Loading

தாய்க்கு தாயாய் தந்தைக்கு தந்தையாய் சகோதரனுக்கு சகோதரனாய் என எல்லாமுமாக இருந்த வெற்றியின் கரத்திலே கயல்விழி தன் இறுதி மூச்சை விட, அவ் இடமே அதிரும்படி, “கயலு…….” எனக் கதறினான் வெற்றி.

அவன் காதில் கயல் கூறிய மாரியின் பெயரே எதிரொலிக்க, கண்களை அழுத்தத் துடைத்து விட்டு ஆத்திரத்துடன் எழுந்தவன் தன் சகோதரியின் உடலை கரத்தில் ஏந்திக் கொண்டு கீழ் சாதி மக்கள் வாழும் இடத்திற்கு சென்றான்.

அனைவரும் கயல்விழியின் நிலையைக் கண்டு அதிர, அச் செய்தி திருவம்பட்டி முழுவதுமே பரவியது.

காவல்துறையினர், பத்திரிகையாளர்கள் என அவ்விடத்தில் அனைவரும் கூடி இருந்தனர்.

சிலர் கயல்விழிக்கு நடந்த கொடுமையை எண்ணி வருத்தப்பட, ஒரு சிலருக்கு அது வெறும் செய்தியாகவே இருந்தது.

அச் சம்பவத்தைப் பற்றி காவல்துறையினர் விசாரித்துக் கொண்டிருக்க, வெற்றியோ மாரியின் மீது புகார் அளித்தான்.

இரவு போதையில் எப்படியோ வீட்டுக்கு வந்த சேர்ந்த மாரிக்கு காலை எழுந்திருக்கும் போதே கண்ட செய்தி அதிர்ச்சியை உள்ளாக்கியது.

அவனின் கன்னத்தில் ஓங்கி அறைந்த ராஜதுரை, “உனக்கு என்ன கிறுக்கு பிடிச்சிருச்சாலே? போயும் போயும் அந்தக் கீழ் சாதிக்கார நாய் கூட படுத்து இருக்க? உன்னால என் மானமே போச்சுலே…” என ஒரு தந்தையாய் தன் மகனின் தவறைச் சுட்டிக்காட்டி திருத்தாது, அச் சிறுமி கீழ் சாதி என்ற ஒரே காரணத்திற்காக மாரியின் மேல் ஆத்திரப்பட, “ஏதோ அவசரத்துல பண்ணிட்டேன்… மன்னிச்சிருலே ஐயா…” என்றான் மாரி தலை குனிந்து கொண்டு.

“என் கிட்ட மன்னிப்பு கேட்டு என்னலே ஆக போகுது?” என ராஜதுரை மாரியைத் திட்டிக் கொண்டிருக்கும் போதே அவர் கைப்பேசி ஒலி எழுப்ப, அதனை ஏற்று காதில் வைத்தவர் மறுபக்கம் கூறப்பட்ட செய்தியில் ஒரு நிமிடம் அமைதியாக இருந்தவர், “சரிலே… நீயி நான் சொல்றது போல பண்ணு…” என்று ஏதோ கூறி விட்டு அழைப்பைத் துண்டித்தார்.

பிரேத பரிசோதனை முடிந்து கயல்விழியின் உடலை வெற்றியிடம் ஒப்படைக்க, ஏற்கனவே காயமாகி இருந்த உடல் என்பதால் இறுதிச்சடங்குகள் விரைவாக நடைபெற்றது.

“நான் பெரிய பொண்ணு ஆகி உன்ன பார்த்துக்குவேன் அண்ணாத்த…”

“நானும் பெரிய பள்ளிக்கு போகணும்லே…”

“சீக்கிரமா இதே போல பெரிய வூடா நான் கட்டுவேன் அண்ணாத்த…”

“அண்ணாத்த… அவிய என்னை ஆத்தா ஐயன் இல்லாத அநாதைன்னு வையுறாய்ங்க… எனக்கு தானேலே ஆத்தா ஐயனா நீயி இருக்கீய அண்ணாத்த…”

“சாதின்னா என்ன அண்ணாத்த? ஏன் அவிய நம்மள கீழ் சாதின்னு சொல்லுறாய்ங்க? “

“நான் பொறந்ததனாலயா அண்ணாத்த நம்ம ஆத்தா சாமி கிட்ட போயிடுச்சுலே? அதனால தானா ஐயனும் நம்மள வுட்டுட்டு போயிடுச்சு?”

