Loading

அத்தியாயம்  15  ❤

சிவரஞ்சனி அவர்களை அறிமுகம் செய்து வைத்தாள்.
” ஹாய் ” , ” ஹாய் ”  இருவரும் பரஸ்பரம் விசாரித்துக் கொண்டனர்.

அதற்குப் பிறகு கார்த்திக் தான் உரையாடலை ஆரம்பித்தான்.

” சிவா உன் ஃப்ரண்ட் ரொம்ப பேச மாட்டாங்க போல ? ”  மஹிமாவை ஆராய்ந்து கொண்டே கேட்க,

இதற்கும் மஹிமாவிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

சிவரஞ்சனி ” அப்படிலாம் தப்பா நினைச்சுடாத. அவ ஜாலி டைப் தான். ஃபர்ஸ்ட் – டே அப்போவே உன்னை கலாய்க்க வேணாம்னு பாவம் பாத்துட்டு இருக்காப் போல. என்ன மஹி நான் சொல்றது கரெக்ட் தான  ? “

சிவரஞ்சனியை  வினவ , மஹிமா அவளைத் தர்ம சங்கடமாகப் பார்த்தாள்.

அவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போது வகுப்புப் பெண் ஒருத்தி ” சிவரஞ்சனி ! உன்னை ஹெச். ஓ. டி கூப்புட்றாரு  ” என கூற,

” எதுக்குனு தெரியுமா  ? “

” உன் சர்டிஃபிகேட் ஏதோ மிஸ் ஆகுதாம். அதுக்குத் தான் கூப்பிட்றாரு ”  அவளுக்குப் பதிலளித்து விட்டு அவரைப் போய்ப் பார்க்குமாறு கூறி  சென்றாள்.

சிவரஞ்சனி ” நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருங்கஹ நான் வந்துடறேன் ”  என கிளம்ப ,

கார்த்திக் மஹிமாவைப் பார்த்தான்.அவள் அவனது கண்களை நேருக்கு நேராகப் பார்க்காமல் தலை குனிந்து நிற்க ,

கார்த்திக் ” குனிஞ்ச தலை நிமிராத பொண்ணுன்றது உங்களுக்கு கரெக்ட்டா இருக்கும் “

தன் வெண் பற்களைக் காட்டி சிரித்தான்.மஹிமா அவனை நிமிர்ந்துப் பார்த்து  அசடு வழிய,

கார்த்திக் ” சிவரஞ்சனி சொன்னது உண்மையா  ? இன்னைக்கு ஃபர்ஸ்ட்

டே – ன்றதால தான் என்னை கலாய்க்காம விட்டு இருக்கிங்களா ? ”  குறும்பாய்க் கேட்டான்.

மஹிமா ,
”  அய்யோ இல்லங்க  ! அது நான் ஸ்கூல் டைம்ல கொஞ்சம் வாலு . ஆனா இப்போ மாறிட்டேன் “

கார்த்திக் ” அப்போ ஒரு காலத்துல நீங்க டெர்ரர் ஆகத் தான் இருந்து இருக்கிங்க. இதற்கு என்ன பதில் கூறுவது என தெரியாமல் மஹிமா அமைதியாக நின்றாள்.

கார்த்திக் ” இன்னும் மூனு வருஷம் இருக்குல்ல. அதுக்குள்ள உங்க டான் கேரக்டரை நான் பாத்துடுவேன்னு நம்பிக்கை இருக்கு  ” என சொல்லி சிரித்தான்.

‘ இந்த சிவரஞ்சனி எருமை வேற இவன்கிட்ட மாட்டி விட்டுட்டுப் போய்டுச்சு. இவன் பேசியே சாவடிக்கிறான் ‘ உள்ளுக்குள் பொரும,

கார்த்திக் ” என்ன  ! இவன் பேசியே சாவடிக்குறான்னு மனசுல திட்டிட்டு இருக்கிங்க போல  “
மஹிமா விழி விரிய அவனைப் பார்க்க,

கார்த்திக் ” முழிச்சு பாக்குறிங்கனா  ! இதுதான் உண்மை போல  ! “

மஹிமா ” அது  ! “
என அவள் திணறினாள்.

கார்த்திக் ” பரவாயில்ல. எதுவா இருந்தாலும் எங்கிட்டயே சொல்லிடுங்க. நான் தப்பா எடுத்துக்க மாட்டேன் “

மஹிமா அவனுக்குப் பதில் கூற வாய் திறக்க அதற்குள் சிவரஞ்சனி அவர்களிடம் வந்தாள்.

” என்னப்பா ரெண்டு பேரும் சீரியஸா பேசிட்டு இருக்கிங்க  ? “

கார்த்திக் ” நத்திங் சீரியஸ் சிவா. பொதுவா  தான் பேசிட்டு இருக்கோம் “

இவர்களின் அருகில் நின்றிருப்பது ஏனோ சங்கடத்தை அளித்ததால்,

மஹிமா ” நீங்க பேசிட்டு இருங்க  . எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. முடிச்சுட்டு வர்றேன்”

அவள் விடை பெற்று  சென்றதும் சிவரஞ்சனி மற்றும் கார்த்திக் ஒரு மர்மப் புன்னகையைப் பரிமாறிக் கொண்டனர்.

– தொடரும்

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்