Loading

எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல், ஸ்வாதி அமைதியாக இருக்க, “பேசணும் னு சொல்லிட்டு இப்படியே இருந்தா என்ன அர்த்தம்.. ஸ்வாதி”, என்று தியா கேட்டவுடன், பேசியே ஆக வேண்டும் என்று முடிவெடுத்தவள்,

“அது.. இன்னும் எவ்ளோ நாள் தியா இப்படியே இருக்கா போற..என்றவள் ஏதோ பதில் கூற வந்த தியாவை இடை மறித்து, “நா முழுசா சொல்லிட்றேன் அப்றம் பதில் சொல்லு,.. எனக்கு சுத்தமா புரியல தியா.. நீ என் இப்பிடி பண்றனு.. சூர்யா அண்ணாக்கு தண்டனை குடுக்கறதா நினச்சு நீ உன்னையும் சேர்த்து தான் கஷ்ட படுத்திக்கற.. நீ இல்ல சொன்னாலும் அது தான் தியா உண்மை எனக்கு நல்ல தெரியும்…

என்னவா வேணுன்னாலும் இருக்கட்டும்.. ஆன நீ ஏன் தியா உன் மனசு மாத்த  முயற்சி பண்ண மாட்டற.. தியா இது உங்க ரெண்டு பேரோட வாழக்கை.. நீ இந்த மாதிரி இருக்கிறதால என்ன ஆக போகுது.. உங்க ரெண்டு பேற நினச்சு ஜெய் ரொம்ப கவலை படராறு தான் .. ஆனா நான் ஜெய்க்காகப் பேசறேன் நீ நினைக்க வேணாம்.. எனக்கு உன் மேலயும் அக்கறை இருக்கு தியா.. உன்ன நினைச்சா எனக்கு பயமா இருக்கு.. நீ இப்படியே இருக்க போறியோன்னு கவலையா இருக்கு..”, என்று கூறி தியாவின் முகத்தை பார்க்க அவள் அமைதியாக இருந்தாள்.

“இவ சொல்லிலாம் கேட்கணும்மான்னு நினைச்சா இதெல்லாம் நீ மறந்ததுரு.. இல்ல என்ன உன்னோட தோழிய நினைச்சா நீ யோசி கொஞ்சம்..”, என்று தன் உரையை முடித்து கொண்டாள், தியாவை பார்க்க,

“போலாம்”, என்று மட்டும் கூறி விட்டு அவள் முன்னே செல்ல அவள் பின் சென்றாள் ஸ்வாதி. தியா அலுவலகம் சென்று விட, ஸ்வாதியும் இல்லம் திரும்பினாள்.
வெளியில் சென்று வருபவளை பார்த்த ஜெய்,

“தியாமா.. எங்க போய்ட்டு வர்ற.. இந்த டைம்ல..”, என்று ஜெய் கேட்க, “சும்மா தா ஜெய்.. ஸ்வாதி வந்தா அதான் அவள பார்த்துட்டு வறேன்”,..என்று சொல்லி விட்டு அவள் சென்று விட,

“ஸ்வா வந்தால.. என்கிட்ட சொல்லாம வந்துருக்கா.. என்னவா இருக்கும், என்று போனை பார்க்க, அவளிடம் இருந்து எந்த அழைப்பும் வர வில்லை. குறுஞ்செய்தி கூட வர வில்லை.

சற்று நேரம் யோசித்தவன், “சரி எதுவா இருந்தாலும் அவளே ஈவினிங் சொல்லுவா..”, என்று தன் வேலைகளை பார்க்க சென்றான்.

சூர்யாவின் அலுவலகத்தில், வேலையை பார்க்காமல், விட்டத்தை வெறித்து கொண்டு இருந்த சாயின் தலையில் சுள்ளென்று வலிக்க, தலையை தேய்த்துக் கொண்டு தலையை தாழ்த்திப் பார்த்தான்.

