Loading

எனதழகா – 39 ❤️

ஒரு வழியாக அனைத்து டீமிடமும் பேசி ப்ராஜெக்ட்டுகளைப் பற்றி தெரிந்துக் கொண்டனர். மேகாவிடம் கூறி ஆர். ஏ ப்ராஜெக்ட் இன்னும் இரு நாட்களுக்குள் முடித்து விடும்படி கூறி விட்டு அனைவரும் ஊட்டி செல்வதற்கு முற்பட்டனர்.

வசுதேவர் மற்றும் லஷ்மி அம்மாவிற்கு சுயநினைவு இருந்ததால் அவர்களிடம் கூறியே கூட்டிச்சென்றனர். ஆருஷி மற்றும் மீராவை ஆம்புலஸ்னில் வெங்கடேஷனுடன் அனுப்பி விட்டனர்.

வசுதேவரை கேசவர் மற்றும் ஆகாஷ் ஒரு காரில் அழைத்து சென்றனர்.லஷ்மி அம்மாவை பாமா , அர்ஜுன் மற்றும் ஆதிரா  ஒரு காரில் அழைத்து சென்றனர்.

ஊட்டியின் பயணம் அவர்களை எப்படி மாற்றப் போகிறதோ?

இங்கு அபியும், நிவானும் நேருக்கு நேர் ஒருவரின் சட்டையை இன்னொருவர் பிடித்துக் கொண்டு கோபக் கனல்களை வீசிக் கொண்டிருந்தனர்.

பரத்திற்கு ஒன்றும் கூற முடியவில்லை. தலையில் கை வைத்து ஒரு மூலையில் அமர்ந்திருந்தான்.

🏥மருத்துவமனை

மீராவை கொல்வதற்கு ஆருஷி முயல்வதற்கு முன், வெங்கடேஷனிடம் நரம்பியல் நிபுணர் சிகிச்சை தொடங்க அனுமதி கேட்டார். ஆனால், மீராவின் உடம்பில் உள்ள ரசாயனமும் அதனின் தாக்கத்தை பற்றி கேட்டதிலிருந்து  அவரால் எதுவும் இயங்க முடியவில்லை. அவரின் தலைக்குள் அதுமட்டுமே ஓடிக் கொண்டிருந்தது.

அந்நேரம் ஆருஷியின் ஆறுதலைத் தான் தேடினார். ஆனால், ஆருஷியோ அவரை ஒன்றுமே கூறாமல்  அன்னையின்  சிகிச்சைக்கு அவள் உத்தரவு கொடுத்து விட்டாள் அதுவும் அவரிடம் எதுவும் கேட்காமல். அவ்விஷயமே அவருக்கு நெருடலாக இருந்தது. இருந்தும் மனதை திடப் படுத்திக் கொண்டு ஆருஷியின் அழைப்புக்கு எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தார்.

மீராவின் சிகிச்சை தொடங்கிய பின்பும் , அவள் எதுவுமே பேசவில்லை. அதில் இவருக்கு அச்சம் ஏற்பட தொடங்கியது. அதனால், அவளை தனியாக அழைத்து பேசுவதற்கு சந்தர்ப்பத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

ஏனென்றால், ஆருஷி தன் தகப்பனின் பக்கம் தெரியாமல் கூட நிமிர்ந்து பார்க்கவில்லை. அதனால், அனைவர் முன்பு அவளை அழைத்து ,ஆருஷி வர மறுத்தால்  வெங்கடேஷன் மேல் அனைவருக்கும் சந்தேகம் வரும் என்கின்ற பயத்தில் அவளை யாரும் துணைக்கு இல்லா நேரம் பார்த்து பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.

அதே போல், பாமாவும் பணம் செலுத்த கீழ் தளத்திற்கு சென்ற பொழுது ஆருஷியின் அருகே வெங்கடேஷன் வந்தமர்ந்தார். வெங்கடேஷன் பயந்து கொண்டே “எல்லாம் இந்த அபியும், நிவானும் சேர்ந்து செஞ்சிருக்காங்க மா! நான் போய் இதெல்லாம் அதுவும் அம்மாவையே பண்ணுவேனே ? நீங்க தானடா என் உலகமே ! நீ என்கிட்ட பேசாம இருக்கிறது எனக்கு தான் என்னவோ போல இருக்கு !பேசுடா ! பேசு!”

