உன் விழியாக நானாகிறேன் அத்தியாயம் -16

Loading

அத்தியாயம் -16

கைப்பேசி தொடர்ந்து அழைத்துக் கொண்டிருக்க விரல்களின் நடுக்கத்தோடு முடியும் தகைப்பேசி தொடர்ந்து அழைத்துக் கொண்டிருக்க விரல்களின் நடுக்கத்தோடு முடியும் தருவாயினில் அழைப்பினை எடுத்தாள். மறுமுனையில் “ஹலோ” இங்கே ஆதிரைக்கோ எச்சிலை விழுங்குவதே கடினமாக இருந்தது.அமைதியாக இருக்க “நான் பேசுறது கேட்குதா?” “ம்ம்… சொல்லுங்க” “நான் ஏன் இன்னும் ரேடியா ப்ரோகிராமுக்கு வரலைன்னு கேட்டீங்களே!” “ம்ம்… ஆமாம் கேட்டேன்” “அதான் மிஸ் பண்ணிங்களான்னு கேட்டேன்” “ம்ம்… ஆமாம்” அவள் அப்படிச் சொன்னதும் மனதிற்குள் அப்படி ஒரு சில்லிட்ட குளிர்ச்சி அவனுக்குள்.மெல்லிய புன்னகை கரைந்தோட “அதுக்கு மட்டும் தானா இல்லை” என்று அவன் நிறுத்தினான்.தர்ஷனின் கேள்வியில் இதயம் படபடவென்று துடித்தது. என்னசொல்வதென்று தமிழ் மொழியில் எழுத்துக்களை தேடியவள் “அ…துக்கா…க மட்டும் இல்லை” என்று வார்த்தைகளை கோர்வையாக்கிச் சொன்னாள். அவன் எதிர்பார்த்த பதிலை அவள் சொன்னதைக் கேட்டவன் “நாளைக்கு சாயங்காலம் வெளியே வியன்காவோடு சந்திக்கலாமா?” என்று தர்ஷன் நேரிடையாக கேட்டான். “எதுக்கு” தயக்கத்தோடு கேட்டாள். “வியன்கா கேட்ட வளையல் வாங்கிட்டு வந்து இருக்கேன் நேர்ல பார்த்து கொடுக்கலாம்னு எனக்கு விருப்பமாக இருக்கு அனுமதி இருக்கா?” “ம்ம்… கூடிட்டு வரேன்” “சரி டைம் என்னன்னு சொல்லிடுங்க” “ம்ம்…” “சரி நல்லா தூங்குங்க குட் நைட்” என்றான் நிறைவாய்… “குட் நைட்” என்று சொல்லி அழைப்பை துண்டித்தவள் கையில் இருந்த கைப்பேசியை பார்த்துக் கொண்டிருந்தாள். இளம் வயதில் காதல் படங்களையும் பாடல்களையும் இரசித்து இருக்கிறாள்.கல்லூரியில் காதல் வயப்பட்டு பேசும் பெண்களை ‘என்ன இவள் இப்படி பிதற்றுகிறாள்’ என்று தான் யோசித்து இருக்கிறாள். ஆதிரையைப் பொறுத்தவரை காதல் என்பது இருமனங்கள் இணைவது என்பது தான்.பெற்றோர்களின் சம்மதத்தோடு நடக்கும் திருமணத்தில் எல்லோரின் அன்பும் ஆசிர்வாதத்தோடு திருமணம் முடிந்து தன் கணவனை காதல் செய்து வாழ்வது.அப்படி பெரிய கனவுகளோடு திருமணத்தை முடித்தவளுக்கு முழுதாக இரண்டு மாதங்கள் கூட அந்த அன்பு பொய்யானது என்று கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்தது. முகம் மற்றும் உடல் முழுக்க காயங்களோடும் செவி முழுவதும் காதலனாய் நினைத்த கணவனின் கெட்ட வார்த்தைகளும் இன்னொரு அம்மாவாக நினைத்தவரின் வசவு மொழிகளும் ஆரம்பத்தில் இருப்பது இருக்கும் போகப் போக சரியாகும் என்று ஆலோசனைகளும் நிறைந்து விழிகளில் கண்ணீர் வழிந்தோடியபடியே மனம் முழுவதும் ஏகப்பட்ட வடுக்களும் ரணங்களும் நிறைந்து உதடுகள் புன்னகையை தொலைத்து வாழ்ந்தவளின் வாழ்க்கையில் இப்போது இந்த முப்பது வயதைத் தொட்டுக் கொண்டு இருப்பவளுக்கு சொல்லா முடியாத நிறைந்த மகிழ்ச்சியோடு ஒரு ஆடவனின் மேல் ஒரு உணர்வு. என்னதென்று தெரியாமல் தவித்தபடி நெற்றியில் வியர்த்த வியர்வையும் மனதில் தோன்றிய பதற்றத்தோடு கூடிய மகிழ்ச்சியை சுமந்தபடி நெஞ்சினில் இரண்டு கைகளையும் வைத்தவள் அப்படியே கண்மூடி மெத்தையில் சாய்ந்தாள். தன் வீட்டின் நீண்ட வரவேற்பறையின் நடுவில் கையில் கைப்பேசியில் வைத்துக் கொண்டு அதில் இருந்த திரையில் இருந்த ஆதிரையின் புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான் தர்ஷன். அவளின் புன்னகை முகமாய் இருந்த புகைப்படத்தின் முன்னே விழிகள் இரண்டும் சிவந்து கண்ணீரோடு நின்று இவனை அஞ்சுவது போல் பார்த்த பார்வையும் நினைவிற்கு வந்து போனது. பெண்கள் என்றாலே ஏமாற்றுபவர்கள் என்று நம்பி