Loading

அத்தியாயம் 16

 

” நான் அவளை சம்மதிக்க வைக்கிறேன் , நீங்க கவலை படாதீங்க பா .  ” என்ற சத்யா , எழுந்து தீப்ஷீ அறைக்கு சென்றான் .

 

சத்யா எதிர்பார்த்ததுப் போல் தீப்ஷீ தாழ் போட்டிருந்தாள் .

 

” அம்மு கதவைத் திற . ” என்றான் சத்யா .

 

இரண்டு நிமிடம் காத்திருந்தவன் , அவளிடம் பதில் இல்லை என்பது புரிய .

 

” நீ இப்போ கதவை திறக்கலைனா  இனி நீ என்னை

என்னைக்குமே பார்க்க முடியாதபடி செய்துவிடுவேன் ‌. ”  என்றான் சத்யா .

 

” என்ன சத்யா ப்ளாக்மெயில் பண்ணுறீயா ? ”  என்று கதவை திறந்த தீப்ஷீ அழுதுக் கொண்டே கேட்டாள் .

 

” அப்போ தான நீ கதவை திறப்ப அதுக்காக தான் . ” என்ற சத்யா அவள் அறைக்குள் நுழைந்தான் .

 

” சத்யா , நீ என்ன சொன்னாலும் எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம் . ”  என்று காதை மூடிக்கொண்டாள் தீப்ஷீ  .

 

” முதல்ல நான் சொல்லுறதை கேள் . உனக்கு ஏன் இப்போ கல்யாணம் வேண்டாம் ? ” என்றுக் கேட்டான் சத்யா .

 

” உனக்கு தெரியாதா . ”

 

” எனக்கு பதில் தான் வேணும் . ”

 

” சத்யா , எனக்கு ஐ.பி.எஸ் ஆகணும் ‌. ”

 

” வேற காரணம் எதாவது இருக்கா நீ கல்யாணம் வேண்டாம் என்றுச் சொல்ல . ” என்றுக் கேட்டான் சத்யா .

 

” இல்ல சத்யா . ”

 

” பிறகென்ன அம்மு , நீ கல்யாணம் செய்த பின்னும் ஐ.பி.எஸ் ஆகமுடியுமே . ”

 

” வாய்பே இல்லை . கல்யாணம் என்பது வேற சத்யா . ஹஸ்பண்ட்டை பார்த்துக்கொள்ளணும் , வீட்டு வேலைப் பார்க்கணும். அப்புறம் குழந்தை பிறந்திடும் . வாழ்க்கை வேற திசையில் போயிடும் .”

 

” ஏன் அம்மு அப்படி சொல்லுற . குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் பற்றி தெரியும் தானே. அவங்களுக்கு மூணு குழந்தைங்க . ஆனா திருமணம் அவங்களின் வெற்றிக்கு தடையா இல்ல . ”

 

” ஒரு கலெக்டர் தன் கைப்பிள்ளையோடு வேலை செய்ததாக சோஷியல் மீடியாவில் போட்டோ ஒன்று ட்ரெண்ட் ஆனது . உனக்கு தெரியாதா . அது மட்டுமா , ஒரு பெண் , கவர்மெண்ட்  எக்ஸாமிற்கு குழந்தையோடு வந்து எழுதலையா ? அவங்களால முடியும் போது உன்னால் முடியாதா அம்மு . தடையாய் நினைத்தால் எல்லாமே தடைத்தான் . முடியும் என்று நினைத்துப்பார் தடையைக் கூட நீ ஜெயித்துவிடுவ . ”

 

சத்யா  அமைதியாக தீப்ஷீயை யோசிக்க வைத்தான்.

 

” சத்யா,  ஆனா அவன் நான் ஐ.பி.எஸ் ஆவதற்கு சரினு சொல்லணுமே ? ” என்றுக் கேட்டாள் தீப்ஷீ .

