Loading

அத்தியாயம்  25  ❤

கல்லூரி முதல்வரின் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் ,
” சார் ! அவங்க என்னை ட்ரிக்கர் செய்தாங்க.அதனால் தான் அப்படி நடந்துக்க வேண்டியதாகிடுச்சு “
தலை நிமிர்ந்து கூறியவனைப் பார்த்துக் கடுமையாக முறைத்தார்.

” நீ பண்ணி இருக்கறது ஹராஸ்மன்ட்- னு கம்ப்ளைய்ண்ட் வந்துருக்கு ” என்று எரிச்சலாகக் கூறினார்.

” சார் ! அதைப் பண்ண வச்சதே அவங்க தான். இதுக்கப்றம் , இதை நான் எப்படி உங்க கிட்ட எக்ஸ்ப்ளெய்ண் பண்றதுன்னு தெரியல ? மஹிமாவுக்கு என்னைப் பிடிக்காது, அது மட்டுமில்லாம என்னைப் பார்க்கும் போதெல்லாம் மொறைச்சுட்டே இருப்பாங்க.அவங்களுக்கு ஆக்ஸிடென்ட் ஆகாம காப்பாத்துனேன்.அதுக்குத் தாங்க்ஸ் கூட சொல்லாம, திட்டினாங்க.அதான் அப்படி நடந்துக்க வேண்டியதாகப் போச்சு சார் “

முடிந்தளவு தன் பக்கம் இருக்கும் நியாயத்தைப் பேசிப் பார்த்தான் கார்த்திக்.

அதைக் கேட்டாலும், முதல்வர் அவனைத் தண்டிக்காமல் விடப் போவதில்லை என்ற முடிவோடு இருந்தார் போலும்.

“உன்னை டென் டேஸ் சஸ்பெண்ட் பண்றேன்.உன் டிபார்ட்மெண்ட் ஹெச்.ஓ.டி கிட்டயும் , க்ளாஸ் இன்சார்ஜ் கிட்டயும் இன்ஃபார்ம் பண்ணிட்டு வீட்டுக்குக் கிளம்பு.பத்து நாட்கள் கழிச்சுத் தான், உன்னை நான்
கேம்பஸ் – குள்ள பார்க்கனும்.கெட் அவுட் ”  கூறிவிட்டு தன் வேலையில் கவனம் செலுத்தினார்.

பத்து நாட்கள் கல்லூரியில் இருந்து தன்னை நீக்கம் செய்தது கூட கார்த்திக்கைப் பாதிக்கவில்லை ! ஆனால் , இத்தனைக்கும் காரணமாக இருந்த மஹிமாவை இங்கே வரவழைக்கவும் இல்லை , அவளிடம் விசாரணையும் செய்யவில்லை ? அதை முதல்வரிடம் வினவினான்.

” மஹிமா தானே சார் கம்ப்ளெய்ண்ட் குடுத்தது ? அவங்க எங்க ? “

அவரிடமே குரலை உயர்த்திப் பேசியதால் , அவருக்கு எக்கச்சக்கமாய் கோபத்தை வரவழைத்தது.

அதனால் கல்லூரி முதல்வர் , ” சத்தமா பேசாதே கார்த்திக். கம்ப்ளைய்ண்ட் குடுத்தது மஹிமா கிடையாது. பட் யாருன்னு பேர் சொல்ல வேண்டாம்ன்னுக் கேட்டுக்கிட்டதால பேரைச் சொல்ல மாட்டேன். நீ சஸ்பென்ஷன் முடிஞ்சு, வந்து தாராளமாக படிக்கலாம்.மறுபடியும் இந்த மாதிரி பிரச்சனை பண்ணாத ”
அவனை எச்சரிக்கை செய்து அனுப்பினார்.

முதல்வரின் அறையிலிருந்து வெளியேறிய நண்பனின் முகம் வெளிறி இருப்பதைக் கண்ட தமிழ்க்குமரன் அவனிடம் வந்தான்.

