Loading

அத்தியாயம்  23 ❤

கார்த்திக்கை அதிர்ச்சியுடன் பார்த்த மஹிமாவிடம் ” மஹி ! வா.நாம கொஞ்ச நேரம் வெளியில் போய் டைம் ஸ்பெண்ட் பண்ணலாம் ” அவளது கையைப் பிடித்து அழைத்துச் சென்றான்.

மஹிமா மறுப்புத் தெரிவிக்கும் முன்னரே, கார்த்திக் அவளை அங்கிருந்து அழைத்துச் சென்றதைப் பார்த்த சிவரஞ்சனிக்குப் பொறாமைத் தீ கொழுந்து விட்டெறிந்தது.

இவனுக்கு நாம் மஹிமாவை அறிமுகம் செய்து வைத்திருக்கவே கூடாதோ ! என்று யோசிக்கலானாள்.

கார்த்திக்குடன் வெளியில் வந்த மஹிமாவிற்கு சுர்ரென்று வந்தது கோபம்.

“கார்த்திக் நீங்க அவங்க கிட்ட ஏன் அப்படி சொன்னிங்க ? நம்ம ரெண்டு பேரும் லவ்வர்ஸ் இல்லாதப்போ இப்படி சொல்லிட்டு வந்துட்டிங்களே ! இனிமே நான் காலேஜ்ல எப்படி நடமாடறது ? “

கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனவளைப் பார்த்து புன்னகைத்தவன், ” சும்மா சொன்னதை நிஜம் ஆக்கிடலாம் பேபி.ஐ லவ் யூ ! ” என்று சாதாரணமாக கூறியவனிடம் ,

“அது எப்படி எனக்கு விருப்பம் இல்லனு தெரிஞ்சும் தைரியமா ப்ரபோஸ் பண்றிங்க ? என்னோட சம்மதமே தேவை இல்ல போலயே ! நானும் பொறுத்துப் பொறுத்துப் போனா ஓவரா அட்வான்டேஜ் எடுத்துக்குறிங்க ?” என்று கேட்டவளிடம் தனது வெண்பற்கள் தெரிய சிரித்துக்கொண்டே ,

” அதுவா மஹி…! உன்னைப் பாத்ததும் எனக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு.அதான் சிவரஞ்சனி சொன்னப் பொய்யை உண்மையா ஆக்கிட்டேன் ” என்று கூறியவனை ஆத்திரத்துடன் பார்த்தவள்,

” அது பொய்யாவே இருக்கட்டும் விடுங்க. இனிமே இதைப் பத்தி எதுவும் சொல்லாதிங்க “

தனக்கு அவ்விடத்தில் நிற்கப் பிடிக்கவில்லை என்று அவனுக்குத் தெரிவிக்கும் வகையில் அவ்விடம் விட்டு வேகமாக நகர்ந்தாள்.

அதைப் பார்த்து ஏளனமாக உதட்டை வளைத்தவன் ” அழகு தான்.ஆனா உன் சொத்தும் என் கண்ணை மறைக்குதே ” கூறியவாறே மீண்டும் வகுப்பிற்குள் நுழைந்தான் கார்த்திக்.

அவனது இந்த நாடகம் பற்றி சிவரஞ்சனிக்கு எதுவும் தெரியாது, அதனால் உள்ளம் உலைக்களமாய்க் கொதித்துக் கொண்டு இருக்க அங்கு வந்து சேர்ந்த கார்த்திக்கையே வெறித்துப் பார்த்தாள்.

அதை சட்டை செய்யாதவன் போல,தனது இருக்கையில் அமர்ந்து கொண்டு அங்கு இருந்த தன் செல்பேசியில் கவனம் செலுத்தினான்.

இவன… ! என்று மட்டுமே கூற முடிந்தது அதுவும் மனதில் தான்.வெளியில் கூறினால் அவனது கோபாக்னியில் எரிந்து சாம்பலாகி விடுவாளே  !

இந்த சவாலை அவனிடம் கூறி அதற்கு சம்மதிக்க வைத்திருக்க கூடாதோ என்று மீண்டும் மீண்டும் மண்டை காய யோசித்துப் பார்த்தவள் அவனிடம் சென்று,

” கார்த்திக் ” என்று குழையலானாள்.