சூர்யா தான் அவன் அருகில் நின்று கொண்டு இருக்க, “எதுக்கு இப்போ அடிச்ச..”, என்று அவனை முறைத்து கொண்டே கேட்க, “வொர்க்கிங் ஹவர்ஸ் வேலைய பார்க்காம.. இப்டி பாராக் பாத்துட்டு இருக்க..”, என்று தானும் முறைக்க,

“அது ஒன்னும் இல்ல.. வாழ்க்கைய பத்தி திங்க பண்ணிட்டு இருக்கேன்..”, என்று அவன் சொல்ல, “ஓ.. ரிதுவ பத்தியா..”, என்று சூர்யா நக்கலாக கேட்க, “அவள பத்திலாம் இல்லையே..”, என்று சமாளிக்க முயன்றவன், அது முடியாமல் இறுதியில் ஒப்புக்கொண்டான்.

“சரி.. நான் வேணுன்னா ரிதுவ கரெக்ட் பண்ண நல்ல ஐடியா ஏதாவது தரவா..”, என்று சூர்யா ரகசியமாக கேட்க, அவனை ஒருமாறியாக பார்த்த சாய்,

“தம்பி.. நீங்க ரிதுக்கு அண்ணன்.. அது நியபகம் இருக்கா”,.. என்று கேட்டவன் அவன் பதில் கூறும் முன், “அப்றம்..உன்கிட்ட நல்ல ஐடியா இருந்தா. அத யூஸ் பண்ணி மொதல்ல உன் பொண்டாடியா கரேக்ட் பான்னு.. அப்றம் உன்னோட சிசியனாவே நான் மறிட்றேன்.. என்ன “, என்று சூர்யாவின் முகம் பார்க்க, பாறையாக இறுகி இருந்தது.

அதில் இருப்பது என்ன என்று புரிந்து கொள்ள சாயால் முடிய வில்லை. சாய்யை ஒரு ஆழ்ந்த பார்வை பார்க்க, அவனோ முகத்தை, பாவம் போல வைத்து கொண்டான். எதுவும் பேசமால் உள்ளே சென்று விட்டான் சூர்யா..

நேரம் அதன் வேலையை சிவனே என்று செய்ய மாலையும் வந்தது. வீடு திரும்பிய ஜெய், ஸ்வாதி தன்னிடம் இன்று தியாவை பார்த்ததை பற்றி கூறுவாள் என்று அவன் காத்து கொண்டு இருக்க, நேரம் சென்றே தவிர அவள் எதுவும் சொல்ல வில்லை. இவ்வளவு ஏன் அங்கு வந்ததை கூட அவள் கூறவில்லை.

அவள் தன்னிடம் கூற வேண்டும் என்று தன் மனம் ஏன் அடித்து கொள்கிறது என்று மட்டும் அவனுக்கு தெரியவில்லை.

பொறுத்து பொறுத்து பார்த்தான், ஆனால் அவள் சொன்ன பாடில்லை. இரவு உணவு உண்ண அவன் வராமல் இருக்க, என்ன என்று பாரத்து அவனை அழைத்து வர சொன்ன ஜானகியின் கட்டளைக்கு இணங்க அவனை அழைக்க சென்றாள், ஸ்வாதி.

அவனை தேட, கட்டிலில் கண்ணை மூடி சாய்ந்து இருந்தான், என்னவாக இருக்கும் என்று புரியாமல், அவன் அருகில் சென்றவள், அவன் தோளை தொட இமைகளை திறந்து அவளை பார்த்தான், இல்லை முறைத்தான், ஆனால் அதற்கு அர்த்தம் புரியாமல் விழித்து கொண்டு இருந்தாள் ஸ்வாதி.

அங்கு ஒருவனோ, தியாவையும் சூர்யாவையும் எப்படி பழி வாங்குவது என்று பலவாறு சிந்தித்து ஒரு திட்டத்தை வகுத்தான்.

