ சாரே… உங்களுக்கு எந்த டைம்ல டெலிவரி பண்ணனும்” என விவரம் கேட்க, ரிஷான் தான் விவரம் கூறிக்கொண்டிருந்தான்.
அர்ஜித் பார்வையைத் திருப்பி அகமொழியைக் காரமாக நோக்க, அவளும் உள்ளுணர்வு உந்த அவன் புறம் கண்ணைத் திருப்பி முறைத்திருந்தாள்.
சஹானாவும், “அவங்களுக்கும் சண்டே எங்கேஜ்மெண்ட் போலே அர்ஜித்…” எனக் கூற, மீண்டும் அவன் பார்வை அவளைத் தொட்டு மீண்டது.
ரிஷான் பேசும்போது அவனைப் பார்த்தாலும் அகமொழியின் பார்வையும் முறைப்பதற்கென்றே அர்ஜித்தின் புறமும் தீண்டிச் செல்ல, இருவரும் விழிகளிலேயே நெருப்பை வழிய விட்டனர்.
இரவு பத்து மணி அளவில் தான் வீட்டை அடைந்தான் அர்ஜித் அகன்.
அனைவரும் அவரவர் அறையில் அடைந்திருக்க, அடுக்களையில் பாத்திரம் உருட்டும் சத்தம் கேட்டது.
அதில் அடுக்களையை எட்டிப் பார்த்தான்.
அங்கு சுஜாதா தான், சிங்கில் பாத்திரங்களை அள்ளிப் போட்டுக் கொண்டிருந்தார்.
“ம்மா… இன்னும் தூங்காம எந்தா செய்யூன்னே? வேலைக்கு ஆள் வரலையா?” எனப் பாத்திரத்தைப் பார்த்து கேட்டான்.
“ஆமா அர்ஜி. சாயந்தரம் வர்ற ஆள் இன்னைக்கு திடீர்னு லீவ் பரஞ்ஞா. அதெங்ஙனே வச்சிட்டு போய் கிடக்கவும் மனசு இல்ல… நினக்கு சாப்பாடு எடுத்து வைக்கட்டா?”
“ப்ச், ஞான் கழிச்சூ…” என்றவன் தனது மடிக்கணினி பையை நாற்காலியின் மீது வைத்து விட்டு, “நீங்க தள்ளுங்க “என்று ஏப்ரானை மாட்டினான்.
“நீ போய் ரெஸ்ட் எடு அர்ஜி. ஞான் நோக்கிக்கொள்ளாம்…” சுஜாதா மறுத்தாலும், அவன் கேட்கவில்லை.
“வேலைக்கு ஆள் வன்னில்லெங்கில் எனிக்கு பரயாம்ல. ரிசார்ட்டில் இருந்து ஆள் அனுப்பிச்சிருப்பேனே. நீங்கள் வேலையை இழுத்துப் போட்டு செய்யாதீங்கன்னு எத்தனை முறை பரயறது?” எனக் கடிந்து கொண்டான்.
“சரீரம் நன்னாருக்குற வரை உழைக்காம் தப்பில்ல மோனே” சிரித்த சுஜாதாவிடம் போலிக்கோபம் காட்டியவனிடம்,
“அன்வி வன்னு நோக்கிக்கொள்ளாம்னு தான் பரஞ்ஞா. பாவம் ஆ வாலுகுட்டியை வச்சு மேய்க்குறதே அவளுக்கு பெரிய காரியம். இன்னும் தூங்காம அவளை டார்ச்சர் செய்துட்டு இருக்கா. ராத்திரி நேரம் அவளுக்கு தண்ணியில் கை வச்சா தலைவேதனயும் வந்துடும்…” எனத் தானாகவே விளக்கம் கொடுத்தார்.
“அமையா ஏடத்தியை ரொம்ப தான் டார்ச்சர் செய்யூன்னா. இத்தனை பேர் இருந்தும் அவள் ஒருத்தியை சமாளிக்க முடியலையே…” எனக் கிண்டல் செய்தபடி பாத்திரங்களைத் துலக்கினான்.
தினமும் முடியவில்லை என்றாலும், நேரம் கடந்தும் சுஜாதா வேலை செய்து கொண்டிருந்தால் அவனும் உதவிக்கு வந்து விடுவான்.
