Loading

காதல் உலகில் இருவரும் தங்கள் மனதில் பயணித்துக் கொண்டு இருந்தனர். நேரம் என்ற ஒன்று இருவருக்கும் மிக மெதுவாக நகர்வது போன்றே தோன்றியது . நிமிடத்திற்கு ஒரு முறை கைக்கடிகாரத்தை பார்த்தான் உதிரன். அவனின் நடவடிக்கையை கண்டு சிரித்துக்கொண்டு இருந்தான் சிங். என்னடா! என்னைப் பார்த்தால் உனக்கு சிரிப்பாக இருக்கிறதா?

       மச்சான்! என் கிட்ட ஏன்டா இந்த கேள்வியை கேட்கிறாய் ? உன்னையே இந்த கேள்வி கேட்டு பார் டா ? நான் சிரிப்பது உனக்கு சரியானதாக தான் தோன்றும் .

          எதையும் நான் நினைக்க விரும்பல டா! என்னுடைய மூளையில் ஓடுவது எல்லாம் என்னுடைய மனைவி பத்திரமாக வர வேண்டும் என்பது மட்டும் தான் டா. நான் சொல்ல … சொல்ல எதையும் கேட்காமல் கிளம்பி வந்து கொண்டு இருக்கிறாள் . அவளுக்கு இது டெலிவரி டைம் “எப்போ என்ன ஆகும் என்று எனக்கு தெரியவில்லை டா ?” ரொம்ப பயமாக இருக்கு டா. 

        அவனின் பயம் சரி என்றே பட்டது சிங்கிற்கும். தன் நண்பனை அணைத்து ஆறுதல் படுத்தியவன் ” எல்லாம் நல்லதாகவே நடக்கும் என்று நம்பு டா !”

நீ எதற்கும் பயப்பிடாத டா’ நீ இப்படியே படுத்து கொஞ்ச நேரம் ஓய்வு எடுடா! தன் நண்பனை படுக்க வைத்து விட்டு வெளியே சென்றான் .

        பெட்டில் கண்களை மூடி படுத்துக்கொண்டு இருந்தாலும் தன் கண்முன்னே தோன்றுவது எல்லாம் “நுவலியின் சிரித்த முகமும் அவளின் நிறைமாத வயிரும் தான்!”. உடல் அசதியில் ஓய்வு எடுக்க சொன்னாலும் , மூளை கண்களை விழித்திருக்க வைத்துக்கொண்டு இருந்தது. அவனின் மனம் நேற்றைய நிகழ்வுகளுக்கு பின்னோக்கி சென்றது. 

        “மாமா ” எனக்கு உன்னை பார்க்க வேண்டும் போல இருக்கு .நீ எப்ப வருவ மாமா ? 

           அவளை விட்டுட்டு வந்த இத்தனை மாதங்களில் ஒரு முறை கூட இந்த கேள்வியை கேட்டதே இல்லை அவள் . தன்னுடைய நிலைமையை யோசித்தவன் தன்னை தானே நொந்து கொண்டு “அவளிடம் என்ன பதில் சொல்லி தேற்றுவது என்று கூட தெரியவில்லை அவனுக்கு “. தாய்மை அடைய இருக்கும் எல்லா பெண்களும் விரும்புவது தன்னுடைய கணவன் தன்னுடன் எப்போதும் இருக்க வேண்டும் , தன்னுடைய மனதில் உருவாகும் எண்ணங்களையும் ஆசைகளையும் அவனிடம் கூறவேண்டும் என்பதேயாகும். கருவை சுமக்கும் போதே அவர்களின் உடலில் உள்ள ஹார்மோன்கள் அதிகமாக சுரக்கும் . அந்த நேரத்தில் அவர்களுக்கே தெரியாது ? அவர்கள் என்ன செய்கின்றனர் என்று. சில நேரம் குழந்தை போல சிரிப்பார்கள் , பல நேரம் எதையோ இழக்க போகின்றோம் என்பது போல சோகமாக இருப்பார்கள். அவ்வபொழுது எதற்கு கோவம் படுகின்றோம் என தெரியாமலே கோவப்படுவார்கள் .அவர்கள் அடம் பிடிப்பதில் குழந்தையை மிஞ்சி இருப்பார்கள். கணவனிடம் மட்டும் சொல்லத் துடிக்கும் சின்ன …. சின்ன ஆசைகள் .இப்படி எதையுமே அவள் தன்னிடம் காட்டவில்லை என்பதை விட தான் அவளின் அருகில் இல்லையே என்பது தான் உண்மை. அவளும் பெண் தானே! கற்சிலை ஒன்றும் கிடையாதே! அவளின் மனதில் இருக்கும் எண்ணத்தை தன்னிடம் இருந்து மறைப்பதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பாள். ஒரு கணவனாக அவளின் தனிமையிலும் , சோகத்திலும் என்னால் பங்கு கொள்ள முடியாமல் போனதை எண்ணி எனக்கே என்னைக் கண்டு கோவமாக வருகின்றது. ஆசைப்பட்ட இரண்டு விசயங்களில் ஒன்றிற்காக ஒன்றை விட்டு கொடுக்க வேண்டுமா? இரண்டு விசயங்களை என்னால் சரியாக செய்து முடிக்க முடியாதா? எதாவது ஒரு விசயத்தை தியாகம் செய்ய வேண்டும் என்ற சூழ்நிலை வந்தால்? நான் என்ன செய்வேன் ? தன்னுடைய மனதையே கேள்வி கேட்டு இருந்தான் உதிரன்.

             என்ன மாமா ? நான் பேசிக்கொண்டே இருக்கேன் நீ அமைதியாகவே இருக்க ? எனக்கு உன்னை பார்க்க வேண்டும் போல இருக்கு மாமா!

           அவளின் பேச்சு சத்தத்தில் தன்னிலைக்கு வந்தவன்’ எனக்கும் உன்னை பார்க்க வேண்டும் போல தான் இருக்கு மா ‘. நான் சீக்கிரமாக வர பார்க்குறேன் சரியா’ நீயும் பாப்பாவும் பத்திரமாக இருக்கனும் , நீ நம்ம குழந்தையை பத்திரமாக இந்த பூமிக்கு கொண்டு வர வேண்டும் மா. நம்ம குழந்தைக்கு நீ தான் அப்பாவும் அம்மாவுமாக இருந்து வளர்க்க வேண்டும் மா. 

         அதை எல்லாம் அப்புறமாக பேசலாம் “எனக்கு இப்பவே உன்னை பார்க்க வேண்டும் போல இருக்கு மாமா “.

          நான் சீக்கிரமாகவே உன்னை வந்து பார்க்கின்றேன் டா . நான் போய் விடுப்பு எடுத்துக் விட்டு வருகிறேன் மா.பத்து நாட்களில் நான் வீட்டுக்கு வரேன் டா.

            நீங்க பத்து நாட்கள் கழித்து வந்தாள் நான் எப்படி உங்களைப் பார்ப்பேன்? எனக்கு அதற்குள்ளாகவே குழந்தை பிறந்து விட்டாள் என்ன பண்றது? ஒரு வேளை குழந்தை பிறக்கும் போதே நான் இறந்துவிட்டால் ? “கடைசி வரைக்கும் என்னால் உங்களை பார்க்க முடியாமல் போய்விடும் மாமா”. எனக்கு உங்களை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது .அதுக்கு அப்பறம் எனக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை மாமா.

         அவள் பேசுவதை கேட்டவனுக்கு கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் நிற்காமல் வந்தது. பிரசவத்தில் எல்லா பெண்களும் இறந்து விடுவதில்லை? சில பெண்கள் மட்டும் தான் இறந்து விடுகின்றனர். அதுவும் மருத்துவமனையின் தவறு பாதியும் , சரியான நேரத்தில் விழிப்புணர்வு இல்லாமையும் தான் பிரசவ நேரத்தில் தாய்மார்களை இறக்க செய்கிறது. இவளுக்கு ஏன் இத்தனை பயம் ? படித்து இருந்தும் இப்படி பயப்பிடுகின்றாளே? என்பதை நினைக்கும்போது வருத்தம் தான் வந்தது .அதை விட அதிகமான வருத்தம் இந்த நேரத்தில் கூட தன்னால் அவளுடன் இருக்க முடியவில்லையே என்பது தான்!

         தன்னை ஒருவாராக சமாதானம் செய்துக்கொண்டு “இங்க பாரு டி மாமா சொன்னா கேட்பியா? மாட்டியா?”

          கண்டிப்பாக கேட்பேன் மாமா! நீ சொன்னால் அது என்னுடைய நல்லதற்கு மட்டுமே என்பது எனக்கு தெரியும் மாமா.

