
அத்தியாயம் 20
கனிஷ்கா குளித்து விட்டு வந்ததும் அவளை கண்ணாடி அறைக்கு அழைத்து சென்றவன் “நான் உன்னை காதலிக்குறேனான்னு கேட்டுட்டே இருப்பியே கியூட்டி.. நான் உன்னை மனசார விரும்புறேன்.. உன்னால் எனக்கு சில வேலைகள் ஆகணும்.. இது என் சுயநலம் தான்.. ஆனா அதில் பலரோட நன்மையும் இருக்கு.. இன்னைக்கு வில்சன் வீட்ல நீ எனக்காக ஒன்னு செய்யணும்” என்று கூற புரியாமல் பார்த்தாள்.
“எனக்கு புரியல சித்து.. காதலிக்குறவங்க கஷ்டபட கூடாதுன்னு நினைக்குறவங்க இருக்காங்க.. ஆனா நீ என்னை ஒவ்வொரு முறையும் யூஸ் படுத்திக்குற.. இதுல என்ன காதல்.. நான் உன்னை காதலிக்குறேன்.. அதனால் உனக்காக இதை செய்யுறேன்” என்று வாக்கு கொடுக்க ஒரு நொடி அவளின் வார்த்தையில் அவனுக்கு உடல் சிலிர்த்து அடங்கியது.
ஆனால் அடுத்த நொடி வில்சனின் திட்டத்தை முறியடிக்க நினைத்தவன் “லவ் யூ கியூட்டி.. நான் மோசமானவன் தான்.. இன்னைக்கு பண்ண போற விஷயம் உன்னை எவ்ளோ பாதிக்கும்னு எனக்கு நல்லாவே தெரியும்.. பட் வேற வழி இல்லை” என்றவன் அவளின் உதட்டோடு தன் இதழ்களை பொருத்தி விட கனிஷ்கா கண்களை விரித்தாள். அந்த நொடியை பயன்படுத்தி கொண்டவன் அவளின் கையில் ஊசியை போட்டு விட சில நொடிகளில் அவன் மேல் மயங்கி சரிந்தாள் கனிஷ்கா.
———–
மிக பெரிய நட்சத்திர ஹோட்டலில் ஒரு தளம் முழுவதையும் தனக்காக புக் பண்ணியிருந்தான் வில்சன். இன்று அவனின் புதுமருந்து வெளியிட போகும் நாள். அனைவரும் அவனின் அழைப்பை ஏற்று உள்ளே வந்து கொண்டிருக்க கெவின் அவர்களை வரவேற்று அமர வைத்து கொண்டிருந்தான். வில்சனின் கண்கள் தன் எதிரி சித்தார்த்தை தேடி கொண்டிருக்க அவனோ கண்களில் மாட்டவே இல்லை.
அவனுக்கு தெரியும் இன்று கண்டிப்பாக சித்தார்த் வருவான் என்று. ஆனால் பார்ட்டி தொடங்கும் நேரமும் அவனை காணாததால் கெவினை அழைத்தான்.
“கெவின் சித்தார்த் கிட்ட சொல்லிட்ட தானே” என்று கேட்க “சொல்லிட்டேன் சார்.. வரேன்னு சொன்னார்” என்று கூறி விட்டு நகர திடீரென அந்த தளத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
வில்சன் திரும்பி பார்க்க அங்கு ஒரு பெண் சுவற்றோடு சாய்ந்து நின்றிருந்தாள்.
“வாவ்.. இந்தியன் கேர்ள்..” என்றவன் சுற்றும் முற்றும் பார்க்க அவளுடன் யாரும் வந்தது போல் தெரியவில்லை.
“கெவின்…” என்று அழைக்க அருகில் வந்தவன் காதில் ஏதோ சொல்ல கெவின் அந்த பெண்ணை நோக்கி சென்றான்.
“மேம் ஹு ஆர் யூ?” என்று கேட்க தன் தலையை இறுக பிடித்து கொண்டாள் அவள்.
