Loading

 

அத்தியாயம் 29

 

” என் பொண்டாட்டி நீ

பொண்டாட்டி நீ தான் டி

செல்ல குட்டி செல்ல குட்டி தான் டி

எம் மனசில் உம் மனச இப்போ சோடி சேக்குறியே ”

 

என்ற சத்தத்தில் வேகமாக ஓடி வந்து போனை எடுத்தான் தேவ்.

 

தேவ்வை பார்த்து நக்கலாக சிரித்துக் கொண்டே அந்த அறையை விட்டு வெளியே போனான் கோகுல் .

 

முதல் முறையாக தேவ்வின் முகத்தில் வெட்கம் . போனை ஆன் செய்தவன் , ” ஹலோ. ”  என்றான் .

 

தீப்ஷீயிடம் பதிலில்லை .

 

” தீப்ஷீ. ” என்ற குரலில் பதட்டமும் பயமும் தெரிந்தது .

 

” ஹலோ உங்க கிட்ட எதுவும் சொல்லாம வந்துவிட்டேன் அதான் .” என்ற தீப்ஷீயால் வாக்கியத்தை முழுமையாக முடிக்க முடியாமல் தவித்தாள் .

 

‘ இவனுக்கு ஃபோன் செய்தது தப்போ? ‘ என்று நினைத்தாள் தீப்ஷீ .

 

ஃபோனின் மைக்கை கைகளால் மூடி சத்தமாக சிரித்த தேவ் பின் அவளின் நிலை உணர்ந்து , ” இட்ஸ் ஓகே , ஆல் த பெஸ்ட் , எதைப் பத்தியும் யோசிக்காம வெற்றியை நோக்கி முன்னேறு . பாய் .” என்ற தேவ் ஃபோனை வைத்தான் .

 

பெரு மூச்சு விட்ட தீப்ஷீ தண்ணீர் குடித்து தன் பதட்டத்தை குறைத்தாள் பின் சிறிது நேரம் நடந்தவள் ரிலாக்ஸ் ஆக , சரியாக அறைக்கு வர சொல்லி பெல் அடித்தது .

 

எக்ஸாம் எழுதி முடித்தவள் , சத்யாவிற்காக வெளியே காத்திருக்க தேவ் காரில் வந்து நின்றான் .

 

” சத்யா எங்க ? ” என்றாள் தீப்ஷீ கோபமாக .

 

” சத்யாவுக்கு முக்கியமான வேலை வந்ததால்.  என் கிட்ட உன்ன பிக்கப் பண்ண போக சொன்னான். ”  என்றான் தேவ் .

 

வேறு எதுவும் பேசாமல் காரில் ஏறி அமர்ந்தாள் தீப்ஷீ .

 

‘ வேதாளம் திரும்ப முருங்கை மரம் ஏறிடுச்சு. ‘ என்று நினைத்த தேவ் காரில் ஏறினான் .

 

தீப்ஷீ ஃபோன் அடிக்க . காலை அட்டன் செய்தாள் .

 

” சாரி அம்மு , முக்கியமான மீட்டிங் திடீருனு ஏற்பாடு செய்துட்டாங்க. ”

 

” இட்ஸ் ஓகே சத்யா .”

 

” எப்படி எக்ஸாம் எழுதுன ? ”

 

” சூப்பரா எழுதியிருக்கேன் சத்யா. ”

 

” ஓகே அம்மு , ஈவ்னிங் வந்து பார்க்கிறேன். ” என்றான் சத்யா .

 

” பாய் சத்யா. ” என்றவள் காலை கட் செய்தாள் .

 

*****

 

பிரம்மாண்ட மண்டபத்தின் அழகான அலங்காரத்தின் முன்பு கம்பிரமாக நீல நிற கோட் , ஒயிட் ஷர்ட் மற்றும் பிளாக் பேண்ட் அணிந்து வந்த தேவ் அனைவருக்கும் மரியாதை தரும் விதமாக வணங்கினான் .

 

அவனின் பின் நின்றிருந்தான் சர்வேஷ் .

 

” கமலாமா , அம்மு ரெடியா . அவளை  வர சொல்லுங்க .” என்று கத்திக் கொண்டிருந்தான் சத்யா , தீப்ஷீ தயாராகும் அறைக்கு வெளியே நின்றுக் கொண்டு .

