Loading

பெண் போலிஸ் ஒருவர் சென்று கங்கா பாட்டி கையில் கைவிலங்கை மாட்டி,”பல வருடங்களுக்கு முன் நாராயணன், மனோஹர், ஜானகி மற்றும் ஈஸ்வர் என்பவர்களைக் கொலை செய்து அதை ஆக்ஸிடெண்ட்டாக மாற்றிய குற்றத்திக்கும், அந்த ஆக்ஸிடெண்ட் செய்தவர்களையும் கொலை செய்த குற்றத்துக்காக உங்களைக் கைது செய்கிறோம்.”என்று கூற,முரளியும் வாசுகியும் அதிர்ந்து நின்றனர்.

பாட்டி அதிர்ந்தது ஒரு நிமிடம் தான். அடுத்த நிமிடமே நிமிர்வாக,”அதெல்லாம் நான் செய்யலை. ப்ரகாஷ் தான் கொலை பண்ணது. போய் அவனைக் கைது பண்ணுங்க.”

“எங்களுக்கு நீங்க சொல்லத் தேவையில்லை. எங்க கடமையைத் தான் நாங்க செய்றோம். எந்த வம்பும் பண்ணாம வந்த நல்லா இருக்கும். இல்லாட்டி நாங்க இழுத்துட்டு போவோம்.” என்று அந்த பெண் போலிஸ் கூற, கங்கா அவரை முறைத்துப் பார்த்து,”ஓ என்னை இழுத்துட்டு போய்டுவியா நீ?? நான் யார்னு தெரியாம பேசாத. முரளி என்னடா பேசாம பார்த்துட்டு இருக்க??”

“சார் அந்த கொலை எல்லாம் பண்ணது ப்ரகாஷ் தான். அதுக்கு எங்ககிட்ட ஆதாரம் இருக்கு. அம்மா உங்ககிட்ட இருக்குற ஆதாரத்தை காட்டுங்க.” என்று முரளி கூற, அந்த அதிகாரி முரளியிடம்,”எங்ககிட்டயும் ஆதாரம் இருக்கு சார். அப்புறம் உங்க அம்மாகிட்ட இருக்குற ஆதாரம் பொய்னு உங்களுக்குத் தெரியுமா??” என்று கேட்க, முரளி அதிர்ந்து பார்த்தார்.

“என்ன சார் சொல்றீங்க??”

“ஆமா. உங்க அம்மா சொல்லித் தான் இந்த கொலை நடந்துருக்கு. அதை ப்ரகாஷ் சார் மேல் அழகா திருப்பி விட்டுடாங்க உங்க அம்மா.” என்று கூற, கங்கா பாட்டிக்குமே அதிர்ச்சி.

“சார் தேவையில்லாம என்னை இந்த கேஸ்ல இழுத்து விடப் பார்க்குறீங்களா?? அப்புறம் நான் மனித உரிமை கமிஷனுக்கு போவேன்.”

“நீங்க எங்க வேணாலும் போங்க. இப்ப எங்க கடமையைச் செய்ய விடுங்க.” என்று போலிஸ் கூறி அவரை அழைத்துக் கொண்டு செல்ல போக, அதே நேரம் ப்ரகாஷ் அங்கு வந்தார். சஞ்சய் அவரை அழைத்து அங்குப் போகச் சொல்லிருந்தான். அதனால் அவர் அங்கு வந்தார். கங்கா பாட்டியை போலிஸ் கைது செய்வதைப் பார்த்த அவர் முரளியிடம் வந்து,”என்னாச்சு முரளி??” என்று கேட்டார்.

“டேய் எல்லாம் உன்னால தான். சார் இவன் தான் அந்த கொலையை எல்லாம் பண்ணது. இவனைக் கைது செய்யுங்க.” என்று கங்கா பாட்டி கூறியதையே கூற, ப்ரகாஷ் அமைதியாக ஆனால் குழப்பத்துடன் இருந்தார்.

“ப்ச் என்னமா நீங்க சொன்னதையே சொல்லிட்டு இருக்கீங்க?? சை ஒரே ரோதனையா போச்சு. யோவ் போய் அவனை இழுத்துட்டு வாங்க.” என்று கூற, பக்கத்திலிருந்த கான்ஸ்டபிள் வெளியே சென்று அவனை இழுத்துட்டு வந்தார். அவனுடனே சஞ்சயும் வந்தான். அவனைப் பார்த்த கங்கா பாட்டியும் ப்ரகாஷும் அதிர்ந்தனர்.

