
அத்தியாயம்:16
தன் எதிரே காபியை அருந்திய படி அந்தக் கேள்வியை அவன் கேட்டிருக்க, காதல் முக்கியமா.? இல்லை உன் கனவு முக்கியமா.? என அவன் எளிதாக கேட்டுவிட்டாலும், ஆரத்யா மனதில் ஒரு நொடி சூறைக் காற்று அவள் கனவுகளை கலைத்து செல்வதை போல் காட்சி பிம்பங்கள் வந்து செல்ல, தலையில் கை வைத்து அமர்ந்து விட்டாள் ஆரா.
“ஹே ஸ்மைலி.! வாட் ஹப்பன் அடிபட்ட இடத்தில் வலிக்குதா.? “ அவன் அக்கறையுடன் கேட்டாலும் இவளுக்கு ஏனோ போலியாய் தெரிந்தது.
“நத்திங் க்ரிஷ், வொர்க் அதிகம் இருக்கு அதான் டென்சன்” என சமாளிப்பாய் சொல்லி முடித்தவள் கோப்பையில் இருந்த கேப்பர்சீனோவை விரைந்து பருகி முடித்தாள்.
“நான் கேட்ட கேள்விக்கு பதிலே இல்லை.? என்ன ஆரா உனக்கு உன்னோட கனவு தான் முக்கியமா.? “ மீண்டும் முடிந்த இடத்திலே ஆரம்பித்தான்.
“காஃபிக்கு நான் பே பண்ணுறேன் க்ரிஷ் டைம் ஆகிடுச்சு லாகின் பண்ணணும் பை பை ” என சம்மந்தம் இல்லாமல் பேசியவள் தன் கார்ட்டை வைத்து பணத்தை செலுத்தி விட்டு கண்ணாடி கதவை தள்ளிவிட்டு வெளியே செல்லும் வரை புரியாது அமந்திருந்தவன் எழுந்து அவளை தொடர்ந்தான்.
அவளோ எதுவும் பேசாமல் மின் தூக்கியை நோக்கி விரைந்தாள். அவன் மனதில் தன் கனவுகளுக்கு இடமில்லை என்று அறிந்த பிறகு அவளால் தன்னை இயல்பாக காட்டிக்கொள்ள முடியவில்லை, யாரிடமும் நடித்து பழக்கம் இல்லாதவளுக்கு அவன் முன் போலியாய் நடிக்க இயலாமல் அவனை விட்டு விலகி சென்றாள்.
“ஹே ஸ்மைலி” அவன் குரல் அவள் முன்னே விரைந்து சென்று லிஃபிட்டில் ஏறியிருந்தவளின் செவிகளில் எட்டியது, அவள் திரும்பி பார்த்தாள், தன் வலது கையை காதருகே வைத்து “கால் மீ” என்று சைகை செய்தான், அவளோ சரியென்பது போல் தலையசைத்து புன்னகைத்தாள், இருவரும் அறிந்திருக்கவில்லை இது தான் அவர்களின் கடைசி சந்திப்பாக இருக்க கூடும் என்று, லிஃப்ட்டின் கதவு மூடும் வரை இமைக்காமல் அவளையே பார்த்திருந்தான், இன்னும் பதினைந்து நாட்களுக்கு தன்னவளை காண இயலாது என்பதே அவனுள் பெரும் வேதனையை விதைத்து, அவளின் கனவுகளுக்கு துணை நிற்பதாய் அவனுக்குள் உறுதி எடுத்துக்கொண்டான். அவளை பிரிந்த ஒரு நிமிடம் கூட அவனின் மனதில் ரணத்தை ஏற்படுத்தியது, மறுநாளில் இருந்து அவன் தன் செல்பேசியை எடுக்க கூட நேரமின்றி இருக்க போகிறான், இந்த பதினைந்து நாளில் அவன் தொழில் சார்ந்த நிறைய கான்ஃப்ரன்ஸ்களில் பங்கேற்றாக வேண்டும்.அதனால் உடனே தன்னவளுக்கு அழைப்பு விடுத்தான். அவள் அழைப்பை ஏற்று மௌனமாய் செவிகளில் வைத்திருந்தாள்.
