Loading

அத்தியாயம்  5 ❤

மகளிர் விடுதி வந்து சேர்ந்த மஹிமா தனது உடைமைகளையும், இதர பொருட்களையும் அதற்கு தகுந்த இடங்களில் வைத்தாள்.

அப்போது அவளது தந்தை செல்பேசியில் அழைக்க  படபடப்புடன் அழைப்பை ஏற்றுப் பேச,அருகில் இருந்த தோழி ஶ்ரீதேவி இவளை ஆச்சர்யமாகப் பார்த்தாள்.

” ஹலோ அப்பா ! ‘

” ஹாஸ்டல் ரீச் ஆகிட்டா கால் பண்ணி சொல்ல மாட்டியா ? ”
அந்த விஷயத்தை மறந்து விட்டதால், பேச்சற்று இருக்க,

” என்னப் பேச்சைக் காணோம். ஹாஸ்டல் நல்லா கம்ஃபர்ட்டபிளாக இருக்கா ? “

” இருக்குப்பா ” மெல்லிய குரலில் பதிலளித்தாள்.

” சாப்பிட்டுத் தூங்கு. நாளைக்கு காலேஜ் போகும் போது கால் பண்ணு “

” அப்பா ! அம்மாகிட்ட… “

அவள் கேட்டு முடிப்பதற்குள் அங்கு அழைப்புத் துண்டிக்கப்பட்டு இருந்தது.

விழிகளில் நீருடன் செல்பேசியைப் பார்த்துக் கொண்டிருந்தவளின் தோளை ஶ்ரீயின் கைகள் ஆதரவாகப் பற்றியது.

” என்ன ஆச்சு ? “

” அம்மாவைப் பத்தி கேக்கலாம்னு நினைச்சா, அப்பா கட் பண்ணிட்டாரு “

” ஆக்சுவலா என்ன தான் உனக்குப் பிரச்சனை  ? அப்பா ஏன் இப்படி பண்றாரு  ? “

” அப்பா எப்பவும் இப்படித் தான்  ஸ்ரீ , யோசிக்காமல் வார்த்தையை விட்ருவாரு.அம்மாவுக்குப் பழகிப் போச்சு. ஆனால் எனக்கு தான் அப்பப்போ அவர் திட்டும் போது கஷ்டமா இருக்கும். அவரோட நேச்சர் – யே அதுதான். உண்மையை சொல்லனும்னா வீட்டை மிஸ் பண்றேன்னு சொல்றதை விட, நிம்மதியா இருக்கப் போறேன்னு தான் தோனுது ” என்றதும் ஶ்ரீ – க்கு அவளைப் பார்க்கப் பாவமாக இருந்தது.

அவள் மஹிமாவுடன் பதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்புப் படித்தவள் , அப்போது மஹிமா பள்ளியில் சுற்றுலா என்றாலும்  , நண்பர்களுடன் வெளியில் சென்று உணவருந்தலாம் என்று அழைத்தாலும் வர மாட்டாள்.

இந்த குணம் ஶ்ரீதேவிக்குப் பிடிக்காது.

பல முறை  அவளுக்கும், மஹிமாவிற்கும் இதனால் சண்டை வரும்.

அதன் உண்மையான காரணம் இப்போதல்லவா தெரிகிறது !

கண்ணீரைத் துடைத்துக் கொண்ட மஹிமா ,

” என் கதையை விடு. க்ளாஸ்ல எல்லாரும் நல்லா பேசறாங்களா  ? அப்பறம் ஸ்டாஃப்ஸ்  நல்லா பாடம் எடுக்குறாங்களா ? “

இயல்பு நிலைக்கு வந்தது போல் தன்னைக் காட்டிக் கொண்டாள் மஹிமா. .ஶ்ரீதேவியும் அதைப் புரிந்து கொண்டு கல்லூரியைப் பற்றிக் கூற ஆரம்பித்தாள்.

கார்த்திக் ” குமரா ! நாளைக்கு காலேஜ் இருக்கு. நீ பாட்டுக்கு தூங்கிறாத. அப்பறம் நான் முதுகுலயே மிதிச்சு அன்பா எழுப்புவேன் ” என்றான் மொபைலை ஆராய்ந்தவாறே.

தமிழ் அவனைக் கோபமாகப் பார்த்திட,

கார்த்திக் ” என்னடா ? “

“முதுகுல எட்டி மிதிச்சு எழுப்பறது அன்பா  ! “

கார்த்திக் ” ஆமாம்.என் நண்பன் மேல இந்த அன்பு கூட இருக்காதா என்ன  ? “

அவனைத் தமிழ் உதைக்க , அதை தடுத்தவாறு கார்த்திக் அவனுடைய தலை முடியைப் பிடித்து அடிக்க, அங்கு அவர்களுக்கு இடையே உலகப்போர் மூண்டு கொண்டிருந்தது.

    – தொடரும்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்