வாழ்ந்தவனுக்கு ஒரு பெண்ணின் அதீத வலியை கண்களால் அதைக் காட்ட முடியும் என்று ஆதிரையைப் பார்த்து தான் அவன் தெரிந்துக் கொண்டான். என்றும் மறவாத விழிகளை இனிமேல் அன்பும் ததும்ப காணப் போவதை எண்ணி அவன் நெஞ்சில் ஒரு ஏதோ இனம் புரியாத இன்பம் நிறைந்துக் கொண்டது. மறுநாள் தயக்கத்தோடு வேலைகளை முடித்தவள் வியன்காவிடம் “தர்ஷன் உனக்கு வளையல் வாங்கிட்டு வந்து இருக்காங்களாம் உன்கிட்டே கொடுக்கனும்னு சொன்னாங்க வெளியே எங்கேயாவது போய் சந்திக்கலாமா?” என்று கேட்டாள். வியன்கா “சரிங்க அம்மா அடுத்த முறை தர்ஷனை இங்கே வீட்டுக்கு வரச் சொல்லுங்க” என்றாள் சாதாரணமாக… இவளோ “வீட்டுக்கா?” வியன்கா “ம்ம்… நமக்குன்னு கிப்ட் வாங்கி தர்றாங்க அப்போ வீட்டுக்கு தானே கூப்பிடனும் நீங்க தானே அம்மா ஏற்கனவே சொல்லி இருக்கீங்க நமக்காக மெனக்கெடல் செய்றவங்களுக்கு நாமளும் கொஞ்சமாவது நேரத்தை செலவிடனும்னு அவ்வளவு தூரத்தில் இருந்து கொண்டு வராங்க ஸ்பெஷலா எதாவது சமைச்சு வைங்க அவங்களும் சாப்பிட்டுட்டு போவங்கல்ல” என்றாள் தன் பையில் புத்தகங்களை அடுக்கியபடி… தான் சொல்லி வைத்ததை தனக்கே நினைவுப் படுத்தினாள் மகள்.சரியென்று தலையசைத்தவள் மகளிடம் “சரி இன்னைக்கு சாயங்காலம் வரச் சொல்றேன்” என்றவள் அவனுக்கு குறுஞ்செய்தி அனுப்பினாள். தர்ஷன் “எங்கே சந்திக்கலாம்?” என்று பதில் கேட்டான். ஆதிரை“பக்கத்தில் இருக்கிற மால்ல சந்திக்கலாமா?” “இல்லை வேண்டாம் பீச்சுல பார்க்கலாமா? உங்களுக்கு ஓகே தானே” தர்ஷன் கேட்டான். இவளும் யோசித்துக் கொண்டே “ம்ம்… சரி அங்கேயே பார்க்கலாம் வியன்கா என்னை பீச்சுக்கு அழைச்சுட்டு போக சொல்லிட்டே இருந்தா சரி வரோம்” என்று பதில் அனுப்பி முடித்தாள். ஆதிரை வியன்காவிடம் விவரத்தைச் சொல்ல அவளோ “ஹே ஜாலி பீச்சுக்கு போலாம்” என்று குதூகலித்துச் சென்ற மகளையே பார்த்துக் கொண்டிருந்தாள் ஆதிரை.தர்ஷனின் எண்ணிற்கு நேரத்தையும் சந்திக்கும் இடத்தைப் பற்றி குறுஞ்செய்தி அனுப்பினாள்.அவனும் சரியென்று பதிலளித்தான். அவளுக்கு அன்றைய பொழுது சரியாக வேலையே ஓடவில்லை.அவனிடம் வருகிறோம் என்று சொல்லி விட்டாள்.ஆனால் மனதில் பலவிதமான கேள்விகள் வந்து போயின.சில நாட்கள் பழக்கமான ஒரு அந்நியனுடன் தனியாக அதுவும் தன் பெண்பிள்ளையோடு சந்திப்பது இருவரையும் யாராவது கண்டால் தன்னைப் பற்றி எதாவது தவறாக நினைத்துக் கொள்வார்களோ? என்று பலவாறு யோசித்தே நேரம் சென்றது.தான் செய்வது தவறு அது பெரிய குற்றமோ என்று வேறு தன்னையே குழப்பிக் கொண்டிருந்தாள். ஏற்கனவே அவனோடு தனியாக சென்று இருக்கிறாள் தான்.அப்பொழுது எல்லாம் அவன் தெரிந்தவன் அதோடு இந்தச் சந்திப்பு எல்லாம் இதோடு முடிந்தது என்ற மனநிலை.ஆனால் இப்போது அப்படி எல்லாம் இல்லை.அவனை பிடித்திருக்கிறது என்று வெளிப்படையாக சொல்லவில்லை என்றாலும் ஆமாம் என்று ஒத்துக் கொண்டு இருக்கிறாளே!எல்லாம் விசாரித்து அப்பா அம்மாவின் முழு சம்மதத்தோடு முடித்து துணையாக்கிக் கொண்டவனே அவளை இன்னலில் விட்டுச் சென்றிருக்க தர்ஷனைப் பற்றி எந்த விஷயமும் தெரியாமல் அவனை பிடித்திருக்கிறது என்று சொன்ன மனதைப் பற்றி தன்னிடமே கேள்விக் கேட்டு கொண்டிருந்தாள். வீட்டுக்கு வந்து சாப்பிடவும் முடியாமல் வெறும் தண்ணீரை மட்டும் குடித்தவள் பல குழப்பங்களோடு முகத்தில் சிரிப்பே இல்லாமல் ஆதிரை கிளம்பினாள்.ஆனால் வியன்காவிற்கோ ஏகப்பட்ட மகிழ்ச்சியில் கொஞ்சம் புதிரோடு தர்ஷனை சந்திக்கும் ஆவலில் சென்றாள். எப்போதும் தன் இருசக்கர வாகனத்தில் செல்பவள் இன்று ஆட்டோவில் சென்றாள்.சரியாக ஐந்து மணிக்கு அவள் சொன்ன இடத்தில் போய் நின்றாள்.

