Loading

சரோஜா முகம் இப்போது வெளிறிப்போய் வேறாக இருந்தது… தானாக தலைமுடி விரிந்து காற்றில் பறந்தது… சிறிதாய் இருந்த கண்கள் பெருத்து நீண்டு வெளியே வந்தது… நாக்கு வளர்ந்து நெஞ்சு வரை தொங்கியது… நின்றிருந்தவள் அப்படியே உந்தி காற்றில் பறக்க..

 

கைகளிலும் கால்களிலும் தானாய் கீறல் விழுந்து இரத்தம் வடிந்தது அந்த உருவத்திலிருந்து… ஏனோ ஒரு சுவாசிக்க முடியா துர்நாற்றம் அவன் நாசியில் ஏற, குடலை பிரட்டி போட்டது அவனுக்கு…. எழுந்து ஓடலாம் என இவன் முயற்சி செய்ய சிறிதும் அசையமுடியவில்லை… கத்தவும் நாக்கு எழவில்லை..

 

மெல்ல அந்த உருவம் இவன் அருகில் நெருங்கி வர, கையும் காலும் பூமியில் அமுந்து கொண்டது முனியனுக்கு… பயத்திலே பாதி செத்துருந்தான்…. அதன்மீது இருந்து வழிந்த இரத்தம் இவன் முகத்தில் விழுந்து வாய்க்குள் செல்ல… வ்வ்வ்வ்வ்வே என கொமட்டியபடி துப்ப, அனைத்தும் இரத்தமாய் கக்கினான்…

 

“யார் நீ..?” நடுங்கலுடன் இவன் கேட்க… 

மெல்ல அந்த கோர உருவம் மறைந்து பெண்ணின் முகம் தெரிந்தது… அதிர்சியில் வாய் பிளந்த முனியன்! “நீநீநீயா?”

என வாய் திறக்கும் முன் தலை உடம்லிருந்து தூரச்சென்று விழுந்திருந்தது… 

முண்டம் ஒருபுறம் விழுக் விழுக்கென்று துடித்து கொண்டிருக்க, தனியாய் விழுந்த தலையில் இருந்த கண்கள் இன்னும் அரண்டு பார்க்க, அதை கவனித்த அந்த உருவம் தன் கையால் மண்டையை தட்ட, மண்டை நைந்து கண்கள் இரண்டும் சீத்தென வெளியே வந்து விழுந்தது… 

சிறிது நேரத்தில் பற்றி எரிந்து சாம்பலானது முனியனின் உடம்பு… 

 

சரோஜா அவளது வீட்டு திண்ணையில் கிடந்தாள்… முழித்து பார்த்தபோது அவளுக்கு எதுவும் நினைவில் இல்லை… ‘நாம எப்டி இங்க வந்து தூங்குனோம்?’ என  புலம்பியபடி வீட்டிற்குள் சென்றாள்…

 

நல்ல உறக்கத்தில் இருந்தது பண்ணையார் வீட்டு நாய் மூக்கில் எதோ வாசத்தை உணர்ந்து மெல்ல தலையை தூக்கி பார்க்க… காற்று வேகமாக வீச, கருப்பு உருவம் காற்றில் பறந்து வந்துகொண்டிருந்தது அந்த வீட்டை நோக்கி..

 

‘லொல்…. லொல்…. லொல்….’ என மூச்சை பிடித்துக்கொண்டு அதை பார்த்து கத்த… அடுத்தநொடி தூரத்தில் இருந்து

மரக்கிளை ஒன்று ஒடிந்து வந்து நாயின் வாயில் குத்தி தொண்டையை பொத்துக்கொண்டு கீழே குத்தியது… அங்கேயே அந்த நாய் சரிய அந்த உருவம் கதவில் படிந்து உள்ளே சென்றது….

 

உள்ளே ரூமிற்குள் நன்று உறங்கி கொண்டிருந்தாள் செல்லத்தாயி..  பண்ணையாரின் மனைவி… ஹாலில்  டீவி ஆன் ஆகி அதுபாட்டிற்கு ஓட… அதன் சத்தம் அவளை உசுப்பியது.. 