“என்ன இவனை அடையாளம் தெரியுதா??”என்று பாட்டியிடம் கேட்க, பாட்டி,”எனக்கு இவனை யாருனே தெரியாது.”என்று வேகமாகக் கூறினார்.

“அப்போ எதுக்கு நீங்க இன்னைக்கு காலைல இவனை ஜாமின்ல வெளில எடுத்தீங்க??”என்று கேட்க, அவருக்கு அதிர்ச்சி.

“இங்க பாருங்க எல்லாம் தெரிஞ்சு தான் நாங்க இங்க வந்துருக்கோம். அதனால எதுவும் பேசாம வாங்க.” என்று கூற, பாட்டி திரும்பத் திரும்ப முரண்டு பண்ண, போலிஸ் அந்த ஆளை அடித்து,”டேய் எங்ககிட்ட சொன்னதை எல்லாம் இங்க சொல்லுடா.” என்று அவனை இரண்டு அடி அடிக்க அவன்,”இவங்க சொல்லி தான் அந்த ஆக்ஸிடெண்ட்ட நான் பண்ணேன். அப்புறம் அதுல அவங்க மாட்டக் கூடாதுனு இவரை(ப்ரகாஷை கை காட்டி) மாட்டி விடுறதுக்கு ப்ளான் பண்ணி இவர் எப்பவும் போற பார்கு(bar) நானும் போனேன் அன்னைக்கு. அவர்கிட்ட சும்மா பேச்சு குடுத்துக்கிட்டே நிறைய ஊத்திக் கொடுத்தேன். அப்ப தான் அவர் தம்பினால அவரோட கவுரவம் போய்டுச்சுனு என்கிட்ட புலம்பினார். இதை பயன்படுத்தி நான் அவர்கிட்ட அப்போ அவங்களை கொலை பண்ணிடலாமானு கேட்டான். அவர் இருந்த போதைக்கும் கோவத்துக்கும் அவரும் நிறையப் பேசி கொலை பண்ணிடுனு சொன்னார். அதை மட்டும் என்கூட இருந்தவனை வச்சு படம் புடுச்சேன்.” என்று கூற, ப்ரகாஷ் அதிர்ந்தார். வேகமாகச் சென்று அவனை அடித்தார். இத்தனை நாள் தான் தான் அந்த கொலையைச் செய்ய வைத்ததாக நினைத்து குற்றவுணர்ச்சில இருந்தார். ஆனால் அது பொய் என்று தெரிந்தவுடன் அவரால் அமைதியாக இருக்க முடியவில்லை. அங்கிருந்த போலிஸ் அவரைத் தடுத்து,”சார் விடுங்க சார். நாங்க இவனைப் பார்த்துக்குறோம்.”

ப்ரகாஷ் கங்கா பாட்டியைப் பார்த்து,”நான் உங்களுக்கு என்ன கெடுதல் செஞ்சேன்?? ஏன் இப்படி பண்ணீங்க?? சொல்லுங்க!!! எதுக்கு என் குடும்பத்தை இப்படி கொலை பண்ணீங்க???” என்று ஆக்ரோஷமாகக் கேட்டார்.

“என்னடா ஏதோ பாசம் இருக்குறவன் போல வேஷம் போடுற??”

“எனக்கு என் தம்பி மேல அப்பா மேலலாம் கோவம் இருந்தது உண்மை தான். அதுக்காக அவங்க இந்த உலகத்துலேயே இருக்கக் கூடாதுனு நான் ஒரு நாளும் நினைச்சது இல்லை.”

“நீ நினைக்கிற நினைக்கலை அதைப் பத்தி எனக்குக் கவலையில்லை. ஆனால் நான் நினைச்சேன், என் கனவை அழிச்சவங்க உயிரோடவே இருக்கக் கூடாதுனு. அதான் அடிச்சு தூக்கினேன். மொத்தமா எல்லாரும் போய் சேர்ந்துட்டாங்க.” என்று கூறி பெரிதாகச் சிரித்தார்.

“அம்மா என்ன சொல்றீங்க??”

