
அத்தியாயம் 15
” தேவ் எழுந்திரு நேரம் ஆகுது . ” என்றான் கோகுல் .
ஏதோ கனவுலகத்தில் இருந்து வெளிவந்தான் தேவ் , கண் விழித்ததும் அவன் குழம்பி போனான் .
‘ நம்ம ரூம் போல் இல்லையே ? ‘ என்று யோசித்தான் தேவ் . பின் ஒவ்வொன்றாக நினைவு வர , கோகுலை பார்த்தான் , அவன் குளிப்பதற்கு தயாராக நிற்கிறான் என்பது புரிய , தேவ் வேகமாக எழுந்து தன் பொருட்களை எடுத்துக் கொண்டு கோகுலுடன் சென்றான் .
” என்ன கோகுல் ? இன்னும் இருட்டா இருக்கு . நைட்டே குளிச்சடனுமா ? ” என்று கேட்டான் தேவ் .
சத்தமாக சிரித்த கோகுல் , ” தேவ் மணி 4 ஆகுது அதான் கொஞ்சம் இருட்டா இருக்கு . இப்போ போனாதான் நாம டைமுக்கு ரெடியாக முடியும் . ”
‘ முன்ன பின்ன விடியகாலை எழுந்திருந்தால் தான உனக்கு தெரிந்திருக்கும் . ‘ என்று தேவ்வின் மனசாட்சி அவனை பார்த்து சிரிக்க .
” ஓகே கோகுல் . ” என்றவன் காலை கடன்களை முடித்தான் .
பின் கோகுல் துணி துவைக்கும் கல் அருகே சென்றான் .
” இங்கு எதுக்கு வந்திருக்கோம் கோகுல் ? ” என்று தேவ் கேட்டான் .
” துணி துவைக்க தான் தேவ் . ”
” என்னது துணி துவைக்கவா ? ”
” ஆமா தேவ் , நம்ம ஸ்கூல்ல அதுக்கு ஆள் வைத்து துவைப்பது பெரிய விஷயம் இல்லை தான் . ஆனா , நம்ம வேலையை நாம செய்ய கத்துக்ணம் என்பதற்காக தான் அதுக்கு ஆள் வைப்பதில்லை நிர்வாகம் . ” என்ற கோகுல் , துணி துவைக்க ஆரம்பித்தான் .
தேவ் எதுவும் செய்யாமல் இருப்பதை பார்த்த கோகுல் , ” என்னாச்சு தேவ் ? ”
” எனக்கு துவைக்க தெரியாது . ”
” இன்னைக்கு நான் உன் துணியை துவைக்கிறேன் . எப்படி துவைக்கிறேனு பார் , நாளையிலிருந்து நீ செய் . ”
” இல்ல வேண்டாம் கோகுல் . நான் நீ துணி துவைப்பதை பார்த்தே துவைக்கிறேன்.” என்றவன் அவன் செய்வதை கவனித்து , பின் வேகமாக அவன் செய்தது போல் செய்தான் தேவ் .
துவைக்கும் போது அவன் எண்ணம் பின் நோக்கி சென்றது .
” தேவ் துவைக்கற துணியை எடுத்து வந்து தா . ” என்றார் அக்ஷிதா .
” அம்மா , என் ரூமில் இருக்கு நீங்களே எடுத்துக்கோங்க . எனக்கு வேலை இருக்கு . ” என்றான் தேவ் .
‘ துணியை எடுத்துட்டு வந்துக்கூட தராமல் இருந்தேன் , இப்போ நானே என் துணியை துவைக்கிறேன் . ‘ என்று நினைத்த தேவ் நேரமாவதை உணர்ந்து எண்ணங்களை ஓரம் வைத்து வேலையில் கவனமானான் .
*****
பள்ளி வளாகத்தில் நுழைந்தனர் கோகுலும், தேவ்வும் . கோகுலை பார்த்ததும் அவன் வகுப்பில் படிக்கும் பசங்க இரண்டு பேர் அவன் அருகே வந்தனர் .
அவ்விருவரும் ஆசிரியர் யாரும் இல்லை என்பதை உறுதி செய்த பின் கோகுலிடம் , ” புதுசு கண்ணா புதுசு . ” ,என்று தேவ்வை நக்கல் செய்வதுப் போல் சொன்னார்கள் ” தேவ் , எதுவும் பேசாதே, நாம போகலாம் . ” என்றான் கோகுல். தன் கோபத்தை விடுத்து அவனுடன் சென்றான் தேவ் .
