Loading

ரோமியோ-11

 

 

வாயை பிளந்த வண்ணம் அந்த இடத்தை சுற்றி பார்த்துக் கொண்டிருந்தாள் அமிர்தா…. தன் கண் முன்னே காண்பது கனவா என்று கூட தோன்றியது…. 

 

பழக்க தோஷத்தில் தன் கையில் கிள்ளி பார்ப்பதற்கு பதில்…அவன் கையை கிள்ளி விட… அவன் பார்த்த பார்வையில் தன் லீலைகளை அடக்கி கொண்டு அமைதியாக வர முயற்சித்தாள்…. 

 

அவள் கிள்ளியது என்னவோ எறும்பு கடித்ததை போல் தான் இருந்தது… ஆனால் எவ்வளவு தைரியம் இருந்தால் தன்னை சீண்டி பார்ப்பாள் என்ற கோபத்தால் இப்போது எதையும் காட்ட இயலாது தன் கோபத்தை அடக்கி கொண்டு சிரித்த முகமாக அவளுடன் கை கோர்த்து நடந்தான் சாம்பல் விழியன்.. 

 

ஹலோ சார்… மிஸ்டர் ரன்வீர் அண்ட் மிசஸ் அமிர்தா ரன்வீர் என்று வரவேற்க… அவனோ புன்னகையோடு அங்குள்ளவரிடம் கை குலுக்கி விட்டு… அவர்கள் கொடுத்த சில பரிசு பொருட்களையும் வாங்கி கொண்டு உள்ளே சென்றான்..

 

வில்லன் என்று அவன் கைகளை சுரண்ட…. 

 

அவளை முறைத்து பார்த்தான்… ஐயோ வாயை பொலந்துட்டு வேடிக்கை பார்த்த்துட்டு கடைசி நம்ம வச்ச பெயரையே சொல்லிட்டனே…. சரி சமாளிப்போம்… ஈஈ….. சாரி…. என்று தன் முப்பத்தி இரண்டு பற்களையும் காட்டிவிட்டு … உங்க பேர் ரன்வீரா …ரொம்ப அழகா இருக்கு…. என்று  அவள் பிட்டை போட… 

 

அது என் நிஜ பேர் இல்ல… சும்மா இங்க உள்ள வரதுக்காக வச்சது…. 

 

ஏன் உண்மையான பேர் கொடுக்க வேண்டியது தானே…. 

 

கடைசி நம்ம பிளான்ல ஏதாவது சொதப்பல் வந்தா …. தப்பிக்கனும்… உண்மையான பேர் கொடுத்தா மாட்டிக்குவோம்… அதான்

 

ஆஆஆ வென்று வாயை பிளந்து பார்த்தவள்…. அப்போ ஏன் என் பெயர் மட்டும் உண்மையான பெயர் சொன்னிங்க..

 

ஏன்னா நீ மாட்டுனா எனக்கு பிரச்சனை இல்லை… அதான் என்று தோளை குலுக்கி விட்டு அவன் முன்னே நடக்க…

 

இவனை என்று பல்லை கடித்து கொண்டு பின்னே நடந்தாள்…  

 

சாம்பல் விழியனின் கண்கள் ஒவ்வொரு இடத்தையும் நுணுக்கமாக எடை போட்டது… 

 

ஆம் அவர்கள் இருப்பது அந்த பிரமாண்டமான கப்பல் தான்.. இன்று தான் அந்த கப்பல் உலக நாடுகளை சுற்ற கிளம்புகிறது… 

 

“தீ ராயல் கிங்டம்” என்ற அந்த பிரம்மாண்டமான கப்பல் கிளம்புவதற்கு ஆயத்தமாக இருந்தது…. மக்கள் அனைவரும் தலைக்கு இரண்டு லட்சத்திற்கு மேல் கட்டி தன் குடும்பத்துடன் உல்லாசமாக அந்த பயணத்தை கழிக்க வந்தனர்… 

 

கண்ணெதிரே இருக்கும் அந்த பிரம்மாண்டத்தை ரசித்து வந்தாள் ….  சாம்பல் விழியானிடம் இது என்ன அது என்ன என்று கேள்வி கேட்டு கொண்டே வர… பொறுமை இழந்தவன் ..அவள் கைகளை இறுக்கி.. ஸ்டாப் இட் இடியட்… இதுக்குமேல ஒரு வார்த்தை பேச கூடாது என்று அவன் ஆக்ரோஷமாக கத்த… அருகில் இருக்கும் ஒரு வயதான தம்பதியினர் அவர்களை திரும்பி பார்த்தனர்… 

 

அமிர்தாவுக்கு கண்கள் கலங்கி போனது…  என்ன தம்பி இவ்வளோ தூரம் உங்க மனைவியை கூட்டிட்டு வந்துட்டு இப்படி பேசுனா எப்படி… பாருங்க அவங்க முகம் சுருங்கி போச்சு என்று அந்த பெண்மணி கூற… அப்போது தான் அவனும் அமிர்தாவின் முகத்தை பார்த்தான்… 

 

அவன் பார்ப்பது தெரிந்ததும் மேலும் முகத்தை சோகமாக வைத்துக்கொள்ள…. கொஞ்சம் அதிகமா தான் திட்டிட்டோம் போல என்று எண்ணி வருத்தம் கொள்ள.. 

