Loading

ரோமியோ-7

 

அவன்  கைகள் இன்னும் அவளை வளைக்காது இருக்க….. அவளே அவனது கைகளை எடுத்து மெதுவாக அணைத்து கொண்டாள்…….

ஏன் உங்க மதியை கட்டி பிடிக்க மாட்டிங்களா என்று அவள் உதட்டை சுழித்து கேட்க….

அவன் அமைதியாகவே இருந்தான்… அவனை மேலும் இறுக்கி….அவன் நெஞ்சத்தில் முத்தமிட்டாள் மிளிர்மதி…

இப்பவும் கோபம் போகலையா….

கோபம் எல்லாம் உன்மேல் என்னைக்கு வந்துச்சு… வருத்தம் தான்… என்று அவளை பாராமல் கூற..

என்ன வருத்தம்….

இவ்வளோ நாள் நீ சொன்ன ஒரு வார்த்தைக்காக தான் காத்துட்டு இருக்கேன்…. இவ்வளோ நாள் பொறுத்தவன் … இன்னைக்கு உன்ன என்ன பண்ணிட போறேன்… எனக்கு உன் உடம்பு தேவையில்லை மதி … அது சும்மா ஒரு மணி நேர சுகம்….எனக்கு தேவை அது இல்லை…. இதோ இதான் தேவை என்று அவள் இதயத்தை சுட்டி காட்டியவன்.. உன் மனசு…அந்த அழகான மனசுல… நான் இருந்தா போதும்…. என்று கூற…

அவனின் சட்டை ஈரம் படிவத்தை உணர்ந்தவன்… அவளை விலக்கி அவள் முகம் பார்க்க… அவள் அழுது இருந்தாள்…

ஹேய்… மதி மா… இப்போ ஏன் நீ கண்ண கசக்குற… உன்ன கட்டி பிடிக்கலையினா… இதோ பாரு இப்போவே பிடிக்கிறேன் என்று அவளை இறுக்கி கொண்டான் ஆதர்சன்….

நான் தப்பா பேசுருந்தா சாரி தர்சன்…. என்று மெல்லிய குரலில் கூற…

அட போடி… என்ன ஒரே அலுக்காச்சியா இருக்கு…. எனக்கு இந்த மதி வேணாம்…

ஓஹோ…அப்போ யாரு வேணுமாம் என்று அவள் அவனை விட்டு விலகி கண்களை கூர்மையாக்கி முறைக்க…

அது… என்று அவளை நெருங்கியவன்… நான் ஒரு சின்ன பார்வை வித்தியாசமா பார்த்தாலும்…. உச்சில இருந்து பாதம் வரைக்கும் சிவந்து நிக்கும் மதி தான் வேணும் என்று அவன் கூறி முடிக்க…அதேபோல் சிவந்து விட்டாள்…மிளிர்மதி..

மதி இப்படி அடிக்கடி சிவக்காத இது நல்லதுக்கு இல்ல… என்று ஆதர்சன் அவளை நெருங்க…சரியாக அவனது அலைபேசி அடித்தது..

ச்ச…. என்று சலித்து கொண்டே அருகில் இருக்கும் அவன் போனை அட்டெண்ட் செய்து காதில் வைத்தவனின் முகம் சட்டென்று இறுக்கமாக மாறியது…

அவனது முகமாற்றத்தை உணர்ந்து கொண்ட மதி அமைதியாக மெத்தையில் அமர்ந்து அவனுக்காக காத்திருக்க ஆரம்பித்தாள்….

சார்… அந்த **** மாநாட்டுக்கு டேட் பிக்ஸ் பண்ணிட்டாங்க சார்… 1920 ஆம் ஆண்டுக்கு அப்பறம் இப்போதான் நடக்க போகுது…

வாட்……. என்று அதிர்ந்த தர்சன்… நிதானமாக யோசிக்க…

டேட் எப்போ?

**** இந்த டேட்ல தான் நடக்குது சார்…

நேரம் ரொம்ப கம்மியா இருக்கு…

எதுக்காக இவளோ லேட்டா டேட் வெளியிட்டங்கன்னு தெரியலை சார்….

அப்போ இது யாருக்கு வச்ச செக்… ?

