Loading

அத்தியாயம்−1

துகிலன், நிலைக்கண்ணாடி முன் நின்றுக்கொண்டு, “கற்பனையில் கவிதை வடித்துக்கொண்டிருக்க”.

ஒரு “குரல்” வந்து அவன் கற்பனையை கலைத்தது.அது யாரென்றுப்பார்த்தால், அமுதன்தான்.

அமுதா ஏன்டா? இப்படிக்கத்திக்கொண்டே வருகிற.துகிலன்.

டேய்! ஆபிசுக்கு ரெடியாகிட்டியா?.அமுதன்.

பார்த்தால் எப்படி? தெரியுது. துகிலன்.

பார்த்தால் ஆபிசுக்குப்போறமாதிரிதான் தெரியுது. அமுதன்.

நீ, வந்த விஷயத்தை சொல்லு அமுதா. துகிலன்.

டேய்! “ஆபிஸிற்கு லீவு போட்டு என்னுடன் கேண்டினிற்கு வாடா”. வேலையாட்கள் லீவு போட்டுட்டாங்க. நான் தனியாளாக இருந்து சமாளிப்பது கடினமாக இருக்கும். நீ, வந்தேனா கொஞ்சம் ஹெல்புல்லா இருக்கும். வரதானே! . அமுதன்.

டேய்! இன்னைக்கு  ஏற்கனவே லேட். கோயிலுக்குப்போனதால். நீ வேற கேண்டினிற்கு கூப்பிடற. எங்க எம்.டி. தங்குஸ் மண்டையன் இன்னைக்கு முக்கியமான மீட்டிங் இருக்கிறது சொன்னான் மீட்டிங் நான் போய் அட்டண்ட் பண்ணலை.என்னை உண்டு இல்லைனு ஆக்கிடுவான்.துகிலன்.

டேய், இன்னைக்கு ஒருநாள் மட்டும்தான்டா. பிளிஸ் துகிலா.எனக்கெஞ்சிக்கொண்டிருந்தான்.அமுதன்.

சரி! சரி! நீ, கெஞ்சுவதைப்பார்த்தால் பாவமாகதான் இருக்கிறது. உனக்காக வரேன். “தங்குஸ் மண்டையன்” கேட்டால் நான் பதில் சொல்லிக்கொள்கிறேன்.துகிலன்.

தேங்க்ஸ்டா. என துகிலன் ரூமை விட்டு வெளியேறினான். அமுதன்.

“அகிலன் துமியை காலேஜ்ஜிற்கு அனுப்பி வைத்தவன். தன் நண்பர்களைப்பார்க்க சென்றான்.”

வாடா, அகிலா. தன் நண்பர்கள் அழைக்க.

மச்சி, எனக்கு வேலைப்பார்க்க சொன்னேன் பார்த்திங்களாடா?.அகிலன்.

மச்சி, நீ எதிர்ப்பார்க்கிறமாதிரி வேலைதேடிப்பார்த்தோம்டா கிடைக்கலை. “ஆனால், நீ எதிர்பார்த்ததைவிட பெட்டர்ரான ஒரு வேலை இருக்குப்போகுறியாடா?”. பணம் நிறைய கிடைக்கும்.நண்பர்கள்.

என்ன? மச்சி அப்படி! பெட்டரான வேலை. அகிலன்.

இல்லிகலான வேலைதான் மச்சி. நண்பர்கள்.

இல்லீகலான வேலைனா என்னடா?. அகிலன்.

“போதமாத்திரை தயாரிக்கும் கம்பெனியில் போதமாத்திரைகளை தயார் செய்ய வேண்டும்”.நண்பர்கள்.

ஆமாண்ட மச்சி, இந்த போதமாத்திரையை தயார் செய்துக்கொடுத்தோம்னா நிறைய பணம் கிடைக்கும். நண்பர்கள் கூறியதும்.

இது தப்பில்லையா”?. இது மிகப்பெரிய சமூகக்குற்றம்டா.அகிலன்.

சமூகக்குற்றம்தான். எளிதில் நிறைய பணம் கிடைக்குதுல. நண்பர்கள்.

நிறைய பணம்னு சொல்றிங்களே! எவ்வளவு பணம் மச்சி கிடைக்கும். அகிலன்.

என்ன? ஒரு நாளைக்கு “பத்தாயிரம், இருபதாயிரம் கிடைக்கும்.”