வெங்கடேஷன் பேசிக் கொண்டே போக , ஒரு நிமிடம் திரும்பி அவரை பார்த்து விட்டு “ரொம்பலாம் பதற வேண்டாம். நீங்க செய்யலைனு எனக்கு தெரியும்” என்று கூறி விட்டு அமைதியாக எதிரில் இருக்கும் இருக்கைக்கு சென்று அமர்ந்து விட்டாள்.

ஆருஷி கூறிய பதிலில் அவருக்கு தன் மகள் தன்னை சந்தேகப்படவில்லை என்ற சந்தோஷத்திற்கு பதிலாக ஆருஷியின் செயல் மற்றும் சொல் ஒரு மாதிரியான அச்சத்தை ஏற்படுத்தியது.

இதை இப்பொழுதே தீர்க்க வேண்டும் என்கின்ற பயத்தில் ஆருஷியின் அருகில் அமர்ந்து சுற்றும் முற்றும் பார்த்து விட்டு “அப்போ  உனக்கு தெரியுமா பண்ணது அந்த அபியும் நிவானும் தான்னு? ” என்று மெதுவாக கேட்டார்.

அதுவரை தனது மொபைலில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தவள் “என்ன ஃபிரேம் செய்யுறீங்களா? ” என்று நிதானமாக கேட்டாள்.

“நான் ஏன் மா பொய் சொல்லனும்? அவன் தான்……” என்று பதறிக் கொண்டு வார்த்தைகள் தந்தியடித்து கொண்டு கூற, ஆருஷி கையை உயர்த்தி நிறுத்த கூறி, “நீங்களும் செய்யல, அவங்களும் செய்யல ” என்று கூறி மறுபடியும் மொபைலை பார்க்க ஆரம்பித்தாள்.

“நீ கண்மூடித்தனமா அவனுங்களை நம்புற. அதான் உனக்கு சந்தேகப்படத் தோணல. ஆனால், உள்ள படுத்திருக்கிறது நம்ம அம்மாடா ! அவனுங்க சொல்லுறதை நம்புற ? ” என்று ஆதங்கமாக கேட்டார்.

ஆருஷி”நான் யார் சொல்லியும் நம்புறதுக்கு நான் ஒன்னும் சின்ன குழந்தை இல்லை”

பொறுமையிழந்த வெங்கடேஷன் “சரி இவ்ளோ கான்ஃபிடன்டா சொல்லுற அவனுங்க இல்லைனு. அப்போ யாரு பண்ணது ? ஏன்னா, நான் அங்க வராண்டாவில் தான் இருந்தேன். உள்ள லாக் போட்டு இருந்துச்சு. இவனுங்க தவிர வேற யாருக்கும் அந்த லாக் பத்தி தெரியாது . அப்புறம் எப்படி ? “

ஆருஷி “அதான் நீங்களே சொல்லிட்டீங்களே! நம்மளைத் தவிர யாரும் லாக் போட முடியாதுனு…… நான் தான் பண்ணேன்”என்று கூறி வாயில் சாக்லெட்டை மென்று கொண்டே எழுந்து ஏற்கனவே அமர்ந்த இடத்திற்கு சென்றாள்.பின்பு, பாமா வரவும் தேம்பி தேம்பி அழுவது போல் செய்தாள்.

இவளின் பேச்சும் செயலும் கண்டு அதிர்ச்சியாகி அமர்ந்திருந்தார் வெங்கடேஷன்.

🌨️ஊட்டி

ஊட்டியில் அனு , இந்தர் மட்டும் காவ்யா ஒரு அறையில் அவர்கள் வந்தவுடன் கொல்வதற்கான திட்டங்களை வகுத்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது எதார்த்தமாக அனுவின் வாலட் கீழே விழுந்து சிதறியது.

விழுந்த அனைத்தும் எடுத்து வைக்கும் நேரம் பின்பக்கமாக இருந்த போட்டோவை எடுத்துப் பார்க்கும் பொழுது அதில் அர்ஜுனும் அனுவும் தம்பதியர்களாக கழுத்தில் தாலியும் , நெற்றியில் குங்குமமத்துடன் .கல்யாணம் செய்துக் கொண்ட நாளில் இருவர் கண்களிலும் நிறைவு மற்றும் சந்தோஷம் நிரம்பி வழிந்தது. அதைக் காண திகட்டும் இனிப்பாக  தித்தித்தது மனதிற்கு .