மீண்டும் அவர்கள் , ” சோடாபுட்டி இது என்ன உன் புது அடியாளா . ” என்றுக் கேட்டனர் .
கோபம் அதிகமாக வேகமாக திரும்பிய தேவ் இருவரையும் நன்கு அடித்தான் . எவ்வளவோ கோகுல் தடுக்க முயற்சித்தும் அவனால் ஒன்னும் செய்ய முடியவில்லை .
பின் அதை தடுக்க வந்த பி.இ.டி சாரையும் தெரியாமல் தேவ் தள்ளிவிட்டான் . பின் தன் தவறை உணர்ந்து அமைதியானான் .
அந்த இடத்திற்கு வந்த பிரின்ஸ்பால் .
கோகுலை பார்த்து , ” இங்கு என்ன நடந்து ? ” என்றுக் கேட்டார் பிரின்ஸ்பால் .
கோகுல் நடந்ததை சொல்ல . அவர் அந்த இருவரைப் பார்த்து , ” என்ன லீவ் விட்டதில் எல்லாம் மறந்து போயிடுச்சா . ஒரு அடி போட்டால் தெரியும் . படிப்பது ஒன்பது அதற்குள் ராகிங் . இரண்டு பேரும் போய் முட்டி போடுங்க . ” என்றவர் தேவ்வை பார்த்து , ” உனக்கு யார் அவங்களை அடிக்க அனுமதி கொடுத்தது . வந்த முதல் நாளே பிளாக் மார்க் . சாரை தள்ளிவிட்டிருக்க . உன்னால் உன் கோபத்தைக் கூட கண்ட்ரோல் செய்யமுடியலை . போய் பத்து ரவுண்ட் ஸ்கூலை சுத்திட்டு வா . ” என்றார் பிரின்ஸ்பால் .
கோகுலை கிளாஸ்க்கு போக சொன்னார் .
தேவ் சுத்தி வருவதை பிரின்ஸ்பால் பார்த்துக் கொண்டிருந்தார் . அவரோடு பி.இ.டி சாரும் இருந்தார் .
” அவன் தள்ளியது எப்படி இருந்தது ? ” என்றுக் கேட்டார் பிரின்ஸ்பால் .
” ரொம்ப போர்ஸா இருந்தது சார் . ” என்றார் பி.இ.டி சார் .
அமைதியாக கேட்டுக் கொண்டவர் .
சுற்றி வந்த தேவ் அவரிடம் , ” சாரி சார் . ” என்றான் .
இவ்வளவு ரவுண்ட்ஸ் ஓடி வந்தும் பிரிஸ்க்காக , எனர்ஜெடிக்காக பேசியவனை ஆராய்ச்சியாக பார்த்த பிரின்ஸ்பால் , ” உனக்கு ஸ்போர்ட்ஸ் பிடிக்குமா ? ”
” எஸ் சார் எல்லா விளையாட்டும் எனக்கு பிடிக்கும் . ” ,என்றான் தேவ் .
” இனிமேல் தினமும் பள்ளி முடிந்ததும் பி.இ.டி சாரோடு போய் டைக்குவாண்டோ பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். ” என்றார் பிரின்ஸ்பால்.
” ஓகே சார் . ” என்று மகிழ்ச்சியாக தலையை ஆட்டினான் .
” தேவ் , கிளாஸிக்கு போ . ” என்றார் பிரின்ஸ்பால் .
தேவ் சென்ற பின் பி.இ.டி சார் , ” அவனோட ஸ்டாமினா மற்றும் கிக்கிங் பவருக்கும் , பாக்ஸிங் அவனுக்கு இன்னும் நல்லா வரும் போல் தெரிது சார் . ”
” ஆமா நீங்க சொன்னது சரிதான் . பாக்ஸிங் அவனுக்குள் இருக்கும் கோபத்தை அதிகப்படுத்தும். ஆனா டைக்குவாண்டோ நிறைய விதிமுறைகள் கொண்டிருப்பதால் கோபத்தை கட்டுபடுத்தி விளையாடினால் மட்டுமே ஜெயிக்க முடியும் . ஒரே சமயத்தில் அவன் கோபத்தை கட்டுப்படுத்தவும் , ஒரு விளையாட்டையும் அவனால் கத்துக்க முடியும் . அவன் டைக்குவாண்டோ நல்லா விளையாடினால் அவனால் ஒலிம்பிக்கில் கலந்துக் கொண்டு இந்தியாவிற்கு பெருமை சேர்க்க முடியும்.” என்றார் பிரின்ஸ்பால் . ‘
#####
இப்படி தான் தேவ் டைக்குவாண்டோ விளையாட ஆரம்பித்தது .
