Loading

அத்தியாயம்-15

 

 

“டைம் ஸ்கொயர் ரொம்ப சூப்பரா இருந்தது அஜு. நான் உன்கிட்ட அந்த சுற்றுலா புக்ல ஸ்டாச்சு ஆஃப் லிபர்டி காட்டிருக்கேன்ல? அதை நான் நேர்ல பார்த்தேன். அது மேல ஏறி அந்த மொத்த இடத்தையும் அவ்வளவு ஹைட்ல இருந்து பார்த்தது எப்படி இருந்தது தெரியுமா? அதுவும் எனக்கு ரொம்ப பிடிச்சது எம்பயர் ஸ்டேட் பில்டிங்ல இருந்து மொத்த நியூயார்க்கோட நைட் வ்யூ பார்த்தது தான்” என்று தன் வீட்டு கூடத்தில் அமர்ந்துக் கொண்டு தன் உடன் பிறந்தவனிடம் அஞ்சனா உற்சாகமாக பயண அனுபவத்தைக் கூற, அர்ஜுன் முகத்தில் அப்படியொரு திருப்தி.

 

ஆதி, மால்யதா அடிக்கடி நியூயார்க் சென்று வந்துள்ளனர் என்றாலும் அர்ஜுனோ அஞ்சனாவோ சென்றதில்லை. அர்ஜுன் செல்ல வாய்ப்பு கிடைத்தாலும் அஞ்சனாவை அமுதா அனுப்பியிருக்க மாட்டார் என்பதே உண்மை! தற்போது அவள் பேசுவதை அனைவரும் புன்னகையுடன் நோக்க, அமுதாவுக்கு மட்டும் சற்றே அதிருப்தியாய் இருந்தது.

 

அவள் யஷ்வந்துடன் அமேரிக்கா சென்றதெல்லாம் வருத்தமில்லை. ஆனால் அவனது படைப்புக்கு அவள் மாடலாக இருந்தது மட்டும் சற்றே அதிருப்தியாக உணர்ந்தார். 

 

“நான் ரொம்ப ஹாப்பியா இருந்தேன் அஜு” என்று அஞ்சனா கூற, அவளை அணைத்துக் கொண்ட அர்ஜுனின் மூடிய விழிகளிலிருந்து கண்ணீரும் இதழில் புன்னகையும் கசிந்தது.

 

சுற்றியிருந்த உடன் பிறந்தோர் இருவரும் அவர்கள் பாசம் கண்டு ஒருவரை ஒருவர் நோக்கி புன்னகைத்துக் கொள்ள, “நீ ஹாப்பி தானே பாப்பா?” என்று அர்ஜுன் கேட்டான்.

 

“ரொம்ப அஜு” என்று சத்தமாய் கூறியவள், “முதன்முறை உலகத்தை பார்த்த மாதிரி இருந்தது அஜு” என்று அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறினாள். அதில் இன்னமும் அவன் கண்களில் கண்ணீர் சுரக்க, 

 

“ஹாப்பியா இரு அஞ்சு. இந்த உலகம் இன்னும் பெருசானது, அழகானது” என்று கூறினான்.

 

அவனிலிருந்து பிரித்தவள், “மாலு அண்ணி நீங்க பாரிஸ் ஈஃபில் டவர் பிக் காட்டிருக்கீங்கள்ல? நாங்க அங்க போறதாவும் இருந்தது. ஆனா அதுக்குள்ள யஷு மாமாக்கு வேலை வந்துடுச்சு. மாமா இன்னொரு முறை கூட்டிட்டு போறேன்னு சொன்னாங்க” என்று கூற,

 

“சூப்பர்டா” என்று மால்யதா கூறினாள்.

 

வீடு முழுதும் அவளது உற்சாகக் குரலே எதிரொலிக்க, அதில் அமுதாவே உள்ளுக்குள் குற்ற உணர்வாய் உணர்ந்தார் என்று தான் கூற வேண்டும்.

 

நேரம் கடக்கவே யஷ்வந்தின் வாகனம் உள்ளே வர, “மாமா வந்துட்டாங்க” என்று துள்ளலோடு அஞ்சனா வெளியே ஓடினாள். வாகனத்திலிருந்து வந்தவன் தன்னிடம் ஓடிவந்த கோழிக்குஞ்சைக் கண்டு அவளுக்கு மட்டுமே பிரதானமான தன் புன்னகையை வீச, “வாங்க மாமா” என்று புன்னகையாய் அவனுடன் உள்ளே வந்தாள்.