அதை  நெஞ்சில் கை வைத்து அழுத்தி கண்கள் மூடிய பொழுது அனுவின் கண்களுக்குள் மதுரா கலைக் கல்லூரி என்று இருந்த பலகை வந்தது.

📚மதுரா கலைக்கல்லூரி

மை ஊதாவில் பாவடையும், கத்தரிப்பூ நிறத்தில் தாவணியும் உடுத்தி, இடுப்பிற்கு கீழ் உள்ள முடியை தளர தளர பின்னிக் கொண்டு, ஒரு ஒப்பனையும் அல்லாமல் நெற்றியில் சின்ன மெருன் நிறப் பொட்டும், அதன் மேல் சின்ன கீற்றான சந்தனமும், காதில் சின்னஜிமிக்கியும், கழுத்தில் மெல்லிசான சங்கலியும், இரு கைகளிலும் மெல்லிசான வளையல்களும்
அன்ன நடையில் வந்தாள் அனு என்னும் அனுநிதா அவளின் தோழியுடன்.

எனதழகா – 40❤️

அனுவும் அவளின் உயிர் தோழியான காவ்யாவும் கல்லூரியின்  பிரதான அலுவலகம் (main office) நடந்து வந்து கொண்டிருந்தனர் .

“ஏண்டி, இந்த பொண்ணுங்களுக்கு மட்டும் எத்தனை ஐட்டம் பூவு, பொட்டு, மூக்குத்தி, தோடு, வளையல், கொலுசு…. அப்பப்பா……..இதுல ஒரு நாள் தாவணி வேற. இந்த காலத்துல யாராச்சும் தினமும் தாவணி போடுவாங்களா . அதுவும் காலேஜ்க்கு . இந்த அப்பாக்கு வேற காலேஜ் இல்லைனு இங்க சேத்திருக்காரு .ச்சை  “என்று காவ்யா  முகத்தை சுருக்கி குனிந்து கொண்டே பேசிக் கொண்டிருந்தார்.

“போதும்டி, ஊர்ல இருந்து கிளம்புனதுல இருந்து இப்போ வரைக்கும் புலம்புற. என்னால காது கொடுத்து கேட்க முடியல. வலிக்குது.”என்று காதை குடைந்து விட்டு, அருகிலிருப்பவரிடம் மெயின் ஆபிஸ் வழி கேட்டு சென்றனர்.

அங்கு சென்று இதர வேலைகளை முடித்து கையில்  கல்லூரி கட்டணத்திற்கான அட்டவணையை ஆராய்ந்தப்படி நடந்து வந்துக் கொண்டிருந்தாள் அனு. அப்பொழுது ஒருவனை இடித்து விட்டாள்.

“பார்த்து வர மாட்ட,ச்சை நமக்குனே வராங்க” என்று முணங்கி கொண்டே சென்றால்

அதில் இடித்தவன் “யாரை மரியாதை இல்லாம கூப்பிடுற ? ஆளு வளந்த அளவுக்கு மூளை இருக்கா? போமா? ஒழுங்கா பேசு?என்றான் ஆகாஷ்.

“ஆமாம், உனக்கு மூளை கடவுள் நிறைய கொடுத்துருக்காரு பாரு? போவியா ?” என்று காவ்யா பாய்ந்தாள்.

ஆகாஷ்”ஏய், என்ன ? “

காவ்யா அவனை ஏற இறங்க பார்த்து விட்டு ” இடிச்சது அவனை. அவனே சும்மா இருக்கான். உனக்கென்னா? இடத்தைக் காலி பண்ணு “என்று கூறிவிட்டு தனது தோழியை இழுத்துக் கொண்டு சென்று விட்டாள்.

சென்றவள் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே சென்றாள் கையில் கட்டண அட்டவணையை  பார்த்துக் கொண்டிருக்கும் அர்ஜுனன நம் கதாநாயகி அனு நிதா.

விழுந்தது அர்ஜுன் அல்ல அனுவே. ஆனால், அவள் பார்ப்பதை கவனித்தாலும் கண்டுகொள்ளாதவாறு இருந்துக் கொண்டான்.