 

” எவன் ? ”

 

 

” அதான் சத்யா , என்னை கல்யாணம் செய்ய போகும் ஆளைத்தான் சொல்றேன் . ”

 

” அடிங்க அவரையா அவன் என்று சொல்ற . ”

 

” இப்போ மரியாதை முக்கியமில்லை . என்னை ஐ.பி.எஸ் ஆக அனுமதிப்பாரா இல்லையா ? அதுதான் என் கேள்வி . ”

 

” ஐ.பி.எஸ் ஆக சம்மதம் சொல்லும் மாப்பிள்ளையையே நாம பார்க்கலாம் . எப்படி என் ஐடியா ? ”

 

” நல்ல ஐடியா தான் சத்யா . ”

 

” அப்போ உனக்கு கல்யாணத்திற்கு சம்மதமா ? ”

 

” இன்னொரு கண்டிஷன் இருக்கு சத்யா . ”

 

அவள் சம்மதித்து விடுவாள் என்று முகம் மலர்ச்சியாக இருந்த சத்யா, தீப்ஷீ சொன்னதைக் கேட்டு அவன் முகம் வாட ,

 

” இன்னும் என்ன அம்மு ? ”

 

” நீயும் கல்யாணம் செய்துப்பேனு எனக்கு சத்தியம் செய்துக்கொடு அப்போ தான் நான் கல்யாணத்துக்கு சம்மதிப்பேன்  ‌. ” என்றாள் தீப்ஷீ  .

 

” என்ன அம்மு , இப்போ நீ என்னை ப்ளாக்மெயில் பண்றியா ? ”

 

” இல்ல சத்யா , நீ இப்போ தானே வெளியே அப்பா கிட்ட கல்யாணம்  தான் ஒருவருடைய வாழ்க்கையை முழுமையாக்கும்னு வியாக்கியானம் பேசின.”

 

” நான் சொல்லலையே அம்மு , அப்பா தான சொன்னார் . ”

 

” அதுக்கு ஆமா என்று தலையை ஆட்டின தான ? ”

 

” ஆமா.  ”

 

” அப்போ உன் வாழ்க்கை முழுமை பெற வேணும்னா நீயும் கல்யாணம் தான செய்யணும். ”

 

” ஆமா . ” என்று சொல்ல வந்த சத்யா , ” ஆனா எனக்கு அதில் விருப்பமில்லை நம்பிக்கையுமில்லை . ”

 

” அப்போ ஒரு பொய்யான விஷயத்தை என்னை மட்டும் செய்ய சொல்லுற . என் முடிவை நானும் யோசிச்சு சொல்றேன் .” , என்றாள் தீப்ஷீ .

 

‘ இவளை ஐ.பி.எஸ் ஆக்குவதற்கு பதில் வக்கீல் ஆக்கிவிடலாம் போல் . எப்படி நான் சொன்னதை வைத்தே எனக்கு ரிவீட் அடிக்குறா ?  ‘ என்று நினைத்த சத்யா , ” அம்மு என்னை கார்னர் பண்றியா ? ”

 

” இல்ல , நான் நியாத்த தான் கேக்குறேன் . ”

 

இப்போது யோசிப்பது சத்யாவின் முறையானது .

 

‘ நமக்கெல்லாம் யார் பெண் தர போகிறார்கள் . ‘  என்று நினைத்த சத்யா ,

 

” சரி அம்மு உன் கல்யாணம் முடிந்து இரண்டு ,  மூன்று வருடங்கள் கழிச்சி நானும் கல்யாணம் செய்துக்கிறேன்.” என்றான் சத்யா .

 

அவனை சந்தேகமாக பார்த்த தீப்ஷீ , ” என் தலை மேல் கை வைத்து சத்தியம் பண்ணு சத்யா ? ”

 

” இதில் யாராவது பொய் சொல்வாங்களா ? எதுக்கு சத்தியம் எல்லாம் ? ”

 

” எனக்கு உன்மேல் நம்பிக்கையில்லை . ”

 

” சரி செய்கிறேன் . ” என்ற சத்யா , தீப்ஷீ தலை மேல் கை வைத்து , ” சத்தியமா நான் கல்யாணம் செய்துப்பேன் . ”  என்றான் .