 

முன்பே அமுதாவிடம் அதிருப்தி கொண்டிருந்தவனுக்கு இந்த அமேரிக்க பயணம் அவர்மீது மேலும் அதிருப்தியையே கொடுத்திருந்தது. ஆதியுடன் மட்டுமே சில வார்த்தைகள் அவன் பேச, அஞ்சு வாய் ஓயாது அர்ஜுனனிடம் பேசிக் கொண்டே இருந்தாள். 

 

இடையே அவளது அண்ணன் மகன் மற்றும் அக்கா மகளின் பேச்சுக்களும் அவள் குரலுடன் சேர்ந்து ஒலிக்க, குழந்தைகளுடன் வம்பளந்துக் கொண்டிருந்தவளை திரும்பிப் பார்த்தான். பார்த்த மாத்திரம் அவன் இதழில் ஒரு விரிந்த புன்னகை வந்து போக, அதை தற்செயலாக திரும்பிப் பார்த்தான் அர்ஜுன்.

 

‘சிரிச்சா நல்லா இருப்பாங்க அஜு’ என்று அஞ்சு அடிக்கடி அவனிடம் புலம்பும் விடயம் அவன் மூளையில் தோன்றி மறைய, தன் தங்கையை பார்த்துப் புன்னகைத்துத் திரும்பும் இந்த யஷ்வந்த் புதுமையாய் தெரிந்தான். அது தன் தங்கைக்கான புன்னகை என்று நினைக்கையில் அர்ஜுனுக்கு இத்தனை நாளில்லாமல் தற்போது யஷ்வந்த் மீது ஒரு நம்பிக்கை வந்தது. 

 

தன் மனையாட்டி பேசி ஓயமாட்டாள் என்று எண்ணிய யஷ்வந்த் தானே புறப்படுவதாய் கூறி எழ, அஞ்சனாவும் எழுந்தாள். அனைவரிடமும் விடைபெற்றவள் யஷ்வந்துடன் வெளியேற, செல்லும் இருவரையும் பார்த்திருந்த அர்ஜுன் தன் பார்வையிலிருந்து இருவரும் மறைந்த மறுநொடி வெளியே தானும் ஓடினான்.

 

யஷ்வந்தை இதுவரை முறை வைத்து அழைத்திடாதமையால் எப்படி அழைத்து நிறுத்துவது என்று புரியாதவன், “பாப்பா..” என்க, அஞ்சு சட்டென திரும்பினாள். யஷ்வந்தும் அதில் திரும்ப, மூச்சிறைக்க வந்தவன் இருவரையும் மாறி மாறி பார்த்தான்.

 

அவனது அமைதியில் குழம்பிய அஞ்சு, “என்ன அஜு?” என்க, “நீ காருக்கு போ” என்றான். “ஏன்?” என்று பதில் கேள்வி கேட்டவளைப் பார்த்து “போடா” என்று கெஞ்சலாய் அவன் கூற, யஷ்வந்தை ஒரு பார்வை பார்த்துக் கொண்டு சென்றாள். செல்பவளை கண்களில் கண்ணீரும் இதழில் மெல்லிய சிரிப்புமாய் பார்த்தவன் யஷ்வந்தை நோக்க, உணர்வுகளற்ற முகத்துடன் அர்ஜுனை நோக்கினான்.

 

“அ..அது.. நீ..நீங்க” என்று தடுமாறிய அர்ஜுன் ஒருபெருமூச்சு விட்டுக் கொண்டு, “தேங்ஸ்” என்றான். தன் ஒற்றை புருவம் உயர்த்தி யஷ்வந்த் கேள்வியாய் நோக்க,

 

“அ..அவ என் பாப்பா.. அவள அம்மா ரொம்ப மோசமா வளர்த்துட்டாங்க. எங்களால எதுவும் பண்ண முடியலை. அவ இந்த கூட்டுக்குள்ளருந்து வெளிய வரனும்னு தான் நான் அம்மாகூட நிறையா சண்டை போட்டேன். இன்னிக்கு அவ முகத்துல பார்த்த சந்தோஷம் இத்தனை வருஷத்தில் நான் பார்த்ததில்லை. அந்த சிரிப்புல இருந்த திருப்தி நீங்க குடுத்தது. அதுக்கு தான் தேங்ஸ்” என்றவன் கண்ணிலிருந்த கண்ணீர் கன்னத்தில் உருண்டு ஓடியது.

