Loading

 இதழ், அபியின் இதழ்களுக்குள் சிறை பட்டிருந்தது.. இதழ் வழியாக அவளின் உயிரை குடிப்பவன் போல், அபி, அவளின் இதழிலேயே மூழ்கி தொலைந்து போக, சாதனாவிற்கு இந்த நிமிடம் இப்படியே உறைந்து போய்விடாதா.. என்பதுபோல் இருந்தது…அவளுக்கு கால்கள் தொய்வதுபோல் இருக்க..அவனின் சட்டை காலரை தன் கைகளால் இறுக பற்றி கொண்டாள்.. அவளின் செயலில் மேலும் போதை கொண்டவன்.. மேலும்,  மேலும் அவள் இதழ்களுக்குள் மூழ்க.. சாதனாவிற்கு மூச்சு முட்டுவதுபோல் இருந்தது..

அந்த நிலையிலும் தன்னவளின்  மாற்றத்தை உணர்ந்தவன், உடனே அவளின் இதழை விடுவித்தவன் அவள் வேகமாக மூச்சு விடுவதை பார்த்து.. “சாரி பேபி.. சாரி பேபி.. ரொம்ப கஷ்டப்படுத்தட்டேனா..?” என்று பதட்டத்துடன் கேட்டவனை.. காதலுடன் பார்த்தவள்..  “என் மனுவிற்கு என்னை எப்பவுமே கஷ்டப்படுத்த தெரியாது..” என்று கூறியவள் அவனின் மார்பில் சாய்ந்து கொண்டாள்…. அவளின் நம்பிக்கையில் மனம் நிறந்தவன்.. அவளை இறுக்கமாக அணைத்து கொண்டான்.. 

அவர்களின் இந்த மோன நிலையை கலைப்பது போல் அபியின் செல் அலற, வாசுகி அழைத்திருந்தார்.. மாலை வரவேற்பு நிகழ்ச்சிக்கு சாதனாவை அலங்கரிப்பதற்கு அழகு நிலையத்திலிருந்து பெண்கள் வந்திருப்பதாக கூற.. சாதனா அவசரமாக அவனிடமிருந்து விலகினாள்.. அவளின் முகம் வெட்கத்தில் செம்பருத்தியாக மலர்ந்திருந்தது,, வேகமாக வெளியே செல்ல போனவளின் கையை பிடித்து நிறுத்திய அபியை முறைத்தவள் ”விடுங்க மனு.. வசும்மா இங்க வந்துர போறாங்க…” என்று சிணுங்க.. ”விட்றேன் பேபி ஆனா வெளிய இப்படியேவா போக போற..?” என குறும்புடன் கேட்க..

ஏன் என்று குழப்பத்துடன் பார்த்தவளை.. 

“ஒரு நிமிசம் இரு…” என்றவன்  சுற்றுறும் முற்றும் பார்த்து அங்கிருந்த சில்வர் தட்டை எடுத்து அவள் முகம் பார்க்குமாறு காட்ட..அதில் அவள் முகம் பார்த்தவள் செங்கொழுந்தாகி போனாள்… அவளின் ஆடை களைந்திருக்க, நெற்றி பொட்டு இடம் மாறி இருந்தது…“ஃப்ராடு மனு ” என்றவள் கையால் தன் முகத்தை மறைத்து கொண்டாள்.. அவள் செய்கையை பார்த்தவன் வாய்விட்டு சிரித்த படி அவளின் அருகில் வந்து… முகத்தை மூடியிருந்த அவளின் கைகளை விலக்கியவன்… அவளின் தலைமுடியை சரிசெய்துவிட்டு, நெற்றி பொட்டை நேராக வைத்துவிட்டு..கசங்கி இருந்த ஆடையை, நீவி விட்டு சரி செய்தவன்.. 

“ம் இப்ப சரியா இருக்கு போ பேபி..” என்றவன் அவள் நெற்றியில் முத்தமிட்டு அனுப்பி வைத்தான்.. அவனின் செய்கைய ரசித்து பார்த்தவள் ஒன்றும் கூறாமல்  அவனை பார்த்து கொண்டே, வெளியே சென்றாள்…வெளியே வந்த சாதனாவை போலி கோபத்துடன், வாசுகி  அவளிடம்.. “ உன்ன நான் எவ்வள்வு நேராமா கூப்டிட்டு இருக்கேன்.. நீ எங்க போன..? என கேட்க.. “இல்ல வசும்மா கிச்சன்ல ஏதோ சத்தம் கேட்டுச்சு அதான் என்ன சத்தம்னு போய் பார்த்தேன்….”என்று சமாளிக்க.. “என்ன உள்ள ரெண்டு கால் பூனை இருந்துச்சா..?” என்று கிண்டலாக கேட்க.. “ஐயோ எப்படி வசும்மா கரெக்க்டா கண்டு புடிச்சிங்க.. நிஜமாவே உள்ள ரெண்டு கால் பூனை இருக்கு.. நீங்க போய் மிரட்டினாதான் அது போகும் போல.. அதான் நான் உங்களை கூப்பிட வந்தேன்.. நீங்களே வந்துட்டிங்க.. போய் அந்த பூனைய ரெண்டு அடி போடுங்க வசும்மா..” என்றவள்…

அவர் மேலே ஏதும் பேசும்முன் உள்ளே ஓடிவிட்டாள்.. “சரியான வாலு..” என்றவாறே வாசுகியும் உள்ளே சென்றார்…சரியாக ஏழு மணிக்கு ஹோட்டலில் உள்ள தோட்டத்தில், நிகழ்ச்சி ஆரம்பமாக.. மணமக்கள் இருவரும் மேடை ஏறினர்.. வெள்ளை மற்றும் பின்க் நிறத்தில்..ஆன பலூன்ங்களால் மேடை அலங்கரித்திருக்க..அதன் பின்னனியில்..  பிங்க் மற்றும் வெள்ளை நிற பூக்களால் இதயத்தை வடிவமைத்து, அதில் Abi Wed Sana. என்று தங்க நிற எழுத்துக்களால் பொறித்திருக்க.. அந்த  மேடையே ஒரு தேவலோகம் போல் காட்சி அளித்தது… அதற்கு மேலும் அழகு சேர்ப்பது போல்.. அபியும், சாதனாவும் .. இந்திரனும், இந்திராணியும் போல் மிக பொறுத்தமாக இருந்தனர்.. அபி ஆண்மைக்கு இலக்கணமாக க்ரே மற்றும கறுப்பு நிறத்தில் கோட் அணிந்து கம்பீரமாக இருக்க.. சாதனா இங்க் ப்ளூ நிறத்தில் ஆடை அணிந்து அதில் ஆங்காங்கே கற்கள் பதித்து அவள் அசையும் போதெல்லாம்.. அதன் ஒளி அவள் முகத்தில் பட்டு அவளை கண்ணாடி சிலையாக காட்டியது.. 

மணமக்களை ஒவ்வொருவராக வந்து வாழ்த்தி பரிசளிக்க..இருவரும் புன்னகையுடன் அதை ஏற்றுக்கொண்டனர்… அபியின் அருகில் கொஞ்சம் தள்ளி பிரபு நின்றிருக்க.. அபிக்கு வந்த பரிசுகளை எல்லாம் அவன் வாங்கி வைத்தான்.. அதே போல் சாதனாவின் அருகில்.. மது நின்று கொண்டு அவ்வாறே செய்தாள்.. சுமார் ஒரு மணி நேரம் நின்ற சாதனாவிற்கு கால் வலிப்பது போல் இருக்க.. சிறிது கால் மாற்றி நின்றாள்.. அதை கவனித்த அபி..”என்ன பேபி கால் வலிக்குதா..? இப்பதான் யாரும் வரலையே கொஞ்ச நேரம் உட்கார்..” என்று அவளை சோபாவில் அமர வைத்தான்.. அவர்கள் அமர்ந்த மறு விநாடியில் அவர்களுக்கு மது வந்து பழச்சாறு கொடுத்தாள்..     .     தாகத்தின் காரணமாக வேகமாக பழச்சாரை குடித்து முடித்தவளின் கையில் ”தாகமா இருந்தா சொல்ல மாட்டியா பேபி” என்று அக்கறையாக கடிந்து கொண்டவன், தன்னுடையதையும் அவளுக்கு கொடுக்க, ”இல்ல மனு நீங்க குடிங்க.. “என்று மறுத்தவளை ”நான் வேற வாங்கிக்கிறேன் பேபி,, நீதான் சோர்வா தெரியற நீ குடி” என்றவாறு கொடுக்க, அதை பருகி கொண்டே அபியிடம் பேசி கொண்டிருந்தவளை.. “வாழ்த்துக்கள் சாதனா..” என்ற குரல் கேட்க.. நிமிர்ந்து பார்த்த சாதனா.. ஒரு நொடி அதிர்ச்சியாகியவள்.. மறு விநாடி.. “அக்கா..” என கூறி அந்த பெண்மணியை தாவி அணைத்து கொண்டாள்.. அந்த பெண்ணும் சாதனாவை அணைத்து கொண்டவள்.. மீண்டும் அவளிடம் “வாழ்த்துக்கள் சாதனா.. நான் சொன்னது போலவே அந்த கடவுள் உன்ன ஒரு நல்லவர் கையில் கொடுத்துட்டார் பார்த்தியா…? என்று மகிழ்ச்சியுடன் கூற.. சாதனாவும் அதை புன்னகையுடன் ஆமோத்திதாள்.. 

ஆம் அந்த பெண்மணி அன்று சாதனாவை பிரகாஷிடம் இருந்து சாதனா தப்புவதற்காக உதவி செய்தவள்..  ”அக்கா நீங்க எப்படி இருக்கிங்க..? உங்களுக்கு நான் இங்க இருக்கிறது எப்படி தெரியும்…? என ஆச்சரியமாக வினவ.. அவள்..“நான் அந்த நரகத்திலிருந்து விடுதலையாகி.. ரொம்ப சந்தோசமாகவும், நிம்மதியகவும்,  கௌரவமாகவும், வாழறேன்னா அதுக்கு அபிமன்யூ சார்தான் முழு காரணம்..” என்று அபியை  பார்த்து நன்றி கூற, சாதனா பிரமிப்புடன் அபியை பார்த்திருந்தாள்.. “நான் என்ன சிஸ்டர் செஞ்சேன்..? நான் எதுவும் செய்யலை.. வேலை கேட்டு வந்திங்க… கம்பெனிக்கும் ஆள் தேவையா இருந்துச்சு அதான் வேலை போட்டு கொடுத்தேன்..இத போய் பெருசா பேசுறிங்களே”.. என சாதரண்மாக பேச..

