Loading

கஞ்சனடா கவிஞ்சா நீ!!
அத்தியாயம் – 15 ( 15.1)

அதிரூபன் தேவஸ்வரூபியை நினைத்து தனக்குள் பல திட்டங்களை தீட்டுகிறான். ஆனால் இதை ஏதும் அறியாத நித்யா  , கௌரியையும் , சரணையும் சமாளித்து , தேவஸ்வரூபியை ரூபன் இன்ஸ்டிடியூட்டில் சேர்த்து விடுகிறாள்.

ரூபியும் தன் மருத்துவ கனவு நினைவாக போவதை எண்ணி ஆனந்தம் கொண்டவள் , முகம் கொள்ளா புன்னகையுடன் ரூபன் இன்ஸ்டிடியூட்டில் கால் எடுத்து வைக்கிறாள். 

ரூபியை விடுதியில் விட கௌரிக்கு மனமேயில்லை , பின் ரூபியே தனக்கு விடுதியில் தோழிகளுடன் தங்குவது மிகவும் பிடித்திருப்பதாகவும் , மேலும் அவளுக்கு எப்போதெல்லாம் பாடத்தில் சந்தேகம் வருகிறதோ , அப்போதெல்லாம் அவள் சந்தேகங்களை தீர்த்து வைக்க விடுதியிலேயே ஆசிரியர்கள் பலர் தங்கியிருப்பதாகவும் , கௌரியை சமாதானம் செய்தாள். கௌரியும் ரூபியின் மனமறிந்து அவளை அவள் போக்கிற்கே விட்டு விட்டாள்.

முதல் இரண்டு மாதங்களும் ,  கௌரி , நித்யா , சரண் என்று மூவரில் ஒருவர் சுழற்சி முறையில் வாரத்திற்கு இரண்டு முறை ரூபியின்  விடுதிக்கு சென்று , அவளுக்கு தேவையான திண்பண்டங்கள் அனைத்தும் வாங்கி குடுத்து , அவள் நலன் அறிந்து வந்தனர்.

அதற்கு  பின் , ரூபியை காண சென்ற போது ,  ரூபி அவர்களின் வரவால் அவளது கவனம் சிதறுவதாக கூறி ,முயன்ற அளவு அவளை சந்திக்க வர வேண்டாம் என்று கேட்டு கொண்டாள். ரூபியின் இக்கூற்றில் அதிர்ந்த கௌரி , அவள் நலன் விசாரிக்க , ரூபியோ , தான் அங்கே நன்றாக இருப்பதாகவும் , தன்னை இது போன்று அடிக்கடி சந்திக்க வந்து தொந்தரவு செய்யாமல் இருந்தால் இன்னும் நன்றாக இருப்பேன் என்று கூறினாள்.

ரூபியின் நடவடிக்கையில் தெரிந்த மாற்றத்தை கண்டு கௌரி , சரண் , நித்யா என மூவரும் அதிர்ந்து போயினர். ஒரு வேலை அவளுக்கு இன்ஸ்டிடியூட்டில் ஏதும் பிரச்சனையா என்று அறிந்து கொள்ள , கோச்சிங் இன்ஸ்டிடியூட்டின் அதிகாரிகளை தொடர்பு கொள்கின்றனர் , ஆனால் அவர்களோ ரூபிக்கு இங்கே ஒரு குறையும் இல்லை என்றும் மேலும் அவள் மாதிரி தேர்வுகளில் எல்லாம் நாளுக்கு நாள் நல்ல மதிப்பெண்களே பெறுகிறாள் என்றும் கூறினர்.

முதலில் அவர்கள் கூறியதை நம்ப மறுத்த கௌரி , மீண்டும் ரூபியிடம் தனிமையில் பேச , அவளோ இனிமேல் தன்னை இது போன்று மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று முகத்தில் அடித்தது போல் கூறிவிட்டாள். 

