Loading

கஞ்சனடா கவிஞ்சா நீ!!
அத்தியாயம் – 12 ( 12.1 )

” சரண் கன்ட்ரோல் யூவர்செல்ப் … கூடிய சீக்கிரமே நா இந்த கேஸ சால்வ் பண்ணிடுவேன். யூ டோன்ட் வொரி” என்று அமுதன் சரணுக்கு ஆறுதல் கூறி கொண்டிருக்கும் போதே , தூக்கம் களைந்து எழுந்த வந்த வந்திதா , அவர்கள் பேசுவதை அரைகுறையாக கேட்டவள் 

 ” என்ன அமுதா , யாருக்கு என்ன பிரச்சனை ? ஏன் சரண் கிட்ட கௌரிய நல்லா பாத்துக்கோனு சொல்ற ? சரண் கௌரிக்கு என்னாச்சு ? இஸ் ஷி பையின் ? ” என்று அமுதனிடம் தொடங்கி சரணிடம் நிறுத்தினாள்.

வந்திதாவை அங்கே எதிர்பாராத அமுதனும் , வல்லி பாட்டியும் ஒரு நிமிடம் அதிர்ந்து நிற்க , சரணோ சட்டென்று தன் முகத்தை சிரித்த மாதிரியாக வைத்துக்கொண்டவன் ,

” ஐய டா உங்க அக்கா , தங்கச்சி பாசத்தை கண்டு எனக்கு புள் அரிக்குது போங்கோ. எப்பா அங்க அடிச்சா இங்க வலிக்குது , இங்க அடிச்சா அங்க வலிக்குது, வாட் எ சிஸ்டர்ஸ் , வாட் எ சிஸ்டர்ஸ் ” என்று நகைக்க , 

எத்தனை வலிகள் , எத்தனை ஆரா ரணங்கள் , இவை அனைத்தையும் தாங்கிகொண்டு , தன்னை சுற்றி இருப்பவரை சிரிக்க வைப்பதற்காக , தானும் சந்தோஷமாக இருப்பது போல் நடிக்கும் சரணை காண்கையில் அமுதனுக்கும் , வல்லி பாட்டிக்கும் கண்ணை கரித்துக்கொண்டு வந்தது. 

சரணின் கேலியில் கடுப்பான வந்திதா , ” சரா ஒழுங்கா நா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு , இஸ் எவரித்திங் ஆல்ரைட் ? ” என்று வினவ , 

தனக்குள் இருக்கும் சோகத்தை தனக்குள்ளே புதைத்து கொண்ட சரண் , வந்திதா கவலை கொள்ள கூடாது என்பதற்காய் சிரித்தவன் , ” வந்தி அத்தாச்சி கூல் . ஏன் இவ்ளோ டென்ஷன் ? உங்க தங்கச்சிய யாரும் மூட்டை கட்டி தூக்கிட்டு போயிடல. ஷி இஸ் பைன் அண்ட் சேப் . திடீர்னு ஒரு பேஷன்ட்டுக்கு டெலிவரி பயின் வந்துருச்சுன்னு ஹாஸ்பிடல்ல இருந்து கால் வந்துருக்கு, அதான் எமெர்ஜென்சினு சொல்லி ஹாஸ்பிடல் போயிருக்கா. ” 

சரண் கூறியதை முதலில் நம்ப மறுத்த வந்திதா , பின் அவன் முகத்தில் தெரிந்த தெளிவை கண்டு , அவன் கூறியதை நம்பினாள். இருந்தும் தன்னை சுற்றி இன்று ஓர் அமானுஷ்யமான அமைதி நிலவுவது போல் உணர்ந்த வந்திதா , வல்லி பாட்டியிடம்

” ஏன் வல்லி பாட்டி எப்பவும் ஏதாச்சும் கலகலன்னு பேசிகிட்டு இருப்பீங்க , இப்போ என்ன ரொம்ப அமைதியா இருக்கீங்க ? என்னாச்சு பாட்டி ? முகம் வேற ஒரு மாதிரி இருக்கு , யாராச்சும் ஏதாச்சும் சொன்னாங்களா ? ” என்று வினவ , அவள் கேள்விக்கு வல்லி பாட்டி பதில் கூறும் முன்பே , அவரை முந்தி கொண்ட சரண் 

” அது ஒன்னுமில்ல அத்தாச்சி , வல்லி பாட்டி ,கௌரி எப்படி உங்க கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டானு கேட்டாங்க , நானும் அன்னைக்கு நடந்தது சொன்னேன் அதுக்கு தான் கோச்சிக்கிட்டு மூஞ்சிய தூக்கி வச்சி கிட்டு சீன் போட்டுக்கிட்டு இருக்காங்க.  

” கௌரி எங்க கல்யாணத்துக்கு ஒத்து கிட்டது நல்ல விஷயம் தான , அதுக்கு எதுக்கு வல்லி  பாட்டி மூஞ்சிய இப்படி வச்சிருக்காங்க ? ” என்று மீண்டும் சந்தேகமாக வினவிய வந்திதாவை நோக்கி , 

” அட அது ஒன்னுமில்ல அத்தாச்சி, ஒரு தடவ நானும் , நம்ம அமுதன் சகல , அப்புறம் இந்த கிழவி எல்லாம் ஒன்னா உட்கார்ந்து என் காதல் காவியத்தை பத்தி பேசிகிட்டு இருந்தோம், அப்போ ஆசை ஆசையா என் காதல் காப்பியத்த சொல்லலாம்னு வந்தா , இந்த கிழவி நடுவுல புகுந்து , ஏதோ கட்டுரை வாசிக்குற மாதிரி பட்டு பட்டுனு வாசிச்சுடுச்சு. எனக்கு செமையா காண்டாகிடுச்சு. சரி நம்மளுக்கும் என்னைக்காச்சும் சான்ஸ் கிடைக்காமலேயா போயிடும்னு அமைதியா காத்துகிட்டு இருந்தேன். 

