Loading

 

 

ஈர்ப்பு 30

 

என் அலைபேசியில் ராகுலின் சிறுவயது புகைப்படத்தை க்ரிஷின் உள்பெட்டியில் பார்த்ததும் நான் எப்படி உணர்கிறேன் என்று என்னாலேயே சரியாக கணிக்க முடியவில்லை.

 

ஒரு சாதாரண புகைப்படத்தால் இத்தனை உணர்வுகளை தட்டி எழ வைக்க முடியுமா? ஆம், இதோ முடிந்திருக்கிறதே! மகிழ்ச்சி, ஏமாற்றம், கோபம், வருத்தம் என்று அனைத்து உணர்வுகளும் ஒருங்கே தோன்றி என்னை திணற வைத்துக் கொண்டிருந்தன. 

 

க்ரிஷுடன் நடந்த ஒவ்வொரு உரையாடல்களும் என் மனதிற்குள் என் சம்மதமின்றியே வலம் வந்து கொண்டிருந்தன.

 

முதல் நாள் அவனை பற்றி தெரிந்துகொள்ள துருவித் துருவி கேள்வி கேட்டதிலிருந்து, கடைசியாக அவனை கண்டுப்பிடிப்பேன் என்று சவால் விட்டது வரை எல்லாம் என் நினைவுக்கு வந்தது.

 

‘ச்சே, அவனை லவ் பண்றேன்னு அவன்கிட்டயே எத்தனை முறை சொல்லிருப்பேன்!’ என்று என்னை நானே கேட்டுக்கொள்ள,‘அவனை லவ் பண்றதை மட்டுமா சொன்ன? அவனை சைட் அடிச்சதிலிருந்து அவனை பார்த்து மெய் மறந்து நின்னது வரைக்கும் எல்லாத்தையும் சொல்லி வச்சுருக்க!’ என்று என் மனசாட்சி என்னை இன்னும் ஏற்றி விட்டுக் கொண்டிருந்தது.

 

‘ஹ்ம்ம், அவன் என்னை பத்தி என்ன நினைச்சுருப்பான்?’ என்று காலம் கடந்து ஒருவித லஜ்ஜையில் நான் யோசிக்க, ‘சரி விடு, நடந்தது நடந்துடுச்சு. இனிமே அதை பத்தி நினைக்கிறதால என்ன யூஸ் இருக்கு? அதான் நீ அந்த சேலஞ்ல ஜெய்ச்சுட்டியே!’ என்றது என் மனசாட்சி.

 

‘அட ஆமால, என்னையவே இந்த ஒரு வாரம் கிறுக்கு பிடிச்சு சுத்த வச்சுருக்கான். இதுவரைக்கும் என்கிட்டயிருந்து நிறையா மறைச்சுருக்கான். அடிக்கடி என்னை கடுப்பேத்த வேற செஞ்சுருக்கான். இது எல்லாத்துக்கும் சேர்த்து உனக்கு பனிஷ்மெண்ட் தரேன். வெயிட் ஃபார் இட் மிஸ்டர் ராகுல் கிருஷ்ணா!’ என்று மனதிற்குள் கூறிக்கொண்டு, அவனுக்கு என்ன தண்டனை தரலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

 

‘ப்ச், இந்த நேரத்துல எதுவும் தோண மாட்டிங்குதே!’ என்று நான் சலித்துக் கொள்ள, என் மனச்சாட்சியோ, ‘நீ உண்மைலேயே அவன் மேல கோபமா இருக்கீயா? இல்ல கோபமா இருக்க மாதிரி காட்டிக்கிறியா?’ என்று என்னையே வாரியது.

 

‘நான் என்ன பண்ண, அவனை நினைச்சா கோபமே வர மாட்டிங்குது!’ என்று நான் மானசீகமாக உதட்டை பிதுக்க, ‘ஸ்ஸ்ஸ் நதி, இப்போ நீ கோபமா தான் இருக்கணும். அவன் உன்னை ஏமாத்திருக்கான். சோ, டோன்ட் ஹவ் மெர்சி ஆன் ஹிம் நதி!’ என்று நானும் என் மனசாட்சியும் மிகுந்த சிரமத்துடன் அவன் மீது கோபத்தை வரவைக்க முயன்று கொண்டிருந்தோம். 

 

அப்போது அங்கு வந்த கிருஷ்ணா, என் கையில் இருந்த ஃபைலை பார்க்க, ஒரு பெருமூச்சு விட்டு என்னையே நிதானப்படுத்திக் கொண்டு, “இந்தாங்க ப்ரோ, மிஸ்டர் ராகுல் கிருஷ்ணா கிட்ட சைன் வாங்குன ஃபைல்.” என்று அந்த ஃபைலை நீட்டினேன்.

 

அவனோ ஒரு நொடி அதிர்ந்து, “சிஸ்… உங்களுக்கு…” என்று அவன் இழுக்க…

 

“ஹ்ம்ம், தெரிய வேண்டியது எல்லாம் தெரிஞ்சுடுச்சுன்னு நினைக்கிறேன். நான் தெரிஞ்சுக்க வேண்டியது இன்னும் மிச்சம் மீதி ஏதாவது இருக்கா?” என்று அவனிடமே கேள்வியை கேட்டேன்.

 

“அது… வேற எதுவும் இல்ல சிஸ்.” என்று கூறியபடி அந்த ஃபைலை வாங்கிக் கொண்டு சென்றுவிட்டான்.

 

சாண்டி என்னிடம் வந்து, “ஹே என்ன டி ஆச்சு உனக்கு? ஒரு போலீஸ்னு பார்க்காம இப்படி அவருக்கிட்ட பேசியிருக்க?” என்றாள்.

 

சட்டென்று தோன்றிய எரிச்சலில், “ஓஹ், இப்போ தான் அவரு போலீஸ்னு உனக்கு தெரிஞ்சுதா? இவ்ளோ நாள் அவரு உன் பின்னாடியே வந்தப்போ நீ அவரை அவாய்ட் பண்ணியே அப்போ தெரியலையா?” என்று கத்தினேன்.

 

அதைக் கேட்டு அவள் முகம் கூம்பியது.…

 

‘சாரி டி சாண்டி, இப்படி பேசுனாவாவது நீ உன் லைஃப் பத்தி, உன் ஃப்யூச்சர் பத்தி, ப்ரோ பத்தி ஏதாவது  யோசிக்கிறியான்னு பார்க்க தான் இப்படி பேசுனேன்.’ என்று மனதிற்குள் கூறிக்கொண்டு அவ்விடத்தை விட்டு அகன்றேன்.