கண்டுபிடிக்கனும் சார்…

தடையை தடவி சிந்தித்தவன்… நம்ம ஆளுங்களை எல்லாம் தயாரா இருக்க சொல்லு…. நான் ஆபீஸ் வந்து மத்த டீடைல்ஸ் எல்லாம் சொல்லுறேன்….

ஓகே சார்…. அப்பறம்….

என்ன சொல்லுங்க…

இந்த டைம் அவங்களை பிடிச்சுரலாமா சார் என்று அவரின் குரல் தனித்து ஒலிக்கவே….

“Get Ready guys ” என்று ஒரே வார்த்தையில் முடித்து விட்டு காலை கட் செய்தான்…அந்த ஒற்றை வார்த்தைக்கு பின்னே ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்து இருந்தது என்பதை யார் அறிவார் ..

தன் கணவன் வரும் வரை காத்திருக்கலாம் என்று மெத்தையில் படுத்தவள் அப்படியே உறங்கி போக….

போன் பேசி விட்டு வந்தவன்… தன்னவள் இருந்த கோலத்தை பார்த்து சிரித்து விட்டான்… உள் பாவாடை… அதன் மேல் ஜாக்கெட் அணிந்து அதற்கு மேல் வயிறு வரை மட்டுமே நைட்டியை கழுத்திருக்குள் விட்ட படி அவள் உறங்க .. அவளை நெருகியவன்….. அவள் தூக்கம் களையா வண்ணம்… அவள் ஆடைகளை கழற்றி அவளுக்கு நைட்டியை அணிவித்து விட்டு அவளை மெத்தையில் சரித்தான்…

ரொம்ப படுத்துற டி… என்னால முடியலை… நான் என்ன வேற பொண்ணையா பார்க்குறேன்… நீ என் பொண்டாட்டி… எனக்கு இல்லாத உரிமையா…இருந்தாலும் என் நிலைமை யாருக்கும் வர கூடாது… கல்யாணம் ஆகியும் கன்னி கழியாம இருக்குற பையனை ட்ரெஸ் மாத்தி விட்டு பார்க்க சொல்லு டி எவ்வளோ கஷ்டம்னு தெரியும்… என்று பேசி கொண்டே அறையை விட்டு வெளியே சென்றவன்…தன் உணர்வுகளை அடக்க பெரும் பாடு பட்டுப் போனான்…

******

அனைவருக்கும் இரவு உணவு வழங்க பட… தட்டில் அவளுக்காக சாப்பாட்டை வாங்கி வந்து ஒரு கல்லில் அமர்ந்து சாப்பிட தொடங்கினாள் அமிர்தா…

ஐயோ 12 மணிக்கு வேற வர சொல்லிட்டானே… ஒரு வேளை யாருக்கும் தெரியாம என்ன 12 மணிக்கு போட்டு தள்ள போறானோ…. இருக்காது இருக்காது… என்று கேள்வியும் அவளே கேட்டு பதிலும் அவளே கூறிக் கொண்டாள்…

இப்போ அதுவா முக்கியம்… நல்ல வாசனை வேற வருது… இது என்ன டிஸுன்னு வேற தெரியலை… சரி சாப்பிட்டு பார்ப்போம் என்று பசியில் அள்ளி வாயில் வைக்க…. உள்ளே போன மாத்திரத்தில் அனைத்தும் வெளியே வந்தது…

அட சண்டாளா…. என்ன கருமத்தை சமைச்சு இருக்காங்கனே தெரியலையே…. நாத்தம் குடலை புடுங்குது…. என்று வாய் விட்டே புலம்ப அங்குள்ள அனைவரும் அவளை ஒரு மாதிரியாக பார்த்தனர்…

அவர்கள் பார்ப்பதை உணர்ந்து…. ஈ என்று இழித்தவள்…. பசியை அடக்க..சிறுது மட்டும் சாப்பிட்டு விட்டு கை கழுவி வந்தாள்…

இப்படியே சாப்பிட்டா …இவங்க என்னைய போட தேவையில்லை… நானே செத்து போயிடுவேன் என்று நொந்து கொண்டு அமர்ந்தாள்…

வேகமா….ம்ம்ம்ம் 11 மணி ஆச்சு என்று அனைவரும் வேகமாக குடிலுக்குள் சென்றனர்…..

