என் உள்ளத்தை ஈரத்த பூமுகம் -25

Loading

 

முகம் 25

 

அடுத்த நாள் ராம்பிரசாத்தை கைது செய்து இதோ விசாரணை நடத்தியும் முடித்திருந்தான் தீரன்.

 

ஆனால் அவன் எதிர்பார்த்தது போல் அவரிடம் எந்த தகவலும் வெளியே வரவே இல்லை. அவர் வாயைத் திறந்தால் தானே! மீண்டும் ஒரு தோல்வி அவனுக்கு…

 

இரண்டு வாரங்கள். முழுதாய் இரண்டு வாரங்கள் விசாரணை நீண்டது. அதன்பின் அந்த மருந்து சம்பந்தமான வழக்கு நீதி மன்றத்துக்கு சென்று இன்னும் நீதிமன்றத்தில் வாய்தா மேல் வாய்தா வாங்கிக்கொண்டு தான் இருக்கிறது.

 

 

அதுபோல் அந்த கடத்தல் வழக்கிலும் எந்த முன்னேற்றமும் இல்லை.

 

அந்த ஒரு வழக்கு அவனுக்கு தினம் தினம் தோல்வியையே கொடுக்கிறது. அதற்கும் பின் எத்தனையோ வழக்குகளை பார்த்துவிட்டான்.

 

பல குற்றவாளிகளுக்கு தண்டனையும் வாங்கி கொடுத்திருக்கிறான். ஆனால் இந்த ஒரு வழக்கு மட்டும் அவனால் முடிக்க முடியாமல் கிடைப்பிலேயே கிடந்து, அவனை நிம்மதியாக இருக்க விடவில்லை.

 

இந்த மாத இறுதியில் அந்த காலாவதியான மருந்து வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட இருக்க, அது தான் அவன் கடைசி ஆயுதம்.

 

மருந்து வழக்கில் அவர் மீது உறுதிப்படுத்தப்பட்டால், இருக்கும் ஆதரங்களை வைத்தாவது இதனை நீதிமன்றம் மூலம் வெளிக்கொண்டு வர வேண்டும் என்ற நம்பிக்கையோடு அவன் காத்திருக்கிறான்.

 

இதில் அவனுக்கும் மயலுக்கும் இதனைக் கொண்டு சண்டை வேறு.

 

அவள் என்னவென்று கேட்டதில் அனைத்தையும் சொல்லி இருந்தான். அன்று அவனைத் திட்டிவிட்டு பேசாமல் இருந்தவள் தான், இதோ இரண்டு மாதங்கள் கடந்தும் பேசவே இல்லை.

 

இவனும் பலவாறு முயற்சி செய்தும் அவளிடம் முடியாமல் போக, இவனும் இருக்கும் அழுத்தத்தில் விட்டு விட்டான்.

 

அவளும் இப்போது அவர்களது இரண்டு மாதக் கருவை சுமந்து கொண்டிருந்த நேரம் அது.

 

அன்று அலுவலகத்தில் வேலையாக இருந்தவனுக்கு அந்த தாதியின் அழைப்பு,

 

“சொல்லுங்க சிஸ்டர், உங்க மேடம் பேசமாட்டாங்க அப்படி தானே” என்றவன் “ஸ்கேன் ரிப்போர்ட் ஓகேதானே எந்த பிரச்சனையும் இல்லையே” என்று கேட்டான்.

 

“எந்தப் பிரச்னையும் இல்ல சார். குழந்தை ஆரோக்கியமா தான் இருக்கு, மேடம் தான் வீக்கா இருக்காங்க” என்று அங்கே மயல் மறுப்பது தெரிந்தும் அதனையும் சேர்த்தே சொன்னார்.

 

நேரடியாக கணவனிடம் பேசாமல் இந்த தாதியை வைத்தே குழந்தையின் விபரம் அவனுக்குத் தெரியப்படுத்திக் கொண்டிருக்கிறாள்.

 

அவளும் நேரடியாக சொல்ல அத்தனை ஆசை ஆனால் தான் பேசாமல் இருந்தாலாவது கணவன் யோசிப்பான் என்று அவள் இன்றுவரை மௌனத்தை தொடர்கிறாள்.

 

அவரிடம் மனைவியைப் பற்றி விசாரித்துவிட்டு வைத்தவனுக்கு, அவர்கள் வாழ்க்கையை ஆரம்பித்த அடுத்த இரண்டு வாரங்களின் பின் அவன் அலுவலகத்திற்கே அவனை தேடி வந்திருந்த மனைவியின் அன்றைய ஞாபகங்கள் தான் எழுந்தது.

 

 

 

அவனது அறைக்கே வந்தவள், முறைத்தபடியே நிற்க, “என்ன உன் அப்பா புராணம் பாட வந்திருக்கியா? சத்தியமா சண்டை போடுற மூட்ல நான் இல்லை, வீட்டுக்குப் போ” என்றான் எரிசலில்…

 

இந்த இரண்டு வாரமாய் எதனை பேசினாலும் மௌனம். அவனுக்கு வெறுத்தே போயிருந்தது அதிலும் அப்பா அப்படி இல்லை என்று அவனிடமே வாதிடுகிறாள். அந்த கோபம் தான் அவனுக்கு.