 

என்னதான் வெளியே கோபம் போலக் காட்டிக்கொண்டாலும், உள்ளுக்குள் ஒரு பரவச நிலையிலேயே இருந்தேன். மனம் ஒரு இடத்தில் நில்லாமல் அவனின் நினைவுகளிலேயே சுற்றித் திரிந்தது. தானாகவே ராகுலுக்கும் க்ரிஷுக்கும் உள்ள ஒற்றுமையை ஒப்பிட்டுப் பார்த்தது. 

 

‘ஹ்ம்ம் இதை முன்னாடியே செஞ்சுருக்கலாம்.’ – அவ்வபோது என் மனச்சாட்சி என்னைக் கொட்டவும் மறக்கவில்லை.

 

அப்படி யோசித்துக் கொண்டிருக்கும்போது தான், ராகுலை காட்டிலும் க்ரிஷுடன் தான் அதிக நேரம் செலவளித்திருக்கிறேன் என்பது புரிந்தது. மேலும் ராகுலிடம் பேசவே தயங்கியபோது க்ரிஷுடன் சாதாரணமாக உரையாடியது எனக்குள் தோன்றி என்னை குழப்பியது.

 

‘ஒரு வேளை, க்ரிஷும் ராகுலும் வேற வேறயா இருந்துருந்தா, நான் இப்போ யாரை லவ் பண்ணிருப்பேன்? எப்பவும் எனக்கு மாரல் சப்போர்ட்டா இருந்த க்ரிஷையா இல்ல எப்போ பார்த்தாலும் என்ன வெறுப்பேத்திட்டு இருந்த ராகுலையா?’ என்று விபரீதமாக என் மூளை சிந்திக்க, ‘அடியேய் இவ்ளோ நேரம் நல்லா தான இருந்த. இப்போ எதுக்கு திடீர்ன்னு லூசு மாதிரி பிஹேவ் பண்ற? அதான் ரெண்டு பேரும் ஒன்னுன்னு தெரிஞ்சுருச்சுல. அப்பறம் எதுக்கு ராகுலா க்ரிஷான்னு ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்க?’ என்று பதறியது என் மனம்.

 

‘அப்படிலா சும்மா விட முடியாது. பிரெண்டா இருந்த க்ரிஷே எனக்கு எவ்ளோ ஹெல்ப் பண்ணான். லவ் பண்றேன்னு ப்ரொபோஸ் பண்ணா ஆச்சா, எனக்காக வேற என்ன பண்ணிருக்கான் ராகுல்?’ – சும்மா இருக்கும் மூளை எதை எதையோ சிந்திக்க, ‘அடப்பாவி அதான் ரெண்டு பேரும் ஒருத்தர் தான?’ என்று அப்போதும் வக்காலத்து வாங்கியது என் மனம்.

 

‘அது எனக்கு தெரிஞ்சதுக்கு அப்பறம். அதுக்கு முன்னாடி ரெண்டு பேரும் வேற வேற தான?’ – மூளை

 

‘அதான் உனக்காக, உன் பொடிக்குக்காக அவனுக்கு ராசியான இடத்தையே கொடுத்துருக்கான்ல!’ – மனம்

 

‘இடத்தை கொடுத்துட்டா எல்லாம் ஓகே ஆகிடுமா? அதுக்கு ஐடியா எல்லாம் க்ரிஷ் தான கொடுத்தது!’ – மூளை

 

இவ்வாறு என் மூளையும் மனமும் இருவேறாக பிரிந்து எனக்குள்ளேயே  விவாதித்துக் கொண்டிருந்தது.

 

அப்போது என் அலைபேசி ஒலியெழுப்பி அதன் இருப்பை உணர்த்தியது. அதன் டிஸ்பிலேயில் சிரித்துக் கொண்டிருந்தான் ராகுல்…. ராகுல் கிருஷ்ணா!

 

‘ஹ்ம்ம் ச்சே, எவ்ளோ கஷ்டப்பட்டு உன் மேல கோபம் வரவைக்க ட்ரை பண்ணிட்டு இருக்கேன். இப்போ உன் மூஞ்சியை பார்த்தவுடனே, கஷ்டப்பட்டு பிடிச்சு வச்சுருந்த கோபம் எல்லாம் கரைஞ்சு போயிடுச்சு!’

 

இப்போது அவன் அழைப்பை ஏற்றால், கண்டிப்பாக அவன் சமாதானம் செய்வதற்கு முன்பு நானே சமாதானம் அடைந்து அவனுடன் சாதாரணமாக பேசிவிடுவேன் என்ற காரணத்தால் அவன் அழைப்பை நிராகரித்தேன்.

 

திரும்ப அழைப்பு வர, என் அலைபேசியை மௌனமாக்க விழைந்தபோது, முகநூலிலிருந்து சில அறிவிப்புகள் வந்தன. அதற்கு உள்ளே சென்று பார்த்தபோது சில செய்திகள், க்ரிஷிடமிருந்து அல்ல,  அவனிடமிருந்து,  ராகுல் கிருஷ்ணாவிடமிருந்து!

 

‘அடப்பாவி இவ்ளோ நாள் க்ரிஷ்ன்னு மொட்டையா வச்சுட்டு, இப்போ ராகுல் கிருஷ்ணாவா? இப்போ ஏதாவது பண்ணணுமே!’ ரொம்ப நேரம் யோசித்து, அவனிற்கு செய்தி அனுப்ப முடிவு செய்தேன்.

 

நான் : ஹலோ மிஸ்டர் ராகுல் கிருஷ்ணா, சேலஞ்ல நான் தான் வின் பண்ணேன். சோ நான் சொல்றதெல்லாம் கேட்க ரெடியா இருங்க. மீட் மீ அட் தி பார்க் அரௌண்ட் 6.30 பி.எம்!

 

அதற்கு அவன் மறுமொழி தருவதற்கு முன் முகநூலிலிருந்து வெளியேறிவிட்டேன். அலைபேசியையும் அணைத்து விட்டேன்.

 

உள்ளுக்குள் மர்ம புன்னகையுடன் இப்போதிருந்தே காத்திருக்க ஆரம்பித்துவிட்டேன்.

 

சரியாக ஆறே கால் மணிக்கு அந்த பூங்காவினுள் நுழைந்து விட்டேன். ஆனால், அவன் இன்னும் வந்திருக்கவில்லை. நான் அவனிடம் என்னென்ன கேள்விகளை கேட்க வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

 

நான் அவனிற்காக காத்துக் கொண்டிருக்க, அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளின் சத்தத்தில் நிகழ்விற்கு வந்தேன். அனைவரும் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்ததை பார்த்து எனக்குள்ளும் உற்சாகம் பிறந்தது. மெல்ல அவர்களிடம் செல்ல அடியெடுத்து வைத்தது தான் எனக்கு இறுதியாக நினைவிருந்தது.

