Loading

அத்தியாயம் ஏழு

AA company of pesticides : 

உச்சக் கட்ட கோபத்தில் இருந்தவனோ தன் பிஏ விடம் கத்திக் கொண்டு இருந்தான்.

” சித் கேட்ட எந்த மெசின் பொருட்களும் அவனுக்கு கிடைக்க கூடாது , அவன் என்ன என்ன செய்ய நினைக்குறானோ அதை எல்லாம் கிடைக்க விடாம பண்ணு ” என்று ஒரு முதலாளியாய் கத்த , பாவம் அவனுக்கு உண்மை பதிலை கூற முடியாமல் தினறிக் கொண்டு இருந்தான் அவனின் பிஏ.

” என்ன புரிஞ்சதா ” என்று மீண்டும் கத்த , எல்லா திசைகளிலும் மண்டையை ஆட்டி ஓடி விட்டான் அவன் . இந்த மண்டை கனம் பிடித்த எம்.டி யிடம் பின்பு யார் பேச்சு வாங்குவது என்ற பயமே தான் காரணம் . அனைத்திலும் முதன்மையாக இருக்க நினைப்பவன் ஆனந்த் .

சித் வீடு :

    சித்தார்த் அருகில் வந்து அமர்ந்த சந்துரு .

” என்ன மச்சான் மகி ரொம்ப கோவமா போற மாறி தெரியுது “

” மாறிலாம் இல்ல கோபமா தான் இருக்கா ” என்று கொஞ்சமும் வருத்தப் படாமல்  மகியை யாரோ போல் சித் கூற , சந்துருவிற்கு தான் எங்கேயாவது போய் முட்டிக் கொள்ளலாம் என்று இருந்தது.  எப்போது தான் நிதர்சனத்தை உணர்ந்து அதை ஏற்றுக் கொள்ள போகிறானோ என்றிருந்தது .

” ஏன் டா ” என சந்துரு கேட்டதும் சித் அங்கு மகி வீட்டில்  நடந்தது  அனைத்தையும் கூறினான் .

” மச்சான் நான் தெரியாம தான் கேட்குறேன்  மகிக்கும் இந்த கல்யாணம் திடீர்னு தான் நடந்துச்சு  , அதுக்காக அவ உன் அப்பா ,  அம்மா கிட்ட எரிஞ்சு விழுந்தாளா இல்ல  மரியாதை இல்லாம பேசுனாளா…  அன்போடு தானே நடந்துக்கிறா ஆனால், நீ மட்டும் ஏன் இப்படி பண்ற டா . மகியோட அப்பா , அம்மாவும் அவங்க ஒரு  மகள இழந்திட்டு  இன்னொரு மகள உங்க குடும்பம் கௌரவம் குறைய கூடாதுனு மகியையும் உனக்கு கல்யாணம் பண்ணி இப்போ இரண்டு மகள்களும் இல்லாம  தான் இருக்காங்க . அவங்க கிட்ட நீ   அப்படி நடந்துக்கிட்டது  சரி இல்லை மச்சான்   “என்று ஒரு நண்பனாக கூற , சித்தார்த்தும் சற்று யோசித்தான்

” ம்ச்ச் எனக்கு புரியாமல் இல்லை டா எனக்கு  நல்லாவே புரியுது டா , ஆனா என் நிலைமையில்  இருந்து யோசித்து  பாருடா . அமிழ் தான் என் உலகம்னு மனசுல பதிஞ்சிருச்சு அவ காதல் அப்படி இருந்தும்  ” என தன் கன்னத்தை தொட நினைத்த கண்ணீரை விழிகளிலே துடைத்து கொண்டான் .

” எனக்கு மனைவினு மகி  இருக்குறத பார்த்தாலே அமிழ் தான் நியாபகம் வரா நா என்ன பண்ண சொல்லு , அவ கூட இந்த கல்யாணம் முன்னாடி எப்படி பேசுவேனு உனக்கு தெரியும் தானே என்னால முடியல டா  இங்க ரொம்ப வலிக்குது  ” என்றான்  தேய்ந்த குரலில் தன் இதயத்தை காட்டிய வாரே  . அவனும் காதலை இழந்து விட்டான் என புரிந்தது  இருந்தாலும்,  ஒரே நாளில் எல்லாவற்றையும்  மறந்து விடு என்று கூறினால் எவ்வாறு முடியும்…  காதல் காதல் தானே !! .  உருகி உருகி பேசி கொஞ்சி காதலிக்கவில்லை என்றாலும் அவனை மனதால் தாக்கியது அமிழின் கண்மூடி தனமான காதல்  மட்டுமே !!.  எனவே, தான் சித் இப்படி மாறிவிட்டான்  போலும்.  சந்துருவினால் இப்போது எதுவும் பேச முடியவில்லை , தன் நண்பன் நிலை புரிகிறது அதற்காக மற்றவர்களை தண்டிப்பது சரி ஆகாதே ! அதை கூறினால் புரிந்து கொள்ளும் மன நிலையிலும் சித் இல்லை , காதல் அவன் மனதை உடைத்து கொஞ்சம் கொஞ்சமாக மிருகமாய் மாற்ற ஆரம்பித்திருந்தது . அதை முளையிலே கிள்ளி எரிய தான் சந்துரு ஆழ்ந்த யோசிப்போடு இருந்தான் .