 

“என் அப்பா புராணம் பாட வரல, உங்க புராணத்தை பாட ஒராள் வந்திருக்குனு சொல்லிட்டு போக வந்தேன்” என்றாள் அவனைப் போலவே கோபக் குரலில்…

 

முதலில் புரியவே இல்லை அவனுக்கு ‘தன்னைப் பேச யார்’ என அவன் யோசனையில் இருக்க, அவளோ தலையிலடித்து கர்ப்பம் உறுதி செய்யும் சாதனத்தை அவன் முன்னே வைத்திருந்தாள்.

 

அதனைப் பார்த்த நொடி மூளையில் மின்னல் வெட்ட, எழுந்து அவள் அருகில் வந்தவன், அவளை அங்கே வைத்து அணைக்கவும் முடியாமல், அவள் சொன்ன விசயத்துக்கு தள்ளி நிற்கவும் முடியாமல் உள்ளங்கையை இறுக்கி உணர்வுகளை அடக்கிக்கொண்டான்.

 

“ஏன்டி இங்க வெச்சு சொல்லுற இத, பாரு உன்ன அணைச்சுக்கவும் முடியல, என் புள்ளையத் தொட்டு கூடப் பார்க்க முடியல” என்று தவித்துப் போய் சொன்ன குரலில் அவன் மேல் கணிவு வந்தாலும்,

 

‘உனக்கு உன் புள்ளனா, எனக்கும் என் அப்பா முக்கியம் தானே’ என்று வீம்பாய் நின்று கொண்டாள்.

 

“ப்ரொபோஸ் பண்ணது புரிஞ்சிக்க தெரியலன்னு கலாய்ச்சவங்களுக்கு, இத புரிஞ்சிக்க முடியலையாம்” என்றாள் யாருக்கோ சொல்வதைப் போல்…

 

அவனோ அவள் கேலியில் புன்னகைத்து “உன்ன ஒரு வாட்டி தொட்டதும் என் புள்ள தொபுக்கடீர்னு வரும்னு நான் என்ன கனவா கண்டேன்?” என்றவனுக்கு அத்தனை நாள் அழுத்தம் குறைவதைப் போலிருந்தது.

 

அவளோ அவன் பேச்சில் சட்டென அவன் வாய் மூடி இருந்தாள், கிடைத்த சந்தர்ப்பத்தை விடாமல் அவள் உள்ளங்கையில் முத்தம் பதித்தவன்,

 

“நீயே குழந்தை உனக்கொரு குழந்தை பாரேன். என்னை என்னடி நினைப்பாங்க இப்போ?” என்று கேட்டவன் புன்னகைக்க, அதில் அவன் வெட்கம் அத்தனை அழகாய் பிரதிபலித்திருந்தது.

 

அன்றிலிருந்து இன்று வரை இப்படித்தான் குழந்தையைப் பற்றி அவன் தெரிந்து கொள்கிறான்.

 

முதல் முறை அவளுடன் அவனும் தான் சென்றிருந்தான்.

 

பேசமாட்டாளே தவிர்த்து அவனுக்கான எல்லாம் அவள் தான் பார்த்துக்கொள்வாள். அவன் இப்போதெல்லாம் அதிகம் தேடுவது அவளது ‘ஜெய்’ அழைப்பைத் தான்.

 

_______________________

 

 

இதோ இன்று தான் பிரச்சன்னைக்கு ஆரம்ப புள்ளியான தீர்ப்பு நாள்.

 

முதலில் அரச தரப்பு வழக்கறிஞர் தான் ஆரம்பித்தார்.

 

“யுவர் ஹார்ணர், இந்த வழக்கோடு முக்கிய சாட்சி அந்த ஹாஸ்பிடல்ல வேலை செய்ற மிஸ்டர் மூர்த்தி. இது ராம்பிரசாத் மேல வெச்ச குற்றசாட்டுக்குத் தகுந்த ஆதாரமா முழுமையாக கருத்த முடியாம போனாலும், எந்த ஒரு ஹாஸ்பிடல்யும், மருந்து நோயாளிங்களுக்கு விநியோகம் செய்றப்போ அதுக்கு அந்த ஹாஸ்பிடல் டிரெக்டர் நிச்சயம் அனுமதி கொடுத்திருக்கணும். அதையும் இந்த இடத்துல ஆதாரமாய் கருதி குற்றவாளி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றவர் ராம்பிரசாத் கையொப்பம் இட்ட மருந்து அனுமதி அறிக்கையின் பிரதியை நீதிபதி முன்னே வைத்திருந்தார் அவர்.

 

எதிர்தரப்பு வழக்கறிஞரோ “அப்ஜெக்ஷன் யுவர் ஹார்னர்” என்க,

 

நீதிபதியோ “அப்ஜெக்ஷன் சஸ்டெயிண்ட்” என்றவர் எதிர்த்தரப்பு வழக்கறிஞருக்கு பேச வாய்ப்பளிக்க,

 

“தேக்ங்ஸ் யுவர் ஹார்னர், ஒரு ஹாஸ்பிடலோட டிரெக்டருக்கும் மருந்து கொடுக்கிற ஊழியருக்கும் இடையில எவ்வளோ பேர் வேலை செய்றாங்க, அப்படி இருக்கும்போது ஒரே ஒரு வாக்கு மூலத்தையும், அந்த லெட்டரையும் வைத்து என் கட்சிக்காரர இந்த இடத்தில் தவறுன்னு சித்தரிக்கிறத நான் வன்மையாக் கண்டிக்கிறேன் யுவர் ஹார்னர். அது அவருக்கே தெரியாம வாங்கப்பட்டதாக் கூட இருக்கலாமே!” என்றிருந்தார்.

