Loading

எனதழகா- 14❤️

இளஞ்சிவப்பு நிறத்தில் சூரியன் மறையும் பொழுது, பூக்கள் ஏக்கமாக மறையும் சூரியனை  பார்த்து வாடுகின்றன. தான் மறைந்தாலும் உங்களுக்கு  சாந்தமான சந்திரன்  இதமான காற்றும், ஒளியும் தரும் என்று சொல்லி மறைந்தது சூரியன்  அந்த இதமான மாலைப் பொழுதில்.

காலையிலிருந்து  எரிக்கும் ஆதவனின் வெயிலினால் அலைந்து களைப்பு ஏற்பட்ட ஆதிராவுக்கு அம்மாலை பொழுதில் தனது அப்பார்ட்மெண்டின் பால்கனியை திறந்த பொழுது கொடுத்த அந்த சில்லென்ற காற்று சிலிர்ப்பை ஏற்படுத்தியது.

அதை ரசித்துக் கொண்டே தன் காதலன் ரோஹித்திடம் கதையளந்து கொண்டிருந்தாள்.

அழகான பொழுதினில்  தனது காதலனிடம் பேசியதால் வந்த புத்துணர்ச்சியுடன் திரும்பிய ஆதிரா “ஆஆஆஆ ” என்று கத்தினாள்.

பாதி உறக்கத்தில் ஆதிராவின் இரவு உடையை அணிந்து ,உறங்கியதால் கலைந்த முடியை சீர் செய்யாமல் தலையைச் சொறிந்து கொட்டாவி விட்டுக் கொண்டிருந்தவள்  ஆதிராவின் கத்தலில் தனது முழு தூக்கத்தையும் துறந்தாள்.

ரியாவும் அதிர்ந்து திரும்பி பார்த்து அலறினாள். “ஹேய் , என்னாச்சுடி எதுக்கு கத்துற? பல்லி, எலி எதுவும் பார்த்தியா?ஆர் யூ ஓகே? “

” மண்ணாங்கட்டி ” என்று கூறிய ஆதிரா ரியாவை அழைத்து  தனது படுக்கையறையில்  இருக்கும் ஆளுயரக் கண்ணாடி முன் நிறுத்தினாள்.

அரை நொடி ஆழ்ந்து பார்த்தவள் அலறி விட்டாள். ஆதிரா அவளைப் பிடித்து நிறுத்தி தலையில் நங்கென்று நான்கு கொட்டு வைத்து தான் ரியாவை விடுவித்தாள்.

“நம்ம மூஞ்சியா இப்படி இருக்கு? ” என்று மனதிற்குள் சொல்வதாக நினைத்து வெளியில் கூறி விட்டாள் ரியா.

“ஆமா, இந்த குரங்கு பொம்மையை பார்க்க முடியல. போய் ஃபரஷ் ஆகி விட்டு வா” என்று கூறி ஆதிரா அவளை பாத்ரூமிற்குள் தள்ள ,ரியா  திரும்பி பாவமாக அவளைப் பார்க்க “இன்னும் என்னடி வேணும்  உனக்கு? பொறுமை இழந்து கத்தினாள்.

“ஒன்னுமில்லை போறேன் ” என்று கூறிவிட்டு ஃப்ரஷ் ஆகி விட்டு வந்தாள்.

தலை சீவிக் கொண்டே “எங்கடி போறோம்” என்றாள்.

ஆதிரா”ஷாப்பிங் “. “அய்யய்😁 சூப்பர் என் மனசுக்கு பிடிச்ச மாறியே எல்லாம் பண்ற ” என்று கூறி ஆதிராவின் கன்னத்தில் முத்தமிட்டாள்.

“கடுப்பேத்தாதடி ! செலவழிக்க வச்சுட்டு பேச்சு !” என்று கூறி ஆதிரா முறைத்தாள்.

“அப்போ நமக்கு  சோறு வாங்கலையா” என்று முணுமுணுத்து விட்டு ஆதிராவின் கன்னத்தை பிடித்து

என் நண்பன் போட்ட சோறு
நிதமும் தின்னேன் பாரு
நட்பைக் கூடக் கற்பைப் போல எண்ணுவேன்

என்று பாட, ஆதிரா துப்புவது போல் செய்கை செய்து விலகினாள்.எதுவும் நடக்காதது போல்  சுற்றி முற்றி  பார்த்து விட்டு விசிலடித்துக் கொண்டே  கிளம்பினாள்.

அந்நேரம் ரியாவிற்கு  அர்ஜுன் கால் செய்ய , போனை அட்டெண்ட் செய்து ஹலோ என்று அர்ஜுன் கூறிய அடுத்த நொடி “டேய், நான் ஆதிராவோட ஷாப்பிங் போறேன் “. அதற்கு அர்ஜுன் “ஹேய் ” என்று கூறி முடிப்பதற்குள் ரியா, “ஆமாடா, நீ காலையில் போன் செய்து சொன்ன. ஆனா, எனக்கு இப்போ ஷாப்பிங் போகணும். நீ திட்டுறதா இருந்தா நாளைக்கு திட்டு. எனக்கு இன்னைக்கு என்ஜாய் பண்ணனும். பாய்” என்று கூறி வைத்து விட்டாள் அர்ஜுன் கூறுவதை காதில் வாங்காமல்.