 

மகிழ்ந்து போனாள் தீப்ஷீ . அவள் மகிழ்ச்சியில் சத்யாவிற்கும் புன்னகை வந்தது .

 

” சரி வா அம்மு ,  அப்பா அம்மாகிட்ட  சொல்லலாம் .” என்றான் சத்யா .

 

சத்யா கதவருகே சென்றான் .

 

” உனக்கு பெண் கிடைக்காது என்று மட்டும் நினைக்காதே சத்யா . உனக்கு பெண் ரெடியா இருக்கு.  ”  என்றாள் தீப்ஷீ .

 

சத்யா அதிர்ச்சியாக தீப்ஷீயை திரும்பி பார்க்க , தீப்ஷீ புன்னகைத்தாள் .

 

” யார் அம்மு ? ” என்று சத்யா கேட்டான் .

 

” சந்தியா. ”

 

சட்டென சத்யாவிற்கு நினைவு வரலை பின் ஞாபகம் வந்தது .

 

” முடியாது அம்மு . ”

 

” ஏன் சத்யா , அவள் கடந்த காலத்தை நினைத்தா ? இல்ல அவளுக்கு தொடுகையில் இருக்கும் பயத்தாலையா ? ” மனதை ரணப்படுத்திக் கொண்டு அவ்வளவு கடினமாக பேசினாள் தீப்ஷீ , இல்லை என்றால் சத்யாவை சம்மதிக்க வைக்க முடியாதே  .

 

” அம்மு , இப்படி எல்லாம் பேசாதே . அவ பெரிய வீட்டு பெண் . அவங்க வீட்டில் சம்மதிக்க மாட்டாங்க . வீண் பிரச்சனை தான் . ”

 

” அவங்க சம்மதிச்சிட்டாங்க . ”

 

இதுக்கு மேல் என்னால் அதிர்ச்சியை தாங்க முடியாது என்பதுப் போல் சத்யா பார்த்தான் .

 

” நிஜமா சத்யா . அவ பல வருஷங்களா உன்னத்தான் காதலிக்கிறாள் . ”  என்று தொடங்கியவள் சந்தியாவின் காதல் காவியத்தை சத்யாவிடம் சொன்னாள் .

 

சத்யா தலைமேல் கை வைத்து பெட்டில் அமர்ந்தான்  .

 

” ஏன் சத்யா அமைதியா இருக்க ? உனக்கு சம்மதமா இல்லையா ? ”  என்றுக் கேட்டாள் தீப்ஷீ .

 

” நான் சத்தியம் செய்ததால் எப்படியும் கல்யாணம் பண்ணிப்பேன் . கண்டிப்பா அது நீ சொல்லும் பெண் தான் . என்ன நீ இந்த காதல் விசயத்தை பல வருஷமா  என்கிட்ட சொல்லாம , சரியான நேரம் பார்த்து என்ன சம்மதிக்க வெச்சிட்டியே என்ற வருத்தம் தான் . ”

 

” சத்யா , ஐ எம் சாரி  . நான் சந்தியா கிட்ட தெளிவா சொல்லிட்டேன். உனக்கு பிடிச்சா தான் எதுவா இருந்தாலும் முடிவு பண்ண முடியும்னு . ” என்று அவன் தோளில் சாய்ந்தாள் தீப்ஷீ .

 

” அம்மு , உன் முடிவுதான் என்னோடது . நீ சந்தியாவ கல்யாண பண்ணிக்க சொன்னா , கண்டிப்பா நான் பண்ணிப்பேன் . ”

 

” சத்யா , நான் உன்னை கட்டாயபடுத்துல.”

 

” நீ எப்பவும் என் நல்லதுக்கு தான் முடிவெடுப்ப . எனக்கு உன் முடிவில் நம்பிக்கை இருக்கு . ”

 

சத்யாவின் நட்பில் மனம் நெகிழ்ந்தாள் தீப்ஷீ .