 

உனக்கு என்ன தெரியனும் பேட்டி… நான் சொல்லுறேன் என்று வயதானவர் கூற… அதோ அந்த பக்கம் என்ன இருக்கு என்று மெல்லிய குரலில் கேட்டாள் அமிர்தா… 

 

அவ்வளோ தானே… நான் சொல்லுறேன்… நான் இதோட இந்த கப்பல்ல இரண்டாவது முறையா பயணம் செய்யுறேன்… முதல் பயணத்துல நான் மட்டும் வந்தேன்..எல்லாம் வசதியும் பார்த்துட்டு இப்போ என் மனைவியை கூட்டிட்டு வந்துருக்கேன்… என் பேரு ஜேம்ஸ்… என் மனைவி பேர் ஸ்டெல்லா என்று தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டனர்… 

 

அவளும் என் பேர் அமிர்தா என்று கூறியவள்… ஐயோ உண்மையான பேரை சொல்லிட்டனே… என்று நாக்கை கடித்து விட்டு … இவரு வில்லன் என்று கூற… அந்த தம்பதியினர் சிரித்தனர்… 

 

என் பேர் ரன்வீர் என்று தன்னை அறிமுக படுத்திக் கொண்டான் சாம்பல் விழியன்..

 

வாங்க அங்க உட்கார்ந்து பேசுவோம் என்று அழைக்க… சாம்பல் விழியன் அவளை தீயாக முறைக்க..அதை கண்டு கொள்ளாமல் ஜேம்ஸ் பின்னே சென்றாள் அமிர்தா .. 

 

இதோ நீ கேட்ட பக்கம் என்ன இருக்கு தெரியுமா…. அதாவது இந்த கப்பலை சூட்ஸ், ரிலாக்ஸ், ஆக்டிவிட்டிஸ் என மூன்று பகுதிகளாக  இந்த நிறுவனம் பிரித்து இருக்காங்க…. 

 

சாம்பல் விழியன் அவர் கூறுவதை எல்லாம் கவனமாக கேட்டுக் கொண்டான்… தெரிந்தோ தெரியாமலோ அமிர்தா அவனுக்கு இந்த கப்பலை பற்றி அறிந்து கொள்ள ஒரு வழியை ஏற்படுத்தி கொடுத்தாள்… 

 

சூட்ஸ் அப்படினா… சூட்ஸ் பகுதியில நீங்க உங்களோட குடும்பத்தோடு தங்க பிரம்மாணடமான வீடு போன்ற அமைப்பு இங்க கொடுப்பாங்க. 

 

 

 

 

 

 

 

அங்க நீங்க உங்கள் வீட்டில உள்ள எல்லா வசதிகளையும் பெறலாம். அந்த பகுதியில் தான் குழந்தைகள் விளையாடுவதற்கான பல விளையாட்டுக்கள் இருக்கு… 

 

 

 

 

 

ஓஹோ என்று கண்கள் விரிய கேட்டுக் கொண்டிருந்தாள் அமிர்தா… 

 

மேலும் அங்கு உங்களுக்கான டிரிங்ஸ், அதிவேக இன்டர்நெட், உயர்தர உணவு சர்வீஸ், என ஒரு நட்சத்திர ஓட்டலிலும் இல்லாத வசதிகளை கூட நீங்க அங்க அனுபவிக்கலாம்…

 

 

 

 

எல்லா வகையான சரக்கும் கிடைக்குமா என்று சாம்பல் விழியான் கேட்க..அவனை முறைத்து பார்த்தாள் அமிர்தா… 

 

ஜேம்ஸ் மற்றும் ஸ்டெல்லா இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொண்டனர்… 

 

அப்பறம் ரிலாக்ஸ் பகுதில் ஸ்பா, யோகா, ஜிம், பார்க், கார்டன், 5 நீச்சல் குளம் உள்ளிட்ட நீங்கள் கற்பனையில் கூட எண்ணி பார்க்கமுடியாத ஏகப்பட்ட வசதிகள் இருக்கு… 

 

 

 

எது நீச்சல் குளம் கப்பல் குள்ள இருக்கா….என்று அதிசயத்தை கேட்பது போல் கேட்டாள் அமிர்தா… 

 

ஆமா மா அஞ்சு பெரிய நீச்சல் குளம் இருக்கு…. 