 

இப்படி சிறுது நேரம் மாறி மாறி தொடர்ந்த வழக்கில் ராம்பிரசாத் மீது தவறு என்று நிரூபிக்க சற்று சிரமமாகித் தான் போனது.

 

அப்போது அரசு வழக்கறிஞரிடம் ஏற்கனவே தீரனால் சொல்லப் பட்டதிற்கிணங்க நீதிமன்றத்தில் அனுமதி வேண்டியவர், கடத்தல் குற்றம் மற்றும் நடந்த பின்னணியை பற்றியும் மொத்தமாக விளக்க, தீரனும் அழைத்து விசாரிக்கப்பட்டான்.

 

அது நீதிமன்றத்துக்கு புது தகவல் ஏனென்றால், இத்தனை குழந்தைகள் பாதிக்கப்பட்டு இருக்க நீதிமன்றத்தின் இன்று வரை பதிவு செய்யப்படவில்லை என்பது பெரிய விஷயமாக தான் தெரிந்தது.

 

அதிலும் குற்றவாளி இன்னும் கண்டுபிடிக்கப்படவே இல்லை என்றதும் அன்று பலரின் வாயில் அந்த விடயம் பேசப்பட்டே இருந்தது

 

குற்றவாளியையே கண்டுபிடிக்காத இடத்தில் யார் மீது வழக்கு பதிவு செய்வது???

 

தீரன் நீதிபதியிடம் அனைத்தையும் விரிவாக கூறியவன், ராம் பிரசாத் மீது அவனது சந்தேகத்தையும் அவரது மருத்துவமனையால் தான் இந்த குற்றம் நிகழ்த்தப்பட்டிருக்கக் கூடும் என்றும் அவன் சேகரித்த தகவல்களை அவரிடம் முன் வைத்திருந்தான்.

 

எத்தனை நேரம் அமைதியாக இருந்த எதிர்த்தரப்பு வழக்கறிஞர், ராம் பிரசாதையும் அங்கே முன்னே அமர்ந்திருந்த மயல் மொழியையும் ஒரு பார்வை பார்க்க, அவளோ இறுகிய முகத்துடன் சம்மதமாக தலையசைத்தாள்.

 

எழுந்த எதிர்த்தார்ப்பு வழக்கறிஞரோ நீதிபதியிடம் அனுமதி கோரி “யுவர் ஹார்னர், என் கட்சிக்காரர் ராம்பிரசாத் பல கஷ்டப்படுற மக்களுக்கு இலவசமா மருத்துவம் பார்க்குறாரு. இது இன்னைக்கு நேத்து நடக்குற விஷயம் இல்ல, ரொம்ப வருடங்களாக அவரோட சேவை தொடர்ந்துகிட்டு தான் இருக்கு, அப்படி இருக்குறபோ எதற்காக என் கட்சிக்காரர் குழந்தைகளைக் கடத்தனும் காலாதியான மருந்து கொடுக்கணும்?? இதுக்கு சாதாரணமா வாங்குற பணத்தை வாங்கிட்டே மருந்து கொடுத்திருக்கலாமே” என்றவர்,

 

“இங்கே மிஸ்டர் ஜெயதீரன் என் கட்சிக்காரர் மீது சாற்றப்பட்ட குற்றதுக்கான ஆதாரம், ஒன்னு மிரட்டல் வந்த போன் நம்பர் பெரும்பாலும் என் காட்சிக்காரர் பெயர்ல பதியப்பட்டிருக்கு எங்குறது, இதெல்லாம் ஆதாரமே இல்லனு சின்ன குழந்தை கூட சொல்லும், ஆனா இவ்வளவு படிச்சு இந்த காவல்துறையில உயர் பதவில இருக்குற மிஸ்டர் தீரனுக்கு தெரியலே” என்க,

 

“மிஸ்டர் சீனிவாசன் மைண்ட் யுவர் வேர்ட்ஸ்” என்று நீதிபதி சத்தம் போட்டார்.

 

“ஐ எம் சாரி யுவர் ஹார்னர்” என்ற எதிர்த்தரப்பு வழக்கறிஞ்சர் சீனிவாசன் மீண்டும் பேச ஆரம்பித்தார்.

 

“தப்பு பண்ணுறவன் தடயத்தை எப்படி மறைக்கணும்னு தான் யோசிப்பான். இப்படி அவர் பெயரையே ரெஜிஸ்டர் பண்ணி வாங்க வேண்டிய தேவை என்ன யுவர் ஹார்னர். இதுவும் யாரோ ஒருத்தர் என் காட்சிக்காரர் மீது பழிசுமத்த பண்ணது” என்றவர்,

 

“ரெண்டாவது ஆதாரம் அந்த முப்பதொரு குழந்தைகளும் கற்பக மருத்துவமனைக்கு தங்களோட நோயை ஃப்ரீயா, எப்படி ஃப்ரீயா காட்ட வந்தவங்க, சோ இது ஒன்றே என் கட்சிகாரர் மேல குற்றம் இல்ல என்கிறது சொல்லுதே யுவர் ஹார்னர்” என்று அந்த ஃபிரீயில் அழுத்தம் வைத்தே சொன்னார்.