“மேம் ஆர் யூ ஓகே?” என்று கெவின் அவளை தாங்கி பிடிக்க அந்த நிலையிலும் அவனை தள்ளி விட்டவள் மெதுவாக அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தாள். அவரவர் தங்களின் வேலையை கவனிக்க வில்சனுக்கு அவளின் மீது கண்ணாகவே இருந்தது. வில்சனின் தொழில் முறை நண்பர்கள் வரவும் பார்ட்டி தொடங்கியது.
“லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன்.. இன்னைக்கு நான் இங்கே உங்களை இன்வைட் பண்ணிருக்க காரணம் என்னோட புது கண்டுபிடிப்பை அறிமுகபடுத்த தான்..” என்று கூறி தன் கையில் ஒரு மாத்திரையை எடுத்து காட்டவும் அனைவரும் ஆவலாக பார்த்தனர்.
“வாட் இஸ் திஸ் வில்சன்?”
“இது ஒரு போதை மாத்திரை.. ஆனால் போதை ஏறுவது அவர்களுக்கே தெரியாம இருக்கும்.. அதாவது அவர்கள் தலை வலி, உடல் வலிக்கு போடும் மாத்திரையில் கலந்திருப்பது தான் இது”
“இது எப்படி சாத்தியம் வில்சன்? இதை எப்படி நாங்கள் நம்புவது?” ஒருவர் கேள்வி எழுப்ப அந்த கூட்டத்தை நோக்கினான்.
“கெவின் அவளை இங்க கூட்டிட்டு வா..” என்று கூற அந்த பெண்ணை அழைத்து வந்தான். தடுமாறி நின்றவளை கெவின் பிடித்து கொள்ள அவளின் வாயில் அந்த மாத்திரையை திணித்தான் வில்சன்.
“சார்…” என்று வெளியில் காரில் அமர்ந்திருந்த சித்தார்த்தை பார்த்து பென் பதற “வெயிட் அண்ட் வாட்ச் பென்.. அவன் கொடுக்கும் மாத்திரை அவளுக்குள் போக கூடாதுன்னு தான் மாற்று மருந்தை ஏத்தி கூட்டிட்டு வந்தேன்” என்று சித்தார்த் கூற அவர்களை பார்த்தான் பென்.
சித்தார்த் தான் கனிஷ்காவை உள்ளே அனுப்பி வைத்தான். அவள் கழுத்து டாலரில் சிறு கேமராவை பொருத்தியவன் அதன் வழியாக நடப்பவற்றை பார்த்து கொண்டிருந்தான்.
வில்சன் அவளின் வாயில் மாத்திரையை திணித்ததும் ஒன்றும் புரியாமல் விழித்தவள் மொத்தமாக அவன் மேலேயே வாந்தி எடுத்து விட மற்றவர்கள் அதிர்ந்தனர். அவனின் கூற்றுப்படி இன்னேரம் அவளுக்கு மயக்கம் வந்திருக்க வேண்டும். ஆனால் அவளோ வாந்தி எடுத்து தெளிவாகியிருந்தாள்.
மற்றவர்கள் ஒரு கேலி புன்னகையோடு வில்சனை பார்க்க அவனோ கண்களில் கனல் தெறிக்க கனிஷ்காவை ஓங்கி அறைந்திருந்தான்.
“யூ.. இடியட்” அவளின் உதட்டோரம் வழிந்த இரத்தத்தை சித்தார்த் காணவில்லை. கண்டிருந்தால் இதே இடத்தில் வில்சன் மரித்திருப்பான். அவள் அடி வாங்கி கீழே விழ அனைவரின் அதிர்ச்சியையும் மீறி அவளை பிடித்து எழுப்பினான் வில்சன்.
“உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா இப்படி பண்ணிருப்ப?” மீண்டும் அறைய போக அவளை தன் பக்கம் இழுத்தான் ஒருவன்.
“வில்சன் திஸ் இஸ் டூ மச்.. உங்க கண்டுபிடிப்பு தவறா போனா அந்த பெண் என்ன பண்ணுவாள்? லெட்ஸ் லீவ் ஹெர்” என்க
“எனக்கு தெரியும் நான் என்ன பண்ணனும்னு” என்றவன் அவளின் முடியை பிடித்து இழுத்து செல்ல பென் கலவரமாக சித்தார்த்தை நோக்கினான்.