கார் ஹோட்டலுக்கு வெளியே நிற்க . நினைவுகளிலிருந்து வெளிவந்தவன் ரூமிற்கு சென்றான் .
குளித்து முடித்து வந்த தேவ் , பெட்டில் விழுந்தான் . போனை எடுத்தவன் போட்டோ லாக் அப்ளிகேஷனில் பாஸ்வேர்டை போட்டு திறந்தான் . அந்த ஆப் முழவதும் தீப்ஷீ போட்டோ , வீடியோ மட்டுமே இருந்தது . எல்லாம் அவளுக்கு தெரியாமல் எடுத்தது .
” உன்னை விட்டு வந்து மூன்று நாள் தான் ஆகுது. ஆனா, உன் நினைவாக இருக்கு செல்லம் . ” என்றான் தேவ் , தீப்ஷீயின் போட்டோவைப் பார்த்து .
” இந்த காதல் ரொம்ப கொடுமை , என்னைப் பாடாய்படுத்துது . எப்போதும் உன் நினைவு தான் எனக்கு . இப்படியே இருந்தா நான் சீக்கிரமா கேம்ல தோத்துட்டு உன்ன பார்க்க இந்தியா வந்துடுவேன் போல் .”
” ஐ மேடிலி டீப்லி மிஸ் யூ தீப்ஷீ டார்லிங் . ”
தேவ் இங்கு தீப்ஷீ நினைவில் வாட… அங்கு சென்னையில் அவளோ பத்ரகாளியாக நின்றுக் கொண்டிருந்தாள் .
*****
” எனக்கு அடுத்த மாசம் ப்ரிலிமினரி எக்ஸாம் இருக்கு . இப்போ வந்து கல்யாணம் அது இதுனு பேசிட்டிருக்கீங்க . ” என்றுக் கேட்டாள் தீப்ஷீ .
” நாங்க என்ன செய்றது தீப்ஷீ . உன்னுடைய ஜாதகத்தில் தோஷம் இருக்காம். இன்னும் ஒரு மாசத்தில் உனக்கு கல்யாணம் செய்யலனா இனி உனக்கு கல்யாணமே நடக்காதாம் . ” என்றார் சரண்யா .
” எனக்கு ஜாதகத்தில் நம்பிக்கை இல்லை . ” என்றாள் தீப்ஷீ .
” உனக்கு இல்லைனா என்ன ? எங்களுக்கு நிறைய நம்பிக்கை இருக்கு . ” என்றார் சரண்யா .
” அம்மா , எப்படி யாரோ ஒருவர் சொல்லியதை நம்பி இப்படி செய்றீங்க . ஒருவேளை அவர் பொய்யான ஜோசியக்காரராக இருந்தால் என்ன செய்வது ? ” என்று பொறுமையாக தாயை குழப்ப திட்டம் தீட்டினாள் தீப்ஷீ .
” நீ அதைப் பத்தி கவலைப் பட தேவையில்லை தீபு . நாங்க ஒன்றுக்கு மூன்று ஜோசியக்காரர்களை பார்த்து உறுதி செய்த பின்ன தான் இந்த முடிவெடுத்தோம் . ”
” நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்.” என்ற தீப்ஷீ கோபமாக தன் அறைக்கு சென்று கதவை சாற்றினாள் .
” அதெல்லாம் , உங்க அப்பா வந்து சொன்னால் நீ எப்படி எதிர்த்து பேசுறனு நான் பார்க்கிறேன் . ”
உள்ளே வந்த தீப்ஷீ வேகமாக சத்யாவிற்கு கால் செய்தாள் .
சத்யா ஆஃபீஸில் இருக்க , அவன் போன் ,
” சிங்கப்பெண்ணே சிங்கப்பெண்ணே
ஆணினமே உன்னை வணங்குமே
நன்றி கடன் தீர்ப்பதற்கு
கருவிலே உன்னை ஏந்துமே… ”
என்று தீப்ஷீக்கான தனி ரிங்டோன் கேட்டு அவன் கேபினில் உள்ள அனைவரும் அவனை பார்க்க .