 

மீண்டும் அவரே “ஆசிரமத்தில் இருக்கிற குழந்தைகள் எல்லாருமே கஷ்டப்பட்டவங்க. அப்படி இருக்கிறப்போ காசு கொடுத்து ஹாஸ்டலுக்கு போவாங்களா? இல்ல ஃப்ரீயா இருக்கிற ஹாஸ்பிடலுக்கு போவாங்களா?” என்று கேட்க, அரச வழங்கறிஞ்சரிடம் சொல்ல பதில்கள் இருக்கவில்லை…

 

மேலும் எதிர் தரப்பு வழக்கறிஞரே, “இந்த இடத்துல என் கட்சிக்காரர் மேல சுமத்தப்பட்ட குற்றம் ரெண்டுமே மிஸ்டர் ஜெயதீரனால விசாரிக்கப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டது. எனக்கு அவர் மேல நம்பிக்கை இல்லை, சோ அந்த மருந்து கொடுத்த ஊழியர் மூர்த்தியை நான் இன்னொரு முறை விசாரிக்க விரும்புறேன்” என்க, மூர்த்தி அழைக்கப்பட்டார்.

 

“மிஸ்டர் மூர்த்தி உங்ககிட்ட விசாரணை எல்லாம் எப்பவோ முடிஞ்சிடுச்சு, இத்தனை வருஷம் உங்களுக்கு சம்பளம் கொடுத்த உங்க முதலாளி மேல தப்பு சொல்லி இருக்கீங்களே சப்போஸ் என் கட்சிக்காரர் தப்பானவரா இருந்தா இவரால உங்களுக்கு ஆபத்து வரும்னு நீங்க ஏன் யோசிக்கல?” என்று கேட்க,

 

அரச தரப்பு வழக்கறிஞரோ “அப்ஜெக்ஷன் யுவர் ஹானர்.. சாட்சியை பயமுறுத்தும் விதமாக தொடர்கிறது எதிர்த்தரப்பு வக்கீலின் வாதம்” என்றார்.

 

எதிர் தரப்பு வழக்கறிஞரும் “இந்த கேள்வி வழக்குக்கு முக்கியம் என்று இப்போது தோன்றுவதால் கேட்கிறேன் யுவர் ஹானர்” என்றார்.

 

“அப்ஜெக்ஷன் ஓவர் ரூல்” என்று கூறிய நீதிபதி விசாரணையை தொடர சொல்லவும் மீண்டும் மூர்த்தியின் புறம் திரும்பியவர்,

 

“சொல்லுங்க மிஸ்டர் மூர்த்தி” என்க,

 

அவரோ “ஐயோ சார் எனக்கு எதுவுமே தெரியாது சார், ஏ.சி.பி சார் தான் ரொம்ப அடிச்சாரு, டாக்டர் தானே காரணம்னு கேட்டு கேட்டு அடிச்சாரு, அதான் அப்படி சொன்னா விட்டுட்டுவாருன்னு நான் அப்படி சொல்லிடேன்” என்று சொல்ல மொத்த நீதிமன்றமும் ஸ்தம்பிதிப் போனது.

 

நீதிபதியோ கண்டனத்துடன் தீரனைத் தான் பார்த்தார்.

 

“என்ன மிஸ்டர் தீரன், இதுதான் நீங்க விசாரிக்கிற விதமா?” என்று திட்டியதில் அவனால் எதுவும் சொல்லமுடியாமல் போனது.

 

அப்படி எதுவுமே நடக்கவில்லையே அப்படி இருக்கையில் இது எப்படி என்று அவன் யோசனையில், அவனை விலைக்கு வாங்கி இருப்பது புரிந்தது. அவன் அந்த சிந்தனையில் இருக்கையிலேயே மீண்டும் அவன் மீது பெரிய குற்றச்சாட்டே வைக்கப்பிட்டது.

 

“யுவர் ஹார்னர், இதோ நிக்கிறாரே மிஸ்டர் தீரன் இவருக்கு என் கட்சிக்காரர் மேல பகை. அதத் தீர்த்துக்க தான் இப்போ இத ஆயுதமா எடுத்திருக்காரு, என் கட்சிக்காரரோட பொண்ணு மிஸஸ் மயல்மொழி ஜெயதீரன். அவங்களோட சின்ன வயசுல அவங்கள ஏமாத்தி கல்யாணம் பண்ணி இருக்காரு, இப்போ அவங்க கர்ப்பமா இருக்குற நேரம் அவங்க வேணான்னு துரத்தி விட்டு இருக்காரு. இதைக் கேட்கப் போன என் கட்சிக்காரர் மேல கோவப்பட்டு தான், யார் குற்றவாளின்னு கண்டுபிடிக்க முடியாத இந்த வழக்க என் காட்சிக்காரர் மேல போடுறார் யுவர் ஹார்னர்” என்றவர் மயல்மொழியை அழைக்க,

 

அவளோ கூண்டில் ஏறி நிற்கையில் அவன் அங்கேயே உயிரோடு மறித்திருந்தான்.

 

எதிர்த்தரப்பு வழக்கறிஞர் சொன்ன அத்தனையும் உண்மை என்பது போல் அவள் சாட்சி இருக்க, நீதிபதி கோபத்தில் அவனுக்கு ஆறு மாதம் பணி நீக்கமும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் வழங்கியவர்,

 

சரியான முறையில் நிர்வாகத்தை கடைப்பிடிக்காத குற்றத்துக்கு ராம்பிராசத்துக்கு அபராதமும் வழங்கி, இந்த குழந்தைக் கடத்தல் வழக்கை மேலும் விசாரித்து குற்றவாளியை கண்டுபிடிக்க காவல் துறைக்கு கட்டளையும் இட்டிருந்தார்.