”என் குடும்பத்தை காப்பத்த அந்த நரகத்துல விழுந்த என்னை தேடி புடிச்சு அதுல இருந்து மீட்டு.. இப்ப எங்க குடும்பமும் நானும் நிம்மதியா வாழறதுக்கு நீங்க தான காரணம்..  இப்ப நான் இவ்வளவு நிம்மதியா இருக்கேன்னா அதுக்கும் நீங்கதான் காரணம்.. இதெல்லாம் ஒண்ணுமே இல்லைன்னு ரொம்ப சாதரணமா சொல்றிங்கன்னா அது உங்களோட  நல்லமனசு.. இத நான் எப்பவும் மறக்க மாட்டேன் சார்..” என்று நன்றியுடன் கூறியவள்.. அவர்களுக்கு மீண்டும் வாழ்த்து கூறி.. பரிசளித்துவிட்டு கீழே இறங்கினாள்.. ”சே இந்த சிஸ்டர் வந்தா உனக்கு ஒரு சர்பிரைஸா இருக்கும்னு நினச்சா.. என்னைய  ஐஸ் மழைல நனைய வச்சுட்டு போய்ட்டாங்களே..” என்று கிண்டல் பண்ண, சாதனா ஒன்றும் பேசாமல் அவனையே பாத்திருந்தாள்…

அபி “என்ன பேபி.. என்ன அப்படி பார்க்கிற..” என்று தன் ஒற்றை புருவத்தை ஏற்றி கேட்டவனை.. “எனக்காகவா மனு..? “ என்று கேட்க.. அவன் புன்னகையுடன் தன் கண்களை மூடி ம்ம் என்றவன்.. “உன் சம்பந்தப்பட்ட எந்த விசயமும் என் பார்வையில இருந்து தப்பாது பேபி. அது நல்ல விசயமா இருந்தா.. உங்கிட்ட நெருங்க விடுவேன்.. அதே கெட்ட விசயமா இருந்தால்.. அத நானே அழிச்சிருவேன் பேபி..” என்று குரலில் தீவிரத்துடன் கூறியவனை கண்ணில் காதலுடன் பார்த்தவள்.. “எனக்கு இப்ப தேன்மிட்டாய் சாப்பிடனும் போல இருக்கு மனு.. அதுவும் ரொம்ப…” என்று ஹஸ்கி வாய்ஸில் பேச..  அவன் வியப்புடன் அவளை பார்க்க.. அவளின் பார்வையில் கட்டுண்டவனாக.. “வேண்டாம் பேபி இப்படி பார்க்காத அப்பறம் பொது இடம்னு கூட பார்க்க மாட்டேன் நீ கேட்டதை கொடுத்துருவேன்.. அப்பறம் என்னைய ஃப்ராடுன்னு சொல்ல கூடாது..” என்று செல்லமாக மிரட்டினான்..”கடவுளே இவங்க ரொமான்ஸ் தாங்க முடியலையே.. ஒரு சின்ன பொண்ணு இருக்கான்னு கூட பார்க்க மாட்டிங்கிறாங்களே..”என்று அவர்களை கேலி பேசியபடி வந்தாள்.. மது..

சாதனா வெட்கத்தில் தலை குணிய.. அபியோ “கடவுளே இந்த கொசு தொல்லை தாங்க முடியலையே.. இந்த கரடிய எல்லாம் யார் உள்ள விட்டது..” என்று பதிலுக்கு கிண்டல் அடிக்க.. “என்னது நான்  கரடியா,,?” என்று கோபமாக கேட்க.. “இங்க நீயும், என் பேபியும்தான் இருக்கிங்க..என் பேபிய நான் சொல்லமாட்டேன்னு உனக்கே தெரியும்.. சோ..”என்று மேலும் அவளை வம்பிழுத்த்தான்..மது கோபத்துடன் ஏதோ சொல்ல வருவதற்குள்.. வேறு ஆட்கள் வர..மது நங்..நங்கெண்று பாதத்தை தரையில் ஊன்றி நடந்து தன் கோபத்தை வெளிபடுத்தியவாறே சென்றாள்..அவள் செல்வதை சாதனாவும் அபியும் புன்னகையுடன் பார்த்திருந்தனர்..

ஒருவழியாக..ரிஷப்சன் நல்லபடியாக நடந்து முடிந்தது.. பெரியவர்கள் அபியும் சாதனாவையும் வீட்டிற்கு அழத்து செல்ல.. அபி, பிரபுவை அனைத்தையும் பார்த்து கொள்ள சொல்லிவிட்டு சாதனாவுடன் கிளம்பினான்.. அபியின் வீட்டிற்கு வந்தவர்கள்.. அபியை அவன் அறையிலும் சாதனாவை இன்னொரு அறையிலும் இருக்க சொல்ல முறைத்து கொண்டே அவனின் அறைக்கு சென்றான்..அபி.. சாதனாவை மிதமாக அலங்கரித்து அபியின் அறைக்கு அனுப்பி வைத்தார்கள்.. ஏனென்றே தெரியாமல் சாதனாவிற்கு அன்று அவள் கண்முன் நடந்தேறிய நிகழ்வு அவள் கண்முன் தோன்றி அவளை அச்சுறுத்தியது.. ஒருவித தயக்கத்துடனும், பயத்துடனும் அவனின் அறைக்குள் நுழைந்து கதவை தாழிட்டவள்… 

அங்கு கட்டிலில் அமர்ந்திருந்த அபியை பார்த்து திகைத்தாள்.. ஏனென்றால்.. ஷாட்சும், டி சர்ட்டும் அணிந்து.. காதில் ஹெட் போனை மாட்டி மும்முரமாக பாட்டு கேட்டு கொண்டிருந்தான் அபி.. அவன் அவளை ஆர்வமாக பார்த்திருந்தால், அவள் இன்னும் பயந்திருப்பாளோ என்னவோ..அவனின் இந்த இயல்பான செயல்.. அவளின் பயத்தையும், தயக்கத்தையும் ஒதுக்கி, ”நான் வந்தது கூட தெரியாம அப்படி என்ன பாட்டு கேக்கறாங்க?” என்று அவளின் ஆர்வத்தை தூண்ட.. கொண்டு வந்த பால் செம்பை அங்கிருந்த மேஜைமேல் வைத்தவள்.. ஓசை படாமல்.. அவன் அருகில் சென்று அந்த டேபை பார்க்க..அதை பார்த்தவள் கலகலவென்று சிரித்துவிட்டாள்..

ஆம் அவன் அதில் ”குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்”  என்ற முருகன் பாடலைத்தான் அவ்வளவு ஆர்வமாக கேட்டு கொண்டிருந்தான்…இல்ல.. இல்லை கேட்பது போல் நடித்து கொண்டிருந்தான்.. சாதனாவிற்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்பவன்..இதில் மட்டும் விட்டு விடுவானா என்ன..அவளின் பயத்தையும் தயக்கத்தையும் போக்கி அவளை இயல்பாக்கவே இவ்வாறு செய்தான்.. அவளின் சிரிப்பு சத்தத்தை ரசித்தவாறே கண் திறந்தவன் இப்பொழுதுதான் அவளை பார்ப்பது போல்.. “பேபி நீ எப்ப வந்த,? வந்து ரொம்ப நேரமாச்சா..?” என ஒன்றும் தெரியாதவன் போல் கேட்க..

”நான் அப்பவே வந்துட்டேன் மனு,, நீங்க ஏதோ இன்ரஸ்ட்டா.. பாட்டு கேட்டுட்டு இருந்திங்க சரி என்ன பாட்டு கேட்டுட்டு இருக்கிங்கன்னு பார்த்தா..  செம்ம பாட்டு மனு..” என்று சிரித்து கொண்டே கூற.. அபியும் புன்னகையுடன் அவளை பார்த்தான்.. எனக்கு நைட்டுனா கொஞ்சம் பயம் வரும் பேபி.. அதான் சாமி பாட்டு கேட்டுட்டு இருந்தேன்.. இனிமேல பயமிருக்காது.. அதான் நீ வந்துட்டேல்ல..”  என்று கூற..”அச்சோ என் அழகு மனு அசடு வழியுது தொடச்சுக்கங்க.நீங்க சொன்னதை நான் அப்படியே நம்பிட்டேன்.” என்று நம்பாமல் கூறியவளை… 

ஒரு நிமிடம் அழ்ந்து பார்த்தவன் “எங்கிட்ட உனக்கு எதுக்கு பயம் பேபி.. நான் உன்னோட மனுதான..? அப்பறம் எதுக்கு இந்த ரூம்க்கு வர தயங்கின..  நீ தயங்குனது எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு பேபி.. இன்னும் என்னால உன் பயத்தை போக்க முடியலையே…ன்…னு” என்று வருத்தத்துடன் பேசிக்கொண்டிருந்தவனை.. தாவி வந்து இறுக அணைத்து கொண்டவள். ”என்ன மன்னிச்சிருங்க மனு.. அது என்னை அறியாமல் வந்துருச்சு.. உங்க கிட்ட நான் பயந்தேன்னா அது எங்க அம்மாவ பார்த்து பயபட்றமாதிரி மனு…நான் உங்களை பார்த்து பயப்படலை மனு… என்னை நம்புங்க..” என்று கேவி.. கேவி அழுதவளை.. 

”பேபி இங்க பாரு பேபி எதுக்கு இந்த அழுகை.. சரி நீ பயப்படல நான் ஒத்துக்கிறேன்.. இப்ப நீ அழாம இருந்தேன்னா உனக்கு ஒரு சர்பிரைஸ் காட்டுவேன்..” என்றவாறு அவளை அணைத்து சமாதானம் செய்தவன்..அவள் விசும்பிக்கொண்டே அவளின் கண்ணிரை அவன் மார்பில் துடைத்தவள்.. “நான் அழவில்லை.. என்ன சர்பிரைஸ் அது..” என கேட்க.. ”கண்ணை மூடு பேபி சொல்றேன்..”என அவள் கண்ணை மூடவும்.. அவளை கைகளில் ஏந்திக்கொள்ள… மனு..என்ன பண்றிங்க.. விடுங்க என்று சிணுங்கியவாறு அவன் கைகளில் துள்ளியவள் கண்னை திறக்க.. ”பேபி கண்ணை திறக்க கூடாது”  என்றவாறே அவளை ஒரு வழுவழுப்பான இடத்தில் அமர வைத்தவன் தானும் அவள் அருகில் அமர்ந்து ”இப்ப கண்ணை திறந்து பாரு பேபி..” என கண்களை திறந்த்தவள் அவள் அமர்ந்த்திருந்த இருக்கையை பார்த்து  “ஹே… “ மகிழ்ச்சியில் அபியை இறுக அணைத்து கொண்டாள்..

அவனும் அவளை இறுக அணைத்து கொண்டு காலால் உந்த அந்த கண்ணாடி ஊஞ்சல்..அவர்களை சுகமாக தாலாட்டியது.. “மனு இது எப்ப வாங்கினிங்க.. ரொம்ப சூப்பரா இருக்கு மனு இந்த ஊஞ்சல்..” என்று அவன் மடியில் படுத்து கொண்டே அவனிடம் கேட்க.. அவளின் கலைந்திருந்த கூந்தலை ஒதுக்கியவாறு..” பேபி நீ நம்ம வீட்டுக்கு வரும்போதெல்லாம்.. தோட்டத்துல போட்டிருக்குற ஊஞ்சல்ல கொஞ்ச நேரமாவது விளையாடிட்டுதான் போவ.. அதுவும் அம்மா சொன்னதுக்கு பிறகுதான் உள்ளயே வருவ.. அப்பவே முடிவு பண்ணிட்டேன் பேபி நம்ம ரூம்ல உனக்காக ஒரு ஊஞ்சல் போடணும்னு..” என்று கூற..