ருவாயினில் அழைப்பினை எடுத்தாள்.

மறுமுனையில் “ஹலோ”

இங்கே ஆதிரைக்கோ எச்சிலை விழுங்குவதே கடினமாக இருந்தது.அமைதியாக இருக்க “நான் பேசுறது கேட்குதா?”

“ம்ம்… சொல்லுங்க”

“நான் ஏன் இன்னும் ரேடியா ப்ரோகிராமுக்கு வரலைன்னு கேட்டீங்களே!”

“ம்ம்… ஆமாம் கேட்டேன்”

“அதான் மிஸ் பண்ணிங்களான்னு கேட்டேன்”

“ம்ம்… ஆமாம்”

அவள் அப்படிச் சொன்னதும் மனதிற்குள் அப்படி ஒரு சில்லிட்ட குளிர்ச்சி அவனுக்குள்.மெல்லிய புன்னகை கரைந்தோட “அதுக்கு மட்டும் தானா இல்லை” என்று அவன் நிறுத்தினான்.தர்ஷனின் கேள்வியில் இதயம் படபடவென்று துடித்தது.

என்னசொல்வதென்று தமிழ் மொழியில்  எழுத்துக்களை தேடியவள் “அ…துக்கா…க மட்டும் இல்லை” என்று  வார்த்தைகளை கோர்வையாக்கிச் சொன்னாள்.

அவன் எதிர்பார்த்த பதிலை அவள் சொன்னதைக் கேட்டவன் “நாளைக்கு சாயங்காலம் வெளியே வியன்காவோடு சந்திக்கலாமா?” என்று தர்ஷன் நேரிடையாக கேட்டான்.

“எதுக்கு” தயக்கத்தோடு கேட்டாள்.

“வியன்கா கேட்ட வளையல் வாங்கிட்டு வந்து இருக்கேன் நேர்ல பார்த்து கொடுக்கலாம்னு எனக்கு விருப்பமாக இருக்கு அனுமதி இருக்கா?”