” சஸ்பெண்ட் பண்ணிட்டாங்களாடா ? ” முகத்தை வைத்தே கண்டு கொண்டான் .

” ஆமாம் டா. நீ எப்படி இங்க வந்த ? “

” நீ இங்க வந்த பிறகு, எனக்கு க்ளாஸ்ல என்ன வேலைன்னு வந்துட்டேன். எத்தனை நாள் சஸ்பென்ஷன் ? “

” பத்து நாள்டா ” அவனது முகத்தைப் பார்த்து சோகமாய்க் கூறிய கார்த்திக்கைப் பரிவாகப் பார்த்தான் குமரன்.

” விடுடா.பத்து நாள் ஜாலியா இரு.எந்த ஹெல்ப் ஆக இருந்தாலும் நான் இருக்கேன் ” தைரியம் சொன்னான்.

” ம்ம் ! ப்ச் நான் தப்பே பண்ணலடா ! ட்ரிக்கர் பண்ணது மஹிமா.ஆனா என்னோட சஸ்பென்ஷனுக்கு ரீசன் அவ கிடையாது.வேற யாரோ ! “

அவனைப் பற்றி முதல்வரிடம் புகார் தெரிவித்தது மஹிமா இல்லையென்றால் வேறு யார் ? என யோசித்துப் பார்த்தான் கார்த்திக்.

” வேற யாரோவா ? மஹிமாவே ஒன்னும் சொல்லாதப்போ,இடையில் யாருடா அது க்ராஸ் டாக் ? ” குமரனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.

” அந்தப் பர்சனைத் தான் கண்டுபிடிக்கனும். ஆனா இப்போதைக்கு வேணாம். நான் சஸ்பென்ஷன் முடிஞ்சு வர்றேன்.அப்பறம் யாருன்னுத் தேடலாம். எனக்கு செம்ம மூட் அவுட் குமரா. நான் ரூமுக்குப் போறேன். நீ க்ளாஸூக்குப் போ. ஈவ்னிங் பார்ப்போம் “

அந்த இடத்தில் நின்றிருக்கப் பிடிக்காமல் , தமிழ்க்குமரனிடம் சொல்லி விட்டு , அவர்கள் தங்கி இருக்கும் அறையை நோக்கி நடந்தான்.

” யாருடா இதை செய்றிங்க ? ” நண்பனுக்காகப் புலம்பியவாறே , வகுப்பறைக்குச் சென்றான் குமரன்.

இவர்கள் தங்கியிருக்கும் அறைக்கு வந்த கார்த்திக் , உடையைக் கூட மாற்றத் தோன்றாமல் , சோபாவில் அமர்ந்து , அந்த  ஆள் யாரென்று ஓராயிரம் தரம் யோசித்துப் பார்த்தாலும் , சிந்தனையில் சிக்கவில்லை. கடுகளவு சந்தேகம் கூட எவர் மீதும் ஏற்படுத்தவும் இயலவில்லை அவனால்.

” மஹிமாவுக்கு என்மேல என்ன  கோபம் , வெறுப்புன்னுக் கூட தெரில ? முதல் நாள் பார்த்ததுல இருந்து இப்போ வரைக்குமே என்மேல அவளுக்கு நல்ல அபிப்பிராயமே இருந்ததில்லை. பொறுமையா கேட்டும் பார்த்தாச்சு , அதிரடியா கேட்டும் பார்த்தாச்சு. ஊஹூம் ! நோ ரெஸ்பான்ஸ் ! இந்த நிலையில் நான் என்ன பேசினாலுமே அவளுக்குத் தப்பா தான் தோன்றி இருக்கு.இதுல இன்னொரு ப்ராப்ளம் வேற ! மஹிமாவை ஒன் சைட் ஆக லவ் பண்ற யாரோ கூட என்மேல கம்ப்ளைண்ட் குடுத்து இருக்க வாய்ப்பு இருக்கு. அவளை ஃபாலோவ் பண்ணினா கண்டிப்பாக தெரிய வரும் “

பத்து நாட்களை எவ்வாறு கடந்து விடப் போகிறோம் என்ற பொருமலில் , சிக்கி இருந்த கார்த்திக்கின் இப்போது நினைவிலிருந்து தப்பி இருந்தாள் தீக்ஷிதா.