 

” சரி சத்யா , நான் இப்பவே சந்தியா கிட்ட பேசுறேன் . ” என்ற தீப்ஷீ போனை எடுத்தாள்.

 

வேகமாக அதை வாங்கி வைத்த சத்யா , ” முதல்ல வா வெளியே போய் பேசுவோம் .  அம்மா அப்பா நமக்காக தான் வைட் பண்ணுறாங்க . உன் ஃபிரெண்டுக் கிட்ட நைட் பேசிக்கோ . ” என்றான் .

 

இருவரும் வெளியே வந்தனர் .

 

” அப்பா , தீப்ஷீ கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டாள் .  ”  என்றான் சத்யா .

 

” சத்யா , முக்கியமான விஷயத்தை சொல்லலை .” , என்று சத்யாவுக்கு ஞாபகப்படுத்தினாள் தீப்ஷீ .

 

” அப்பா , மாப்பிள்ளை தேடும் போது முக்கியமா யார் தீப்ஷீயை ஐ.பி.எஸ் ஆக சம்மதம் சொல்றாங்களோ அவரை தேர்ந்தெடுங்க . ” என்றான் சத்யா .

 

” மாப்பிள்ளைய தேர்ந்தெடுத்துட்டோம் சத்யா . ” என்றார் தினேஷ் .

 

சத்யா , தீப்ஷீ இருவரும் தினேஷை அதிர்ச்சியாக பார்க்க ,

 

” என்ன அப்பா சொல்றீங்க கல்யாணத்தைப் பத்தி இன்னிக்கு தான் பேசுனீங்க  . அதுக்குள்ள மாப்பிள்ளை பார்த்துட்டேனு சொல்லுறீங்க ?  ”  என்றான் சத்யா .

 

” சத்யா கல்யாணம் ஒரு மாதத்திற்குள் செய்யணும். மாப்பிள்ளை எல்லாம் பொறுமையா தேட முடியாது . ”  என்றார் தினேஷ் .

 

” அதுக்காக யாரோ ஒருவரோடு கல்யாணம் பண்ணி வைக்க முடியுமா ? ”  என்றான் சத்யா .

 

” என்னோட நண்பனின் பையன் தான் . ”  என்றார் தினேஷ் .

 

” அவரைப் பத்தி நல்லா விசாரிச்சிங்களா ? ”

 

” நல்லா விசாரிச்சிட்டேன் சத்யா. அதுவும் இல்லாம நான் பார்த்து வளர்ந்த பையன் எனக்கு நல்லா தெரியும் . மிகவும் திறமையானவன் . உங்க இரண்டு பேருக்குமே மாப்பிள்ளைய முன்பே தெரியும்  . ” என்றார் தினேஷ் .

 

” அவரை பத்தி நான் எதுவும் சொல்ல போவதில்லை . நாளைக்கு எங்கேஜ்மென்ட் இருக்கு . நீங்களே பார்த்து தெரிஞ்சிக்கோங்க . ” என்று  அலுங்காமல் குண்டை தூக்கிப் போட்டார் தினேஷ்  .

 

” அப்பா , நாளைக்கே எங்கேஜ்மென்ட்டா ? மாப்பிள்ளை யார் என்று தெரியாமல் , நான் எப்படி சம்மதம் சொல்வது ? ” என்றுக் கேட்டாள் தீப்ஷீ .

 

” தீபு நாளைக்கு பெண் பார்ப்பது தான் நடக்கும் . உனக்கு பிடிச்சா தான் அது எங்கேஜ்மென்ட் பங்க்ஷனாக மாறும் . அதனால் எந்த பயமும் இல்லாமல் போய் சாப்பிட்டு தூங்கு . காலைல சீக்கிரமா எழுந்திருக்கணும் .  ” என்றார் தினேஷ் .