அதை தன் தோழனிடம் சொல்ல, கேட்க வினய்யோ ஒரு நொடி ஆடித்தான் போனான்.

தனது திட்டத்தை விளக்கிக் கூறிய நரேன், வினய்யைப் பார்க்க, அவனோ தனது முகத்தில் அதிர்வு அப்பட்டமாக தெரியும் அளவிற்கு தனது நண்பனை நோக்கினான்.

“டேய்.. இதெல்லாம் வேணாம் டா. என்ன கேட்டா நா எதுவுமே பண்ண வேண்டாம்.. நம்மலோட வழிய பாத்துட்டு போலாம் னு தான் சொல்லுவேன் நீ ஆன அத கேட்க மாட்டா.. சோ.. உன்னோட மன அமைதியாகவும் மன நிமதிக்காகவும் தான் நான் சரின்னு சொன்னேன்.. இது உனக்கே தெரியும்..

அப்டி இருக்கும் போது நீ இப்டி ஒரு பிளான் சொன்ன நா சரின்னு சொல்லுவேன் னு நீ நம்பறையா?”, என்று கேள்வியாக நரேனை நோக்கினான் வினய்.

அவனை பார்த்து அசட்டு சிரிப்பை உதிர்த்தவன், “நான் உன்கிட்ட அனுமதி கேட்கல.. அப்றம் இதுல உன்னோட உதவி இல்லாமலே நான் நினைச்சத என்னால செய்ய முடியும்.. உன்னால எனக்கு எதிராவும் எதுவும் செய்ய முடியாது.. அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு… சோ இதுக்கு மேல உன்னோட முடிவ நீ தான் சொல்லனும்.” என்று பொறுமையாக வினய் தலையில் இடியை இறக்கிவிட்டு அவனை பார்த்த படி எதிரில் நிற்க,

அவன் சொன்ன வார்த்தைகளை மீண்டும் நினைத்து பார்த்தவன், அவனை தன்னால் தடுக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்டான்.

“சரி டா.. எல்லாம் சரி.. ஆனா எவ்ளோ பெரிய விஷயம் எதுக்கு? வேற ஏதாவது பண்ணலாம். பிலீஸ்”, என்று கெஞ்சுவது போல கேட்க,

“நா என்ன அவள கொல்லவா போறேன்.. எல்லாம் சும்மா தான.. அதுலயே அவன் துடிப்பான்.. எனக்கு அது போதும்”,  என்று தான் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்பது போல நரேன் சொல்லிவிட,

தான் உடன் இருத்தாளவது எதையாவது செய்யலாம் என்று நினைத்த வினய்., “சரி.. உன்கூட நான் இருக்கேன்.. ஆன ஒரு விஷயம் சொல்லு.. கண்டிப்பா இதை பண்ணிதான் ஆகனுமா இது வரைக்கும் நீ அவங்களுக்கு பண்ணுனது பத்தலையா.. கொஞ்சம் யோசி டா.. தியா பாவம் தான?”, என்று கேட்ட,

“ஆமா இவ்ளோ பெருசா பண்ணித் தான் ஆகணும்.. ஒரு வேளை அவங்க நான் நினைச்ச மாதிரி சண்ட போட்டுட்டு இருந்தா நா ஒரு பக்கம் பத்தவச்சு அவங்கள பிரிச்சுருப்பேன். ஆனா அவங்க தான் பெவிகால் போட்டு ஒட்டுன மாதிரி இருக்காங்க னு நீ தானா டா சொன்ன.. அதுக்கு தான் இந்த மாதிரி பிளான் பண்ணேன்…

என்ன சொன்ன அவ.. அந்த தியா… இல்ல இல்ல தியாரதித்தி பாவமா.. நா யோசிக்கணுமா.. அவ அன்னைக்கு யோசிச்சால… இல்ல அந்த சூர்யா தான்.. நா சொன்னதை காது குடுத்து கேட்டனா.. இல்லையே.. நான் அன்னைக்கு எவ்ளோ அசிங்க பட்டேன்.. இப்போ வரைக்கும் மறக்க முடியல… வினய்”, என்று கத்தியவன், அருகில் இருந்த பூச்சட்டியை தூக்கி எதிரில் இருந்த கண்ணாடி மேல் எறிந்தான்.. அது சுக்கு நூறு ஆகியது..