          அப்போ நான் சொல்வதை நன்றாக கேட்டுக்கொள் ” உனக்கு யாரு பிரசவத்தில் உயிர் பிரிந்துவிடும் என்று சொன்னது? நீ ஏன்டி இப்படி இருக்க ? உன்னால் இன்னும் பல குழந்தைகள் பெற்று சந்தோசமாக வாழ முடியும் “. மருத்துவமனைகள் எல்லாம் கட்டாத காலத்திலே பிரசவம் சரியாக பார்த்து பெண்கள் மகிழ்ச்சியாக தங்கள் குழந்தைகளுடன் கடைசி காலம் வரை வாழ்ந்தனர். இப்போ நீ இருக்கிற காலம் நவீன காலம் மா! இப்பொழுது மருத்துவ துறையில் எவ்வளவோ முன்னேற்றம் நடந்து இருக்கு என்று உனக்கும் தெரியும் தானே? இப்படி ஒரு நவீன யுகத்தில் இருந்துக்கொண்டு ஏன்டி பயப்பிடுகின்றாய் ? “உன்னை நம்பி தான் என்னுடைய வாழ்க்கை காதல் , என்னுயிர் எல்லாத்தையும் உன்கிட்ட கொடுத்துவிட்டு வந்து இருக்கேன் ” நீ இல்லாத இந்த உலகத்தில் நானும் இருக்க மாட்டேன் . நான் வாழ வேண்டுமா ? இல்லை உயிர் துறக்க வேண்டுமா? நீயே சொல்லு மா?

            அவனின் கடைசி வார்த்தைகள் அவளின் மனதை ஏதோ செய்ய , சாரி மாமா! இனிமே இப்படி எதுவும் பேசமாட்டேன் . நம்ம காதலுக்கான நாம ரெண்டு பேரும் கண்டிப்பாக வாழ்வோம். நீ இல்லாமல் நானும் இல்ல மாமா! “ஐ லவ் யு சோ மச் மாமா “.

         லவ் யு டி’ மை ஸ்வீட் பொண்டாட்டி. இருவரும் மாறி… மாறி பல முத்தங்களை வழங்கி விட்டு போனை கட் செய்தனர். அவளுக்கு ஒரு வழியாக புரிய வைத்ததில் மனது அப்பொழுது தான் கொஞ்சம் நிம்மதி அடைந்தது. அவளும் அவனுடன் பேசிய பிறகு தான் சற்று தெளிவு வந்தது போல உணர்ந்தாள். 

              இங்க பாரு டி உனக்கு எம்புட்டு தைரியம் இருந்தால் லவ் பண்ணுவ? உன்னை படிக்க காலேஜ்க்கு அனுப்பினால் நீ படிக்காமல் மாப்பிள்ளை பார்த்து விட்டாய் வர? உன்னை எல்லாம் பண்ண? தென்னந்துடப்பத்தால் சுமதியை அடித்துக்கொண்டு இருந்தார் ஷீலா. உனக்கு ஒரே பொண்ணுனு செல்லம் குடுத்தது தப்பாக போய்விட்டது டி’ உன்னை எல்லாம் அடித்து உதைத்து வளர்த்து இருக்க வேண்டும். உனக்கு எப்ப கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என்று உன்னை பெற்ற எங்களுக்கு தெரியாதா டி? உனக்கு கல்யாண வயசு வந்து விட்டதோ? அதனால் தான் நீயே மாப்பிள்ளையை பார்த்துக் கொண்டாயோ? உன்னை அடித்து …. அடித்து எனக்கு வலிக்கிறது டி. உன்னை எப்படி எல்லாம் பாசமாக சீராட்டி வளர்த்து இருப்பேன் ஏன்டி என்கிட்ட அடி வாங்க வே ? இப்படி ஒரு காரியம் பண்ணி வச்சி இருக்கியா? உன்னை பெற்றதில் இருந்து உன் மேல என் கை பட்டு இருக்குமா? ஏன்டி இப்படி பண்ண? சுமதியை அடித்துவிட்டு ஷீலா அழுதுகொண்டு இருந்தார். சுமதியை சுற்றி துடைப்பம் உடைந்து இருந்தது, அவளின் முகத்தில் கைவிரலின் பதிவும் உடம்பு முழுவதும் துடைப்பத்தின் பதிவும் இருந்தது. 

             அப்பொழுது தான் வீட்டின் உள்ளே சுமதியின் தந்தை வேதா வந்தார் . வந்தவர் தன் மகளின் நிலைமையை எண்ணி பதறி விட்டார்” ஓடிபோய் தன் மகளை வாரி அணைத்தவர் தன்னுடைய மனைவியைப் பார்த்து முறைத்தார் “.

தன்னுடைய மனைவியைப் பார்த்து “எதுக்கு டி என்னுடைய பொண்ணை இப்படி அடித்து வச்சி இருக்க ? அவ அப்படி என்ன தப்பு பண்ணா டி?” அவ அப்படி என்ன கொலை குற்றமா பண்ணி விட்டாள் ? அப்படியே கொலை பண்ணி இருந்தாலும் என்னுடைய பொண்ணை எதுக்கு டி அடித்த ? சுமதியை தன்னுடைய அணைப்பில் வைத்துக்கொண்டே ” தன்னுடைய மனைவியைப் பார்த்து கத்தினார் “.

          அவ என்ன காரியம் பண்ணி இருக்கானு தெரியுமா ? அவ லவ் பண்றா? அதுவும் ராம் பயலை’

          இப்ப இவ லவ் பண்ணதற்காகவா இப்படி போட்டு அடித்து இருக்க ? நம்ம வீட்டு மாட்டை கூட இப்படி நீ அடித்தது இல்லையே நீயா இப்படி நம்ம பொண்ணை அடித்து இருக்க? நீயும் நானும் லவ் பண்ணி தானே கல்யாணம் பண்ணிக் கொண்டோம்! நீயும் நானும் லவ் பண்ணால் சரி அதுவே நம்ம பொண்ணு லவ் பண்ணால் தவறா ? இது எந்த விதத்தில் நியாயம் டி?. அந்த ராம் பையனுக்கு மட்டும் என்ன குறைச்சல் டி ? அவன் நல்ல பையன் தான் டி.

             நான் இவ ராமுவை லவ் பண்ணியதற்காக அடிக்கல? லவ் பண்ணியதற்காக தான் அடித்தேன். நாம லவ் பண்ணிவிட்டு ஓடி வந்து கல்யாணம் பண்ண ஒரு குழந்தை பெற்று அதுக்கு இப்ப கல்யாண வயசும் ஆகுது. நம்ம கல்யாணத்தில் யாருமே வரவில்லை? அது தெரியும் தானே உங்களுக்கு ?. கொஞ்ச நாட்கள் கழித்து தான் எங்க பெற்றோர்கள் நம்மை சேர்த்துக் கொண்டார்கள் ஆனால் உங்க பெற்றோர் கொஞ்ச வருசத்திற்கு முன்னாடி தான் உங்ககிட்ட பேச வே ஆரம்பித்தார்கள் . என்னை கல்யாணம் பண்ணி என் கூட நீங்க சந்தோசமாக தான் வாழ்ந்தீங்க ஆனால் உங்க மனசில் ஒரு ஓரத்தில் உங்க பெற்றோர்களின் பாசம் கிடைக்காதா? என்று ஏங்கிய நாட்கள் எத்தனையோ? அது எனக்கு தெரியாதா? இவங்க ரெண்டு பேரும் இப்ப கல்யாணம் பண்ணிக் கொண்டாள் நாம கண்டிப்பாக அவர்களை அணைத்து ஆறுதல் கொடுப்போம் ஆனால் அவனின் பெற்றோர் ? ” ஒரு வேளை உங்க பெற்றோர் மாதிரியே அவங்க பெற்றோர்களும் இவனிடம் பேசாமல் இருந்து விட்டால் வாழ்க்கை எவ்வளவு நகரம் என்று உங்களுக்கு தெரியும் தானே?”. என்னிடம் உங்க வலியை சொல்லவும் முடியாமல், மறைக்கவும் முடியாமல் உங்க நெஞ்சிலே போட்டு குமுறிக் கொண்டு இருந்தது எனக்கு தெரியவில்லையா ? அந்த பையன் அவங்க வீட்டில் தைரியமாக பேசி நம்ம பொண்ணை முறைப்படி கல்யாணம் பண்ணி அவங்க வீட்டுக்கு கூட்டி போகட்டும் நான் ஒன்றும் வேண்டாம் என்று சொல்லவில்லை. அதற்கு முன்னாடி ஊர் ஆட்கள் எதாவது தவறாக கூறிவிட்டால் ? இந்த விசயம் வெளியில் ஒருத்தருக்கு தெரிந்தால் போதும் இவளை பற்றி தவறாக கதை கட்டி விட்டுடு வார்கள். 

          எப்ப இருந்து ஷீலா நீ மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று நினைத்து யோசிக்க ஆரம்பித்து விட்ட? நம்ம விசயத்தில் அப்படி நீ யோசிக்க இல்லையே? 

         நம்ம விசயத்தில் எனக்கு நீங்க தான் முக்கியம் என்று வந்து விட்டேன் . என்னைப்பற்றி ஊர் காரர்கள் என்ன நினைத்தாலும் பரவாயில்லை என்று எண்ணி தான் உங்களுடன் வந்துவிட்டேன். அந்த ஒரு விசயத்திற்காக எத்தனை வருடம் உங்க பெற்றோர்களும் என்னுடைய பெற்றோர்களும் அவமானத்தை சுமந்தார்கள் .இந்த ஊர் மக்கள் எப்படி எல்லாம் பேசி மனதை நோகடித்தார்கள். அந்த மாதிரி என்னுடைய பொண்ணுக்கு நடக்க கூடாதுங்க!