“ம்ம்… கூடிட்டு வரேன்”

“சரி டைம் என்னன்னு சொல்லிடுங்க”

“ம்ம்…”

“சரி நல்லா தூங்குங்க குட் நைட்” என்றான்  நிறைவாய்…

“குட் நைட்” என்று சொல்லி அழைப்பை துண்டித்தவள் கையில் இருந்த கைப்பேசியை பார்த்துக் கொண்டிருந்தாள்.

இளம் வயதில் காதல் படங்களையும் பாடல்களையும் இரசித்து இருக்கிறாள்.கல்லூரியில் காதல் வயப்பட்டு பேசும் பெண்களை ‘என்ன இவள் இப்படி பிதற்றுகிறாள்’ என்று தான் யோசித்து இருக்கிறாள்.

ஆதிரையைப் பொறுத்தவரை காதல் என்பது இருமனங்கள் இணைவது என்பது தான்.பெற்றோர்களின் சம்மதத்தோடு நடக்கும் திருமணத்தில் எல்லோரின் அன்பும் ஆசிர்வாதத்தோடு திருமணம் முடிந்து தன் கணவனை காதல் செய்து வாழ்வது.அப்படி பெரிய கனவுகளோடு திருமணத்தை முடித்தவளுக்கு முழுதாக இரண்டு மாதங்கள் கூட அந்த அன்பு பொய்யானது என்று கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்தது.

முகம் மற்றும் உடல் முழுக்க காயங்களோடும்  செவி முழுவதும் காதலனாய் நினைத்த கணவனின் கெட்ட வார்த்தைகளும் இன்னொரு அம்மாவாக நினைத்தவரின் வசவு மொழிகளும்  ஆரம்பத்தில் இருப்பது இருக்கும் போகப் போக சரியாகும் என்று ஆலோசனைகளும் நிறைந்து விழிகளில் கண்ணீர்  வழிந்தோடியபடியே  மனம் முழுவதும் ஏகப்பட்ட வடுக்களும் ரணங்களும் நிறைந்து உதடுகள்  புன்னகையை தொலைத்து வாழ்ந்தவளின் வாழ்க்கையில் இப்போது இந்த முப்பது வயதைத் தொட்டுக் கொண்டு இருப்பவளுக்கு சொல்லா முடியாத நிறைந்த மகிழ்ச்சியோடு ஒரு ஆடவனின் மேல் ஒரு உணர்வு.

என்னதென்று தெரியாமல் தவித்தபடி நெற்றியில் வியர்த்த வியர்வையும் மனதில் தோன்றிய பதற்றத்தோடு கூடிய மகிழ்ச்சியை சுமந்தபடி நெஞ்சினில் இரண்டு கைகளையும் வைத்தவள் அப்படியே கண்மூடி மெத்தையில் சாய்ந்தாள்.

தன் வீட்டின் நீண்ட வரவேற்பறையின் நடுவில் கையில் கைப்பேசியில் வைத்துக் கொண்டு அதில் இருந்த திரையில் இருந்த ஆதிரையின் புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான் தர்ஷன்.

அவளின் புன்னகை முகமாய் இருந்த புகைப்படத்தின் முன்னே விழிகள் இரண்டும் சிவந்து கண்ணீரோடு நின்று இவனை அஞ்சுவது போல் பார்த்த பார்வையும் நினைவிற்கு வந்து போனது.

பெண்கள் என்றாலே ஏமாற்றுபவர்கள் என்று நம்பி வாழ்ந்தவனுக்கு ஒரு பெண்ணின் அதீத வலியை கண்களால் அதைக் காட்ட முடியும் என்று ஆதிரையைப் பார்த்து தான் அவன் தெரிந்துக் கொண்டான்.

என்றும் மறவாத விழிகளை இனிமேல் அன்பும் ததும்ப காணப் போவதை எண்ணி அவன் நெஞ்சில் ஒரு ஏதோ இனம் புரியாத இன்பம் நிறைந்துக் கொண்டது.

மறுநாள் தயக்கத்தோடு வேலைகளை முடித்தவள் வியன்காவிடம் “தர்ஷன்  உனக்கு வளையல் வாங்கிட்டு வந்து இருக்காங்களாம் உன்கிட்டே கொடுக்கனும்னு சொன்னாங்க வெளியே எங்கேயாவது போய் சந்திக்கலாமா?” என்று கேட்டாள்.

வியன்கா “சரிங்க அம்மா அடுத்த முறை தர்ஷனை இங்கே வீட்டுக்கு வரச் சொல்லுங்க” என்று  சாதாரணமாக கேட்டாள்.

 

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்