“ஹே ஸ்மைலி.! வில் கோயிங் டூ மிஸ் யூ பேட்லி” எனச் சொன்னான்.
“நானும் மிஸ் பண்ணுவேன் க்ரிஷ்.!” அவள் பதிலில் உயிர்ப்பில்லை, அவனை எவ்வாறு காதலித்தோம் என்ற சிந்தனையுடன், காதலை தொடரலாமா என்ற குழப்பமும் அவள் மனதில் குடிக்கொள்ள காரணம் ஒன்று தான், அவளின் கனவுகளுக்கு இவன் எதிராய் இருப்பானோ என்ற பயம் அவளுக்குள் உறுதியாய் எழுந்தது.
“வார்த்தையில் ஜீவனே இல்லையே ஆரா.? எனி பராப்ளம்” அவளின் குரல் வைத்தே அவளின் அகத்தை ஊகித்திருந்தான் ஆதித் கிருஷ்ணா.
“ஹே க்ரிஷ் இல்லை சிஸ்டம் ஹாங் ஆகுது ஐடி டிபார்ட்மென்ட் தான் கூப்பிடணும் போல” என அவள் சொன்ன பிறகு, அவள் வேலையில் இருக்கிறாள் என்பதை உணர்ந்தவன்.
“ஹே சாரி ஸ்மைலி யூ கேரி ஆன் டியர், உன்னை ரொம்ப மிஸ் பண்ணப்போறேன் நீ என்னை கான்டெக்ட் பண்ணினால் கால்ஸ் எடுக்க முடியுமா தெரியலை பெட்டர் புட் எ வாய்ஸ் மெசேஜ்” எனச் சொன்னவன் அவள் பதிலுக்காக காத்திருந்தான்.
“ம்ம் க்ரிஷ் பை பை” என அழைப்பை விரைந்து துண்டித்தாள், அவள் வேலையில் இருப்பதாய் நினைத்துக்கொண்டு அவனுடைய கருஞ்சிறுத்தையை மெல்ல தன் பேலஸிற்கு செலுத்தினான், அங்கு அவனுக்கு அதிர்ச்சி காத்திருப்பது தெரியாமல்.
**********************************
பிருந்தாவனம் பேலஸ் நள்ளிரவு பரபரப்பாய் இருந்தது உள்துறை அமைச்சர் ஜெகன்நாத்தின் வாகனம் ஏகே பேலேஸிற்கு வருகை தந்திருந்தது, ஆதித் கிருஷ்ணாவின் திருமணத்தை பற்றி விவாதம் காரசாரமாய் நடந்துக்கொண்டிருந்த போது தனக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்பது போல் பேலஸினுள் நுழைந்தான். யாரையும் கண்டுக்கொள்ளாது தன் அறையை நோக்கி சென்றவனை தடுத்து நிறுத்தியது ஜெகன்நாத்தின் குரல்.
“ஆதித்.! உங்க மனசுல என்ன தான் நினைச்சிட்டு இருக்கீங்க.?” கோபமாய் வந்து விழுந்தது வார்த்தைகள்.
“ஜெகன் அங்கிள் என் மனசுல யாரை நினைச்சிட்டு இருக்கேன்னு உங்களுடைய மகள் மஹதிக்கு நல்லாவே தெரியுமே, தெரியலைன்னா கேட்டு தெரிஞ்சுக்கோங்க” என அவர் அருகில் நின்ற மஹதியை அவன் கைகாட்ட,
“நான் தான் சொன்னேன்ல டாட்” என தந்தையின் செவியில் ஏதோ கிசுகிசுத்தாள்.
“ஆதித் ஒரு நிமிசம் நில்லுப்பா” என்றார் யசோதா,
“சொல்லுங்க மாம்”பொறுமையாகவே பேசினான்.
“மஹதியை கட்டிக்கிறேன் சொல்லிட்டு இப்போ ஏன் ஆதித் மாத்தி பேசறே.?” யசோதா கேட்டிருந்தார்.