மஹிமா அவளிடம் நக்கலாகப் பேசிய பிறகு ,
பொறுக்க மாட்டாமல் தான் கார்த்திக்கை கல்லூரி முதல்வரிடம் மாட்டி விட்டாள். இவன் தான் தீக்ஷிதா அங்கு இருந்ததையும் , இவனது வரவிற்காக ஆவலாகக் காத்துக் கொண்டு இருந்ததையும் கவனிக்காமல் மஹிமாவிடம் பேசினானே !

அதனால் , அவள் இவர்களது பேச்சைக் கேட்டிருப்பாள் என்று கார்த்திக்கிற்குத் தெரிந்திருக்கவில்லை ஆதலால் , அவளைப் பற்றி யோசிக்கவும் அவனுக்குத் தேவையே இல்லை. ஆனால் , தீக்ஷிதா தான் இதற்கு முழுமுதற் காரணமாக அமைந்திருக்க கார்த்திக்கின் கோபம் மஹிமாவின் மீது மட்டுமே இருந்தது.

ஆனால் , இவன் அவ்வளவு கோபக்காரனும் இல்லை , விரைவாக அது தணிந்து விடுமே !
தமிழ்க்குமரன் வீட்டிற்கு வருவதற்கு முன் , அவனுக்காக எதையேனும் சமையல் செய்து வைக்கலாம் என்று நினைத்து , அவன் வந்ததும் உண்ணும் விதமாக இருப்பதற்கான பதார்த்தத்தை சமைக்கத் தொடங்கினான்.

” இவனுக்காக சமைக்கனும்னு நினைச்சாலே ஒன்னும் மைண்ட்ல வர மாட்டேங்குதே ! “

சாதம் , குழம்பா ? இட்லி , தோசையா ? சூப் , சாலட் ஆ ? எதை சமைப்பது என்ற குழப்பத்திலேயே பாதி நேரம் கடந்திருக்க ,

சாதம் , ரசம் , இவற்றுடன் முடித்து விட வேண்டியது தான் என்ற முடிவிற்கு வந்து , அதைத் தயாரிக்கும் வேலையில் இறங்க , அப்போது அழைப்பு மணி ஒலித்தது.

பொருட்களை அப்படியே போட்டு விட்டு , வந்திருக்கும் நபரை அறிந்து கொள்வதற்காக கதவைத் திறக்கச் சென்றான்.

திறந்து பார்த்தால் , அங்கே தமிழ்க்குமரன் தான் நின்றிருந்தான்.

” டேய் ! ஈவ்னிங் வர்றேன்னு சொன்ன ? இப்போவே வந்துட்ட ? “

அவன் உள்ளே நுழைவதற்கு வழியமைத்துக் கொடுத்து விட்டு , பின்னாலேயே வீட்டினுள் வந்தான் கார்த்திக்.

” எங்க… ! நீ இல்லாம க்ளாஸ் கவனிக்க இன்ட்ரஸ்ட்டே இல்லை. கடனே – ன்னும் கவனிக்க மனசாட்சி இடம் கொடுக்கல.லீவ் சொல்லிட்டு வந்துட்டேன் “

” நண்பேன்டா ! ” என்று பட டயலாக்கைக் கூறி அவனை சிரிக்க வைக்கப் பார்க்க , குமரன் இவனை முறைத்திருந்தான்.

” ஏன்டா ? “

” நீ க்ளாஸ்ல கூட இல்லாமல் நான் மட்டும் அங்க அவ்ளோ நாள் என்ன தான் பண்ணப் போறேனோ ? ”
வருத்தப்பட்டவனை விநோதமாகப் பார்த்தான்.