அதை பார்த்தவன், “இந்த மாதிரி ஆகணும் அவங்க வாழ்க்கை… இந்த மாதிரி…”, என்று உறுமி விட்டு அங்கிருந்து சென்றான்..

இரவு வேலை மணி ஒன்பதை தாண்டி இருந்தது.  வழக்கம் போல வேலைகளை முடித்த, தியா மணியை பார்க்க, அப்போதுதான் இன்னும் சூர்யா வரவில்லை என்று நினைவு வந்தது.

இதுவரை அவன் இப்படி செய்தது இல்லை. இருவரும் ஒன்றாக வருவது இல்லை என்றாலும்,  எப்போதும் எட்டு மணிக்கெல்லாம் வந்து விடுவான். இன்று இன்னும் அவனை காணவில்லை.

என்ன வென்று அவளும் கேட்க மாட்டாள், அவன் சொல்ல நினைத்தாலும் கேட்கவும் மாட்டாள். என்ன தான் செய்ய முடியுது.

ஏனோ இத்தனை நாள் வேண்டி விரும்பி ஏற்ற, தனிமை இன்று பயத்தை அளித்தது. அவள் நிலை அப்படி. ஜெய்யை அழைத்து சூர்யாவை பற்றி கேட்கலாம் தான், ஆனால் என்னவென்று கேட்பாள்,? ஒருவேளை சூர்யா அவன் அருகில் இருந்தால்?, அவனை பற்றி தான் விசாரிப்பதை அவன் அறிந்தால்?, என்று  பல கேள்விகள் மனதில் ஓட பதிலுக்கு வரவில்லை, பயம் தான் வந்தது.

முகத்தில் பயம் அப்பட்டமாக தெரிய தொடங்கியது, என்ன செய்வது யாரை அழைப்பது என்று புரியாமல், திவித்து கொண்டு இருந்தாள்.

அவளை இங்கு தவிக்க விட்டவனோ, அங்கு ஜெய்யிடம் போராடி கொண்டு இருந்தான். “டேய் ஜெய் இப்போ மட்டும் நான் வெளிய வந்தேன் மவனே இங்கேயே உனக்கு சமாதி கட்டிட்டு தான் இங்க இருந்து போவேன்.. ஒழுங்கா கதவை ஓப்பன் பன்னு டா பரதேசி..”, என்று கத்த,

அவனோ அங்கு அப்படி ஒருவன் இருப்பதை கூட கவனிக்கவில்லை, தனது போனில் கேம் விளையாடி கொண்டு இருந்தான்.  அதில் கடுப்பான சூர்யா, ஜன்னல் வழியாக ஒரு கோப்பை எடுத்து அவன் மீது குறிவைத்து விச அவன் நினைத்து போலவே அது ஜெய்யை பதம் பார்த்தது.

“ஏய்.. என்ன டா உன் பிரச்சனை..”, என்று நாற்காலியில் நன்றாக சாய்ந்து அமர்ந்து கொண்டு கேட்க, “கதவ திற டா வெளிய வந்து சொல்றேன்.. “, என்று சூர்யா சொல்ல,

“மாட்டேன்.. மச்சான்.. மன்னிச்சுரு காரணம் என்னனா.. 1. நீ வெளிய வந்த ஒடனே இங்க இருந்து உன் வீட்டுக்கு போயிருவ..
2. என்னோட எல்லாம் பிளானும் வீணா போய்டும்..
3. இது எல்லாத்துக்கும் மேல நீ என்ன அடிப்ப”, என்று கூறி முடிக்க,

இது தான் கடந்த ஒரு மணி நேரமாக நடந்து கொண்டு இருக்கிறது. எப்போதும் போல, ஜெய்யின் சூர்யா மற்றும் தியாவை சேர்த்து வைக்கும் புதிய திட்டம், தான் அனைத்தும்.