“ஆமாம் ஆதித் நீ தானே கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொன்ன.?” கோதண்டமும் சேர்ந்து கேட்க,
“நான் கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொன்னது உண்மைதான் ஆனால், அது இவளை மட்டும் தான்” என ஆதித் சொல்லி ஆரா வின் புகைப்படத்தை எடுத்து காட்டியிருந்தான்.
“கோதண்டம் என்ன நடக்குது இங்கே, அப்போ என் பொண்ணோட வாழ்க்கை என்ன ஆகுறது.? உன்னை நம்பி தானே என்னோட பொண்ணை விட்டேன், இப்போ என்ன குடும்பமே சேர்ந்து நாடகம் போடுறிங்களா.?” என ஜெகன் கேள்வி எழுப்பிய உடன், தன் அருகே மஹதி யை இழுத்தான்.
“நான் உன்கிட்ட எப்போதாவது லவ் பண்ணுறதா சொல்லி இருக்கேனா.? சொல்லு மஹதி. எல்லாரிடமும் சொல்லு” ருத்ர தாண்டவம் தான் ஆடவில்லை ஆனால் கோபத்தில் நாசி துடிக்க கேட்டவனை நிமிர்ந்து பார்க்க துணிவின்றி தலை கவிழ்ந்து நின்றிருந்தவள். ஆம் என்ற தலையசைப்பில் அவன் முகம் பார்த்தாள் மஹதி.
“வாட் ரெடிக்யூலஸ்.! நான் எப்போ உன்னை காதலிக்கிறேன்னு சொன்னேன் மஹதி.? என் மனசில் ஆரா மட்டும் தான் இருக்கிறான்னு உனக்கு தெரியும் தானே, ஐ லவ் மை ஆரா ஒன்லி” என சொல்லியவன் தன் அறைக்குள் சென்று டெல்லி செல்லும் பயணத்திற்கு தன் உடைமைகளை எடுத்து வைக்கலானான். அவன் அறையை நோக்கி விரைந்தாள் மஹதி.
“ஆதித் நீ பேசுறது எதுவுமே சரி இல்லை.” அவன் குறுக்கே நின்று கொண்டு அவனை தடுக்க முயன்றாள் மஹதி.
“கெட் லாஸ்ட் மஹதி” என்ற அவனின் கர்ஜனை கேட்டு மீண்டும் தரை தளத்திற்கு வந்தவள்.
“டாட் ஐ வாண்ட் ஆதித். ஐ லவ் ஹிம் லாட்” என ஏதோ பிடித்தமான பொருளை விலைக்கு கேட்பது போல, ஆதித் கிருஷ்ணா தான் வேண்டும் என்று அடம் பிடித்து சென்ற தன் மகளை பார்த்து வருந்திய ஜெகன்.
“எனக்கு என்னோட பொண்ணு விருப்பம் தான் முக்கியம் உங்க பையனோட மனசை மாத்த பாருங்க, இல்லை நான் மாத்த வேண்டியதாய் இருக்கும்” என எச்சரித்து நகர்ந்தார் ஜெகன்.
தன்னுடைய பயண பொதிகளை எடுத்து வைத்தவன், குளியலறைக்குள் சென்று குளித்து விட்டு சில நொடிகளில் வந்தவன் வேறு உடைக்குள் புகுந்திருந்தான். அவனின் அலைபேசியை கையில் வைத்துக்கொண்டு தன்னவளின் அழைப்புகாக காத்திருக்க, அதே சமயம் அவளிடம் இருந்து வந்த குறுஞ்செய்தியால் அவனின் அலைப்பேசி மின்னி மறைய விரைந்து பார்த்தான்.
“ஹாப்பி ஜேர்னி க்ரிஷ்! வித் லவ் ஆரா” என வந்திருக்க அவன் இதழ்களில் புன்னகை நெளிந்தது.
“வில் மிஸ் யூ ஸ்மைலி” என்ற பதில் குறுஞ்செய்தியை தட்டி விட்டவன் விமானநிலையத்திற்கு கிளம்பி இருந்தான். அவன் இங்கு இருந்து செய்ய வேண்டிய வேலைகளை விக்கியிடம் செய்யச் சொல்லி பணித்திருந்தான். விக்கியும் பொறுப்புகளை ஏற்றிருந்தான்.