” என்ன சிவா ! இந்த சவால் வேணாம் நிறுத்திக்கலாம்னு சொல்ல தான வந்த ?” என்று நக்கலாக ஒலித்தது அவனது குரல்.

அதில் விழி விரித்து வியந்தவள் சடுதியில் முகத்தை மாற்றிக் கொண்டு

” ஆமாம் கார்த்திக்.இது இனிமே தொடரக் கூடாது. ” தீர்க்கமாகக் கூறியவளைப் பார்த்து வெடித்துச் சிரித்தான்.

அதில் , முகம் கோபக்கனலை எதிரொலிக்க ,

” கார்த்திக் ! நீ ரொம்ப ஓவரா போற ?” என்றவளது குரலில் அப்பட்டமான எரிச்சல் மற்றும் கோபம்.

ஆனால் அதைக் கண்ட கார்த்திக்கிற்கு தான் பயத்திற்கு பதில் சிரிப்பு வந்தது.

” ஏன் சிவா  ! நீ சேலஞ்ச் பண்ணும் போது இதைப் பத்தி யோசிக்கவே இல்லையா ? என்ன சொன்ன நான் ஓவராப் போறேனா ?  சேலஞ்ச் பண்ணிட்டு அதுல ஜெயிக்கப் போற நேரத்துல , இப்படிப் பண்றியே உனக்கே இது அநியாயமாத் தெரியல ?” என்றவனது விழிகள் அவளையேக் கூர்மையாகப் பார்த்தது.

“அது கார்த்திக்….! “

தடுமாறியவளை இன்னும் பார்வையில் ஏளனத்தை அதிகமாய் வைத்துக் கொண்டு,

” ஒருவேளை, நான் அவளை உண்மையிலயே லவ் பண்ணிடுவேனோனு பயப்பட்றியா என்ன ?” எனக் கேட்டு விட்டு அவளது பதிலிற்காக காத்திருந்தான்.

அவன் கூறியது உண்மை தானே ! ஏனெனில் , அவன் மஹிமாவைப் பார்க்கும் போதெல்லாம் கண்களில் தெரியும் ரசனையால் இவளுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கிறதே  !

ஆனால் அதை இவன் முன் காட்டிக் கொள்ளக் கூடாது என்று நினைத்தவள் “அப்படி இல்லை.அவளப் பாத்தா இன்னொசன்ட்டா இருக்கா ! அதான் வேணாம்னு சொல்றேன் ”
அவளது அந்த பதிலைக் கேட்டவன் இன்னும் இன்னும் சிரித்தான் கண்களில் நீர் துளிர்க்கும் வரை  !

“கார்த்திக் ! “
பல்லைக் கடித்தவளது வதனத்தைப் பார்த்து சிரிப்பைக் கட்டுப்படுத்தியவன் ,

” சிவா பேபி  ! நீ தானே அவள இதுல மாட்டி விட்ட. இனிமே அவளுக்கு எந்த சேதாரம் நடந்தாலும் அதுக்கு நீ தான் பொறுப்பு ” என்று கூறி கண்ணடித்து விட்டு அவ்விடம் விட்டு சென்றான்.

அதைக் கேட்டு விழிப் பிதுங்கி நின்ற சிவரஞ்சனி கார்த்திக்கை ஒரு தலையாய் காதலித்துக் கொண்டு இருக்கும் தன்னையே , இத்தனை உதாசீனம் செய்கிறானே எனக் கோபத்திலும் , வன்மையிலும் உள்ளம் துடிக்க நின்றிருந்தாள்.

மீண்டும் அவள் அருகில் வந்த கார்த்திக் “சிவா பேபி ! லெக்ச்சரர் வர்றாரு பாரு ”  நக்கலாக கூறியவனைக் கொலை செய்யும் ஆத்திரம் வந்தது அவளுக்கு.

எதுவும் கூற வழி இல்லாமல் தனது இடத்திற்கு சென்றமர்ந்தாள்.ஆனால் அவள் கார்த்திக்கை விடாது முறைத்துக் கொண்டு இருக்க இவன் அவளைக் கண்டு கொள்ளாமல் , நண்பர்களுடன் உரையாட ஆரம்பித்தான்.

