Loading

 மோதும் மேகங்கள்-20
      ஆதி அவன் நடிக்க வேண்டிய காட்சியை சிறப்பாக நடித்து முடித்து வர,இசை அவன் மேலே கடுப்பாகவே அமர்ந்திருந்தாள்.ஆதி அவளருகில் வந்து   வழக்கம் போல் தொண்டையை செரும,அவளோ அவனை கண்டுக் கொள்ளமால்,கால் மேல் கால் போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தாள்.இசையின் மீது ஏற்கனவே கோபமாக இருந்தவன் அவளது திமிறை கண்டவுடன் மேலும் கடுப்பாகி, “ஹேய் இம்சை”  என்றழைக்க அவளோ அப்போது தான் எனக்கென்ன வந்தது என்பதைப்போல் சாதரணமாக மெதுவாக ஆதியை நிமிர்ந்து பார்த்தாள்.

          நிமிர்ந்து அமைதியாக  ஒன்றும் பேசாமல் அவனை கண்டவாறே இசை அமர்ந்திருக்க ஆதியும் அவளையே ஏதும் பேசாமல் முறைத்துக் கொண்டே நின்று கொண்டிருந்தான். இவர்கள் இருவரும் ஏதும் பேசிக்கொள்ளாமல் கோபக்கனல் தீயை தங்களது கண்கள் மூலமாகவே பரிமாறிக் கொண்டு இருக்க,உதவியாளர் ஒருவர் வந்து “சார்..சாப்பாடு” என ஆதிக்கு மதிய நேரம் ஆனதை நினைவுறுத்த, “ஹா..வரேன்..நீங்க போங்க” என இசையை முறைத்துக் கொண்டே வழக்கம் போல் எவ்வித கோபத்தையும் உதவியாளரின் மீது  காட்டாமல் சாதரணமான தொனியில் கூறினான்.

      சரியாக அந்நேரம் இசைக்கு அழைப்பு வர,அதை ஏற்று காதில் வைத்தவள், “சொல்லு அபி” என கூற, வெளியே செல்ல போன ஆதியின் கால்கள் அங்கேயே நின்றன.

        மறுபுறும் கூறப்பட்டதை கேட்ட இசை ஏதோ ஒரு இடத்தை குறிப்பிட்டு கூறிவிட்டு,  “அங்க தான்  இருக்கு அபி .நீ எடுத்து சாப்பட்டுத்தே இரு.நா  இன்னும் அஞ்சு நிமிஷத்துல வந்து உங்க கூட ஜாய்ன் பண்ணிக்கிறேன்” எனக் கூற மறுபக்கத்தில் என்ன கூறப்பட்டதோ இசை அபியை இடைமறித்து, “வந்துரேன்..வந்துரேன்..கிளம்பிட்டேன் அபி..நீ போன வை..இதோ வந்துட்டேன்” என கூறிவிட்டு அபியிடம் பேசியதில் ஆதியை மறந்துவிட்டு அவனிடம் சொல்லாமல் வெளியே செல்ல எத்தனித்தாள்.

        தான் அனைவரும் மதிக்கும் பிரபலமான நடிகராக இருந்தும் கூட தன்னை மதிக்காமல் தனது அசிஸன்டான இசையே இப்படி நடந்து கொள்வது ஆதிக்கு கோபத்தை ஏற்படுத்தியது.முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் தன்னை விட துணை கதாபாத்திரத்தில் அபிக்கு முக்கியத்துவம் தரப்படுவதை ஆதி விரும்பவில்லை. தான் மாபெரும் நடிகன் என நிரூபிக்கும் விதமாக அதை தனது முகத்தில் வெளிக்காட்டாது,தன் தொண்டையை செருமி தனது கேசத்தை சரி செய்தவாறே இசையை அழைக்க, அவள் எங்கே அதையெல்லாம் கவனித்தால் அவள் நினைப்பு எல்லாம் அபியின் மேலே இருந்தது அபி தனக்காக காத்திருப்பானே என்று அவசர அவசரமாக கிளம்பினாள்.

