Loading

கஞ்சனடா கவிஞ்சா நீ!!
அத்தியாயம் – 6 ( 6.1 )

தேங்காய் உடைக்க சென்ற கௌரிக்காக காத்திருந்த கௌரி , வந்தியின் தந்தை ஆதி கேசவன் , சாமிக்கு படையல் போட நேரமாவதாக தன் மனைவி பத்மா குரல் குடுக்க , இறுதியில் அவரே கௌரியை தேடிக்கொண்டு வாசலுக்கு வந்தவர் அங்கே நின்றிருந்தவர்களை கண்டு ஒரு நொடி அதிர்ந்தவர் , பின் முயன்று தன் முகத்தை சாதரணமாக வைத்துக்கொண்டவர் 

 ” ஏய் கௌரி என்னமா வீட்டுக்கு வந்தவங்கள இப்படி வாசல்லையே நிக்க வச்சு பேசிக்கிட்டு இருக்க. முதல்ல அவுங்கள உள்ள கூப்பிடு ..” 

” அதெல்லாம் இந்த தருதலைக்கு இதுவே அதிகம்பா ” என்று கௌரி முடிக்கும் முன்பே 

 ” ஏன் மா நானும் பார்த்துகிட்டே இருக்கேன் , என்ன நீ ரொம்ப ஓவரா பேசுற ? ஆமா என் அமுதன பத்தி உனக்கு என்ன தெரியும் ? சும்மா ஏதோ பேசணும்னு பேசாத. என் அமுதன் கிட்ட காசு பணம் வேணா இல்லாம இருக்கலாம். ஆனா அடுத்தவங்கள தன்னோட சந்தோஷத்துக்காக கஷ்டப்படுத்துற உன்ன மாதிரி  சாடிஸ்ட் புத்தியெல்லாம் இல்ல. ” என்றவரை முறைத்த அமுதன் 

 

” விடு கிழவி ஏதோ அறியா புள்ள தெரியாம பேசிடுச்சு. ஆனா அதுக்காக என் ஸ்பைசி மச்சினிச்சிய நீ எப்படி சாடிஸ்ட்னு சொல்லலாம் ?” என்றவன் கௌரியை பார்த்து கண்ணடித்தான்.

 

அதை கேட்ட வல்லி பாட்டிக்கு தான் “என்ன டா இவன் இப்படி அந்தர் பல்டி அடிக்குறான்” என்றிருந்தது. 

தான் இவ்வளவு நேரம் அவனை எப்படியெல்லாம் பேசினோம் , இருந்தும் அவன் தனக்காய் வல்லி பாட்டியிடம் பரிந்து பேசுவதை கண்ட கௌரியின் நெற்றி யோசனையில் சுருங்க , இறுதியில் அவள் எதிர்பார்க்கா நேரத்தில் அவன் கண்ணடித்ததில் கௌரி அதிர்ச்சியில் வாயை பிளந்து கொண்டு நின்றாள்.

அதே நேரம் சமையலறையிலிருந்து ஒரு ஜல்லிகரண்டி பறந்து வந்து கௌரியின் காலடியில் விழ ,  அமுதன் , வல்லி பாட்டியை விடுத்து மற்ற அனைவரும் கப் சிப்பென்று வாயை மூடி கொண்டனர்.

” இங்க என்ன மீட்டிங் நடக்குது ? அங்க நா ஒருத்தி தனி ஆளா சமையல் கட்டுல  போராடி கிட்டு இருக்கேன், இங்க என்னடா எல்லாரும் வெட்டி கதை பேசி கிட்டு இருக்கீங்க ?  ” என்ற குரல் வந்த திசையை நோக்கி அனைவரும் திரும்ப , அங்கே நம் அமுதனின் வருங்கால மாமியார் பத்மா என்னும் பத்மாவதி நின்று கொண்டிருந்தார்.

 வல்லி பாட்டி பத்மாவதியை கண்ட மாத்திரத்திலேயே அவர் தான் வந்திதாவின் தாய் என்று கண்டு கொண்டார் காரணம் நம் வந்திதா உருவத்தில் அச்சு அசலாக பத்மாவதியை உரித்து வைத்திருந்தாள்.

பத்மாவதியின் குரலுக்கு மொத்த குடும்பமே ஆடி போயிருக்க , அவர்களை முறைத்து கொண்டே வாசலுக்கு வந்த பத்மா அப்போது தான் அங்கே நின்று கொண்டிருந்த அமுதனையும் , வல்லி பாட்டியையும் கவனித்தார்.

” ஹாய் அமுதா , எப்படி பா இருக்க ? ஏன் பா இவ்ளோ நாளா வீட்டு பக்கமே வரல ? ” என்று குசலம் விசாரித்தவர் , அப்படியே வல்லி பாட்டியை நெருங்கி , அவரை ஆசையாய் அணைத்துக்கொண்டார்.