 

எல்லாம் முடிந்து வெளியே வந்த தீரனுடன் சித்தார்த் நின்றிருக்க,

 

மினிஸ்டர் ஒருவருடன் பேசியபடி அங்கே வந்த ராமோ “என்ன மிஸ்டர் தீரன் என்னை மாட்டி விட ரொம்ப முயற்சி செஞ்சீங்களே! இப்போ இப்படி அநியாயமா சஸ்பெண்ட் வேற ஆகிடீங்களே! என் பொண்ணு விஷயத்துல பண்ணதுக்கு நீங்க இன்னும் அனுபவிப்பீங்க“ என்றவர் பேசி முடிந்தது என்பது போலத் திரும்ப, அவரைச் சொடக்கிட்டு அழைத்தான் அவன்.

 

அவர் திரும்பி என்ன வென்று பார்க்க, “உங்க பொண்ணு வயித்துல என் குழந்தை வளருதே இனிஷியல் வேணுமா என்ன?” என்று நக்கல் குரலில் கேட்டதில் வெகுண்டவரை அந்த மினிஸ்டர் தான் பிரச்சனை வேண்டாமென அழைத்துச் சென்றிருந்தார்.

 

அவர் பின்னே மயல் மொழி தியாகராஜனுடன் பேசியபடி வந்தலும் அவள் பார்வை என்னவோ தீரனிடம் தான்.

 

அவளைப் பார்த்தவனது விழிகளில் வெறுமை.

 

அவனருகே வந்ததும் அவள் நடையை நிறுத்த, தியாகராஜனும் அவளைப் புரிந்து கொண்டு முன்னே நடந்தார்.

 

“ஜெய்…” என்றாள் அவள்.

 

மூன்று மாதங்களாக அவன் கேட்கத் துடிக்கும் அந்த அழைப்பு…

 

ஆனால் இன்று அது அவன் காதுகளை அடைந்திருந்தாலும் இதயத்தை தொடவில்லை.

 

முன்பு அவள் பேசாமல் வதைத்தால் என்றால் இப்போது அவன் பேசியே வதைக்க எண்ணினான் போலும்…

 

“என்ன மிஸ் மயழ்மொழி ராம்பிரசாத், பொய் சொல்ல உங்கப்பாகிட்ட தான் ட்ரெய்னிங் எடுத்துகிடீங்களா? எப்படி எப்படி உங்கள ஏமாத்தி வயித்துல புள்ளயக் கொடுத்துட்டு ஏமாத்தப் பார்க்குறேனா நான்?” என்று சாதாரணமாய் கேட்டவன்,

 

“யாரு யாரடி ஏமாத்துனா? ஒன்னு தெரிஞ்சுக்கோ எப்போ அந்த கூண்டுல ஏறி நின்னியோ அப்போவே என் மயிலு செத்துட்டா, அவளோட நானும் செத்துட்டேன். இப்போ இருக்குறது வெறும் கூடு தான்” என்க,

 

“ஜெய் நான் சொல்றத…” அவள் பேச வர,

 

“நிறுத்துடி, உன் பொய்ய கேட்க, இங்க நான் வெட்டியா இல்ல, அதான் நீங்க சொன்ன மாதிரி பொம்பள பொறுக்கி தானே நான். இன்னும் நிறைய பொண்ணுங்கள ஏமாத்துற வேலை பாக்கி இருக்கு வரட்டா” என்றவன் அதற்கு மேல் அவளைப் பார்க்க பிடிக்காதவனாய் சித்தார்த்தின் கையை உதறிவிட்டு அங்கிருந்து கிளம்பி இருந்தான்.

 

சித்தார்த் கோபமாக “ஏன் மொழி இப்படியொரு பைத்தியக்கார தனத்தை பண்ணுன, அவன் இதுக்காக எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கான்னு உனக்கு தெரியாதா? அவனைப் போய் உன்ன ஏமாத்திட்டான்னு சொல்லிட்டியே” என்று கோபமாய் கத்த,

 

“இதுவும் என் ஜெய்க்காக தான் சித்து. ஜெய்காக என் அப்பாவையே எதிர்த்து வந்தவ நான். இப்போ அவர் பக்கம் நிக்கிறேன்னா யோசிக்க வேண்டாமா?? அப்படி பண்றவரு இல்லடா அவரு, அவருக்கு சம்பந்தமே இல்லாத ஒரு விஷயத்தை அவர்மேல திணிச்சா என்ன பண்ணுவாரு?” என்றவள்,

 

“நேத்து என் கை பிடிச்சு ‘நான் அப்படியாடா மயல்ன்னு’ அவர் கேட்டு அழும்போது என்னால முடியல சித்து, இப்போ நான் இப்படி பேசப்போறேன் என்கிறதே அவருக்கு தெரியாது” என்றாள் கண்களை துடைத்தபடியே…

 

சித்தார்த்துக்கோ அவள் இப்படி கண்மூடித்தனமாக தந்தையை நம்புவதில் எரிச்சலே மேலோங்கி இருந்தது.