“ஆமா டா முரளி. அந்த மனோஹர் பயங்கர விவரமா இருந்தான். உங்க மூணு பேருக்கு போட்டி வைச்சு யார் எம்.டி. முடிவு பண்ணனும்னு சொன்னதும் யோசிச்சேன். அவன் எம்.டி. ஆனா நான் நினைச்சது எதுவும் நடக்காது. அதான் அவ்ளோ ப்ளான் பண்ணி இதோ நிக்குறானே இந்த முட்டா பயலை அவன் தம்பிக்கு எதிரா தூண்டிவிட்டேன். இவனும் என் சொல் படி ஆடுனான். அந்த மனோஹரும் வீட்டை விட்டு வெளில போய்டான். இவங்க அப்பாவும் ஆஃபிஸ் வரதில்லை. அதைப் பயன்படுத்தி இவன் பீ.ஏ.வரதன் வச்சு இவனுக்கு எல்லா கெட்ட பழக்கமும் கத்துக்க வைச்சேன். சூதாட்டத்தில இவன் பணத்தை எல்லாம் இழந்தப்போ அந்த ஆஃபிஸ் என் கைக்கு முழுசா வந்துரும்னு நினைச்சேன். ஆனால் இவன் அப்பன் அந்த மனோஹர் பயலை உள்ள கொண்டு வந்துட்டான். அதை மட்டுமா அந்த மனிஷன் செஞ்சாரு!!! என்னோட எல்லா திட்டத்தையும் தெரிஞ்சுகிட்டு எனக்கு எதிரா கம்பெனில இருக்குற ஷேர் ஹோல்டர்ஸ எல்லாத்தையும் திருப்ப பார்த்தாங்க. அந்த செய்தி என் காதுல விழுந்ததும் மொத்தமா அவங்களை தூக்க நினைச்சேன். வேற ஒரு ஃபோன்ல இருந்து அவங்களை நைஸ்ஸா பேசி ஒரு இடத்துக்கு வரச் சொன்னேன். வர வழிலயே அவங்களை தீர்த்துக் கட்டிட்டேன். இதுல எனக்கே தெரியாம சிக்குனது ஜானகி தான். அவ என்னோட டார்கெட்டே இல்லை. ஆனால் அவ ஆயுசும் முடிஞ்சுருச்சு!!” என்று கூறி சிரித்தார்.

“அத்தை ஈஸ்வர் உங்களுக்கு என்ன செஞ்சார்?? அவரை எதுக்கு கொலை பண்ணீங்க??”

“அவன் எனக்கு ஒன்னும் பண்ணலை. ஆனால் நீ பண்ணதுக்கு அவன் தண்டனை அனுபவிச்சான்.”

“என்ன சொல்றீங்க அத்தை??”

“ஆமா, உன் அக்கா இறந்த அப்போ உன்னை என் பைனுக்கு கட்டி தரச் சொல்லி கேட்டதுக்கு உங்க வீட்டுல என்னை அசிங்க படுத்தி அனுப்புனாங்க. நீயும் அந்த ஈஸ்வர் பையல தான் கல்யாணம் பண்ணுவனு சொன்ன. என் பேத்தி அம்மா இல்லாம கஷ்டப்படக் கூடாது. அதான் உன் புருஷனை சேர்த்துப் போட்டேன். உன் புருஷனுக்கு வேற ப்ளான் தான் வச்சுருந்தேன். ஆனால் அவனா தான் என்கிட்ட சிக்கி கிட்டான்” என்று பாட்டி கூற, கேட்ட அனைவருக்கும் ஆத்திரம்.

“சார் இவங்களை கூட்டிட்டுப் போங்க. இவங்களை பார்க்கவே பிடிக்கலை.” என்று முரளி கூற, பாட்டி,”என்னடா பிடிக்கலை?? உனக்கு பிடிக்காட்டி எனக்குக் கவலையில்லை. ஒழுங்கா லாயரை கூட்டிட்டு வந்து என்னை ஜாமின்ல எடுக்குற வழியைப் பார்.” என்று கூறினார்.

“அந்த நினைப்போட இருக்காதீங்க. இந்த நிமிஷத்துல இருந்து நீங்க யாரோ நாங்க யாரோ. நீங்க செத்தா கூட நான் வர மாட்டேன்.”என்று முரளி கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். வாசுகியும் அழுது கொண்டே சென்றுவிட்டார். முதல் முறையாகப் பாட்டிக்கு பயம் வந்தது.

சிறிது நேரத்தில் புயல் அடித்து ஓய்ந்தது போல் இருந்தது சமியின் இல்லம். ஒருத்தருக்குமே என்ன பேசவென தெரியவில்லை. அந்த அமைதியைக் கலைத்தது ரிஷி தான்.

“சரி விடுங்க. இப்படியே எவ்ளோ நேரம் உட்கார்ந்து இருக்கிறது?? நமக்கு வேற வேலை இல்லையா??”

“ரிஷி எப்படி இதலாம் நடந்துச்சு??” என்று ப்ரகாஷ் கேட்டார்.