” ஹாய் வல்லி மம்மி , நல்லா இருக்கீங்களா ? என்ன இவளுக்கு எப்படி நம்மள தெரியும்னு தானே பாக்குறீங்க. அமுதன் உங்கள பத்தி நிறையா சொல்லியிருக்கான் ” 

பதிலுக்கு வல்லி பாட்டியோ ” அதெல்லாம் இல்ல . இந்த அமுதன் பையன் என்னை பத்தி தான் போஸ்டர் அடிச்சு ஒட்டாத குறையா ஊரு பூரா கேடி கிழவினு சொல்லி கிட்டு திரியுறானே , அதே மாதிரி உன் கிட்டயும் சொல்லியிருப்பான். ” என்றவரை குறுக்கிட்ட பத்மா ” அப்புறம் என்னை ஏன் மா இப்படி ஏதோ ஒரு விசித்திர ஜந்துவ பாக்குற மாதிரி ஒரு லுக்கு விடுறீங்க ? ” 

பதிலுக்கு வல்லி பாட்டியோ ” இல்ல , எல்லாரும் ஒன்னு என்னை பேர் சொல்லி கூப்புடுவாங்க , அமுதன் வயசு பசங்களெல்லாம் என்ன கிழவி , பாட்டினு கூப்புடுவாங்க. சில பேர் செல்லமா பியூட்டினு கூப்பிடுவாங்க. ஆனா இது வரைக்கும் என்னை யாருமே அம்மா னு கூப்பிட்டது இல்ல , ஏன்னா கடவுள் எனக்கு அந்த பாக்கியத்த குடுக்கல . அதான் நீ இப்படி பார்த்த உடனே மம்மி னு கூப்பிடவும் உடம்பும் மனசும் குளிர்ந்து போச்சு டா. ” என்றவர் பத்மா கரங்களை தன் கண்ணில் வைத்து ஒற்றிக்கொண்டார்.

 

எப்பொழுதுமே யாரிடமாவது வம்பிழுத்து கலாட்டா செய்து ,  தன்னையும் தன்னை சுற்றி இருப்போரையும் மகிழ்ச்சியாய் வைத்து கொள்ளும் வல்லி பாட்டிக்கு பின் இத்தனை சோகம் மறைந்திருப்பதை உணர்ந்த அமுதன் அவரை ஆசையாய் தழுவி கொள்ள , அவர்களின் பாச பிணைப்பை பார்த்து கௌரியின் கண்கள் கூட வேர்த்துதான் போனது.

” என்ன மா பண்றது , எனக்கும் , அமுதனுக்கும் சின்ன வயசுலயே அப்பா , அம்மா தவறி எங்கள அனாதையா இந்த உலகத்துல விட்டுட்டு போயிட்டாங்க. உங்களுக்கு  அந்த கல் நெஞ்சகார கடவுள்,  பிள்ளை பாக்கியத்தை குடுக்காம அனாதையா விட்டுட்டாரு. ஏற்கனவே இந்த உலகம் ஜாதி, மதம் , பணக்காரன் , ஏழைனு ரகம் வாரியா பிரிஞ்சு கிடக்கு , இதுல நம்மல மாதிரி அனாதைங்கள எல்லாம் யாரு மம்மி கண்டுக்குறா ? அதுனால அனாதைக்கு அனாதை துணைனு நம்மளே நமக்குள்ள சேர்ந்துக்க வேண்டியது தான். என்ன அமுதா நான் சொல்றது சரி தான ? ” என்றவர் தான் பெறாத மகன் அமுதனையும் , தன்னை பெறாத அன்னை மரகதவல்லியையும் ஒரு சேர அணைத்துக்கொண்டார்.

அனாதை , அனாதை !! இந்த சொல்லுக்கு தான் எத்தனை குரூரம்.  தாய் , தந்தையை இழந்து தவிக்கும் பிள்ளைகளை இவ்வொற்றை சொல்லை கொண்டு எத்தனை நாள் தான் வதைக்க போகிறோம் ?

விடை தெரியா வினாக்கள் பல …..

தொடரும் ….

உங்கள் கருத்துகளை ஆவலுடன் எதிர் பார்த்து காத்திருக்கும் உங்கள் பென்சில் ….

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
6
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    3 Comments

    1. Archana

      வல்லி பாட்ஸ் பின்னாடி இவ்வளவு சோகமா ஜாலியா இருந்த வல்லி பாட்டியையே பீல் பண்ண வெச்சுட்டீங்களே டா🤧🤧🤧🤧🤧 இந்த பொண்ணை கௌரி எதிர்த்து வந்தி,அமுதா கல்யாணம் நடக்குறதுக்குள்ள ஒரு வழி ஆயிடும் போல🤭 இதுக்கு நடுலே பேய் வருது, அமானுஷ்யம் வருதுன்னு ஒரு பயங்கர டீசர் வேற😵😵😵😵😵

      1. colour pencils
        Author

        Thank you Archu ji 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
        Always expect the unexpected, yaaru kanda next epi laye amudhanukum vandhikum marriage panni vachaalum vachiduven 😍😍😍😍

        1. Intha gouri overa pora ivaluku pudikalena enna avanga rendu oerukumae pudichuruku avangala pethevangalukum pydichuruku apa enna kalyanath nadatha vendiyathu thana. Cha ivalam oru doctor. Anathina rombha elakarama pakkuraaa. Ivaluku amma appa rendu perum irukura nalathana ippudi pesura ithula oruthara elanthalum evolo kastamnu ipavarikum na anupavikuren. Apa rendu perthiyum elamthu valura amuthn mati aluga ellam avolo kasta paduvanga. Avangaluku aruthal sollelanalum paravala ippuditha kaya paduthuvangala ithula vali pattyum serthu sollura. Periyavanganu mariyathiyachum irukaa cheiii eppuditha badhma adhisesan vanthiku ippudi oru tangachiyo. Ipo sollura nee kettuko gouri anathiya pathi elakarama ninukura neeyum oru nall anathiya marurapatha antha valiyum vedhaniyum puriyum