“அண்ணாத்த… எனக்கும் பெரிய பெரிய வூட்டு பயலுங்க போல கேக்கு வெட்டி பொறந்த நாள் கொண்டாட ஆசையா இருக்குலே… நீயி நான் கேட்டா என்ன வேணாலும் பண்ணுவீய தானே… எனக்கு கேக்கு வாங்கிட்டு வரியா அண்ணாத்த? நான் நம்ம சனங்க அம்புட்டு பேரு கூடவும் சேர்ந்து கேக்கு வெட்டி என் பொறந்த நாள கொண்டாடுறேன்லே…”

கயல்விழியின் சிதையை எரிக்கும் போது வெற்றியின் காதில் அவன் சகோதரி அவனிடம் இறுதியாகப் பேசியவைகளே ஒலிக்க, தன் குழந்தையைப் போல் பார்த்துக் கொண்ட சகோதரியுடன் கூடவே அவளின் ஆசை, கனவு என எல்லாவற்றையும் சிதைத்த மாரியைக் கொன்று தீர்க்கும் அளவு வெற்றிக்கு வெறி வந்தது.

அனைத்துக் காரியங்களும் முடிந்து வெற்றி வீட்டுக்கு வர, அவனுக்காக அங்கு காவல்துறையினர் காத்திருந்தனர்.

ஆனால் எந்த ஒரு சகோதரனுக்குமே வரக் கூடாத ஒரு அவல நிலை அங்கு அவனுக்கு காத்திருந்தது.

“அந்த பரதேசி மாரிய பிடிச்சிட்டியாலே ஐயா? என் தங்கச்சிக்கு இம்புட்டு அநியாயம் பண்ணி கொன்ன அந்த மிருகத்த உசுரோடவே விடக் கூடாது…” என வெற்றி ஆவேசப்பட, தன்னுடன் இருந்த இன்னொரு போலீஸிடம் இன்ஸ்பெக்டர் கண் காட்டவும் அவர் வந்து வெற்றியின் கரங்களில் விலங்கை மாட்டவும் அதிர்ந்த வெற்றி,

“எதுக்குலே என் கைல வெலங்க மாட்டுறீய? நான் என்ன பண்ணேன்?” எனப் புரியாமல் கேட்க,

அவனின் கன்னத்தில் அறைந்த இன்ஸ்பெக்டர், “என்னலே? போலீஸையே ஏமாத்த பார்க்குறியா? தங்கச்சி தங்கச்சின்னு சொல்லி அந்தப் புள்ளய நீயே ரேப் பண்ணி கொன்னுட்டு எம்.எல்.ஏ. மயேன் மேல கம்ப்ளைன் பண்ணி பழிய தூக்கி போட பார்க்குறியா?” எனக் கேட்டார் கோபமாக.

அவரின் வார்த்தைகள் காதில் ஈயத்தைப் பாய்ச்சியது போல் இருக்க, அவரின் பழியில் வெற்றிக்கு வார்த்தைகள் வர மறுத்தன.

‘என் தங்கச்சி அவ… என் குழந்தை அவ… நான் எப்படிலே…’ என மனதில் எண்ணியவனிடமிருந்து வார்த்தைகளுக்கு பதில் கண்ணீரே வெளி வர, “அந்தப் பயலோட அப்பன் அதிகாரத்த வெச்சி நெசத்த மூடி மறைக்க பார்க்குறாய்ங்களா?” என்றான் வெற்றி கோபமாக.

மீண்டும் அவனை அறைந்த இன்ஸ்பெக்டர், “எலேய்… இந்த நாய இழுத்துட்டு வந்து ஜீப்புல ஏத்துலே… செய்றதையும் செஞ்சிட்டு எங்களையே எதிர்த்து பேசுறியா?” என்க, அவனை மற்ற காவல் அதிகாரிகள் தெருவில் இழுத்துக் கொண்டு செல்ல, அதனை ஊரே கை கட்டி வேடிக்கை பார்த்தது.

“அந்த மாரி தான்லே என் தங்கச்ச கொன்னது…” என வெற்றி கதற, அதனை யாருமே காது கொடுத்து கேட்கவில்லை.

அன்றே வெற்றியை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க, மாரிக்கு எதிராக தகுந்த ஆதாரங்கள் இல்லாததாலும் வெற்றிக்கு எதிராக ராஜதுரை தன் அதிகாரத்தின் மூலம் பொய்ச் சாட்சிகளைக் காட்டியதாலும் நீதிமன்றம் வெற்றியையே குற்றவாளியாக அறிவித்தனர்.

