Loading

கஞ்சனடா கவிஞ்சா நீ!!
அத்தியாயம் – 8 ( 8.2 )

மடியில் குழந்தையை வைத்துக்கொண்டு தன் பாட்டிற்கு ” பாப்பு பாப்பு ” என்று கொஞ்சிக்கொண்டிருந்த வந்திதாவை நெருங்கிய ஆதி கேசவன் , அங்கே மூச்சு பேச்சற்று கிடந்த ஆண் குழந்தையை கண்டு ” ஐயோ என் சுயநலத்துக்காக என் புள்ளைய கொன்னுட்டேனே , இப்போ பத்மா எழுந்து என் குழந்தை எங்கன்னு கேட்டா நா என்னனு சொல்லுவேன் ” என்று தலையில் அடித்துக்கொண்டு அழ துவங்கினார்.

ஆதி கேசவனின் நிலையை கண்டு கண் கலங்கிய மருத்துவச்சி அவர் தோளை பற்றி 

” தம்பி நானும் எப்படியாச்சும் அம்மாவையும் புள்ளையையும் எப்படியாச்சும் காப்பாத்திரனும்னு என்னால முடிஞ்சத எல்லாம் செஞ்சேன் பா , ஆனா குழந்தை பிறக்கும் போதே இறந்துருச்சு பா. என்னால உன் பொண்டாட்டிய மட்டும் தான் காப்பாத்த முடிஞ்சுது.” என்க , 

” விடுங்க பாட்டி. இது எனக்கு முன்னாடியே தெரிஞ்ச விஷயம் தான். எல்லாம் என் தப்பு தான் , என் தப்பு மட்டும் தான். நா மட்டும் அன்னைக்கு பத்மாகிட்ட உண்மைய சொல்லிருந்தா இன்னைக்கு எங்களுக்கு இப்படி ஒரு நிலைமை வந்துருக்காது ” என்று  அழுதுக்கொண்டே புலம்பினான் ஆதி கேசவன். 

அதே நேரம் எங்கே குழந்தையை பலி குடுக்க முடியாமல் போனால் ஜோசியர் கூறியது போல் தன் மருமகளின் உயிருக்கு ஆபத்து வந்துவிடுமோ ? என்று பயந்த தேவகி , தேவனை அழைத்து குழந்தை இறந்து பிறந்ததை கூறினார்.

தேவனும் குழந்தை இறந்ததை கேட்டு வேதனை கொண்டவர், எங்கே ஜோசியர் கூறியது போல் செய்யவில்லை எனில் தன் மருமகளும் தவறி விடுவாரோ என்று பயந்தவர் , தான் செய்வது எத்தனை பெரிய பாவம் என்று தெரிந்தும் மனதை கல்லாக்கி கொண்டு தேவகியுடன் அவரது காப்பகத்திற்கு விரைந்தார்.

அன்பு அனாதை இல்லம் 

” ஐயா என்ன திடீர்னு சொல்லாம கொள்ளாம வந்துருக்கீங்க ? ஆமா ஆதி தம்பியும் , பத்மா பாப்பாவும் வரலையா ? வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்கல்ல ? ” என்று தேவன் தேவகியின் திடீர் வருகையை எதிர்பார்க்காத காப்பகத்தின் நிர்வாகி சங்கரன் தேவனிடம் நலம் விசாரித்தார்.

” சங்கரா இப்போ என் கிட்ட நேரம் ரொம்ப கம்மியா இருக்கு. அதனால நா சொல்லுறதயெல்லாம் ஏன் எதுக்குன்னு கேள்வி கேக்காம செய். உன் கேள்விக்கெல்லாம் நா அப்புறமா பதில் சொல்லுறேன் ” என்ற தேவன் சங்கரனிடம்  ஒரு வாரத்திற்கு முன் அக்காப்பகத்தில் சேர்க்கபட்ட ஓர் பெண் குழந்தையை தூக்கி வர சொன்னார்.

சங்கரனும் அவர் கூறியதை போலவே அக்குழந்தையை தூக்கி வந்து தேவன் தேவகி கையில் ஒப்படைத்துவிட்டு மறுபேச்சு பேசாமல் தன் வேலையை கவனிக்க சென்றுவிட்டார்.