 

என் கண்களை திறந்து பார்க்கும்போது, படங்களின் வருவது போல மங்கிய வெளிச்சம் உள்ள அறையில்  இருந்தேன். காற்றில் கலந்த வாசமும் சுற்றிலும் செங்கல் வைத்து கட்டப்பட்டிருந்த விதமும், நான் இருப்பது ஏதோ புதிதாக கட்டப்படும் அல்லது பாதியிலேயே கட்டுவதைக் கைவிடப்பட்ட கட்டிடம் என்று தெரிந்தது.

 

‘இது என்ன காலம் காலமா கடத்திட்டு வந்தா இது மாதிரி பாதி முடிஞ்ச பில்டிங்லேயே கட்டிப்போடுறாங்க? இது தான் ரவுடிங்களுக்கு ஃபேவரைட் ப்ளேஸோ!’ என்று அந்த சூழ்நிலையிலும் என் மூளைக்கு வேலை கொடுத்தேன். 

 

‘இப்போ இது அவங்க ஃபேவரைட் ப்ளேஸ்ன்னு தெரிஞ்சு என்ன பண்ணப் போற? லூஸி, உன்னை கடத்திருக்காங்க அது ஞாபகம் இருக்கா?’ என்று நினைவுபடுத்தியது என் மனம்.

 

‘அட ஆமால, பாரேன் என்னையும் ஒரு ஆளா மதிச்சு கடத்திருக்காங்க?’ என்று நான் ஆச்சரியப்பட, ‘எனக்கும் அது ஆச்சரியம் தான்! ஆனா இங்கேயிருந்து எப்படி தப்பிக்கப் போற?’ என்றது என் மனசாட்சி.

 

‘நான் எதுக்கு தப்பிக்கணும்? அதான் என்னை காப்பாத்த கூடவே ஒரு போலீஸ் வச்சுருக்கேனே!’

 

‘ஆஹான், படத்துல வர மாதிரி லேட்டா வர போலீஸா இருந்தா?’

 

‘ஹலோ ஹீரோவை இப்படியெல்லாம் கலாய்க்க கூடாது!’ என்று நான் மனதோடு பேசிக் கொண்டிருக்கும்போது “டேய் அவ முழுச்சிட்டா.” என்ற சத்தத்தில் நிகழ்விற்கு வந்து சுற்றுப்புறத்தை அலசினேன்.

 

அங்கு மூன்று பேர் இருந்தனர். பார்ப்பதற்கு ரவுடி போல் அல்லாமல் டிப்-டாப்பாக உடையணிந்திருந்தனர்.

 

அதில் ஒருவனை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். இன்னொருவனை மாலை பூங்காவினுள் நுழையும்போது பார்த்தேன்.

 

‘சோ, இந்த பொறுக்கிங்க இவ்ளோ நாள் என்னை ஃபாலோ பண்ணிட்டு இருந்தாங்களா?’ என்று நான் யோசிக்க, அப்போது அந்த மூவரில் ஒருவன், “இப்போ என்ன டா பண்றது?” என்றான்.

 

‘ஆமா இவரு பெரிய சயன்டிஸ்ட், கோ-சயன்டிஸ்ட் கிட்ட ஒப்பீனியன் கேட்குறாரு!’ – என் வாயையும் அடைத்திருப்பதால் மனதினுள் நினைக்க மட்டுமே முடிந்தது.

 

“அடுத்த டோஸ் போடு மச்சி, அவங்க வரதுக்கு இன்னும் நேரமாகுமாம்.” என்றான் மற்றொருவன்.

 

“டேய் அது வரைக்கும் சும்மா இருக்க போர் அடிக்குது டா. பாப்பாக்கும் போர் அடிக்கும்ல!” என்று கூறியவாறே என்னை பார்த்து ஒரு மாதிரி இளித்தான்.

 

‘அடேய் டப்சா கண்ணா, எவ்ளோ தைரியம் இருந்தா என்னையவே இப்படி உத்து பார்ப்ப? போறதுக்குள்ள உன் கண்ணை குத்துறேன்.’ என்று அவனை முறைத்துக் கொண்டிருந்தேன்.

 

“டேய் சும்மா இரு டா.” என்று அவர்கள் பேசிக் கொண்டிருக்க எங்களை நோக்கி வரும் காலடிச் சத்தம் எனக்கு கேட்டது.

 

‘வரது யாரா இருக்கும்? ராகுலா இல்ல அவங்க க்ரூப் ஆளா?’ என்று நான் யோசித்துக் கொண்டிருக்க என் யோசனையை தடை செய்ய அங்கு வந்தான் ராகுல்.

 

‘ஹப்பா வந்துட்டான், ஃபர்ஸ்ட் வாயில இருந்து இந்த கர்ச்சிஃபை எடுக்க சொல்லணும்!’

 

“வா ஆர்.கே உனக்காக தான் வெயிட்டிங்.” என்றனர் அம்மூவரும்.

 

நானோ என் காதுகளில் விழுந்தவை சரியா என்ற அதிர்ச்சியில் இருந்தேன்.

 

“குட் ஜாப் மனோ, வேற ஏதாவது சந்தேகப்படும்படி நடந்ததா?” என்றான் ராகுல்.

 

‘அடப்பாவி நீ தான் என்ன கடத்துனதா?’ என்ற அதிர்ச்சியில் நான் இருக்க, அவர்களோ அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், அவர்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர்.

 

“இல்ல ஆர்.கே, அப்படியெதுவும் நடக்கல. வெளிய அவங்க ஆக்ட்டிவிட்டீஸ் எப்படி இருக்கு?” என்று அந்த மனோவாகப்பட்டவன் கேட்க, “நம்ம நினைச்ச மாதிரி தான் நடக்குது.” என்றான் ராகுல்.

 

‘அடப்பாவிங்களா, என்ன நடக்குதுன்னு எனக்கு யாராவது சொல்லுங்க டா?’ என்று ஊமையாக முனகினேன்.

 

இதற்கு மேல் பொறுக்க முடியாது என்று எண்ணி அவர்களின் கவனத்தை கவர ‘ம்ம்ம் ம்ம்ம்’ என்று மூடியிருந்த வாயின் வழியாக சத்தம் எழுப்பினேன்.

 

என்னை பார்த்த பின் அவர்கள் நால்வரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துவிட்டு, “இனி நீ இங்க மேனேஜ் பண்ணிக்கோ டா. நாங்க வெளிய என்ன நடக்குதுன்னு பார்க்குறோம்.” என்று அம்மூவரும் கூறினர்.

