Loading

மரம் தேடும் மழைத்துளி 6

 

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலில் ருக்மணியோடு. கடைகளில் சுற்றிக்கொண்டு இருக்கும் முருகனை பார்த்த பார்வதி, தன்னுடைய பேச்சுக்கு மரியாதை கொடுத்து. தன்னை மாற்றிக் கொண்டு. மனைவியோடு நல்ல விதத்தில் நடந்து கொள்ளும் மகனை பார்த்து, பெருமைப் பட்டுக் கொண்டார்.

 

“ஏலா துர்கா… உன் மாமன்காரன் என்ன வேலை பார்த்துட்டு இருக்கான் பாத்தியா? நம்மள கோவிலுக்குள்ள அனுப்பி வச்சிட்டு. கடையில பொண்டாட்டிக்கு வாங்கி கொடுத்துக்கிட்டு இருக்கான்.” என்ற சுந்தரி. தனது இடுப்பில் வைத்திருக்கும் துர்காவோடு முருகன் நிற்கும் கடைக்கு வேகமாக நடந்து சென்றாள்.

 

“சுந்தரி உனக்கு வேணுங்கறதை வாங்கு.” என்று ஒப்புக்கு சொன்ன முருகனை பார்த்து.

 

“எனக்கு நியாயம் வேணும்,” என்று சொன்ன சுந்தரியை பார்த்து. அவளோடு சேர்ந்து வந்த குடும்ப உறுப்பினர்கள் சிரித்தார்கள்.

 

முருகன், “கோயிலுக்குள்ள போனால் சாமியை கும்பிட்டதும் வெளியிலே வரணும். நீங்க சாமியை கூப்பிட்டுதான் வருவேன்னு அடம்பிடிச்சிட்டு நின்னீங்க. நாங்க எவ்வளவு நேரம்தான் உட்கார்ந்து வேடிக்கை பார்க்கிறது. அப்படியே கடைக்கு நடந்தே வந்தோம். இது ஒரு குத்தமா?”

 

ருக்மணி, மாமன் சொல்லும் பதிலை கேட்டு. மெல்லிய புன்னகையோடு சுந்தரியையும் ஒரு பார்வை பார்த்துக் கொண்டாள்.

 

சுந்தரி, “நேத்து வந்த பொண்டாட்டிக்காக, கூட பிறந்த பிறப்புகளை, கோயிலேயே விட்டுட்டு வந்துட்டேயே ண்ணே…” என்று சோகமாக சொல்வதைப் போல பாவனையோடு சொல்லிவிட்டு. “சரி வந்தது தான் வந்துட்டோம். ஆளுக்கு 1கிலோ பால்கோவா வாங்கு.” என்று சொல்லி முருகன் தலையில் பெரிய குண்டை தூக்கி போட்டாள்.

 

லட்சுமி, “சுந்தரி… ஒத்த கிலோ போதுமா? என்னடி இவ்வளவு கம்மியா கேட்டுட்டே?”

 

மாரியம்மாளின் அக்கா சுப்பு, “மதினி… உங்க மகளுக்கு, பால்கோவா கடைக்காரனா பார்த்து கல்யாணம் பேசனும்.”

 

சுந்தரி, விழிகளை உருட்டி சுப்புவை ஒரு முறை பார்த்தாள், “பாக்குறதுதான் பாக்குறீங்க. தாய் தகப்பன் இல்லாத அனாதையா பாருங்க. மாமனார் மாமியார் தொல்லை இல்லாம பால்கோவா திங்கனும்.” என்றதும் கூட்டமே சிரிப்பில் அதிர்ந்தது. கேலியும் கிண்டலுமாக பேசிக் கொண்டே வந்தவர்கள். மீண்டும் வேனில் ஏறி சேத்தூர் நகரத்திற்கு வந்தார்கள்.

 

அடுத்த நாள், முருகனும், ருக்மனியும் மாரியம்மாள் வீட்டுக்கு விருந்துண்ண சென்று இருந்தார்கள். மூன்று நாட்கள் அங்கே இருந்து விட்டு. மீண்டும் தங்கள் வீட்டிற்கு வந்தார்கள்.

 

கல்யாணத்தை தொடர்ந்து நடந்த அனைத்து வைபவங்களும் நிறைவு பெற்றிருந்த நிலையில். பார்வதியும், முருகனும் அவரவர் பணிகளுக்கு கிளம்ப தயாராயினார்.

 

மறுநாள் காலையில் பார்வதியும், ருக்மணியும் ஒன்றாக சமையல் வேலைகளை முடித்தார்கள்.