பத்திரிகைகள், நியூஸ் என எல்லாவற்றிலும் சொந்த சகோதரனாலே கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்ட சிறுமி என கயல்விழியின் புகைப்படத்துடன் செய்தி வர, தான் இன்னும் எதற்கு உயிரோடு இருக்கிறோம் என்ற எண்ணமே வெற்றியை உயிருடன் வதைத்தது.

_______________________________________________

மாரியை இரு கன்னத்திலும் மாற்றி மாற்றி அறைந்த முத்துராசு, “நீயும் உன் ஐயனும் உங்களைப் போலவே தந்திரப் புத்தி உள்ளவியல தான்லே சம்பாதிச்சு வெச்சிருப்பீயலே… ஆனா நான் நாழு நல்ல மனுஷங்கள சம்பாதிச்சு இருக்கேன்… அவிய மூலமா தான் நான் வெற்றிய வெளிய கொண்டு வந்தேன்… ஏன்லே தெருப் பொறுக்கி நாயே… உனக்கு பொம்பள சோக்கு கேட்குதுன்னா அதுக்குன்னே இருக்குறவிய கிட்ட போக வேண்டியது தானேலே… இல்லன்னா இதோ உனக்காக சாகுறேன்னு செத்தாளே ஒருத்தி… அவ கூட போய் ********* வேண்டியது தானே… எதுக்குலே ஒன்னும் தெரியாத ஒரு பச்ச மண்ண உன் சுகத்துக்கு பலி தந்துட்டீய…” என ஆத்திரப்பட்டவன் மீண்டும் மாரியை அடிக்க, அவனைத் தடுத்த ஜெய், “வேணாம் அண்ணே… இவன் கதைய வெற்றி பார்த்துக்கட்டும்… அந்தப் சின்னப் புள்ள அனுபவிச்ச சித்திரவதைய விட பல மடங்கு சித்திரவதைய இந்த சாதி வெறி பிடிச்ச நாய் அனுபவிக்ணும்லே…” என மாரியை முறைத்துக் கொண்டு கூறியவன் முத்துராசுவை அழைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறினான்.

_______________________________________________

ராஜதுரை பத்திரிகையாளர்களிடம் இருந்து தப்பி அவசரமாக தன் வண்டியில் செல்ல, அவரின் கைப்பேசி ஒலி எழுப்பியது.

கைப்பேசி திரையில் கட்சித் தலைவரின் எண்ணைக் கண்டதும் அவசரமாக அழைப்பை ஏற்று காதில் வைத்த ராஜதுரை, “ஐயா…” என பணிவாக அழைக்க, “உடனே கட்சி ஆஃபீஸிக்கு வந்து என்னைப் பாருலே…” என்று விட்டு அழைப்பு துண்டிக்கப்பட்டது.

கோபத்தில் பல்லைக் கடித்த ராஜதுரை, “வண்டிய கட்சி ஆபீஸுக்கு விடுலே…” என்றார் ஓட்டுனரிடம்.

ராஜதுரை கட்சி ஆபீஸை அடைந்ததும் அங்கிருந்தவர்கள் ராஜதுரையை ஏளனமாகப் பார்க்க, என்ன நடக்கிறது என்று புரியாமல் உள்ளே செல்ல, ராஜதுரையின் இருக்கையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்த கட்சித் தலைவர் ராஜதுரை உள்ளே வரவும் அவரின் முகத்தில் ஒரு கோப்பை வீச, கோபத்தில் பல்லைக் கடித்துக் கொண்டு அதனை எடுத்துப் படித்த ராஜதுரை அதிர்ந்தார்.

