Loading

சீமை 31

ஆற்றங்கரை முன்பு அக்னி வெயில் காணாமல் போயிருந்தது. ஓடும் சலசலக்கும் நீரில் சலவை நுரைகள் மின்னிக் கொண்டிருந்தது. ஆற்றில் முழங்கால் தெரிய ஊர் பெண்களின் கால்கள் காட்சியளிக்க, அதில் ஒரு கால் ஒளிர்பிறையோடது.
ஆற்றங்கரை ஒட்டிய கல்லில் துணி துவைத்துக் கொண்டிருந்தாள்.

“பிற” என்றழைக்கும் தோழியின் குரலில் நெற்றியில் வழியும் வேர்வையை துடைத்துக் கொண்டு நிமிர்ந்து பார்த்தாள்.

“என்னா மந்தி இன்னிக்கு இவ்ளோ நேரம் கழிச்சு வர. வூட்டுல வேல அதிகமா.”

“அப்டி ஒன்னு வேல இல்ல பிற.” சலிப்பாக எடுத்து வந்த அழுக்கு துணிகளை அண்ணக் கூடையோடு தலைகீழாக கவிழ்த்தாள்.

“என்னா மந்தி பேச்சு ரொம்ப கசப்பா இருக்கு.”

“என்னாத்த பிற விளக்க சொல்ற. நாலு நாளா கறந்து வெச்ச பாலு வீணா போவுது. எத்தினி நாளுதா தயிரா, மோரா கடைஞ்சு வெச்சி மனச தேத்திக்க.” பெருமூச்சோடு அழுக்குத் துணிகளை கொட்டிய இடத்திற்கு பக்கத்தில் முழங்கால் மடக்கி அமர்ந்தாள்.

“அதுவா மந்தி” என சொல்லும்பொழுது ஒளிர்பிறையின் குரலிலும் சலிப்பு.

“மனசுக்கு கஷ்டமா இருக்கு பிற. வியாபாரத்துக்கு மாடு வாங்கி வளர்க்குறதா இருந்தாலும் தாய்ப்பாலுக்கு இணையான பாலு வீணாப்போவுதுனு மனசு அடிச்சுக்குது.”

“நம்ம என்னா மந்தி பண்ண முடியும். எதிர்பார்க்காம சொசைட்டில பிரச்சனை ஆகிப்போச்சு. அதனால எல்லாம் வீணா போவுது.” என்றவள் சோப்பு போட்ட துணியை ஆற்றில் அலசிவிட்டு ஓரம் வைத்தாள்.

“இதுக்கு என்னாதா முடிவு பிற”

“அதே யோசனை தான் ரெண்டு நாளா எனக்கு. தெனமும் காலையில எந்திரிச்சு பசு மாட்டு மடிய தொடும்போது அப்டி ஒரு பரம நிம்மதி கெடைக்கும். இப்ப அத தொடும் போது மனசு வலிக்குது. ரத்தத்தை பாலாக்கி குடுக்குற அதுங்க உழைப்ப வீணாக்குறோம்னு குற்ற உணர்ச்சி அதிகமா வருது.”

“என் புருச கிட்ட சொன்னா… கூடப் பொறந்தவய்ங்களை திட்டுறாரே தவிர அடுத்த முடிவ எடுப்போம்னு நெனைக்க மாட்டிக்குறாரு.”

“என்னாத்துக்கு அவுனுங்களை திட்டிக்கிட்டு கிடக்காரு உன் புருச. அவுனுங்க என்னா தப்பு செஞ்சுட்டு வந்தானுங்க.”

“அத ஆரு என் புருசனுக்கு சொல்லி புரிய வெக்குறது.” கவலையோடு தரையில் குவித்த துணிகளை நீரில் நனைத்து துவைக்க தயார்படுத்தினாள் சாமந்தி.

“அவர சொல்லியும் தப்பு இல்லியே மந்தி. கறந்த பாலு வீணா போவுதேன்னு நெனைப்பு இருக்கத்தான செய்யும்.”

“உன் கொழுந்தனுக்கு கொடி புடிச்சுக்கிட்டு வந்துடுவ முதல் ஆளா” மன ஆற்றாமையை கொட்ட வந்த தோழியை விட்டுவிட்டு அவள் கணவனுக்கு பரிந்து பேசுவதால் முகம் சுழித்தாள் சாமந்தி.

“என்னாடி இவ…இவ புருசனுக்கு பரிஞ்சி பேசுனத கூட கொறயா பாக்குற.”

“அட போ பிற! அவரு கிட்ட பேசி முன்னுக்கு வர முடியாது. பால விக்க வேற எதுனா ஏற்பாடு பண்ணுங்கன்னு சொல்ற… சாப்டுட்டு இருந்த புள்ளைங்களை கண்ட மேனிக்கு ஏசுறாரு. தப்பு நடக்குதுனு ஒதுங்காம தைரியமா தட்டி கேட்ட அவுனுங்களை பாராட்டுனா தான எந்த தப்பு நடந்தாலும் தைரியமா இனி கேட்க தோணும்.”

“இந்த விசயத்துல என் புருசனும் உன் புருசனும் ஒரே மாதிரிடி. ராத்திரி எல்லா நா பொலம்பிட்டு இருக்குறத பாத்து தமிழ அந்த மாதிரி ஏசுறாரு.”

“இவங்க ரெண்டு பேரு மனசையும் கடவுள் என்னா கல்லுல படைச்சிட்டானா பிற.” என்ற சாமந்திக்கு,

“கல்லா இருந்தா கூட பரவாலயேடி மந்தி இந்த மாதிரி தொவச்சு தொவச்சு கொஞ்சமாச்சும் கரைய வெக்கலாம். நம்மளை கட்டிக்கிட்டதுங்க பாறையால இருக்கு. மொத்தமா உடைஞ்சி உருளுமே தவிர கரையாதுங்க.” என்றாள் ஒளிர்பிறை.

“அது வேணா உண்மைதான்.” என்றவள் ஒளிர்பிறை துவைத்துக் கொண்டிருக்கும் கல்லின் முன்பு அமர்ந்து, “கொஞ்சம் அப்டி தள்ளி தொவ” என துவைத்துக் கொண்டிருந்த துணியை ஒதுக்கி வைத்தாள்.