அவ்வப் போது அவனது மனம் மஹிமாவை எப்படி வழிக்குக் கொண்டு வருவது எனத் திட்டம் வகுத்தது.

அத்திட்டம் அவனுக்கு மட்டுமே நன்மை பயக்கும்.மஹிமாவிற்கு அத்திட்டத்தில் நிச்சயம் நன்மை கிடைக்கப் போவதில்லை.

ஏனெனில் , அத்திட்டத்தில் மனக்காயமடையப் போவது மஹிமாவே தான்  !

கார்த்திக்கிடம் சண்டை பிடித்து விட்டு மஹிமா நேராக வந்தது காலேஜ் கேன்டினிற்கு.

அப்போது அவளது எதிரில் வந்து அமர்ந்தான் தீரஜ்.

” ஹாய் மஹிமா ” என்று மென்மையாய் சிரித்தான்.

அவனது அழைப்பில் நிமிர்ந்தவள் “ம் ஹாய் ” என்று மட்டும் கூறினாள்.

” என்னாச்சு ? டல்லாத் தெரியுறீங்க ?” என்று அக்கறையாக கேட்டான்.

அவனது அக்கறை அவளுக்கு அப்போது பிடிக்காத ஒன்றாக இருந்தது.ஏன் என்றால் அவன் கார்த்திக்கின் உற்றத் தோழர்களுள் ஒருவன்.

ஆனால் சில நேரங்களில் அவன் மட்டும் தனியேப் பிரிந்து வந்து கேன்டினிற்கு வந்து விடுவான்.

நண்பர்களுடன் சிறிது நேரத்திற்கு மட்டுமே உடன் இருந்து அளவளாவுவான்.

அதற்கு மேல் அவன் அங்கு இருந்தது கிடையாது.

இதை எல்லாம் ஏற்கனவே தெரிந்து வைத்திருந்த மஹிமாவிற்கு என்னதான் இருந்தாலும் அவன் கார்த்திக்கின் நண்பன் தானே அவனிடமும் சற்று ஜாக்கிரதையாக இருக்க எண்ணி ஒதுங்கியே இருப்பாள்.

ஹாய் , பாய் உடன் நிறுத்திக் கொள்வாள்.ஆனால் இப்போது சிவரஞ்சனி மற்றும் கார்த்திக் செய்த செயல்களில் எரிச்சல் அடைந்து இருந்தவள் இவனது இந்த ஹாய் மீண்டும் எரிச்சலைத்தான் வரவழைத்தது மஹிமாவிற்கு.

“ஹலோ மஹி….! ” என்று அவன் அழைத்ததும்

” ஆங்… ! என்று கூறியவள் ” ம் . சொல்லுங்கள் ” என்றாள் அசுவாரசியமாக.

அதைக் குறிப்பறிந்து கொண்டவன் மெல்லிய சிரிப்பை உதிர்த்து விட்டு ,

” ஏன் டல்லா இருக்கிங்கனு கேட்டேன் ?” என்று மறுபடியும் அதே கேள்வியை கேட்டான் தீரஜ்.

“கல்ச்சுரல்ஸ் – ல இருக்க காம்ப்படிஷன்ல பார்ட்டிசிபேட் பண்ணலாம்னு டிசைட் பண்ணி இருந்தேன்.அதைப்பத்தி தான் யோசிச்சுட்டு இருக்கேன்.வேற எதுவும் இல்லை ” என்று பட்டும் படாமல் கூறியவளைப் பார்த்து ,

” அப்படியா ! நீ எந்த போட்டியில் பார்ட்டிசிபேட் பண்றதாய் இருக்க ?” என்று வினவினான்.

உள்ளுக்குள் கோபத்தில் பொரிந்து கொண்டிருந்த மஹிமா வெளியில் ,
” சிங்கிங் தான் ” என்று பதிலளித்தாள்.