இசையின் செயல்களில் மேலும் கடுப்பான ஆதி அவள் முன்னால் சென்று தன் கைகளை கட்டிக்கொண்டு அமைதியாக நின்றான். இதுவே ஆதியின் பழக்கம். அவனுக்கு கோபம் வந்தால் கூட பெரும்பாலும் எதிரில் இருப்பவர்களை திட்டவோ கத்தவோ மாட்டான். அவனின் கூர்மையான முறைப்பு பார்வையே அவனின் கோபத்தில் நிலையை அறிய போதுமானது.
இசை ஆதியை நோக்கி  “வழிவிடு நா போகனும்”  எனக் கூற ஆதியின் முறைப்பே பரிசாக அவளுக்கு கிடைத்தது. இசையே அவனை  விலக்கி விட்டு முன்னேறி செல்ல பார்க்க அவளால் அது முடியவில்லை ஆஜானுபாகுவாக அவன் தனது உடலை வைத்துக்கொண்டு ஒரு இன்ச் கூட நகராது அங்கேயே நின்று கொண்டிருந்தான். ஆதி இசையை முறையும் முறை என முறைத்துக் கொண்டிருக்க இசையும் அதை விடாமல் அவனை போலவே முறைத்துக் கொண்டிருந்தாள்.

“இதோ அஞ்சு நிமிஷத்துல வந்துர்றேன்” என கூறிவிட்டு அழைப்பை துண்டித்தவள் இன்னும் வராமல் இருக்கவே அபியே அவளைத் தேடி வந்துவிட்டான். அவன் வரும் வழியெல்லாம்  “யாரையாவது பார்த்தானா அப்படியே நின்னு பேசிட்டு இருப்பா. ஒருத்தன் நம்பல கூப்பிட்டானே. நாம அஞ்சு நிமிஷத்துல வரோம்னு சொல்லி இருக்கோமே. அவன் அவளுக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பானு ஏதாச்சும் இருக்கா அவளுக்கு. அப்புறம் வந்துட்டு  சாரி அபி வர கொஞ்சம் லேட் ஆயிடுச்சுனு குழந்தை மாதிரி சாரி கேட்பா” என கோபமாக ஆரம்பித்து இசையைப் பேசும் தொணியிலே பேசி சிரித்துக் கொண்டு வந்தான் அபி.
இசை கண்டவன் அவளிடம் நேராக வந்து,  “ஹேய் இசை. லஞ்ச் பிரேக் விட்டு எவ்ளோ நேரம் ஆச்சு? உனக்காக எவ்வளவு நேரம் வெயிட் பண்றது? நான் நினைச்ச மாதிரியே நீங்க நின்னுட்டு பேசிட்டு இருக்க. அங்க உனக்காக வெயிட் பண்றாங்களே கொஞ்சம் சீக்கிரம் வரலாம் அப்படினு ஏதாச்சு இருக்கா உனக்கு?” என அவனே அவளைத் திட்டி விட்டு பிறகு “சரி விடு பசிக்குது இசை.வா போய் சாப்பிடலாம்” என அவளது கையை பிடித்து அழைத்து சென்றான். பசி இருந்தால் பத்தும் மறந்துபோகும் என்பது போல அபி ஆதி அங்கே நிற்பதை மறந்து,அவனை காணாது இசையை மட்டும் அழைத்து சென்றான்.

இசையை முறைத்துக் கொண்டிருந்த ஆதி,அபி வந்து அவளை அழைத்து செல்லவும் இசையை முறைப்பதை விடுத்து அமைதியாகினான். அபி இசை என கையை பிடித்துக் கொண்டு அவளுடன் பேசியவாறே அவளை அழைத்துச்சென்று உணவருந்தினான்.