சங்கரன் சென்றதை உறுதிப்படுத்தி கொண்ட தேவகி , தன் கணவரிடம் ” என்னங்க இது எவ்ளோ பெரிய பாவம் தெரியுமா ? இப்படி நம்மல நம்பி அடைக்கலம் தேடி வந்த இந்த பச்ச மண்ணை போய் எப்படி பலி குடுக்கறது ? வேண்டாங்க இது பெரிய பாவம் ” என்று தன் கையில் அழகே உருவாய் தூங்கிக்கொண்டிருந்தஅப்பெண் குழந்தையை காண்பித்து  கேட்க , பதிலுக்கு தேவனும் ” எனக்கு வேற வழி தெரியல தேவகி. நம்ம குடும்பம் நல்லா இருக்கணும்னா , நாம இந்த குழைந்தைய பலி குடுத்து தான் ஆகனும் ”   என்றவரை இடைமறைத்த தேவகி 

” ஏங்க ஜோசியர் நம்ம மருமக வயித்துல பிறக்குற இரண்டாவது குழந்தையை தான பலி குடுக்கணும்னு சொன்னாரு அதுவும் அந்த குழந்தை பெண் குழந்தையா இருக்கணும்னு சொன்னாரில்ல ? ஆனா நம்ம கெட்ட காலம் அந்த குழந்தை இறந்துருச்சு , அதுவும் அது ஆண் குழந்தை வேற , இப்படி இருக்கப்போ எப்படிங்க நாம ஊரான் வீட்டு பிள்ளைய பலி குடிக்க முடியும். வேண்டாங்க இது பெரிய பாவம். நம்ம வீட்டு பிள்ளையா இருந்தா கூட பரவாயில்ல , ஆனா நம்மல நம்பி வந்த பிள்ளையை பலியெல்லாம்  குடுக்க கூடாதுங்க ” 

அத்தனை நேரம் அவர் பேசுவதை அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த தேவன் ” தேவகி நா நம்ம ஜோசியர் கிட்ட கேட்டு தான் எல்லாத்தையும் பண்ணுறேன். அவர் தான் நம்ம காப்பகத்துல இருக்கருதுலயே  சின்ன பெண் குழந்தையா பார்த்து  பலி குடுக்கலாம் , ஒன்னும் பிரச்சனை இல்லன்னு சொன்னாரு. தேவகி ஒரு விஷயம் நல்லா புரிஞ்சிக்கோ நாம செய்யறது பாவம் தான் நா இல்லேன்னு சொல்லல . ஆனா நாம இந்த பாவத்த செஞ்சாதான் நம்ம மருமகளும் நம்ம பையனும் நல்லா இருப்பாங்க. அவுங்களோட நன்மைக்காக நா எந்த எல்லைக்கு வேணாலும் போவேன் ” என்றவரின் கண்களில் தெரிந்த உறுதியை கண்டு தேவகியே ஒரு நிமிடம் அதிர்ந்து தான் போனார்.

சரியாக தேவன் தன் திட்டத்தை தேவகியிடம் விளக்கிய மறுநொடி ” சபாஷ் என்ன ஒரு வில்லத்தனம் உங்களுக்கு ? ” என்ற குரல் வந்த திசையை நோக்கி திரும்பியவர்கள் , அங்கே கண்களில் கோவம் பொங்க நின்றிருந்த ஆதி கேசவனை கண்டு தேவனும் தேவகியும் பயத்தில் கதி கலங்கி போயினர் .