அவன் மடியிலிருந்து எழுந்தவள்.. “இவ்வளவு காதல் என்மேல வைக்கிற அளவுக்கு நான் அப்படி என்ன செஞ்சேன் மனு..உங்களுடய காதல் என்னை ஒவ்வொரு நாளும் பிரமிக்க வைக்குது மனு.. இதே அளவு காதல் நான் உங்க மேல வச்சுருக்கனா மனு..”என்று கலக்கமாக கேட்டவளை.. ஆறுதலாக அணைத்து கொண்டவன்.. “பேபி.. காதல்னா என்னன்னு நினச்ச பேபி..தகுதிய பார்த்து வர்றதுன்னா..இல்ல மனச பார்த்து வர்றதுன்னா நினச்ச.. இல்ல பேபி.. காதல் தகுதியும் பார்க்காது மனசையும் பார்க்காது அவங்க கிட்ட இருக்கிற குறை நிறைகளோட அப்படியே ஏத்துக்கிறதுதான் பேபி காதல்.. என்னைய பொறுத்தவரைக்கும்  இதனால் தான் காதல் வந்தது..ஒரு காரணத்தோட காதலிச்சா அதுக்கு பேர் காதல் இல்ல பேபி.. எந்த எதிர்பார்ப்பும் இல்லாம.. ஆணோ, பெண்ணோ யாரா இருந்தாலும்.. இவங்களுக்காக எது வேண்டுமானலும் செய்யலாம் அப்படின்னு தோணனும் பேபி..”

நான் அவளுக்காக என்னவெல்லாம் செஞ்சிருக்கேன் அப்படின்னு ஒரு நொடி கூட தோண கூடாது.. அவளை மகிழ்ச்சியா வச்சுக்க.. இன்னும் நாம என்ன செய்யலாம்னு தோன்றணும். உன்ன நம்ம ஆஃபீஸ்ல, உன் உணர்ச்சி துடைத்த முகத்த பார்க்கிறப்ப எனக்கு இதுதான் தோணுச்சு பேபி.. உன்ன சந்தோசமா வசுக்கணும்.. நீ கேட்பது எல்லாம் வாங்கி தரணும்.. உன்ன என் கைக்குள்ளயே வச்சுக்கணும்.. அதுக்காக என்ன வேணாலும் செய்யலாம்னு தோணுச்சு பேபி..” இதோ இந்த நிமிசம் நீ என் கைக்குள்ள இருக்க.. ஐ யம் சோ ஹேப்பி பேபி..” என்றவாறு அவளை தோளோடு அணைத்து கொள்ள..

அவனையே பார்த்திருந்த சாதனா.. மீண்டும் “நீங்க என் வாழ்க்கையில வரலைன்னா நான் என்ன ஆகிருப்பேன் மனு..?” என்று குரல் நடுங்க கேட்டவளை இறுக அணைத்து கொண்டவன்… “அதெப்படி பேபி நான் வாராம எங்க போவேன்..? கடவுள், எங்கிட்ட உனக்கு ஒரு தேவதைய தரப்போறேன் அவளை நீ பத்திரமா பார்த்துக்கணும்.. இல்லை உன்னை அடி பிச்சு போடுவேன்னு மிரட்டிதான் எங்கம்மா வயித்துல என்ன வச்சார்..” என்று குறும்புடன் கூறியவன், அவள் முறைத்து பார்க்கவும்.. “  அதான் வந்துட்டேனே பேபி பின்ன ஏன் வ்ராம போனான்னு நெகட்டிவ் தாட்..?” என்றவன்.. பேபி.. இப்பவும் சொல்றேன் உன்னை நெருங்கிற எந்த ஆபத்தாக இருந்தாலும் என்ன தாண்டிதான் உங்கிட்ட வரும்.. ம். கூம் அதை கூட நான் வரவிடமாட்டேன்.. பேபி..”

நீ இப்ப என் கைக்குள்ள பத்திரமா இருக்க எதை பத்தியும் நினைக்காம நிம்மதியா தூங்கு பேபி..” என்று ஆழ்ந்த குரலில் கூற..அவன் மார்பில் சாய்ந்திருந்த சாதனா விலுக்கென்று நிமிர்ந்து அமர்ந்தாள்.. “என்னாச்சு பேபி..?” அவள் வேகமாக எழவும் அபி கேட்க.. “மனு உண்மைய சொல்லுங்க.. அன்னைக்கு ராத்திரி என்ன காப்பாத்தி கார்ல கூட்டிடு வந்தது நீங்கதான.?”.என்று பரபரப்போடு கேட்டவளிடம், என்னைக்கு ராத்திரி பேபி..?” என்று புரியாதவன் போல் கேட்க.. “அன்னைக்கு நான் அந்த பிரகாஷ்கிட்ட இருந்து தப்பிச்சு வந்தப்ப என்ன காப்பாத்தினது நீங்க தான..” என கேட்க.. அவன் புன்னகையுடன் ஆம் என்று தலை அசைத்தவன் எப்படி பேபி கண்டு புடிச்ச..?” என கேட்க.. “அதான் இப்ப சொன்னிங்களே பத்திரமா இருக்கன்னு.. அத வச்சுதான்..” என்றவள் ..

அவனை இறுக அணைத்து கொண்உ அவன் முகம் முழுதும் முத்தமழை பொழிந்தாள்.. அவளின் அதிரடியான வேகத்தை சுகமாக தாங்கி கொண்டவன்.. ”என்னாச்சு பேபி..” என.. “ஒரு நிமிஷம் இருங்க என்றவள்..உள்ளே வந்து அங்கு ஓரமாக இருந்த தன் பெட்டியை திறந்தவள்.. அதன் அடியிலிருந்து ஒரு ஆடையை எடுத்து வந்து அவனிடம் காட்ட இப்பொழுது அபி திகைத்தான்..”பேபி இது நான் அன்னைக்கு உனக்கு கொடுத்தது.. அதை இன்னும் நீ வச்சிருக்கியா?” என ஆச்சரியத்தோடு வினவ.. அவள் புன்னகையும் கண்ணீரும் கலந்த முகத்துடன் ஆம் என்றாள்.. ”எனக்கு ரொம்ப மனசு ஒரு மாதிரி பயமா இருந்தால் இத எடுத்து மாட்டிக்குவேன்..மனு எனக்கு எங்க அப்பாக்கிட்ட இருக்கிறமாதிரி  பாதுகாப்பா தோணும்..”

ஆனா எப்ப உங்களை பார்த்தேனோ.. அப்ப இருந்து இந்த ட்ரெஸ்ஸ போடலை ஏன்னா எனக்கு பயமே தோணலை…ஆனா இதை கீழ போடவும் மனசு வரலை.. இதை உங்க்கிட்ட சொல்லி இந்த ட்ரெஸ்ஸ என்னா செய்யலாம்னு கேட்கலாம்னு.. நினச்சேன்.. ஆனா இது என் மனுவோட ட்ரெஸ்ஸ்னு எதிர்பார்க்கல..” என்று அந்த ஆடையை இறுக அணைத்து கொண்டவள்… ”மனு..நீங்க என்னை பேபி.. பேபின்னு கூப்பிடும்போதெல்லாம் இதே அழைப்பை எங்கேயோ கேட்டிருக்கோமே அப்படின்னு தோணும்.. சில சமயம் யோசிச்சிருக்கேன்..ஆனா நான் யோசிக்கிறப்ப எல்லாம் நீங்க ஏதோ பேசி என் மனச வேறு பக்கம் திருப்பி விட்றுவிங்க.. நான் அன்னைக்கு இருந்த நிலமைல எப்படியாவது அவன் கிட்ட இருந்து தப்பிக்கணும்னு மட்டும்தான் தோணுச்சு..அதனாலதான் உங்களை சரியா கவனிக்கலை.. ஆனா உங்களோட பேச்சு என் ஆழ் மனசுல பதிஞ்சு ஒரு நிம்மதிய கொடுத்துச்சு.. அதனால தான் அன்னைக்கு கார்ல எதை பத்தியும் யோசிக்காம தூங்கிட்டேன்..

அதுக்கப்பறம் நடந்த அடுத்தடுத்த நடந்த அதிர்ச்சியான சம்பவத்துல  உங்க குரலும் நீங்களும் என் மனசு அடியாழத்துக்கு போயிருச்சு… அதான் நீங்க என்ன பேபின்னு கூப்பிட்டாலும், எனக்கு நியாபகத்துக்கு வரலை.. அன்னைக்கு என் பிறந்த நாளுக்கு ஆசிரமத்துக்கு போனோமே.. அப்ப நீங்க பிள்ளைங்க கூட விளையாட்றதுக்கு, சட்டைய கழட்டி எங்கிட்ட கொடுத்திங்கல்ல.. அப்பவும் உங்க சட்டையில வந்த வாசம்… இதே வாசம் வேறு எதிலோ வந்திருக்கேன்னும் யோசிச்சேன் ஆனா அப்பவும் நீங்க..”என்றவளின் முகம் சிவக்க பேச்சை நிறுத்தியவளை..

சுவாரசியத்துடன் பார்த்தவன். “சொல்லு பேபி அப்பவும் நான் என்ன செஞ்சேன்..” என்று குறும்புடன் கண்சிமிட்டி கேட்க.. அதை பார்த்தவள் “ம்ம் அப்பவும் இதேமாதிரி தான் செஞ்சு என் மனசை வேறபக்கம் மாத்திட்டிங்க..” என்று நாணத்துடன் கூறியவளை பார்த்து வாய்விட்டு சிரித்தான் அபி..”சிரிக்காதிங்க மனு..” என்று சிணுங்கியவளை தன் மார்பில் சாய்த்து கொண்டான்..  அவன் மார்பில் வாகாக சாய்ந்து கொண்டவள்.. “இவ்வளவு பெரிய விசயத்தை ஏன் எங்கிட்ட மறச்சிங்க..? எப்படி நீங்க அங்க வந்திங்க..?” என்று கேட்க..

”நான் இதை உங்கிட்ட வேணுமின்னே மறைக்கல பேபி..இந்த உண்மை தெரியறப்ப நீ என் மனைவியா என் கைக்குள்ள இருக்கணும்னு நினச்சேன்.. ஆனா நான் சொல்றதுக்குள்ள என் அறிவாளி பேபி நீங்களே கண்டுபிடிச்சுட்டிங்க.” என்று அவளின் மூக்கை பிடித்து ஆட்டி செல்லம் கொஞ்சியவன்.. பின்பு “ அன்னைக்கு என் நண்பனோட அக்கா கல்யாணத்துக்கு போய்ட்டு வந்தேன் பேபி..ரெண்டு நாள் அங்க தங்கறதா பிளான் பண்ணித்தான் போனேன்.. ஆனா திடீர்னு ஆஃபிஸ் சம்பந்தமா ஒரு முக்கியமான வேலைக்காக வெளிநாடு போற சூழ்நிலை பேபி… அதான் நைட்டே கிளம்பிட்டேன்.. அது காட்டு பகுதிங்கிறனால, ஹோட்டல்லாம் அங்க இருக்காதுன்னு சொல்லி.. என் ஃப்ரெண்டோட அம்மாதான் சாப்பாடு கட்டி கொடுத்தாங்க… ஆனா அது எவ்வளவு நல்லதா போச்சு இல்லையா பேபி..” என்றவன்.. மீண்டும்.. தொடர்ந்து..