ஏன் 11 மணிக்கு எல்லாரும் தூங்கலேனா கொலை பண்ணிடுவானா என்று மனத்திற்குள் கேட்டு கொண்டாள்…

ஐயோ அப்போ இன்னும் ஒரு மணி நேரம் தான் இருக்கா…என்று வயிற்றில் பயபந்து உருள… ஒரு மணி நேரமும் அப்படியே அமர்ந்திருக்க… சரியாக 12 மணிக்கு அவன் குடிலில் இருந்து வெளியே வந்தவன்…. தன் சாம்பல் விழிகளால் அமிர்தாவை ஒரு முறை பார்த்து விட்டு மீண்டும் உள்ளே சென்று விட்டான்….

ஓஹோ இதுக்கு அர்த்தம்….என்னைய வர சொல்லுறானு நினைக்கிறேன் என்று பதறிய அமிர்தா… இப்போ என்ன பண்ண… பேசமா பூவா தலையா போட்டு பார்ப்போம் என்று முடிவெடுக்க.. அவளிடம்  நாணயம் இல்லாமல் இருந்தது…

இப்போ என்ன பண்ணுறது என்று யோசித்தவள்… ஐடியா என்று குதித்து விட்டு அங்குள்ள கல் ஒன்றை எடுத்தாள்..

இதுல சப்ப பக்கம் விழுந்தா நான் போகனும்… மொட்ட பக்கம் விழுந்தா நான் போக மாட்டேன் என்று அவள் முடிவெடுக்க… அவளுக்கு கெட்ட நேரமோ என்னவோ சப்ப கல் விழுந்தது…

மொட்ட கல் விழுந்திருந்தாலும் அவள் சாம்பல் விழியனை பார்க்க ஓடோடி வந்து விடுவாள் என்பது அவள் அறியாத உண்மையே…

ஐயோ அப்போ நான் அவரை பார்க்க போகனுமா … என்று சிந்தித்து கொண்டே அவன் இருந்த அறை பக்கம் கால்கள் தானாக நகர்ந்தது… நீ தைரியமா போ அமீர்… இவ்வளோ தீவிரவாத கூட்டத்துல நீ இன்னுன் உயிரோட இருக்கிறதே பெரிய விஷயம்…. என்று அவளையே தைரியப்படுத்தி கொண்டு உள்ளே சென்றாள்…

அந்த குடில் மிகவும் நேர்த்தியாக இருந்தது… சுத்தமாக துடைக்கப்பட்ட பல தரப்பட்ட துப்பாக்கிகளும்…. புது புது வகையான வெடி குண்டுகளுகும் … வித விதமான தோட்டாக்களும் மற்றும் ஆயுதங்கள் நிறைந்து இருக்க.. அதற்கு இடையில் சிறிய மெத்தை ஒன்று இருந்தது…

அடப்பாவி  வில்லன்… இதெல்லாம் பார்த்தாலே நடுங்குதே… இதுக்கு நடுவுல எப்படி டா தூக்கம் வருது…. என்று புலம்பி கொண்டே நிற்க… குடிலுக்கு பின் பக்கம் இருந்து உள்ளே வந்தான் சாம்பல் விழியன்….

அவனை பார்க்கவும் எப்போதும் நடக்கும் ஜொள்ளு பணியை அமிர்தா தொடங்க…. அவனோ உள்ளே வந்த மாத்திரத்தில் அவள் கன்னத்தில் பளாரென்று விட… அதில் தன்னிலை அடைந்த அமிர்தா இப்போது பயத்தில் நடுங்கி கொண்டே அவனை பார்த்தாள்….

அருகில் உள்ள பிஸ்டலை எடுத்து…அதில் குண்டை லோட் செய்து கொண்டே… எவ்வளோ தைரியம் இருந்தா ….என்ன பத்தி என் ஆளுங்க கிட்ட அப்படி சொல்லுவ… என்று ஒவ்வொரு வார்த்தையையும் நிறுத்தி நிதானமாக அழுத்தி கூற… பயத்தில் வெடவெடத்து போனாள் அமிர்தா…

நா…நான்…. சா…சாரி …தெரியாம…என்று பாதியிலேயே அழுகை முட்டி கொண்டு வர…

ஏய்…………. என்று அவன் போட்ட அரட்டில் வந்த அழுகையும் அப்படியே பயத்தில் நின்று போனது…

இன்னைக்கு நானும் தவானும் பேசிட்டு இருந்ததை நீ கேட்ட தானே….