 

யஷ்வந்துக்கு அவனது தோற்றம் உள்ளுக்குள் ஆச்சரியத்தையே கொடுத்து, ‘இப்படியொரு பாசமா?’ என்று வியக்கவே வைத்தது! இதழ் பிரியா புன்னகையைக் கொடுத்தவன் அவன் தோளில் தட்டிவிட்டு செல்ல, அர்ஜுன் தன் கண்ணீரை துடைத்துக் கொண்டு புன்னகைத்தான்.

 

சட்டென திரும்பிய யஷ்வந்த் “என் சனா” என்று அழுத்தமாய் கூறிவிட்டு செல்ல, தான் ‘என் பாப்பா’ என்று கூறியதற்கே அந்த மறுமொழி என்று புரிந்தவனுக்கு அத்தனை நேரம் இருந்த இதத்தில் உடைமை வந்து ஒட்டிக் கொண்டது. ‘சனாவா? என் பாப்பா’ என்று மனதோடு கூறி முறைத்துக் கொண்டவன் உள்ளே செல்ல, வண்டியில் ஏறுகையில் அதை பார்த்த யஷ்வந்த் சிரித்துக் கொண்டான்.

 

ஒரு வாரம் அதன் போக்கில் சென்றிருந்தது. வேலை வேலையென்று இந்த ஒருவாரம் யஷ்வந்த் வீடு வருவதே நல்லிரவை தொட்டுத் தழுவும் பொழுதுகளாகிப் போனது. அவன் வரும் முன்னே தூங்கி, அவன் சென்ற பிறகு எழுவதே வாடிக்கையாகிப் போன அஞ்சனாவுக்கு அந்த மாற்றம் ஏதும் செய்ததோ?

 

எப்போதும் போல் குளித்து தயாராகிக் கீழே வந்தவள் கூடத்தில் யாதவன், அக்ஷரா, யாழினி, யமுனா மற்றும் யஷ்வந்த் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதைக் கண்டாள்.

 

ஒருவாரம் அவனைக் காணாத போது இல்லாத ஒரு உணர்வு அவனை கண்டபின்பு வந்ததோ? அது அவளே அறியாள்.. 

 

“நாளைக்கு கண்டிப்பா முடியாது ம்மா” என்று யஷ்வந்த் கூற, 

 

“ஏற்கனவே ஒரு வாரம் ஆச்சு யஷ்வா” என்று யமுனா கூறினார். 

 

“சோ வாட்? வெற்றி எப்ப பேசப்பட்டாலும் வெற்றி தானே? ரெண்டு நாள் தள்ளி கொண்டாடுறதுல தப்பில்லையே” என்று யஷ்வந்த் கூற, ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டு யாதவனை யமுனா ஏறிட்டார்.

 

“அவந்தான் சொல்றானே ம்மா. விடுங்க” என்று யாதவும் தம்பிக்கே பரிந்து பேச, 

 

“யாரும் பேசுற போல நடந்துக்காதீங்க. நாம ஜெயிச்சதுக்கு கண்டிப்பா பிஸ்னஸ் பார்ட்னர்ஸ கூப்பிட்டு ட்ரீட் கொடுக்கனும். ஏற்கனவே ஒரு வாரம் கடந்துடுச்சு. மேலும் கடத்தாம சீக்கிரம் முடிக்கப் பாருங்க” என்று யமுனா கூறிவிட்டு எழ, படிக்கட்டிற்கு அருகே அஞ்சனா அமைதியாய் நின்றுகொண்டிருந்தாள்.

 

“அஞ்சு என்னடா அங்கயே நின்னுட்ட?” என்று அவர் கேட்ட பின்பு தான், யஷ்வந்தை பார்த்தபடியே தான் அங்கு நின்றதை உணர்ந்தாள். சட்டென அவளுள் ஒரு இனம் புரியாத படபடப்பு! ‘தன்னவனை மெய் மறந்து பார்த்துக் கொண்டு நின்றேன்’ என்று அவரிடம் கூறக் கூடாது என்று அவள் மனம் உந்தியதில் “அ..அது அத்தை” என்று தடுமாறினாள்.

 

அவள் தடுமாறுவதில் குழம்பிய யமுனா, “சாப்பிட வாடா” என்க, தலையசைத்து அவருடன் சென்றவள், மெல்ல தலையை வளைத்து யஷ்வந்தை நோக்க, யாதவனுடன் பேசிக் கொண்டிருந்தவன் இதழில் மெல்லிய குறுஞ்சிரிப்புத் தோன்றியது.