“என்னலே இது? யாரைக் கேட்டு இப்படி ஒரு முடிவ எடுத்தீய?” என ராஜதுரை கேட்கவும் அவரைக் கேலியாகப் பார்த்த கட்சித் தலைவர், “எலேய்… நான் யாரலே கேட்கணும்? நீயி இனிமே இந்த திருவம்பட்டி எம்.எல்.ஏ. இல்ல… உன்னால நம்ம கட்சி மானமே போகுது… ஒரு பொடிப் பயலு உன்ன எதிர்த்து இம்புட்டும் பண்ணுறான்… அவன ரெண்டு தட்டு தட்டி கம்முன்னு இருக்க வைக்க துப்பில்ல… நீயி எல்லாம் என்னலே எம்.எல்.ஏ? உன்ன எம்.எல்.ஏ. சீட்டுல இருந்து மட்டும் இல்ல… இந்தக் கட்சியில இருந்தே உன்ன தூக்கிட்டேன்லே…” என்க,

கோபத்தில் கட்சித் தலைவரின் சட்டையைப் பற்றிய ராஜதுரை, “ஏய்… நீயி யாருலே என்ன கட்சில இருந்து தூக்குறதுக்கு? இது எங்க தாத்தன் ஆரம்பிச்ச கட்சி…” என்றதும் அவரின் கரங்களைத் தட்டி விட்ட கட்சித் தலைவர், “கட்சிய ஆரம்பிச்சது மட்டும் தான்லே உன் தாத்தன்… ஆனா இன்னைக்கு இந்த கட்சி இந்த நிலமைல இருக்க காரணம் என் முயற்சி… அதை உன்ன போல ஒன்னுத்துக்கும் உதவாத பயலுங்களால கெட்டுப் போறது எனக்கு பிடிக்கல… முதல்ல வெளிய போலே இங்குட்டு இருந்து…” என்றார் கோபமாக.

ஆத்திரத்தில் துண்டை உதறிப் போட்ட ராஜதுரை, “உன்ன நான் சும்மா விட மாட்டேன்லே…” எனக் கோபமாகக் கூறி விட்டு அங்கிருந்து செல்ல, அவர் வழிமறித்து ஒரு காவல் துறை வண்டி வந்து நின்றது.

_______________________________________________

தன்னை நெருங்கிய வெற்றியைக் கண்டு மாரியின் முகத்தில் மரண பயம் தெரிய, “குழந்தைங்க ரூபத்துல தெய்வத்த பார்க்கணும்னு சொல்வாய்ங்க… ஆனா நீயி…” என்ற வெற்றி மாரியை ஒங்கி உதைத்தான்.

வலியில் மாரி முகத்தை சுருக்க, “அது பச்ச மண்ணுலே… எம்புட்டு கனவு இருந்துச்சு தெரியுமா அதுக்கு… அதை இப்படி உன் ஆசைக்கு அநியாயத்துக்கு பலி தந்துட்டியேலே…” என மாரியின் முகத்தில் ஒரு குத்து விட்டான் வெற்றி.

வெற்றி, “எங்க ரெண்டு பேருக்கும் ஐயனும் ஆத்தாவும் இல்லன்னாலும் என் கயலுக்கு அந்தக் கஷ்டமே தெரியக் கூடாதுன்னு அவள என் புள்ள போல பார்த்துக்கிட்டேன்லே நானு… ஆனா கடைசியில நீயி என்னை யாருமே இல்லாத அநாதை ஆக்கிட்டியேலே பாவி… உன்ன போல தறுதலைங்களால தான் பெத்தவியலுக்கு புள்ளைங்கள வெளிய அனுப்பவே பயமா இருக்கு…” என்றவன் மாரியின் முகத்தில் மீண்டும் ஒரு குத்து விட்டான்.

மாரியின் மூக்கு உடைந்து இரத்தம் கொட்ட, “ஏய்… விடு…லே…” என்றான் மாரி வலியில்.

“இப்படி தானே என் தங்கச்சும் கதறி இருக்கும்… நீயி விட்டியாலே? பரதேசி…” என்ற வெற்றி ஒரு கூரிய கத்தரியை கையில் எடுத்தான்.

அதனைக் கண்டு அதிர்ந்த மாரி, “எலே..ய்… என்…னலே பண்ண போ…றீய?” எனப் பயத்தில் கேட்க, அவனைப் பார்த்து ஏளனமாகப் புன்னகைத்த வெற்றி மாரியின் கரத்தைத் தன் கரத்தால் பிடித்துக் கொண்டு, “இந்த கை தானே என் கயல கண்டபடி தொட்டதுலே…” என்றவன் மாரி அதிர்ந்து விளிக்கும் போதே பட்டென மாரியின் ஒரு விரலை வெட்டவும் வலியில் அவ் அறையே அதிர அலறினான் மாரி.

அதனைக் காணவும் வெற்றியின் இதயத்தை யாரோ மயிலிறகால் வருடுவது போல் இருக்க, மீண்டும் இன்னொரு விரலையும் வெட்டினான்.