           தன் மனைவியின் எண்ணங்களும் சரி என்றே பட்டது ஆனால் தன் மகளை காணும் போது ஒரு தந்தையாக வலியால் துடித்தார். இதை எல்லாவற்றையும் வலியுடன் அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்தாள் சுமதி. 

              உனக்கு அந்த பொண்ணு தான் வேண்டும் என்றால் நீ போடா! ஆனா ஒன்று மட்டும் நிச்சயம் காலம் முழுவதும் உன்னுடன் பேச மாட்டோம் . ஏற்கனவே ஓடி போய் கல்யாணம் கட்டிக்கிட்டவன் பொண்ணையா டா நீ கல்யாணம் பண்ணிக்க வேண்டும்னு நினைக்கிற? 

நம்ம மானம் , மரியாதை எல்லாம் என்ன ஆகுறது? உனக்கு அந்த பொண்ணை தான் கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும் என்று தோன்றினால் இந்த வீட்டை மறந்துவிட்டு போ டா’.

           காதல் திருமணம் செய்வது ஒரு குற்றமா? ஏன் இப்படி எல்லாரும் தவறான கண்ணோட்டத்தில் பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள்? ஷீலா அத்தைக்கு வேதா மாமாவை விட பொருத்தமான ஆள் வேற யாரு சொல்லுங்க? அவங்க ரெண்டு பேரும் எவ்வளவு சந்தோசமாக வாழ்ந்து கொண்டு இருக்காங்க ? உங்களுக்கு நான் சந்தோசமாக வாழ வேண்டுமா ? இல்ல நீங்க சொல்ற பொண்ணை கல்யாணம் பண்ணிக்கொண்டு காலம் முழுவதும் ஜடமாக வாழ வேண்டுமா? நீங்கள் நினைக்கலாம் ” கல்யாணத்திற்கு பிறகு காதலை மறந்து விடுவேன் என்று ஆனால் என்னுடைய காதல் நான் சாகும் வரை என்னைவிட்டு பிரியாது “. நான் ஒன்றும் அவளை இப்பதான் காதலிக்கவில்லை? எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து அவள் தான் என்னுடைய மனைவி என்று நினைத்து வாழ்ந்து கொண்டு இருக்கின்றேன். என்னுடைய மனதில் இருக்கும் அவள் மீதான காதலை நான் மறக்க வேண்டும் என்றால் என்னை கொன்று விடுங்கள்! ஏங்க அவன் என்ன சொல்றான் பாருங்கள்? பெற்ற கையாலேயே கொன்று விட சொல்றான். இதற்காகவா இவனை இந்த வயிற்றில் சுமந்து பெற்றேன். இங்க பாருங்க சுமதி ஒன்னும் கெட்ட பொண்ணு இல்லையே’ அதுவும் இல்லாமல் சுமதி என்ற அண்ணன் பொண்ணு உங்க தங்கச்சி பொண்ணு தானே! என்னுடைய பையன் இல்லாமல் நான் இந்த பூமியில் வாழ மாட்டேன் ” தன்னுடைய கணவரின் சட்டையை பிடித்து அழுது கொண்டு இருந்தார் ராம் தாயார் “. தன்னுடைய மனைவியின் தலையை வருடி விட்டவர் அமைதியாக அறையின் உள்ளே சென்றுவிட்டார். இதற்கு மேலும் அமைதியாக இருந்தால் பிரச்சனை பெரியதாக கூட என நினைத்தவன் மணி பாட்டிக்கு கால் செய்தான். நுவலியின் போனுக்கு கால் பண்ணி எல்லாவற்றையும் கூறி “தங்கச்சி இப்ப பாட்டி வந்தால் மட்டுமே பிரச்சனை தீரும் . நீ பாட்டி கிட்ட போன் கொடு டா”. பாட்டி உங்களிடம் ராம் அண்ணா பேசவேண்டும்னு சொல்றாரு இந்தாங்க’ பாட்டி போனை காதில் வைத்ததும், பாட்டி நான் ராம் பேசுகின்றேன் என்று நடந்த அனைத்தையும் அருவி போல சொல்லி முடித்தான் . 

          டேய் போதும் டா! நான் வந்து பேசுகின்றேன் என போனை கட் செய்துவிட்டு வீட்டை விட்டு வெளியே செல்ல ,” பாட்டி நானும் வரேன் பாட்டி எனக்கு இங்க இருக்க போர் அடிக்கிறது “.

  இருவரும் சுமதியின் வீட்டிற்கு சென்றனர் முதலில் , அங்கு உடம் முழுவதும் வீங்கிய படி வலியில் முனகிக் கொண்டு இருந்தாள் சுமதி. ஷீலாவின் கண்ணத்தில் அடித்ததற்கான கை அடையாளம் இருந்தது. வேதா , தலையில் கை வைத்துக் கொண்டு அமைதியாக உட்கார்ந்து இருந்தார். 

    மணி பாட்டி அவர்களைப் பார்த்ததும் என்ன நடந்து இருக்கும் என்பதை புரிந்துக் கொண்டவர் நுவலிடம் ஐஸ்கட்டி கொண்டு வந்து சுமதிக்கு ஒத்தடம் குடுக்க சொல்லிவிட்டு , நீங்க இருவரும் என் கூட வாங்க ?

       ஷீலா, எங்க அத்தை கூப்பிடுறீங்க?

மணி, முதல்ல எழுந்து என் கூட வாங்க! இருவரையும் அழைத்துக்கொண்டு ராமுவின் வீட்டிற்கு சென்றார். வீட்டின் உள்ளே செல்ல முதலில் தயங்கியவர்கள் பாட்டியின் பார்வையில் அவருடன் உள்ளே சென்றனர். ராம் கோவமாக உட்கார்ந்து இருக்க , அவனின் அருகில் அவனின் பெற்றோர் உட்கார்ந்துக் கொண்டு சற்று நேரத்திற்கு முன்னாடி இங்க ஒரு பிரச்சனை நடந்தது என்பதற்கான அடையாளமே இல்லாமல் டி.வி பார்த்துக்கொண்டு இருந்தனர். அவர்களைப் பார்த்து …. பார்த்து கடுப்பாகி கொண்டு உட்கார்ந்து இருந்தான் ராம். 

     பாட்டியை பார்த்ததும் மரியாதையுடன் அந்த வீட்டில் இருந்த அனைவரும் எழுந்து நின்றனர். பாட்டி அனைவரையும் பார்த்து சிரித்து விட்டு , ” நான் நேரிடையாகவே விசயத்திற்கு வருகின்றேன் “.

       சொல்லுங்க பெரியம்மா!

      ராமும் சுமதியும் காதலித்து கொண்டு இருக்கிறார்கள், அந்த விசயம் உங்க இரண்டு வீட்டு ஆட்களுக்கு ம் தெரியும் . இரண்டு வீட்டிலையும் பிள்ளைகளை போட்டு அடித்தால் எந்த பிரச்சனையும் தீராது? நீங்க என்ன பதில் சொல்ல போறீங்க ? நீங்க இரண்டு குடும்பமும் ஒன்றுக்குள் ஒன்று என்பது போல் சொந்தங்கள் தானே! ராமுவின் பெற்றோரைப் பார்த்து நீங்க என்ன சொல்றீங்க ? சுமதியை உங்க வீட்டு மருமகளாக வர? 

        ராமுவின் அம்மா தன்னுடைய கணவரைப் பார்க்க, அவரோ ஒரு முறை தன் குடும்பத்தாரை பார்த்து விட்டு எங்களுக்கு சம்மதம் என்றார். ராமு ஓடி சென்று “தேங்க்ஸ் அப்பா ” என்று கட்டி அணைத்துக் கொண்டான். தன் மகனின் தோளை தட்டி உன்னுடைய விருப்பம் தான் டா எங்க விருப்பமும் . நீ எவ்வளவு தூரம் உன்னுடைய காதலுக்காக போராடுகிறாய் என்று பார்த்தேன் டா கண்ணா! நீ என்னுடைய மகன் என்பதை நிருபித்து விட்டாய் டா! போய் என்னுடைய மருமகளை கூட்டி வாடா ”.

                 தன் தந்தையை பெருமிதத்துடன் பார்த்தவன் மகிழ்ச்சியில் என்ன செய்வது என்று தெரியாமல் மனோன்மணி பாட்டியை தூக்கி சுற்றி விட்டு , அவரின் கண்ணத்தில் முத்தம் ஒன்றை பதித்து விட்டு சுமதியை பார்க்க வேகமாக சென்றான்.

     நுவலி, ஐஸ்கட்டிகளை கொண்டு வந்து சுமதிக்கு ஒத்தடம் கொடுத்துக்கொண்டு இருந்தாள். ஏன்டி இவ்வளவு அடி அடிக்கிற வரைக்குமா நீ அமைதியாக இருந்த? அம்மா கோவமாக இருக்கும் போதே ” நீ கிளம்பி நம்ம வீட்டுக்கு வந்துவிட வேண்டியது தானே !” இப்படி உடம்பு முழுவதும் கொழுக்கட்டை மாதிரி வீங்கற அளவுக்கா யாராவது அடி வாங்குவாங்க ?.சிறிது நேரம் ஐஸ் கட்டி ஒத்தடம் கொடுக்க ,” அண்ணி எனக்கு இப்ப ஓகே தான் . நீங்க அமைதியாக உட்காருங்கள் நான் போய் டி.வி ஆன் பண்றேன் என்று எழுந்து சென்று டி.வியை ஆன் செய்து பாடல்கள் ஒளிப்பரப்பாகும் சேனலை வைத்துவிட்டு ” என்ன ஒரு நல்ல லவ் சாங் கூட போடமாட்றான் ?”.