 

மீண்டும் மயலே “மார்னிங் தான் ஜெய் இதப்பத்தி பேசப்போறதே வக்கீல் அங்கிள்க்கு தெரிய வந்திச்சு, இப்போ மட்டும் இதுல அப்பாவை குற்றவாளி ஆக்குனா கேஸ் முடிஞ்சிடிச்சுனு அப்படியே விட்டுடுவாங்க, அப்பறம் உண்மையான குற்றவாளிய பிடிக்கிறவர அப்பா உள்ள தான் இருக்கணும்னு அங்கிள் சொல்லவும் வேற வழி இல்லாம இப்படி பண்ணிட்டேன் சித்து” என்றவள்

 

“நான் பாவி, நான் என் ஜெய்க்கு வேணாம். அவனுக்கு எவ்வளவு பெரிய காயத்தை கொடுத்திருக்கேன். எனக்கும் உறவுகள் என்னைக்கும் நிலைக்காது சித்து” என்று அழுதாள்.

 

அங்கே தீரனோ கோபமா பேசி விட்டு வந்தாலும் மொத்தமாய் உடைந்து போயிருந்தான். வாழ்க்கையில் பெரிய அடி அவனுக்கு…

 

அவன் நேரே சென்றது ஜோதியிடம் தான்.

 

அழுதான், அழுதான் மனதின் அழுத்தம் குறையும் வரை அழுதான்.

 

ஜோதிக்கும் அவன் சொல்வது எதுவுமே புரியாவிட்டாலும் நண்பனுக்கு துணையாய் தோள் கொடுத்து நின்றிருந்தான்.

 

 

இப்படியே நாட்கள் கடந்தது, ஐந்து மாதங்களின் பின் குழந்தை இணரும் அவனிடம் வந்திருந்தாள். அன்று தான் விடயம் குடும்பத்துக்குத் தெரிய வந்திருந்தது.

 

சக்திவேல் அத்தனை பேசனார். தீரனிடம் மௌனம் மட்டுமே! மகன் ஒரு பெண்ணை திருமண செய்து குழந்தையுடன் வந்து நின்ற கோலம் அவரைக் கொன்றது அதுவும் தங்களிடம் சொல்லாமல் செய்தது இன்னும் அதிர்ச்சி…

 

வல்லி அழுத அழுகை அவனைக் கொன்றது எனலாம், அவர் ஒருவரால் தானே அவன் சொல்லாமல் திருமணம் செய்ததும் கூட,

 

வீட்டில் சொன்னால் நிச்சயம் வேதவல்லி மறுப்பார் என்று அவனுக்குத் தெரியுமே!

 

அவர் மறுப்பது இல்லை அவன் பயம், அவனிடம் அவர் அழுது கேட்டால், அவனால் அதனை மீற முடியாமல் போய் விடுமே! என்ற பயம்.

 

அதில் அவன் வாழ்க்கை மட்டுமல்ல, அவன் குழந்தையாய் பார்க்கும் மலர்விழியின் வாழ்க்கையும் இருக்கிறதே! இவை தான் அவனை வீட்டுக்கு சொல்லாமல் திருமணம் செய்ய தூண்டி இருந்தது.

 

ஆனால் இன்று விளக்கங்கள் சொல்ல முடியாது ஊமையாகிப் போனான்.

 

வாழ்வில் ஜெயித்திருந்தால் தைரியமாய் சொல்லி இருப்பான். அவனோ மொத்தமாய் தோல்வியின் சின்னமாகவல்லவா வந்திருந்தான்.

 

வாழ்க்கை ஒத்துவரவில்லை பிரிந்து விட்டோம் என்று மட்டுமே அவன் சொல்லி இருக்க, எங்கே மகன் வாழ்வு இப்படியே போய் விடுமோ என்ற பயம் சக்திவேலினை சூழ்ந்தது.

 

நிச்சயம் மகன் அவள் மகளைப் பிடித்திருந்த தோற்றமே இனி அவன் வாழ்வு அவளுடன் தான் என்பதை சொல்லாமல் சொல்ல, மகனைப் பற்றி சர்வமும் அறிந்து வைத்திருக்கும் அவர். மனதைக் கல்லாக்கிக் கொண்டு அந்த முடிவை எடுத்திருந்தார்.

 

காதலித்து திருமணம் செய்தால் அந்த வாழ்க்கையை காப்பாற்றிக்கொள்ள வேண்டியது அவன் கடமை. அதனாலேயே அந்த முடியும் கூட..

 

ஆம், அவன் மனைவியுடன் வந்தால் மட்டுமே வீட்டில் அனுமதி என்றிருந்தார்.

 

குழந்தை முகத்தைக் கூட அவர் பார்க்கவில்லை. கூடவே வேலையில் அவன் பட்ட அவமானத்தை துடைத்தெரிந்த பின்னரே அவர் மகனா அவரிடம் பேச வேண்டும் என்றும் அவர் சொல்லி இருக்க, அவனிடம் விரக்திப் புன்னகை தான்.

 

அவரது மகனைப் பற்றி அவரன்றி யாரறிய, அவனால் இதனை அப்படியே விட முடியாது என்றும் அவர் அறிவாறே!

 

அவனோ தந்தைக்கு மேல் தான் உங்கள் மகன் என்பது போல, இன்று வரை வீராப்பாய் இருக்கின்றான்.

 

அன்று கைக் குழந்தையுடன் அவன் சொந்த செலவில் கட்டிய தோட்டத்து வீட்டுக்குச் சென்றவன் தான் இன்று வரை அது தான் அவன் கூடு…

 

அன்று அழும் குழந்தையின் அழுகையை நிறுத்த முடியாது தவித்தவனுக்கு எப்போதும் போல் தோள் கொடுத்து ஜோதி தான்.