 

அதில் என்னை ‘பாப்பா’ என்று அழைத்தவன் என் அருகில் வந்து வாயிலிருந்த  கைக்குட்டையை அவிழ்த்துவிட்டு, “ஓய் பாப்பா உன் கையை கட்டவே இல்ல. நீ ரொம்ப பேசுவன்னு இவன் சொன்னதால வாயை மட்டும் தான் அடைச்சோம்.” என்றான்.

 

“என்னாது கைய கட்டவே இல்லையா!” என்று நான் அதிர, அதை கேட்ட அவர்கள் சிரித்தனர். அம்மூவரும் கிளம்பிய பின்னரும் நான் அவனை முறைத்துக் கொண்டிருந்ததை பார்த்த அவன் சிரித்துக் கொண்டே என் அருகில் வந்தான்.

 

“ஓய் பப்ளி, என்ன லுக்கெல்லாம் வேற மாதிரி இருக்கு? என்னை சைட் அடிக்கிறியா?” என்று கன்சிமிட்டி அவன் வினவ, ஒரு நொடி எனக்கே சந்தேகம் வந்துவிட்டது.

 

‘இவனை முறைச்சு தான பார்த்துட்டு இருக்கோம். இவன் என்ன சைட் அடிக்கிறியான்னு கேட்குறான்!  ஒரு வேளை நம்ம லுக்கே அப்படி தான் இருக்கோ?’ என்று குழம்பியபடி அவனை பார்க்க அவனோ என்னை பார்த்து கண்ணடித்தான்.

 

‘ம்ச், அவன் நம்மள டைவர்ட் பன்றான். அவன் வேற ஏதாவது சொல்லி டைவர்ட் பண்றதுக்குள்ள உன் கொஸ்டின்ஸை ஸ்டார்ட் பண்ணு நதி.’ என்று நினைத்துக் கொண்டே அவனை பார்த்தேன்.

 

அவனோ அதற்குள் என்னை நெருங்கியிருந்தான். நான் இன்னமும் அந்த நாற்காலியில் அமர்ந்திருக்க அவன் கைகளை அந்த நாற்காலியில் ஊன்றி எனக்கு வெகு அருகில் நின்றிருந்தான்.

 

“ஹ்ம்ம், இந்த குட்டி மண்டைக்குள்ள நிறையா கேள்வி இருக்கும் போலயே. அதை இப்போ ஒவ்வொன்னா கேளு பப்ளி.” என்றான்.

 

‘இப்படி நின்னுட்டு கேளுனா என்னத்த கேட்க!’ என்று சலித்துக் கொண்டேன் மனதிற்குள். அதை அவனிடம் கேட்டும் விட்டேன்.

 

அவனோ சன்ன சிரிப்புடன் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான். “ஹ்ம்ம், இப்போ கேளுங்க மேடம்.” என்றான்.

 

எதை முதலில் கேட்க என்று நான் சிந்திக்க, “ஹலோ மேடம், யோசிச்சே டைம் ஆக்கிடுவீங்க போல. ம்ம்ம் சீக்கிரம் கேளு பப்ளி. நமக்கு அவ்ளோ டைம் இல்ல.” என்றான் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே.

 

“ப்போ எதுக்கு என்னை கடத்திட்டு வந்துருக்கீங்க?”

 

“இன்னொரு கேள்வியை தான் ஃபர்ஸ்ட் கேட்பன்னு நினைச்சேன். ஹ்ம்ம் இதுக்கு பதில் என்னவா இருக்கும்னு நீ நினைக்கிற?”

 

“ஹலோ கடத்திட்டு வந்தது நீங்க, அப்போ நீங்க தான என்ன ரீசன்னு சொல்லணும்!”

 

“ஆஹான், மேடம் ஃபியூச்சர்ல ஒரு சிபிஐ ஆபீஸரோட வைஃப்பாக போறீங்க. அதுக்கு இப்போ இருந்தே ட்ரைனாக வேண்டாமா?”

 

அதில் சட்டென்று வாய் மூடிக் கொள்ள, “ஓய் என்ன சத்தத்தையே காணோம். அவ்ளோ கஷ்டமான கொஸ்டினா கேட்டேன்?” என்றான் அவன்.

 

அவனை அருகில் வைத்துக் கொண்டு, யோசிக்க சிரமப்பட்ட மூளையை கசக்கி, “க்கும்… அது… ஹான்… என்னை அவங்ககிட்ட இருந்து காப்பாத்த கூட கடத்திருக்கலாம்.” என்று நான் கூற, “ம்ம்ம் கரெக்ட், பரவால நீயும் என்கூட சேர்ந்து அறிவாளியாகிட்ட.” என்று வஞ்சப்புகழ்ச்சியில் என்னை பாராட்டினான்.

 

“இதுக்கு தான் கடத்திருந்தீங்கனா அதை என்கிட்ட சொல்லிருக்கலாம்ல. நான் கூட நிஜமாவே கடத்திட்டாங்கன்னு நினைச்சுட்டேன்.” என்று நான் ஆதங்கமாக கூற, “முன்னாடியே தகவல் சொல்லிருக்கனும்னா மேடம் உங்க மொபைல சுவிட்ச் ஆஃப் பண்ணிருக்க கூடாது.” என்று கூறியவனின் குரல் அழுத்தமாக ஒலித்தது.

 

அவன் குரலைக் கொண்டே ஏதோ தவறு செய்து விட்டதாக மனதிற்கு பட, “அது ஒரு கோபத்துல பண்ணிட்டேன்.” என்று இறங்கிய குரலில்.

 

“பப்ளி நான் இப்போ உன்கிட்ட சொல்லப்போறது, இப்போ சொல்றது தான் கடைசியா இருக்கணும். எந்த காரணத்துக்காகவும் நீ உன் மொபைலை சுவிட்ச் ஆஃப் பண்ணவே கூடாது. இதை நான் உன் பாதுகாப்புக்கு தான் சொல்றேன். உனக்கு புரிஞ்சதா?” என்று அவன் தீவிரமாக கூற, அவன் எதற்காக சொல்கிறான் என்று புரிந்ததால், அதற்கு மறுபேச்சு பேசாமல் .

 

அதில் சிறு புன்னகையுடன், என் தலையில் அவன் தலையை லேசாக மோதியவாறு, “முன்னாடியே உன்கிட்ட சொல்லிருந்தா, அது இவ்வளவு நேச்சுரலா இருந்திருக்காது.” என்றான் சற்று இயல்பான குரலில்

 

“நான் பயந்தது உங்களுக்கு நேச்சுரலா இருந்துச்சா?” என்று ஒரு வேகத்தில் என் கைகளால் அவனை அடித்தேன்.