” சரி டா இனி  இப்படி எல்லாரிடமும் நடந்துக்காம  இருக்க  டிரை பன்றேன்  “

” ம்ம்ம் சரி மச்சான் அவள போய் பாரு  “

” அது இருக்கட்டும்  டா  உன்ன ஆபிஸ் பாத்துக்க சொன்னா நீ ஆபிஸ்ல இருக்காம இங்க எதுக்கு வந்த “என முறைப்புடன் கேட்க

” அது ராதா அம்மா சிக்கன் பிரியாணி பண்றேன் மதியம் சாப்பிட வாடான்னு ரொம்ப கம்பல் பண்ணி  கூப்டாங்க அதான் டா… ஈஈஈஈ ” என்று மொத்த பல்லையும் காட்ட,  சித் தான் தலையில் அடித்துக் கொண்டான் தெரியாதா யார் கூப்பிட்டு இருப்பார் என்று. சிக்கன் பிரியாணி வாசனை வந்தாலே பறந்து வந்திடும் ரகமே சந்துரு .

யோசனையுடனே  தன் அறைக்கு சென்றா சித் உலகில் இருந்த அனைத்து சோகத்திற்கும் சொந்த காரி போல் 

மகி முகத்தில் கோபம் போய் சோகம் வந்து அமர்ந்து இருந்தாள் . பாவம் அவளும் என்ன தான் செய்வாள் எத்தனை முறை தன் மனதை கடிணப்பட்டு  சரி செய்ய  அதை  ஒரே வார்த்தையில் பழைய நிலைக்கே கொண்டு சென்று விடுகிறான்.   தன்  கண்ணாவின் காதலையும் தனக்குள்  புதைத்து விட்டாள்,  சரி சித்  தன்னிடம் செய்யும் ரகலைகளை பொறுத்துக் கொண்டாள் , தன்னை சார்ந்தவர்களிடமும் பாரா முகம் காட்டுவது அவர்களை கஷ்டப்படுவது போல்  பேசி நோகடிக்கிறான் என்று புரியாமல்  தலையில் கைவைத்து அமர்ந்திருந்தாள் . அதை பார்த்தவனுக்கு தான் மனது கஷ்டமாக இருந்தது .  ஏன் என்று உணராத வலி  அவன் மனதை துளைக்க இருந்தாலும் அதை ஓரம் தள்ளியவன் தன்னையும் மாற்ற முடியாது அவளையும் துன்புறுத்த  விரும்பவில்லை எனவே ஒரு முடிவு வந்தவனாக மகி அருகில் சென்று நின்றான் . அருகில்  சித் வந்து நின்றதும் நிழலாடியது தெரிந்தது இருந்தும் நிமிர்ந்து பார்க்க விரும்பாமல் குனிந்தே இருந்தாள் . 

” மகிமா ” என்றதும் தான் தாமதம் அவளை கேட்காமலே மகியின் தலை அவளவனை  சட்டென்று ஏறிட்டு நிமிர்ந்து பார்த்தாள் எத்தனை நாட்கள் ஆகிவிட்டது  சித் மட்டுமே இவ்வாறு அழைப்பான்  கடந்த சில நாட்களாக இல்லை அதுவும் இந்த இரண்டு நாளும் யாரென்றே  தெரியாத அளவு நடத்தினான்  இப்போது அவளை அப்படி கூப்பிடவும் கண்களில் அவளை அறியாமல் கண்ணீர் வந்தது.  அந்த கண்ணீர் காரணம் மகி மட்டுமே அறிவாள்  அதை துடைத்துக் கொண்டு மகி அமைதியாக இருக்கவே சித்தே தொடர்ந்தான்

” மகிமா சாரி டா நா ஏதோ ஒரு  கோபத்துல அப்படி பேசிட்டேன்  அங்கிள் , ஆண்டி கிட்ட நா சாரி கேட்குறேன் . என்னைய நீயும் புரிஞ்சுக்க டா ரொம்ப உடைஞ்சு போய் இருக்கேன் முடியல   “என்று அவன் பேச , மகி எதுவும் பேசுவது போல் தெரியவில்லை .

” அதான் சாரி சொல்லுறேன்ல இனிமே இப்படி நடக்க மாட்டேன் ” என்றதும்
” ம்ம்ம்ம் ”  என்றாள் .