***
இன்று
பீச் வியூ ரிசார்ட்டில் காரில் அமர்ந்த படி இதுவரை நடந்தவற்றை தன் அண்ணன் சொல்ல கேட்டு கொண்டிருந்தவள். மனமோ குழப்பத்தை பெற, அதோடு குற்ற உணர்வும் ஏற்பட்டது தன்னால் தான் மஹதி தன் அண்ணனின் வாழ்வில் நுழைந்திருக்கிறாள் என்று நினைத்து மருகினாள் லாவண்யா.
“அண்ணா என்னை மன்னிச்சிரு நான் தான் புரியாமல் நிறைய பண்ணிட்டேன் உன்னோட வாழ்கையவே அழித்து விட்டேன், மஹதி உன் வாழ்க்கைக்குள் வர நானே காரணம் ஆகிட்டேன்” என தன்னை குறைபட்டு கொண்டு அழ ஆரம்பித்தாள்.
“ஹே லாவ் குட்டி, ஏன் அழற.?” என தங்கையின் கண்ணீரை துடைத்து விட்டான்.
“இல்லை அண்ணா எல்லாமே என்னால் தான். நான் தான் அனைத்திற்கும் காரணம். என்னால் உன் வாழ்க்கை சீரழிந்து விட்டதே என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்னை மன்னித்துவிடு” என அழுது கொண்டிருந்தவளை சமாதானம் செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தான் ஆதித் கிருஷ்ணா.
அப்போது ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த அஜய் லாவண்யா அழுவதை இமைக்காமல் பார்த்திருந்தான்.அவனால் அந்த நொடியில் அவளை சமாதானம் செய்ய முடியாமல் தவித்துப் போனான் அதன் பின் ஆதித் கிருஷ்ணாவின் விழியை பார்த்தவன் நேராய் கேட்டான்.
“சார்.! அவங்களை அழ வேண்டாம் சொல்லுங்க சார்” என தன்னை மீறி பேசிய அஜயை பார்த்த லாவண்யா. இவனுக்கு எங்கிருந்து வந்தது தைரியம் அதுவும் என் அண்ணன் முன் பேசுவதற்கு, என்பதைப் போல் விழித்தவள்.
“ஹே டிரைவர்.! உன் வேலைய மட்டும் பாரு எங்களுடைய பர்சனல்ல நீ தலையிடாதே” என எச்சரிக்கை பார்வை வீசினால் லாவண்யா. என்னை மறைந்து இருந்து போட்டோ எடுத்துட்டு இவனுக்கு எங்கே இருந்து வந்துச்சு தைரியம். அண்ணனுக்கு முன்னாடியே இப்படி பேசுறானே என்னை தனக்குள் பேசி கொண்டாள் லாவண்யா.
“ஹே லாவ் குட்டி.! டென்ஷன் ஆகாதே. அஜய் நல்ல பையன் தெரியுமா”
“ஐயோ.! அண்ணன் வேற இவனை பத்தி தெரியாம சப்போர்ட் பண்றாங்களே” என வாய்விட்டு புலம்பாத குறையாய் மழுங்க விழித்துக் கொண்டிருந்தாள் லாவண்யா.அதே நேரம் அஜய் தன் விழியசைவிலே எதையோ ஆதித்திடம் மொழி பெயர்த்ததை அவள் அறிந்திருக்கவில்லை.
வாகனத்தில் இருந்து மூவரும் இறங்கிய போது விக்கி அங்கு ஆஜர் ஆனான்.
“ஆதித்.! ஆரா போவதற்கு முன்னாடியே சுதாகிட்ட சொல்லிட்டு தான் போயிருக்கா. இத்தனை நாள் இவள் தான் மறைச்சு வச்சிருந்திருக்கா.” என விக்கி சொல்லி கொண்டிருந்த போதே விழியில் கண்ணீரை தேக்கி வைத்து நின்றிருந்த சுதா சொன்ன விசயம் ஆதித்தின் மனதில் இடியை இறக்கியது.
“இதை ஏன் என்கிட்ட சொல்லல சுதா” என ஆத்திரம் கொண்டான் ஆதித்.
