Loading

எனதழகா – 6❤️

ஆகாஷ், அர்ஜூன், ரியா மூவரும் வந்த பின் பாண்டவர்கள் குழு களைக் கட்டியது.

வந்தவுடன் ஆதிரா ஆரியனை சந்தித்த நிகழ்வுகளைக் கூறினாள்.

ஆகாஷிடம் ஆர்வத்துடன் கூறியவள் அர்ஜுன் கோபத்துடன் அவளை முறைத்துக் கொண்டிருப்பதை கவனிக்க தவறிவிட்டாள்.

தான் வந்து கால் மணி நேரம் ஆகியும் தன்னை  கவனிக்கவில்லை என்ற ஆத்திரத்தில் அர்ஜுன் வகுப்பை விட்டு வெளியில் வந்தான்.

திரும்பி பார்த்து கொண்டே வந்தவன், வந்த வேகத்தில் ஒருவனை இடித்து விட்டான்.

ஆதிராவின் மேல் உள்ள கோபத்தில் “பார்த்து வர மாட்டா,ச்சை நமக்குனே வராங்க. போடா முதல?” என்று கத்தி விட்டான்.

அதில் இடித்தவன் “யாரை டா போட்டு கூப்பிடுற ? ஆளு வளந்த அளவுக்கு மூளை இருக்கா? போடா தம்பி? ஒழுங்கா பேசு?என்றான்.

“ஆமாம், உனக்கு மூளை கடவுள் நிறைய கொடுத்துருக்காரு பாரு? போவியா ?” என்று அர்ஜுன் மறுபடியும் எதிர்த்து பேசினான்.

கோபம் வந்து அர்ஜூனின் கன்னத்தில் அறைந்து விட்டான் அவன். “யாரு மேல டா கை வைக்கிற போஸ்ட் மரம் ?” என்று  அவனை அடிக்க முயற்சி செய்தாள் ஆதிரா.

ஒரு நிமிடம் அப்புதியவன் திடுக்கிட்டு விட்டான்.அவள் கத்திக் கொண்டே இருக்க, வகுப்பாசிரியர்கள் வந்தால் சிரமம் என்று  நன்றாக தலையில் ஒரு கொட்டு வைத்து விட்டு அப்புதியவன் அவனுடைய வகுப்பறைக்கு ஓடி விட்டான்.

அதில் ஆதிரா அழுது விட்டாள். ஆகாஷ் சிறிது நேரம் அமைதியாக பார்த்து கொண்டிருந்தவன் சிரித்து விட்டான்.

ரியா தலையை தேய்த்து விட்டுக் கொண்டே “வாயை குறைனு எத்தனை தடவை தான் சொல்லுறது? ” என்று கூறிக் கொண்டிருந்தாள்.அசோக்கும் அதையே ஆமோதித்தான்.

அர்ஜூனுக்கு தன்னையும் திட்டி தன் தோழியையும் அழ வைத்து விட்டான் என்று அவன் மேல் கோபம் கூடியது.

தன்  அருகில் இருந்த  ஆகாஷ் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்க, அவன் மேல் உள்ள கோபத்தில் இவன் பிடரியில் அடித்து விட்டு சென்று விட்டான்.

“அய்யோ அம்மே” அலறினான் ஆகாஷ். திரும்பி அர்ஜுனைப் பார்த்தவன் “என்னைத் தான் டா ஈஸியா அடிச்சுறீங்க” புலம்பினான்.

இது உனக்கு தேவை தான் என்பது போல் ரியாவும், அசோக்கும் பார்த்துக் கொண்டே வகுப்பறைக்குள் சென்று விட்டனர்.

வேகமாக வகுப்பறைக்குள் நுழைந்தவள் “டேய் அஜ்ஜூ, என்னை அடிச்சவனை போய் அடிப்பனு பார்த்தா, இந்த பாண்டாவ போய் அடிக்கிற?” என்று  எழுதும் நாற்காலியின் மேல் உட்கார்ந்தாள்.

ஆகாஷ் ஆதிராவின் தலையில் கை வைத்து  “உன் ஆன்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன்” என்றான்.”

ஏன் என்று ஒரு நொடி புரியாமல் இருந்தவள், பின்பு தான் புரிந்து அர்ஜுனைத் திரும்பி பார்த்தாள்.

அர்ஜுனுக்கு  அனைத்தும் சரியாக இருக்க வேண்டும். எழுதும் மேஜை எழுதவதற்கு மட்டும் தான். அம்மாதிரி நினைப்பவன்.

அர்ஜுன் அடித்து விடுவானோ என்னு வேகமாக ஆதிராவை  ரியா இழுத்துக் கொண்டு சென்று விட்டாள்.

அசோக்கும் ஆகாஷின்  வாயை  மூடி அமைதியாக இருக்கையில் அமர சொன்னான். வகுப்பாசிரியரும் வந்து விட்டார்.