 

அது எல்லாம் ஒரு நொடி தான். என்னை மீறி முதல் முறையாக அவனிடம் உரிமையாக சண்டை போட்டது எனக்கே வியப்பாக தான் இருந்தது. அவனோ நான் தந்த அடிகளை ஏதோ அவார்ட் வாங்குவது போல் சிரித்து ரசித்துக்  கொண்டிருந்தான்.

 

அவன் சிரிப்பில் தெரிந்த கேலியில் என் நிலை உணர்ந்து, வெட்கத்தில் முகம் சிவக்க அவனிடமிருந்து விலகினேன்.

 

சிறிது நேரம் இருவரும் அமைதியாக இருந்தோம். பின் ஒரு நீண்ட பெருமூச்சுடன், “பப்ளி இன்னைக்கே பேச வேண்டியதெல்லாம் பேசிடலாம்.” என்றான்.

 

நானும் வெட்கத்திலிருந்து வெளிவந்து அவன் கூற வருவதை கேட்பதற்கு ஆர்வமாக காத்திருந்தேன்.

 

“நீ கெஸ் பண்ணது கரெக்ட் தான் பப்ளி. இன்னும் ரெண்டே நாள் தான் இருக்கு அந்த மினிஸ்டரோட ஃபைனல் ஹியரிங்க்கு. ஸோ இந்த ரெண்டு நாள்ல அவங்க உன்ன கடத்த நிறையா சான்ஸ் இருக்கு. உன்னை கடத்துனதுக்கு அப்பறம் அவங்களை பிடிச்சுருக்கலாம் தான். ஆனா, அப்போ அவங்க மட்டும் தான் பிடிபடுவாங்க. அவங்களுக்கு மேல இருந்து ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்தவன் மாட்ட மாட்டான். அதுக்கு தான் பிளான் பண்ணி உன்னை வேற ஒரு கடத்தல் கும்பல் கடத்துனது மாதிரி ட்ராமா போட்டோம்.” என்றான்.

 

“எனக்கு ஒரு டவுட், இப்போ இந்த ட்ராமானால நமக்கு என்ன யூஸ்?” என்று நான் குழப்பமாக வினவினேன்.

 

“ம்ம்ம், இந்த ட்ராமாவால அவங்க கன்ஃப்யூஸ் ஆகிருக்காங்க. இப்போ அவங்க யோசனையெல்லாம் அவங்களை நம்பாம வேற ஒரு குரூப்புக்கு அதே வேலையை கொடுத்துட்டாங்கன்னு நினைச்சுருப்பாங்க. சோ, இனிமே அவங்களுக்கும் அந்த மினிஸ்டர் ஆளுங்களுக்கும் சண்டை போடவே  நேரம் சரியா இருக்கும். இதுல எங்கயிருந்து உன்னை கவனிக்க நேரமிருக்கும்? இதுல இன்னொரு அட்வான்டேஜும் இருக்கு. சப்போஸ் எல்லாம் கரெக்டா நடந்தா, அவங்க பதட்டத்துல கவனக்குறைவால மாட்டிக்கிற சான்ஸும் இருக்கு. லைக் இப்போ நாம அவங்க போன் கால்ஸ ட்ராக் பண்ற மாதிரி.”

 

“ஹே சூப்பர், அப்போ அவங்கள கண்டுபிடிச்சாச்சா? சூப்பர் ஹல்க்!” என்று அவனிடம் திரும்பி ஹை-ஃபை அடிக்க செல்ல, அப்போது தான் கவனித்தேன் அவனின் பார்வையை. அதை பார்த்ததும் உணர்ந்து கொண்டேன் நான் பேசியதை!

 

‘அச்சோ ஒரு ஃப்ளோல அவனுக்கு வச்ச புது பேர உளறிட்டேனே! இப்போ எப்படி சமாளிக்க?’ என்று நான் திருதிருக்க, சில நொடிகளில் நானே, “ஒரு சின்ன கன்ஃப்யூஷன்ல உளறிட்டேன்.” என்று ஏதோ கூறி சமாளித்தேன்.

 

“ம்ம்ம் ஏதோ சொல்ற, இப்போ ஓகே. ஆனா ஃப்யூச்சர்ல எப்படி தெரிஞ்சுக்கணுமோ அப்படி தெரிஞ்சுக்குறேன்!” என்று ஒரு மாதிரியான குரலில் கூற, அதில் எனக்கு வெட்கம் வர பார்க்க, ‘ஸ்ஸ்ஸ் நோ நதி, நெக்ஸ்ட் க்ரிஷ் மேட்டரை கேளு. இப்போ விட்டா ஆளை பிடிக்கிறது கஷ்டம்.’ என்று எனக்குள்ளே கூறிக் கொண்டேன்.

 

“ம்ம்ம் ஃபர்ஸ்ட் கொஸ்டினுக்கு ஆன்ஸர் ஓகே. செகண்ட் கொஸ்டினுக்கு…” என்று நான் இழுக்க, இப்போது அவனின் புன்னகை இன்னும் விரிந்தது.

 

“ஒரு வழியா கண்டுபிடிச்சுட்ட போல?” என்று அவன் ஆர்ப்பாட்டமாக சிரிக்க, நானோ அவனை முறைத்தேன்.

 

“ஏன் நீ தான் க்ரிஷ்ன்னு என்கிட்ட சொல்லாம மறைச்ச?” – இப்போது பேசுவது க்ரிஷிடம் என்பதால் மரியாதை கொடுக்க வேண்டும் என்று தோன்றவில்லை எனக்கு!

 

“உனக்கு நான் எத்தனை ஹிண்ட் கொடுத்தேன்? கண்டுபிடிக்காதது உன் தப்பு!”

 

“ஓஹ், அப்படி என்ன பெரிய ஹிண்ட் கொடுத்துட்ட?”

 

“ஏன் என் போட்டோவையே உனக்கு அனுப்பினேன்ல. அப்போ கண்டுபிடிக்கலைனா கூட ஓகே, ஆனா ரெண்டு முறை வீட்டுக்கு வந்து அந்த போட்டோவை பார்த்ததுக்கு அப்பறமும் கூட கண்டுபிடிக்கலைனா என்ன பண்றது? மேடமுக்கு தான் போட்டோல இருக்குற பையனை கொஞ்சவே நேரம் பத்தலையே!” என்று அவன் கேலியாக கூற, “அ.. க்கும்… அது ஏதோ கேர்லெஸா இருந்துட்டேன்.” என்று சமாளிக்க முயன்றேன்.

 

“அது கூட பரவால, அன்னைக்கு நைட் நம்ம சாட் பண்ணும்போது கூட இதை ஸ்ட்ரெஸ் பண்ணி கேட்டேனே அப்போ கூடவா உனக்கு ஒன்னும் தோணல?”