“சாரி ஆதித் எல்லாதுக்கும் காரணம் நான் தான்னு சொன்னால் மிகையாகாது” என அவள் சொல்ல தொடங்கிய போது,
“என்ன சொல்ற சுதா ஆரா எங்கே இருக்கிறாள்.? உனக்கு தெரியுமா.? ” விக்கியும் கோபம் கொண்டான்.
“ஆமா தெரியும்” என தலையசைத்தாள் சுதா.
“அப்போ ஏன் எங்ககிட்ட சொல்லலை.?” சற்று தீவிரமாக கேட்டான்.
“அது வந்து நீங்க ஆராவை சந்தேக பட ஆரம்பிச்சுட்டீங்க, அதோட அவ வேற யார் கூடையோ போயிட்டதா சொன்னீங்க, அந்த கோபத்தில் தான் சொல்லலை”
“வாட்.? “அதிர்ந்தான் ஆதித்.
“ஆமா எனக்கு இப்போ தான் தெரிஞ்சது, மஹதி ஆரா நேம்ல ஃபேக்கா லட்டர் அனுப்பியிருக்காங்கன்னு”
“சொல்லு சுதா ஆரா வை இப்போ கான்டெக்ட் பண்ண முடியுமா.? ” ஆர்வமானான் ஆதித் கிருஷ்ணா.
அவள் கனவை தேடி சென்றிருக்கிறாள் என்பது வரை சரி தான், ஆனால் எதற்காக தன்னிடம் சொல்லாமல் இவள் சென்றிருக்கிறாள். என்ற யோசனையும் அவனுள் எழுந்தது.
“டூ லேட் அவளை நீங்க கான்டெக்டே பண்ண முடியாது அவ கடைசியா இந்த நம்பர்ல இருந்து தான் கால் பண்ணிணாள்” என சில எண்களை அவனிடம் எழுதிக்கொடுத்தாள்.
“ஏன் அவளோட போனுக்கு என்ன ஆச்சு.? ஏன் அவ என்கிட்ட பேசமாலே போயிட்டாள்.? உன்கிட்ட சொல்லிட்டு போகணும்னு சொல்லிட்டு போனவ ஏன் என்கிட்ட சொல்லிட்டு போகலை.?” ஆதித் கேட்ட போது, அவனை நிமிர்ந்து பார்த்த சுதா,
“அவ என்கிட்ட கடைசியா பத்திரமா பாரத்துக்க சொல்லி கொடுத்திட்டு போன ரெண்டே விசயம், ஒண்ணு அவளோட ஸ்கூபி, இன்னொன்னு நீங்க வாங்கி கொடுத்ததா சொன்ன கலர் சேன்ஜிங் ரோஸ், ஒரு வேளை என்னை ஆதித் தேடி வந்தால் மட்டும் இந்த பெட்டியை கொடுன்னு அந்த ரெட் சூட்கேஸை கொடுத்தாள், என் கனவை தேடிப்போறேன்னு சொன்னாள். அவளோட கனவு என்னன்னு கூட எனக்கு தெரியாது” என்றாள் சுதா
இறுதியாய் அவர்கள் சந்தித்த போது அவன் அவளிடம் கேட்ட வார்த்தை அவன் நினைவில் வந்து போனது,
“காதல் முக்கியமா.? இல்லை உன் கனவு முக்கியமா.? “ இந்த வார்த்தை தான் அவளை இப்படி ஒரு முடிவு எடுக்க வைத்ததா.? அவன் டெல்லியில் இருந்த பதினைந்து நாட்களும் அவள் குரல்பதிவுகளை அனுப்பியிருந்தாளே, எங்கே அவனுக்கு தான் அதைக் கேட்க கூட நேரமில்லையே ஒரு நாளைக்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட குறுஞ்செயதிகள் அனைத்தும் அவளின் குரல் பதிவுகள் அதில் சில வற்றை கேட்டு விட்டு சிலவற்றை விட்டிருந்தான், இரவு வணக்கம் சொல்லிவிட்டு உறங்க சென்று விடுவான் ஏனென்றால் அந்த சமயத்தில் அவள் தன்னுடைய வேலையில் மும்மரமாய் இருப்பாள்.
