Loading

சென்னை மாநகரம்,அடையார் பகுதியில் ஒரு வீடு பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருந்தது. வீட்டில் உள்ள அனைவரும் மிகுந்த சந்தோஷத்திலிருந்தனர். ஏன் இருக்காது இன்று தங்கள் வீட்டு இளவரசியின் நிச்சயதார்த்தம்.

அந்த வீட்டின் வாயிலில் பெரிய விளம்பரப் பலகை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அதில்,

முரளி ஃபேமிலி & ப்ரகாஷ் ஃபேமிலி வெல்க்கம்ஸ் எவிரிஒன்

ரிஷி நந்தன்
பெற்றோத்தல்
ஆர்த்தி

என்று அச்சிடப்பட்டிருந்தது.

அந்த வீட்டின் தோட்டத்தில் தான் நிச்சயதார்த்த விழா ஏற்பாடு செய்திருந்தனர்.
தோட்டத்தின் ஒரு ஓரத்தில் மேடை அமைத்து அதன் நடுவில் இரண்டு நபர் அமரும் சாய்விருக்கை(sofa) போட்டு இருந்தனர். சாய்விருக்கையின் பின் வெள்ளை மற்றும் வைலட் நிற திரைச்சீலைகள் தொங்கவிடப்பட்டிருந்தது. அதில் சிவப்பு ரோஜாக்கள் கொண்டு இரண்டு இதயம் ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்டிருப்பது போல வடிவமைத்திருந்தனர். ஒரு இதயத்தில் ரிஷி நந்தன் என்றும் மற்றொரு இதயத்தில் ஆர்த்தி என்றும் எழுதியிருந்தனர். கீழே ஆங்காங்கே வட்ட மேஜையும் அதனைச் சுற்றி நாற்காலியும் போட்டிருந்தனர். வெள்ளை நிற உறையை மேஜை மற்றும் நாற்காலியில் போட்டிருந்தனர். மேஜையின் நடுவே சிறிய கண்ணாடி ஜாடியில் பூக்கள் வைத்து இருந்தனர்.

வீட்டின் வாயிலில் மணப்பெண்ணின் தந்தை முரளி மற்றும் மணமகனின் தந்தை ப்ரகாஷ் நின்று எல்லோரையும் வரவேற்றுக் கொண்டிருந்தனர்.

வீட்டின் உள்ளே மாடியில் ஒரு அறையில் பெண்கள் கூட்டமாக இருந்தனர். அவர்களின் நடுவே கண்ணாடி முன் ஒரு இளம் யுவதி அமர்ந்திருந்தாள். அவளை அழகுக் கலை நிபுணர் அழகுபடுத்திக் கொண்டிருந்தார். அவள் தான் மணப்பெண் ஆர்த்தி. அப்பொழுது அங்கே வந்தார் வாசுகி ஆர்த்தியின் தாய். அவளை நெட்டி முறித்தவர்,”ஆழகா இருக்கடி இராசாத்தி. என் கண்ணே பட்டிடும் போல.” ஆர்த்தி அழகாக வெக்கப்பட்டு சிரித்தாள்.

“அது நடக்க கூடாதென்று தான நான் வந்து இருக்கிறேன்.” கூறிக்கொண்டே வந்தார் கங்காதேவி, முரளியின் தாய். அவரை கண்டதும் மரியாதை நிமித்தமாகத் தள்ளி நின்றார் வாசுகி. கங்காதேவி ஆர்த்தியிடம் வந்து வாசுகி போல நெட்டி முறித்தவர் அங்கு இருந்த மை டப்பாவை எடுத்து அதிலிருந்து கொஞ்சமாக ஆர்த்தியின் கண்ணத்தில் திருஷ்டி பொட்டு வைத்தவர்,”இப்போ என் பேத்தி மேல் யார் கண்ணும் படாது.” என்றார்.

“ஆர்த்தி பாட்டிக்கிட்ட ஆசீர்வாதம் வாங்கிக்கோ.” ஆர்த்தி தன் அம்மாவின் சொல் கேட்டு தன் பாட்டியிடம் ஆசீர்வாதம் வாங்கினாள். கங்காதேவி ஆர்த்தியை ஆசிர்வதித்து அவளை அணைத்துக்கொண்டார்.

“பாட்டி ரிஷி வந்துடாரா?”

“ஹா ஹா அதுக்குள்ள என் பேத்திக்கு மாப்பிள்ளையை பார்க்கணுமா? நான் போய் பார்க்கிறேன். வாசுகி நீ ஆர்த்தி கூடவே இரு. நான் சொல்லும் போது அவளை கீழ கூட்டிக்கிட்டு வா.” என்று கூறிவிட்டு கீழே சென்றார்.