 

” உனக்கும் தான் சத்யா , சீக்கிரம் போய் தூங்கு . நாளைக்கு நீ தான் எனக்கும் , தீப்ஷீக்கும் உதவியா இருக்கணும் . ”

 

” அப்பா , நீங்க ரொம்ப அவசரப்படுறது போல் இருக்கு . ”  என்றான் சத்யா .

 

” ஆமா சத்யா , நேரம் நமக்கு குறைவா இருக்கு அதான் நான் அவசரமா எல்லாத்தையும் செய்ய வேண்டி இருக்கு .  ”  என்றார் தினேஷ் .

 

” மறந்துட்டு உங்களை தூங்க சொல்கிறேன் பார் , முதல்ல உள்ள போய் தீப்ஷீக்கு நாளைக்கு கட்ட சேலை நகையை தேர்ந்தெடுத்து கொடு சத்யா . உனக்கு தான தெரியும் எது அவளுக்கு பொருத்தமா இருக்கும் என்று. சீக்கிரம் போய் தீப்ஷீக்கு ஹெல்ப் பண்ணு ‌.  ” என்றார் தினேஷ் .

 

” வெறும் நகை மட்டுமில்ல அப்பா அவளின் வாழ்க்கை துணையும் பொருத்தமா இருக்கா, இல்லையா என்று நான் தான் தேர்வு செய்வேன் . ” என்றான் சத்யா .

 

தினேஷ் அப்பா தன்னிடம் எதுவும் சொல்லலை என்ற கடுப்பில் இருந்தான் சத்யா .

 

‘ பாருடா இவனுக்கு கோபமும் வருது நல்லா பேசவும் வருது . நம்ம சொன்னதையே திருப்பி நமக்கு சொல்கிறான் . ‘ என்று நினைத்தார் தினேஷ் .

 

மீண்டும் ரூம் உள்ளே வந்தனர் இருவரும் .

 

” என்ன சத்யா நடக்குது ? ” என்றுக் கேட்டாள் தீப்ஷீ .

 

” மாப்பிள்ளை பத்தி நம்ம கிட்ட எதுவும் சொல்லமாட்டுங்குறார் ? ஆனா , உன் சம்மதம் இல்லாம எதுவும் நடக்க நான்  விடமாட்டேன் . ” என்றான் சத்யா .

 

‘ வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பே இல்லை . கடைசியில் அவளுக்கு நடக்கும் விருப்பமில்லா கல்யாணம் உன் கண் முன் தான் நிகழும் .  வேறு வழி இல்லாமல் அதை நீயே தான் செய்துவைப்ப . ‘ என்றது விதி , சத்யாவை பார்த்து …

 

 

Click on a star to rate it!

Rating 4.6 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
9
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. வேற யாரு அந்த தேவ் தான் … ஆனா அவன் நல்லவன் மாதிரி தான் தெரியுறான் … அதுக்குள்ள கல்யாணமா ?? இவங்க நட்புக்கு பிரச்சனையா வருவான் போல …

  2. எப்படியோ பேசி பேசியே, “ஐபிஎஸ் ஆக ஒத்துழைக்கிற ஒருத்தன் கூட தான் கல்யாணம்” என்ற நிபந்தனையோடு திருமணத்திற்கு சம்மதிக்க வைத்துவிட்டான் அவளை.

    அவன் பேசியதை வைத்தே அவனை மடக்கி, நல்லதிற்கு பாவம் இல்லை என்று அவன் மனம் நோகும் கேள்வியையும் கேட்டு, அவன் திருமணத்திற்கும் சேர்த்து சம்மதம் வாங்கி விட்டாள் தீப்ஷி.

    யார் மாப்பிள்ளை என்றே சொல்லாமல் அடுத்த நாளே பெண் பார்க்கும் படலம், பிடித்து இருந்தால் நிச்சயதார்த்த படலம் என்று ஏற்பாடு செய்துள்ளார் தினேஷ்.

    பிடிக்காத கட்டாய கல்யாணம் அதுவும் நண்பனின் முன்னிலையிலேயே?

    என்ன ஆகுமோ? பார்ப்போம்