” ஏன் அப்பா ? ஏன் இப்படி பண்ணீங்க ? ஏன் என் கிட்ட உண்மைய மறச்சி பொய் சொன்னிங்க ? ஏன் பா எனக்கு துரோகம் பண்ணீங்க ?  ஏன்மா இப்படி பண்ணீங்க ? உங்களால  தான் என் புள்ளைய இழந்துட்டு  தவிச்சிக்கிட்டு இருக்கேன். இதுல பத்மா எவ்ளோ ஆசையா ஆம்பள பிள்ளை பெத்துக்கணும்னு கனவு கண்டா. ஆனா உங்களோட சேர்ந்து நானும் அவளுக்கு துரோகம் பண்ணிட்டேனே. இப்போ அவ மயக்கத்துலயிருந்து எழுந்து என் பிள்ளை எங்கன்னு கேட்டா நா அவளுக்கு என்ன பதில் சொல்லுவேன் ? அவளுக்கு மட்டும் இந்த உண்மையெல்லாம் தெரிய வந்தா கண்டிப்பா என் பத்மா என்னை விட்டு போயிடுவா ? ? ஏன் இப்படி பண்ணீங்க துரோகிங்களா ? ஏன் என்ன ஏமாத்துனீங்க ? ” என்ற ஆதி கேசவன் தன் இத்தனை நாள் மனக்குமுறல்களை எல்லாம் ஒரே மூச்சில் கொட்டித்தீர்த்தவர் தரையில் அமர்ந்து அழத்துவங்கி விட்டார். 

தன் மகன் மனம் உடைந்து பேசியதை கண்ட தேவனும் தேவகியும் கலங்கி நின்றிருக்க , அவர்களை மேலும் சோதிப்பது போல் கைபேசியின்  மூலம் ஓர் செய்தி வந்தது.

” டேய் தேவா , நான் தான் டா ரவி பேசுறேன். உனக்கு விஷயம் தெரியுமா ? நாம எல்லாரும்  ரெகுலரா ஜோசியம் பாப்போம்ல அந்த ஜோசியகாரன் சரியான பிராடு பயலாம் டா. அவன் நரபலிக்கு பிள்ளை பிடிச்சு குடுக்குற கும்பலோட தலைவனாம். இது தெரியாம இவ்ளோ நாள் நாம எல்லாரும் அவன நம்பிட்டு இருந்தோம். இப்போ தான் போலீஸ் அவன அர்ரெஸ்ட் பண்ணிட்டு போனாங்கன்னு நியூஸ்ல சொன்னாங்க.அதான் உனக்கு இந்த விஷயம் தெரியுமோ என்னவோன்னு தான் உனக்கு போன் பண்ணேன். சரி டா நான் நம்ம மத்த பிரெண்ட்ஸ் எல்லாருக்கும் கால் பண்ண போறேன். நீ பாத்து பத்திரமா இருந்துக்கோ ” என்று தேவனின் சிநேகிதர் ரவி கூறிய செய்தியில் தேவன் அதிர்ச்சியில் நெஞ்சை பிடித்துக்கொண்டு சரிந்து விட்டார்.

அவர் விழுந்த வேகத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்துக்கொண்டிருந்தது. 

அதே நேரம் வீட்டில் மயக்கத்திலிருந்து விழித்த பத்மா தன்னருகில் குழந்தை இல்லாமல் இருப்பதை கண்டு எதிரில் நின்றிருந்த மருத்துவச்சியை நோக்கி கத்த துவங்கினார். 

ஆம் நம் ஆதி கேசவன் தான் எங்கே குழந்தை இறந்து பிறந்த செய்தி தெரியவந்தால் பத்மா மனமுடைந்து போவார் என்பதால், மருத்துவச்சியையும் , தன் மகள் வந்திதாவையும் பத்மாவிற்கு காவலுக்கு வைத்துவிட்டு , குழந்தையின் சடலத்தை எடுத்துக்கொண்டு தங்கள் காப்பகத்திற்கு விரைந்தவர்  , பின் வாசல் வழியாக உள்ளே நுழைந்து, காப்பகத்தின் பின்புறமிருக்கும் வாழை தோட்டத்தில் குழந்தையை  ஒரு முறை நன்றாக உச்சி முகர்ந்துவிட்டு , கனத்த மனதுடன் குழந்தையின் சடலத்தை புதைத்து விட்டு , யாருக்கும் சந்தேகம் வராமல் இருப்பதற்காய் , அதற்கு மேல் ஓர் வாழ கன்றை நட்டு வைத்தவர்  , தான் வந்த சுவடே தெரியாமல் காப்பகத்திலிருந்து  வெளியேற முயல்கையில் தான் தேவன் தேவகி பேசியதை கேட்டு அதிர்ச்சியடைந்து நின்றார்.