அன்விதாவையோ அனகாவையோ ஏன் உதவி செய்யவில்லை என்று ஒருநாளும் அவன் கேட்டதில்லை. என்ன தான் வீட்டைச் சுத்தம் செய்யவும் சமையலுக்கு உதவவும் ஆள்கள் இருந்தாலும் எந்நேரமும் வேலை இருந்து கொண்டே தான் இருக்கும்.
ஒவ்வொரு வேளையும் ஒவ்வொருத்தருக்கும் வித விதமான சமையல் அங்கு எப்போதுமே வழக்கம்.
ஒரே வேளைக்கு நான்கைந்து வகை உணவுகள் தயாராக இருக்கும். சுஜாதாவின் கைப்பக்குவம் மட்டுமே அமையா வரைக்கும் எடுபடும்.
அன்விதாவும் சமையலுக்கும் மற்றவைக்கும் உதவி செய்தாலும் கூட, வேலைப்பளு எப்போதும் குறைந்ததில்லை. சுஜாதாவிற்குமே அது பிடிக்கும் தான். சுறுசுறுவென வேலை பார்த்துக்கொண்டே இருந்தால் தான், மனம் எதிலும் சலிப்படையாது என்பார்.
வீட்டை நிர்வகிப்பதில் அலாதி பிரியம் அவருக்கு.
அன்விதாவிற்கு காலைப்பொழுதில் மகளை சமாளித்து பள்ளிக்கு அனுப்புவதே பெரிய சவால் தான். அதனால் காலை உணவு முழுக்க சுஜாதா தான் பார்த்துக்கொள்வார். மதியத்திற்கு அன்விதாவும் உதவி விட்டு மற்ற வேலைகளை முடிக்கும் போது, அமையா பள்ளியில் இருந்து வந்து விடுவாள். பின் இரவு வரைக்கும் அவள் பின்னே ஓடுவதில் தான் அவளுக்கு நேரமிருக்கும்.
அப்படியே அன்விதா வேலை பார்க்கவில்லை என்றாலும் கூட அவளைக் கடிந்து கொள்ளும் மாமியாரல்ல அவர். அனகா சற்றே பெரியவள் ஆகும் வரைக்கும் கூட, கல்யாணி தான் வீட்டுப் பொறுப்பை பார்த்துக்கொண்டு பேரப்பசங்களையும் வளர்த்து ஆளாக்கினார். அவரும் மருமகளைக் கண் போல பார்த்துக்கொண்டவர்.
பின் முதுமை காரணமாக வீட்டு வேலையில் இருந்து அவரை வலுக்கட்டாயமாக ஓய்வெடுக்க வைத்தே சுஜாதா குடும்ப பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
தனது மகனை ஓரக்கண்ணில் பார்த்த சுஜாதா, “சஹானாவுக்கு சமைக்க அறியாமல்லோ…” என வினவ,
“அத நீங்ங அவளோடு தான் சோதிக்கணம்…” என்றான் புருவம் உயர்த்தி.
“இன்னைக்கு நீ அவளை மீட் செய்த தான?”
“ம்ம்…” தலையாட்டியவனிடம், “இதெல்லாம் சோதிச்சதில்லையா?” என்றார்.
“இதென்ன சமைக்க அறியாமோன்னு சோதிக்கிறது கல்யாணத்துக்கான குவாலிபிகேஷனா?” எனக் கேலி புன்னகை புரிய, அதில் அவரும் சிரித்தார்.
“பையன்னா என்ன வேலை நோக்கான் எவ்ளோ சம்பாதிக்கிறான்னு சோதிக்கிறதும், பெண்ணுன்னா வீட்டு வேலை அறியாமோன்னு சோதிக்கிறதும் காலங்காலமா டீபால்ட் குவெஸ்ட்டின் தான் கண்ணா…”
“ஹ்ம்ம் இப்பலாம் அப்படி இல்லமா. பர்ஸ்ட் மீட்டிங்லேயே பர்ஸ்ட் நைட்டு கல்யாணத்துக்கு முன்னடியா பின்னாடியான்னு டிசைட் பண்ற அளவு உலகம் வேகமா சுத்துன்னு. இப்போ போய் ஞான் இவ்ளோ போரிங் குவெஸ்ட்டின் சோதிச்சா, ஆ பெண்ணு ஓடிப்போம்” எனக் கண்சிமிட்டியதில் “டா எந்தா பரயூன்னே?” சுஜாதா அவன் தோள்பட்டையில் அடித்தார்.