“அடியே கூறுக்கெட்டவளே என் புருச சட்டைய தொடாதடி.” என அவள் தொட்ட ஆடையை வெடுக்கென்று பிடுங்கிக் கொள்ள, சோப்பு நுரை லேசாக சாமந்தியின் கண்ணில் பட்டது.

விழிகளை காத்துக் கொள்ள உடனே கைகள் அவ்விடத்தை இறுக்கமாக மூடிக்கொண்டு, “இந்தாடி, எதுக்கு இம்புட்டு வேகமா புடிங்கி என் கண்ண நொள்ளையாக்க பாக்குற.” என உஷ்ண பேச்சுக்களை குளிர்ந்த நீரோடு வெளியிட்டாள்.

“உன் கண்ணு நொள்ளையான கூட பரவால்ல. ஆனா, என் மாமன் சட்டையில என்னை தவிர வேற எந்த பொண்ணோட கையும் படக்கூடாது.” என்றவள் ஆசையோடு கணவனின் ஆடையை கல்லின் ஓரம் விரித்து போட்டாள்.

ஆற்றங்கரை நீரை அள்ளி கண்ணில் தெளித்து நுரைப்பட்டதை சரிப்படுத்திக் கொண்ட சாமந்தி, “அடியே கூறுக்கெட்டவளே…! பெரிய ஊரு உலகத்துல இல்லாத மைனர் சட்டை உன் புருசன் சட்டை. இவ கையத்தவிர வேற கை பட்டா பொசுங்கிப் போயிடும்.” என்றிட,

“மைனர் சட்டைய வுட ஒசந்த சட்டை என் மாமன் சட்டை. அதுல உரிமை பட்டவ என் கை மட்டும்தா படனும். வேற எவளாவது கை இதுல பட்டுச்சு அறுத்து எறிஞ்சிடுவ.” என்றாள் ஒளிர்பிறை.

“சரிதா போடி இவளே….இவ புருச மட்டும்தா சட்டை போடுற மாதிரி அலுத்துக்குறா.” என்றவள் அழுக்குத் துணிகளோடு இருக்கும் மனம் கவர்ந்தவனின் துணியை எடுத்து கல்லின் மீது போட்டாள்.

“என்னா இருந்தாலும் என் புருச சட்டை மாதிரி வராது.”

“ஆமாமா இந்த மாதிரி அழுக்கெல்லாம் என் புருச சட்டையில இருக்காது.”

“அடியே மந்தி என் புருச சட்டை வேணா அழுக்கா இருக்கலாம் மனசு பூப்போல வெள்ளைடி வெள்ளை.”

“பாத்து பிற எவளாவது வந்து அழகா இருக்குதுனு அள்ளி கொண்டைல முடிஞ்சிக்க போறா.” என்றதும் பதமாக தேய்த்துக் கொண்டிருந்த கணவனின் சட்டையை கைக்குள் சுருக்கி கல்லில் அடித்து,

“அம்புட்டு தைரியம் எந்த சிறுக்கிக்கு கெடக்கு. எவளாவது அந்த நெனப்போட என் மாமன நெருங்குனானு வெச்சுக்க கழுத்த கடிச்சு மொத்த ரத்தத்தியும் குடிச்சிடுவ.” என கழுத்தை கடிப்பது போல் சாமந்தி அருகில் சென்றாள்.

“இந்தாடி பிற நா உன் கொழுந்த பொண்டாட்டி.” அவளிடமிருந்து தப்பிக்க ஒரு அடி முகத்தை பின் நகர்த்தியவள் அவசரமாக கூற,

“அதனால தான்டி மந்தி உன் ரத்தத்த குடிக்காம இருக்க.” என்றாள்.

“காதல் ரொம்ப முத்தி போய் கிடக்கு பிற உனக்கு. இப்டியே போனா
முத்தி போச்சுன்னு கூட்டிட்டு போயி வைத்தியர் முன்னாடி படுக்க வெச்சிட போறாய்ங்க.”

கோபம் கொண்ட முகம் உடனே புன்னகையை சிந்தி, “மருந்து என் மாமனா இருக்கும்போது நா எதுக்கு வைத்தியர் கிட்ட போவணும்.” வெட்கப்பட்டது.

“ஒரு காலத்துல என்னை பைத்தியமா சுத்திட்டு கெடக்கன்னு சொன்னவ இப்ப பைத்தியமா கெடக்குறதை பாக்க சந்தோசமா இருக்கு.”

“இந்தாடி உன்ன மாதிரி எதிர்ல இல்லாத ஆள நெனைச்சு பேசிட்டு ஒன்னு  கெடக்கல‌.” என்றதும் சாமந்தி கமுக்கமாக பேச்சை நிறுத்தி விட,

“உன் சாயம் வெளுத்து போயி ரொம்ப வருசம் ஆவுது மந்தி.” கலாய்த்தாள் தோழியை.

“காதலிக்கிற வயசுல அப்டி இப்டித்தா இருப்பாய்ங்க ‌” நாசுக்காக காதல் கள்ளத்தனத்தை அவள் மழுப்ப,

“எது? என் கொழுந்தன் கண்ண வுட்டு மறைந்து அரை மணி நேரம் ஆனது கூட தெரியாம வர்ணிச்சிட்டு இருந்தியே அதுவா.” கேலி பார்வையோடு கேட்டாள் ஒளிர்பிறை.

உடனே வெட்கம் அநியாயத்திற்கு அவள் முகத்தில் ஒட்டிக்கொள்ள, “ச்சீ போ பிற!.” சோப்பு கையோடு தோழியை தள்ளிவிட்டாள்.

“அடியே மந்தி! தண்ணிக்குள்ள வுழுந்துட போற மாத்து துணி கூட கொண்டு வரல.”

இருவரும் தாலி கட்டிய கணவன்களின் மீது கொண்டுள்ள காதலை கேலி கூத்தோடு வெளிப்படுத்திக்கொள்ள, உச்சி வெயில் இருவரையும் வாட்டியது. நெற்றியில் பூக்கும் வேர்வை துளிகளை உதாசினம் செய்து அனைத்து துணிகளையும் துவைத்து முடித்தவர்கள் கொண்டு வந்த அண்ணக்கூடையில் நிரப்பினார்கள்.

“ரெண்டு மூணு நாலுல ஏதாச்சும் ஏற்பாடு பண்ணனும் பிற. இல்லினா எல்லா வீணா போயிடும்.” ஆரம்பத்தில் வருத்தப்பட்ட பேச்சிற்கு கிளம்பும்பொழுது வந்துவிட்டாள் சாமந்தி.