சைலன்டில் போட மறந்ததை எண்ணி தலையில் அடித்த சத்யா , பொதுவாக , ” சாரி . ” என்றவன் எழுந்து வெளியே போனான் .
” ஹலோ அம்மு . ”
” சத்யா , திடீர்னு எனக்கு கல்யாணம் செய்ய முடிவு எடுத்திருக்காங்க . எனக்கு அழுகையா வருது . ”
” என்ன அம்மு சொல்ற . காலைல கூட ஒன்னும் சொல்லலை . ”
” காலையில் தான் சத்யா இவங்க ஜோசியக்காரரை பார்க்க போனாங்க . வந்ததில் இருந்து அம்மா கல்யாணம் செய்து தான் ஆகணும்னு சொல்லுறாங்க . ”
” சரி அம்மு , நீ அழாத . நான் ஈவினிங் வந்து என்னன்னு கேட்கிறேன் . ”
” சத்யா , ஐ.பி.எஸ் என் கனவு மட்டும் இல்லை என்னோட உயிர் மறந்துடாதே .”
” எனக்கு தெரியாதா அம்மு . நான் பார்த்துக்குறேன் . ” என்ற சத்யா தன் வேலையை தொடர்ந்தான் .
தீப்ஷீ , பி.சி.ஏ முடித்து ஒரு வாரம் தான் ஆகுது . சத்யா ஒரு வருடமாக டெக் பார்க், சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்கிறான் . சின்ன கம்பெனி தான் டெக் பார்க். இங்கு நிறைய கற்றுக் கொள்ளலாம் என்று எண்ணிய சத்யா கேம்பஸ் இன்டர்வியூவில் வந்த பெரிய கம்பெனியை எல்லாம் விட்டுவிட்டு, தனியாக வந்து இந்த கம்பெனி இன்டர்வியூவில் செலக்டாகி, டெக் பார்க்கில் சேர்ந்துக் கொண்டான் .
உள்ளே வந்த சத்யா எண்ணம் முழுவதும் ஏன் அம்முவின் பெற்றோர் திடீரென்று இந்த முடிவை எடுத்தனர் என்று யோசித்தான். அதே நேரத்தில் கை தானாக தன் வேலையை கீபோர்டில் செய்துக் கொண்டிருந்தது .
சத்யாவிடம் சொல்லிய பின்பு , எல்லாம் சத்யா பார்த்துக்கொள்வான் என்ற தைரியத்தில் தீப்ஷீ ப்ரிலிமினரி எக்ஸாமிற்கு பிரிப்பேர் செய்துக்கொண்டிருந்தாள் .
சத்யா வீட்டிற்கு வந்து இறங்கினானோ இல்லையோ , அவன் முன்பு வந்து நின்றாள் தீப்ஷீ .
” சத்யா , எப்படியாவது அவங்களுக்கு புரியவை . ” என்றாள் தீப்ஷீ .
” இரு அம்மு , நான் போய் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வரேன் . இப்படியே வந்தால் நான் சொல்வதை அவங்க கேட்க மாட்டாங்க . ” என்றான் சத்யா .
” ஆமாம்ல , நான் மறந்துடேன் , வா சீக்கிரம் . ” என்று அவனை சத்யாவின் வீட்டிற்கு அழைத்துச் சென்றாள் .
டிரஸ்ஸை மாற்றிய சத்யா அம்முவோடு , அவளின் வீட்டிற்குள் நுழைய .
நாங்கள் முன்பே பஞ்சாயத்திற்கு தயாராக தான் இருக்கிறோம் என்பதுப் போல் தினேஷ் மற்றும் சரண்யா இருவரையும் எதிர்ப்பார்த்து உட்கார்திருந்தனர் .
” வா சத்யா . ” என்று தினேஷ் சரண்யா வரவேற்க .
சத்யாவிற்கான டீயை அவனிடம் நீட்டினார் சரண்யா .
பசியோடு தான் வந்திருந்தான் சத்யா . சரியாக புரிந்து வைத்திருந்த சரண்யா அவனுக்கு டீ தர . சத்யாவின் வயிறு மட்டுமில்லாமல் அவன் மனம் நிறைந்தது அவரின் அன்பில் .
” அப்பா . ” என்றான் சத்யா .
” என்ன சத்யா ? ” என்றுக் கேட்டார் தினேஷ் .