 

” ரெடியா இருக்கா சத்யா. ”  என்ற கமலா கதவை திறந்தார் .

 

நீல நிறமும் மயில் கழுத்து பச்சை கலரும் கலந்து , அதிக வேலை பாடு உள்ள அழகிய லெகங்காவில் தேவதையாக வந்த நின்ற தீப்ஷீயை பார்த்து அசந்து தான் போனான் சத்யா .

 

” கமலாமா யார் இது இவ்வளவு அழகா இருக்காங்க ? விளையாடுற நேரமா இது போய் அம்முவை கூட்டிட்டு வாங்க .” என்றான் சத்யா .

 

” சத்யா .” என்று அவனை முறைத்தாள் தீப்ஷீ .

 

” ஓ ! நம்ம அம்மு தானா . கமலாமா அம்முவிற்கு திருஷ்டி பொட்டு வெச்சீங்களா?  எல்லோரும் இவளை தான் இன்னைக்கு கண்ணு வைப்பாங்க . அவ்வளவு அழகா இருக்கா. ” என்றுக் கேட்டான் சத்யா .

 

” அதெல்லாம் வெச்சாச்சு சத்யா. நீ கவலைப்படாதே கடைசியாவும்  உன் அம்முவை ஆர்த்தி சுத்துவாங்க . அதுலே எல்லா திருஷ்டியும் போய்டும் . இப்போ தீப்ஷீய மேடைக்கு அழைச்சிட்டு போ.” என்றார் கமலா .

 

சத்யாவோட, சந்தியாவும் இணைந்துக்கொள்ள . இருவரும் தீப்ஷீயை தேவ் அருகே அழைத்துச் சென்றனர் .

 

அவளை பார்த்த தேவ் வாயை பிளக்க, ‘ ஐயோ ! இவ சாதாரணமா இருந்தாலே அவளை தவிர வேறு எதுவும் என் கண்ணுக்கு தெரியாது . இப்படி அழகா வேற வராளே இவள் மீதிருந்து  பார்வையை எப்படி எடுப்பது ? ச்ச … வந்தவர்களை கவனிப்பேனா இல்லை இவளை சைட் அடிப்பேனா ? ‘ என்று ஒன்னும் புரியாமல் குழம்பி நின்றான் தேவ் .

 

அவனின் ஆடையை சரி செய்வதுப் போல் அவன் அருகே வந்த சர்வேஷ் , ” டேய் உன் வாட்டர் பால்ஸ்ஸை  மூடுடா . எல்லாரும் உன்ன தான் கேலி பண்ணி சிரிக்குறாங்க. ” என்றான் .

 

வேகமாக வாயை மூடிய தேவ் வெட்க பட்டு மறுபுறம் திரும்பிக்கொண்டான் . இந்த அழகிய காட்சியை தன் கேமராவில் பதிவு செய்துக்கொண்டார் போட்டோகிராஃபர் .

 

சொன்னதுப் போல் மிகவும் ஆடம்பரமாக நடத்திக் காண்பித்துவிட்டார் இந்திராணி.  மாலையில் , வந்திருந்த பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மெஹந்தி போடுவது , பஞ்சுமிட்டாய் , பாப்கார்ன், பானி பூரி , கரும்பு ஜூஸ் , ஜவ்வு மிட்டாய் என்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஸ்டால் அமைத்திருந்தார் .

 

இரவு உணவு பஃபே சிஸ்டமாக ஏற்பாடு செய்திருந்தார் . நார்த் இந்தியன் , சவுத் இந்தியன் மற்றும் சைனீஸ் உணவு வகைகளை நிரப்பியிருந்தார் .

 

இவ்வளவு செய்தும் ஏதோ ஒன்று குறைவதாகவே உணர்ந்திருந்தார் இந்திராணி . அது என்னவென்று புரியாமல் குழம்பி நின்றிருந்தார் .

 

அவரின் குழப்பத்தை தீர்த்தனர் அவரின் உறவுகள் . இந்திராணி உறவினர்கள் அனைவரும் அவரிடம் வந்து , ” ஜோடி பொருத்தம் அருமையா இருக்கு , பொண்ணு அழகாக இருக்கிறாள் . நம் தேவ்விற்கு ஏத்த பெண் ” என்று சொல்லிவிட்டு செல்ல .