          அடியேய் இப்படி அடி வாங்கியும் உனக்கு காதல் சாங் கேட்கிறதா? அங்க ராமோட அப்பாவும் அம்மாவும் என்ன பதில் சொல்ல போறாங்கனு ஏதாவது கொஞ்சமாவது டென்சன் இருக்கா டி உனக்கு? எனக்கு தான் டென்சன் அதிகமாக இருக்கு.

         அண்ணி! கொஞ்ச நேரம் அமைதியாக இருங்கள் . இப்படி டென்சன் ஆனால் வயிற்றில் இருக்கும் பாப்பாவிற்கு தான் ஏதாவது பிரச்சனை வரும். நானும் ராமுவும் ஆல்ரெடி பேசிக்கொண்டு தான் இன்னைக்கு எங்க லவ் மேட்டரை வீட்டில் சொன்னோம். எப்படியும் இரண்டு வீட்டிலும் கொஞ்ச நேரம் கத்துவாங்க இல்ல அடிப்பாங்க அவ்வளவு தானே? இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் நாங்க ஒளிந்து … ஒளிந்து காதல் செய்வது? சொல்லுங்க !

         நல்லா விவரம் தான் டி உனக்கு. எனக்கு எல்லாம் இந்த மாதிரி விவரம் இல்லை ? இருந்து இருந்தால் உங்க அண்ணனை ஏன் கல்யாணம் பண்ணி நான் இங்கும் அவன் அங்கும் இருக்கப்போறோம் ? 

            அதுவும் சரி தான் அண்ணி! இப்ப உங்களுக்கு சாப்பிட என்ன வேண்டும் சொல்லுங்க? சீக்கிரமாக செய்துக்கொண்டு வருகின்றேன் .

           எம்மா தாயே! எனக்கு எதுவும் வேண்டாம் . நீ அமைதியாக இப்படி வந்து உட்காரு டி. 

        ஷீலா, ஓடிச்சென்று அண்ணா! என கட்டிக்கொண்டு அழ, மற்றவர்கள் வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டு இருந்தனர். அழுவாத டா, நீ எதற்கும் கவலைபடாதே! சுமதி இனிமே என்னுடைய வீட்டு பொண்ணு. அவளை நினைத்து இனிமே எதையும் யோசிக்க வேண்டாம். இந்த வீட்டில் ஏற்பட்ட ஒரு காதலால் தான் குடும்பம் பிரிந்தது இப்போ அதே காதலால் மறுபடியும் நம்ம குடும்பம் சேர போகிறது. உன்னுடைய கல்யாணத்திற்கு தான் என்னால் எதையும் பண்ண முடியவில்லை ? ஆனால் நம்ம பசங்க கல்யாணத்தை பெருசாக பண்ண வேண்டும். அங்கு ஒரு பாச போராட்டமே நடந்தது. வேதா தன்னுடைய தங்கையை அணைத்துக் கொண்டு , தங்களின் பாசத்தை வெளிப்படுத்திக் கொண்டு இருந்தனர்.

     மணி, இப்பவாவது நீங்க எல்லோரும் மனசை விட்டு பேசிக்கொண்டீர்களே! அதுவே போதும். நான் கிளம்புறேன் என்னுடைய பேத்தி அங்க தனியாக இருப்பாள்.

         ஏன் அத்தை இப்பவே கிளம்புறீங்க? அங்க தான் சுமதி இருக்காளே அவ பார்த்துக் கொள்வாள். உங்களால் தான் எங்க குடும்பம் மறுபடியும் பழையபடி ஒன்றாக சேர்ந்து இருக்கிறது . நீங்க கொஞ்ச நேரம் இங்க இருந்துவிட்டு போகலாம் தானே!

           பக்கத்து தெருவில் தானே நம்ம வீடு இருக்கிறது ” எப்ப பார்க்க வேண்டும் என்று தோன்றினாலும் வந்து விடுகின்றேன் “. சுமதி இது வரைக்கும் நுவலியை பார்த்துக்கொண்டுதான் இருந்து இருப்பா ஆனால் இப்பதான் உன்னுடைய பையன் போய் இருக்கானே என்று நமட்டு சிரிப்பு ஒன்று சிரித்து விட்டு அங்கு இருந்து கிளம்பினார். 

         வேகமாக வந்தவன் சுமதியை கண்டதும் “சுமதி வீட்டில் எல்லோரும் ஓகே சொல்லி விட்டாங்க டி” அவளை தூக்கி சுற்றியவன் , “அவளின் கண்ணத்தில் முத்தம் வைக்க போக ” தன்னுடைய ஒற்றை விரல் ஒன்றை அவனின் வாய் மீது வைத்து தடுத்து ” அங்க பாரு டா அண்ணி இருக்காங்க ” 

அப்பொழுது தான் சுற்றியும் முற்றியும் பார்த்தவன் அங்கு ஷோபாவில் உட்கார்ந்துக் கொண்டு இவர்களைப் பார்த்து சிரித்துக்கொண்டு இருந்த நுவலியைப் பார்த்தான். “ஆ” தங்கச்சி சாரி மா என்று அசடு வழிந்து விட்டு , சுமதியை இழுத்துக்கொண்டு மாடிக்கு சென்றான். நுவலி டி.வி சேனலை மாற்றி.. மாற்றி வைத்துக்கொண்டு இருந்தவள் கடைசியாக நியுஸ் சேனலை வைத்தாள்.

         ராமு, அவளை மேலே அழைத்து வந்தவன் ,அவளின் நிலைமையை கண்டு மிகவும் வருத்தமாக “சாரி டி ” என்னால் தானே இப்படி நீ அடி வாங்கி இருக்க ? எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு மா என்று சோகமாக பேசிக்கொண்டே இருக்க.

            எதுக்கு டா இப்படி சோகமாக இருக்க? நாம இருவரும் சேர்ந்து தானே இந்த முடிவு எடுத்து சொன்னோம். நீ பையன் உங்க வீட்டில் அடிக்கவில்லை ஆனா நான் பொண்ணு “அதான் அடி பின்னி பெடல் எடுத்து விட்டாங்க “. இதுக்கு எல்லாம் வருத்தப்பட்டு கொண்டு இருந்தால் நாம எப்படி கல்யாணம் செய்து சந்தோசமாக வாழ்வது ? இதுக்கு மேலே நீ சும்மா …. சும்மா வருத்தப்பட்டு கொண்டு இருந்த ? “ஒரு விரல் நீட்டி அவனை எச்சரிக்கை செய்து கொண்டு இருந்தாள் ” . அவனோ

மீண்டும் என்னால் தானடி இது எல்லாம் நடந்தது. இதற்கு முழு காரணமும் நான் தானே! இவனை இதற்கு மேலும் பேசிவிட கூடாது என நினைத்தவள் ” அவனின் இதழில் தன் முத்தத்தை பதித்தாள்”.

 

      நியுஸ் சேனலை பார்த்துக்கொண்டு இருந்தவள் வேற சேனலை மாற்ற போக “அப்பொழுது உதிரனின் பெயர் சொன்னதும் அப்படியே அந்த சேனலை வைத்தாள்”. மாமாவின் பெயர் டி.வியில் வருது அப்படி என்னதான் மாமாவை பற்றி சொல்லப் போறாங்க என்பதை பார்க்கலாம் என்று ஆர்வமாக அந்த டி.வியையே பார்த்துக்கொண்டு இருந்தாள். இன்று தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட சண்டையில் தீவிரவாதிகள் பலர் கொல்லப் பட்டனர் மற்றும் சிலர் உயிருடன் பிடிக்கப்பட்டு சிறையில் அடைத்து விசாரித்துக் கொண்டு இருக்கின்றனர். இந்த விசயம் நமக்கு மகிழ்ச்சி தரும் விசயம் ஆனால் நமக்கு எல்லாம் சோகமான விசயம் என்னவென்றால் “நம்முடைய கர்னல் உதிரனின் உடம்பில் ஒரு குண்டு துளைக்கப்பட்டு அதிக இரத்தப்போக்குடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் ” இது தான் நுவலி கடைசியாக கேட்ட வார்த்தைகள் ” அதிர்ச்சியில் அப்படியே மயங்கி விழுந்து இருந்தாள்”. அந்நேரத்தில் அவளை யாருமே பார்க்க வில்லை. சிறிது நேரத்தில் வீட்டின் உள்ளே வந்த மணி பாட்டி நுவலியின் நிலைமையைக் கண்டு பயந்துபோய் கத்த ஆரம்பித்தார். அவரின் கத்தலில் மேல் இருந்து இருவரும் ஓடிவந்து நுவலியை தூக்கி ஷோபாவில் சாய்த்த மாதிரி உட்காரவைத்து தண்ணீரை அவளின் முகத்திலே தெளித்தார் பாட்டி. மெதுவாக கண்விழித்தவள் காதுகளில் ” உதிரனுக்கு குண்டு அடி பட்டது ” என்பதே மீண்டும் …. மீண்டும் ஒளித்து கொண்டு இருந்தது. மறுபடியும் டி.வியை பார்த்தாள் இப்பொழுதும் அவனைப் பற்றியே நியுஸ் ஒளித்து கொண்டு இருந்தது . அப்பொழுது தான் அனைவரும் டி.வியைப் பார்க்க அதில் உதிரன் மயங்கிய நிலையில் ஆடை முழுவதும் இரத்தம் நனைந்த நிலையில் அவனை தூக்கி கொண்டு செல்வதை போட்டு… போட்டு காட்டிக்கொண்டு இருந்தனர். அதை கண்டவள் மறுபடியும் மயங்கி ஷோபாவிலே விழுந்து விட்டாள். இந்த முறை தண்ணீர் தெளித்தும் எழவே இல்லை , உடனே தாமதம் செய்யாமல் மருத்துவமனைக்கு அவளை அழைத்து சென்றனர்.