அதான் இன்னைக்கு கிழவி ஆசையா வந்து பிளாஷ் பாக் கேக்க , இதான் சாக்குன்னு நானும் கட்டுரை மாதிரி ஒப்பிச்சிட்டேன். அந்த காண்டுல தான் கிழவி முகத்தை தூக்கி வச்சிக்கிட்டு உட்கார்ந்து கிட்டு இருக்கு ” என்ற சரண் , வல்லி பாட்டியை நெருங்கி அவர் மேல் கைபோட்டு கொண்டான்.

சரணின் பேச்சில் சோகம் மறந்த வல்லி பாட்டியும் , அவனுக்கு போட்டியாய் பேச துவங்கினார் .

” டேய் படவா , அன்னைக்கு உன் பிளாஷ் பாக்க ஷார்ட்டா முடிக்கலைனா , அமுதனுக்கும் வந்திதாவுக்கும் இவ்ளோ சீக்கிரம் கல்யாணம் நடந்திருக்காது. ” என்ற வல்லி பாட்டியை இடைமறைத்த சரண் ,

” அவுங்க சீக்கிரமா கல்யாணம் பண்றதுக்கும் , என் லவ் ஸ்டோரிய நா தெளிவா எக்ஸ்பிளைன் பண்றதுக்கும் என்ன சம்மந்தம் கிழவி ? ” என்று வினவிய சரணை பார்த்து தலையில் அடித்து கொண்ட வல்லி பாட்டி 

” அவுங்களுக்கு சீக்கிரமா கல்யாணம் ஆனா தான டா,  உனக்கும் கௌரிக்கும் டும் டும் டும் நடந்து , அடுத்தது குவா குவா வரைக்கும் நடக்கும். ஆனா நீ இப்படியே உட்கார்ந்து பிளாஷ் பாக் சொல்லிக்கிட்டு இருந்தா அப்புறம் உனக்கு நேரா எம்பதாம்  கல்யாணம் தான் நடக்கும் ” என்று அவன் தலையில் கொட்ட , 

வல்லி பாட்டியின் கூற்றில் அதிர்ந்த சரண் ” எது நேரா எம்பதாம் கல்யாணம் தான் நடக்குமா ? ” என்று அதிர்ச்சியின் உச்சத்தில் காட்டு கத்து கத்த , அவன் கத்திய தோரணையில் அமுதன் கூட தன் சோகங்கள் மறந்து சிரித்தான். 

வெளியில் பிறரை சிரிக்க வைப்பதற்காக , ” எம்பதாம் கல்யாணமா ” என்று அதிர்ச்சியாகி கேட்ட சரண் , உள்ளுக்குள்ளோ ” அது வரை கௌரியும் அவனும் உயிரோடு இருப்பார்களா ” என்று கதறி அழுது கொண்டிருந்தான்.

பிறர் சிரிக்க தான் வாடுவான் 

பிறர் ஜெயிக்க தான் தோற்பான் 

பிறர் மேதாவியாக தான் முட்டாள் ஆவான் 

பிறர் மனம் புன்னகை புரிய 

தன் மனதை புண்ணாக்கி கொள்வான் 

பிறரை சிரிக்க வைக்கும் வித்தை அறிந்தவன்

தன் மனதை மாற்றானிடம் மறைக்கும் வித்தையும் அறிவான் 

 பிறர் சிரிப்பில் அவன் சிரிப்பான் 

பிறர் அழுகையில் இவன் சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பான் 

இவன் கோமாளி அல்ல 

கோவின் கழுத்தில் கிடக்கும் மாலி இவன் ….

( கோ – ராஜா , மாலி – பூ மாலை . கோமாளி என்பவன் ராஜாக்களின் கழுத்தில் கிடக்கும் பூ மாலைக்கு சமம், வேலை முடிந்தவுடன் தூக்கி எரிய படுவான் ….. ) 

சாது மிரண்டால் காடு கொள்ளாது , சிரிக்க வைப்பவன் சினம் கொண்டால் நாடு தாங்காது…..

தொடரும் …

உங்கள் கருத்துகளை ஆவலுடன் எதிர் நோக்கி காத்திருக்கும் நான் உங்கள் பென்சிலு …

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
5
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. Archana

      டேய் பென்ஜில் அமுதா, வல்லி பாட்ஸ், சரண் மூணு பேருக்கும் அவங்க மூணு பேரே பத்தியும்
      , கௌரியோட சம்பந்தம் பட்ட விஷ்யத்தோட நல்லாவே தெரியும் இல்ல🤔🤔🤔 அப்புறம் ஏன் கமல் மாறியே பேசிக்குறாங்க🤣🤣🤣🤣

      1. colour pencils
        Author

        கௌரிய பத்தி யாருக்குமே முழுசா தெரியாது ஸ்வீட்டி. அவுங்க அவுங்களுக்கு தெரிஞ்சத ஒருத்தருக்கு ஒருத்தர் ஷேர் பணிக்குறாங்க 😂😂😂😂
        அப்புறம் இந்த epi ல மெயின் போகஸ் அந்த ஆள தேடுறோம்னு சொன்னாங்கள, யார் அந்த ஆள்….
        அந்த ஆளுக்கும் கௌரிக்கும் என்ன சம்பதம் 💝💝💝