“சார்..” அவன் அழைக்க நிமிர்ந்து பார்த்தவன் கண்களில் கொலைவெறி தாண்டவமாடியது.
“இதற்கு நீ பதில் சொல்லியே ஆகணும் வில்சன்..” என்று தன் கைகளை இறுக மூடி திறந்தவன் அடுத்த காட்சிகளை பார்த்தான். அவனுக்கு தேவையானது இன்னும் கிடைக்கவில்லையே…
“கெவின்….” வில்சனின் சீறலில் ஓடி வந்தவனை நோக்கி அவளை தள்ளி விட்டவன் “இன்னும் அரை மணி நேரத்தில் இவளோட பிளட் க்ரூப் அண்ட் புள் செக்கப் ரிப்போர்ட் எனக்கு வேணும்” என்று கூறி விட்டு செல்ல அவளை பார்த்து கெவினுக்கு பாவமாக தான் இருந்தது.
ஆனாலும் சொன்ன வேலையை முடிக்காவிட்டால் அவனின் உயிர் தங்காது. எனவே அவளின் இரத்தத்தை பரிசோதித்தவன் அதிர்ந்தான். அது அவர்கள் இதுவரை தேடி வந்த இரத்த வகை “பாம்பே பிளட் க்ரூப்”
“வாட் அ மிராக்கிள்?” என்று அதிசயித்தவன் அவளை முழுபரிசோதனை செய்து முடித்து வில்சனிடம் ரிப்போர்ட் கொடுக்க பார்த்தவனுக்கும் ஆச்சர்யம்.
“கெவின் இது உண்மையா? நம்பவே முடியல” என்று ஆச்சர்யப்பட்டவன் பின் சிரித்து கொண்டே “நம்ம இடத்துக்கு இவளை கூட்டிட்டு போயிடு” என்றான்.
“எஸ் சார்..” என்று அவளை நடத்தி கூட்டி கொண்டு வண்டியில் ஏற்றவும் சித்தார்த் தன் காரை கிளப்பினான்.
“சார் அவங்களுக்கு எதுவும் ஆகிடாதே” என்று பென் கேட்க “நான் உயிரோட இருக்குற வரைக்கும் அவளுக்கு ஒன்றும் ஆகாது.. இன்னைக்கு மட்டும் நாம நினைச்சது நடந்தா எத்தனை பேர் உயிர் தப்பிக்கும் தெரியுமா?” என்றவன் கெவினின் வண்டியை பின் தொடர அது ஒரு பழைய மர வீட்டிற்கு அருகில் நின்றது.
“இங்கேயா அடைச்சு வச்சிருக்காங்க?” என்று பென் கேட்டு கொண்டே இறங்க காரை தூரத்தில் பார்க் பண்ணிய சித்தார்த் அவனுடன் நடந்தான்.
“எத்தனை பேர் இருக்காங்கன்னு தெரியாதே சார்..”
“யாரும் இருக்க மாட்டாங்க.. அவர்களை முழு மயக்கத்தில் தான் வச்சிருப்பான்.. சோ பாதுகாப்பு தேவை படல.. அவனே வந்து நேரத்துக்கு ஊசி போட்டுட்டு போயிடுவான்.. ஒரு ஊசி மருந்து கிட்டத்தட்ட பனிரெண்டு மணி நேரங்கள் தாக்கு பிடிக்கும்.. அதனால் இங்க அவங்க தனியா தான் இருப்பாங்க” என்று கூறி விட்டு செல்ல அப்போது தான் கெவின் வெளியே வந்ததை பார்த்தனர்.
“கெவின் கிளம்பிட்டான் சார்..” பென் நடக்க சித்தார்த் மெதுவாக பின்னே சென்றான்.
“நில்லு பென்..” என்றவன் பக்கவாட்டில் இருந்த மரஜன்னல் வழியே உள்ளே பார்க்க மூவர் மயக்கத்தில் இருந்தனர்.