“இந்த மனுசனுக்கு வேறவேலை இல்லை… கண்டவளுகளோட ஊர் மேய வேண்டியது. அப்ரம் ஜாமத்துல வந்து என்னோட உசுர வாங்க வேண்டியது…

ச்சை…” என புலம்பியபடி வெளியே வர, அங்கு யாரும் இல்லாததை கண்டு “ஆப் பண்ணாம போய்ட்டேன் போல”  என சொல்லிவிட்டு, டீவியை ஆப் செய்துவிட்டு மேலே ரூமிற்கு சென்று கதவை திறக்க, தலைகீழாய் கண்முன்னே தொங்கியது அந்த உருவம்…

 

ஒருநிமிசம் உறைந்து! கண்ணைமூடி திறக்க அங்கு எதுவும் இல்லை… ‘என்ன ஆச்சு இன்னைக்கு… எல்லாம் தப்பாவே படுது..’ என தனக்குள் பேசிக் கொண்டே பெட்டில் படுத்துக்கொள்ள, திடீரென பெட்டில் இருந்து தூக்கி வீசி சுவற்றில் அடித்து கீழே விழுந்தாள் செல்லத்தாயி….

 

நடப்பது எதுவும் புரியவில்லை… ‘என்ன ஆச்சு..? எதோ இங்க இருக்கு…’ என  பயந்தபடி கீழே ஓடினாள்… மாடிப்படிகளில் வேகமாக கீழிறங்க, படியிலிருந்து கை முளைத்து அவள் காலை வாரிவிட தடதடவென உருண்டு கீழே விழுந்தாள்… எழ முடியாது கால் எலும்பு உடைய, வலியில் கதறினாள்.. .

 

படிகளில் எதோ தட்டிவிட்டது போல உணர்ந்தவள் என்னவென்று அதை பார்க்க முற்பட, அங்கே அந்த கருப்பு கை மெதுவாய் உயர்ந்து மொத்த கோரமாய் உருமாறி இரத்தம் சொட்ட சொட்ட

மேலிருந்து மாடிப்படியை அடைத்தபடி இவளை நோக்கி வந்தது…. வலியை கூட பொருட்படுத்தாது இவள் எழுந்து ஓட முற்பட, அவளை அப்படியே காற்றில் தூக்கி நிறுத்தியது அந்த உருவம்….

 

இவள் அலறிய அலறல் தொண்டைய தாண்டி வெளியே கேட்கவில்லை….   அந்த உருவம் சமையலறையை உற்று நோக்க, அங்கே மாட்டி வைக்கப்பட்டிருந்த கத்தி பறந்து வந்து அந்தரத்தில் நின்றது…. 

 

செல்லத்தாயி காற்றில் தத்தளித்து கொண்டே கதற, மெதுவாய் அந்த கத்தி அவள் கைகளை அறுத்தது… இரத்தம் சொட்டு சொட்டாக விழ, அடிவயிற்றில் இறங்கி ஒரு நீளமான கோட்டை போட்டுவிட்டு கீழே விழ… வயிற்றில் குடல் உட்பட அனைத்தும் கீழே விழுந்தது… அதை பார்த்து ஆங்காரமாய் சிரித்த அந்த உருவம் பண்ணையாரை தேடி செல்ல, உயிர் பிரிந்த செல்லத்தாயி உடம்பு பொத்தென்று கீழே விழுந்தது..

 

பண்ணையாரின் காட்டு பங்களாவை நெருங்கியபோது , ஒரு சுழல்காற்று வந்து அந்த அகோர கருப்பு உருவத்தை இழுத்தது…

 

மந்திரத்தை சொல்லியபடி,

காற்றில் அந்த உருவம் இழுத்து வரப்படுவதை நிலைகண்ணாடியில் பார்த்து கொண்டிருந்தான் கோடன்….

 

ஆவிகளை வசியப்படுத்த சுடுகாட்டில் மண்டை ஓட்டை வைத்து பூஜை நடத்தி கொண்டிருந்தனர் இருவர்…..

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்