 

அதைக் கண்டு ரசித்துவிட்டு அவள் திரும்பிக்கொள்ள, அரிதாய் உதிரும் தம்பியின் குறுநகை புரியாத யாதவன் அவனை விசித்திரமாய் நோக்கினான். அண்ணனின் பார்வையில் தன் சிரிப்பை மீசைக்குள் மறைத்துக் கொண்டவன் அவன் கவனத்தை வேலையின் புறம் திருப்ப, ‘அடியே கோழிக்குஞ்சு’ என்று அவன் மனம் எண்ணி சிரித்தது.

 

அடுத்த இரண்டு நாட்களையும் பரபரப்போடு கடந்தவன் முன் வந்து நின்ற வினோத் “சார் ப்ளாக் அன்ட் வைட் காம்போவே போட்டுடலாமா?” என்று வினவ,

 

மேஜையில் விரல்கள் தட்டி தாளமிட்டவன் “இல்ல வினோத்.. பிளாக் அன்ட் அக்வா மெரைன் ப்ளூ காம்போல ஆர்டிபிஷியல் டாஃபடில்ஸ் அல்லது டெய்சி வச்சு அரேஞ்ச் பண்ணுங்க” என்று கூறினான்.

 

‘என்னடா அதிசயமா இருக்கு’ என்று வினோத் விழிக்க, தன் ஒற்றை புருவம் உயர்த்தி யஷ்வந்த் வினோத்தை நோக்கினான். 

 

“அ..அது எப்பவுமே ப்ளாக் அன்ட் வைட் தான் போடுவோம் இல்லையா சார். அதான் திடீர்னு சேஞ்ச் பண்ணுறீங்களேனு” என்று தயங்கிய வினோத், 

 

“சாரி சார். அரேஞ்ச் பண்றேன்” என்க, இதழ் வளைத்து கண்களில் சிரிப்பை காட்டியபடி தலையசைத்தான்.

 

அவனவளுக்கு பிடித்த நிறமாயிற்றே! நிச்சயம் நிகழ்வுக்கு அவளையும் அழைத்து வர வேண்டும். அப்படியிருக்க அவளுக்கு பிடித்த நிறத்துடன் தனக்கு பிடித்த நிறத்தினை இணைத்து அலங்காரம் செய்திடவே அவனுக்கு தோன்றியது. ‘டீன் பாய் மாதிரி பிஹேவ் பண்றடா யஷ்வா’ என்று மனதோடு கூறி சிரித்துக் கொண்டான். 

 

காதலில் விழுவது ஒரு சுகமென்றால் காதலிக்கு பிடித்ததை செய்து அதில் அவள் முகம் காட்டும் ஆச்சரியத்தை ரசிப்பது பெரும் சுகம் தானே!

 

அனைத்து பணிகளும் முடித்து இரவு விரைவே வீடு வர அவன் முயற்சித்த போதும் மணி பத்தை கடந்திருந்தது. தன்னவள் நிச்சயம் உறங்கியிருப்பாள் என்ற எண்ணத்துடன் அறைக்குள் நுழைந்தவன் குளியலறைக்குள் புகுந்துக் கொண்டான்.

 

உடல் உஷ்ணம் தனிய குளித்து வந்தவன், படுக்கை காலியாக இருப்பதை புருவம் சுருங்க ஏறிட்டவன், பால்கனியின் கதவு திறந்திருப்பதை அப்போதே கவனித்து அங்கு சென்றான். தேக்குமர ஊஞ்சலில் தேவதையாய் அமர்ந்தபடி, நிலவைப் பார்த்துக் கொண்டிருந்தாள் பாவை!

 

“சனா..” என்று அழைத்தவனின் திடீர் குரலில் திடுக்கிட்டு எழுந்தவள் அவனைக் கண்டு ஆசுவாசம் அடைய, “இத்தனை பயம் இருக்கே அப்பறம் எதுக்கு இந்த நேரம் இங்க உக்காந்திருக்க?” என சற்றே கண்டிப்பாக வினவினான்.

 

“இல்ல மாமா துக்கம் வரலை” என்றவள், “உங்களுக்கு வர்க்கெல்லாம் முடிஞ்சதா?” என்று வினவ, 

 

“ஏன்டா சீக்கிரம் வந்தனு கேட்காம கேட்குறியா?” என்று தன் ஒற்றை புருவம் உயர்த்தி வினவினான்.

 

சிரித்தபடி அவன் அவ்வாறு கூறியிருந்தாலே பெண்ணவள் பதறித்தான் போயிருப்பாள். அவனோ துளியும் புன்னகையின்றி உணர்வற்ற முக்ததுடன் அவ்வாறு கேட்டிருக்க, அந்த குரலிலிருந்த கேலி அவளை சென்றடையாது போனது.