நான் வேகமா கார் ஓட்டிட்டு வ்ந்துட்டு இருக்கிறப்ப தூரத்துல ஒரு உருவம் காரை நிப்பாட்ட சொல்லி கை காமிச்சது.. அந்த நடுராத்திரில ஒரு பொண்ணு கார நிப்பாட்ட சொன்னா என்ன நினைப்பாங்க.. நான் ஏதோ பணம் பறிக்கிற கும்பலதான் இப்படி செய்றாங்கன்னு நினச்சு காரை நிப்பாட்டாம போயிட்டேன்….” என்றதும் சாதனா அவனை முறைக்க.. “சாரி பேபி அப்ப உன்ன எனக்கு தெரியாது இல்லையா..? அதான்” என்று விளக்கமளித்தவன் தொடர்ந்து..   ”ஆனா கொஞ்ச தூரம் போனதும் எனக்கு மனசு கேட்கலை.. ஒருவேளை உண்மையாகவே உதவி தேவை பட்டுச்சுன்னா.. என்ன பண்றதுன்னு நினச்சு உடனே காரை திருப்பி நீ இருந்த இடத்த வந்து பார்த்தால்.”

என்று பேச்சை நிறுத்தியவன்.. சாதனாவை எதில் இருந்தோ காப்பவன் போல் அவளை இறுக அணைத்து கொண்டவன்..” நீ மயக்கம் போட்டு கீழ விழுத்துட்ட பேபி.. உன்ன சுத்தி ரெண்டு ஓநாய் நின்னுட்டு இருந்த்துச்சு.. என் உயிரே பதறி போச்சு பேபி.. உடனே கார்ல இருந்த துப்பாக்கிய எடுத்து வானத்தை நோக்கி சுட்டேன்.. அந்த ஓநாய்கள் ஓடிருச்சு.. அப்பறம் உன்ன தூக்கிட்டு வந்து உன்ன கார்ல படுக்கவச்சேன்..  நீ மயக்கத்துல ஏதேதோ சொன்ன எனக்கு ஒண்ணும் புரியலை.. ஆனா மயக்கம் தெளிஞ்சதும் என்ன பார்த்து கேட்டியே ஒரு கேள்வி அந்த நிமிசம் நான் ஆணாக பிறந்ததுக்கு ரொம்ப வெட்க்கப்பட்டேன் பேபி..” என்றான் வேதனையுடன்… அவளுக்கு என்ன கூறினாள் என்பது சரியாக நினைவு இல்லை..

ஆனால் அதை கேட்கவும் அவளுக்கு மனது வரவில்லை.. ஏனென்றால் ஏற்கனவே வேதனையுடன் இருப்பவனிடம் கேட்டு அவனின் வேதனையை அதிகரிக்க மனம் வராமல்..”மனு அது முடிஞ்சு போனது” என்று ஆறுதலாக அவன் கன்னத்தில் கை வைக்க அதை தன் கன்னத்தோடு அழுத்தியவன்..மீண்டும் “அன்னைக்கு நீ என்ன கேட்ட தெரியுமா பேபி.” என்றவன். “நீங்களும் இங்க கடிப்பீங்களா…? அந்த அண்ணாகிட்ட வலிக்குதுன்னு சொன்னேன் ஆனா அவங்க விடவே இல்ல… பிளீஸ் நீங்களும் கடிச்சிறாதிங்க… எனக்கு ரொம்ப வலிக்கும்…னு சொன்ன பேபி அத கேட்டு நான் எப்படி துடிச்சேன் தெரியுமா?.. என்று வேதனையுடன் கூறியவன்..

நான் அத்தைக்கிட்ட உன்னப்பத்தி  கேட்டப்பதான் அன்னைக்கு உன்னை காப்பாத்தினது நாந்தான்னு எனக்கே தெரியும்.. தெரிஞ்சதுல இருந்து எனக்கு ரொம்ப குற்ற உணர்ச்சியா இருந்தது பேபி.. நான் கொஞ்சம் முயற்சி செஞ்சிருந்தால் உன்னையும், உங்க குடும்பத்தையும் பிரகாஷ்கிட்ட இருந்து காப்பாத்தி இருக்கலாமோன்னு தோணுச்சு.. அப்ப செய்ய முடியலை அதான் இப்ப அத செஞ்சு முடிச்சுட்டு உங்கிட்ட சொல்லலாம்ணு நினச்சேன்..அதுக்குள்ள நீயே தெரிஞ்சுக்கிட்ட. .ஆனா பேபி இதை நீயா யார்க்கிட்டயும் சொல்ல வேண்டாம்.. அவங்களுக்கா எப்ப தெரியணுமோ அப்ப தெரியட்டும்.. இல்லைன்னாலும் பரவாயில்ல.” என்று நீளமாக பேசி முடித்தவனை.. காதலுடன் அணைத்து கொண்டவளை அபியும் அணைத்து கொள்ள.. தங்கள் மனதில் அழுத்தி இருந்த விசயங்களை எல்லாம், இருவரும் பகிர்ந்து கொண்டதால்.. ஏற்பட்ட அமைதியில்,  அந்த ஏகாந்த வேளையை இருவருமே அமைதியாக ரசித்திருந்தனர்..

முதலில் தெளிந்த அபி.. வாட்ச்சில் மணி பார்த்து அது இரவு 12 காட்ட,  தன் மார்பில் சாய்ந்திருந்த சாதனாவிடம் பேபி டைம் ஆயிருச்சுடா வா உள்ள போய் தூங்கலாம்.. என எழுப்பினான்.. அவள் எழவும் அபி உள்ளே செல்ல.. தன்னுடன் வராமல் அங்கேயே நின்றிருந்த சாதனாவிடம் வந்தவன் “என்ன் பேபி உள்ள வராம இங்கேயே நிக்கற… தூக்கம் வரலையா..? என கேட்க..இரு கைகளையும் இடுப்பில் வைத்து அவனை முறைத்தவள்.. “இங்க நான் எப்படி வந்தேனோ அதேமாதிரி என்னை கூட்டிட்டு போங்க..”என உத்தரவிடுவதுபோல் கூற.. ஒரு நிடி குழம்பிய அபி மறு நொடி புரிந்து வாய்விட்டு சிரித்தான்.. அதற்கும் முறைத்தவள்..என்ன சிரிப்பு.. ம்ம் எனக்கு தூக்கம் வருது சீக்கிரம்..” என கூற.. அவன் சிரிப்புடன் “தங்கள் உத்தரவு மகாராணி..” என்றவாறு அவளின் அருகில் வந்து அவளை கைகளில் ஏந்திகொண்டவன் தங்கள் படுக்கை அறையின் மெத்தையில் அவளை படுக்க வைத்தான்..

தானும் அவளருகில் படுத்தவன்.. அவள் இடையில் கை போட்டு அணைத்து கொள்ள.. ”மனு இந்த சேலை ஒரே கசகசன்னு இருக்கு வேற மாத்திக்கவா..?” என கேட்க..”ஏன் பேபி இதுக்கெல்லாம் எங்கிட்ட பர்மிசன் கேட்கிற..?” என்றவன் எழுந்து தன் கபோர்டை திறந்து அவளுக்கு ஒரு இரவு உடையை எடுத்து கொடுத்தான்.. அவள் வியப்புடன் பார்க்கவும்.. நமக்கு எப்ப கல்யாண பேச்சு ஆரம்பிச்சாங்களோ அப்பவே எங்கேயாவது வெளிய போனால்.. உனக்காக எதாவது வாங்கிருவேன் அதுல ஒண்ணுதான் தான் இந்த ட்ரெஸ்.. போ பேபி போய் மாத்திட்டு வா..” என்றான்..

அவனின் அறையில் வலது பக்கத்தில் இருந்த உடை மாற்றும் அறைக்கு சென்று மாற்றி வந்தவள்.. அங்கு மெத்தையில் சாய்ந்து அமர்ந்திருந்த.. அபியிடம் வந்து அவனின் மார்பில சாய்ந்து கொண்டாள்.. அவனும் அவளை அணைத்து கொள்ள.. அபியை அண்ணாந்து பார்த்தவள்.. “மனு உங்க 

ளுக்கு தேன் மிட்டாய் சாப்பிடணும் போல இருக்கா..” என கேட்க..அவள் முதுகை வருடிக்கொண்டிருந்தவன் ஒரு நொடி நிறுத்தி பின் மீண்டும் தொடர்ந்தவன்… ” அது இருக்கு பேபி நிறையா.. ஆனா  இப்ப இல்லை.. இன்னைக்கு ராத்திரியோட எல்லாம் முடிய போறது இல்ல பேபி.. நமக்கு வயசும் காலமும் இருக்கு,, நீ சோர்வா இருக்கிற.. அதனால எதை பத்தியும் யோசிக்காம நிம்மதியா தூங்கு பேபி..” என்றவனின் அவளை வருடிகொடுப்பதை நிறுத்தவில்லை.. கணவனின் புரிதலில் மனம் நிறைந்தவள்.. அவன் சுகமான வருடலில் மெல்ல கண் அயர்ந்தாள்.. அபியும் அவளை தாங்கியவாறே  மெத்தையில் நன்றாக படுத்தவன் சிறிது நேரத்தில் உறங்கியும் போனான்.. 

காலையில் முதலில் கண்விழித்த அபி.. தன் முகத்துக்கு வெகு அருகில் மனைவியின் முகம் பார்த்தவன் இதழ்கள் புன்னகையில் விரிந்தன.. அவள் படுத்திருந்த கோலம் கண்டு புன்னகை சிரிப்பாக மாற.. தன் வாயை இறுக் மூடிக்கொண்டான்.. அவன் கழுத்தில் தன் கைகளை போட்டிருந்தவள்.. அவன் மார்பில் முகம் பதித்தவள்.. ஒரு காலை அவன் மீது போட்டுக்கொண்டு சுகமான நித்திரையில் இருந்தாள்.. அபியின் பேபி..தன் மனையாளின் குழந்தை முகத்தை ரசித்தவன்..நேரமாவதை உணர்ந்து.. அவளின் உறக்கம் கலையாதவாறு.. அவளை மெல்ல படுக்கையில் படுக்க வைத்தவன்..லேசாக விலகியிருந்த அவளின் உடையை சரி செய்துவிட்டு.. அவளின் நெற்றியில் முத்தம் பதித்து.. குளியலறை சென்றான்..