இப்போது பத்மா மருத்துவச்சியிடம் குழந்தையை கேட்டு அடம்பிடிக்க , அவரும் தன்னால் முடிந்த வரை பத்மாவை சமாதானம் செய்தார். ஆனால் நேரமாக நேரமாக பத்மா குழந்தையை கேட்டு மருத்துவச்சியிடம் சற்று வேகமாக சண்டை போட , அதற்கு மேல் விட்டால் பத்மாவின் உடல்நிலை மேலும் மோசமாகி விடும் என்பதை உணர்ந்த மருத்துவச்சி , பத்மாவையும் , வந்திதாவையும் அழைத்துக்கொண்டு காப்பகம் விரைந்தார்.

தேவன் ஜோசியரின் உண்மை முகம் அறிந்த அதிர்ச்சியில் நெஞ்சை பிடித்துக்கொண்டு விழவும் , பத்மா தட்டு தடுமாறி காப்பகத்திற்குள் நுழையவும் சரியாக இருந்தது.

குழந்தையை காணாது தவித்துக்கொண்டிருந்த பத்மா தன் உடல்நிலையை பொருட்டு படுத்தாமல் காப்பகம் வந்தவர் அங்கே தன் மாமனார் மயங்கி சரிவதை பார்த்து பயந்து ஓடி வந்து அவரை தாங்கிப்பிடிக்க போக  , அப்போது தான் தன் மாமியாரின் கையிலிருக்கும் பெண் குழந்தையை கண்டு , அது தன் குழந்தை என்றெண்ணியவர் , தனக்கு ஆண் பிள்ளை பிறக்கவில்லை என்னும் கோவத்தில் ” நோ நோ ” என்று வேகமாக கத்திக்கொண்டே காப்பகத்திலிருந்து விரைந்து வெளியேறியவர் நடக்க திராணியற்று சாலையில் தடுமாற , நொடிப்பொழுதில் எதிரில் வந்த லாரியில் அடித்து தூக்கி எரியப்பட்டார்.

தேவனும் , பத்மாவும் ஒரு சேர மருத்துவமனையில் சேர்க்க பட்டனர். இதில் பத்மா அபாய கட்டத்தை தாண்டி விட , தேவனின் நிலை தான் கவலை கிடமாக இருந்தது. 

ஒருபுறம் தந்தை உயிருக்கு போராடி கொண்டிருக்க , மறுபுறம் மனைவிக்கு நேர்ந்த திடீர் விபத்து என்று ஆதி கேசவன் முழுவதுமாய் உடைந்து போயிருந்தார். அவர் நிலை இவ்வாரெனில் தேவகி பாட்டியோ தானும் தன் கணவரும் செய்த முட்டாள் தனத்தினால் தான் தன் குடும்பத்திற்கு இத்தனை கஷ்டம் என்று தன்னை தானே வெறுத்துக்கொண்டிருந்தார்.

இவ்வாறு அவரவர் தத்தம் நிலையை எண்ணி கவலை கொள்ள , நம் வந்திதாவோ கேட்பாரற்று காப்பகத்தின் பொது அறையில் கிடந்து அழுது கொண்டிருந்த பெண் குழந்தையை தன் மடியில் வைத்துக்கொண்டு தன் மழலை மொழியில் சமாதானம் செய்து விளையாட்டு காட்டிக்கொண்டிருந்தாள்.

தன் குடும்பத்தை தன் மூட நம்பிக்கையால் தானே புதை குழியில் தள்ளி விட்டுவிட்டோமே என்னும் மன வேதனையே தேவனின் உயிரை குடித்து விட்டது.

அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்…. 

தொடரும் …

உங்கள் கருத்துகளை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கும் நான் உங்கள் பென்சிலு …

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
5
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. Archana

      பென்சில் ஒரு ஒரு எபிலே ஒரு ஒருத்தரே, நல்லவங்களாவும், கெட்டவங்களாவும் காமிச்சிட்டு வர இதுல இருந்து என்ன தெரியுது எல்லாம் காலத்தின் கட்டாயம்ன்னு தெரியுது.