          சாராவை கோபத்தில் போகும்படியாக கூறிய ராகுல் பின்பு தான் உணர்ந்தான் தான் பேசியதை. “ச்ச்ச இப்படி பேசிட்டோமே. கொஞ்சம் பொறுமையா பேசியிருக்கலாம்” என தனக்குத்தானே பேசிக்கொண்டும் கவலைப்பட்டுக் கொண்டும் தனது அறையிலிருந்து வெளியே வந்து பார்த்தான்.
அங்கு சாரா இல்லாததால் வீடு முழுவதும் அவளை தேடி அலைந்தவனுக்கு கிடைத்தது என்னவோ ஏமாற்றமே. அங்கு வேலை செய்யும் குமுதாவிடும்  “அக்கா அது..” என கூறிய தயங்கியவன் பின்பு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “சாரா வந்து இருந்தாலே அவ எங்க?”  என கேட்டு முடித்தான்.
“தம்பி சாராம்மா  கிளம்பிட்டாங்களே. உங்கள பாக்கனும்னு உங்க ரூமுக்கு வந்து இருந்தாங்க. போன கொஞ்ச நேரத்திலே அவங்க வந்ததனால நான் கூட தம்பிய பாத்துட்டீங்களா அம்மான்னு கேட்டேன். அதுக்கு அவங்க ஒரு சிரிப்பு மட்டும் சிரிச்சிட்டு போய்ட்டாங்க தம்பி”  என தனக்கு தெரிந்தவற்றை அனைத்தையும் ஒப்புவித்தார் குமுதா.
“சரிங்க அக்கா”  எனக் கூறியவன் மேலே இருக்கும் தனது அறைக்கு செல்ல பிடிக்காமல் வெளியே சென்று விட்டான்.
வீட்டை விட்டு சோகமாக வெளியே வந்த ராகுல் கண்டது என்னமோ அவன் தேடி வந்த பொக்கிஷத்தை தான்.
சாரா அவன் வீட்டு தோட்டத்தில் இருக்கும் திண்ணையில் தான் அமைதியாக அமர்ந்திருந்தாள். அவளைக் கண்டதும் அடித்துப்பிடித்து ஓடிய ராகுல்  “சாரா..”  என்றழைக்க சாராவோ முகத்தை திருப்பிக் கொண்டாள். அவள் முன்னாள் மண்டியிட்டு ராகுல், “சாரா என்ன பாருடி” என அவளின் நாடியை பிடித்து திருப்பி கூற, ஏதோ மந்திரத்துக்கு கட்டுப்பட்டவள் போல் சாராவும் அமைதியாக அமர்ந்திருந்தாள். “சாரிடி.நீ நேத்து நா கூப்ட கூப்ட ஆதி பின்னாடியே போனியேனு எனக்கு கோவம் வந்துருச்சி.அதான் இன்னிக்கு அப்படி நடந்துக்கிட்டேன்” என அவன் கூறிக் கொண்டு இருக்கும் போதே ராகுலின் கன்னத்தில் தனது இரு கரங்களையும் வைத்து “நானும் சாரி.இனி இப்படி பண்ணாதே.எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு ப்ளீஸ்.இனி இப்படி பண்ணாதே” என கண்கள் கலங்க கேட்டுக் கொண்டவளை பார்த்து  வார்த்தையே வரவில்லை ராகுலிற்கு.தன் மேல் எவ்வளவு ப்ரியம் வைத்து இருந்தால் தன்னைத் தேடி வந்து தான் வெளியே செல்ல கூறியும் தனக்காக காத்து இருந்து இப்போது தன்னை ஒரு வார்த்தைகூட திட்டாமல் கெஞ்சுகிறாளே என நினைக்கும் போதே அவனுக்கு கண்கள் கலங்கிவிட்டது .’சரி’ என்றவாறு கண்கள் கலங்க தலையசைத்தவனை கண் எடுக்காமல் கண்டு கொண்டிருந்தாள் சாரா.

                 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்