” நான் அங்க இருக்கும் போது , பாஸிட்டிவ் ஆக பேசிட்டு இப்போ அழுது வடியுற ? “

” அப்போ அப்படி சொன்னேன். ஆனா ரெண்டு நிமிஷம் கூட நீ அங்க இல்லாம , உங்கூட சிரிச்சுப் பேசி , கமெண்ட் பண்ணிட்டே க்ளாஸ் கவனிக்க முடியாம திணறிட்டு இருக்கேன்டா “

உடன் அமர்ந்து தினமும் உரிமையாய்ப் பேசி சிரித்த நண்பன் இப்போது பத்து நாட்களுக்குப் பிறகு தான் பழையபடி அருகிலமர்ந்து , பேசிச் சிரிக்க முடியும் என்றான பிறகு குமரனுக்கு முகமே களையிழந்தாற் போலாயிற்று.

” புரியுது குமரா ! என்ன பண்ண முடியும் ? நம்மளை சதி செஞ்சு மாட்டி விட்ட ஆளை தான் நீ திட்டனுமே தவிர இப்படி கலங்கக் கூடாது ஃப்ரண்டே !! “

நியாயமாகப் பார்த்தால் கார்த்திக்கை அவன் தேற்றி இருக்க வேண்டும் ஆனால் இங்கோ கார்த்திக் நண்பனைத் தேற்றிக் கொண்டு இருந்தான்.

” ஆமா எப்பவும் கதவு திறந்து தானே இருக்கும். ஏன் லாக் பண்ணி இருந்த ? “

கல்லூரிப் பையைக் கழட்டி ஓரமாய் வைத்து , அவனருகில் அமர்ந்து கொண்டு கேட்டான்.

” உள்ளே வந்ததும் ஆத்திரத்துல என்ன செய்யன்னுத் தெரியாம அப்படியே உக்காந்துட்டேன். எப்படியும் நீ வர ஈவ்னிங் ஆகுமேன்னு  தான் டோர் லாக் செய்துட்டேன். உனக்கு எதாவது சமைச்சுக் கொடுக்கலாம்ன்னு நினைச்சு, செய்ய ஆரம்பிச்சப்போ தான் நீயே வந்துட்ட “

அவன் சொல்ல , குமரனுக்குக் கண்கள் பளபளத்தது.

” என்ன சமைக்கலாம்னு இருந்தடா ? “

” ஸ்பெஷல்லா எதுவும் இல்ல. சாதம் , ரசம் தான். ஆனாலும் எனக்கு கஷ்டம் குடுக்காம நீயே வந்துட்ட கை வாஷ் பண்ணிட்டு சமையல ஆரம்பி மச்சி ! “

” டேய் நீ தான் முடிவு எடுத்துட்டியே ? ஏன் வண்டிய என் பக்கம் திருப்புற ? நீயே செய்டா ! “

வாகாக அவனின் தோளில் கரம் பதித்து மன்றாடினான் குமரன்.

” பாதிப் பாதி வேலையைப் பிரிச்சுப்போம். சாதத்துக்கு அரிசி ஊறப் போட்டாச்சு. நான் அதைக் குக்கரில் வச்சுடறேன். நீ ரசம் வச்சுடு ”
இந்த உடன்படிக்கையைக் கேட்டு , காதில் புகை வந்தது குமரனுக்கு.

” சாதம்ன்னா ஈசி , ரசம்ன்னா தக்காளி அரியனும் , எல்லா வேலையும் பாக்கனும்னு என்ட்ட தள்றப் பாத்தியா  !  “

நண்பனின் திட்டத்தைக் கண்டறிந்து விட்டான் எளிதாக.

” அதுக்கு நான் ஒன்னும் செய்ய முடியாது.சீக்கிரம் வந்தது உன் தப்பு. செய் போ ! ”
தலையில் தட்டி அனுப்பி விட,
“ஆஆ ! உனக்காக வந்தேன் பாருடா ! “

அடுத்து சுடச் சுட உணவு தயாரித்து , உண்டு முடித்திருந்தனர் கார்த்திக்கும் , தமிழ்க்குமரனும்.

– தொடரும்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்