” மகிமா நா ஒரு முடிவுக்கு வந்துருக்கேன் “

அதற்கும் ” ம்ம் ”  மட்டுமே பதிலாக வந்தது . ஒரு முடிவுக்கு வந்தவனாய் கூறிவிட்டான் .

 

” அது என்னால உன் கூட சேர்ந்து வாழ்வும் முடியாது அமிழ் அ மறக்கவும் முடியாது சோ “

” சோ ” என்றவள் ஒற்றை புருவத்தை உயர்த்தி என்ன வென்று பார்க்க , சித் என்ன கூற போகிறான் என்பதை கனித்து விட்டாள்  மகி

” அதான் எனக்கு நீ டிவோர்ஸ் குடுத்திடு  யாருக்கும் எந்த பிரச்சனையும் வராது நீயும் கஷ்டப்படாமல் இருக்கலாம் , நானும் நானா இருப்பேன்   “

அவள் அதிர்ச்சி எல்லாம் ஆகாமல் ” முடியாது ” என்றாள்  ஒரே வார்த்தையில்

” ம்ச்ச் மகிமா புரிச்சுக்கோ இதுதான் தீர்வு “

” முடியாது… முடியாது  முடியாது… நான் டிவோர்ஸ்  தர மாட்டேன் “

” ஏய் பொறுமைய சோதிக்காத டி ” என்றான் சற்று சத்தமாகவே கத்த  .

சித்  ‘ டி ‘ என்று உரிமையுடன்  பேசுவது மகியின் மனதிற்கே  இனித்தாலும் , என்ன நிலைமையில் பேசுகிறான் என்று நினைக்க கடுப்பாக இருந்தது .

” ஓ டிவோர்ஸ் தானே வேனும் ” என்கவும் ஆர்வமாக சித் தலையை ஆட்டினான் , அடுத்து வைத்தாளே செக் மேட்

” சரி சித்  அத்தை ,  மாமா முன்னாடி கேளுங்க நா  டிவோர்ஸ் தரேன் “

”  ஏய்… அவங்க முன்னாடிலாம்  கேட்க முடியாது  எனக்கு டிவோர்ஸ் குடுத்திரு “

” அப்போ என்னாலையும் குடுக்க முடியாது ” அவள்‌ அதையே முடிவாக கூற அங்கிருந்த  சில பொருட்களை போட்டு உடைத்தான் .

” இதெல்லாம் உடைச்சா தந்துருவேனா “

” ஷட் அப் ” என்று கத்தினான் . பயந்தது போல வாயில் விரலை வைத்துக் கொள்ளவும்  சித்திற்கு மேலும் கடுப்பேறியது, தன் சிகையை கோதி கோபத்தை சற்று குறைத்துக் கொண்டான் .  இரண்டு மூண்று பெருமூச்சுக்களை இழுத்து விட்டவன் அவள் அருகில் வந்து அமர்ந்து  பொறுமையாக

” மகிமா  சொல்லுறத கேலு டா “

” சித் நீ இப்படி அமைதியா பேசுறனால டிவோர்ஸ் தருவேனு நினைக்காத “

” ச்சீ… உன்டலாம் மனிசன் பேசுவானா “

” அதான் நீ பேசுறியே ” என்று மகியும் பதிலுக்கு நிக்க , அவன் தான் கடுப்பாகி‌ மீண்டும் கீழே சென்று விட்டான் .

” அம்மா சும்மா சொல்ல கூடாது  பிரியாணி நா ஒங்க பிரியாணி தான் என்னா டேஸ்ட் ” என்று சப்புக் கொட்டி உண்ணும் நண்பனை பார்த்ததும் மேலும் கடுப்பேறியது .

” டேய் மச்சான் வா டா… வா டா  , வந்து சாப்பிடு டா சிக்கன் பிரியாணி சும்மா  அள்ளுது போ ” என்று நேரம் காலம் புரியாமல்  காய்ந்த எண்ணெயில் கடுகை அள்ளிக் கொட்டி சந்துரு வேறு பேச , சித்திற்கு தான் எங்கேயாவது  ஒரு ரூமில் அடைத்து வைத்து சந்துருவை போட்டு குத்தி எடுக்கலாம் என்று இருந்தது .  அமைதியாக வந்தவன் ஹாலில் இருந்த சோஃபா வந்து அமர்ந்தான் .

” ஐயோ என்னா டேஸ்ட்  ராதா அம்மா செம்ம போங்க ” என்று மீண்டும் கூற

” டேய் இப்போ அமைதியா சாப்பிடல கொன்னுடுவேன் “என்று கத்தி விட்டான் .