காலை கடன்களை முடித்து வெளியே வந்தவன் தன் அறைக்கு அடுத்த அறையில் இருந்த உடற்பயிற்சி கூடத்திற்கு, தன் அறையில் இருந்த இன்னொரு கதவை திறந்து சென்று.. ஒருமணி நேரம் பயிற்சி செய்தவன்.. மீண்டும் தன் அறைக்கு வர, அப்பொழுதும் உறக்கம் விழித்தாளில்லை..”ஸ்லீப்பிங் பியூட்டி” என்று மனையாளை கொஞ்சியவன்.. குளியலறை சென்று தன் குளியலை முடித்து வெளியே வந்தான்.. தன தலையிலிருந்து சொட்டிய நீரை அவள்மேல் விழ செய்தான்..அவள் லேசாக உறக்கம் கலைய ”இன்னும் கொஞ்ச நேரம் மனு” என்று சிணுங்கியவாறே மீண்டும் தூக்கத்தை தொடர..ம்ம் கூம் இது வேலைக்காகாது.. என்று “பேபி மணி எட்டாயிருச்சு பேபி..”என கூற வில்லிலிருந்து அம்பாக எழுந்தவள்.. “மணி எட்டா இதை ஏன் முன்னாடியெ சொல்லை..” என்றவள்..

வேகமாக குளியலைறைக்கு சென்றவள்..ஐந்து நிமிடத்தில் குளித்து முடித்து வெளியே வந்தவள்.. வேகமாக தன் பெட்டியை திறக்க போக “பேபி உனக்கு ட்ரெஸ் பெட்ல எடுத்து வச்சிருக்கேன்..” என்றான் அபி.. “ஆனாலும் பேபி… காலையிலேயே இப்படி ஒரு தரிசனத்தை எதிர் பார்க்கலை..” என்று குறும்பு பேச..” என்ன சொல்றாங்க மனு..” என்று குழம்பியவள்.. அப்பொழுதுதான் தான் குளித்துவிட்டு வெறும் துண்டு மட்டும் கட்டி வந்ததை உணர்ந்தாள்…முகம் செங்கொழுந்தாக மாற.. வேகமாக தன் உடையை எடுத்து உடை மாற்றும் அறைக்கு சென்றவளை அபியின் சிரிப்பு பின் தொடர்ந்தது..

பின்பு வேகமாக உடையை மாற்றி வந்தவள்.. அவசரமாக கிளம்ப.. “பேபி ஏன் அவசரம் இன்னும் நேரம் இருக்கு பேபி..”என.. போங்க மனு நேத்தே வசும்மா சொல்லிவிட்டாங்க காலையில பூஜை ரூம்ல விளக்கேத்தணும்னு..” நீங்க என்னை சீக்கிரமா எழுப்பி விட்ருக்கலாம்ல..” என கூற “பேபி.. நான் என்ன சொன்னாலும் அப்படியே நம்பிருவியா.. மணிய பாரு பேபி ஆறுதான் ஆகுது..” என அப்பொழுதுதான் மணி பார்த்தவள்.. அது ஆறு என காட்ட.. அவனை முறைத்து “ஃப்ராடு மனு..”  என்று விட்டு.. நிதானமாக கிளம்பியவள்.. அபியை அழைத்து நெற்றி வகிட்டில் குங்குமம் வைக்க சொல்ல அவனும் சந்தோசமாக வத்தவன்.. நெற்றியில் முத்தம் பதித்து விலகினான்..

பின் இருவரும் ஒன்றாக கீழே இறங்கி வர அதறகாகவே கத்திருந்த பெரியவர்கள்.. அவர்களின் மகிழ்ச்சியான முகத்தை பார்த்து மனம் நிறைவடைந்தனர்.. பின்ன இருவரையும் பூஜை ரூமிற்கு அழைத்து சென்றவர்கள் சாதனாவை விளக்கேற்ற சொல்ல..  அவளும் அவ்வாறே செய்து.. இருவரும் அவர்களின் கால்களில் விழுந்து ஆசீவாதம் வாங்கினார்கள்.. பின் வாசுகி அனைவருக்கும் காபி கலக்க,  சாதனா அதை எடுத்து வந்து அனைவருக்கும் கொடுத்தாள்.. ”வாசு அபிக்கும் சாதனாவிற்கும் நல்லபடியா கல்யாணம் முடிஞ்சதுன்னா. நம்ம குல தெய்வம் கோவில்ல பொங்கல் வைக்கிறேன்னு வேண்டி யிருந்தேன்”

நம்ம எல்லாரும் போய்ட்டு வந்தரலாம்” என பாக்கியம் பாட்டி கூற..அனைவரும் கோவிலுக்கு கிளம்பினர்.. சாதனாவும் அபியும் ஒரு காரில் வர.. மற்றவர்கள் இன்னொரு காரில வந்தனர்.. கோவில்லுகு சென்று.. சாதனா பொங்கல் வைக்க.. வாசுகி அவளுக்கு உதவினார்.. பொங்கல் வைத்து முடித்ததும்.. வாசுகியும் மங்கையும் பூஜைக்கு வேண்டிய பொருட்களை சரிபார்த்து கொண்டிருக்க, பாட்டி ஊர்க்கார்ர்களிடம் பேசிக்கொண்டிருக்க.. சாதனா சூடாக இருந்த பொங்கல் பனையை தூக்க முடியாமல் தூகி வர..அதை பார்த்த அபி.. “என்ன பேபி எங்கிட்ட சொல்லிருந்தா நான் தூக்கிட்டு வந்திருப்பேன்ல..” என்றவாறே.. பொங்கல் பானையை அவன் வாங்கி கொண்டான்..

அதை பார்த்திருந்த.. ஒரு பாட்டி..”என்ன பேரண்டி.. புது பொண்டாட்டி மேல ரொம்ப பாசமோ.. எல்லாம் ஆசை அறுபது நாள்.. மோகம் முப்பது நாள்ன்னு சொல்லுவாங்க அதுவரைக்கும்தான்.. உங்களோட இந்த பாசமெல்லாம்..” என்று கிண்டல பண்ண.. ”நீங்க சொல்றதும் சரிதான் பாட்டி..  ஆசை அறுபது நாள்.. மோகம் முப்பது நாள் தான் ஆனா என்னோட காதல் காலம் பூராவும்.. தொடரும்” என பதில் கொடுக்க.. ”ம்ம் இந்த காலத்து பிள்ளைங்கக்கிட்ட வாய் கொடுத்து மீள முடியுமா?” என்றவர்.. ஆனாலும் நீ பேசினத கேட்க ரொம்ப சந்தோசம் பேராண்டி.. நீங்க ரெண்டுபேரும் நூறு வருஷம் நல்லா இருக்கணும்..” என்று வாழ்த்தி விட்டு சென்றார்..

சாமி கும்பிட்டுவிட்டு ஊருக்கு கிளம்பியவர்கள் இரவு உணவிற்காக ஒரு ஹோட்டலில் காரை நிறுத்தி இறங்க..அபி தன் தோளில் தூங்கியிருந்த சாதனாவை எழுப்பினான்…உணவை முடித்தவர்கள்.. தங்கள் காரில் ஏற..சாதனா மீண்டும் அபியின் தோளில் உறங்க “பேபி சீட்ல படுத்துக்கோ பேபி உனக்கு கழுத்து வலிக்க போகுது..” என கூற,, “ம்ம் கூம்” என்று மறுத்தவள்.. மீண்டும் அவன் தோளிலேயே தஞ்சம் அடைந்தாள்..”சரி பேபி அப்ப என் ம்டியில படுத்துக்க..” என்றவாறே அவளை தன் மடியில் தாங்கி கொண்டவன்.. தன் காரை எடுத்தான்.. வீடு வந்தவர்கள்.. பெரியவர்கள் உள்ளே செல்ல..அபி தன் காரை நிறுத்தியவன்.. சாதனாவை அவள் தூக்கம் கலையாதவாறு அவளை கைகளில் ஏந்தி கொண்டு.. அவர்கள் அறைக்கு சென்று அவளை படுக்க வைத்தவன்.. கீழே வர வாசுகி இருவருக்கும் பால் கலந்து கொடுத்ததை வாங்கி கொண்டு மேலே சென்றான்..

நல்ல தூக்கத்தில் இருந்தவளுக்கு பால் கொடுத்தவன் “பேபி ட்ரெஸ் மாத்திக்கோ பேபி இல்லன்னா கசகசன்னு இருக்கும்..” என கூற.. ”எனக்கு ரொம்ப தூக்கம் வருது மனு..” என ”சரி நான் மாத்திவிடவா பேபி” என தயக்கத்துடன் கேட்க.. அவள் நொடிகூட தயங்காமல்.. சரி என்றவள் தன் தூக்கத்தை தொடர்ந்தாள்.. அவன் அவள் உறக்கம் கலையாதவாறு.. அவளுக்கு உடை மாற்றினான்.. அதில் துளி கூட காமம் இல்லை ஒரு தாய் தன் மகளுக்கு செய்யும் செயலாகவே அவனின் செயல் இருந்தது.. அவளுக்கு ஆடை மாற்றிவிட்டு தானும் ஃப்ரெஷ் ஆகி வந்தவன் அவளை அணைத்தவாறே தூங்கி போனான்.  

மறுநாள் இருவரும் கீழே வர.. அங்கு பெரியவர்கள்.. எங்கோ வெளியூர் செல்வதற்கு கையில் பெட்டியோடு இருக்க.. “எங்கம்மா எல்லாரும் எங்க கிளம்பிட்டிங்க எங்ககிட்ட சொல்லவே இல்லை..” என கேட்க.. வாசுகி..”நாங்க ஒருமாசம் ஆன்மீக சுற்றுலா போறொன் அபி..” என என்னம்மா திடீர்னு எங்கிட்ட சொல்லவே இல்லை..” என குறைபட ”நாங்களே காலையிலதான் முடிவு செஞ்சோம்..இன்னும் ஒருவருசத்துல எங்களுக்கு பேரகுழந்தைங்க வந்துரும்.. அதுக்கப்பறம், எங்களுக்கு எங்க நேரம் கிடைக்கும்.. அதான் இப்பவே கிளம்பிட்டோம்..” என கூற..குழந்தைகள் என்ற வார்த்தையில் சாதனாவின் முகம் சிவக்க. அதை பார்த்த வாசுகி.. அவளை திருஷ்டி கழித்து கன்னத்தில முத்தமிட்டவர் வர்றோம் சாதும்மா..பத்திரமா இருங்க” என அனைவரும் அவர்களிடம் சொல்லி கொண்டு கிளம்பினார்கள்..

அபியும் சாதனாவும் மட்டுமே தனித்திருக்க..அபி சாதனாவை நெருங்கியவன்.. “பேபி அம்மா என்ன சொல்லிட்டு போனாங்கன்னு பார்த்தியா.. அதுக்கான அச்சாரமா நம்ம இப்ப தேன் மிட்டாய் சாப்பிடலாமா.?”. என கிசுகிசுப்பாக கேட்க.. வெட்கத்தில் முகம் சிவந்தவள்.. ”போங்க மனு..” என்று சிணுங்கியவாறே மேலே சென்றாள்.. அவளை பின் தொடர்ந்தவன்.. சாதனாவை பின்னிருந்து அணைத்தவாறே.. அவள் கழுத்தில் முகம் புதைத்தவன்,,”வாசமா இருக்கியே பேபி.”என்று கிறக்கமாக கூற..கணவனின் கைகளில் துவண்டவளை கைகளில் ஏந்த போனவனை செல்போன் சப்தமிட்டு அவர்களை கலைத்தது.. எரிச்சலுடன் போனை எடுத்து பார்த்தவன் அதன் நம்பரை பார்த்ததும் யோசனையுடன் காதில் வைத்து “சொல்லுங்க..”  என மறு முனையில் என்ன கூறினார்களோ.. சாதனாவை  ஒரு நிமிடம் திரும்பி பார்த்தவன்.. 