 

“அய்யயோ.. அப்படிலாம் இல்லை. இன்னிக்கு கொஞ்சம் சீக்கிரம் வந்துட்டீங்களேனு கேட்டேன்” என்று மெல்லிய குரலில் அவள் மொழிய, அந்த பாவமான முகத்தில் வாய்விட்டு சிரித்தவன் ‘வா’ என்று கரம் நீட்டி அழைக்க, அவனிடம் வந்தாள்.

 

அவளை தன் பரந்த கைகளுக்குள் சிறை வைத்தவன் அணைப்பு, பருந்தின் சிறகுகளுக்குள் பாதுகாக்கப்படும் கோழிக்குஞ்சைப் போன்றே தெரிந்தது.

 

எப்போதும் அவன் அணைப்பில் அமைதியாய் இருப்பவள் இன்று ஏனோ தானும் அவனை அணைத்துக் கொண்டு முகத்தை அவன் மார்பில் புதைத்துக் கெள்ள, தன் ஒற்றை புருவம் உயர்த்தி அவளை புன்னகையாய் ஏறிட்டான்.

 

“தூக்கம் வரலையா?” என்றபடி ஆடவன் அவள் தலைகோத, “வருது” என்றாள். “அப்ப போய் தூங்கு” என்று அவன் கூற, சட்டென நிமிர்ந்தவள் “நீங்க?” என்று கேட்டாள். அவள் தன்னோடு உறங்க எண்ணுவது புரிந்திடவே தனது வேலைகளை புறம் தள்ளியவன் “நானும் தான். வா” என்றான்.

 

இருவரும் சென்று படுத்துக் கொள்ள, அவனை அணைத்தபடியே உறங்கிப் போனாள். தூக்கத்திலும் புன்னகைக்கும் அவள் இதழ்களில் இன்று ஒரு மெல்லிய சோகத்தை அவனால் உணர முடிந்தது. காரணம் அறியாத போதும் அவளாக கூறுவாள் என்று எண்ணிக் கொண்டு தானும் உறங்கினான், அந்த சோகம் மிகப்பெரிய பிரச்சினையின் அடித்தளம் என்று அறியாமல்.

 

மறுநாள் காலை கல்லூரிக்கு தயாராகிக் கொண்டிருந்த அஞ்சனாவிடம் வந்தவன், “சனா இன்னிக்கு கம்பெனில ஒரு பார்டி இருக்கு. நம்ம வின் பண்ணோம்ல அதுக்கு” என்று கூற, 

 

“அப்ப நான் லீவ் போடனுமா மாமா?” என்று கேட்டாள்.

 

அவள் மண்டையிலேயே ஒரு கொட்டு வைத்தவன், “செம் வரப்போகுது நினைவிருக்கட்டும். லீவ் போடுறாளாம். ஈவினிங் அம்மா வீட்டுக்கு போகாமா நேரா இங்க வானு சொல்ல தான் சொல்றேன்” என்று கூற, தலையை தேய்த்துக் கொண்டபடி “போங்க மாமா” என்று சென்றாள்.

 

மாலை அவன் கூறியது போலவே அர்ஜுனுடன் நேரே வீட்டுக்கு வந்தவள், “நீயும் வரியா அஜு?” என்று கேட்க, “பாப்பா.. இது ஒன்னும் வீட்டு பங்ஷன் இல்லை இஷ்டத்துக்கு யார் வேணாலும் வர்றதுக்கு. இது கம்பெனில நடக்குற பார்டி” என்று கூறினான்.

 

“ஸ்ஸ்.. ஆமால்ல? ஓகேடா. பை நான் அப்ப ரெடியாயிட்டு கிளம்புறேன்” என்று கூறியவள் அவனை அணைத்து விடுவித்து உள்ளே ஓடினாள்.

 

நேரே தங்கள் அறைக்கு ஓடியவள் உள்ளே நுழைய தனது கருப்பு நிற கோர்ட் சூட்டில் தயாராய் நின்று கொண்டிருந்த யஷ்வந்த் ஒரு கையால் தன் சிகையை சிலுப்பிக் கொண்டே வினோத்திடம் பேசிக் கொண்டிருந்தான்.

 

‘எப்பவுமே பிளாக் தானா இந்த மாமாக்கு’ என்று எண்ணிக் கொண்டவள், ‘ஆனா இதுதான் செம்மயா இருக்கு’ என்று எண்ணி சிரித்துக் கொள்ள, ஆடவன் அவளை நோக்கி திரும்பினான். அதில் தன் சிரிப்பை நிறுத்தியவளுக்கு கன்னங்கள் அவள் அனுமதியின்றி செம்மையுறா, தன் ஒற்றைப் புருவம் உயர்த்தி அவளை நோக்கினான்.