ரூபியிடமிருந்து இதை சற்றும் எதிர்பாராத கௌரி அவளின் பேச்சில் உடைந்து போனவள் , இனி தான் எக்காரணம் கொண்டும் உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன் என்றுரைத்து விட்டு காப்பகம் திரும்பிவிட்டாள்.

—————————————————————————————————————————————————————————-

” சார் காஃபி … “

வைட்டரின் குரலில் தன் கடந்த கால நிகழ்வுகளிலிருந்து திடுக்கிட்டு வெளியில் வந்த சரண் , வைட்டர் வைத்து சென்ற காஃபியை எடுத்து ஆற அமர அருந்த துவங்கினான். இதற்கு மேல் பேசினால் எங்கே தன்னையும் மீறி பொது இடம் மறந்து உணர்ச்சிவச பட்டு விடுவோமோ என்று பயந்த சரண் , தன் கவனம் முழுவதையும் காஃபியில் பதித்தான். 

சரணின் முகவாட்டத்தை வைத்தே அவன் ரூபியின் மேல் வைத்திருந்த அளவுகடந்த அன்பை புரிந்து கொண்ட அமுதன் , சரணின் தோள்களை ஆறுதலாக பற்றினான். 

சரணும் அவன் தோளில் சாய்ந்து கொண்டு , அவன் விட்ட இடத்திலிருந்து மீண்டும் துவங்கினான் …

” அதுக்கு அப்புறம் நாங்க ஒரு மூணு மாசத்துக்கு  ரூபிய போய் பாக்கவே இல்ல சார். அப்புறம் நீட் எக்ஸாம்க்கு முன்னாடி நாள் அவளுக்கு விஷ் பண்ணலாம்னு ஹாஸ்டலுக்கு போனோம். ஆனா அவ அங்க இல்ல. அவ ட்யூட்டர்ஸ்கிட்ட விசாரிச்சதுக்கு , அவ வேற ஏதோ எண்ட்ரன்ஸ் எக்ஸாம் எழுதி, மொரிஷியஸ் யூனிவர்சிட்டில கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் படிக்க போயிட்டான்னு சொன்னாங்க. எங்களால இத நம்பவே முடியல. ரூபியோட லட்சியம் , கனவு எல்லாமே மெடிசின் தான் , அப்படி இருக்கப்போ , அவ எப்படி இன்ஜினியரிங் படிக்க ஒத்துப்பா ? எங்களுக்கு அவுங்க மேல நம்பிக்கை இல்ல. அவுங்க எங்க கிட்ட எதையோ மறைக்குறாங்கன்னு தோணுச்சு. ஒன்னுக்கு மூணு கார்டியன்ஸ் இருந்தும் , எதுக்கு எங்க கிட்ட பெர்மிஷன் கேக்காம , அவள அனுப்புனீங்கன்னு கேட்டு சண்ட போட்டோம். ஆனா அவுங்க கிட்டயிருந்து ப்ராபரான ரெஸ்பான்ஸ் வரவே இல்ல.”

சரணை இடைமறைத்த அமுதன் ” போலீஸ் கம்பிளைன்ட் பைல் பண்ணலயா ? ” 

” ஏன் பண்ணாம ? எல்லாம் பண்ணோம், பண்ணோம் . பட் ஸ்டில் நோ யூஸ். இந்த போலீஸ்காரனுங்க எல்லாம் அந்த ரூபன் போடுற எழும்பு துண்டுக்கு வாலாட்டி கிட்டு எங்களுக்கு அகைன்ஸ்ட்டா திரும்பிட்டானுங்க. காப்பகம் வச்சு நடத்துறேன்ற பெயர்ல ள்ள கடத்தி விக்குறீங்களான்னு கேஸ அப்படியே உல்டாவா ஆக்கிட்டானுங்க. 