தோட்டத்தில் ரிஷி வீட்டிலிருந்து யாரையும் காணாமல் ப்ரகாஷிடம் சென்று,”என்ன ப்ரகாஷ் யாரையும் காணோம் உன் வீட்டில் இருந்து?”

“அம்மா நான் சொல்லிவிட்டுத் தான் வந்தேன் சீக்கிரம் வரச் சொல்லி இன்னும் காணோம். சரி நான் போய் பார்த்துட்டு கையோடு கூட்டிட்டு வரேன் மா.”

“சரி பா சீக்கிரம் வா. அய்யர் அங்க மூஹுருத்ததுக்கு இன்னும் பத்து நிமிஷம் தான் இருக்குனு சொன்னார்.”

“சரி மா. நான் கூட்டிட்டு வரேன்.” எதிரே இருந்த வீட்டுக்குச் சென்றார். உள்ளே நுழைந்ததும்,”நளினி இன்னும் ரிஷி ரெடி ஆகலையா?”

“இதோ போய் பார்க்கிறேன்.”

“லேட் ஆயிடுச்சு நளினி. சீக்கிரமா போய் பார்.” அப்பொழுது அவர்களின் இரண்டு பையன்களும் மாடியிலிருந்து இறங்கி வந்தார்கள்.

ப்ரகாஷும் நளினியும் இருவரையும் பார்த்து மெய் மறந்து நின்றனர். அப்பொழுது சஞ்சய் அவர்கள் அருகில் வந்து,”என்ன இரண்டு பேரும் இங்க நின்றுகொண்டு நேரத்தை விரயம் பண்றீங்க? நிச்சயதார்த்தத்திற்கு நேரம் ஆயிருச்சு. வாங்க போகலாம்.”

நளினி அவனின் அருகில் வந்து அவன் காதை திருகி,”டேய் நீங்க இரண்டு பேரும் தாமதம் பன்னிட்டு எங்களை சொல்றீங்க?”

“அம்மா நாங்களான் எப்பவோ ரெடி. நீங்க தான் லேட்.” ரிஷி தன் பங்கிற்கு நளினியை கிண்டல் செய்தான். இதைச் சுவாரஸ்யமாகப் பார்த்துக்கொண்டு இருந்தார் ப்ரகாஷ். அவரது கைப்பேசி அழைக்கவும், அதை எடுத்துப் பார்த்து தன் தலையில் அடித்துக் கொண்டு,”போதும் அப்பறமா கொஞ்சிகலாம். இப்போது வாங்க போகலாம்.” அனைவரும் அமைதியாகக் கிளம்பினர்.

இவர்கள் வருவதைப் பார்த்த சொந்தங்கள் இவர்களுடன் இணைந்தனர். பின் மாப்பிள்ளைக்கு ஆர்த்தி எடுத்து திலகம் வைத்து அழைத்து வந்தனர்.

மாப்பிள்ளையும் பெண்ணும் மேடையில் அமர வைக்கப்பட்டனர். ரிஷி,ஆர்த்தியின் காதில்,”அழகா இருக்க ஆர்த்தி.”

ஆர்த்தி வெட்கப்பட்டுக் கொண்டு,”நீங்களும் தான் ரிஷி”

பின் நிச்சயதார்த்த சம்பிரதாயங்கள் ஆரம்பிக்கப்பட்டது. முதலில் விநாயகருக்குப் பூஜை செய்தனர்.பிறகு பெண்ணின் அண்ணன் முறையில் இருக்கும் ஒருவர் ரிஷிக்கு திலகமிட்டு மாலை அணிவித்தார். அதே போல் ரிஷியின் தங்கை முறையில் இருக்கும் ஒருவர் ஆர்த்திக்கு திலகமிட்டு மாலை அணிவித்தார். இருவருக்கும் நிச்சயதார்த்த ஆடை தந்தார்கள். அதை வாங்கிக் கொண்டு இருவரும் உடை மாற்றச் சென்றார்கள்.