 

‘அட ஆமால, அதுக்கப்பறம் அவன் ராகுலை பத்தி நிறையா கேட்டான்ல. அப்போ கூட எனக்கு ஃபிஷியா தோணல!’ என்று என்னையே நொந்து கொண்டேன்.

 

“கிடார் வாசிப்பேன்னு சொன்னதுலயிருந்து, ஆர்.கேன்னு இனிஷியல் போட்ட போட்டோஸை வீட்டுல மாட்டுனது வரைக்கும் நிறையா ஹிண்ட்ஸ் உனக்கு கொடுத்தேன்.”

 

அவன் சொல்ல சொல்ல நானோ என் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு அவனை பார்த்தேன்.

 

“இப்போ கூட அந்த ஃபைல நீ பார்க்கலைனா என்னை கண்டுபிடிச்சுருக்க மாட்டல?”

 

அவன் இப்படி கூறியதும் சட்டென்று நான் யோசித்தேன். ‘எதுக்கு ப்ரோ என்னைக்கும் இல்லாம இன்னைக்கு ஃபைலோட வரணும்? அதை அங்க மறந்து வச்சுட்டு போகணும், அதை நானே எடுத்து கொடுத்தாலும், வந்து எடுத்துக்குறேன்னு சொல்லணும்? ஒரு போலீஸ் ஃபைல் விஷயத்துல இவ்ளோ கேர்லெஸா இருப்பாங்களான்னு கொஞ்சமாச்சும் யோசிக்க வேண்டாம்!’ என்று யோசித்து, அதற்கு கிடைத்த பதிலில் என்னையே திட்டிக் கொண்டேன்.

 

“அப்போ அந்த ஃபைலையும்….” என்று நான் இழுக்க, “ஹ்ம்ம், நான் தான் அவன்கிட்ட கொடுத்து விட்டேன். நீ பார்க்கணும்ன்னு தான் அதை அங்க மறந்து வச்ச மாதிரி போனான்.” என்றான் தோளை குலுக்கியபடி.

 

நான் அவனை ஒரு மாதிரி பார்க்கவும், “என்னாச்சு பப்ளி? எதுக்கு இப்படி மூஞ்சிய வச்சுருக்க?” என்று கேட்டான்.

 

“அப்போ நான் இந்த சேலஞ்ல ஜெய்க்கலையா!” என்று நான் உதட்டை பிதுக்க, அவனோ மீண்டும் என் தலையில் முட்டி, “ஹ்ம்ம், இவ்ளோ சொன்ன பிறகும் சேலஞ்ல ஜெய்க்கலையான்னு தான் உனக்கு கவலையா? மேடம் நீங்க ஜெய்க்கணும்னு தான் இன்னைக்கே நீ அந்த ஃபைல பார்க்குற மாதிரி செஞ்சேன்.” என்றான் ஹஸ்கி வாய்ஸில்.

 

“நீங்க அப்படி செய்யலனாலும் நான் கண்டுபிடிச்சுருப்பேன்.” என்று நான் முகத்தைத் திருப்ப, என் மனசாட்சியோ, ‘எப்படி அந்த சிசிடிவில பார்த்தா?’ என்று என்னைக் கேலி செய்தது.

 

அதற்கு அவனோ சிரித்துவிட்டு, “உன்னை ஃபர்ஸ்ட் டைம் பார்க்குறப்போவும் இப்படி தான் முகத்த திருப்புன.” என்றான்.

 

“ஃபர்ஸ்ட் டைமா எப்போ?” என்று கேட்டேன் அதை தெரிந்து கொள்ளும் ஆவலில்.

 

“ஒரு நாள் மொட்டை மாடில நான் கிடார் வாசிச்சுட்டு இருந்தப்போ தான் உன்னை ஃபர்ஸ்ட் பார்த்தேன்.”

 

‘நானும் உங்களை அப்போ தான் ஃபர்ஸ்ட் டைம் பார்த்தேன்’ என்று மனதிற்குள் கூறிக் கொண்டேன்.

 

“நீ என்கிட்ட பேசலாமா வேண்டாமான்னு யோசிச்சதுலயிருந்து உன்னை தான் பார்த்துட்டு இருந்தேன்.” என்று அவன் கூற, நானோ ‘அடப்பாவி’ என்பது போல பார்த்து வைத்தேன்.

 

“ரொம்ப க்யூட்டா இருந்துச்சு உன் ரியாக்ஷன்ஸ். நீயும் வந்து எனக்கு வாழ்த்து சொன்னதும் உனக்கு தான் தேங்க்ஸ் சொன்னேன். ஆனா நீ திரும்பி நின்னதுனால கவனிக்கல. அதுக்குள்ள அந்த ஆண்ட்டி வந்து பேசுனாங்க. நீ என்னை முறைச்சுட்டே போனப்போ தான் தெரிஞ்சுது நீ அந்த தேங்க்ஸை அந்த ஆண்ட்டிக்கு சொன்னேன்னு நினைச்சுட்டன்னு.  பட் அப்போ அந்த ஃபீல் கூட நல்லா இருந்துச்சு.” என்று புன்னகைக்க, ‘அடப்பாவி’ என்ற ரியாக்ஷன் மட்டுமே என்னிடத்தில்!

 

“அதுக்கப்பறம் நிறைய முறை உன்னை பார்த்திருக்கேன். உன்னோட சேட்டை தான் இந்த தெருலயே ஃபேமஸ் ஆச்சே. இப்படி டெய்லி உன்னை பார்க்குறதை வச்சு என் பிரெண்ட்ஸ் கூட கிண்டல் பண்ண ஆரம்பிச்சாங்க. அப்போ தான் இது எந்த மாதிரி போகுதுன்னு நான் யோசிச்சேன். நீ அப்போ தான் ஸ்கூல் படிச்சுட்டு இருந்த, அந்த டைம்ல நான் ஏதாவது பேச போய், படிக்கிற உன் மனசை அலைபாயவிட்டு உன் படிப்பை கெடுக்க விரும்பல. அதான் அப்போ எதுவும் சொல்லாம ட்ரைனிங்க்கு டெல்லி போய்ட்டேன்.” என்று அவன் கூற ‘அவ்ளோ நல்லவனா நீ?’ என்ற பார்வை பார்த்தேன்.

 

“ஏதோ கொஞ்சம் நல்லவன் தான் பப்ளி. ‘பப்ளி’ங்கிற இந்த செல்லப்பேரு கூட உன்னை ஃபர்ஸ்ட் டைம் பார்த்தபோ  வச்சது தான். அதுக்கப்பறம் லைஃப் ஒரு பக்கம் கேஸ் சால்வ் பண்றதுன்னு போயிட்டு இருந்தாலும், இன்னொரு பக்கம் நீ என்ன பண்ணிட்டு இருப்பன்னும் யோசிச்சுட்டு இருப்பேன். அப்போ தான் நீ ப்ரியாவோட பிரெண்டுன்னு எனக்கு தெரிஞ்சது. அவ தான் உன் போட்டோவை அடிக்கடி காட்டுவா. நானும் அவளுக்கு தெரியாம அவ மொபைலயிருந்து என் மொபலுக்கு அந்த போட்டோவ ட்ரான்ஸ்ஃபெர் பண்ணிடுவேன்.”