 

பார்வதி அவசர அவசரமாக தனக்கான மதிய உணவை எடுத்துக்கொண்டு. “ருக்கு…நீயும், முருகனும் சாப்பிடுங்க. அவனுக்கு பெரிய தூக்குவாளியிலே சோறு வச்சு கொடுத்து அனுப்பு. நான் மூணு மணிக்கு வேலையை விட்டு வந்துருவேன். ஒத்தையில இருக்க ஒரு மாதிரி இருந்தா… பக்கத்து வீட்ல சுந்தரி இருக்கா. அவளோட சேர்ந்து இரு.”, என்று சொல்லிவிட்டு கிளம்பி ஓடினார்.

 

பார்வதி, பக்கத்தில் இருக்கும் பஞ்சு மில்லில், பஞ்சு பொறுக்கும் வேலைக்கு சென்று கொண்டிருக்கிறார். அதில் வரும் வருமானத்தைக் கொண்டுதான் இத்தனை காலம் இரண்டு பிள்ளைகளையும் வளர்த்திருக்கிறார்.

 

முருகன் 12 வயதிலேயே கட்டிட கூலியாக வேலைக்கு சென்று விட்டான். இப்போது அவன் கொத்தனார் வேலைகளை முழுமையாக கற்றுக்கொண்டு, கொத்தனார் ஆகிவிட்டான். அவனது வருமானத்தை சிறுகச் சிறுக சேமித்து. நகைகளை சேர்த்து வைத்து. கோமதியை கட்டிக் கொடுத்திருக்கிறார்கள். இப்படி குடும்ப பொறுப்போடு நடந்து கொண்ட முருகனை, மாரியம்மாளுக்கு பிடித்திருந்தது. அதனால் தன் மகள் ருக்மணியை கட்டிக் கொடுக்க மறுப்பேதும் சொல்லாமல் முன் வந்தார்.

 

ருக்மணிக்கும் முருகன் தாய் சொல்லை தட்டாதவன். குடும்பத்தின் மேல் அக்கறை உள்ளவன் என்ற மதிப்பு இருந்தது. காலப்போக்கில் அது காதலாக மாறி இருந்தது. அவளே எதிர்பாராமல், முருகனுக்கே பெண் கேட்டார்கள். தனக்கு பிடித்தவனே தன்னை திருமணம் செய்து கொள்ளப் போகிறான் என்ற சந்தோஷத்தில் ருக்மணியும் சம்மதம் தெரிவித்தாள்.

 

“ருக்கு சோத்தை போடு. எட்டு நாளா வேலைக்கு போகாம, போறது. புதுசா வேலைக்கு போற மாதிரி இருக்கு.” என்ற முருகன் சாப்பிட அமர்ந்தான்.

 

ருக்மணி, ஒரு தட்டில் முருகனுக்கு தேவையான அளவு சாப்பாடு எடுத்து வைத்து. தண்ணீர் சொம்பை பக்கத்தில் வைத்துவிட்டு. அருகில் அமர்ந்தாள்.

 

அந்த குறுகிய நேரத்தில், குறுக்கு புத்தி தலை தூக்கியது. “ருக்கு ஊறுகாய் இருந்தால் எடுத்து வையேன்.”

 

தரையில் அமர்ந்திருந்தவள், மீண்டும் எழுந்து சென்று. ஊறுகாயை ஒரு சிறிய கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு வந்து அவனிடம் கொடுத்தாள். மீண்டும் தரையில் அமரும் வரை பொறுமையாக சாப்பிட்டவன், ருக்மணி தரையில் உட்கார்ந்தவுடன்.

 

“ஊறுகாயை மட்டும் கொடுத்து இருக்கே. ஊத்தி சாப்பிட தயிரை எடுத்து வையி.”

 

மீண்டும் எழுந்து சென்று. தயிரை எடுத்துக் கொண்டு வந்து. அவன் முன்பு வைத்துவிட்டு அமர்ந்தாள்.

 

சொம்பில் வைத்த தண்ணீரை, முழுவதும் குடித்து விட்டு. “தண்ணி கோதி வச்சிரு”.

 

எழுந்து சென்று தண்ணீரை குடத்தில் இருந்து எடுக்கும் போதுதான், அவன் செயலின் விளக்கம் புரிந்தது. சொம்பை கொண்டு வந்து, அவன் அருகில் வைத்து விட்டு. அப்படியே நின்று இருந்தாள்.