“ஆமாடி மந்தி. இப்டியே விட்டா நம்ம இத்தினி நாளு போட்ட உழைப்பு எல்லா வீணா போய்டும். பம்பை உடுக்கை அடிக்குறதை தவிர வேற தொழில் செய்ய மாட்டேன்னு அடம் பிடிச்ச நம்ம வூட்டுக்காரங்களை சமாதானப்படுத்தி இத பண்றதுக்கே பெரும் பாடா ஆயிடிச்சு.  இப்போ இத லேசுல விட்டோம் அத்தோட போதுனு வூட்டுக்கு ரெண்டு மாட்ட வெச்சிட்டு மீதி எல்லாத்தியும் வித்து போடுவாங்க.”

“அந்த பயம் தான் இப்ப எனக்குள்ள அதிகம். ஏதோ உனக்காது வூட்டுக்குள்ள தமிழு ஆதரவு இருக்குறதால மாமா பெருசா வாக்குவாதம் பண்ணாம மாடு, ஆடு, கோழின்னு வாங்கி போட்டாரு. என் புருசன் கிட்ட மல்லுக்கு நின்னு போராடி வாங்கி இருக்கனே இது எல்லாத்தியும். இப்போ வீணா போவுறதை பாத்தாருன்னு வையி… நா அப்பவே சொன்ன இதுலா நமக்கு ஒத்து வராதுனு நீயக தான் கேக்கலன்னு மொத்தமா என் பக்கம் திரும்பிடுவாரு.”

சாமந்தியோடு நடந்து கொண்டிருந்த ஒளிர்பிறை சட்டென்று நின்று விட்டாள். தன்னோடு நடந்த தோழி நின்று விட்டதில் திரும்பிய சின்னவள் கேள்வியோடு புருவம் சுருக்க, “பேசாம தமிழு கிட்ட கேப்போமா மந்தி.” என்றாள் யோசனை மாறாது ஒளிர்பிறை.‌

“என்னாத்த பிற”

“நேத்து என்னாமோ பக்கத்து ஊருல இருக்க ஒருத்தர் வூட்டுக்கே வந்து பால் வாங்கிட்டு போறதா சொல்லிக்கிட்டு கெடந்தா. நா தான் யோசிச்சு முடிவு பண்ணுவோம் தமிழினு தடுத்து வெச்சிருந்த. இப்டி புலம்பிக்கிட்டு இருக்குறதுக்கு அவன் கிட்ட கேட்டா நல்ல யோசனையா சொல்லுவா.”

“இது கூட நல்ல யோசனைதா பிற. தமிழு கிட்ட கேட்டா தான் இதுக்கு ஒரு நல்ல முடிவு கெடைக்கும்.” என்ற தோழிகள் இருவரும் முடிவோடு செந்தமிழனை காண புறப்பட்டார்கள்.

இந்நேரம் கொழுந்தன் எங்கிருப்பான் என்பதை நன்கு அறிவார்கள் இருவரும். ஊர் ஒதுக்குப்புறமாக இருக்கும் பொது இடங்களை சுத்தம் செய்து கொண்டிருப்பான். தேவையில்லாத வேலை என்று பலர் சொல்லியும் இன்றுவரை கேட்காதவன் வேண்டிய செடி கொடிகளை தவிர மீதம் இருந்து அனைத்தையும் வெட்டி ஊரையே அழகுப்படுத்திக் கொண்டிருக்கிறான்.

கூடவே பார்க்கும் இடங்கள் எல்லாம் பனை மரங்கள் இருக்க வேண்டும் என்பது அவன் விருப்பம். அதற்கேற்றார் போல் பனை மர பந்துகளை வீசிக் கொண்டிருந்தவன் திரும்பினான்,

“தமிழு” என்ற அண்ணன் மனைவிகளின் ஓசையில்.

சீமை 32

மாநிறம் கொண்ட முகம் கருத்துப் போயிருந்தது கதிரவன் பழிவாங்கியதில். வீட்டில் இருக்கும் ஐவரில் செந்தமிழன் மட்டுமே மாநிறமாக இருப்பான். மிதம் இருக்கும் நால்வரும் அவர்கள் ஊருக்கு சொந்தமான கலரில் மின்னுவார்கள்.

கொழுந்தன் மதனியிடம் அதிகம் திட்டு வாங்குவது முகம் கருத்து போவதற்கு தான். இன்றும் அதையே பின்பற்றினாள்,

“உனக்கு எத்தினி மொற தமிழு சொல்றது உச்சி வெயில்ல இப்டி வேல பாக்காதன்னு. முகத்தைப் பாரு எப்டி கருத்து போயி இருக்குனு.” என்று.

தோளில் தொங்கிக் கொண்டிருக்கும் துண்டால் முகத்தை துடைத்தவன் புன்னகையோடு, “இதா மதினி நம்ம ஊரு கலரு. நா தான் வூட்லயே மாத்தி பொறந்துட்ட.” என்றான்.

“மாத்தி எல்லா ஒன்னு பொறக்கல. உன் தாத்தா இந்த கலருனு அடிக்கடி அய்த்த சொல்லி கேள்விப்பட்டிருக்க.”

மூவரும் ஒரே இடத்தில் நிற்க, வெயில் கொளுத்தியது. ஒளிர்பிறை கொழுந்தனை விடாமல் திட்டிக் கொண்டிருக்க, சாமந்தி அவன் கையால் அழகு படுத்தப்பட்ட இடத்தை ரசித்தாள். சின்னவன் அவள் ரசனையை கண்டு,

“என்னா மதினி அப்டி பாக்கறீங்க?” கேட்டான்.

“இந்த மாதிரி எடத்துல கைய வெச்சு சுத்தம் பண்றமேன்னு அருவருப்பா இருக்காத தமிழு உனக்கு.” என்ற மதினியின் பேச்சுக்கு புன்னகையை பதிலாக கொடுத்தான்.

“அட, நீ வேறடி மந்தி. நேத்து என்னா தெரியுமா பண்ணா….” என இழுத்த மதுரவீரனின் மனைவி ஒருமுறை கொழுந்தனை பார்த்துவிட்டு,

“சுடுகாட்டு பக்கம் இருக்க எடத்த சுத்தம் செய்ய போறன்னு மண்வெட்டிய எடுத்துக்கிட்டு கிளம்பிட்டான்.” என்றதும் நெஞ்சில் கை வைத்தாள் சாமந்தி.