           நியுஸ் சேனலை பார்த்துக்கொண்டு இருந்தவள் வேற சேனலை மாற்ற போக “அப்பொழுது உதிரனின் பெயர் சொன்னதும் அப்படியே அந்த சேனலை வைத்தாள்”. மாமாவின் பெயர் டி.வியில் வருது அப்படி என்னதான் மாமாவை பற்றி சொல்லப் போறாங்க என்பதை பார்க்கலாம் என்று ஆர்வமாக அந்த டி.வியையே பார்த்துக்கொண்டு இருந்தாள். இன்று தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட சண்டையில் தீவிரவாதிகள் பலர் கொல்லப் பட்டனர் மற்றும் சிலர் உயிருடன் பிடிக்கப்பட்டு சிறையில் அடைத்து விசாரித்துக் கொண்டு இருக்கின்றனர். இந்த விசயம் நமக்கு மகிழ்ச்சி தரும் விசயம் ஆனால் நமக்கு எல்லாம் சோகமான விசயம் என்னவென்றால் “நம்முடைய கர்னல் உதிரனின் உடம்பில் ஒரு குண்டு துளைக்கப்பட்டு அதிக இரத்தப்போக்குடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் ” இது தான் நுவலி கடைசியாக கேட்ட வார்த்தைகள் ” அதிர்ச்சியில் அப்படியே மயங்கி விழுந்து இருந்தாள்”. அந்நேரத்தில் அவளை யாருமே பார்க்க வில்லை. சிறிது நேரத்தில் வீட்டின் உள்ளே வந்த மணி பாட்டி நுவலியின் நிலைமையைக் கண்டு பயந்துபோய் கத்த ஆரம்பித்தார். அவரின் கத்தலில் மேல் இருந்து இருவரும் ஓடிவந்து நுவலியை தூக்கி ஷோபாவில் சாய்த்த மாதிரி உட்காரவைத்து தண்ணீரை அவளின் முகத்திலே தெளித்தார் பாட்டி. மெதுவாக கண்விழித்தவள் காதுகளில் ” உதிரனுக்கு குண்டு அடி பட்டது ” என்பதே மீண்டும் …. மீண்டும் ஒளித்து கொண்டு இருந்தது. மறுபடியும் டி.வியை பார்த்தாள் இப்பொழுதும் அவனைப் பற்றியே நியுஸ் ஒளித்து கொண்டு இருந்தது . அப்பொழுது தான் அனைவரும் டி.வியைப் பார்க்க அதில் உதிரன் மயங்கிய நிலையில் ஆடை முழுவதும் இரத்தம் நனைந்த நிலையில் அவனை தூக்கி கொண்டு செல்வதை போட்டு… போட்டு காட்டிக்கொண்டு இருந்தனர். அதை கண்டவள் மறுபடியும் மயங்கி ஷோபாவிலே விழுந்து விட்டாள். இந்த முறை தண்ணீர் தெளித்தும் எழவே இல்லை , உடனே தாமதம் செய்யாமல் மருத்துவமனைக்கு அவளை அழைத்து சென்றனர்.

           அனைவரும் வெளியே பயத்துடன் நின்றுக்கொண்டு இருந்தனர். ஒரு பக்கம் உதிரனுக்கு என்னாச்சு என்றே தெரியவில்லையே “ஆத்தா மகமாயி நீ தான் என்ற பேரனையும் பேத்தியையும் பத்திரமாக காப்பாற்றி தரணும்” மணி பாட்டி மருத்துவமனையில் இருந்த அம்மன் சிலையின் முன்பு நின்றுக்கொண்டு வேண்டிக்கொண்டு இருந்தார். ரத்னமும் வசுமதியும் கண்களில் கண்ணீரோடு நுவலி இருந்த அறையையே பார்த்துக்கொண்டு இருந்தனர். கண்ணனும் வனஜாவும் மனதில் கடவுளை ஜெபித்தபடி இருந்தனர். ராமுவும் சீதாவும் யாருக்கு ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் “தங்களால் தான் நுவலிக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்ப்பட்டது என்ற குற்ற உணர்வில் இருந்தனர்”.

        நுவலிலை பரிசோதித்து விட்டு வெளியே வந்த மருத்துவர் ” நீங்க யாரும் கவலைப்படவேண்டாம்! அவங்க அதிர்ச்சியின் காரணமாக தான் மயக்கம் போட்டு விழுந்து இருக்காங்க “. 

        வசுமதி, நாங்க எங்க பொண்ணை போல் பார்க்கலாமா சார் ?

           இங்க பாருங்க நீங்க நினைக்கிற அளவுக்கு இவங்களுக்கு பெரிய பிரச்சனை இல்லை தான் ஆனால் அவங்களுடைய அதிர்ச்சி குழந்தையை தாக்கி இருக்கு.அந்த தாக்கத்தின் காரணமாக குழந்தை இவ்வளவு நேரம் எவ்வித அசைவும் தராமல் இருந்து இருக்கு. அனைவரும் பதட்டமாக குழந்தைக்கு என்னாச்சு சார் ? எனக் கேட்க. குழந்தை இப்ப நார்மல் ஆகிவிட்டாங்க ஆனால் அவங்க பிரசவ தேதியில் தான் பிறப்பாங்க என்று சொல்லமுடியாது? மறுபடியும் ஒரு சின்ன அதிர்ச்சி ஏற்பட்டால் கூட அவங்களுக்கு அப்பவே பிரசவ வலி வந்து விடும். நீங்க எல்லாம் அவங்களை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு அவர் சென்றுவிட்டார். எல்லோருக்கும் அப்பொழுது தான் சிறிது நிம்மதியாக இருந்தது. ராம் வேகமாக சென்று மருத்துவமனையில் இருந்த டி.வி-யில் நியுஸ் பார்த்துவிட்டு ஓடிவந்து ” உதிரனுக்கு நல்லபடியாக குண்டு எடுத்து விட்டாங்களாம்! இனிமே பயப்பிட வேண்டாம் “. அனைவருக்கும் அப்பொழுது தான் உயிரே வந்தது போல இருந்தது. அன்று இரவு முழுவதும் மருத்துவர்களின் கண்காணிப்பிலே இருந்தாள் நுவலி. அடிக்கடி செவிலியர்கள் வந்து குழந்தையின் இதய துடிப்பு சீராக இருக்கிறதா? என்று பரிசோதித்து விட்டு சென்றனர். வசுமதியும் வனஜாவும் நுவலியுடன் மருத்துவமனையிலே தங்கிக் கொண்டனர். மற்றவர்கள் அனைவரையும் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நுவலி மருந்தின் வீரியத்தில் உறக்கத்திலே இருந்தாள் ஆனால் இரவில் பல முறை “உதிரா…. உதிரா ” என கத்திக்கொண்டே இருந்தாள். உறக்கத்தில் பயந்து அலறும் அவளைப் பார்க்க” வளர்ந்த குழந்தை போன்றே தோன்றியது இருவருக்கும்” நுவலியை காணும் போது.

       மறுநாள் காலையில் கண் விழித்தவள் முதலில் உதிரனைப் பற்றிதான் கேட்டாள். அவன் நன்றாக இருக்கின்றான் என்பதை கேட்டும் ஏனோ அவளின் மனம் அமைதியைப் பெறவில்லை?.உடனே உதிரனிடம் பேச துடித்த மனதை கட்டுப்படுத்திக்கொண்டு இருந்தாள் ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் முடியவில்லை. உடனே தன்னுடைய அம்மாவின் போனை எடுத்து உதிரனுக்கு அழைப்பு விடுத்தாள் .உதிரன் காலையில் சீக்கிரமே எழுந்து இருந்தான் அவனது மனது முழுவதும் தன்னுடைய நியுஸ் பார்த்துவிட்டு நுவலிக்கு என்ன ஆனதோ? இப்ப எப்படி இருக்கிறாளோ? என்ற எண்ணங்களே ஓடிக்கொண்டு இருந்தது. அவனின் வலதுபுற தோள் பட்டையில் குண்டு பாய்ந்து இருந்ததால் பெரிதாக எந்த வித பாதிப்பும் இல்லை ஆனால் காயம் ஆறும் வரை பத்திரமாக பார்த்துக்கொள்ள சொன்னார்கள் மருத்துவர்கள். தன்னுடைய இடது கையில் இருந்த போனையே பார்த்துக்கொண்டு இருந்தான். இப்பொழுது நுவலிக்கு போன் செய்யலாமா? இல்லை வேண்டாமா? அவ தூங்கிக் கொண்டு இருந்தாள் ? அவளின் தூக்கம் என்னால் கெட்டுப்போகும் என நினைத்தவன் போனில் எதையோ பார்த்துக்கொண்டு இருக்க , ராமுவிடம் இருந்து அவனுக்கு அழைப்பு வந்தது. அட்டன் செய்து “சொல்லுடா மாப்பிள்ளை’ எப்படி இருக்க ? 