அவர்கள் வருவதற்குள் அவர்களைப் பற்றி,

தியாகராஜன் மற்றும் நாராயணன் சிறு வயதிலிருந்தே நண்பர்கள். அவர்களுக்குச் சேர்ந்து தொழில் செய்ய வேண்டும் என்று ஆசை. அதனால் பள்ளிப் படிப்பு முடித்தவுடன் அவர்களின் தந்தைகளின் உதவியுடன் தலா இரண்டு மாடுகள் வாங்கி பால் பண்ணை வைத்தார்கள். இருவரின் அயராத உழைப்பின் பலனாக அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தது. இப்பொழுது அவர்கள் பண்ணையில் 20 மாடுகள் உள்ளன. அவர்களின் பண்ணையில் குடும்ப சூழ்நிலைக்காகக் கங்காதேவி வேலைக்குச் சேர்ந்தார்.அவரின் கடுமையான உழைப்பைப் பார்த்து தியாகராஜன் காதல் வயப்பட்டார். இதைப் பார்த்த நாராயணன் இரு குடும்பங்களிடம் பேசி திருமணம் செய்து வைத்தார். அதே போல் தியாகராஜன், நாராயணனுக்கு கங்காதேவியின் தோழி பத்மினியை மணமுடித்து வைத்தார். கங்காதேவியின் புத்திக் கூர்மையால் அவர்களின் பாலிலிருந்து தயிர்,நெய்,வெண்ணெய் ஆகிய பொருட்களைத் தயாரித்தன. தினா மில்க் ப்ராடக்ட்ஸ்னு அவர்கள் தொழிலைப் பதிவு செய்து அந்த பொருட்களை விற்றனர். பின்னர் அவர்கள் பிள்ளைகள் தலை எடுத்து பன்னீர், பால் பவுடர், சீஸ் என அவர்கள் தொழிலை விரிவுபடுத்தினர். பிறகு சென்னையில், அடையார் பகுதியில் எதிர் எதிரே வீடு கட்டி குடி புகுந்தனர். இப்பொழுது அவர்களின் தினா மில்க் ப்ராடக்ட்ஸ் தமிழகத்திலே பெயர் போன ஒன்று. ஆர்த்திக்கு ரிஷியை சிறு வயதிலிருந்தே பிடிக்கும். இப்பொழுது அது காதலாக மாறியதால் இருவருக்கும் திருமணம் செய்ய இரு குடும்பமும் முடிவு செய்துள்ளனர்.

இப்போதைக்கு இது போதும். கதைக்குள் செல்லலாம்.

ரிஷியும் ஆர்த்தியும் உடை மாற்றி விட்டு வந்தனர். பின் சில பூஜைகளுக்குப் பிறகு இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டனர். அனைவரும் கை தட்டினர். பிறகு எல்லோரும் ஒவ்வொருவராக வந்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பிறகு அனைவரும் சாப்பிட்டு விட்டுச் சென்றனர்.

ரிஷியின் குடும்பம் ஆர்த்தியின் வீட்டு ஹாலில் அமர்ந்து இருந்தனர்.

“இப்ப தான் பா நிம்மதியா இருக்கிறது. என் பேத்தியோட ஆசையை பாதி நிறைவேற்றியாயிற்று. இனி கல்யாணம் மட்டும் தான் பாக்கி. அதுவும் கூடிய சீக்கிரமா நடந்துரும்.”

“ஆமா மா. எங்களுக்கும் இப்ப தான் நிம்மதியா இறுக்கு. அடுத்து ரிஷி தொழில கவனிக்க ஆரம்பிச்ச போதும். நாங்கள் புது தம்பதிகள் மாதிரி ஊர் சுத்த ஆரம்பித்து விடுவோம்.”

“அப்பா இன்னும் ஆறு மாசம் கழித்துத் தான் என்னால் வேலையை விட்டு வர முடியும் அப்பா.”

“என்னடா திடீரென ஆறு மாசம் ஆகுமென்று சொல்ற?”

“அப்பா எனக்கு இந்த செமஸ்டர்க்கு க்ளாஸ் ஏற்கனவே அஸைன் பன்னிடாங்க அப்பா. மாற்ற முடியாது.” ப்ரகாஷ் பேசும் முன் ஆர்த்தி,”மாமா இருக்கட்டும் எனக்கும் இன்னும் ஒரு வருஷம் இருக்கிறது கல்லூரி முடிய. ரிஷி கூட இருந்தால் நல்லா இருக்கும் மாமா.”

“அப்புறமென்ன ப்ரகாஷ் சின்ன சிறுச்சுங்க அதுங்க இஷ்டத்துக்கு இருக்கட்டும்.”

“நீங்களே சொல்லீட்டிங்க அப்புறமென்ன. எனக்குக் கவலை இல்லை.” ப்ரகாஷ் சொல்ல ரிஷி சிரித்தான்.

சிறிது நேரத்திற்குப் பிறகு ப்ரகாஷ், நளினி, ரிஷி மற்றும் சஞ்சய் அவர்கள் வீட்டிற்குச் சென்றனர்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்