“தமிழு அந்த எடத்துலதா இந்த ஊரு பயலுங்க அத்தினி பேரும் குடிச்சுபுட்டு அசிங்கம் பண்ணிக்கிட்டு கெடப்பாய்ங்க.”

“அத தான்டி மந்தி நானும் சொன்ன.  சொன்னதுக்கு இவன் என்னா சொன்னான்னு நீயே கேளு.” என்றாள் ஒளிர்பிறை.

வாயால் கேட்காமல் கேள்வி முகபாவனையோடு கொழுந்தனை சாமந்தி நோக்க, “அசிங்கத்தோட அசிங்கமா இருந்துட்டு போவட்டுனு தான அங்க உக்காந்து குடிக்கிறாய்ங்க. சுத்தம் செஞ்சி அழகுபடுத்திட்டா உக்கார யோசிப்பாங்கல மதினி.” என்றான் கனிவான புன்னகையோடு.

“அதுக்குனு எவனோ பண்ண அசிங்கத்த நீயி எடுத்து போடுவியா.”

“அதுக்கு என்னா மதினி பண்ண முடியும். நீங்க சொல்லும்போதே எவ்ளோ அருவருப்பா சொல்லுறீங்க. அந்த அருவருப்பு நம்ம வூட்டு பொம்பளைங்களுக்கு போவணுனா நம்மதா இறங்கி வேலை பாக்கணும். ஒருமுறை சுத்தம் பண்ணி ஊரு மக்களுக்கு அந்த எடத்தோட அழக காட்டிட்டா அடுத்த மொற எவனாவது அசிங்கம் பண்ண வரும்போது கேள்வி கேப்பாய்ங்க. அதுக்கு பயந்துக்கிட்டு அந்த எடத்து பக்கம் ஆரும் வர மாட்டாய்ங்க.”

“அதெல்லாம் இங்க இருக்க கேடுகெட்டவங்களுக்கு தெரியாது தமிழு. இந்த மாதிரி கிறுக்குத்தனமான வேலைய இன்னொரு மொற செய்யணுனு நெனைக்காத. அந்த அசிங்கம் அவங்களோட போவட்டும். உன் மனசு போல நீயி சுத்தமான எடத்துல இரு.” என்ற சாமந்தியின் பேச்சுக்கு மதிப்பளித்து தலையாட்டினான்.

“சரி மதினி, நீங்க என்னா இந்த வெட்ட வெயில்ல இவ்ளோ தூரம் வந்து இருக்கீங்க. போன போட்டு இருந்தா நானே வந்து இருப்பேன்ல.”

“நீயி எப்ப எங்க இருக்கனு தெரிய மாட்டேங்குது தமிழு. எதுக்கு தொந்தரவு பண்ணிக்கிட்டுனு நாங்களே வந்துட்டோம்.” ஒளிர்பிறை.

“பெரிய வார்த்தை எல்லா பேசாதீங்க மதினி. நீங்க வாடான்னு சொன்னா வரப்போற.”

“அப்படியெல்லாம் வாடா போடான்னு பேசுற உரிமை எங்களுக்கு இல்லியே தமிழு” என்றாள் சாமந்தி.

“உங்களுக்கு இல்லாத உரிமையா மதினி. எங்க அம்மாக்கு அடுத்து என்னை திட்டவும் அடிக்கவும் உரிமை உள்ள ரெண்டு பேரு நீங்க மட்டும் தான்.” பேச்சால் மதினிகளின் மனதை அடிக்கும் வெயிலில் இருந்து குளிர்வித்தான்.

“இந்த பேச்செல்லாம் பொண்டாட்டின்னு ஒருத்தி வர வரைக்கும் தான சொல்ல போற. அதுக்கப்புறம் பொண்டாட்டிக்கு பயந்துக்கிட்டு எங்க கிட்ட பேசக்கூட யோசிப்ப. எதுக்கு அப்பப்ப உரிமைய மாத்திக்கிட்டு… நாங்க இப்டியே இருந்துட்டு போறோம்.” விளையாட்டிற்கு பேசினாலும் உள்ளுக்குள் வருத்தம் எழத்தான் செய்தது ஒளிர்பிறைக்கு.

கொழுந்தன்கள் நால்வரையும் கைக்குள்ளையே வைத்து பாதுகாப்பவள் நாளை தனி குடும்பம் என்று பிரிந்து செல்லும் நாளை எண்ணி தவித்தாள். அதுவும் ஒத்துழைக்காத
ஓரவத்திகள் வந்துவிட்டால் கொழுந்தன்களோடு சுமுகமான உறவு நிலைக்காது என்ற கவலை தான் அதிகம் உருவாகியது.

“அந்த மாதிரி சொல்றவளை நா கட்டிக்க மாட்ட மதினி. உங்களையும் நம்ம குடும்பத்தியும் முழுசா ஏத்துக்குற ஒருத்தியத்தா என் வாழ்க்கை துணையா தேர்ந்தெடுப்ப.” உள்ளத்தில் உதித்திருக்கும் எண்ணத்தை மறைக்காது அண்ணன் மனைவியிடம் கூற,

“இவ்ளோ உறுதியாக சொல்றத பாத்தா ஆள பாத்துட்ட மாதிரி தெரியுதே.” ஒளிர்பிறை அறியாது குறும்பு பார்வையோடு செந்தமிழனை பார்த்து கேட்டாள் சாமந்தி.

சிரித்துக் கொண்டிருந்த முகம் திருட்டு முழியோடு தலை குனிந்து கொள்ள, “இந்தாடி என் வூட்டு புள்ளை சொக்கத்தங்கம். எதுத்தால பொம்பள புள்ளைங்க வந்தா கூட தலைய குனிஞ்சு நடக்குற ஆள பாத்து என்னா பேச்சு பேசுற.” கொழுந்தனுக்காக வக்காலத்து வாங்கினாள் மூத்த மருமகள்.

‘அப்படியா!’ என்பது போல் செந்தமிழனை ஓரக் கண்ணால் பார்த்த சாமந்தி, “நீ இப்டியே நம்பிக்கிட்டு இரு பிற. ஒரு நாளு இல்ல ஒரு நாளு இவ தான் நா கட்டிக்க போற பொண்ணுன்னு உன் முன்னாடி நிறுத்த போறானா இல்லியான்னு பாரு.” என்றாள் தேன்மொழியை மனதில் நினைத்துக் கொண்டு.