 

திருதிருவென விழித்தவள் வேகமாக குளியலறைக்குள் சென்றிட, அவள் சென்ற திசை கண்டு சிரித்துக் கொண்டவன் தன் பேச்சை தொடர்ந்தான். குளித்து முடித்து உடை மாற்றும் அறைக்கு சென்றவளை நிறுத்தி ஒரு பெட்டியை யஷ்வந்த் கொடுக்க, “என்னது மாமா? டிரஸ்ஸா?” என்று கேட்டாள். 

 

“ம்ம்” என்று அவன் கூற, அதை பிரித்துப் பார்த்தாள். அழகிய கடல் நீல நிறத்தில் மின்னிய புடவையை விழிகள் விரிய பார்த்தவள், “வாவ் மாமா.. செம்மயா இருக்கு” என்று உற்சாகமாய் கூற, லேசாய் சிரித்தவன் “ப்ளௌஸ் அதுலயே இருக்கு. எலாஸ்டிக் தான். சீக்கிரம் போய் ரெடியாகு” என்று கூறினான்.

 

வலையால் முழுக்கை வைக்கப்பட்டு மணிக்கட்டில் பூ வடிவ வடிவமைப்புக் கொண்ட அந்த அடர்நீல நிற ரவிக்கையை அணிந்துக் கொண்டு வலவலப்பான சாட்டின் புடவையை முந்தி மடிப்புகள் இன்றி தானே அழகுபட உடுத்தி அதற்கு தோதான ஆபரணங்களுடன் வந்தாள்.

 

கையில் பிரேஸ்லெட் அணிந்திருந்தவளை அதிருப்தியாய் பார்த்தவன், “சனா பேங்கிள்ஸ் எங்க?” என்று வினவ, “இதுக்கு நல்லா இருக்காதுல மாமா?” என்று கேட்டாள். “உனக்கு எந்த டிரஸ்கும் கண்ணாடி வளையல் தான் நல்லா இருக்கும்.. சரி வா” என்று கூறி அவன் சென்றிட, அவ்விடத்திலேயே தேங்கி நின்றவள் மனம் சலனம் பெற்றது.

 

தனக்குப் பிடித்த ஒன்று தன்னவனுக்கும் பிடித்தால், அது தானே காதலில் கொள்ளை இன்பம் கொடுக்கும்!? அந்த இன்பம் அவளைத் தாக்கி திக்குமுக்காட வைக்க, விரைந்து உள்ளே சென்றவள் புடவையின் ரவிக்கை நிறத்தில் கைநிறைய வளை பூட்டி கீழே வந்தாள்.

 

கூடத்தில் நின்றுகொண்டு யமுனாவுடன் பேசிக் கொண்டிருந்தவன் செவிகளை படிகளில் துறுதுறுப்பாய் இறங்கி வருபவளின் கண்ணாடி வளையலின் கிங்கினி நாதம் இன்பமாய் நிறைக்க, அவள் புறம் திரும்பியவன் இதழ்களில் கர்வமாய் ஒரு புன்னகை!

 

மகன் புன்னகைக்குமளவு என்னவானது என்ற ஆச்சரியத்துடன் திரும்பிய யமுனா அஞ்சனாவைக் கண்டு இதழ் விரிந்த புன்னகையுடன், “அஞ்சுமா.. அழகா இருக்கடா” என்றார்.

 

அதில் உற்சாகத்துடன் அவரிடம் வந்தவள் “தேங்ஸ் அத்தை” என்று கூறி, “நீங்க வரலையா அத்தை?” என்று கேட்டாள். “யாழி அவ பிரண்ட் வீட்டுக்கு போயிருக்காடா.‌ நைட் அங்க தான் ஸ்டே பண்ண போறா. அக்ஷரா அப்பாக்கு ரொம்ப முடியலையாம். அதான் நாங்க எல்லாம் பார்க்க போறோம்” என்று யமுனா கூற, “அச்சுச்சோ என்னாச்சு அத்தை?” என்றாள்.

 

“ஒன்னுமில்லைடா. அவங்க ஹார்ட் பேஷன். நாங்க போய் பார்த்துட்டு வந்துடுறோம்” என்று யமுனா கூற, “சரித்தை. அக்கா கிட்ட ஒன்னும் பயப்பட வேண்டாம் எல்லாம் ஓகே ஆயிடும்னு சொல்லுங்க” என்றுவிட்டு யஷ்வந்துடன் அவன் லம்போர்கினியில் புறப்பட்டாள்.