அந்நாள் நன்றாக இவர்களுக்கு கழிந்தது.
மாலை நேரத்தில் அனைவரும் கிளம்பும் நேரம் அர்ஜுனை தனியாக அழைத்து வந்து “விடு அஜ்ஜீ, அந்த போஸ்ட் மரத்தை நாம் அடிச்சிடுவோம்? நீ ஃபீல் பண்ணாதா ?” என்று கூறிக் கொண்டிருந்தால்.

அசோக்கிற்கோ, ரியாவிற்கோ தெரிந்தால் காரியம் நடக்காது என்று தனியாக  விளையாட்டு மைதானத்திற்கு அழைத்து வந்து விட்டாள்.

அவள் கூறிக் கொண்டிருக்கும் போதே பாப்பா இங்கு என்ன செய்கிறாய் என்று கேட்டான் ஆரியன்.

“ஹே அமுல் பேபி, இங்கு என்ன பண்ணுற?”

அந்த அமுல் பேபி இவன் தானா  என்று முறைத்து பார்த்தான்  அர்ஜுன்.

இருவருக்கும்  அறிமுகப் படித்தியவள் , ஆரியனிடம் அடி வாங்கியதையும் கூறினாள்.

இத்தனை வருடத்தில் அனைவரிடமும் நன்றாக பழகுபவள், தங்கள் ஐவர்க்குள் உள்ள விஷயங்களை  யாரிடமும் பகிர மாட்டாள்.

ஆச்சிரியமாகியவன், சிறிது நேரத்தில் ஆரியன் அர்ஜுனிடம் யாருடா அடிச்சது? என்று எதார்த்தமாக கேட்டான்.

“டேய் எங்கெல்லாம் தேடிக்கிட்டு இருக்கேன்?  வாடா போவோம்.” என்று கூறிய ரோஹித்தை பார்த்த அர்ஜுன் முறைத்துக் கொண்டே ஆதிராவை இழுத்தான்.

“ரோஹித், இவள் தான் ஆதிரா. நம்ம பாப்பா மாறி இருக்கிறாள் இல்லையா?” என்று ஆரியன் தன் ஆருயிர் நண்பனுக்கு அறிமுகப்படுத்தினான்.

“ஹே , போஸ்ட் மரம் நீ தான் ரோஹித்தா? நீ தான் நல்ல பாடுவியா?” என்று குழந்தை தனத்தோடு கேட்டாள்.

“ஆமாம் பாப்பா, இவன் தான் அந்த பையன்.இவன்  என் ஒரே நண்பன் பேரு ரோஹித். இரண்டு பேரும் இராசிபுரத்தில் இருந்து இங்க ஹாஸ்டல்லில் தங்கி படிக்கிறோம்” என்று பெருமையாக கூறினான் ஆரியன்.

பேருந்து ஒலி எழுப்பியதால் அனைவரும் கிளம்பி விட்டனர்.

🌥️🕓🏫

தங்களது  வகுப்பில் பாடத்தை கவனிக்க கொண்டிருந்த போது ஆகாஷை தலைமையாசிரியர் அழைத்ததாக  பியூன் கூறினார்.

ஆகாஷ் ஆபீஸ் அறையில் நுழைந்த பொழுது ரோஹித்தையும், ஆரியனையும் திட்டிக் கொண்டிருந்தார் வகுப்பாசிரியர்.

அதிர்ச்சியோடு உள்ளே நுழைந்தவனை “இவர்கள் தான் அர்ஜுன் மற்றும் ஆதிராவை அடித்ததா?” என்று தலைமையாசிரியர் கேட்க பயத்தில் ஆமாம் என்று கூறி விட்டான்.

அவர்களை இடைநீக்கம் செய்து விட்டார்.
அந்த விஷயம் ஸ்கூல் முழுக்க பரவியது. அதன் பிறகு தான் தெரிந்தது அர்ஜுன் தான் புகார் செய்தது என்று.

அனைவரும் அவனைத் திட்ட ஆதிரா மட்டும் “அஜ்ஜீ, எல்லாம் கரெக்ட். புகார் கொடுத்தது, ஆகாஷை சாட்சிக்கு இழுத்தது எல்லாம். ஆனால் ஏன் அமுல் பேபியையும் சேர்த்து சொன்னாய்?”

ஆகாஷ் ,”எதே! கரெக்ட்டா? நான் என்ன செய்தேன்? என்னை ஏன் இழுத்தாய்?”

“ஆமாம், ரொம்ப முக்கியம். அர்ஜுன் தப்பு செய்யாதே. தாத்தாவிடம் கூறி விடுவேன். நீ தான் மரியாதை இல்லாமல் பேசினாய்? இது சீனியருக்கு தெரிந்தால் இன்னும் பிரச்சனையே?” என்று அதட்டினான் அசோக்.

அதே போல் ஸ்கூலில் தெரிந்த விட்டது. இருந்தும் ரோஹித் ஒன்னும் செய்யாயதே ஆச்சரியம் தான்.

தான் உண்டு தன் வேலை உண்டு என்று மூன்று வருடங்கள் கடந்து விட்டது. இந்த மூன்று வருடங்களில் ஆதிரா ஆரியனிடம் பேசினாலோ, ஆரியன் ஆதிராவிடம் பேசினாலோ ரோஹித்துக்கும் அர்ஜுனுக்கும் கோபம் வரும்.