“மத்த மூணு பேர வேணா சொல்லு மந்தி நா ஒத்துக்குற. ஆனா, தமிழு நீ நெனைக்குற மாதிரி இல்ல. அவனுக்கு நாங்கதா பொறுப்பா பொண்ண பாத்து கட்டி வெக்கணும்.” உறுதியோடு கூறும் மதினியின் பேச்சு வருத்தத்தை கொடுத்தது அவனுக்கு.

கொழுந்தனின் முக மாறுதல்களை அறிந்த சாமந்தி, “ஒரு பேச்சுக்கு கேக்குற…ஒருவேளை தமிழு காதலிச்சா ஒத்துக்க மாட்டியா பிற?” என வருங்காலத்தை நினைத்து அவள் தோழியிடம் கேட்க,

“ஆரு சொன்னா ஒத்துக்க மாட்டன்னு? வாடி என் வூட்டு ராசாத்தினு குத்து விளக்க ஏத்த ஆரத்தி எடுத்து முதல் ஆளா கூப்பிடுவ.” என்ற வார்த்தையில் சோர்ந்த கொழுந்தனின் முகத்தில் சிரிப்பை விதைத்தாள்.

“ஆரா இருந்தாலும் கூப்பிடுவியா?” என்ற தோழியின் கேள்விக்கு குழப்பமாக கொழுந்தனை ஒருமுறை பார்த்து விட்டு, “எதுக்கு இப்ப இந்த மாதிரி கேக்குற? தமிழு மாதிரி ஒரு பைய தப்பான வூட்டு பொண்ண தேர்ந்தெடுக்க மாட்டா. எங்களுக்கு பொண்ணு பாக்குற வேல மிச்சம்னு மனசார ஏத்துப்போம்.” என்றிட, விழியால் உன் வழியில் தடையில்லை என்பதை சுட்டி காட்டினாள் சாமந்தி.

விரைவில் மதினியிடம் காதல் விவகாரத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற உறுதியோடு, “என் கண்ணாலத்துக்கு இன்னு நிறைய நாளு இருக்கு மதினிகளா. அப்போ எல்லாத்தியும் பேசி தீர்த்துக்கலாம்.  இப்ப என்னா விசயம்னு சொல்லுங்க.” என பேச்சை மாற்றினான்.

அப்பொழுதுதான் பேச வந்த விஷயம் இருவர் மனதிலும் நினைவிற்கு வர, “ஒன்னு இல்ல தமிழு எல்லா அந்த சொசைட்டி பிரச்சனைய பத்தி தான். இப்டியே போனா பாலு தெனமும் வீணா போயிடும்.” வந்த விஷயத்தை ஆரம்பித்து வைத்தாள் சாமந்தி.

“இத பேச எதுக்கு இவ்ளோ தூரம் வந்தீங்க மதினி. நானே சாயங்காலம் வூட்டுக்கு வந்து பேசலாம்னு இருந்த. பக்கத்து ஊருல கதிரேசன்னு ஒருத்தர் சொசைட்டி மாதிரி ஊரு மக்கள் கிட்ட பால் வாங்கி தனியா வியாபாரம் பண்ணிக்கிட்டு இருக்காரு. அவர்கிட்ட காலையில பேசிட்டு வந்த. ரெண்டு நாளுல முடிவ சொல்றன்னு சொல்லி இருக்காரு.”

“எதுக்கு தமிழு ரெண்டு நாளு?”

“இப்ப எல்லாரும் சொசைட்டிக்கு பால் குடுக்குறதால பாதியில வுட்டுட்டு போயிடுவாங்கன்னு பயப்படுறாரு.”

“அதுல என்னா பயம் அவருக்கு” சாமந்தி.

“இவரே ஒவ்வொருத்தர் வூட்டுக்கும் போயிட்டு பால வாங்கி விற்பனை பண்றாரு மதினி. வூட்டுக்கே வந்து எடுக்குறதால சொசைட்டியில குடுக்குறதை வுட ரெண்டு ரூபா மூணு ரூபா கம்மியா தரறாரு. அதனால பாதி பேரு நடுவிலேயே விலகிடுறாய்ங்க போல. அதான் யோசிச்சு சொல்றன்னு சொல்லி இருக்காரு.”

“அந்தக் கட்டையில போற சிவகுமாரால இனிமே நம்ம சொசைட்டி பக்கமே போவ முடியாதுன்னு சொல்றது தான தமிழு” ஒளிர்பிறை.

“அதியும் சொல்லிட்ட மதினி. இருந்தாலும் யோசிச்சு சொல்றன்னு சொல்லி இருக்காரு.”

“அந்தக் கேடு கெட்டவன் பண்ண தப்பால இப்போ நம்ம அவஸ்தைப்பட வேண்டியதா கெடக்கு.” சாமந்தி சிவகுமாரை திட்ட,

“அவன சும்மா வுடக்கூடாது மதினி. எப்டியாது அவன் செஞ்ச தப்ப கண்டுபிடிச்சு வேலைய வுட்டு தூக்கணும்.” மனதில் குடிகொண்டிருக்கும் எண்ணத்தை கூறினான்.

“நம்ம என்னா பண்ண முடியும் அவனை? செய்யுற தப்புக்கான தண்டனைய கடவுள் குடுப்பாருனு வுட்டுட்டு போ தமிழு”

“இந்த மாதிரி எண்ணம் தான் தப்பு செய்றவங்களுக்கு பெரிய வசதியா போயிடுது மதினி. கஷ்டப்பட்டு மாடு வளர்க்குற நம்மளை ஏமாத்துறதும் இல்லாம, சொசைட்டி நடத்துறவங்களையும் ஏமாத்திக்கிட்டு இருக்காரு. இவ்ளோ நாள் எம்புட்டு காசையும் பாலையும் கொள்ள அடிச்சாருன்னு தெரியல. தப்ப பாத்தும் தட்டிக் கேக்காம இருந்தோம்னா நம்மளை சாமி மன்னிக்காது.”