அவரைக் கண்டு நமுட்டு நகை புரிந்தவனிடம், “அவளை நினக்கு இஷ்டப்பட்டூ தான? எங்ஙனே பரயுன்னு? நீ ஏதோ ஃபேக் ஃபெமினிசம் பரயருதுன்னு பரஞ்ஞல்லோ. ஆனா அர்ஜி ஆ பெண்ணு அவளூடே அப்பா பிசினஸை தான் நோக்கிக்கிட்டு இருக்காளாம். கல்யாணத்துக்கு அப்புறமும் அவள் அதை நோக்கிக்கொள்ளணம்னு பரஞ்ஞா, நினக்கு ஓகே தான? நின்னோடு பரஞ்ஞாளா அதை பத்தி?” என பிசினஸ் பற்றி பேசியதும் அவனது சிந்தனை தானாய் அப்பெயர் தெரியா காந்தாரியின் பின்னே சென்றது.
“இவர் பெரிய மன்மதரு… யூ ஃபக்கிங் இடியட்…”
“அடுத்தவங்க பிசினஸை இப்படி தான் கெடுப்பீங்களா?”
அவளது பேச்சுகளே காதில் கேட்டு எரிச்சல் கொடுக்க, “பரயறதெல்லாம் பேட் வர்ட்ஸ் தான். பெமினிசம்ல ஊறிப்போனவளா தான் இருப்பா…” என்றவனைத் திகைத்துப் பார்த்தார் சுஜாதா.
“கண்ணா எந்தா பரயூன்னே?”
சட்டென நிகழ்விற்கு வந்தவன், “ஞான் சஹானாவை பரஞ்ஞதில்லமா… ரெண்டு பேரும் கேரியர் பத்தி பேசியாச்சு. ப்ராப்ளம் இல்ல…” என்று வேகமாய் சமாளித்தான்.
அதில் தான் அவருக்கு நிம்மதி மூச்சு எழுந்தது.
அவன் வேலையை முடித்து விட்டு, “நீங்க போய் தூங்குங்க…” என்றிட,
“கண்ணா கண்ணா… நினக்கு வேலை அதிகம்னு அறியாம் இருந்தாலும் ஒரு விஷ்” எனக் கண்ணை சுருக்கி கேட்ட சுஜாதாவைப் புருவம் உயர்த்தி என்னவென பார்த்தான்.
“
எங்கேஜ்மெண்ட் ரிங்க் மட்டும் நீ வன்னு செலக்ட் செய்தா நன்னாருக்கும். பெண்ணு பார்க்கவும் நீ வரல. நீயும் வன்னா, பெண்ணு வீட்டில கொஞ்சம் நிம்மதியாவாங்க. ப்ளீஸ்…” என்றதில் புன்னகைத்தவன் “செரி வராம்… நாளைக்கு ஈவ்னிங் போகலாமா?” எனக் கேட்க,
“மார்னிங் டைம் போகலாமே கண்ணா” என்றார் கெஞ்சலாக.
“எந்தா நல்ல நேரம் ஏதேனும் நோக்கணுமோ?”
“அது அல்ல அர்ஜி. அமையா ஸ்கூலுக்கு போய்டுவா. ஆ நேரத்துல போனா அன்விக்கும் ரிலாக்ஸா ஷாப்பிங் செய்யாமல்லோ அதினு தான்… இல்லெங்கில் கடை முழுக்க ஓடிட்டே இருப்பா…” மருமகளுக்காக யோசித்துக் கூறிய சுஜாதாவைக் கண்டு புன்னகையை பெரிதாக்கியவன், “செரிம்மா போகலாம்” என்று அவர் கன்னத்தில் முத்தம் கொடுத்து விட்டு சென்றவனை ரசித்தது தாயுள்ளம்.
மறுநாள் மீண்டும் அந்தக் காந்தாரியின் கண்ணில் விழுந்து கட்டுப்படைய போகும் விதியின் விளையாட்டை அறியாது உறங்கிப்போனான் அர்ஜித் அகன்!
அகன் வசமாவாள்!
மேகா
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
18
+1
1
+1