 

வேற என்ன இருக்கு என்று காரியத்தில் கண்ணாக இருந்தான் சாம்பல் விழியன்…

 

ஆக்டிவிட்டிஸ் பகுதியில் முற்றிலும் உங்களையும், உங்கள் குழந்தைகளையும் குதுகலப்படுத்தக்கூடிய பல விளையாட்டுக்கள் இருக்கு.பல த்ரில்லிங் ரைடுகள்.. ஒரு தீம் பார்க்கில் இருக்கும் அத்தனையும் அங்க இருக்கு என்று ஜேம்ஸ் கூற… அனைத்தையும் சரியாக கவனித்து கொண்டான் அவன்..

 

 

 

இப்போ நம்ம எல்லாருக்கும் ரூம் தருவாங்க… நம்ம அங்க போய் ரெஸ்ட் எடுக்கலாம் … 

 

அதே போல் அங்கிருக்கும் ஒரு பெரிய டிஜிட்டல் திரையில் தம்பதிகளில் பெயரோடு அறை எண்ணும் ஓடிக் கொண்டிருந்தது… 

 

அதில் ஜேம்ஸ்-ஸ்டெல்லாவிற்கு நேராக ரூம் நம்பர் 3-STARFISH-55  என்று இருக்க…. எனக்கு third floor ல 55 வது ரூம் என்று ஜேம்ஸ் கூறினார்… 

 

அடுத்து இரண்டு நிமிடத்தில்… ரன்வீர்- அமிர்தா என்று ஜோடியாக அந்த டிஜிட்டலில் அவர்களது பெயரை பார்த்து மனதிற்குள் குதுகளித்து வந்தாள் அமிர்தா… பொய்யான பெயராக இருந்தாலும் அவனுடன் பெயரிலாவது  இணைந்த திருப்தி அவளுக்கு… 

 

அவர்களுக்கு 5- SHARK- 70  என்று இருக்க… உங்களுக்கு ஐந்தாவது தளத்துல எழுபதாவது ரூம் மா என்று அவர்களுக்கும் கூறினார்… அப்போ நம்ம சாப்பிடும் போது மீட் பண்ணலாம்… இது என்னோட கார்ட்.. அதுல என் நம்பர் இருக்கு.. உங்களுக்கு விருப்பம் இருந்தால் எங்க கூட ஜாயின் பண்ணுங்க… ஏன் சொல்லுறேனா…பார்க்க புதுசா கல்யாணம் ஆன மாதிரி இருக்கு… உங்களுக்கும் privacy வேணும்ல அதுக்குத்தான்… 

 

அவ்வளவு தான் அமிர்தா பறந்து விட்டாள்… புதுசா கல்யாணம் ஆன மாதிரி இருக்கோமா என்று தன்னையும் அவனையும் ஒரு முறை மேல் இருந்து கீழ் வரை பார்த்து கொண்டாள்…

 

பின் அவர்களிடம் இருந்து விடைபெற்று …. அவரவர் அறைக்கு சென்றனர்…. 

 

ஐந்தாவது தளத்திற்கு லிஃட்டில் மூலம் சென்றவர்கள்… அவர்களது அறை கதவை திறக்க சாவி இல்லாமல் நிற்க… ஒரு இளம் பெண்… பச்சரிசி நிறத்தில்… முழுதாக கருப்பு யூனிஃபார்மில் தொடை வரை அணிந்த படி… ஹாய் மிஸ்டர் அண்ட்  மிசஸ் ரன்வீர்… என்று கையில் ஒரு தட்டை நீட்ட…கண்ணாடி தட்டில் ரோஜா இதழ்களுக்கு மத்தியில் அவர்களது அறை சாவி இருந்தது…

 

அதை எடுத்து கொண்டு அந்த பெண்ணை மேலும் கீழும் அவன் பார்க்க… அமிர்தாவுக்கு தான் பத்தி கொண்டு வந்தது… வெள்ள பெயின்ட்ல முக்கி எடுத்த மாதிரி இருந்துட்டு எப்படி தொடையை காட்டிட்டி வந்து நிக்கிறா.. ஐயோ நம்ம ஆளு வேற பார்க்குறானே.. 

 

வில்லன் போதும் என்று பொறுக்க முடியாமல் அமிர்தா மெலிதாக அவன் காதருகில் கூற.. பார்வையை விளக்கி கொண்டவன்…கதவை திறக்க திரும்ப அந்த பெண்ணும் சென்று விட்டாள்… 

 

இதோ பாருங்க .. நீங்க எனக்கு எவ்வளோ கண்டிஷன் போட்டிங்க… நான் ஒரே ஒரு கண்டிஷன் மட்டும் போடுறேன்….