 

இந்திராணி மனம் நிறைந்தது . அவர் மகிழ்ச்சியாகவே மண்டபத்தை சுற்றி வந்தார் .

 

சத்யா மற்றும் சர்வேஷ் வந்திருந்த கெஸ்ட்டை ஒவ்வொருவராக மேடைக்கு அனுப்பிக் கொண்டிருந்தனர் .

 

தேவ் அனைவரையும் தீப்ஷீக்கு அறிமுகம் செய்துக் கொண்டிருந்தான் . தீப்ஷீயும் சிரித்த முகமாக அனைவரிடமும் பேசினாள் . எல்லாம் தேவ்வின் சொல்படி சரியாகவே நடந்துக் கொண்டிருந்தாள் தீப்ஷீ .

 

” வாங்க சார் .” என்றான் தேவ் .

 

” கங்கிராட்ஸ் தேவ். ” என்றார் அமித் .

 

” தீப்ஷீ , இவர் தான் டைக்குவாண்டோ ஃபெடரேஷன் ஆப் இந்தியாவின் பிரசிடெண்ட் மிஸ்டர் அமித் .” என்றான் தேவ் .

 

” நைஸ் டு மீட் யு சார் .” என்றாள் தீப்ஷீ .

 

” யூ ஆர் சோ லக்கி . யுவர் பெட்டர் ஹாஃப் இஸ் குட்(good) ஒன். ரேர் (rare) டூ பைண்ட் சம் ஒன் லைக் ஹிம்.” என்றார் அமித் .

 

” யூவர் லக்கி வைஃப் கோயிங் டு மேக் யூ ராஜீவ் காந்தி கேல் ரத்னா அவார்டு வின்னர் வெரி சூன்.”  என்றார் அமித் .

 

தீப்ஷீயும், தேவ்வும் ஆச்சரியமாக அவரை பார்க்க .

 

” ஐ ஆம் நாட் ஷ்யூர் பட் இன் ஸ்போர்ட்ஸ் சர்க்கிள் எவரிஒன் டாக்கிங் அபௌட் யூ .  யூ ஹாவ் சான்ஸ் டு வின் திஸ் இயர் ராஜீவ் காந்தி கேல் ரத்னா அவார்டு. ” என்றார் அமித் .

 

” ஐ எம் நாட் இன்டர்ஸ்டட் இன் கெட்டிங் அவார்டு சார் . ஐ ஜஸ்ட் நீட் இக்குவல் ரெககனேஷன் ஃபார் ஆல் த ஸ்போர்ட்ஸ் ஃபரம் பீப்பிள் ‌.”  என்றான் தேவ் .

 

” இப் யூ கெட் அவார்டு ஃபார் டைக்குவாண்டோ  . தென் பீப்பிள் ஸ்டார்ட் சேர்ச்சிங் அபவுட் டைக்குவாண்டோ . ஃபர்ஸ்ட் ரெககனேஷன் அபவுட் அவர் கேம். ” என்றார் அமித் .

 

” எஸ் யூவர் ரைட் சார். ” என்றான் தேவ் .

 

” ஓகே லீவ் திஸ் டாபிக் . ஜஸ்ட் என்ஜாய் மேன். ” என்ற அமித் சென்றுவிட்டார் .

 

‘ முதலில் இவனை பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும் . உண்மையிலே இவன் இவ்வளவு பெரிய அப்பாடக்கரா? ‘ என்று நினைத்துக் கொண்டாள் தீப்ஷீ .

 

அனைவரும் வந்து ஃபோட்டோ எடுத்துக் கொண்டிருந்தனர் . சத்யாவை மட்டும் காணவில்லை . தீப்ஷீ தவிப்பாக அவனை கண்களால் தேடினாள் . சத்யா அவளை பார்க்கவே இல்லை, பிசியாக வேலை செய்துக் கொண்டிருந்தான் .

 

தீப்ஷீ நிலை உணர்ந்த தேவ் , யாரை பற்றியும் கவலை படாமல் மேடையிலிருந்து , ” சத்யா. ” என்று கத்தினான் .

 

சத்யா திரும்பி பார்க்க .

 

” இங்க வா. ” என்றான் தேவ் .

 

சத்யா மேடை ஏறினான் . மண்டபமே அமைதியாக மூவரையும் பார்க்க .

 

” நத்திங் ஃபோட்டோ எடுக்க கூப்பிட்டேன் .” என்றான் தேவ் பொதுவாக .