ஏற்கனவே ரூபிய காணும்னு கௌரி உடஞ்சு போயிருந்தா , இதுல இந்த கேஸ் வேற எங்களுக்கு எதிரா திரும்புனதுல ரொம்ப வெக்ஸ் ஆகிட்டா. கேஸ் நாளாக நாளாக ரொம்ப மோசமா மாற ஆரம்பிச்சிது. எங்களுக்கு எதிரா பொய்யான ஆதாரங்கள எல்லாம் திரட்ட ஆரம்பிச்சாங்க. காப்பகத்துக்கு டொனேஷன் குடுக்குறவங்கள எல்லாம் ப்ரைன் வாஷ் பண்ணி எங்களுக்கு ஹெல்ப் பண்ண விடாம செஞ்சாங்க. இப்படியே போனா எங்கள நம்பியிருக்க மிச்ச பசங்களையும் நாங்க இழந்துருவோமோனு எங்களுக்கு பயம் வர ஆரம்பிச்சுது. சோ முதல்ல ரூபிய காணும்னு , ரூபன் இன்ஸ்டிடியூட்கு அகைன்ஸ்டா போட்ட கேஸ வாபஸ் வாங்குனோம். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா எல்லா கேஸ்லயிருந்தும் எங்கள ரிலீவ் பண்ண ஆரம்பிச்சான் அந்த ரூபன்.

என்ன தான் நாங்க கேஸ வாபஸ் வாங்குனாலும் ரூபிய பத்தி எதுவுமே தெரியாம தவிச்சு போயிட்டோம். அவள தேடாத இடமில்ல. பட் ஸ்டில் ரூபிக்கு எதுவும் ஆகியிருக்காதுனு கௌரியும் நானும் நம்புனோம். கொஞ்சம் கொஞ்சமா  ரூபியோட நினைவுகள்ல இருந்து வெளியில வர முயற்சி பண்ணோம். அவ ஏதோ ஒரு இடத்துல நல்லா இருக்கானு எங்களுக்கு நாங்களே ஒருத்தர் மாத்தி ஒருத்தர் ஆறுதல் சொல்லிகிட்டோம். கௌரி கூட ஓரளவுக்கு தேறி வந்துட்டா , ஆனா நித்யாவோட நிலமை தான் ரொம்ப மோசமாயிடுச்சு. 

என்னால தான் ரூபிக்கு இப்படி ஒரு நிலமை வந்துருச்சு. நா தான் எல்லா பிரச்சனைக்கு காரணம்னு ரொம்ப கில்ட்டியா பீல் பண்ண ஆரம்பிச்சா. எப்படியாச்சும் ரூபிய கண்டுபிடிச்சு எங்க முன்னாடி கொண்டு வந்து நிறுத்துவேன்னு ப்ராமிஸ் பண்ணா. 

நானும் அவளுக்கு சப்போர்ட் பண்ணேன். ரெண்டு பேரும் சேர்ந்து ரூபன் இன்ஸ்டிடியூட் பத்தி ரீசர்ச் பண்ணோம். அப்போ தான் அந்த இன்ஸ்டிடியூட்ல படிச்ச நிறையா ஸ்டூடெண்ட்ஸ் திடீர் திடீர்னு காணாம போறாங்கன்னு தெரிஞ்சுது , அதுலயும் காணாம போற பசங்க எல்லாருமே ஆர்பன்ஸ்.அதுவும் ஸ்பெசிபிக்கா ராஜஸ்தான் – கோட்டா பிரான்ச்ல தான் மிஸ்ஸிங் கேஸஸ் அதிகமா ரெகார்ட் ஆகியிருக்கு . 