அவள் இவ்வாறு கத்தரித்துப் பேசுவதற்கு காரணம் அவளுக்கு தன்னுடன் பேசுவது பிடிக்கவில்லை என்பதைப் புரிந்து கொண்டவன் ,

” சூப்பர் சாய்ஸ் மஹிமா.நல்லா யோசிச்சு சூப்பர் பாட்டை செலக்ட் பண்ணி காம்ப்படிஷன்ல கலக்குங்கள் ”  உற்சாகமாக வாழ்த்துக் கூறியவன் ,

” இஃப் யூ டோன்ட் மைண்ட் . நான் ஒரு காஃபி ஆர்டர் பண்றேன் குடிச்சுட்டு இன்னும் ஃப்ரெஸ்ஸா யோசிங்க ” எனப் பரிவாய்ப் பேசியது மட்டும் இல்லாமல், இவளது சம்மதம் கிடைக்கும் முன்னரே சென்று கையில் காஃபியுடன் வந்தான் தீரஜ்.

அதை மறுக்க நினைத்தவளுக்கு தீரஜின் இந்தப் பரிவில் உள் நோக்கம் எதுவும் இருப்பது போல் தெரியவில்லை எனவே அதைப் புன்னகையுடன் பெற்றுக் கொண்டாள்.

அதற்கு ” தாங்க்ஸ் ஃபார் திஸ் காஃபி தீரஜ் ” என்று புன்னகை புரிந்தாள்.

” இட்ஸ் ஓகே மஹிமா.பாய் ” என்று நாசூக்காக விடைபெற்றுக் கொண்டான்.

அவன் அளித்த அப்பானத்தை குடித்துக் கொண்டு இருந்தவள் கார்த்திக்கைத் தன்னிடம் எந்த அளவிலும் நெருங்க விடக்கூடாது என்று முடிவெடுத்தாள் மஹிமா.

அவள் அதள்குப் பிறகு வகுப்பறைப் பக்கமே செல்லாது கேன்டின் , மரத்தடிப் பெஞ்ச் என்று நேரத்தை செலவிட்டாள்.

கடைசியாய் கல்லூரி முடியும் நேரத்தில் சிவரஞ்சனியிடம் வந்த கார்த்திக் வலுக்கட்டாயமாக வரவழைத்தப் புன்னகையுடன் ,

” சிவா  ! ரொம்ப நாளா பப் – க்குப் போகலாம்னு கேட்பியே.இன்னைக்குப் போகலாமா ?” என்றான் வசீகரப் புன்னகையுடன்.

காலையில் தான் தன்னை ஏளனமாகப் பார்த்தான் இப்போதே இவனதுப் பார்வையின் தன்மையே மாறி இருக்கிறதே…!

குழப்பத்தில் தலையைச் சொறிந்து கொண்டவளைப் பார்த்து ” என்ன சிவா ? வரலயா ?” என்று ஆச்சரியமாகக் கேட்டான்.

அவனது ஆச்சரியத்தில் கிண்டல் மட்டுமே இருந்தது. ஆனால் , அது சிவரஞ்சனிக்குப் புரியவில்லை.

அவளை மேலும் யோசிக்க விடாமல் “இந்த ஆஃபர் உனக்கு வேணாம் போலயே . அப்போ சரி விடு ” என்று திரும்பிச் செல்ல யத்தனித்தவனை தடுத்து நிறுத்தியது சிவரஞ்சனியின் குரல்.

“கொஞ்சம் பொறு கார்த்திக்.நான் வீட்டுக்குப் போய்ட்டு ஃப்ரஷ் ஆகிட்டு கரெக்டா ஏழு மணிக்கு வந்துடறேன் ” என்று அவன் கேட்டதற்கு சம்மதம் தெரிவித்தது போலான பதிலைக் கூறினாள்.

” ம் குட்… ! ஓகே சிவா ” என்று கூறியவன் அவளிடம் பாய் சொல்லி விட்டுச் சென்றான்.

கார்த்திக் எப்போதும் போல் அவளைப் பப்பிற்கு வரச் சொல்லுகிறான்.சேலஞ்ச் வேறு அவர்களது நட்பு வேறு அதனால் தான் அவளுக்கு மட்டும் பிரத்தியேக அழைப்பு விடுத்துள்ளான் என்று எண்ணி மகிழ்ச்சி அடைந்தாள் சிவரஞ்சனி.

ஏழு மணிக்கு பப்பிற்கு அதுவும் கார்த்திக்குடன் சென்று நேரம் செலவிடுவதற்காக தன்னை அழகாக அலங்கரித்துக் கொள்ள ஆயத்தம் ஆனாள் சிவரஞ்சனி.

– தொடரும்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்