“இன்னும் பத்து நிமிசத்துல் நான் அங்க இருப்பேன்..” என்றவன் சாதனாவிடம் திரும்பி.. “பேபி எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு.. நான் கொஞ்சம் வெளிய போகணும்.. நீ தனியா இருக்க வேண்டாம் நான் உன்னை மது வீட்டுல விட்டுட்டு.. சாயந்திரம் வந்து கூப்பிட்டுக்கிறேன்.. என்றவனிடம்.. ”யார் மனு போன்ல.. ஏன் உங்க முகம் ஒரு மாதிரியா இருக்கு?” என பதட்டத்துடன் கேட்க.. “ஹே ஒண்ணும் இல்ல பேபி.. நம்ம  தேன் மிட்டாய் சாப்பிட்ற சமயத்துல போன் வந்துச்சுல்ல அதான் ” என்று சமாளித்தவன்..”சரி விடு பேபி.. நைட்டு திகட்ட திகட்ட சாப்பிடலாம்” என்று குறும்பாக கண்சிமிட்டி கூறினான்..சாதனா தன் சிவந்த முகத்தை வேறுபுறமாக திருப்பி கொண்டாள்…

சாதனாவை அழைத்து கொண்டு மதுவின் வீட்டிற்கு வந்து, அவளை அங்கே விட்டவன் நேராக சென்ற இடம் அரசு பொது மருத்துவமனை.. அங்கு அவனுக்காக காத்திருந்த மருத்துவரை பார்த்தவன் “சொல்லுங்க நான் தான் அபிமன்யூ.. எதுக்காக எனக்கு கால் செஞ்சிங்க..?” என கேட்க.. அவர் “இங்க தீக்காய சிகிச்சை பிரிவுல பிரகாஷ்ன்னு ஒருத்தர் அட்மிட் அயிருக்கார்.. அவர் உங்களை பார்க்கணும்னு சொன்னார் அதான் நான் உங்களுக்கு கால் செஞ்சேன்..” என கூற “அபி யோசனையுடன் இருப்பதை பார்த்தவர்.. அவர் ரொம்ப கஷ்ட பட்றார்.. ஒருதடவை நீங்க அவர பார்த்துட்டிங்கனா.. அவர் மனசுக்கு ஆறுதலா இருக்கும்னுதான் நான் உங்களை வர சொன்னேன்.. வாங்க அவர் இருக்கிற அறையை காட்டுறேன்” என்றவர்..  

அந்த மருத்துவமனையின் கடைசியில் இருந்த ஒரு அறைக்கு அழைத்து சென்றார்.. அங்கு நுழைந்த அபி.. அங்கு கட்டிலில் உடல் இளைத்து மேனி கறுத்து..பொசுங்கி போன கைகளோடு, இடுப்பிற்கு கீழ் உணர்ச்சி இல்லாமல் படுத்திருந்தவனை பார்த்த அபி திகைத்து போனான்..” (அடப்பாவி நீதான அவனை இப்படி செஞ்ச..)  கண்மூடி படுத்திருந்தவனின் அருகில் போன மருத்துவர் அவனிடம் “சார் மிஸ்டர் அபிமன்யூ வந்திருக்கார்.. அவர பார்க்கணும்னு சொன்னிங்கல்ல.. அதான் வரவச்சேன்..” என கூற அபியின் பேரை கேட்டதும் கண்மூடியிருந்த பிரகாஷ் விழித்து கொள்ள.. அவனின் விழிகளில் வலியின் வேதனை அப்பட்டமாக தெரிந்தது…. பிரகாஷ் மருத்துவரிடம் தனியாக பேச வேண்டும் என சொல்ல.. அவர் வெளியே சென்றார்..

பிரகாஷ் அபியிடம் ”என்னை மன்னிச்சிரு அபி நான் பெண்களுக்கு செஞ்ச கொடுமையை இப்ப உணர்றேன்.. நான் சாதனாவை பார்த்து மன்னிப்பு கேட்கணும் அவ… அவங்களை கூட்டிடு வர்றியா” என கேட்க.. “ சாதனா என்னோட மனைவி அவ எதுக்கு உன்னை பார்க்கணும்.. அவ இப்பதான் எல்லாதயும் மறந்து சந்தோசமா இருக்கா.. உன்னை பார்த்தால் அவளுக்கு பழைய நினைப்பு வரும் நான் அதை விரும்பல.. அதுமட்டும் இல்ல என் பேபி இரக்க சுபாவம். உன்ன இந்த கோலத்துல பார்த்தா ரொம்ப வருத்தப்படுவா..” அதனால் அவளை பத்தி நினைக்கிறதை இதோட விட்று என்று கடுமையுடன் கூறிவிட்டு வெளியே செல்ல போனவனை தடுத்தவன்..

”எனக்கு ஒரே ஒரு உதவி செய்ற்யா என கேட்க..அபி என்ன என்பதுபோல் பார்க்க..”இங்க இருக்கிற டாக்டர்ஸ் கிட்ட சொல்லி என்ன கருணை கொலை செய்ய சொல்றியா..?” எனக்கு ரொம்ப வலிக்குது.. என துடித்து அழுத்தவனை சலனமே இல்லாமல் பார்த்த அபி..”நீ எங்கிட்ட மன்னிப்பு கெட்டேல்ல அதை கடவுள்கிட்ட கேளு அவர் உன்னை மன்னித்தார் என்றால்.. அவரே உன்னை அழைத்துக்கொள்வார்..” என்றவன் விறு விறு என்று மருத்துவமனையை விட்டு வெளியே வந்தான்.. இப்பொழுதுதான் அவனுக்கு மூச்சு இயல்பாக வந்தது..

காரை எடுத்து கொண்டு வெளியே வர சாதனாவின் நினைவு வரவும்..”பேபிய அழச்சுட்டு வீட்டுகு போகலாம் என நினைத்தவன்.. அவளை அழைக்க மது வீட்டிற்கு சென்றவன் வேறு யோசனை வரவும் பாதியிலேயே வண்டியை திருப்பி விட்டான்.. இங்கே மது சாதனாவுடன் வம்பிழுத்து கொண்டிருக்க..மதுவின் அன்னை அவளை அதட்டிவிட்டு..சாதனாவை சாப்பிட அழைத்தார்.. “மனு சாப்பிட்டங்களான்னு தெரியலையே..“ என்று நினைத்தவள்  அவனுக்கு அழைக்க போக.. அபியே சாதனாவை அழைத்தான் தான் சாப்பிட போவதாக கூறியவன் சாதனாவையும் சாப்பிட சொல்லிவிட்டு..  தான் மாலை வருவதாக சொல்லி போனை வைத்தான்..

சொன்னது போலவே மாலை சாதனாவை அழைக்க வந்தவன் சிறிது நேரம் மது வீட்டில் இருந்து, இரவு உணவை அங்கேயே முடித்துவிட்டே இருவரும் கிளம்பினார்கள்..”என்ன மனு போன வேலை என்னாச்சு..நல்லபடியா முடிஞ்சதா?” என கேட்க.. ரொம்ப நல்லபடியா முடிஞ்சது பேபி..”என்றவன் வேறு பேச சாதனாவும் பதில் சொல்லியவாறு வர, அவர்கள் வீடும் வந்தது.. முதலில் இறங்கிய சாதனா, அவர்கள் அறைக்கு செல்ல போக.. ”ஒரு நிமிசம் இரு பேபி” என்றவன்.. தானே கதவை திறந்து அவளை உள்ளே அழைத்தான்.. அவனின் செய்கையை குழப்பமுடன் பார்த்திருந்தவள் ”என்ன மனு..” என்க.. அவளை கைகளில் தாங்கி கொண்டவன் “பேபி நம்ம அறைக்கு போறவரைக்கும் கண்ணை திறக்க கூடாது.. ம் கண்ணை மூடு” என “அடுத்த சர்பிரைஸா என சந்தோசமாக அலுத்து கொண்டவள் அவன் சொன்னது போலவே கண்களை மூடி கொண்டாள்..அவர்கள அறை வந்ததும் அவளை இறக்கி விட்டவன் கண்ணை திறக்க சொல்ல..

அறையை பார்த்தவள் அதன் அலங்காரத்தில் மயங்கி போனாள்..அறை முழுவதும் மெழுகவர்த்தி எற்றியிருக்க தரை முழுவது பிங்க் மற்றும் வெள்ளை பலூனகளால் நிரம்பியிருக்க.. மெத்தையில் சிகப்பு ரோஜாக்களால்.. Welcome my better half .. ” என்று எழுதியிருக்க அதை பார்த்தவள்தன் கைகள் இரண்டையும் கன்னத்தில வைத்து வியந்து பார்த்திருந்தவளின் காதில் ”பிடிச்சிருக்கா பேபி” என்று ஹஸ்கி வாய்ஸில் கேட்க.. சாதனா அவனின் காலரை பிடித்து இழுத்து அவன் இதழில் அழுத்தமாக முத்தமிட்டாள்..”இது பிடிச்சிருக்கா..” என அபியிடம் கேட்க.. அவள் முத்ததில் கிறங்கி இருந்தவன் “என்ன பேபி கேள்வி இது இதை பிடிக்காதுன்னு சொல்வேனா,,” என ”அதே மாதிரிதான் மனு இதுவும்..” என்றவள்.. அவனின் மார்பில் சாய்ந்து கொண்டாள்.. அவளை அணைத்து கொண்டவன் “பேபி உனக்கு சம்மதமா..” என ஆர்வத்தோடு கேட்க.. அவள் பதில் பேசாது.. அவன் மார்பில் முத்தமிட்டு தன் சம்மதத்தை மௌனமாக தெரிவித்தவளை.. இறுக அணைத்து கொண்டவன்.. அவளை கைகளில் ஏந்தி படுக்கையில் விட்டு.. தானும் அவள் அருகில் படுத்தவனின் இதழ்கள் அவள் இதழ்களோடு சங்கமிக்க கைகளோ கணவனாக அவள் மேனியில் அத்துமீறியது….பெண்ணவள் கூச்சம் கொண்டு அவன் கைகளுக்கு தடை விதிக்க.. 