இந்த விஷயம்லாம் தெரிஞ்சதுக்கு அப்புறம் ரூபிய நினைச்சு நாங்க ரொம்ப பயந்து போனோம். எப்படியாச்சும் அவள தேடி கண்டுபிடிக்கணும்னு முடிவு பண்ணோம். ஏற்கனவே ரூபிய நினைச்சு கவலையில இருக்க கௌரிய இந்த விஷயத்தயெல்லாம் சொல்லி பயமுறுத்த வேண்டாம்னு ஒரு முடிவுக்கு வந்தோம். ” 

” சோ ராஜஸ்தான், டெல்லி , நாமக்கல் , கோயம்பத்தூர்ல  இருக்க ஆர்பனேஜஸ் எல்லாரையும் கான்டாக்ட் பண்ணி ,அவுங்கள ரூபன் இன்ஸ்டிடியூட்க்கு எதிரா சுப்ரீம் கோர்ட்ல கேஸ் பைல் பண்ண வச்சோம். அவுங்க கூட சேர்ந்து நாங்களும் எங்க காப்பகத்தோட ஐடென்டிட்டிய  மறச்சு , நித்யா நேம் மட்டும் யூஸ் பண்ணி கேஸ் பைல் பண்ணோம். 

என் குருநாதர், தி கிரேட் கிரிமினல் லாயர்  மிஸ்டர். ப்ரதாப் பன்சால , இந்த கேஸ்ல இன்வால்வ் பண்ணோம். அவர் இந்த கேஸ்ல வாதாடுராருனு தெரிஞ்சதுக்கு அப்புறம் இந்த கேஸ்க்கு ஒரு நேஷனல் இம்பார்ட்டன்ஸ் கிடைச்சுது. அதோட விளைவா தான் ஜட்ஜ் இந்த கேஸ சி.பி.ஐ கிட்ட ஹாண்ட் ஓவர் பண்ண சொல்லி ஆர்டர் போட்டாரு. அதோட விளைவா தான் , சி.பி.ஐ ஆஃபீஸர் மிஸ்டர். அமுதவாணன் என் முன்னாடி உட்கார்ந்து என்னை லெப்ட் அண்ட் ரைட் வாங்கி கிட்டு இருக்காரு. ” என்ற சரண் , அமுதனை நோக்கி சலூட் வைத்தான்.

 சரண் கூறியதை எல்லாம் மிக உன்னிப்பாக கேட்டுக்கொண்டிருந்த அமுதன் , அவனின் இறுதி வாக்கியத்தில் தன்னையும் மறந்து ஓர் சிறிய புன் முறுவல் பூத்தான்.

 

” சோ என்னையும் லஞ்சம் வாங்குற ஆஃபீஸர்னு நினைச்சு தான் , யாருக்கும் தெரியாம என்னை சீகரெட்டா ஃபாலோ பண்ணியிருக்க ? ஆம் ஐ ரைட் ? 

” எஸ் சார் , இன்பாக்ட் உண்மைய சொல்லனும்னா ஸ்டார்டிங்ல எனக்கு உங்கள சுத்தமா புடிக்கல. அதுவும் நீங்க நேரா போய் அந்த ரூபன் இன்ஸ்டிடியூட்லயே ட்யூட்டரா சேருவீங்கன்னு நா நினைச்சு கூட பார்க்கல்ல.”

” சரண் , உங்களுக்கு ஒரு பழமொழி தெரியுமா ? கீப் யுவர் பிரெண்ட்ஸ் கிளோஸ் அண்ட் யுவர் எனிமீஸ் க்லோசர். நாம எப்பவும் நம்ம எதிரிய நம்ம கண்பார்வையிலேயே வச்சுக்கணும், அப்போ தான் அவன் அடுத்து என்ன செய்யப்போறாங்குறத தெரிஞ்சுக்கிட்டு , அவனுக்கு முன்னாடி போய் நாம அத தடுக்கணும். 