சூர்யாவிடம், “நீ இன்னைக்கு வீட்டுக்கு “கொஞ்சம் லேட்டா போவேன் என்று கேட்க அவனோ முடியாது என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிட ,

காலில் விழாத குறையாக கெஞ்ச ஆரம்பித்தான், இப்போது சூர்யா “ஏன்” என்ற கேள்வியை முன் வைக்க, “அப்படி கேளு மச்சான்.. நீ பக்கத்துலயே இருக்கிறதால தான் தியாக்கு எதுவமே புரிய மாட்டிக்குது… அதான் நீ இன்னைக்கு லேட்டா போ இல்லனா போகதா.. கண்டிப்பா உன்ன தியா தேடுவா.. உனக்கு போன் பண்ண கூட வாய்ப்பு இருக்கு..” என்று வாய்க்கு வந்ததை அள்ளி விட,

முதலில் சரி என்று தான் கூறினான், ஆனால் நேரம் போனதே தவிர தியாவிடம் இருந்து எந்த அழைப்பும் வர வில்லை.

“சரி டா உன் ஆசைக்கு இவ்ளோ நேரம் இங்க இருந்துட்டேன்.. நீ சொன்ன மாதிரி எதுவம் நடக்கல சோ நான் இப்போ கிளம்பறேன்”, என்று கூறிய சூர்யா ஜெய் தடுக்க தடுக்க கிளம்ப முயற்சிக்க,

வேறு வழியில்லாமல் சூர்யாவை அறையினுள் வைத்து பூட்டி விட்டான்., ஜெய்.

“ஜெய்.. உன்னோட விளையாட்டெல்லாம் போதும் டா.. ஒழுங்கா கதவ திற நான் இப்போவே போகணும்”, என்று இப்போது அழுத்தமாக சொல்ல,

“முடியாது முடியாது முடியவே முடியாது.. தியா என்ன தான் நினைச்சுட்டு இருக்கா.. அவ மனசுல இன்னைக்கு அவ கூப்பிடாம நீ போகவே கூடாது சொல்லிட்டேன்”, என்று தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பது போல் பிடிவதமாக சொல்லிவிட்டான்.

என்ன செய்வது என்று புரியாமல், குழம்பிப் போய் இருந்தான், சூர்யா.

சட்டென நினைவு வந்தவன், ஜெய்யை அழைப்பதில் பிரியோஜனம் இல்லை என்பதை உணர்ந்து, கதவை உடைக்க முயல, அதற்குள் ஜெய்யே கதவை திறந்தான்.

“என்ன டா நீ.. என்று ஏதோ பேச வந்தவன், சட்டென கன்னத்தில் கையை வைத்து அதிர்ந்து புரியாமல், சூர்யாவை பார்த்தான்.

சூரியாதான் தன்னை கோவத்தில் அறைந்துள்ளான் என்பதை உணர்வே சில நொடிகள் எடுத்தது ஜெய்க்கு.

“சூர்யா நான் சும்மா.. தியாவ பேச வைக்க தான் பண்ணேன்.. நீ என் இவ்ளோ கோவப் படர”, என்று குழப்பமாக, நோக்க..