அவனின் “பிளீஸ் பேபி” என்ற ஒற்றைவார்த்த அவள் தயக்கங்களையும்.. கூச்சங்களையும் விடவைத்து அவனோடு ஒன்ற செய்தது.. மனையாளின் ஒத்துழைப்பில் மனம் மகிழ்ந்து, அவளின் ஒவ்வொரு அணுவிலும் தன் தடத்தை பதித்தவன்..அவளை மொத்தமாக தனக்குள் சுருட்டி கொண்டான்.. பெண்ணவளோ கணவனின் தொடுகையில் அங்கிருக்கும் மெழுகுபோல் உருகியவள் அவனை தன்க்குள் அடக்கிவிட துடித்தாள்.. இருவரின் சண்டையின் முடிவில் இருவருமே வெற்றி கொண்டு, ஒருவருக்கொருவர் அடைக்கலமானார்கள்….

களைந்து சோர்ந்திருந்தவளை தன் மார்பில் போட்டு கொண்டவன் அவள் நெற்றியில் முத்தமிட்டு அவளை தட்டி கொடுக்க..அவள் நன்றாக உறங்கிவிட்டாள்..அபி உறங்கும் தன் மனைவியின் முகத்தை பார்த்தவன் அதில் புன்னகையும், நிறவும் இருப்பதை அறிந்து எல்லையில்லா நிம்மதியும் அடைந்தவன் தானும் உறங்கி போனான்.. காலையில் கண்விழித்த சாதனாவிற்கு கணவனின் முகம் வெகு அருகில் இருக்க, நேற்று நடந்த நிகழ்வுகள் அவளின் நினைவிற்கு வந்து அவளை சிவக்க வைக்க கணவனிடமிருந்து விலகி எழ போனவள்.. அவனின் கைகள் உடும்பு போல் அவளை வளைத்திருந்தது.. அவள் அபியை  பார்க்க.. அவன் விழித்திருந்தான் மனைவியின் பார்வையை உணர்ந்தவன் ”தேன் மிட்டாய் ரொம்ப சூப்பர் பேபி திகட்டவே இல்லை..” என குறும்புடன் அவளின் இதழை பார்த்தபடி கூற.. “சே போ மனு..”என்று சிணுங்கியபடி எழ போனவள் அவளின் நிலை அறிந்து மீண்டும் போர்வைக்குள் தன்னை நுழைத்து கொண்டாள்.. அவளின் செய்கையை பார்த்த அபி வாய்விட்டு சிரித்தவன்..

அவளை போர்வையோடு அப்படியே கைகளில் அள்ளி கொண்டவன் குளியலறையில் அவளை விட்டு வந்தான்.. கணவனின் செய்கையில் சாதனாவின் மனம் பூரித்திருந்தது.. அவளின் உணர்ச்சிக்ளுக்கு மதிப்பு கொடுத்தவனை இன்னுமே வெகுவாக பிடிதிருந்தது.. சாதனாவை குளியலறையில் விட்டவன் தானும் வேறு அறையில் தயாராகி வந்தான்.. இருவரும் குளித்து கிளம்பி கீழே வந்தவர்களுக்கு பசி யெடுக்க சாதனா அபிக்கு காஃபி கொடுத்துவிட்டு காலை டிபனிற்கு சப்பாத்தி குருமா செய்ய அனைத்தையும் தயார் செய்தாள்.. அபி தன் காபியை சாதனாவிற்கு சிறிது புகட்டியவன்,,தானும் குடித்தான்..

பின்பு சாதனா மாவை பிசைய, அபி அவளுக்கு சிறு சிறு உதவிகள் சீண்டிக்கொண்டே செய்தான்… தவித்து போன சாதனா.. அவனை கிச்சனில் இருந்து வெளியே தள்ளினாள். “ஐயா சாமி ஆளை விடுங்க நானே சமைக்கிறேன். நீங்க பேசாமல் சோஃபால போய் உட்காருங்க,,” என்று அதட்ய்டிபடி காலை சமையலை செய்து முடித்தாள்..சமைத்ததை டைனிங் டேபிளில் வைக்க..அபி “பேபி சாப்பாட எடுத்துட்டு மேல போகலாம் வா..”என்றவாறு.. சாப்பாடை எடுத்து கொண்டு மேலே சென்றான் சாதனா தண்ணீர் பாட்டிலை எடுத்து கொண்டு சென்றாள்.. அங்கே அபி அவர்கள் அறையில் பால்கனி ஊஞ்சலில் அமர்ந்திருந்தான்.. ”இதுக்குத்தான் சாப்பாட மேல எடுத்துட்டு வந்திங்களா..? மகிழ்ச்சியுடன் கேட்டவளை தன் மடியில் அமர்த்தி கொண்டவன் அவளுக்கு சப்பாத்தியை ஊட்டிவிட்டு, தானும்  உண்டான்.. அவளும் மகிழ்ச்சியுடன் அவன் கொடுத்ததை வாங்கி கொண்டாள்.. இருவரும் கதை பேசிக்கொண்டே சப்பாத்தியை காலி செய்தனர்..

அபியின் செல்போன் அழைக்க எடுத்து பார்க்க, இருவரின் அன்னையரும் அழைத்திருந்தனர்… அவர்களுடன் சிறிது நேரம் அரட்டை அடித்துவிட்டு..சாதனா மதியத்துக்கன சமையல்ல் செய்யபோனாள்.. அபி தன் லேப்டாப்பை எடுத்து வேலை செய்ய ஆரம்பித்தான்..மாலை சாதனாவை வெளியே அழைத்து சென்றான்… அவளை முதலில் கோவிலுக்கு அழைத்து சென்றான்..சாதனா, அபி மற்றும் வாசுகி சந்தித்த.. அதே முருகன் கோவில்.. அதை பார்த்ததும் ”நீங்களும் வசும்மாவும் என்ன நடிப்பு நடிச்சிங்க ஃப்ராடு மனு” என்று செல்லமாக திட்டினாள்.. அவன் எப்பொழுதும் போல் “தங்க்யூ பேபி..” என்று புன்னகையுடன் ஏற்றுக்கொண்டான்..

பின்பு அவளை கடற்கரைக்கு அழைத்து சென்றவன் அவள் அலைகளில் விளையாடும் அழகை சிறிது நேரம் ரசித்திருந்தவன்.. தானும் அவளுடன் சேர்ந்து விளையாடினான்.. விளையாடி களைத்தவர்கள் சிறிது நேரம் மணலில் அமர்ந்துவிட்டு, இரவு உணவை வெளியே முடித்துவிட்டு சென்றனர்.. வீட்டிற்கு வந்த சாதனா..  இரவு உடை எடுத்துக்கொண்டு  குளியல் அறைக்குசெல்ல, “பேபி வேஸ்ட் ஆஃப் டைம்” என்றவன்… அவள் என்ன என்று உணரும் முன்ன்னே அவளை அள்ளிக்கொண்டவன், தானும் அவளுடன் குளியலறைக்கு சென்றான்.. “ஃப்ராடு.. ஃப்ராடு.. இதுதான் வேஸ்ட் ஆஃப் டைமா..”என சிணுங்க “ஆமா பேபி “ரெண்டுபேரும் தனி தனியா குளிச்சா  டைம் வேஸ்ட், தண்ணீர் நிறையா செலவாகும்.. அதுக்குத்தான் இந்த ஐடியா..” என்றவன் ஷவரை திறந்துவிட்டான்..

குளித்து முடித்து வெளியேவந்த சாதனாவின் முகம் வெட்கத்தில் ரத்த நிறம் கொண்டிருந்தது… பின்னர் வந்த இரவுகள் புதுமணமக்களுக்கே உரிய இரவாக கழிந்தது.. சாதனா ஒவ்வொரு நாளும் அபியின் அன்பில் மூழ்கி திளைத்திருந்தாள்.. ஒருவாரம் கழித்து அபி அலுவலகம் சென்ற்வன் சாதனாவையும் உடன் அழைத்து கொண்டு சென்றான்.. அங்கு சாதனா இடத்தில்.. மதுவும், மது இடத்தில் வேறொரு பெண்ணும் இருக்க.. கேள்வியாக பார்த்தவளிடம்.. நீ வேலை செய்யணும்னு அவசியம் இல்ல பேபி.. ஆனா, அந்த பொண்ணுக்கு கண்டிப்பா இந்த வேலை தேவை சோ..” என்றவன் தன் அறைக்கு அவளை அழைத்து சென்றான்..

சாதனாவிடம் வந்தவன் ஒரு அப்ளிகேசன் ஃபார்மை நீட்ட புரியாமல் பார்த்தவளிடம்.. நீ சி.எ படிக்கிறதுக்கான.. அப்ளிகேசன் ஃபார்ம்.. எல்லாம் நான் ஃபில் பண்ணிட்டேன் நீ சைன் மட்டும் போடு..பேபி” என கூற.. கணவனின் செயலில் எப்பொழுதும்போல் இன்றும் பேச்சிழந்தவள்.. அந்த ஃபார்மை வாங்கி ஒரத்தில் வைத்தாள்.. ”ஏன் பேபி என்னாச்சு.. நீ சி எ படிக்கிறதுக்கு ரொம்ப ஆசைப்பட்டேல்ல..பின்ன ஏன் கையெழுத்து போடாம ஓரமா வச்சுட்ட..?” என கேட்டவனிடம் “இன்னும் கொஞ்சநாள் போகட்டும் மனு..அப்பறம் படிச்சுக்கிறேன்..” என்றவளை புரியாமல் பார்த்தவன்.. அவள் மௌனமாக இருக்கவே “உன் விருப்பம் பேபி என்றவன் வேலையை பார்த்து கொண்டிருந்தான்..

ஒரு மாதம் கழித்து பெரியவர்கள் அனைவரும் ஆன்மீக சுற்றுலாவை முடித்து வர.. வீடே கலகலப்பாக மாறியது..தன் வீட்டிற்கு செல்வதாக கூறிய மங்கையை நால்வரும் பேசியே அவரை தங்களுடன் இருக்க சம்மதிக்க வைத்தனர்.. சாதனா அந்த வீட்டின் இன்றியமையாதவளாய் ஆகிப்போனாள்.. அப்ளிகேசன்  வாசுகியுடன் சேர்ந்து அரட்டை அடிப்பது, பாட்டிக்கு தைலம் தேய்த்து விடுவது, புத்தகம் வாசித்து காட்டுவது.. தன சேகருடன் செஸ், கேரம் விளையாடுவது, இதில் அபியும் சேர்ந்து கொண்டாள்.. அந்த இடமே சண்டைக்காடாய் மாறிவிடும்.. பின்பு வாசுகிதான் அனைவரையும் அதட்டி அமைதி படுத்துவார்.. இதையெல்லாம் பாத்து கொண்டிருந்த மங்கைக்கு மனம் சொல்லமுடியாத நிம்மதியை அளித்திருந்தது..

ஒரு நாள் காலை, வாசுகி செய்த டிஃபனை மேஜையில் எடுத்து வைத்து கொண்டிருந்தவள்.. திடீரென்று மயக்கம் போட்டு விழபோனவளை அபி வேகமாக வந்து தாங்கி கொள்ள, சாதனா மயக்கம் அடைந்திருந்தாள்.. பதட்டம் அடைந்த அபி அவளை தூக்கி வந்து சோபாவில் படுக்க வைத்தவன்.. “பேபி.. பேபி.. “என பதட்டத்தோடு அழைக்க.. அவளிடம் எந்த அசைவும் இல்லாமல் போக..வாசுகி தண்ணீர் எடுத்து அவள் முகத்தில் லேசாக தெளித்தார்..அதில் மயக்கம் தெளிந்து எழுந்து அமர்ந்தவளை அபி இறுக்கமாக அணைத்து கொண்டான்.. அவன் உடம்பு லேசாக நடுங்க.. ஆறுதலாக அவனின் முதுகை தடவி கொடுத்தவளின்.. அருகே வந்த பாட்டி.. அவளின் கையை பிடித்து நாடி பார்த்தார்..