 

“ஏன்டா டேய் புள்ள அழுவுது பார்த்துட்டு இருக்க” என்றவன் தேன்மொழியிடம் குழந்தையைக் கொடுத்து பசியாற்ற சொல்ல, தீரன் கதறியே விட்டான்.

 

“இப்போ எதுக்கு ஒப்பாரி வைக்கிற நீ பரணி உன் பையன் தானே! அப்போ இந்தக் குட்டி என் பொண்ணு இல்லையா?? சேர்ந்து வளர்ப்போம் தீரா, நான் இருக்கேன் உனக்கு” என்றிருந்தான்.

 

சொன்னது போல் இன்று வரை அவனுடன் அவன் இருக்கிறான் தானே!

 

ஆறுமாதம் கழித்து மீண்டும் வேலைக்கு சேர விருப்பம் இல்லை என தனது ராஜனாமா கடிதத்தை வரதராஜனிடம் கொடுக்க, அவரோ, அவனை அவர் ஊரிலே வேலையில் இருக்க வைக்க, பேசி சம்மதிக்க வைத்திருந்தார்.

 

சில நாட்களின் பின் அந்த இரு வழக்குகளிலும், அந்த மருத்துவமனையில் வேலை செய்த வேறொரு மருத்துவர் சிவபிரகாசம் பிடிப்பட்டிருப்பதாகவும், அவர் குழந்தைகளைக் கொன்று விட்டதாகவும் தகவல் இவனுக்கு வந்திருந்தது.

 

அதனை நம்ப அவன் மனம் தயாராக இல்லை. அது ராம் பிரசாத் வேலை என்பது அவனுக்குப் புரிந்தது. அவனது ரகசியத் தேடலை விடாமல் தொடர்ந்து கொண்டே தான் இருந்தான்.

 

 

விடயம் தெரிந்து ராம் பிரசாத் மயலை அத்தனை கத்திக் கொண்டிருந்தார். அவருக்கு அவள் சொன்னது பொய் என்பதே! காலம் கடந்தே தெரிந்தது.

 

உண்மையில் மகளை ஏமாற்றி விட்டானோ என்று தான் அவர் எண்ணி இருந்தார்.

 

அவளது வாழ்க்கையை அவருக்காக அழித்தது அவரை இன்னும் நோகடித்தது.

 

அவளுக்குத் தெரிந்தது தானே தந்தை எப்படியும் இதற்கு சம்மதிக்க போவதில்லை என்று அதனாலேயே அவருக்குத் தெரியாமல் வழக்கறிஞர் சொல்வதை கேட்டிருந்தாள்.

 

குழந்தை பிறந்து ஒரு மாதம் கடந்திருந்த நிலையில் சித்தார்த்துக்கு அபியின் விஷயம் தெரிய வர, அவனிடமும் சொல்லவே கூடாது என்று சத்தியமும் வாங்கிக் கொண்டாள் பிடிவாதமாய்…

 

இப்படியே குழந்தை அபிக்கு ஒரு வயதாகி நெருங்கிக் கொண்டிருக்க, அதற்கு மேல் அவளால் அங்கிருக்க முடியவில்லை.

 

அவளது மருத்துவ படிப்பை இங்கு தொடரவும் அவளுக்கு எண்ணம் இல்லை. முன்பு முடிவு எடுத்தது போல அமெரிக்காவுக்கே சென்று விட்டாள்.

 

அடுத்த மாதமே தீரன் அவளை தேடிச் சென்றிருக்க, தியாகராஜன் மூலம் அவள் மனநிலை அறிந்து திரும்பி நாட்டுக்கே வந்திருந்தான்.

 

அவளோ அன்று சென்றவள் தான் இப்போது மீண்டும் வந்திருப்பது இதோ இந்த நீண்ட நெடிய ஐந்து வருஷங்களின் பின்னரே!

 

 

 

 

________________

 

 

பழைய நினைவுகளில் மூழ்கி இருந்தவள் அப்படியே தூங்கியும் இருக்க, காலையில் எழவே தாமதமாகி இருந்தது. அன்று அவளுக்கு மதியத்துக்கு மேல் தான் வேலைக்குச் செல்ல வேண்டி இருந்ததில் மெல்ல எழுந்து வெளியே வர, அபி தயாராகி மீனாவுடன் நின்றிருந்தான்.

 

“அபி சாரி கண்ணா, அம்மா தூங்கிட்டேன்” என்றவள் மீனாவிடமும் மன்னிப்புக் கேட்க, அவளோ இவளை முறைத்தாள்.

 

அதில் அவள் சிரிப்புடன் சமாதானமாகி விட இவள் காலை உணவை சமைத்துக் கொடுத்து அவர்களை வழியானுப்பி வைக்க, அபியும் மீனாவும் அரவிந்துடன் கிளம்பி இருந்தனர்.

 

அதன் பின் அவளும் மதியம் போல் தயாராகி மருத்துவமனை வந்திருந்தாள்.

 

வந்ததும் அவள் அருகில் வந்த தாதியோ “டாக்டர், ஒரு பொண்ணு மயங்கி விழுந்துட்டான்னு கொண்டு வந்திருக்காங்க, டூட்டி டாக்டர் வரல இன்னும்” என்க, நேரத்தைப் பார்த்தாள்.