ஆரியனை அர்ஜுன் ஏதாவது சொல்வதும், ஆதிராவை ரோஹித் ஏதாவது சொல்வதுமாக இருந்தனர்.

ரோஹித்துக்கு ஆரியனிடமும் அர்ஜுனுக்கு ஆதிராவிடம் பொஸிஸ்வன்ஸ் அதிகம். அதனாலேயே இருவருக்கும் சண்டை வரும்.

12ம் பொதுக் தேர்வு முடிந்து ஒரு நாள் பள்ளிக்கு வந்த பொழுது ஆரியன் அர்ஜுனை அழைத்து “ஆதிராவை நான் தோழியாக பார்க்கவில்லை தங்கையாகவே பார்த்தேன். அதனால் நீ என்னிடம் கோபம் கொள்ளாதே” என்று கூறி விட்டு சென்று விட்டான்.

” அஜ்ஜு, டேய் அஜ்ஜு , அட எருமை அர்ஜுனா ” என்று கத்தினாள் ஆதிரா.

நிகழ்காலத்திற்கு வந்தவனை பார்த்த ஆதிராவும், அசோக்கும் கண்களில் தண்ணீர் வரும் அளவு சிரித்தனர்.

“போதும் சிரித்தது”.

அசோக், “நினைக்கும் போதே காமெடியா இருக்குது . எப்படி எல்லாம் அர்ஜுன் இருந்தான் அப்போ “.

அர்ஜுன் ” இப்பவும் அவனை எனக்கு பிடிக்காது. கடைசியாக ஆரியன் பேசியதால் ஏதோ சரி. பிடிக்கும் என்று சொல்ல மாட்டேன். அதே போல் பிடிக்காது என்றும் சொல்லமாட்டேன்”.

அசோக் “அர்ஜுன், ஆரியனை விடு. ரோஹித் ஏன்  வந்தானு கேள்? ” என்று ஆதிராவை காட்டிக் கொடுத்தான்.

ஆதிரா,”துரோகி”. அர்ஜூன், “அதான் மேடம் அவர் பாட்டில் மெய் மறந்து நிற்பாங்களே? அப்புறம் என்ன?”.

அசோக், “அர்ஜூன், கரெக்ட் இவளுக்கு  தான் ரோஹித் பிடிக்கும். அவன் ஏன் வந்தேனு சொன்னான்?”

அர்ஜுன் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து விட்டு ஆதிராவை முறைத்தான். ஆதிரா தலை குனிந்து விட்டு அழுதாள்.

அவள் அழுவதை பார்த்து அர்ஜுன் இரக்கமற்று “ச்சீ, நடிக்காத பாக்க சகிக்கல”.

“அய்யோ, கண்டுபிடிச்சுட்டானே” என்ன செய்வது?” என்று மனதிற்குள் புலம்பியவளை “இதுக்கு மேல் பொய் சொன்னால்?” என்று கூறி ஆழ் காட்டி விரலை நீட்டி எச்சரித்தான்.

இதற்கு மேல் முடியாது என்று நினைத்தவள், ஆரியன் அர்ஜுனிடம் தனியாக பேசும் நேரம் ரோஹித்திடம் தன் காதலை பகிர்ந்ததை கூறினாள் ஆதிரா.

“ஆனால், ரோஹித் திட்டி அனுப்பி விட்டான்” என்றாள் ஆதிரா.

“அப்புறம் ஏன் வந்தான்?” என்று சிறு குழந்தையாக மாறிய அர்ஜுன் கேட்டான்.

“அவனும் என்னை விரும்பியிருக்கிறான். பக்கி, படம் பார்த்து ஹீரோ போல் முன்னேறி விட்டு சொல்ல வேண்டும் என்று வைராக்கியம் வைத்திருந்தானாம்.”

அசோக், “அதுக்கு மேடம் என்ன சொன்னீங்க?”

ஆதிரா, “நான் என்ன செய்வேன்? கலாய்த்து விட்டேன்.”

அசோக்கும் அர்ஜுனும் அதிர்ச்சியாகி விட்டனர். “அதற்கு அவன் என்ன கூறினான்?” அசோக்

ஆதிரா , “அவனுக்கு தான் என்னைப் பற்றி தெரியுமல்லவா . அதனால் , நீ மாறவே இல்லை என்று கூறினான்.”

அதே நேரம்,

தேவன் கன்ஸ்ட்ரக்ஷன்🏢

” நான் கூப்பிட்டும் அவன் வரவில்லை என்றால், எனக்கு என்ன மரியாதை? அவர்களையும் வரவிடாமல் தடுக்கிறானா? “என்று வசுதேவர் தன் மகன் கேசவரிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.

அங்கு அர்ஜுன், அசோக், அதிராவைக் தவிர வசுதேவர், கேசவர், வெங்கடேசன், ஆருஷி ,ரியா, ஆகாஷ் அனைவரும் குழுமியிருந்தனர்.

கீர்த்தி☘️

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்