அதனாலேயே அவனுக்கு இவ்விடம் மிகவும் பிடித்தமான இடம். அர்ஜுனின் மெருக்கேறிய உடம்பும், அவனது அந்தஸ்தைக் கண்டும் பல பெண்கள் அவனிடம் நட்பு பாராட்டினார். அவர்களின் நோக்கம் புரிந்ததோடு, ஆதிரா இவர்கள் ஐவருக்குள் யார் நுழைவதும் பிடிக்காத காரணத்தில் ஒரு அடி தள்ளியே வைத்திருந்தான்.

ஆனால், இவளின் பார்வை கண்னை விட்டு நீங்கவில்லை. அவளின் கண்கள் ஏதோ கூறுகிறது. ஆனால், அதை அறிய முடியவில்லை அவனால்.

இவ்வாறு இவர்கள் இருவரும் தங்களுக்குள்ளேயே நினைத்து கொண்டன அவரவர் மனநிலைக்கு ஏற்ப. நாட்கள், மாதங்களாகி, வருடமும் ஓடியது.
அனுவும், காவ்யாவும் இரண்டாம் வருடம் காலடி எடுத்து வைத்தனர்.

அப்பொழுது , மதுரா கலைக்கல்லூரிக்கும் பொறியியல் கல்லூரிக்கும் சின்ன சலசலப்பு ஏற்பட்டது. அனைத்து வருடமும் இரு கல்லூரியையும் சேர்த்தே வருட இறுதியில் கல்சுரல்ஸ் டே நடக்கும். இச் சலசலப்பிற்கு பின் இரு கல்லூரியும் தனித்தனியாக வைக்க கோரிக்கை விடுத்தனர். அதை நிர்வாகம் புறக்கணித்து விட்டு எப்பொழுதும் போல் பொதுவாக அந்நாளுக்கு ஏற்பாடு செய்தது. அதில் அர்ஜுன் தான் ஈவண்ட் மேனேஜர்.

பாண்டவர் குழு முதுநிலை பட்டதாரிக்கு படித்துக் கொண்டிருப்பதால் பெரிதாக இச்சம்பவத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. நேரமும் இல்லை, கேசவரும் விடவில்லை. இதில் பெரிதும் வருத்தப்பட்டது ஆகாஷ் மற்றும் ஆதிராவே .

ஆதிரா பொங்கி கொண்டு “ஏண்டா அஜ்ஜீ, உங்கப்பா காலேஜ் நடத்துறதே தப்பு, அதோட எங்கப்பா உன் அப்பாவோட ஃபிரண்டா இருக்கிறது இரண்டாவது தப்பு, அதனால், நான் இந்த காலேஜில் சேர்ந்தது மூணாவது தப்பு. இப்படி தப்பு தப்பா பண்ணிட்டு நான் ஒரு தப்பும் பண்ணக்கூடாதாம் . இது என்ன நியாயம். டேய் பாண்டா, நீயும் ஃபீல் பண்ணி சொல்லிக்கிட்டு இருந்த .சொல்லுடா ” என்று படபடவென பட்டாசாக வெடித்து கொண்டிருந்தாள்.

அர்ஜுன் ஆதிரா பேசியதற்கும் சேர்த்து இறுதியில் ஆகாஷின் பிடரியில் அடித்து விட்டு சென்று விட்டான் .

“என்ன தான்டா ஈஸியா அடிக்கிறீங்க” ஆகாஷ் வழக்கம் போல் பொலம்பி விட்டு சென்று விட்டான்.

அதே கடுப்பில் மேடையின் பின்னால் சென்றவனை இன்னும் சூடேற்றுவது போல், ஒருவன் வீராப்பாக அமர்ந்திருக்க, அனு மற்றும் காவ்யா கையை பிசைந்து கொண்டு நின்றிருந்தனர். 

கூடவே இருந்த அசோக் தான் அர்ஜுனின் கோபத்தை உணர்ந்து அவர்களிடம் சென்றான்.

அசோக்”என்னப்பா என்னாச்சு ?”