 

“மாமா.. எனக்கு புதுசு தான் எடுக்கப் போறீங்கனா நீங்களும் ப்ளூ கோட் எடுத்துருக்கலாம்ல? நாம மேட்சிங் மேட்சிங்கா போட்டிருக்கலாம்” என்று அவள் கூற, “ஆஹாங்?” என்றவன், “அங்க வந்து பாரு புரியும்” என்றான்.

 

“என்னது மாமா? சர்ப்ரைஸா?” என்று ஆர்வமாய் கேட்டவள் கண்டு சிரித்தவன், அமைதியாக வண்டியை இயக்க, சில நிமிடங்களில் நிறுவனத்தினை அடைந்தான். தன்னவளுடன் வேக வேகமாக அவன் உள்ளே நுழைய, அவனிடம் விரைந்து வந்தான் வினோத்.

 

‘ஐயோ இந்த மாமா நல்லா கரெண்டு கம்பம் மாதிரி காலை வச்சுகிட்டு விறுவிறுனு போறாங்க. வத்தி குச்சிபோல காலை வச்சுகிட்டு நான் ஓடி தான் வரனும். காலு வலிக்குது’ என்று மனதோடு அவள் புலம்பிக் கொள்ள, வினோத் அவனிடம் விழா பற்றிய விவரங்கள் அனைத்தும் பேசினான்.

 

தற்செயலாக அஞ்சனாவின் உடையை நோக்கிய வினோத் விழிகள் விரிய, ஒரு நொடி அமைதியாகிப் பிறகு வினோத் துவங்கியதை கண்டுகொண்ட யஷ்வந்த் தன் சிரிப்பை மீசைக்குள் புதைத்துக் கொண்டான்.

 

‘அப்ப மேம் டிரஸ்கு மேட்சிங்கா தான் டெகரேஷன்ல ப்ளூ ஆட் பண்ணாரா? சார் ரொமாண்டிக் கை மோட்குலாம் போவாரா?’ என்று வினோத் எண்ணிக்கொள்ள, “யோசிச்சு முடிச்சுட்டீங்கனா மேல போகலாம் வினோத்” என்று யஷ்வந்த் கூறினான்.

 

அதில் திடுக்கிட்டு விழித்தவன், “ச..சார்.. போகலாம் சார்” என்று கூற, “சனா..” என்று அவளையும் அழைத்துக் கொண்டு சென்றான். மேலே விழா நடைபெறும் அறைக்குள் நுழைந்த அஞ்சனா தன் செப்பு இதழ்தள் மெல்ல திறத்துக் கொள்ளும் வகையில் வியந்து அந்த அலங்காரங்களை நோக்க, தன்னுடை மற்றும் தன்னவன் உடை நிறத்தில் அலங்காரம் நடந்திருப்பது அவளுக்கு மேலும் உற்சாகம் கொடுத்தது.

 

“வாவ்..” என்று மெல்லிய குரலில் அவள் தன்னை மறந்து இயம்ப, “டெகரேஷன்ஸ் ஓகேவா மேம்?” என்று வினோத் கேட்டான். “ஓகேவா? இட்ஸ் ஜஸ்ட் ஆவ்சம். ரொம்ப அழகா இருக்கு” என்று அவள் கூற, திருப்தியான புன்னகையுடன் யஷ்வந்தை நோக்கினான்.

 

“இட்ஸ் ரியலி சூப்பர்ப் வினோத்” என்று யஷ்வந்த் மனமார பாராட்ட, “தேங்கியூ சார்” என்றான். 

 

விழா இனிதே துவங்கிட, கூட்டித்தில் ஒரு திடீர் அமைதி. ஆம்! அந்த அமைதிக்குக் காரணம் அர்ஷித்தைத் தவிர யாராக இருந்திட இயலும்? 

 

யஷ்வந்த் இதழில் ஒரு கோணல் புன்னகை எழ, அந்த அமைதியும் அவனது மர்ம புன்னகையும் கண்ட அஞ்சனாவும் வருவது அர்ஷித் என்று புரிந்துக் கொண்டாள். 

 

அழகிய அடர் சிப்பு நிற கோட் சூட்டில் கம்பீரமாய் வந்தவன் தன் வழமையான தோரணையில் மேடையில் குதித்தேற, யஷ்வந்த் இதழில் மெல்லிய புன்னகை!