 

“உட்காரு ருக்கு. ஏன் நின்னுகிட்டு இருக்கே?”

 

“வேறு எதுவும் வேணுமா? திரும்பத் திரும்ப உக்கி போட வைக்க கூடாது.”

 

“அப்போ… நான் உன்னை பழி வாங்குகிறேன்னு சொல்றியா?”

 

“என்னால உக்காந்து, உக்காந்து எந்திரிக்க முடியாதுன்னு சொல்றேன்.”

 

ருக்குவின் பதில் முருகனுக்கு கோபத்தை அதிகப்படுத்தியது. எழுந்து அவளது கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட வேண்டும் என்று தோன்றியது. ஆனால் மீண்டும் ஒரு முறை அவளை சமாதானப்படுத்த விருப்பம் இல்லை. அந்த ஆத்திரத்தை, சாப்பிட்டுக் கொண்டிருந்த சாப்பாட்டில், கையை கழுவி பூர்த்தி செய்துவிட்டு எழுந்து கொண்டான்.

 

“நான் என்னதான் குட்டிக்கரணம் அடிச்சாலும். என்னை நீ… நம்ப மாட்டேல்ல.” என்றவன் சட்டையை எடுத்து அணிந்து கொண்டு. சாப்பாட்டுக் கூடையை வண்டியில் மாட்டிக்கொண்டு கிளம்பிச் சென்றான்.

 

“நம்மதான் அவரை தப்பா நினைச்சுட்டோமோ? சாதாரணமா இருந்த மனுசனை திரும்ப சீண்டி விட்டுட்டோமோ? ஏன்டீ ருக்கு, இப்படி எடுத்ததுக்கெல்லாம் சந்தேகப்படுறே?” என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டு அமர்ந்து விட்டாள்.

 

“ஏய் ருக்கு, மருதாணி வைக்கலாம் வாரியாடி?” என்று சுந்தரி தனது வீட்டு வாசலில் நின்று ருக்குவை அழைத்தாள்.

 

காலையில் நடந்த சம்பவத்தால், “எனக்கு வேண்டாம் சுந்தரி. நீயே வச்சுக்கோ.”

 

“சரி நானே வச்சிக்கிறேன். ஒரு எட்டு வந்து, வச்சுவிட்டு போய்டுடி.”

 

“சரி வாரேன்.” என்று சுந்தரியின் வீட்டுக்குச் சென்று, இருவரும் மருதாணியை அரைத்து சுந்தரியின் கைகளில் ருக்மணி வைத்து விட்டாள்.

 

“நீயும் வச்சுக்கோடி”

 

“உனக்கு வச்சு விட்டதே… என் கையெல்லாம் சிவந்துடுச்சு.”

 

“இடது கை சும்மாதானே இருக்கு. அதுலயும் வச்சுக்கோ.”

 

ருக்மணிக்கு, மருதாணி வைத்துக்கொள்ள ஆசைதான். இருந்தாலும் “இதற்கும் ஏதாவது சொல்வாரோ” என்ற பயத்தால் வேண்டாம் என்று சொல்லிவிட்டாள்.

 

மாலையில், முதலில் பார்வதி, வேலையை முடித்துவிட்டு. வீட்டுக்கு வந்தார். அதன் பிறகு, ஆறு மணியை போல, முருகன் வேலையை முடித்துவிட்டு. வீட்டுக்கு வந்தான்.

 

“ருக்கு குடிக்க தண்ணி கோதுய்யா.” என்று எதுவும் நடக்காதது போல. தண்ணீர் கேட்டான் முருகன்.

 

காலையிலே வெரப்பா போனாரு. இப்ப மறந்துட்டாரா? என்று எண்ணிக்கொண்டே தண்ணீரை எடுத்துக் கொண்டு வந்து முருகனிடம் நீட்டினாள்.

 

தண்ணீர் சொம்பை கையில் வாங்கும் போது, ருக்மணியின் சிவந்த கையை கவனித்த முருகன், “மருதானி வச்சிருக்க போல இருக்கு.” என்று கேட்க.

 

“நான் வைக்கல மாமா. சுந்தரிக்கு வச்சு விட்டேன்.”

 

பார்வதி, “அவளுக்கு வச்சுவிட்டவள், உனக்கு கொஞ்சம் வச்சுக்க வேண்டியது தானே?”

 

“மருதாணி கொஞ்சம்தான் இருந்துச்சு அத்தே.”

 

முருகன், “கொஞ்ச நேரம் வச்சு விட்டதுக்கே, கை எப்படி சிவந்து இருக்குன்னு பாரும்மா.