அகிலன், இவ்வளவு? பணமானு வாயை பிளந்தான்.  “மூளை சொல்லியது நீ இந்த வேலையை செய் என்று. மனது சொல்லியது, வேண்டாம். இது தவறு என்று.மூளையும், மனதும் சண்டைப்பிடித்துக்கொண்டிருந்தது”. கடைசியில் மனது ஜெயித்துவிட்டது. மச்சி, இந்த வேலை எனக்கு வேண்டாம் மச்சி.வேற வேலையிருந்தா சொல்லுடா. இது மிகப்பெரிய சமூககுற்றம் மச்சி. அகிலன் சல்லாபித்துக்கொண்டிருந்தான்.

மச்சி, இந்த வேலை செய்தால் மூனே மாசத்தில் “பணக்காரனாக” மாறிவிடலாம்.உன் அம்மா கஷ்டப்படதேவையில்லை.அதுக்காகதான் சொன்னோம். 

விடுடா, அகிலா, உனக்குத்தகுந்த வேலையைப்பார்த்து தருகிறோம். உனக்கு இந்த வேலை வேண்டாம்.வாடா நமக்கு நேரமாகுது கிளம்பலாம்.என நண்பர்கள் கலைந்து சென்றனர்.

“அகிலன், யோசனையில் நின்றுக்கொண்டிருந்தான். அப்போது! போன் வந்தது”.

ஹலோ, அண்ணா எங்கிருக்க. உடனே!   காஞ்சிபுரம் “மஹாலட்சுமி ஆஸ்பத்திரிக்கு வாண்ணா பதற்றத்துடன் கூறினாள் அகிலனின் தங்கை மகிழ்விழி”

அகிலன், விரைந்து மஹாலட்சுமி ஆஸ்பத்திரிக்கு சென்றான்.

மகிழ்விழி, “ஐ.சி.யூ வார்டுக்கு வெளியே கண்ணிரை கரைத்தப்படியே பதட்டமாக உட்கார்ந்திருந்தாள்”. தன் அண்ணனைக்கண்டதும் அண்ணானு ஓடி வந்து, கட்டியணைத்து அழுதாள். 

மகிழ், என்னடி ஆச்சு. ஏன்? “ஆஸ்பத்திரியில்” வந்து உட்கார்ந்திருக்கிற.அகிலன் தன் தங்கையை தள்ளி நிறுத்திக்கேட்க.

மகிழ் விசும்பியப்படியே! அம்மாவுக்கு ஆக்சிடன்ட் ஆயிருச்சுனா?. காய் வித்துட்டு வரும்போது.

“என்னடி! சொல்ற. அகிலன் அதிர்ச்சியுற்றான்.”

ஆமாம் அண்ணா. அம்மா காய்வித்துட்டு வந்துக்கொண்டிருந்தார்களா?. அப்போது! ஒரு கார்காரன் இடித்துவிட்டு போயிட்டான் “விசும்பிக்கொண்டே” சொன்னான். மகிழ்விழி.

“இவர்கள் இருவரும், பேசிக்கொண்டிருக்கும்போது. டாக்டர் ஐ.சி.யூ வார்டிலிருந்து வெளியே வந்தாரு”.

டாக்டர்,என் அம்மாவிற்கு எப்படி? இருக்காங்கனு அகிலன் விசாரிக்க.

நீங்கதான், அந்தம்மாவுடைய பையனா?.டாக்டர்.

ஆமாம், டாக்டர். நான்தான் அவங்கப்பையன்.அகிலன்.

நீங்க, என் ரூமிற்கு வாங்க. டாக்டர்.

மகிழ், நீ இங்கே! இருடா. நான் டாக்டர் ரூமிற்கு போயிட்டு வந்துரேன். அகிலன்.

ம்! சரிண்ணா. மகிழ்விழி.

“அகிலன், டாக்டர் ரூமிற்கு சென்று இருக்கையில் அமர்ந்தான்.”

டாக்டர், உங்கம்மாவுக்கு மண்டையில் அடிப்பட்டு பிளட் ஹெவி லாஸ் ஆகியிருக்கு.”ஒரு ஆபரேசன் பண்ணனும் அதுக்கு, எப்படியும் மூன்று லட்சம் செலவாகும்.”

டாக்டர், ஆபரேஷன்,பண்ணால்தால்தான் என் அம்மா உயிர்பிழைப்பாங்களா?.அகிலன்.

ஆமாம், ஆபரேஷன் பண்ணால்தான் உயிர் பிழைப்பாங்க. ஆபரேஷனுக்கு தேவையான பணத்தை முன்கூட்டியே! கட்டினால் உடனே ஆபரேஷன் பண்ணிவிடலாம்.டாக்டர்.