 

தான் கொண்டு வந்த பூங்கொத்தை நீட்டிய அர்ஷித், “கங்கிராஜுலேஷன்ஸ் மிஸ்டர். யஷ்வந்த் கிருஷ்ணா” என்க, “தேங்ஸ் மிஸ்டர் அர்ஷித் பிரசாத்” என்று கூறினான்.

 

அஞ்சனாவை ஒரு பார்வை பார்த்த அர்ஷித் சுற்றிலும் உள்ள அலங்காரங்களைப் பார்த்து சிரித்துக் கொண்டு, “ஆர் யூ ஸச் அ ரொமாண்டிக் பெர்சன்? (நீ அவ்வளவு காதலுணர்வு கொண்ட மனிதனா?)” என்று வினவ, “வை நாட்?” என்று யஷ்வந்த் கூறினான்.

 

யஷ்வந்தைப் போல் தன் ஒற்றைப் புருவம் உயர்த்தி சிரித்தவன், அஞ்சனாவிடம் கரம் நீட்டி, “ஹே லிட்டில் கேர்ள்.. கங்கிராட்ஸ்” என்று கூற, அவன் கரம் பற்றலாமா என்று யஷ்வந்தை நோக்கினாள்.

 

அவன் முகத்தில் எந்தவித பதிலோ உணர்வோ இல்லாதுபோக, தன் மனம் கொடுத்த உந்துதலுடன் அவன் கரத்தை பற்றி அழுத்தமான ஒரு குலுக்கலுடன் விடுவித்தாள்.

அதில் மெச்சுதலாய் ஒரு பார்வை பார்த்தவன், “என்ஜாய் தி டே போத்” என்க, “யூ டூ” என்று அஞ்சனாவே பதில் கொடுத்தாள்.

தற்போது அவளை மெச்சுதலாய் பார்ப்பது யஷ்வந்தின் முறையானது.

 

நேரம் மெல்ல மெல்ல ஊர்ந்து சென்றபோதும் மணி இரவு பத்தையும் கடந்துவிட்டது. கால்கள் இரண்டும் ஓய்வுக்காகக் கெஞ்சி அழுவதை உணர்ந்த அஞ்சனா அவ்வப்போது யஷ்வந்தை நோக்க, அவனிடம் பெயருக்கும் சோர்வின் சாயலில்லை.

 

அவள்‌ பார்வையின் அர்த்தம் புரிந்தபோதும் தானாக முன்வந்து யஷ்வந்த் அவளிடம் ஏதும்‌ கேட்கவில்லை, அவளும் வாய்மொழியவில்லை. பத்தை கடந்த கடிகார முள், பதினொன்றரைரை கடக்கும்போதுதான் வந்தவர்கள் யாவரும் விடைபெற்றுச் சென்றனர்.

 

மீதம் இருக்கும் சொற்பான நபர்களும் கிளம்ப ஆயத்தமாகிட, வினோத்திடம் அலங்காரங்கள் கலைவதை நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று விபரங்களைப் பேச யஷ்வந்த் சென்றான்.

 

சோர்ந்து போன கால்களுக்கும் வரண்டு போன தொண்டைக்கும் துளி நீர் கொடுத்து தேற்றிட எண்ணிய பாவை அங்கு வண்ண கண்ணாடி குவளைகள் அருகே இருந்த வண்ணமற்ற திரவத்திடம் வர, யஷ்வந்துடன் பேசிக் கொண்டிருந்த வினோத் தற்செயலாய் அதை கண்டு அதிர்ந்து விழித்தான்.

 

பேசிக் கொண்டிருப்பவன் அமைதியானதில் அவன் பார்வை செல்லும் திசையை யஷ்வந்த் நோக்க, தண்ணீர் என்று நினைத்துக் கொண்டு நிறமற்ற மதுபானத்தை கோப்பையில் ஊற்றிக் கொண்டிருந்தாள்.

 

‘அடிப்பாவி..’ என்று அவளைத் தடுக்க வேண்டி ‘“வினோத் வன் செக்” என்று அவன் நீண்ட அடிகள் வைத்து வர, அதற்குள் குவளையை வாய்க்குள் கவிழ்த்து பருகியவள் முகம் அஷ்டகோலத்தில் சென்றது.

 

அருகே வந்தவன் ‘போச்சு’ என்று நினைக்க, அவனை பாவமாய் பார்த்தவள், “இந்த தண்ணி நல்லா இல்ல மாமா” என்க, ‘தண்ணியா? நாசமா போச்சு’ என்று நினைத்துக் கொண்டான்.

 

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்