     ராம், நான் எல்லாம் நல்லாத்தான் இருக்கேன் . நீ எப்படி இருக்க ? உன்னுடைய உடம்பில் குண்டு அடி பட்ட இடத்தில் இப்ப வலி எப்படி இருக்கு? கொஞ்சம் பார்த்து இருந்து இருக்கலாமே டா ! டாக்டர் என்ன சொன்னாங்க டா?

          எனக்கு எதுவும் இல்ல டா’ நான் நல்லாத்தான் இருக்கேன். அது ஒரு சின்ன குண்டு தான் ” டாக்டர்கள் அதை என்னுடைய கையில் இருந்து எடுத்து விட்டாங்க டா”. ஆனா கொஞ்ச நாளைக்கு காயத்தில் தண்ணீர் படாமல் பார்த்துக்கொள்ள சொல்லி இருக்காங்க டா. நுவலியை பார்த்தியா? அவளுக்கு மெசேஜ் அனுப்பினேன் திருப்பி பதிலே வரவில்லை டா. நீ வீட்டுக்கு என்னனு பார்த்துவிட்டு சொல்லு டா.

         மச்சான் அ…. து வந்து நேற்று நியுஸ் பார்த்ததில் இருந்து மருத்துவமனையில் அட்மிட் ஆனது வரைக்கும் எல்லாவற்றையும் சொல்லி முடித்தான் ராம். உதிரனின் மனது பதறிப்போய் விட்டது. மச்சான் நான் மருத்துவமனைக்கு தான் போய்கொண்டு இருக்கின்றேன் அங்கே போய் உனக்கு போன் பண்றேன் டா. இவனும் சரி என கூறிவிட்டு போனை கட் செய்தான். ஆனால் மனது முழுவதும் இப்ப நுவலியும் தன்னுடைய குழந்தையும் எப்படி இருக்கிறார்கள் என்ற எண்ணமே ஓடிக்கொண்டு இருந்தது.சிறிது நேரத்தில் வசுமதியிடம் இருந்து அழைப்பு வர, போனை அட்டன் செய்து “ஹலோ அத்தை ” அந்த பக்கத்தில் இருந்து எவ்வித பதிலும் வரவில்லை . சிறிது நேரத்தில் நுவலி அழும் சத்தமே கேட்டது. 

     உதி, எதற்கு டி அழுகிறாய் நான் நன்றாக தான் இருக்கின்றேன். இந்த நியுஸ் காரர்கள் தான் ” இந்த விசயத்தை கொஞ்சம் பில்டப் பண்ணி போட்டு விட்டாங்க “. நீ எதற்கும் வருத்தம் படாதே நான் நல்லாத்தான் இருக்கேன். 

       நான் உன்னைப் பார்க்க வேண்டும் உடனே மாமா. எனக்கு உன்னை பார்த்தால் தான் மனசு கொஞ்சம் நிம்மதி ஆகும். 

        நானே இன்னும் கொஞ்ச நாட்களில் வீட்டுக்கு வந்துவிடுவேன் மா. நீயும் பாப்பாவும் பத்திரமாக இருங்கள்!

        எனக்கு உடனே பாக்கனும் அதுவும் இன்னைக்கே பாக்கனும் மாமா.

         வீடியோ கால் பண்ணவா ?

      எனக்கு வீடியோ கால் எல்லாம் தேவையில்லை? நான் உன்னை பாக்கனும் ” நீ வருவதற்கு முன்னாடியே எனக்கு குழந்தை பிறந்து விட்டால் ? இந்த பிரசவத்தில் எனக்கு ஏதாவது ஆகி விட்டால் நான் என்ன பண்றது? கடைசி வரைக்கும் உன்னுடைய முகத்தை பார்க்காமலே போய்விடும் மாமா!” அவள் அழுது கொண்டே கூற,

         பைத்தியம் மாதிரி எதாவது உளறாத டி. இப்படி ஏதாவது தப்பு… தப்பாக நினைத்து பேசிக்கொண்டு இருக்காதே! இப்ப நீ இருக்கும் நிலைமையில் உன்னை திட்ட வேண்டாம் என்று பார்க்கின்றேன் கொஞ்சம் புரிந்துக்கொள் மா ” கோவமாக ஆரம்பித்து கெஞ்சலாக முடித்தான் “.

            நான் உன்னை பார்க்க வேண்டும் அவ்வளவு தான் மாமா. இதற்கு மேல நேர்ல பேசிக் கொள்ளலாம் எதுவாக இருந்தாலும் , நீ எனக்கு உடனே டிக்கெட் புக் பண்ணு.தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்றே இருந்தாள்.  

         உதிரனுக்கு உடனே ஒரு ஐடியா தோன்ற ” இவ அத்தை சொன்னால் மட்டுமே கேட்பாள் என நினைத்தவன் ” சரி ஓகே நீ அத்தை கிட்ட போன் குடு நான் பேசுகிறேன் .இவள் எழுவதற்கு முன்னரே வசுமதியும் வனஜாவும் எழுந்து விட்டு இருந்தனர். கணவன் மனைவி இடைய நாம் எதுவும் பேசக்கூடாது என்று அமைதியாக இருந்தனர். நுவலி, வசுமதியிடம் போனை குடுக்கவும் அதை வாங்கி காதில் வைத்து “சொல்லுங்க மாப்பிள்ளை’ இப்ப உடம்பு எப்படி இருக்கு ? நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து எங்க எல்லோரையும் பயப்பிட வைக்கிறீங்க”.

          அத்தை! எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை ? நான் நன்றாக தான் இருக்கின்றேன். பிரச்சனை பண்றது என்ற மனைவி தான் அவளை என்னனு கேளுங்க அத்தை. அவ இருக்கிற இந்த நிலைமையில் என்னை பார்க்க வரேன்னு சொல்றா? அவ சின்ன குழந்தை மாதிரி அடம்பிடித்து கொண்டு இருக்காள் நீங்களாவது அவளுக்கு சொல்லி புரிய வையுங்கள்!

          சரிங்க மாப்பிள்ளை என்று கூறிவிட்டு , போனை கட் செய்யாமலே ” இங்க பாரு டா ‘ நீ இந்த நிலைமையில் டிராவல் பண்றது எல்லாம் நல்லது இல்லை”. “நீ இங்கேயே இரு மா ” மாப்பிள்ளை இன்னும் கொஞ்ச நாட்களில் வருவாரு டா ‘

          இல்ல மா நான் உடனே மாமாவை பார்க்க வேண்டும்.

        என்னுடைய கண்ணு தானே நீ’ இந்த நிலைமையில் நீ டிராவல் பண்ணி உனக்கும் குழந்தைக்கும் எதாவது ஆனால் என்ன செய்வது? 

          நான் போகணும்! நீங்க என்ன சொன்னாலும் நான் இந்த விசயத்தில் கேட்க மாட்டேன் மா. 

        தன்னுடைய பொறுமையை இழந்தவர் நுவலியை அடிக்க கை ஓங்கி விட்டார் வனஜா தான் ஓடி அவரின் கையை பிடித்துக்கொண்டு “என்ன அண்ணி புள்ளதாச்சி பொண்ணை அடிக்க கை ஓங்குறீங்க?” நானும் சின்ன குழந்தைக்கு சொல்ற மாதிரி சொல்றேன் கேட்காமல் அடம் பிடிக்கிறாள் . நீங்களே சொல்லுங்கள் இந்த நிலைமையில் அவ டிராவல் பண்ணி போய் மாப்பிள்ளையை பார்ப்பது நல்லதா? .

         வனஜா, ஏன்டா கண்ணு இப்படி பண்ற? நீ இப்ப ஒத்த உசுரு இல்ல டா’ இந்த நிலைமையில் வெளியே போவது நல்லது இல்ல டா கண்ணு!

        யார் என்ன சொன்னாலும் நான் மாமாவை பார்க்க போவேன். யார் சொல்லியும் கேட்கும் மனநிலையில் அவள் இல்லை என்பதை புரிந்துக் கொண்ட உதிரன் அவளை வரும்படி சொல்லிவிட்டான். இங்க பாருங்க மாமா எனக்கு டிக்கெட் போட்டு விட்டாரு நான் இப்பவே கிளம்பி போறேன் என நுவலி கூற, அனைவரும் பதறி கொண்டு நீ தனியாக போக வேண்டாம் நாங்களும் உன் கூட வருகின்றோம் மா.

       நான் என்ன காட்டுக்குள் வா போறேன் ” என்ற புருசனை பார்க்க தானே போறேன்” நீங்க யாரும் என் கூட வர வேண்டாம்.