“அப்பா நீங்க அடைச்சு வைச்ச ஆட்களை போய் நாங்க பார்த்தோம்ல, அப்ப தான் தெரிய வந்தது நீங்க அந்த கொலையை செய்யலைனு. அவங்க தான் எல்லா உண்மையும் சொன்னாங்க. காசுக்காகக் கூட இருந்தவங்களை கொலை பண்ணிருக்காங்க. அந்த ஆக்ஸிடெண்ட்ட பண்ணவங்களும் இவங்க க்ரூப் தான். ஆனால் பாட்டியோட காசுக்காக தன்னோட ஆட்களையே கொல்ல சொல்லிருக்கான் இங்க வந்தான்ல அவன்.”

“அவன் எப்படி உங்ககிட்ட உண்மையைச் சொன்னான்??”

“அவன் குடும்பத்தை நாங்க தூக்கிட்டோம். அதான் எல்லாம் உண்மையைச் சொல்லிட்டான். அது மட்டுமில்லை. அன்னைக்கு பாட்டி அவன்கிட்ட காசு குடுத்து கொலை பண்ணச் சொன்னதை எல்லாத்தையும் வீடியோ ரெகார்ட் பண்ணி வைச்சுருக்கான். அதை வச்சு தான் இப்ப பாட்டியை அரெஸ்ட் பண்ணாங்க.”

“ரொம்ப நல்ல வேலை பண்ணிருக்கீங்க. இத்தனை நாள் எவ்ளோ குற்றவுணர்ச்சில இருந்தேன். இப்ப தான் எனக்கு நிம்மதியா இருக்கு.”என்று அவரும் சந்தோஷப் பட்டார். அதே சந்தோஷத்துடன் தன் வீட்டுக்குச் சென்றான் நளினியிடம் கூறுவதற்கு.

சூழ்நிலையை இலகுவாக்க ஆகாஷ் சஞ்சயிடம்,”சஞ்சய் உன்னைப் பத்தியும் ப்ரீத்தியைப் பத்தியும் எங்க வீட்டுல சொல்லியாச்சு. பச்சைக் கொடியும் காட்டிடாங்க. என்ன நம்ம ரிஷிக்குத் தான் இன்னும் எதுவும் விடைத் தெரியலை.” என்று கூற, ரிஷி பாவமாக வாசுவைப் பார்த்தான். சஞ்சய் புரியாமல் ஆகாஷைப் பார்த்து,”என்ன சொல்ற ஆகாஷ்??”

“ஆமா மாமா ரிஷி அண்ட் சமு லவ்கு தடா போட்டுட்டார்.”

“ஏன்?? என் அண்ணனுக்கு என்ன குறை??”

“ப்ச் அங்கிளுக்கு என் மேல கோவம். அதான்!!!” என்று சோகமாகக் கூறினான் ரிஷி.

“ப்ச் வாசு. பார் மாப்பிள்ளை முகம் எவ்ளோ வாடிப் போச்சுனு. உனக்கு அப்படி என்ன ஈகோ??? ஒழுங்கா சரினு சொல்லு.” என்று யாமினி கூற, சமியும் குழந்தை போல் முகத்தை வைத்துக் கொண்டு வாசுவைப் பார்க்க, வாசு சில நிமிடங்களுக்குப் பிறகு,”சரி சரி என் பாப்புகுட்டி சந்தோஷம் தான் எனக்கு முக்கியம். இந்தக் கல்யாணத்துக்கு நான் ஒத்துக்குறேன்.” என்று கூற, சமிக்கு முன் ரிஷி சென்று வாசுவைக் கட்டிக் கொண்டு,”தாங்க்ஸ் அங்கிள். நான் உங்களுக்கு வாக்கு தரேன். கண்டிப்பா என்னால உங்க பொண்ணு ஒரு நாளும் கஷ்டப்பட மாட்ட.” என்று கூறி அவரை இன்னும் இறுக்கமாகக் கட்டிப் பிடிக்க,”ஏய் என்னையே இப்படிக் கட்டி பிடிக்குற!! இதுல என் மகளை எவ்ளோ கஷ்டப்படுத்துவ??” என்று கேட்க, வேகமாக அவரை விட்டு விலகினான். “ஹீ ஹீ அங்கிள் சும்மா தமாஸுக்கு.” என்று இழித்துக் கொண்டே கூற, எல்லாரும் அவனைப் பார்த்துச் சிரித்தனர். சமி மட்டும் முறைத்துக் கொண்டிருந்தாள் பொய்யாக.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்