 

“மருதாணி அப்பி புடிச்சால், புருஷன் பாசக்காரனா இருப்பான்னு சொல்லுவாங்க.” என்று பார்வதி சொன்னதும்.

 

“எனக்கு இவள்மேல பாசமே இல்ல. அப்போ எந்த புருஷன் பாசமா இருக்கிறான்? என்று யோசித்த முருகன், “அப்படியா ம்மா…” என்று ஆர்வமாய் கேட்பது போல கேட்டுவிட்டு. மாடிக்கு சென்று விட்டான்.

 

மாடியில் இருந்து கொண்டு, “ருக்கு மாடிக்கு சாப்பாட எடுத்துட்டு வந்துரு.” என்று சொல்லிவிட்டு. அவள் வந்த பிறகு அடுத்த வேலை என்ன சொல்லலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

 

சிறிது நேரத்தில் பார்வதி, ஒரு தட்டில் சோறு குழம்பு எடுத்துக் கொண்டு. ஒரு சொம்பு தண்ணீரோடு மாடிக்கு வந்தார்.

 

“நீ எதுக்குமா இதை கொண்டு வந்தே? அவள் கிட்ட கொடுத்து விட வேண்டியதுதானே? என்று கோபமாக கேட்டான்

 

“ஏன் நான் கொண்டு வந்தால், நீ சாப்பிட மாட்டியா?” என்ற பார்வதி, அந்த அறையில் வைத்து விட்டு இறங்கி சென்றார்.

 

“லாவகமா தப்பிச்சு போயிட்டு இருக்கியா?”என்று முணுமுணுத்துக் கொண்டு. கழற்றி சட்டையை மீண்டும் மாட்டிக் கொண்டு தன்னுடைய நண்பர்களை பார்க்க கிளம்பிச் சென்றான்.

 

நண்பர்கள் எப்போதும் கூடும் இடத்தில் ஒன்று சேர்ந்தார்கள்.

 

கருப்பு, முருகனைப் பார்த்ததும், “மாப்ள உன்னை பார்த்து பல ஆண்டுகளாக ஆன மாதிரி தெரியுதே… எங்களை எல்லாம் மறந்து போச்சா? இல்ல, பொண்டாட்டி வார்த்தைக்கு கட்டுப்பட்டு. எங்களை விட்டு பிரிஞ்சு போயிட்டியா?”

 

“அட, நீ வேற சும்மா இருடா. மாப்பிள்ளைக்கு, நம்ம கூட இல்லாதது கை உடைஞ்ச மாதிரி இருக்குமே. அவன் முகத்தைப் பார்த்தாலே தெரியலயா? நம்ம இல்லாம ஏங்கிப் போய் இருக்கான்னு.” என்று கதிர் சொல்ல

 

கணேசன், “இது அந்த மாதிரி ஏக்கமா தெரியலையே? மாப்பிள்ளைக்கு, மாப்பிள்ளை கலையே இன்னும் வரலையே. நான் சொல்றது சரிதானே மாப்ள?” என்று முருகனிடம் ஒப்புதல் கேட்டுக் கொண்டான்.

 

கதிர், மாப்பிள்ளை கலைன்னால், என்ன மாப்ள?” என்று கணேசனை கேட்க.

 

கணேசன், “மாப்பிள்ளை கலைனால்… சொந்த பந்தங்கள், மச்சினன், மாமனார் மாமியார், கவனிப்பு போக, பொண்டாட்டியோட அதிக கவனிப்புல, முகம் எல்லாம் ஒரு மெருகேரி தெரியும். அது தான்டா மாப்பிள்ளை கல”

 

கருப்பு, “இத்தன நாளா மாப்பிள்ளையை, எல்லாரும் விழுந்து விழுந்து கவனிச்சு தானடா பாத்துக்கிட்டாங்க. அப்புறம் கலை தெரியலன்னால் என்னடா அர்த்தம்?”

 

முருகன், “மாப்ளயலா ரொம்ப நாளு சென்னு, வேலைக்கு போயி, வேலை பார்த்ததில. உடம்பெல்லாம் அசதியா இருக்குடா. எல்லாரும் ஒன்னா சேர்ந்து சரக்கு அடிப்போமா?”

 

கதிர், “எல்லாரும் ஒன்னா சரக்கு அடிப்போம். ஆனால் செலவு நீதான் பண்ணனும். அதுக்கு சம்மதிக்கிறியா?”

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்