         மணி, நீ உதிரனை பார்க்க போவதாக இருந்தால் நானும் வருவேன் .உன்னை தனியாக எல்லாம் அனுப்ப முடியாது? புரிந்ததா ? பாட்டி சத்தமாக சொல்ல ,” சரி வாங்க என்றால் நுவலி”. மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்தவர்கள் சீக்கிரமாக ரெடியாகி இரயில் நிலையத்திற்கு சென்றனர். அனைவரும் நுவலிக்கு பல அறிவுரைகளை வழங்கி இருவரையும் இரயிலில் ஏற்றி அனுப்பிவைத்தனர். அவர்கள் இரயிலில் ஏறியதில் இருந்து ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை நுவலிக்கு போன் செய்து கேட்டுக்கொண்டே இருந்தான். மருத்துவர்களிடம் கூறிவிட்டு அறைக்கு வந்துவிட்டான். சிங் தான் “ஏன்டா மருத்துவமனையில் இருந்து வந்த ? என்று திட்டிக்கொண்டே இருந்தான்”. 

      உதி, “டேய் ” பாட்டியும் நுவலியும் என்னை பார்க்க இங்க வந்து கொண்டு இருக்காங்க டா!

             எதுக்கு டா வராங்க? அதுவும் அவங்க வயிற்றில் குழந்தையோடு ?இந்த நேரத்தில் லாங் டிராவல் பண்ணுவது சரியில்லை டா!

         உதி, அனைத்தையும் சொல்லி முடித்தான். இதுக்கு மேல எனக்கு என்ன பண்றதுனு தெரியவில்லை டா! அதனால் வர சொல்லிவிட்டேன்.

       சிங், சிரித்துக்கொண்டே “உன்னுடைய நிலைமை எனக்கு புரிகிறது டா” சரி நான் போய் பழங்கள் , காய்கறிகள் அப்பறம் சில பொருட்கள் வாங்கி வரேன் என்று கிளம்பிவிட்டான். அவன் வரும் வரை கட்டிலில் படுத்துக்கொண்டு இருந்தான். 

உதி, என்ன பெரிய பையா இருக்கு?

     எல்லாம் என்னுடைய தங்கைக்காக டா.

   இருவரும் அப்படியே கதைகளை பேசிக்கொண்டே இருந்தனர் .நேரங்கள் சென்றதும் இருவருக்கும் தெரியவில்லை ? மதிய உணவை கூட சாப்பிடாமல் இருவரும் இருந்தனர். அப்பொழுது உதிரனின் போன் அலற எடுத்து திரையில் வந்த நம்பரை பார்த்தான் அந்த அழைப்பு நுவலியிடம் இருந்து தான் ” சொல்லு மா எங்க இருக்க இப்ப ?”

        மாமா நாங்க இன்னும் கொஞ்ச நேரத்தில் இரயிலில் இருந்து இறங்கி விடுவோம் நீங்க சிங் அண்ணாவை அனுப்பி வைக்கிறீங்களா? இரயில் நிலையத்திற்கு. 

         என்னது? அதற்குள் இரயில் காஷ்மீர் வந்துவிட்டதா? அப்பொழுது தான் மணியை பார்த்தான் “அது இரவு ஏழு என்று காட்டியது ” சரிமா நீங்க இரயில் இருந்து இறங்கி இரயில் நிலையத்திலேயே இருங்கள் . “சரி மாமா “. உதியும் சிங்கும் கிளம்பி இரயில் நிலையத்திற்கு செல்லவும் இரயில் வரவும் சரியாக இருந்தது. இரயிலை விட்டு இறங்கியவள் முதலில் தேடியது உதிரனை தான்! அவன் சிரித்துக்கொண்டே அவளை அழைக்க , அவனின் அருகில் சென்றவள் அவனை இறுக்கமாக அணைத்துக்கொண்டாள்.

      நீ என்னடா வேடிக்கை பார்த்துக்கொண்டு வா…. வந்து பையை எடுத்துக்கொண்டு போடா! நமக்கு துணை இப்போ பாட்டி தான்’ நாம பாட்டி கூடவே போவோம் என நினைத்துக்கொண்டான் சிங். 

      நால்வரும் காரில் ஒன்றாக சென்றனர். போகும் போது எல்லாம் உதிரனின் அடிப் பட்ட இடத்தையே ஆராய்ச்சி பார்வை பார்த்துக்கொண்டு இருந்தால் நுவலி. ஆனால் அவளுக்கு தான் ஒன்றும் தெரியவில்லை ? அவன் தான் ஆடை அணிந்து மறைத்து இருந்தானே! பயண களைப்பில் சீக்கிரமாக சாப்பிட்டு படுத்துக்கொண்டாள் நுவலி .அவளின் அருகில் மெதுவாக போய் படுத்துக்கொண்டு அவளை தன்னுடைய அணைப்பில் வைத்துக்கொள்ள “அவர்களின் குழந்தை எட்டி உதைத்தது” குழந்தையின் அசைவை முதன்முதலில் தொட்டு பார்த்து உணர்ந்தவனின் இதயம் வலித்தது ” இத்தனை மாதங்களாய் இப்படி ஒரு தருணத்தை மிஸ் பண்ணி இருந்தோமே!” என நினைத்தவனின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து , அவளின் ஆடை இல்லாத வயிற்றின் மீது பட்டு தெறிக்க “கண் விழித்துப் பார்த்தாள்”. அப்பொழுது தான் அவனின் கையில் இருந்த கட்டையும் அவனின் நிலைமையையும் பார்த்தாள். அவனின் நெற்றியில் முத்தம் வைத்துவிட்டு அவனை தன்னுடைய அணைப்பிலே தூங்க வைத்தாள். இருவரும் சிறிது நேரத்திலே நித்திரையை தழுவி இருந்தனர். பாட்டியும் சிங்கும் வேறு … வேறு அறையில் படுத்து இருந்தனர். காலையில் தன்னுடைய வீரர்கள் அனைவருக்கும் தன்னுடைய மனைவியை அறிமுகப்படுத்தியவன் பாட்டியுடன் நுவலியை அழைத்துக்கொண்டு காஷ்மீரின் சிறந்த இடங்களை சுற்றிக் காட்டிக் கொண்டு இருந்தான். நாட்கள் நகர்ந்து செல்ல அவர்கள் வந்து ஒரு வாரம் முடிந்துவிட்டது. உதிரனின் அடி பட்ட புண்ணும் சிறிது ஆறி இருந்தது. இந்த வாரமும் சர்மா சார் முக்கிய வேலையில் இருந்ததால் யாரையும் பார்க்க முடியவில்லை” இன்று எல்லா வேலையும் சற்று முடிந்து இருந்த நிலையில் நுவலியை பார்க்க வந்தார்”. 

தன்னுடைய வீரர்களை பார்த்து பேசிக்கொண்டு இருந்தான் உதிரன். அறையில் பாட்டி ,நுவலி மற்றும் சர்மா சார் இவர்கள் மட்டுமே உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். தீடீரென ஒரு கும்பல் அந்த அறையின் உள்ளே புகுந்து நுவலியையும் சர்மாவையும் கடத்திக்கொண்டு சென்றனர். தடுக்க வந்த பாட்டியின் தலையில் இரும்பு கம்பியால் அடித்துவிட்டு சென்றனர், பாட்டி ” அம்மா ” என்ற அலறலுடன் இரத்த வெள்ளத்தில் தரையில் கிடந்தார். அறைக்கு வந்த உதிரன் முதலில் கண்டது இரத்த வெள்ளத்தில் இருந்த பாட்டியை தான், உடனே அவரை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு செக்கியுரிட்டியை பார்க்க அவருக்கும் கிட்டதட்ட அதே நிலைமையில் இருந்தார். அவரையும் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு அங்கு இருந்த சி.சி.டி.வி கேமராக்களை செக் செய்தான். முதலில் எந்த வித தடயமும் கிடைக்கவில்லை? பிறகு முதலில் இருந்து பொறுமையாக பார்த்தான் ” அதில் ஒரு அடி ஆள் எங்கோ பார்த்த மாதிரி இருக்கே என யோசித்தவனுக்கு தோன்றியது இவன் நீதிமானின் அடி ஆள் என்று “. உடனே தன்னுடைய டீம் ஆட்களுக்கு தகவல் சொல்லி நீதிமானின் இடத்தை கண்டுப் பிடித்து அங்கே சென்றனர். இந்த தீடீர் கடத்தல் சம்பவத்தில் நுவலி அதிகமாகவே அதிர்ச்சி அடைந்த இருந்தாள்.அவளின் அதிர்ச்சி குழந்தையை தாக்க , அவளுக்கு பிரசவ வலி வந்து விட்டது. சர்மாவை ஒரு மரத்தில் கட்டிவைத்து அவரின் கைகளிலும் கால்களிலும் கத்தியால் அவரின் சதை கிழித்துக்கொண்டு இருந்தான் நீதி. நுவலி, மண் தரையில் பிரசவ வலியுடன் அழுதுகொண்டு இருந்தாள்.

       சர்மா, என்னை என்ன வேண்டும் என்றாலும் பண்ணு ஆனா நுவலியை எதுவும் பண்ணாதே! அவளை விட்டுவிட்டு.