“சார், நாங்க இன்ஜினியரிங் ஸ்டுண்ட். நாங்க சிங்கிங் காம்படிஷனில் ஜாய்ன் பண்ணியிருக்கோம். இப்போ, ஆர்ட்ஸில் மேல் சிங்கர் இல்லையாம். நான் சோலோ. அதனால், ஜாய்ன் பண்ணி பாடவாம். எனக்கு  இஷ்டம் இல்லை சார் “

அசோக் அனுவை பார்க்க, அவள் பாவமாக பார்த்து கண்களால் இறைஞ்சினாள். இருவரின் நிலைமையையும் புரிந்து கொண்டு பொறியியல் கல்லூரி மாணவனைத் தனியாக பாடக் கூறிவிட்டு , அனுவோடு அசோக் பாடுவதாக மாறி விட்டது. அசோக்கிற்கு பாட்டில் விருப்பம் இருப்பதால் அதிகளவு பாடல் வரிகளை மனதில் பதித்து வைத்திருப்பான். அதனால், அசோக் மற்றும் அனு மேடையில் நின்று கொண்டிருந்தனர்.

அசோக் கீழே உள்ள வரவேற்பாளர்களை கண்டு, எங்கு அனு சொதப்பி விடுவாலோ என்கின்ற பயம் இருந்தது. ஏனென்றால், இதுவே அவளின் முதல் மேடை என்று கூறியிருந்தாள்.

இசை ஆரம்பாகியது. அசோக் அதில் லயித்து பாட ஆரம்பித்தான்.

என்தாரா என்தாரா…
நீயே என் தாரா…
என் மனம் பூத்ததே தாரா…
கண்பூரா கண்பூரா…
நீயே தான் தாரா…
கண்ணாளே காண்கிறேன் பூரா…

தண்ணீரை கூசிக்கொண்டு…
மெல்ல செல்லும் பிம்பங்கள் நீயாகிறாய்…
எதிரே என்னோடு காதல் வந்து…
என்ன சொல்ல வெட்கங்கள் பேசுதே…

பின்ணணி இசை தொடங்கியவுடன் அசோக் அனுவை கண்டான். எந்தவொரு பயமும் இல்லாமல் நின்றுக் கொண்டிருப்பவளைக் கண்டு வயிற்றில் பய பந்து உருண்டு கொண்டிருந்தது. ஆனால்,

உன்தாரா உன்தாரா…
நானே உன்தாரா…
என் வானம் பூத்ததே சீரா…

கண்பூரா கண்பூரா…
நீயே தான் வீரா…
என் பாா்வை ஆனதே கூரா…

தண்ணீரை கூசிக்கொண்டு…
மெல்ல செல்லும் பிம்பங்கள் நீயாகிறாய்…
எதிரே என்னோடு காதல் வந்து…
என்ன சொல்ல வெட்கங்கள் பேசுதே…

என்று பாடி அனைவரின் பார்வையையும் தன் பக்கம் திருப்பினான் தனது குரலின் வளத்தைக் கொண்டு. பின்பு அதிர்ந்த அசோக்கை கண்களால் சைகை செய்து சுய நினைவிற்கு  கொண்டு வர , இருவரும் சேர்ந்து பாடினர்.

 ஏனோ இன்று ஏனோ…நான் உந்தன் நானோ…நீயோ இல்லை நானோ…நாம் என்னும் நாமோ…

தூண்டிலா… நீ ஊஞ்சலா…
தூரலா… நீ காணலா…

ப்ரத்யோக மௌனம்…நீ கொண்டு வந்தாய்…என் வாா்த்தை ஆனதே…

இல்லாத ஊாில் இல்லாத போில்…
நம் காதல் வாழுமே…ஹோய்… நம் காதல் வாழுமே…

உன் அசைவினில் என் திசைகளை…பட படவென தந்தாய்…மின்மினிகளை உன் விழிகளில் கொண்டாய்…

கண் இமைகளில் என் இரவினை…கத கதப்புடன் தந்தாய்…கண் அவிழ்கையில்…வீண் நிலவொளி தந்தாய்…

பிரம்மாண்ட காலம்…நீ தந்து சென்றாய்…என் நாட்கள் தீா்ந்ததே…
உன் காதல் சூட்டில்…என் காதல் பூக்கும்…நம் தேடல் தீருமே…

என்தாரா என்தாரா…நீயே என் தாரா…என் மனம் பூத்ததே தாரா…கண்பூரா கண்பூரா…நீயே தான் தாரா…கண்ணாளே காண்கிறேன் பூரா…

தண்ணீரை கூசிக்கொண்டு…மெல்ல செல்லும் பிம்பங்கள் நீயாகிறாய்…எதிரே என்னோடு காதல் வந்து…என்ன சொல்ல…

வெட்கங்கள் பேசுதே…

கீர்த்தி☘️

 

 
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்