 

திரும்ப ஒரு ‘அடப்பாவி மொமெண்ட்’ எனக்கு!

 

“அவ கண்டுபிடிகலையா உங்க ஃப்ராட் வேலையை?” என்று நான் வினவ, “ஒரு வாரத்துலையே ப்ரியா கண்டுபிடிச்சுட்டா. ஏன் எதுக்குன்னு ஆயிரத்தெட்டு கேள்வி கேட்டு, நான் அதுக்கு பதில் சொல்லின்னு அவளை சமாளிக்கவே எனக்கு ரெண்டு நாளாச்சு. கடைசில ஒரு டீலிங் வேற….” என்று அவன் இழுக்க, “என்ன டீலிங்?” என்றேன் ஆர்வமாக.

 

“’நதியை லவ் பண்ண வைக்க நான் ஹெல்ப் பண்றேன். அவ அண்ணனை லவ் பண்ண வைக்க நீ ஹெல்ப் பண்ணு’ன்னு சொன்னா.” என்று அவன் கூற, “அடப்பாவிங்களா! பிளான் பண்ணி லவ் பண்ணிருக்கீங்களா ரெண்டு பேரும்.” என்று நான் அவனை முறைத்தேன்.

 

“பப்ளி நோ வயலென்ஸ், இதுக்கு பிளான் போட்டு கொடுத்ததெல்லாம் உன் பிரெண்டு தான். எதுவா இருந்தாலும் அதுல அவளுக்கும் சரி பாதி பங்கு இருக்கணும்.” என்றான் சிரித்துக் கொண்டே.

 

“அவளுக்கும் இருக்கு, இப்போ நீங்க கன்டின்யு பண்ணுங்க.”

 

“அப்பறம் நேஹா விஷயம் உனக்கே தெரியும். அந்த கேஸ் பாதில இருக்குறப்போ தான் இங்க இன்னொரு கேஸ் வந்தது. அது இல்லாம என்ன தான் ஷீலாக்கு என் டீம் பாதுகாப்பு கொடுத்தாலும், நீயும் அந்த குடும்பத்துல ஒருத்திங்கிறதால உனக்கும் பாதுகாப்பு வேணும்னு எனக்கு தோணுச்சு. அதான் உடனே இங்க கிளம்பி வந்துட்டேன்.”

 

“ஹ்ம்ம் வந்து என்ன முறைச்சு பாடா படுத்த வேண்டியது!” என்று நான் முணுமுணுக்க, “ஹான் பப்ளி என்ன சொன்ன எனக்கு சரியா கேட்கல.” என்றவாறே மேலும் என் அருகில் வர, “ஹலோ எங்க வர? அங்க இருந்தே மீதிய சொல்லி முடி.” என்று கூறினேன்.

 

“பப்ளி சில நேரம் மரியாதை கொடுக்குற. சில நேரம் மரியாதைனா என்னங்கிற மாதிரி பேசுற.” என்று அவன் கூற, “அது ஒரு ஃப்ளோல வந்துடுச்சு.” அவன் அருகில் வர வர பதட்டத்தில் திக்கியது.

 

“ஆஹான் நான் சொல்லட்டா ஏன்னு?”

 

அவனை கண்டு கண்களை விரித்தவாறு இருந்தேன்.

 

அவனோ மெல்ல என்னை அணைத்தவாறு நின்று என் காதில், “நீ என்னை க்ரிஷ்ன்னு நினைச்சு பேசுனா ஒருமைல எப்பவும் சாட் பண்ற மாதிரி பேசுற. ஆனா ராகுல்னு நினைச்சு பேசுனா மரியாதை ஆட்டோமேட்டிக்கா வந்துடுது. என்ன கரெக்டா?” என்றான்.

 

அவன் கூறியதைக் கேட்டதும் எனக்கே அப்படியும் இருக்குமோ என்று தோன்ற ஆரம்பித்தது.

 

என் மனநிலையை சரியாக யூகித்த அவனை எண்ணி, அவன் என்னவன் என்று சற்று கர்வமாகவும் இருந்தது. ஆனால், தற்போது அதைக் காட்டிக்கொள்ள கூடாது என்று யோசித்து முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டேன்.

 

“க்கும்… அதான் விளக்கம் கொடுத்தாச்சுல, இப்போ பழையபடி உங்க இடத்துல இருந்து எங்க விட்டீங்களோ அங்க இருந்து கன்டின்யு பண்ணுங்க.” என்றேன்.

 

“நான் இவ்ளோ பக்கத்துல நிக்கிறது, உனக்கு பயமா இருக்கோ?” என்று அவன் நக்கலாக வினவ, “எனக்கென்ன பயம்? அதுவும் உங்களை பார்த்து எதுக்கு பயப்படணும்?” என்று திக்கியபடி கூறினேன்.

 

“அப்போ நான் இங்க இருந்தே கன்டின்யு பண்ணா உனக்கு ஒன்னும் ‘பயம்’ இல்லல!” என்று அவன் வேண்டுமென்றே என்னை சீண்ட, “அ…அத்….அது…” என்று நான் திக்கியதை பார்த்த அவன், அங்கிருந்து சிரிப்புடனே விலகி, “இன்னொரு நாள் இதுக்கான பதிலை உன்கிட்டயிருந்து தெரிஞ்சுக்குறேன். இப்போ என் லவ் ஸ்டோரியை சொல்லி முடிக்கிறேன்.” என்றான்.

 

“இங்க வந்ததுக்கு அப்பறம் உன்னை பார்த்த நான் டோடல் ஃபிளாட் தான். அப்போ உன்னோட க்யூட்நெஸ் பிடிச்சுருந்தது. ஆனா இப்போ மொத்தமா பிடிச்சுருக்கு!” என்று என்னை மேலிருந்து கீழ்வரை பார்வையாலே வருடி கூறினான்.

 

நானோ வெட்கத்தில் பேசாமடந்தையாகி போனேன்.