அவனை எரிக்கும் பார்வை பார்த்தவன், “முட்டாள்.. தியாவுக்கு கெளித்தரோபோபியா இருக்குன்னு உனக்கு தெரியாதா?.. இவ்ளோ நேரம் என்ன பன்றாலோ?.என்று அவன் கத்திய பிறகுதான் ஜெயிக்கும் நினைவு வந்தது,

“டேய்.. நான் நான்.. மறந்தே போய்ட்டேன் டா. சாரி. “, என்று அவன் சொல்லி முடிக்கும் போதே அவனை முறைத்து விட்டு அங்கிருந்து கிளம்பி விட்டான், சூர்யா.

“டேய்.. இரு நானும் வறேன்”,.. என்று அவன் சூர்யாவின் பின் ஓட.. எங்கே அவன் சென்றே விட்டான், தனது காரை எடுத்து கொண்டு தானும் சூர்யாவின் இல்லம் நோக்கி கிளம்பினான், ஜெய்.

காற்றை விட வேகமாக பறந்து வீடு வந்து சேர்ந்தான் சூர்யா. கதவை தட்டி நேரத்தை வீணாக்காமல், தன்னிடம் இருந்த சாவியை கொண்டு வேகமாக திறந்து கொண்டு உள்ளே சென்றான்.

நான்கு நான்கு படிகளாக தாண்டி சென்றவன், அறைக்குள் சென்று பார்க்க அவன் இதயமே ஒரு முறை நின்றுதான் துடித்தது.

தியா தரையில் மயங்கி கிடந்தாள், அவள் அருகில் ஓடியவன், “ரதி.. ரதி.. என்ன பாரு.. கண்ணை திறந்து பாரு மா.. ரதி..”, என்று கத்த, அவளிடம் எந்த பதிலும் இல்லை.

நொடியும் தாமதிக்காது, தியாவை கையில் ஏந்தி கொண்டு வெளியில் ஓடி வர, சரியாக ஜெய்யும் வந்து சேர்ந்தான்.

நிலமையை புரிந்து கொண்டவன், முன்னால் ஓடி, கரை எடுக்க சூர்யாவும் தியாவுடன் காரின் பின்னால் ஏறினான்.
“சூர்யா.. சாரி டா.. நான் ஏதோ பண்ண போய் இப்டி அகிருச்சு”, என்று அவனை கண்ணாடியில் அவனை பார்த்து கொண்டே கேட்க,

“அமைதியா போ.. ஏதாவது பேசுன அப்றம் நா மனுஷனாவே இருக்க மாட்டேன்..”, என்று பல்லை கடித்து கொண்டு சொல்ல, அதன் பின் ஜெய் பேசவில்லை.

தியாவை பார்க்க சூர்யாவுக்கு தான் மனம் கனத்தது.. “என்னால உனக்கு எப்போவுமே கஷ்டம் தான.. இன்னும் உனக்கு என்னலாம் கஷ்டத்த குடுக்க நான் காத்திருக்கேனோ தெரியால ரதி.. “, என்று நினைத்து கொண்டவன் அவளையே பார்த்து கொண்டு இருக்க, முருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர்.

தியாவை மருத்துவமனைவில் அனுமதித்து விட்டு, வெளியே இருந்த கதிரையில் அமர்ந்து இருக்க, ஜெய்யின் தொலைபேசி சிணுங்க ஸ்வாதி தான் அழைத்திருந்தாள். அவன் இன்னும் வீடு திரும்பாமல் இருக்கவே அவனுக்கு போன் செய்திருந்தாள்.

அவளிடம் நடந்ததை கூற, அவனை திட்டி ப்ரியோஜனம் இல்லை என்று நினைத்தவள் மருத்துவமனைக்கு கிளம்பினாள்.

தியாவை சோதித்த மருத்துவரோ அறையில் இருந்து வெளியே வர,  அவர் அருகில் ஓடினான் சூர்யா.

அவர் என்ன சொல்ல போகிறார் என்று ஒரு பயம் கலந்த பதற்றதோடு அவரை பார்த்து கொண்டு இருந்தான் சூர்யா.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்