“அப்டி கேட்டதால தான போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போயிட்டு வந்த. அதுவுமில்லாம ஒரு தப்ப தைரியமா செய்றானா அவனுக்கு பின்னாடி ஆள் பலமும் பண பலமும் நெறைய இருக்கும். இந்த மாதிரி ஆளுகிட்ட முட்டி மோதி முன்னுக்கு வர முடியாது. அவன் போக்குல அவன வுட்டுட்டு உன் வேலைய பாரு தமிழு.”

“நீங்க ஆரு என்னா சொன்னாலும் சரி மதினி அவனை நா சும்மா வுட மாட்ட. கறந்த பாலுல கலப்படம் பண்றவன் அரக்கனை விட மோசமானவன். அவன் செஞ்ச தப்ப எப்டியாது ஆதாரத்தோட நிரூபிச்சு அந்த வேலைய வுட்டு தூக்குனாதா எனக்கு நிம்மதி. அதுவும் இல்லாம தம்பிங்க ரெண்டு பேத்தியும் அடிக்க வேற செஞ்சிட்டாரு. அதுக்காகவாது அவனுக்கு தண்டனை குடுக்கணும்.”

“எதுவா இருந்தாலும் பாத்து செய் தமிழு. நாள பின்ன உனக்கு ஏதாச்சும் ஒன்னு ஆச்சுன்னா தம்பிங்கன்னு சொன்னியே அவுனுங்க ரெண்டு பேரும் வந்து நிக்க மாட்டாய்ங்க.” தான் கட்டியவன் உடன் பிறந்தவர்கள் என்றாலும் செந்தமிழன் நலனுக்காக உள்ளதை பேசினாள் சாமந்தி.

“அப்டி எல்லா சொல்லாதீங்க மதினி. ஆரோ செஞ்ச தப்பயே தட்டிக் கேக்கும் போது அண்ண எனக்கு ஒரு தப்பு நடந்தா வுட்டுடுவானுங்களா.”

“நீயி மட்டும் இந்த வூட்ல ஒரு வித்தியாசமா இருக்க தமிழு. உன்ன மாதிரி இவங்க ஏழு பேரும் இருந்துட்டா எவ்ளோ நல்லா இருக்கும் நம்ம வாழ்க்கை.” என வருத்தப்படும் மதினியை தேற்றியவன் இருவரோடும் வீட்டை நோக்கி பயணித்தான் பாதியில் பயணத்தை நிறுத்தப் போகிறோம் என்பதை அறியாமல்.

சீமை 33

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் ஒன்று அரசினர் கலைக்கல்லூரி. பெரும்பாலும் சிறுமயிலூர் கிராமத்தில் இருக்கும் ஆண் பெண் இருவரும் இங்குதான் படிக்க வருவார்கள்.

அப்படி வந்து சேர்ந்தது தான் வானரப்  படையில் மூவர். முதலில் இமையவன் வர பின்னால் எழில்குமரனும் சிலம்பனும் வந்து சேர்ந்தார்கள். அதில் இருந்து அந்தக் கல்லூரி தன் நிம்மதியை இழந்து விட்டது.

குறிப்பாக எழிலும், சிலம்பனும் ஒரே வகுப்பில் பயில, படிக்கும் வகுப்பறை நாள் தவறாமல் நொந்து கொண்டிருக்கிறது ஏன் தான் இங்கு வந்தார்கள் என்று. சிலம்பன் தனி ஆளாக நின்று சமாளிக்க, சின்னவன் அண்ணன் இமையவனை அழைத்து வருவான் ஓயாமல். அதற்குப் பழி தீர்க்கவே ஊருக்குள் சமயம் பார்த்து சேட்டை செய்வான் சிலம்பன்.

உணவு இடைவேளையில் தனியாக அமர்ந்திருக்கும் சிலம்பனை பார்த்த எழில்குமரன் கல்லை எடுத்து அடித்தான் அவன் அறியாது. முதலில் ஒன்றும் புரியாமல் அமர்ந்திருந்தவன் யாரோ வேண்டுமென்று அடிப்பதை உணர்ந்து கவனித்தான்.

மரத்துக்கு பின்னால் இருக்கும் எழிலின் உடலை கண்டு கொண்டவன், “எடேய்! ஒளிஞ்சிருந்து ஒருத்தன அடிக்க வரியே உனக்கு கொஞ்சம் கூட வெக்கமா இல்லியா.” என்றான் சத்தமாக.

“நேரா நின்னு அடிக்குற அளவுக்கு நீயி அம்புட்டு பெரிய ஆளு இல்லிடா வெண்ண.” மறைந்திருக்கும் மரத்தை விட்டு வெளி வந்தவன் தைரியமாக பேச,

“ஏன்டா கண்ணு தெரியாத கூமுட்டை நா உன்ன வுட பெருசா தானடா இருக்க. நீதா என்னாமோ எலிக்கு பேன்ட் சட்டை போட்ட மாதிரி இருக்க.” பேச்சில் சளைத்தவன் இல்லை என்பதை நிரூபித்தான் சிலம்பன்.

“ஆர பாத்துடா எலினு சொன்ன கிறுக்கு பயலே.”

“பாத்தியா கண்ணு தெரியலன்னு நீயே ஒத்துக்குற” கைத்தட்டி சத்தமாக சிரித்து கேலி செய்தவன், “மதுரவீரன் தம்பி எழில்குமரன் உன்ன தாண்டா சொல்ற என் வெண்ண.” என்றான்.

“வளரக்கூடாத அளவுக்கு வளர்ந்துட்டு பேசறான் பாரு வெத்து வெட்டு. பன மரத்த அசிங்கப்படுத்தற மாதிரி பொறந்துட்டு வெட்கமே இல்லாம பேசுறா பாரு.”

“எனக்கு எதுக்குடா வெட்கம் வரணும் நா என்னா சமஞ்ச புள்ளையா.”

“வெக்கமா இல்லியான்னு கேட்டதுக்கு சமஞ்ச புள்ளைய பத்தி பேசுறியே நாதாரி பயலே இதுல இருந்து தெரியலையாடா நீயி எம்புட்டு பெரிய ஆம்பளன்னு.” சிலம்பனை உசுப்பி விடுமாறு எழில்குமரனின் பேச்சு இருக்க,

“காலேஜ்னு பாக்குற ஒழுங்கா என் கண்ணு முன்னாடி நிக்காம கிளம்பிடு. இல்லினா இன்னையோட நா ஜெயிலுக்கு போவ வேண்டியதா இருக்கும்.” கோபம் எட்டி பார்ப்பதால் எச்சரிக்கை விடுத்தான் சிலம்பன்.