 

ஸ்டெத்தை கழுத்தில் மாட்டியபடி அவருடன் நடந்தவள் “ஹாஃப் என் ஹவர் லேட்டாகிடிச்சே! என்னனு இன்போர்ம் பண்ணி இருக்காங்களா?” என்று கேட்க,

 

“ஆமா டாக்டர், அவங்க ஹஸ்பண்ட் வெளியூர் போறதால, கொஞ்சம் லேட்டாகும்னு டாக்டர் ரேவதிகிட்ட பார்க்க சொல்லி இருந்தாங்க, பட் அவங்களுக்கு இப்போ தான் எமர்ஜென்சி கால் வந்திச்சினு கிளம்பிட்டாங்க” என்று சொல்லி முடிக்கவும், அந்த அறைக்கு வரவும் சரியாய் இருந்தது,

 

அங்கே படுத்திருந்த மீனாவைப் பார்த்தவளோ அவள் அருகில் விரைந்தாள்.

 

“என்னாச்சு மீனா?” என்று அவளைப் பரிசோதித்தபடியே சைகையில் கேட்க,

 

அவளும் “கே.ஜில குழந்தைகளோட இருக்கும் போது மயக்கம் வந்துடிச்சு டாக்டர்” என்று அவளும் சைகையில் சொல்லி இருந்தாள்.

 

அவளை பரிசோதித்த மயலோ புன்னகையுடன் “லாஸ்ட்டா டேட் எப்போ வந்திச்சு மீனா?” என்று சையில் கேட்க, விரிந்து கொண்ட மீனாவின் கண்கள் தன்னால் கண்ணீரை உற்பத்தி செய்திருந்தது.

 

அழுகையுடனே அவள் திகதியைச் சொல்ல, “அப்போ எப்படியும் பைஃவ் வீக்ஸ் கம்ப்ளீட்டாகி இருக்கும். இப்போ சிரிக்க வேண்டிய நேரம் யாராச்சும் அழுவாங்களா?” என்று அவளது கண்ணீரை துடைத்து விட புன்னகையில் மலர்ந்த அவள் முகம் அடுத்த நொடி வாடிப் போயிருந்தது.

 

“அடிவாங்கப் போற நீ, எல்லா நேரமும் அப்படியே தான் நடக்குமா??? பொசிட்டிவா திங் பண்ணனும். நம்ம குட்டி ஹீரோவோ, ஹீரோயினோ அவங்கள நாம வெல்கம் பண்ணணும்ல, இப்போவே ஒரு ஸ்கேன் பண்ணிப் பார்த்துடலாம்” என்றவள், வெளியே வர அரவிந்த் அவளைக் கடந்து சென்று கொண்டிருந்தான்.

 

“அரவிந்த்” என்று அழைத்தவள், அவன் திரும்பியதும் “என்னாச்சு இங்க எங்க?” என்றாள் வேண்டும் என்றே…

 

“டாக்டர், மீனா இங்க இருக்கானு கால் வந்திச்சு” என்று பதட்டத்துடன் சொன்னவன் முன்னேற,

 

“ஹலோ அரவிந்த், உங்க பொண்டாடியும் புள்ளையும் இங்க வைட்டிங்” என்றாள் புன்னகை முகமாக, அவளையே அதிர்ச்சியும் சந்தோஷமுமாய்ப் பார்த்தவன் அடுத்த நிமிடம் மனைவியை நெருங்கி இருந்தான்.

 

அவர்களுக்கு தனிமை கொடுத்து வெளியேறியவள், சிறிது நேரத்தில் ஸ்கேன் முடித்து, “உங்க பேபி ரொம்ப ஹெல்தியா இருக்காங்க, முக்கியமா அம்மாவோட கர்ப்பப்பைல தான் இருக்காங்க” என்றாள் அவர்களின் பயம் என்னவென்று புரிந்து.

 

அதன்பின் மீனாவுக்கு தேவையான மருந்தை எழுதிக் கொடுத்தவள், “மீனா கொஞ்சம் வீக்கா இருகாங்க அரவிந்த், பட் ரொம்ப பெரிய இஸ்சு இல்லை. ட்ராவெல்லிங் கொஞ்சம் அவோய்ட் பன்றது நல்லது. உங்களுக்கு உங்க கோதை மேம்கிட்ட பார்க்கணும்னா கொஞ்சம் வெயிட் பண்ணுங்க நாளைக்கே வந்துடுவாங்க” என்க, அவர்களிடம் புன்னகை.

 

அவளுக்குத் தெரியும் அவர்களுக்கு கோதை எவ்வளவு முக்கியம் என்பது. தாயாய் அவர் மீது சில மனக்கசப்பு இருந்தாலும் ஒரு மருத்துவராய் என்றும் அவரை மதிப்பவள் தானே!

 

“வீட்டுக்குப் போய் ரெஸ்ட் எடு மீனா, அந்த அபி பையன் கூட விளையாடாம சமத்தா இருக்கணும், இனி அவன் என்ன பண்றான்னு நானும் பார்க்க தானே போறேன்” என்றவனுக்கு மகன் நினைவில் புன்னகை எழுந்தது.

 

மேலும் அவர்களுடன் சிறிது பேசி அனுப்பி வைத்தவளின் ரணத்தையும் அந்தப் பிஞ்சின் வருகை சற்று தனித்திருந்தது.

 

 

 

ஈர்க்கும்…

 

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்