“சார் மேடமை காணல..” என்று பென் சொல்ல அந்த மரக்கதவை திறக்க முயற்சித்தான் சித்தார்த். தேக்கு மரம் கூட இவ்வளவு உறுதியாக இருக்குமா என்பது அவனுக்கு சந்தேகமே.. ஒரு சிறு துளை கூட இல்லாமல் பலகை போல் அத்தனை உறுதியாக இருந்தது.
“கஷ்டம் தானா சார்?” பென் அவன் பங்கிற்கு தள்ளி பார்க்க அவனால் முடியவில்லை. சித்தார்த் சுற்றி பார்க்க மேலே ஒரு துளை இருந்தது. ஒரு ஆள் அதன் வழியாக இறங்கலாம்.
பென்னை கீழே நிற்க சொன்னவன் மேலே ஏற சட்டென அந்த இடம் புகை மண்டலம் ஆனது. அவசரமாக ஏறியவன் எட்டி பார்க்க உள்ளிருந்த மூவரும் மூச்சுக்கு திணறுவது தெரிந்தது.
“வில்சன்…” பல்லை கடித்தவன் தன் கைகுட்டையால் முகத்தை கட்டி கொண்டு இறங்க கணநேரத்தில் அந்த நச்சு வாயு அவர்கள் மூவரின் உயிரையும் குடித்திருந்தது.
அந்த அறைக்குள் மட்டும் தான் நச்சு இருந்தது. மெதுவாக அடுத்த அறைக்குள் செல்ல அங்கிருந்த மரக்கட்டிலில் படுக்க வைக்க பட்டிருந்தாள் கனிஷ்கா.
“கியூட்டி.. கியூட்டி..” என்று அவளின் கன்னத்தை தட்டியவன் அவளிடம் சத்தம் வராமல் போக அவளை திரும்பியவன் அதிர்ந்தான். அவளினுள் ஏற்கனவே மருந்தை செலுத்தியிருந்தான் கெவின்.
“டாமிட்..” அந்த கட்டிலில் கைகளை குத்தியவன் திரும்பி பார்க்க வெளியில் நச்சு வாயு. இன்னும் சிறிது நேரம் தாமதித்தாலும் கனிஷ்காவின் உயிருக்கு ஆபத்து. அவளின் மேலசட்டையை கழற்றியவன் அதை வைத்து அவளின் மூக்கோடு வாயையும் சேர்த்து கட்டியவன் அவளை தூக்கி கொண்டு வெளியே வர மற்ற மூன்று பேரும் பிணமாக கிடந்தனர். அவர்களை காப்பாற்ற தான் கனிஷ்காவின் உயிரை பணயம் வைத்தான். ஆனால் இன்று யாரையும் காப்பாற்ற முடியாத நிலையில் தன்னையே திட்டி கொண்டவன் கதவை திறக்க முயற்சிக்க வெளியில் இருந்து யாரோ திறந்து உள்ளே வந்தனர்.
“வெல்கம் சித்தார்த்.. உனக்கு இது தெரியும்னு எனக்கு எப்பவோ தெரியும்.. பட் இவ்ளோ ரிஸ்க் எடுப்பன்னு எதிர்பார்க்கல.. யாரு இந்த பொண்ணு? வாவ்…” என்று அடுத்த வார்த்தை சொல்ல வரும் முன் “வில்சன்..” என்று கர்ஜித்தான் சித்தார்த்.
“வாவ்.. வாட் அ பியூட்டி?” வில்சன் சொல்ல வந்ததை சொல்லி முடித்து சித்தார்த்தை அலட்சியமாக பார்க்க கனிஷ்கா கையில் இருந்ததால் ஒன்றும் பண்ண முடியாமல் பல்லை கடித்து கொண்டு நின்றான் அவன்.
“வில்சன் வழியை விடு.. நான் போகணும்” என்று சொல்ல “கண்டிப்பா விடுறேன்.. பட் இவ எனக்கு வேணும்.. ஒருநாள் உன் கண் முன்னாலேயே தூக்குறேன் பாரு” என்றவன் வழியை விட சித்தார்த் பலமாக சிரித்தான்.