“அவள் கனவுக்கு நான் தடையாய் இருந்துவிடுவேன் என்று நினைத்துவிட்டாளோ, அதனால் தான் இந்த நொடி வரை தன்னை அவள் தொடர்பு கொள்ளவில்லையோ.?” என்று நினைக்க துவங்கியவனுக்கு தேவைப்பட்டது என்னவோ தனிமை தான்.
“லாவ் நீ வீட்டுக்கு போ, நான் இந்த விசயத்தை பார்த்துக்கொள்கிறேன்” என்றவன் “அஜய் தங்கச்சியை சேஃபா கூட்டிட்டு போங்க” என சொல்லி விக்கியை நோக்கி நகர்ந்தான்.
“விக்கி நான் டெல்லி போனப்ப நீ கம்பெனியை பார்த்துக்கிட்டியோ இப்பயும் அப்படியே பார்த்துக்கோ, அப்பா ஜெகன் அங்கிள் தலையீடு இல்லாமல் பார்த்துக்கோ, எம்பளாயீஸ்க்கு செலரி போட்டு விட்டுடு பே ரோல் டிபார்ட்மென்ட்ல சொல்லியிருக்கேன், இருந்தாலும் நீ ஒரு தடவை இதையெல்லாம் கவனிச்சுக்கோ” எனச் சொன்னவன்.
“தேங்க்ஸ் மா சுதா அட்லீஸ்ட் இப்போயவது சொன்னீயே” என நன்றி சொல்லி நகர்ந்தவனை தடுத்திருந்தது லாவண்யாவின் குரல்.
“அண்ணா.! நானும் உன் கூட வர்றேன்” என்றாள் தீர்க்கமாக,
“இல்லை நான் என்னோட காதலை தேடி போறேன், உன்னோட காதல் உன் பக்கத்திலே இருக்கும் போது நீ பாதுகப்பா இருப்பன்ற நம்பிக்கையில் தான் போறேன்” எனச் சொல்லிய போது தன் அண்ணனை புரியாது பார்த்தாள் லாவண்யா.
“லாவ்.! அஜய் நல்ல பையன் மா, அவ்வளவு தான் என்னால் சொல்ல முடியும்” என்றவன் தன் கறுஞ்சிறுத்தையை நோக்கி சென்றான். அதில் அவன் ஏறி அமர்ந்த போதே ஆராவின் குரல் மீண்டும் அவன் செவிக்குள் ஒலித்தது.
“க்ரிஷ்.! நீ சாப்பிட்டியா.? தூங்குனியான்னு நான் மட்டும் தான் யோசிச்சிட்டு இருக்கேன் நீ ஜாலியா போய் டெல்லில இருந்துகிட்ட.? ஒரு நாள் நான் சாப்பிட்டேனா.? தூங்கினேனான்னு.? நீ யோசிச்சிட்டு இருக்க போற, அப்போ பதில் சொல்ல இந்த ஆரா இருக்க மாட்ட” என்ற குரல் பதிவை எப்போதோ கேட்ட நினைவு அவனுள் வந்து போனது. அவனின் மனமோ “ஆரா.! எங்கே போன நீ.?” சத்தமாய் கத்தியது, உணர்வுகளை ஓரம் கட்டி வைத்தவன் சிந்திக்க துவங்கினான். அவளின் குரல் பதிவுகளை ஒலிக்க விட்டபடி தன் கறுஞ்சிறுத்தையை இயக்கி அந்த ரிசார்ட்டில் இருந்து வெளியே வந்தவன் இந்த முறை அவளின் வார்த்தைகளை நுட்பமாய் கவனித்தான், அதில் மறைந்திருக்கும் அர்த்தங்களை தேட முயன்றான்.
வெறும் குரல்பதிவை மட்டும் அவனிடம் வைத்துக்கொண்டு, குரலுக்கு சொந்தக்காரியை நினைத்து மருகினான் அன்று மீரா, கிருஷ்ணனின் வரவிற்கு ஏங்கியது போல, இந்த ஆராவின் மதிமுகத்தை காண ஏங்கி தான் போனான் நம் கலியுக கிருஷ்ணன் ஆதித் கிருஷ்ணன்.