அகிலன், “பிரம்மைப்பிடித்தவன்மாதிரி” உட்கார்ந்திருந்தான். இவ்ளோ பணத்திற்கு எங்கே! போவது என்று, யோசித்துக்கொண்டிருக்க. “சற்றுமுன் தன் நண்பர்களுடன் உரையாடியது . அகிலன் கண்முன் வந்து நிழலாடியது”.டாக்டர், நீங்க ஆபரேசனுக்கு ஏற்பாடு செய்யுங்கள் பணத்துடன் வருகிறேன். அகிலன் டாக்டர் ரூமை விட்டு வெளியேறி தன் நண்பர்களுக்கு போன் செய்து, அந்த வேலை செய்ய சம்மதம் சொன்னான். 

“நண்பர்களும், விரைந்து வந்து, அகிலன் அம்மாவிற்கு ஆபரேஷனுக்கு தேவையானப்பணத்தை ரிஷப்சனில் கட்டினார்கள்”.

துகிலன், தன் அண்ணனுடன் கேண்டினிற்கு சென்றான்.

“அமுதன், வைஷ்யா காலேஜ்ஜில் கேண்டின் எடுத்து நடத்துக்கிறான்”. 

இருவரும், கேண்டினை திறந்தவர்கள். தேவையான பொருட்களை எடுத்து வைத்துக்கொண்டிருந்தார்கள்.

“துமி தன் தோழிகளுடன் கேண்டினில் வந்து உட்கார்ந்தாள்.”

அமுதன் காபி போட்டுக்கொண்டிருந்தான்.

துகிலன், அந்த காலேஜ்ஜை பார்வையிட்டுக்கொண்டிருந்தான்.

ஹலோ, மிஸ்டர் வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருக்கிங்க. போய் சூடா நான்கு காபி, சமோசா, வடை, இருந்தா கொண்டுவாங்க.

பின்பக்கம் வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்தவன். இப்போதைக்கு காபி,மட்டும்தான் இருக்கு. சமோசா, வடையெல்லாம் இன்னும் போடலை போட்டால் எடுத்துட்டு வந்து தருகிறேன் நக்கலாக கூறிவிட்டு. அமுதனிடம் சென்று. காபி போட்டுட்டியா அமுதா.

இந்தாடா! நான்கு கப்பில் ஊற்றி கொடுத்தான் காபியை.அமுதன்.

காபியை அவங்க டேபிளில் வைத்துவிட்டு, அவர்களைப்பார்க்காமல் திரும்பும்போது. “துமியின் பேச்சுக்குரல் துகிலனை ஈர்த்தது”.திரும்பி துமியப்பார்த்தவன் வியந்துப்போனான்.காலையில் கோயிலில் பார்த்தவள் இங்கே! இருக்கிறாளே என்று.

“தன் விழி அகலமறுத்தது துமியின் வதனத்தைக்கண்டு”.செஞ்சிலையாக நின்று துமியைப்பார்த்துக்கொண்டிருந்தான்.

அவன் மனதிற்குள் ஆயிரம் ஆயிரம் “கற்பனை”சிறகுகள் முளைத்தது. பல்லாயிரம் கவிதை வரிகள் தோன்றியது.லட்சம் லட்சம் பட்டாம்பூச்சிகள் துகிலனை சுற்றி வட்டமிட்டுக்கொண்டிருந்தது. வானில் மின்னும் நட்சத்திரங்கள் தரையிலிறங்கி மின்னிக்கொண்டிருந்தது. சுட்டெரிக்கும் சூரியன்கூட குளிர்நிலவாக மாறியது. எல்லாம் துமியின் வதனத்தைக்கண்டு.

உந்தன் விழிகளில் உளியை

வைத்துக்கொண்டிருக்கிறாயோ!

உன்னைக்கண்டதும் நான் செஞ்சிலையாக மாறுகிறேன்

நீ என்ன? மாயாஜால வித்தைக்காரியோ!

உன்னைக்கண்டதும் பல மாயங்கள் உண்டாகிறது

பெண்ணே!

உன் விழிகள் கண்டதும்

உன்னுள் தொலைந்திடதான்

நினைக்கிறேன்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    3 Comments

    1. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். சமூக கருத்தை வலியுறுத்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    2. அமுதன் துகிலனோட அண்ணாவா???…அகிலன் போதை மாத்திரை சப்ளை பண்றது க்ரைம்னு பணத்தாசை காட்டியும் மறுத்தான்..பட் இப்போ அவனோட சூழ்நிலை சமூககுற்றம்னு தெரிஞ்சும் அம்மாவை காப்பாத்தா அதை செய்யப்போறான்…துமியை கோவில்ல பார்த்திருக்கானா துகிலன்

    3. அருமையான சமூகம் சார்ந்த கதை. மேலும் பல படைப்புகளை எழுத வாழ்த்துகள்.