அவர் முகத்தில் புன்னகை ஒட்டிக்கொள்ள.. “டே பேராண்டி அவளை இப்படி மயக்கம் போட வச்சுட்டு..இப்ப பேபி பேபின்னா சொல்ற..” என அதட்ட..  அவர் கூறியதின் அர்த்தம் அனைவருக்கும் விளங்க பாவம் நம்ம அபிக்கு மட்டும் புரியவே இல்லை.. “என்ன டார்லிங் சொல்றிங்க..” என கேட்க.. “அதை சாதனா சொல்லுவா.. நீங்க உங்க ரூமுக்கு போங்க.. நான் சாப்பாடு கொடுத்துவிட்றேன்” என்று வாசுகி அவர்களை அனுப்பி வைத்தார்.. அறைக்கு வந்த சாதனாவிடம் “என்னாச்சு பேபி உனக்கு..எனக்கு ரொம்ப பயமா இருக்கு பேபி“ என்று தவிப்புடன் கூறியவனின் மார்பில் சாய்ந்து கொண்டவள்.. ”மனு நம்ம குடும்பத்துல இன்னொரு புது நபர் வரப்போறார் என கூறியவள் அவனின் கையை எடுத்து தன் வயிற்றில் வைத்து கொண்டாள்…

”பே….பி நிஜமாவா… நான் அப்பா ஆக போறேன்னா,,ஹே” என்று சந்தோசத்தில் என்று துள்ளி குதித்து கைகளை காற்றில் குத்தியவன்.. அவளை தூக்கி கொண்டு தட்டாமாலை சுற்றினான்.. “ரொம்ப தங்க்ஸ் பே பி…” என்றவனின் நெற்றியில் முத்தமிட்டவள்..”தலை சுத்துது மனு.. இறக்கி விடுங்க..” என்றதும்தான் அவளை இறக்கி விட்டான்.. சாதனா கருவுற்றிருப்பதை அறிந்து அபியின் குடும்பமே அவளை தாங்கியது… அபி அவளை தன் உயிராக பார்த்து கொண்டான்.. அவளும் எடுத்ததெற்கெல்லாம் அபியைத்தான் தேடினாள்.. அதில் அன்னையர் இருவரும் பெருமையுடன் சலித்துகொண்டனர்.. அவள் வாந்தி எடுக்கும் போதெல்லாம் அவள் தலையை தாங்கி பிடிப்பது.. சோர்வாக இருக்கும்பொழுது தன் மார்பில் சாய்த்து கொள்வது.. இரவு நேரத்தில் அவள் காலகளை இதமாக பிடித்து விடுவது.. என்று அவளை ஒரு குழந்தையை போல் தாங்கி கொண்டான்..

ஏழாம் மாதம் நெருங்கவும் வளைகாப்பு செய்தனர்.. ஆலிவ் நிற பச்சையில்.. பட்டு உடுத்தி.. முந்தியில் குட்டி கிருஷ்ணன்.. வரைந்திருந்த சேலையை கட்டி, மனையில் அமர வைத்தனர்.. அனைவரும் வளையலிட்டு முடித்து இறுதியாக அபியை அழைக்க.. அவன் மனைவியையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தவன்.. அவளுக்கு வைர வளையலை அணிவித்து விட்டு.. நெற்றியில் முத்தமிட.. கணவனின் செய்கையில், நாணமும், மகிழ்ச்சியும் ஒருசேர அடைந்தாள்.. விழா சிறப்பாக முடிந்து சாதனாவை தங்கள் அறையில் விட்டவன்.. மீண்டும் கீழே வந்து.. அவளுக்கு சாப்பாடு எடுத்து வந்து ஊட்டி விட்டான்.. ஊட்டி கொண்டே “பேபி நீ சந்தோசமா இருக்கியாடா..? என கேட்க..”ம்ம் கூம்..” என கூறியவள் “முதல்ல தூங்குறப்ப நான் உங்கமேல படுத்துக்குவேன் ஆனா இப்ப தொப்பை இடிக்குது மனு..” என பரிதாபமாக கூற..

அவள் கூறுவதை கேட்டவன் வாய்விட்டு சிரித்தான்..”சிரிக்காதிங்க மனு” என்று சிணுங்கையவளை.. “சரி பேபி இனிமேல் நீ என்மேலேயே படுத்துக்கலாம்..தொப்பை இடிக்காம பார்த்துக்குறேன் சரியா” என்றவன்..அன்று இரவு அவன் சொன்னது போலவே சாதனாவை தன் மேல சாய்த்து கொண்டு, அவள் நன்றாக உறங்கிய பின்.. அவளை படுக்கையில் நன்றாக படுக்க வைத்தான்..

ஒரு நாள் நள்ளிரவில் சாதனாவிற்கு வலி வர, அவள் கணவனை எழுப்பும் முன்னே மனைவியின் அசைவில் விழித்தவன் அவள் வலியில் துடிப்பதை பார்த்து சாதனாவை விட அவன் துடித்து போனான்..அவனுக்கு பதட்டத்தில் தன் அன்னையை கூட அழைக்க வேண்டும் என்று தோன்றாமல்..இருந்தான்.. சாதனாதான்..”மனு எனக்கு ஒண்ணும் இல்ல இது எல்லாருக்கும் வரும் வலிதான்.. நீங்க வசும்மாவையும், அம்மாவையும் கூப்பிடுங்க..”என வலியுடன் கூற,,  வேகமாக தன் போனை எடுத்து வாசுகிக்கு அழைத்தவன் விசயத்தை கூறினான்.. சாதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள்.. 

மருத்துவர் அபியை ”உங்க மனைவியின் அருகே இருக்க விரும்புகிறீர்ளா.? என கேட்க  அபி பதில் சொல்லும்முன் சாதனா வேகமாக மறுத்தாள்.. “வேண்டாம் டாக்டர்..என்னையவிட அவர் ரொம்ப துடிச்சு போயிருவார் அதனால அவர் உள்ள் வரவேண்டாம்..” என அவர் புன்னைகையுடன் அபியை பார்த்தவர்.. “கவலை படாதிங்க அபி உங்க மனைவியையும் குழந்தையையும் பாத்திரமா உங்க கிட்ட தந்துவிடுவேன்..”என்றவர் உள்ளே சென்றார்.. சரியாக ஒரு மணி நேரம் அபியையும் அவன் குடும்பத்தையும் தவிக்கவிட்ட.. அவன் மகன் இந்த பூமியில் கால் பதித்தான்.. மருத்துவர் குழந்தையை அவர்களுக்கு காட்ட.. அப்படியே அபியின் சாயலில் இருந்தது குழந்தை….அபி குழந்தையின் அழகில் மயங்கினாலும்.. தன் மனையாளை பற்றி கேட்க. மருத்துவர்  சாதனா நலமுடன் இருப்பதாக கூறிவிட்டு இன்னு கொஞ்ச நேரத்தில் வேறு அறைக்கு மாற்றிவிடுவோம் அப்பொழுது பார்க்கும்படி சொல்லிவிட்டு சென்றார்..

சொன்னது போலவே சாதனாவை வேறு அறைக்கு மாற்றிவிட.. முதலில் உள்ளே சென்ற அபி.. சாதனா விழித்திருப்பதை பார்த்தவன்.. அவளின் கன்னத்தில் முத்தமிட்டு..” ரொம்ப கஷ்டமா இருந்ததா பேபி..” என்றவனின் கண்ணில் இருந்து இரு சொட்டு கண்ணீர் சாதனாவின் நெற்றியில் விழ சாதனா அவனின் விழிநீரை துடைத்து விட்டு அவனின் நெற்றியில் முத்தமட்டவள்.. “எனக்கு ரொம்ப வலிக்கல மனு.. நான் உங்களை பத்திதான் நினச்சுட்டு இருந்தேன் நீங்க எப்படி இருக்கிங்ளோன்னு..”என்று கூறியவளின் முகத்தோடு தன் முகத்தை அழுத்தி கொண்டான். பின்னர் பெரியவர்கள் அனைவரும் உள்ளே வர.. சாதனாவிடம் பேச நேரம் சென்றது ..       

அபிமன்யூ சாதனாவின் வாழக்கையில் ஒளி சேர்க்க வந்த தங்கள் மகனுக்கு விபாகரன் என்று பெயர் சூட்டினர்.  அதே குலதெய்வம் கோவிலில் குழந்தைக்கு மொட்டை எடுத்துவிட்டு ஊர் திரும்பி கொண்டிருந்தனர் அபியின் குடும்பத்தினர்.. ஏப்பொழுதும் போல் அபியும் சாதனாவும் ஒரு காரில் வர இப்பொழுது பெரியவர்களோடு விபு குட்டியும் சேர்ந்து கொண்டான்.. அபியின் தோளில் சாய்ந்திருந்த சாதனா.. 

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு 

என் உள்நெஞ்சு சொல்கின்றது
பூவோடு பேசாத காற்றென்ன காற்று 

ஒரு பூஞ்சோலை கேட்கின்றது
மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய் 

எந்தன் பெண்மை பூப்பூக்குதே
நான் பிறக்குமுன்னே அட நீ பிறந்ததேன்
நான் பிறக்கும்போது நீ உந்தன் கையில் என்னை ஏந்தத்தானோ..

என்று பாடியவள் அவனின் கன்னத்தில் முத்தமிட.. ஒருகையால் அவளை அணைத்து கொண்டவன்.. ”ஆமா…ஆமா… உன்னை ஏந்தவேதான்..” என்று அவள் நெற்றியில் முத்தமிட்டு அவளை அணைத்து கொண்டான்..

ஆணினால் ஏற்பட்ட மனக்காயத்தில் இருந்து அவள் அறியாமலையே அந்த காயங்களை ஆற்றி.. அதே மனதில் தான் சிம்மசனமிட்டு அமர்ந்திருக்கும் அபிமன்யூ இனி வரும் காலங்களிலும் இதே காதலோடு தன்னவளை கண்ணின் மணியாக பார்த்து கொள்வான் என்ற நிறைவோடு நாமும் விடை பெறுவோம்

முற்றும்…..          

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
10
+1
22
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    3 Comments

    1. Superb story sis😍😍😍…. Starting la erunthu end varai so cute😍😍😍…. Abi Sana lv ❤❤ sema😍😍😍😍…

    2. kanimozhi

      Semma story sisy ithukaga n neraiya wait panne ..kadaisi padichite ..me happy 😁😁😁.. heart for u ❤️❤️❤️❤️❤️

    3. Sis super sis vera level sis😍😍starting lanthu super sis .abi Sana super sis