“நீயா அவளை தூக்க போற? பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.. இன்னைக்கு நீ உயிரோட இருக்க காரணம் அவ மட்டும் தான்.. இப்போ அவ என் கையில் இல்லன்னா உன்னை இதே இடத்தில் கொன்னு புதச்சிருப்பேன்.. அதை எப்படி எதிர்கொள்ளணும்னு எனக்கு தெரியும்..”
“ஓஹோ இப்போ இவளோட நிலைமை தெரியுமா உனக்கு? எனக்கு அப்பவே சந்தேகம் இருந்துச்சு.. அதனால் தான் வீரியம் அதிகமான மருந்தை கொடுத்தேன்.. அந்த மூணு பேர் கூடவே போட்டு சாகடிக்க எனக்கு எவ்ளோ நேரம் ஆகும்னு நினைக்குற? இவள் கண் விழிக்கவே நாள் கணக்காகும்.. முடிஞ்சா காப்பாத்து.. உனக்கே தெரியும் ரொம்ப நாள் மூளை செயல் படாமல் இருந்தா என்ன ஆகும்னு” என்று சிரிக்க முறைத்தான் சித்தார்த்.
“அவங்க என்ன பண்ணுனாங்க மேன்? உன் லாபத்துக்காக அவங்க உயிரை எடுத்திருக்க” என்று சீற வாய்விட்டு சிரித்தான் வில்சன்.
“என் லாபம்.. எஸ்.. ஆனா அது எவ்ளோ லட்சம் தெரியுமா?”
“தெரியும்.. ஆனால் இதெற்கெல்லாம் சேர்த்து நீ அனுபவிப்ப” என்று கூறி விட்டு சித்தார்த் வெளியேற “இந்த கதவோட சாவி என்கிட்ட மட்டும் தான் இருக்கும் சித்.. இன்னொரு முறை நல்லா யோசிச்சு முடிவெடுத்திட்டு வா.. உன்னை கூட யாராலும் கண்டுபிடிக்க முடியாமல் போகலாம்” என்று வில்சன் கூற ஒரு பார்வை பார்த்தவன் எதுவும் சொல்லாமல் வெளியேறினான்.
இப்போது அவனுக்கு தேவை கனிஷ்காவின் நலன் மட்டுமே. அவளை காரில் கிடத்தி விட்டு காரை கிளப்ப பென் புரியாமல் பார்த்தான்.
“உங்களுக்கு இந்த இடம் முதலிலேயே தெரிந்திருந்தால் காப்பாத்தியிருக்கலாமே சார்..”
“அவனின் பிசினஸ் பத்தி தான் தெரியுமே தவிர இந்த இடம் எனக்கும் புதுசு பென்.. அந்த மூணு பேரையும் எதற்காக அடைச்சு வச்சிருந்தான் தெரியுமா? அவர்கள் மூணு பேருக்கும் இருபத்தைந்து வயதுக்குள் தான் இருக்கும்.. அவர்களோட இரத்தத்தில் இருக்கும் அணுக்கள் இன்னொருத்தருக்கு கொடுக்கலாம்.. அதாவது இளமையானவர்களின் இரத்தம் வயதானவர்களையும் சுறுசுறுப்பாக்கும்.. ஏற்கனவே இந்த மாதிரி டெஸ்ட் பண்ணி பார்த்தவங்க உண்டு.. பட் வில்சன் அதை பணத்திற்காக மட்டுமே பண்றவன்.. அவங்க மூணு பேரையும் வெளில கொண்டு வந்தாலும் நோ யூஸ்.. அவங்க கிட்ட இருந்து அளவுக்கு அதிகமான இரத்த அணுக்கள் வெளில போயாச்சு.. ஒரு முறை ட்ரை பண்ணலாம்னு தான் நினைச்சேன்.. பட் அவன் இன்னும் ஷார்ப்” என்றவன் கனிஷ்காவை திரும்பி பார்க்க அவள் இன்னும் மயக்கத்தில் தான் இருந்தாள்.