“அடேங்கப்பா! வாடா மாவீரனே…
நீயி என்னா பண்ணுறன்னு நானும் பாத்துடுற.” வேண்டுமென்றே எழில்குமரன் அவன் முன்பு நிற்க,

“காலேஜ்ல ஒன்னு பண்ண மாட்டன்ற தைரியத்துல தானடா இந்த பேச்சு பேசுற. நீயி மட்டும் ஆம்பளையா இருந்தா காலேஜ வுட்டு வெளியே வாடா.” சட்டை காலரை மடித்து விட்டுக்கொண்டு சண்டைக்கு தயாரானான்.

“நா ஆம்பளையா இருக்குறதால தான் பேன்ட் சட்டை போட்டு இருக்க. அதைக் கூட புரிஞ்சிக்காத மடையன் உன்கிட்ட எல்லாம் நா சண்டை போடணுமா.. த்தூ.” என்றிட,

“பயந்தாங்கோலி ஓட பாக்குறியா…” கேலி செய்தான் சிலம்பன்.

இருவரும் ஒருவர் மாற்றி ஒருவர் சண்டை போடுவது போல் பேச, அங்கிருந்த மாணவர்கள் கவனிக்க ஆரம்பித்தார்கள். அந்த வழியாக சாப்பிட வந்த இமையவன் தம்பியை பார்த்துவிட்டு, “எடேய், என்னாடா வேல பாக்குற காலேஜ்ல?” என கேட்டான்.

“இங்க பாருடா வந்துட்டாரு தொம்பிக்கு நொண்ண.” சம்பந்தமே இல்லாமல் இமையவனை இழுத்தான் சிலம்பன்.

“இந்தாடா மருவாதையா கிளம்பிடு. இல்லினா கால உடைச்சி வூட்டுக்கு அனுப்பிடுவ.”

“அண்ணனும் தம்பியும் சும்மா வாய் உதாரு தாண்டா வுடுறீங்க. சண்டைக்கு வாங்கடானு கூப்பிட்டா பதறி ஓடுறீங்க” என்றவன் இமையவன் முன்பு தோரணையாக,

“என் காலு ரெண்டும் உன் முன்னாடி தான் கெடக்கு. முடிஞ்சா உடைச்சி பாருடா.” பேசினான்.

“இப்டித்தான்டா என்னை பாக்கும்போதெல்லாம் வம்பு இழுத்துட்டு கெடக்குறான். ஒரு தடவையாது இவன் வாயையோ இல்ல கை காலையோ உடைச்சு ஒரு மாசம் படுக்க வெச்சா தான் நம்ம வம்புக்கு வரமாட்டான்.” அவன் தான் முதலில் வம்பு இழுக்க சென்றது என்பதை மறந்து அண்ணனிடம் புகார் வாசித்தான் எழில்குமரன்.

“எடேய் வாங்கடா.” என்ற சிலம்பன் இமையவன் சட்டை மீது கை வைக்க, சண்டை வெடித்தது கல்லூரியில். மூவரும் தாக்கிக் கொண்டார்கள் சரிசமமாக. கூடியிருந்த மாணவர்கள் கூட்டம் தலைமை ஆசிரியர் வரை செய்தியை கொண்டு சென்றது.

கல்லூரி முதல்வர் மூவரையும் நிற்க வைத்து கண்டித்தார். நாளை வீட்டில் இருந்து யாராவது ஒருவர் வரவேண்டும் என்ற கட்டளையோடு அவர்களை அனுப்பி வைக்க, முறைத்துக் கொண்டே அவரவர் அறைக்கு திரும்பினார்கள். இமையவன் தனியாக இருந்து கொள்ள, ஒரே வகுப்பறையில் அன்றைய நாள் முழுவதும் எதிரிகள் இருவரும் முறைத்துக் கொண்டிருந்தார்கள்.

***

“என்னா மாமா நீங்க இவ்ளோ சாதாரணமா சொல்றீங்க. உங்களுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேல. அவுனுங்க குடும்பத்துக்கும் உங்களுக்கும் ஆவாதுனு தெரியும் தான. அவுனுங்க எக்கேடு கெட்டு போறாய்ங்கன்னு நம்ம வூட்டு பால குடுத்துட்டு வர்றதை வுட்டுட்டு இப்டி வம்பை இழுத்துட்டு வந்து இருக்கீங்களே.” கல்லூரி முடித்து வந்த தேன்மொழி காதலனை குற்றம் சாட்டிக் கொண்டிருந்தாள்.

“ஆவாத குடும்பமா இருந்தாலும் அவுனுங்க என்னோட தம்பிங்க. எப்டி வுட்டுட்டு வர முடியும் தேனு.”

“சும்மா இதே பல்லவிய பாடிட்டு இருக்காதீங்க. நீங்க மட்டும் உறவு வேணுனு நெனைச்சா போதாது அவுனுங்களும் நெனைக்கணும். தம்பிங்கன்னு ஓடி உங்களுக்கு ஏதாச்சும் ஆகி இருந்தா என் நெலைமை என்னா ஆவுறது? ஏற்கனவே எப்படா வூட்ல விசயம் தெரிஞ்சி குத்தம் சொல்லப் போறாய்ங்கன்னு பயந்துக்கிட்டு கெடக்க. இதுல நீங்க வேற உங்க பங்குக்கு நல்லா பண்றீங்க மாமா.” தோளில் மாட்டிய கல்லூரி பையை இழுத்து விட்டுக்கொண்டு கோபத்தை கொட்டும் காதலியின் அழகை ரசித்துக்கொண்டிருந்தான் செந்தமிழன்.

காதலன் ரசிப்பதை கண்டும் காணாமலும் கடந்தவள், “இனிமே அவுனுங்க இருக்க பக்கம் போவாதீங்க. சட்டு புட்டுன்னு ஏதாச்சும் ஒரு வேலைய புடிச்சு போவ பாருங்க.” என்றிட,

“நா இப்போ வேலை பாத்துட்டு தான இருக்க தேனு.” என்றான் ரசிப்பதை நிறுத்தி.

நேருக்கு நேராக அவனைப் பார்த்து முறைத்தவள், “விவசாயம் பாக்குறதுக்கா அவ்ளோ தூரம் படிச்சீங்க.” என கேட்க,

“விவசாயம் சார்ந்த படிப்ப தான நா படிச்சிருக்க தேனு.” என்றான்.