” சத்யா , என்ன தயங்கிட்டு இருக்க? என்ன கேட்கணுமோ அதைக் கேளு . ” என்றாள் தீப்ஷீ .
” அம்மு , நான் சொல்லும் வரை நீ பேசக் கூடாது . ஃபிங்கர்ஸ் ஆன் த லிப்ஸ் . ” சத்யா .
வழக்கம் போல் அவன் சொன்னதை செய்ய , தீப்ஷீ தன் விரலை வாய் அருகே எடுத்துப் போனாள் . பின் யோசித்தவள் வேகமாக கையை இறக்கினாள் .
அதைப் பார்த்த மூவரும் சிரித்தனர் . கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதுப் போல் , ” நான் தான் செய்யவில்லையே . நான் என்ன குழந்தையா ? ” என்றுக் கேட்டாள் தீப்ஷீ .
ஆனால் மூவரின் பார்வைக்கும் அவள் குழந்தை தான் . ஆனால் அது தீப்ஷீக்கு தான் தெரியவில்லை .
” அப்பா , ஏன் இப்படி திடீரென்னு அம்முவுக்கு கல்யாணம் பண்ண முடிவெடுத்திருக்கீங்க ? ” என்றுக் கேட்டான் சத்யா .
” நான் முதலில் உன்கிட்ட சொன்ன பின்ன தான் தீப்ஷீகிட்ட சொல்லலாம்னு இருந்தேன். ஆனா இவள் தான் அவசரப்பட்டு தீப்ஷீ கிட்ட சொல்லிட்டாள்.” என்ற தினேஷ் , சரண்யாவை காட்டினார் .
” சரண்யா தான் என் கிட்ட வந்து எனக்கு கெட்ட கனவா வருது , மனசு சரியில்லை , ஜாதகம் பார்க்கலாம் என்று கூப்பிட்டாள். இது அப்போ, அப்போ நடப்பது தான் , சரினு நானும் கூட்டிட்டு போனேன் .
போன இடத்தில் தீப்ஷீக்கு உடனே கல்யாணம் செய்றது நல்லதுனு ஜோசியக்காரர் சொன்னார் . ”
” அப்பா , நிறைய பேர் பிராடு . அவங்க பேச்சை கேட்டு நீங்க இவ்வளவு பெரிய முடிவை எடுக்கலாமா ? ” என்றுக் கேட்டான் சத்யா .
” நான் மூன்று பேரை பார்த்தேன் , மூவரும் ஒரே பதிலை தான் சொன்னாங்க . ” என்றார் தினேஷ் .
” அப்பா அவளுக்கு ஐ.பி.எஸ் ஆகணும்னு சின்ன வயசிலிருந்தே ஆசை . ”
” அது எனக்கும் தெரியும் சத்யா . ஆனா கல்யாணம் முக்கியம் தான . நீயே யோசித்துப்பார் , இவள் ஐ.பி.எஸ் ஆனாலும் கல்யாணம் ஆகலைனா இவள் வாழ்க்கை முழுமை பெறுமா ? ”
” ஆமா பா, நீங்க சொல்வது சரி தான் . ” என்றான் சத்யா .
” நீ இவங்களுக்கு தான் சப்போர்ட் பண்ணுற சத்யா . உங்களால் என்னை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வைக்க முடியாது . நான் போறேன் . ” என்ற தீப்ஷீ , கோபமாக தன் அறைக்குச் சென்றாள் .
” பார்த்தியா சத்யா , இவளுக்கு எது நல்லதுனு பெற்ற எங்களுக்கு தெரியாதா . சூழ்நிலையைக் கூட புரிந்துக்கொள்ளலைனா இவள் படித்து என்ன பயன் ? ” என்றார் தினேஷ் .
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


டைக்குவாண்டோ தற்காப்பு கலை பற்றிய அறிமுகம் அருமை.
கோபம் குறைந்து விளையாட்டில் கவனம் குவியும் வகையில் செய்துள்ளார்.
ஐபிஎஸ் கனவுடன் இருக்கும் பெண்ணிற்கு அவசர திருமண ஏற்பாடு செய்தால் எவ்வாறு ஒத்துகொள்வாள்.
சத்யாவின் சொல்லுக்கு கட்டுப்பட்டு இருக்கும் தீப்ஷியின் நட்பு வியக்க வைக்கின்றது.
திடீர் கல்யாணமா ?? திடீர் திருப்பமா இருக்கே … இன்னும் என்னெல்லாம் நடக்குமோ