 

மண்டபத்தில் உள்ளவர்கள் அவரவர் வேலையை தொடர்ந்தனர் .

 

சத்யா தீப்ஷீ அருகே நின்றான் . போட்டோ எடுத்ததும் செல்ல முயற்சிக்க ஹீரோயின் கையை ஹீரோ பிடிப்பதுப் போல் சத்யா கையை தேவ் பிடித்து அவனை நிறுத்தினான் .

 

சத்யா தேவ்வை கேள்வியாக பார்க்க .

 

” ஒன் மோர் போட்டோ வித் மீ .” என்றான் தேவ் .

 

சத்யா தேவ் அருகே வந்து நிற்க , தேவ் சத்யாவின் தோள் மேல் கை போட்டுக் கொண்டான் . தீப்ஷீ முகத்தில் நிறைவான புன்னகை இருக்க , இந்த போட்டோ ஆகச் சிறந்த படமானது தேவ், தீப்ஷீ ரிசப்ஷன் ஆல்பத்தில் .

 

வீட்டிற்கு சென்றதும் அனைவரும் அசதியாக சோபாவில் உட்கார்ந்திருந்தனர். வீட்டில் உள்ளவர்கள் மட்டுமே இருக்க .

 

“‌ அப்பா , ஃப்ரண்ட்ஸ் பார்ட்டி கேட்குறாங்க . நான் போயிட்டு வரேன். ” என்றான் தேவ் .

 

” என்ன டா இதெல்லாம். ”  என்றுக் கேட்டார் அமர் .

 

” அப்பா , ப்ளீஸ் ஐ நோ மை லிமிட்ஸ். ” என்றான் தேவ் .

 

” சரி சீக்கிரமா போயிட்டு வா. ” என்றார் அமர் .

 

” தீப்ஷீ , போயிட்டு வரேன். ”  என்றான் தேவ் .

 

‘ இவன் குடிப்பானா , எனக்கு தெரியாதே. ‘ என்று நினைத்தவளின் முகத்தில் பயம் தெரிய , “சரி .” என்று தலையை ஆட்டினாள் .

 

அவளின் பயத்தை பார்த்து சிரித்தான் தேவ் .

 

ரூமிற்கு சென்ற தீப்ஷீ , ” படத்தில் வர மாதிரி குடிச்சிட்டு வந்து என் கிட்ட தப்பா நடந்துப்பானா ? எதுக்கும் சீக்கிரமா தூங்கிடணும். ” என்று தனியாக பேசினாள் .

 

மதியம் தூங்கியதால் இப்போது அவளுக்கு தூக்கம்  வரவில்லை. திடீரென்று அமித் பேசியது நினைவிற்கு வர வேகமாக போனை எடுத்தவள் தேவ்வை பற்றி கூகுள் செய்தாள் . பின் அவனின் விளையாட்டை யூடியூப்பில் பார்த்தவள் அதிர்ச்சி ஆனாள் .

 

இதுவரை தீப்ஷீக்கு தெரிந்தது ஏதோ வாயில் நுழையாத விளையாட்டை தேவ் இந்திய அளவில் விளையாடுவான் என்பது மட்டுமே .

 

ஆனால் தேவ் இவ்வளவு நன்றாக விளையாடுவான் என்பது அவள் அறியாத ஒன்று . அதுவும் தேவ் கடைசியாக விளையாடிய உலக டைக்குவாண்டோ ஃ பிரிக்ஸ் தொடரின் ஆட்டத்தை பார்த்து வியந்து தான் போனாள் தீப்ஷீ .

 

‘ உண்மையிலே இவன் பெரிய அப்பாடக்கர் தான். ‘ என்று நினைத்துக் கொண்டாள் தீப்ஷீ .

 

கதவு திறக்கும் சத்தம் கேட்க வேகமாக போனை தலையணை அடியில் மறைத்தவள் தூங்குவதுப் போல் நடித்தாள் .

 

அவள் நடிக்கிறாள் என்பது புரிய, ‘ குடிக்காத என்ன பார்த்தே இப்படி பயப்படுகிறாளே நான் குடித்தால் இவள் என்ன செய்வாளோ? ‘ என்று நினைத்த தேவ் சிரித்துக் கொண்டே தூங்கினான்  .

 

 

Click on a star to rate it!

Rating 4.2 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
5
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்