“சரி விவசாயம் பாக்குறீங்க அதை நல்லதா பாத்தா என்னா. ஊரு முச்சந்தியில இருக்குற எடத்தை சுத்தம் பண்றதுக்கு பேருதா விவசாயமா.”

“அது நம்ம ஊரோட விளை நிலம் தேனுமா‌.”

“கொஞ்சமாது என் பயத்தை புரிஞ்சுக்கோங்க மாமா. உங்க ஆசைய தடுக்கணும்னு எண்ணம் எனக்கு இல்ல. நீங்க இந்த மாதிரி இருக்குறதை காரணம் காட்டி நம்ம கண்ணாலத்த நிறுத்திடுவாய்ங்களோன்னு பயமா இருக்கு. என்னால உங்களைத் தவிர வேற யாரையும் கட்டிக்க முடியாது. அப்டியே ஏதாச்சும் பிரச்சனை நடந்து நம்ம கண்ணாலம் நடக்காம போயிட்டா நா செத்து போயிடுவ.” என ஆவேசமாக பேசும் தேன்மொழியின் வாயை அடைத்தான் அவள் காதலன்.

செந்தமிழன் விழிகளில் தென்பட்ட வலியில் பேசிய வார்த்தை தவறு என்பதை உணர்ந்தவள், “மனசு கிடந்து அடிச்சிக்குது மாமா. ஆராது உங்களை என்கிட்ட இருந்து பிரிச்சிடுவாய்ங்களோன்னு.” என்று கண்கலங்கினாள்.

காதலியின் கண்ணீரை விரல்களில் ஒட்டி எடுத்தவன், “நம்மளை ஆரு தேனு பிரிக்க போற? அப்டியே ஆராது பிரிக்க பாத்தாலும் அது எல்லாத்தியும் சரி பண்ணி உன்ன கண்ணாலம் கட்டிப்ப. இது நா வணங்குற மதுரவீரன் மேல சத்தியம்.” என அவள் தலையில் சத்தியம் செய்தான்.

“ஆரு என்னா சொன்னாலும் என்னை வுட்டுட்டு போக மாட்டீங்கல.”

“எதுக்கு உனக்கு இம்புட்டு பயம் வருதுன்னு சுத்தமா புரியல தேனு. நீயி என்னோட மாமன் பொண்ணு அதுவும் உங்க அக்காவ தான எங்க அண்ண கல்யாணம் பண்ணி இருக்காரு. ரெண்டு வீட்டுக்கும் சுமுகமான உறவு இப்ப வரைக்கும் இருக்கு. அப்டி இருக்க நமக்கு எதிரா ஆரு பேச போறாய்ங்க.”

“அதெல்லாம் எனக்கு தெரியல மாமா. ஆனா, மனசுல ஏதோ சங்கடம் உருவாகிட்டே இருக்கு. என் படிப்பு முடிஞ்சதும் நம்ம விசயத்தை வூட்ல சொல்லிடலாம்.” என அவனின் நெஞ்சில் சாய்ந்தாள் தேன்மொழி.

காதலி சாய்ந்ததும் பதறியவன் அக்கம் பக்கம் திரும்பி பார்த்தான். யாரும் அவர்களைப் பார்க்கும் அளவிற்கு அங்கு இல்லாமல் போக, “எத்தினி தடவ உனக்கு சொல்லி இருக்க தேனு இந்த மாதிரி மேல சாயாதன்னு.” என காதலியை தன் மார்பிலிருந்து பிரிக்க பார்க்க,

“உன்னைய வெச்சுக்கிட்டு எப்டி புள்ள பெத்துக்க போறனு தெரியல மாமா. இப்டி தொட்டு கூட பேசலனா ஊரு உலகம் நம்பாது நம்ம காதலர்கள்னு.” பிரிக்க நினைக்கும் அவன் எண்ணத்திற்கு மாறாக இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.

“ஊரு உலகத்துக்காக நம்ம வாழல தேனு. நாலு அறைக்குள்ள நடக்க வேண்டிய விசயத்தை இப்டி பொதுவெளியில பண்ணறதுக்கு பேரு காதல் இல்ல.”

இவ்வாறு கேட்டதும் அவனை விட்டு விலகியவள் தலையில் அடித்துக் கொண்டு, “உன்ன என்னா சொல்லி திட்டுறதுனு கூட தெரிய மாட்டிக்குது மாமா. ஊரு உலகத்துல உன்ன போல ஆம்பளை எவனும் இருக்க மாட்டா. எப்படா எவ கெடைப்பான்னு அலைஞ்சிட்டு இருக்க ஆளுங்களுக்கு மத்தியில காதலிக்கிறவ தொட்டா கூட சிலுத்துக்கிட்டு போறீங்க.” என்றாள்.

அலுத்துக் கொள்ளும் காதலியின் செய்கையில் புன்னகைத்தவன், “நா உன்னை தொட்டு பேசறதை வேற எந்த ஆம்பளையாது பாத்தானா உன்னை மதிக்க மாட்டா தேனு. உன்னை எவ்ளோ பத்திரமா பாத்துக்கணுனு நெனைக்கிறனோ அதை வுட முக்கியம் மத்தவங்க உன்ன மதிக்குற மாதிரி நடத்துறது.” அவனுக்கே உண்டான இயல்போடு பேசினான்.

“இந்த மாதிரி பேசியே என்னை மயக்குற மாமா.” என கன்னம் கிள்ளி முத்தமிடும் காதலியை இந்த முறை புன்னகைக்காமல் முறைத்தான்.

“அழகு மாமா நீயி.” முறைக்கும் காதலன் பார்வையில் இருக்கும் அழகை எண்ணி திருஷ்டி கழித்தாள்.

அதில் முறைத்தவன் முகம் புன்னகையை சிந்த, “சரி மாமா, அப்பா தேடுவாரு நா வூட்டுக்கு போற. இங்க அங்கன்னு சுத்தாம நீங்களும் வூடு போய் சேருங்க.” என்றவள் போவதற்கு முன்னால் ஒரு முறை இறுக்கி அணைத்துவிட்டு சென்றாள்.

காதல் வெற்றியை விட தோல்வியை தான் அதிகம் சந்தித்து இருக்கிறது என்பதை இருவரும் அறியும் நாள் விரைவில்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்