 

“இப்போவும் அதே க்யூட்நெஸோட மத்தவங்ககிட்ட நீ காட்டுற அன்பு, உன் பிரெண்டுக்காக எதை வேணும்னாலும் செய்யற உன் பிரெண்ட்ஷிப், தெரிஞ்ச பொண்ணு தப்பான வழில போகக் கூடாதுன்னு அவளுக்காக கேர் பண்ண விதம், அண்ணனா பிரெண்டாங்கிற சிஷுவேஷன் வந்தப்போ ரெண்டு பேரையும் விட்டுக் கொடுக்காம, அவங்க லவ்வுக்கு பண்ண ஹெல்ப், தன்னோட கஸின் எவ்வளவு தான் அவமானப்படுத்திருந்தாலும், அதை மனசுல வச்சுக்காம அவளை இப்போவரைக்கும் சப்போர்ட் பண்ற அந்த மனசு, என் பப்ளி எப்போவுமே எனக்கு ஸ்பெஷல் தான். இப்போகூட ‘என்ன ஒரு சூப்பர் கேரக்டர் டா என் பப்ளி’ன்னு வியக்க வச்சுகிட்டே தான் இருக்க.” என்று அவன் சொல்லி முடிக்க, அவனின் இந்த பாராட்டால் கூச்சத்தில் நெளிந்த நான், அவன் சொன்ன ‘ஸ்பெஷ’லில் அவனை காதலாக பார்த்துக் கொண்டிருந்தேன்.

 

அப்போது யோசித்துப் பார்த்ததில், அவனை ஈர்க்க நான் செய்த அலங்காரமும் அதற்காக அவனிடமிருந்து எந்தவொரு பெரிய வரவேற்பும் இல்லை என்று வருந்தியதும் நினைவிற்கு வந்தது.

 

ஆனால் இப்போதோ அவன் கூறியதில் இருந்து, எந்த முயற்சியும் இல்லாமல், என் இயல்பிலேயே, அவன் என்னை ஈர்க்கும் முன்பே நான் அவனை ஈர்த்தது, உள்ளுக்குள் சற்று கர்வத்தை கொடுத்தது.

 

நான் அவனை நோக்குவதும் பின் நிலத்தை நோக்குவதுமாகக் கழிந்தது அடுத்த இரண்டு நிமிடங்கள்.

 

“என்ன பப்ளி, இவ்ளோ பெருசா உன்மேல் இருக்க லவ்வை சொல்லிருக்கேன், அதுக்கான எந்த ரெஸ்பான்ஸும் இல்லாம இருக்க?”

 

“எ…என்…என்ன ரெஸ்பான்ஸ்”  – என் மனதிலோ ஏதோ வில்லங்கமாக கேட்கப் போகிறான் என்று தோன்றியது.

 

“ஹ்ம்ம் ஒரு ஹக் ஒரு கிஸ்… இப்படி எதுனாலும் எனக்கு ஓகே தான்.” என்று அவன் கண்ணடிக்க, “ஹான் இவ்ளோ லேட்டா சொன்னதுக்கு ஒரு அடி வேணா கிடைக்கலாம்.” என்று நான் அவனை பார்த்து ஒழுங்கு காட்டினேன்.

 

அவனோ முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு, “பப்ளி ஏற்கனவே நீ அடிச்சதுல உடம்பெல்லாம் ஒரே வலி. அதுக்கு மசாஜ் பண்ணாலும் எனக்கு ஓகே தான்.” என்று குறும்பாகக் கூற, அவன் குறும்பில் தொலைய துடித்த மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டு, “ப்ச் ஹல்க் சும்மா இருங்க.” என்று என்னை மறந்து இன்னொரு முறை அவனின் செல்லப்பெயரைக் கொண்டு அழைத்தேன்.

 

“ஹ்ம்ம் டூ பேட் பப்ளி, இன்னும் அந்த ‘ஹல்க்’க்கு ரீசன் என்னன்னு சொல்லல.”

 

“ஹலோ நீங்களும் தான் ‘பப்ளி’ன்னு கூப்பிடுறீங்க. நான் அதுக்கு ரீசன் கேட்டேனா?” என்று கூறி, பின் குறும்பாக, “அதுக்கான ரீசன் கண்டுபிடிச்சா நீங்க கேட்ட ஒரு ஹக் ஒரு கிஸ் கிடைச்சாலும் கிடைக்கலாம்!” என்று அவனை பார்த்து கண்ணடித்தேன்.

 

“ஒரு ஹக் ஒரு கிஸ்ஸுக்காக என்னவெல்லாம் பண்ண வேண்டியதாயிருக்கு!” என்று அவன் முணுமுணுப்பது கேட்டதும், “என்ன சிபிஐ ஆபீஸர், எந்த கஷ்டமான கேஸ்ஸையும் ஈஸியா சால்வ் பண்றீங்க, இதை கண்டுபிடிக்குறதா கஷ்டம்?” என்று வேண்டுமென்றே கூறினேன்.

 

“என்ன பப்ளி பழிக்குப் பழியா?”

 

“ம்ம்ம் அப்படியும் வச்சுக்கலாம். ஆனா டைம் ஒன் வீக் இல்ல. ஒன் டே!”

 

“அப்போ நாளைக்கு எனக்கு ஒரு ஹக் ஒரு கிஸ் உண்டு.”

 

‘என்ன இவ்ளோ கான்ஃபிடெண்டா சொல்லுறான்! ஈஸியா கண்டுபிடிச்சுருவானோ. நான் தான் தேவை இல்லாம வாயை கொடுத்து மாட்டிக்கிட்டேனோ!’ என்று நான் யோசிக்க, “ஹலோ மேடம் என்ன பதிலே காணோம்?” என்றான்.

 

“அ.. அது… நாளைக்கு பார்க்கலாம்.” என்றேன் முயன்று வரவழைத்த ‘கெத்து’ குரலில்.

 

“கெட் ரெடி ஃபார் அவர் ஃபர்ஸ்ட் ஹக் அண்ட் ஃபர்ஸ்ட் கிஸ் பப்ளி!” என்று மீண்டும் ஹஸ்கி வாய்ஸில் அவன் கூற, நானோ வெட்கத்ததை மொத்தமாக குத்தகை எடுத்தவாறு, தலை குனிந்து அமர்ந்திருந்தேன்.

 

அப்போது வெளியே கேட்ட, “டேய் எவ்ளோ நேரம் டா ரொமான்ஸ் பண்ணுவ? நானும் இப்போ முடிப்ப அப்போ முடிப்பன்னு வெயிட் பண்ணிட்டு இருந்தா, நீ முடிக்கிற மாதிரி தெரியல.” என்ற குரலில் இருவரும் அடித்துப் பிடித்து நகர்ந்து அமர்ந்தோம்.

 

“கரடி அதுக்குள்ள வந்துட்டான்!” என்று ராகுல் முணுமுணுக்க, நானோ பக்கென்று சிரித்தேன்.

 

ஈர்ப்பான்(ள்)…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
25
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்