” இவனுக்கு என்னாச்சு போகும் போது நல்லா தானே போனான்?  ரொம்ப சூடா இருக்கான் போலையே சரி அமைதியா சாப்பிடுவோம்  ” என்று சந்துரு மனதினுள் நினைத்துக் கொண்டான் , மனதில் மட்டுமே எங்கே, அவன் வாய் கேட்டது மறுபடியும்

” அம்மா பிரியானி நா உங்க … ” என்று முழுதாக கூறும் முன்னே  சித் எழுந்து வந்து அவன் தலையில் நலங்கு வைத்து விட்டான் .

” அம்ம்மாமா… ஏன்டா இப்படி  என்ன கொள்ள எவ்வளவு நாள் பிளான் டா ” என்றான் சந்துரு தன் தலையை தேய்த்தவேறே .

” இத்தனை நாள் பிளான் இல்லை  ப்போ மட்டும் நீ அமைதியா சாப்பிடல  இப்ப பிளான் போட வேண்டி வரும் ” என்றவுடன் வாயில் விரல் வைத்துக் கொண்டான் . அடுப்பறையில் இருந்து வந்த ராதாவோ

” சந்துரு நீ இஷ்டம் போல சாப்பிடு பா சில பேர் அடுத்தவங்களை கஷ்டப்படுத்திட்டே தான்  இருப்பாங்க ” என்று ராதா கூற , சித்திற்கு தான் ஏதோ போல் ஆகிவிட்டது . ராதா  அருகில் வந்து அமர்ந்தவன் அவர் கையை குத்தகைக்கு எடுத்தக் கொண்டு

” அம்மா சாரி மா நா அன்னைக்கு ஏதோ தெரியாம பேசிட்டேன்  ” என்று‌ உன்மையில் வருந்தி கூறுவது அவன் கண்களில் தெரிந்தாலும்   , ராதா எதுவும் பேசவில்லை .

” அம்மா அம்மா அம்ம்மா பிலீஸ் மா சாரி என்கிட்ட பேசு மா நீ பேசாமல் இருந்த எனக்கு கஷ்டமா இருக்கு ” என்று அவர் முகத்தை கொஞ்சிக் கொண்டு கூற அவரும் சற்று இளகி சிரித்து விட்டார் . சித்திற்கு சற்று பரவாயில்ல என்றிருந்தது .

இப்படி  தாயும் மகனும் கொஞ்சிப் பேசிக்கொண்டு இருக்கும் போதே மகி மேல் அறையிலிருந்து  படியில் வேக வேகமாக  பதறி இறங்கி  வந்தாள்,  இல்லை இல்லை  ஓடி வந்தாள் .

பிரியாமல் தொடரும் 😍💋…..

உங்களின் புல்லட் வெடி 🎉

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
24
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    10 Comments

    1. Janu Croos

      இவ எதுக்கு இப்படி ஓடி வாராள்….ஒரு வேளை இவன் டிவோர்ஸ் கேட்டத போட்டுக்குடுக்க போறாளா என்ன? சித்தார்த் டேய்….அவள் ஏன்டா உனக்கு டிவோர்ஸ் தரனும்…உனக்கு இஷ்ட்டம் இல்லனா தைரியாமான ஆளா நீ இருந்தனா உங்கப்பா அம்மா முன்னாடி அவள் கிட்ட டிவோர்ஸ் கேளு! முடியாதுல…ஊருக்கு நீ நல்லவனா இருக்கனும் அவள் பேர நாசமா போகனுமா….ஒழுங்கு மரியாதையா அவளோட வாழுற வழியப்பாருடா என் சிப்ஸு….

    2. Serious ah start aana story comedy ah potherr 🤣🤣🤣🤣🤣

    3. Archana

      ஆமா எதுக்கு இந்த ஹீரோ எல்லாருக்கும் பிடிக்காத பொண்ண பார்த்து கல்யாணம் பண்ணி வெக்குறாங்க🤔🤔 எதுக்கு அந்த மங்குனி ஹீரோ அம்மா மிரட்டினாங்க, ஆட்டு குட்டி சூசைட் பண்ண பார்த்துச்சுன்னு கல்யாணம் பண்ணி ஹீரோயினே டார்ச்சர் பண்ணுறான்😐 இதுக்கு அவன் கல்யாணம் வேண்டான்னு முன்னாடியே சொல்லிட்டு கைலாசுக்கு ஒரு விசா எடுத்து பறந்திருக்கலாம் 😏😏😏.

      நல்லவேலை ஹீரோயின் அழுகாச்சியா இல்ல🤣🤣🤣 எங்க ஹீரோயினே கெத்தா காமிக்குற ரைட்டர் வாழ்க😁😁😁😁😁.

    4. நண்பர்களின் குறும்பு அட்டகாசம். நட்பின் பிணைப்பை வெகு ஆழமாகவும் அதே நேரம் மனதை வருடும் படியும் அமைத்துள்ளார் எழுத்தாளர். வேற லெவல்