 

ஒற்றை புருவத்தை உயர்த்தி அவன் திமிராக பார்க்க.. 

 

அது… கண்டிஷன்னு சொல்ல முடியாது… சின்ன வேண்டுகோள் என்று அவன் பார்வையில் பிளேட்டை மாற்றினாள் அமிர்தா.. 

 

அது… நம்ம இங்க இருந்து போற வரைக்கும் எந்த பெண்ணையும் நீங்க பார்க்க கூடாது… அவ்வளோதான் சொல்லிட்டேன் என்று அவள் சிணுங்கி கூற… அவனோ அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு சட்டென்று திரும்பி அவளுக்கு முதுகை காட்டி நின்று கொண்டு கதவை திறக்க ஆரம்பித்தான்… 

 

அவன் முகத்தில் என்ன உணர்வு தோன்றியதோ…அவனே அறிவான்..அவன் உணர்வுகளை அடுத்தவர்ளால் எப்படி படிக்க முடியும்.. அப்படி படிக்க முடிந்தால் அவன் சாம்பல் விழியனே அல்லவே… 

 

முசுடு… ஏதாச்சும் சொல்லுதா பாரு… என்று உதட்டை சுழித்து கொண்டு உள்ளே போனவர்கள் இருவரும் அதிர்ந்தனர்… 

 

*******

 

கட்டிலில் விட்டத்தை பார்த்துக் கொண்டு படுத்திருந்த ஆதர்சன்… ஒரு வாரத்திற்கு முன்பு தன் மனைவி செய்த கலாட்டவை நினைத்து பார்த்தான்… 

 

கை காயத்துடன் பையை தூக்கி நின்று கொண்டிருக்கும் மிளிர்மதியை கண்டவன்… 

 

ஹேய் மதி உனக்கு தான் அடிபட்டு இருக்குல்ல…அப்பறம் ஏன் டி பையை தூக்கிட்டு நிக்கிற என்று சண்டை போட்ட அனைத்தையும் மறந்து விட்டு… தன் உயிரானவளின் காயத்தை கண்டு துடித்து போய் அவன் கேட்க… 

 

ரொம்ப தான் அக்கறை மனதில் கருவி கொண்டு… முகத்தை கடுமையாக வைத்திருந்தாள் மிளிர்மதி… அவள் முகத்தில் கடுமையை பார்த்தவன்… அப்போது தான் நினைவு வந்தவனாக…அவனும் முகத்தை கடுமையாக வைத்து கொண்டு..

 

இப்போ என்ன டி பையை தூக்கி கிட்டு உங்க அப்பா வீட்டுக்கு கிளம்பிட்ட.. அதானே… சந்தோசம்… 

 

யாரு அப்பன் வீட்டுக்கு போறா என்று மிளிர்மதி மிடுக்காக கேட்டாள்… ஆதர்சனின் பொஞ்சாதி அல்லவா… 

 

நீதான் பேக் பண்ணி ரெடியா நிக்கிறியே… 

 

ஓஹோ… என்று பையை திறந்து காட்ட.. அதில் எல்லாம் அவனுடைய சட்டையும் பேண்ட்டும்மாக இருந்தது… அதை பார்த்து அதிர்ந்த ஆதர்சன்.. என்ன டி என்னோட சட்டை பேண்ட்டு இருக்கு என்று புரியாமல் கேட்க… 

 

நீங்க தான் உங்க அப்பா வீட்டுக்கு போறீங்க.. அப்போ புடவையா எடுத்து வைக்க முடியும் என்று நக்கலாக கேட்க…..

 

நான் எப்போ போறேன்னு சொன்னேன்.. 

 

அப்போ நான் மட்டும் எப்போ போறேன்னு சொன்னேன்… உங்களுக்கு இந்த வீட்ல என்கூட இருக்க பிடிக்கலேனா நீங்க தான் பேக் பண்ணிட்டு உங்க அம்மா வீட்டுக்கு போகனும்… ஒரு சண்டை வந்தா மூக்க உரிஞ்சிட்டு அம்மா வீட்டுக்கு போற பொண்ணுன்னு நினைச்சீங்களா என்னைய…நான் மிளிர்மதி ஆதர்சன்…. போலீஸ்காரன் பொண்டாட்டி என்று பெருமையாக கூறி கொண்டாள்  … இப்போ நீங்க இந்த பேக்கை எடுத்துட்டு கிளம்பலாம் தர்….ம்ஹூம் ஆதர்சன் …. என்று புருவம் உயர்த்தி கூற.. 

 

தன் மனைவியின் இடைவிடாத பேச்சில் அவன் தான் பேச்சுற்று போனான்..

 

சனா💕

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
3
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்