“ஆஹ்… டேய்… லலிக்கிது… விடுலே… ஐயோ… அம்மா…” என மாரி கதற, “வலிக்கிதாலே? வலிக்கிதா? இப்படி தானே என் கயலும் கதறி இருப்பா… நீயி விட்டியாலே?” என ஆவேசமாகக் கேட்ட வெற்றி தன் ஆத்திரம் தீரும் வரை மாரியின் கை கால்கள் என எல்லா இடத்திலும் வெட்டு போட்டான்.

பின் மாரி அலற அலற வெட்டிய அதே இடங்களில் மிளகாய்த்தூளைப் பூச, நரக வேதனையை அனுபவித்தான் மாரி.

“நீயி என் தங்கச்சிக்கு பண்ணின சித்திரவதைய விட பல மடங்கு உன்ன நான் சித்திரவதை பண்ணுவேன்லே… எதுக்குடா இன்னும் உசுரோட இருக்கேன்னு ஒவ்வொரு நிமிஷனும் துடி துடிச்சி சாகணும் நீயி…” என்ற வெற்றி எரியும் மரக்கட்டையை எடுத்து வந்தவன், “உன்னால என் கையாலயே என் தங்கச்சிக்கு கொள்ளி வெச்சிட்டேன்லே நானு… அவ உசுரோட இருக்கும் போது சின்னதா காயம் ஆகினா கூட தாங்க மாட்டா… அம்புட்டு செல்லமா வளர்த்தேன்… ஆனா என் கயல அடிச்சி கொன்னுட்டியேலே பாவி… நான் கூட இம்புட்டு நாளும் அவ மேல கைய வெச்சது இல்லலே…பாவிப் பயலே…” என்றவன் அந்த எரியும் மரக்கட்டையை மாரியின் உதட்டில் வைத்து அழுத்தினான்.

மாரி வலியில் அலறவும் வழி இல்லாமல் கண்களில் இருந்து கண்ணீர் கொட்ட துடித்துக் கொண்டு இருக்க, “உனக்கு இதெல்லாம் போதாதுலே… என் தங்கச்சிக்கு மட்டும் இல்ல… நீயி கீழ் சாதின்னு சொல்லி எங்க சனத்துக்கு எல்லாம் கொஞ்சநஞ்சம் அநியாயமாலே செஞ்சீய? அம்புட்டும் பாவம்… முத்துராசு அண்ணனோட அப்பாவ அவிய கண்ணு முன்னாலயே எரிச்சியேலே நீயி… எல்லாத்துக்கும் சேர்த்து தான் நான் இன்னைக்கு உனக்கு தண்டனை தரேன்… நீயி எந்தத் தப்பு பண்ணினாலும் அதைத் திருத்தாம இன்னும் தட்டிக் கொடுத்த உன் அப்பனும் உன்ன நெனச்சி ஒவ்வொரு நிமிஷமும் கதறணும்லே…” என்ற வெற்றி பழுக்க காய்ச்சிய கம்பியை எடுத்து மாரியின் நெற்றியில், ‘பொறுக்கி’ என்று எழுத மாரி, “ஆஹ்… விடுலே… என்னைக் கொன்னுடு… முடியல… வலிக்கிதுலே…” என அலற,

“சட்டத்துல இருந்து வேணா நீயி தப்பிக்கலாம்லே… ஆனா உன்னால இனிமே இந்த சமூகத்துலயே நிம்மதியா வாழ விட மாட்டேன் நானு… இது இருக்குறதனால தானே நீயி உன் ஆம்பள திமிர சின்ன குழந்தை கிட்ட காட்டுறியேலே… இனிமே நீயி ஆம்பளையே இல்ல…” என்று கோபமாகக் கூறிய வெற்றி மாரி கதறக் கதற அவனின் ஆணுறுப்பை கத்தியால் அறுத்தான்.

தன் தங்கையின் மரணத்துக்கு பழி தீர்த்த களிப்பில் புன்னகைத்த வெற்றி கண்களை மூடி மனதில், ‘கயலு… தங்கம்… அண்ணாத்த உன்ன சித்திரவதை பண்ணி கொன்ன பொறுக்கிக்கு தண்டனை கொடுத்துட்டேன்லே… நீயி எங்குட்டு இருந்தாலும் சந்தோஷமா இரு புள்ள…’ என நினைத்தவனின் கன்னம் தாண்டி கண்ணீர் வழிந்தோடியது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
2
+1
0
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்