ம்ம்ம்…என்று தலை அசைத்தாள்…

நான் முடிவு பண்ணிட்டேன்…. நீதான் அந்த மாநாட்டுக்கு போக போற….

நான் எதுக்கு… என்று அவள் மெல்லிய குரலில் கேட்க..

ஏற்கனவே உன்ன எதுக்கு இங்க வர வச்சோம்ம்ம்ம்ம்… அதுக்கு தான் என்று அவன் ஏளனமாக கூற..

மனித வெடி குண்டா என்று அமிர்தா வாயை பிளக்க…

அதேதான்…. என்பதை போல் அவன் கண் சிமிட்ட…வழக்கம் போல் அவன் அழகில் விழுந்து போனாள் அமிர்தா…

அடியே உன்னைய அவன் வெடிகுண்ட கட்டிட்டு போக சொல்லுறான்…வெட்கமே இல்லாம சிரிக்கிற… என்று மனசாட்சி காரி துப்ப…அதை துடைத்து விட்டு… கொஞ்ச நாள் தான் வாழ போறேன்.. அதுவரைக்கும் வில்லனை சைட் அடிச்சுட்டு சந்தோசமா போறேன்…என்று பதில் அளித்து விரட்டினாள் அமிர்தா…

இந்த மாநாட்டுக்கு போகுறதுக்கு என்ன என்ன செய்யனும்னு நாளைல இருந்து உனக்கு சொல்லி தருவாங்க அது போல நீ கத்துக்க…

ம்ம்ம்….என்று மட்டுமே வந்தது…அவள் தான் வேறு உலகில் அவனுடன் டூயட் ஆடிக் கொண்டிருக்கிறாளே…

அவள் கையில் ஒரு கவரை கொடுக்க…

அதை பிரித்து பார்த்தாள் அமிர்தா… உள்ளே பேண்ட் சட்டைகள் இருந்தது…

இதெல்லாம் நான் போட மாட்டேன்… நான் சல்வார் புடவை பாட்டியாலா என்று அவள் அடுக்க…

இங்க என்ன துணிகடையா வச்சு நடத்துறேன் என்று அவன் பல்லை கடித்து கூற… அவன் போட்ட சத்தத்தில் வாயை மூடிக் கொண்டாள் அமிர்தா…

சம்பால் விழியன் பார்த்த பார்வையில் அமைதியாக அந்த பையை எடுத்து கொண்டு வெளியேற போனாள் அமிர்தா… ஆனால் அதற்க்குள் அவள் கையை பிடித்து ….என்னவென்று சுதரிக்கும் முன் அவள் கையில் ஊசியை இறக்கினான் சாம்பல் விழியன்…

அவள் கண்களை விரித்து அவனை பார்க்க……. இனிமே உனக்கு பீரியட்ஸ் வராது என்று அவன் அசால்ட்டாக உள்ளே சென்று விட…. அவள் தான் அவன் கூறியதில் அதிர்ந்து போனாள்…

நீங்க நேத்து எனக்கு முத்தம் கொடுத்திங்க தானே… என்று போற போக்கில் அமிர்தா கேட்டு விட்டாள்…. அமைதியாக சென்ற சம்பால் விழியனை வெறியேற்றி பார்க்க..அவன்  கோபமாக அவளை நெருங்க ..அதற்க்குள் எங்கிருந்தோ வந்த தோட்டா அவள் தோள்பட்டையை துளைத்து கொண்டு வெளியே விழுந்தது….

“வில்லன்ன்ன்ன்……….” அவள் வலியில் கத்தி மடங்கி விழ…

முதல் முறையாக சாம்பல் விழிகள் அதிர்ச்சியில் விரிந்து…. அவன் உதடுகள் அவன் அறியாது “அம்மு” என்ற வார்த்தையை உச்சரித்தது…..

சனா💕

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்