அதே வேலைய தான் நா இப்போ செஞ்சு கிட்டு இருக்கேன். கூடிய சீக்கிரம் அந்த ரூபனோட முகத்திரைய  கிழிச்சு எரிஞ்சு , அவனுக்கு தண்டனை வாங்கி குடுக்கல , நா சி.பி.ஐ ஆஃபீஸ்ர் அமுதவாணன் இல்ல ” 

அமுதன் பேசியதை அமைதியாக கேட்டு கொண்டிருந்த சரண் , அவனின் இறுதி வரியில் , குழம்பியவன் , அமுதனிடம் தன் சந்தேகத்தை கேட்டான் .

” சார் எனக்கு ஒரு டவுட். நீங்க அந்த ரூபனுக்கு தண்டனை வாங்கி தருவேன்னு சொன்னிங்கலே தவிற , எங்க ரூபிய கண்டுபிடிச்சு தருவேன்னு சொல்லவே இல்லையே சார். சார் உங்க கிட்ட நா ஒரு விஷயம் கேப்பேன், நீங்க அதுக்கு உண்மைய மட்டும் தான் சொல்லனும் ? “

சரணின் கேள்வியிலிருந்து தீவிரமே அவன் என்ன கேட்க போகிறான் என்பதை அமுதனுக்கு உணர்த்திவிட , தன் மனதை கல்லாக்கி கொண்டு , அவன் கேட்கவிருக்கும் கேள்விக்கு பொய் சொல்ல தயாரானான்.

” சார் உண்மைய சொல்லுங்க , ரூபி பத்தி உங்களுக்கு என்னமோ தெரிஞ்சிருக்கு. ஆனா நீங்க அத என் கிட்ட மறைக்குறீங்க. ப்ளீஸ் சார் ரூபிக்கு எதுவும் ஆகல , அவ நல்லா தான் இருக்கான்னு சொல்லுங்க சார். ப்ளீஸ் சார் ” என்று பொது இடம் பாராமல் , தன் இரு கரம் கூப்பி அமுதனிடம் மன்றாடினான்.

நீதி மன்றத்தில் தன் எதிரில் நிற்பவர்களை தன் வார்த்தை ஜாலங்களாலும் , சாதுரிய பேச்சுக்கலாலும் , கம்பீர தோற்றத்தாலும் திக்கு முக்காட செய்யும் , தமிழ் நாட்டின் தலை சிறந்த குற்றவியல் வழக்கறிஞர் மிஸ்டர். சரண் தேவ் , இன்று யாரோ ஓர் பெண்ணுக்காய் , ஒருவர் முன் கையேந்தி நிற்பதிலேயே , சரண் ரூபியின் மேல் வைத்திருக்கும் அன்பின் ஆழத்தை புரிந்து கொண்ட அமுதன், ரூபியை பற்றி அவன் கணித்து வைத்திருக்கும் உண்மைகளை அவனிடம் மறைத்து , அவள் நன்றாக இருப்பதாக பொய் உரைத்தான்.சரணும் அவன் கூறியதை நம்பி , ரூபியின் வரவிற்காய் காத்திருக்க துவங்கினான்.

கணிப்புகளும் யூகங்களும் 

உண்மையும் நிதர்சனமும் 

பொருந்தி பொருந்தாமல் போக 

இரண்டையும் பொருத்த முயன்றவன் திண்டாட 

பொருத்த தவறியவன் தள்ளாட 

திண்டாட்டம் ஒருபுறம் 

தள்ளாட்டம் மறுபுறம் 

இதில் கொண்டாட்டம் யாருக்கு ??? 

தொடரும் …

உங்கள் கருத்துகளை ஆவலுடன் எதிர் நோக்கி காத்திருக்கும் நான் உங்கள் பென்சிலு …

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. Archana

      பென்ஜில் உன்னோட பழமொழியோட அந்த கவிதைக்கு ஃபேன் ஆகிட்டேன் டா🤣🤣🤣🤣🤣

      1. colour pencils
        Author

        என் கவிதைக்கு fan ah…. எனக்கு ஒரே வெக்க வெக்கமா வருதே ஸ்வீட்டி 😍😍😍☺️☺️☺️