       நீதி, அந்த பொண்ணுக்கு பிரசவ வலி வந்துவிட்டது என நினைக்கின்றேன். தாயும் குழந்தையும் இப்படியே சாகட்டும் என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கின உதிரன் இதைப் பார்த்து…பார்த்து சாகட்டும். இப்போ முதலில் நீ சாக போற “கொடுரமாக சிரித்துக்கொண்டே சர்மாவின் கழுத்தில் கத்தியை வைக்க ” கழுத்திற்கும் கத்திக்கும் ஒரு நூல் அளவே இடைவெளி இருந்தது. வேகமாக வந்த துப்பாக்கி குண்டு ஒன்று நீதியின் தலையை குறிபார்த்து விட்டு சென்றது. அந்த நொடியே நீதியின் உயிர் அவனின் உடலைவிட்டு சென்றது. உதிரனின் டீம் வீரர்கள் மற்ற அடிகளை அடித்து பிடித்து சென்றனர் . சிங்கும் சில வீரர்களும் ஓடிவந்து சர்மா சாரை தூக்கிக் கொண்டு சென்றனர். வலியால் துடிக்கும் தன்னுடைய மனைவியை அள்ளி அணைத்து ” இன்னும் கொஞ்ச நேரத்தில் நாம மருத்துவமனை போய்விடலாம் மா “

“மாமா என்னால வலி தாங்க முடியல! அவனின் சட்டையை பிடித்துக்கொண்டு அழுதாள் “. அவளை அப்படியே தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான். மருத்துவமனையில் பிரசவ வார்டின் முன்பு உதிரன் வலிகளோடு நின்று இருந்தான். சர்மா சாருக்கு அதிக இரத்த போக்கின் காரணமாக அவருக்கு இரத்தம் ஏற்றப்பட்டு கைளிலும் கால்களிலும் தையல் போடப்பட்டு கட்டு போட்டு இருந்தது. 

       நுவலியின் அலறலை கேட்க முடியாதவன் ” அந்த அறையின் உள்ளே சென்று அவளின் கையை பிடித்துக்கொண்டு ஆறுதல் படுத்திக்கொண்டு இருந்தான்”. சிறிது நேரத்திலேயே அவர்களின் புதல்வன் தாயின் வயிற்றில் இருந்து தந்தையின் கைக்கு வந்தான். தன்னுடைய மகனை கையில் ஏந்தியவன் தன்னுடைய முத்தத்தை அவனின் நெற்றியில் வைத்தான். அரை மயக்கத்தில் இருந்தவள் சிறிது நேரத்தில் கண்களை திறக்க ” தன் முன்னே தன்னுடைய இரண்டு உயிர்களை கண்டு முகத்தில் புன்னகை ததும்ப அவர்களைப் பார்த்தாள்”. வீட்டில் இருந்து அனைவரும் இவருக்கு போனின் மூலம் வாழ்த்துக்களை கூறினார்கள். ஐந்து நாட்கள் மருத்துவமனையிலேயே இருந்தனர் . சர்மா சார் சற்று குணமாகி இருந்ததால் அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். பாட்டியும் தன்னுடைய கொல்லு பேரனை பார்க்கவே மறுபடியும் உயிர் பிழைத்து வந்தார்கள் போல! தன்னுடைய கொல்லு பேரனை கைகளிலே வைத்துக்கொண்டு இருந்தார். சிங் இருவருக்கும் வாழ்த்து கூற, உதியின் டீம் வீரர்கள் அனைவரும் வாழ்த்து கூறினார்கள்.

         உதிரனின் புதல்வன் பிறந்து பத்து நாட்கள் கடந்த நிலையில் இன்று மண்டபத்தில் ராமுவுக்கும் சுமதிக்கும் திருமணம் இருவீட்டினரின் ஆசியோடு முடிந்தது.  

         உதிரனும் நுவலியும் சேர்ந்து தன்னுடைய மகனுக்கு துர்ஜய என பெயர் வைத்தனர். நீதிமான் பற்றிய அனைத்து ஆதாரங்களையும் அரசிடம் கொடுத்து, அவருக்கு உதவி செய்த பல பிஸ்னஸ்மேன்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேத்தா மறுபடியும் தன்னுடைய துப்பாக்கியை தொலைத்து விட்டு தேடிக்கொண்டு இருந்தார். அவர் மறுபடியும் நீதிக்கு உதவி செய்ததால் அவரின் துப்பாக்கியை எடுத்து இருந்தான் உதிரன். அந்த துப்பாக்கி தோட்டாக்கள் நீதியின் உயிரை எடுத்தது. துப்பாக்கியை தொலைத்ததால் மேத்தாவிற்கும் தண்டனையை வழங்கியது இராணுவம்.

        இன்று இந்திய மக்கள் அனைவரும் கூடி இருக்க குடியரசுத் தலைவர் கையால் ஸ்ரீ சக்ரா விருதை வாங்கினான் உதிரன். இராணுவ உயர் அதிகாரிகள் முதல் குடியரசுத் தலைவர் வரை அனைவரும் உதிரனை புகழ்ந்து பேசினார்கள். கடைசியாக உதிரன் தன்னுடைய நாட்டு மக்களைப் பார்த்து ” நான் எப்போதும் என்னுடைய தோல்வியை ஒப்புக்கொள்ள வே மாட்டேன்” ஏனென்றால் நான் ஒரு வீரன் அந்த கர்வம் என்னுடைய மனதில் எப்போதும் இருக்கும்.அது நான் இறக்கும் தருவாயிலும் . “இந்த நாட்டில் நாங்கள் எல்லாம் யுனிபார்ஃம் அணிந்த வீரர்கள் ஆனால் நீங்கள் எல்லோரும் யுனிபார்ஃம் அணியாத வீரர்கள் ” எங்கு எல்லாம் தவறு நடக்கிறதே அதை எல்லாம் தட்டிக் கேட்கும் உரிமை உங்களுக்கு உண்டு “ஜெய் ஹிந்த்” நன்றி. இதை அனைத்தையும் நுவலியும் துர்ஜயாவும் புன்னகையுடன் பார்த்துக்கொண்டு இருந்தனர். ஒரு மாதம் கடந்த நிலையில் ஒரு நல்ல நாளைப் பார்த்து மன்வேந்திர சிங்கிற்கும் சோனாவிற்கும் பெரியோர்களால் திருமணம் சிறப்பாக நடைப்பெற்றது. 

      மீண்டும் தன்னுடைய வீட்டிற்கு வந்தவன் தன்னுடைய மனைவியின் மடியில் தலைவைத்து படுத்துக்கொண்டு தன்னுடைய மகனை தன்னுடைய நெஞ்சில் படுக்க வைத்துக்கொண்டு நுவலியிடம் பேசிக்கொண்டு இருந்தான்.

மை டியர் பொண்டாட்டி உண்மையிலே நீ பேச்சின் அரசி தான் டி’ உன்னுடைய பேச்சால் என்னை கட்டிப்போட்டுவிட்டாய்!

      நுவலி, நீங்க மட்டும் என்னவாம் ? அந்த செய்வாய் கோளை போன்றே உங்க ஒளியால் என்னை பத்திரமான பார்த்துக் கொண்டீர்கள். இருவரும் தங்கள் காதல் உலகத்தில் பயணித்துக் கொண்டு இருந்தனர். துர்ஜயாவோ தந்தையின் மார்பையே உறங்கும் இடமாக மாற்றி நிம்மதியாக உறங்கி கொண்டு இருந்தான். இந்த அழகான குடும்பம் நிம்மதியாக உறங்க , காலை கதிரவன் தன்னுடைய வேலையை சரியாக செய்ய வந்துவிட்டான். 

         அனைவரிடமும் விடை பெற்றுக்கொண்டு மீண்டும் பணிக்கு செல்ல தயாரானான் உதி. இந்த முறை நுவலி அழவில்லை மாறாக புன்னகையுடன் அவனின் நெற்றியில் முத்தம் இட்டாள். அவனும் அவளுக்கு முத்தத்தை வஞ்சனை இல்லாமல் வாரி வழங்கினான். அப்படியே கொஞ்சம் தன் மகனுக்கும் கொடுத்தான். அனைவரிடமும் மகிழ்ச்சியுடன் விடை பெற்று சென்றான் வீரன். மீண்டும் அவனின் வருகைக்காக காத்துக் கொண்டு இருந்தாள் வீர மங்கை.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
5
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. kanmani raj

      கடமை வீரனின் அழகான காதலை சிறப்பாக கூறி இருக்கிறீர்கள். கதை முழுதும் பயணித்த காதலும், நாட்டுப்பற்று மிக்க ஒரு வீரமும் கதையை அழகாக கொண்டு சென்றது.

      எதிரிகளை துவம்சம் செய்வது எளிது. ஆனால் உடனிருக்கும் துரோகிகளை இனம் கண்டு அழிப்பது எளிதல்ல. தன்னையே ஒப்புக் கொடுக்கும் வீரர்களின் தியாகம் கொண்டாடப்படாமல் இங்கு அரசியலாக்கப்படுகிறது என்ற கருத்து அருமை.

      மொத்தத்தில் அருகிலோ தொலைவிலோ எங்கு இருந்தாலும் காதல் என்றுமே இனித்திருக்கும் என்பதை உணர்த்தும் அழகிய காதல் கதையே இந்த தொலைதூர காதல் நீ…