பின்பு ஆதிராவும், ரியாவும் கீழே இறங்கி வர ரியாவைப் பிடித்து தலையில் கொட்டி கையை வளைத்து அடித்து நொறுக்கினான் அர்ஜுன்.

ஆதிரா அமைதியாக பார்க்க, அசோக் சிரித்துக் கொண்டிருந்தான். “அஜ்ஜு, அஜ்ஜு ப்ளீஸ்டா விடுடா விடுடா.”என்று அவள் கதற கதற அடித்து விட்டு தான் விலகினான்.

“எந்த அம்மே, ஆதிரா “ரியா புலம்ப, ஆதிரா”என்னடி பண்ண? “

” போன் பண்ணாங்கனா என்ன பேசுறாங்கனு  முதல கேட்கனும். ஷாப்பிங்னா வாயைப் பிளந்துறது” என்று அர்ஜுன் மறுபடியும் தலையில் கொட்டு வைத்தான்.

“டேய், அழுதுற போறாடா விடு ” என்று அசோக் கூறி அர்ஜுனும் ஷாப்பிங்க்கு தான் ரியாவை அழைத்ததைக் கூறினான்.

பின்பு ஆகாஷையும் அவனது மருத்துவமனையில் அழைத்து கொண்டு மாலிற்கு  சென்றனர்.

ஆதிரா உள்ளே நுழைந்தவுடன்  அவர்கள் புறம் திரும்பி அனைவரிடமும்  இந்நாள் செலவு உங்கள் அனைவருடையது என்று சொல்லி ரியாவை இழுத்துக் கொண்டு சென்று விட்டாள்.

ஆகாஷ் தான் முறையிட்டான் ரியாவையும் அதில் சேர் என்று. ஆதிரா சிறிது நேரம் யோசித்து விட்டு “ஒகே, இன்னைக்கு செலவு அர்ஜூன், அடுத்தடுத்த நாள் நாம் ஷாப்பிங் போவோம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொருத்தர் செலவு “என்று கூறி சென்று விட்டாள்.

அதிர்ச்சியாகிய ஆகாஷை
“மொத்தமா பில் போட்டு இருப்பா, பங்கு போட்டு பிரிச்சு இருந்துருக்கலாம். தேவையில்லாம
இழுத்து விட்டுட்ட “என்று கூறி அடித்து துவைத்தனர் அர்ஜுனும் அசோக்கும்.

ஆனாலும், தனது பாண்டவர் குழுவில் நடக்கும் முதல் விசேஷம் என்பதால் அனைவரும் ஷாப்பிங் செய்து, உண்டு  மகிழ்ந்து  அம்மாலை பொழுதை களித்தனர்  .

அனைவரையும் அவரவர் வீட்டில்  விடும் நேரம் ஆதிராவுக்கு அவனது மருத்துவமனையில் இருந்து அழைப்பு வந்தது. அவளை உடனடியாக ஊருக்கு கிளம்பி வருமாறு கூறி விட்டனர்.

எமர்ஜென்ஸி என்பதால் வசுதேவர் அய்யாவிடம் கூறிவிட்டு அவளை பஸ்ஸில் ஏற்றி விட்டான் அர்ஜுன்.

பஸ் ஸ்டாண்டில் அர்ஜுன் அவள் கையைப் பிடித்து “ரோஹித் உன்னை நல்லா பார்த்துப்பானா? நீ சின்ன வயசில் உள்ள க்ரஷ்னால ஒகே சொன்னியா? எனக்கு பயமா இருக்கு? அன்பு போனப்புறம் ரொம்ப விரக்தி, கோபம்னு இருந்தேன். நீ வந்த இந்த மூணு நாளு தான் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனானேன். நான் பண்ண தப்பை நீயும் பண்ணிறாத. பயமா இருக்கு ஆதி!” என்று கண்கள் கலங்க கூறினான்.

அவனை கட்டியணைத்து ஆசுவாசப்படுத்தி விட்டு “எல்லாம் ஒகே தான். நான் ரொம்ப பாதுகாப்பான இடத்துக்கு தான் போறேன். முக்கியமா நான் உன் பாதுகாப்பில் தான் இருப்பேன். கவலைப்படாதே. உன் கவனத்தை  ராகவேந்தர் சார் ப்ராஜெக்ட் பக்கம் திருப்பு. யாரோ உன்னை அழிக்க பாக்கிறாங்கனு சொன்ன அதை விருப்பம் இருந்தா தாத்தாக்கிட்ட சொல்லு.இல்லையா நீயே பார்த்துக்கோ. மொத்ததில் பத்திரம் ” என்று கூறியவுடன்

அவளைப் பார்த்து புன்னகைத்து “எப்பவும் எங்களைப் பத்தித் தான் நினைப்பியா?”

வசுதேவர் தான்  இவர்களை கெடுப்பதே ஆதிரா தான், ஆதிராவை கெடுப்பது இவர்கள் தான் என்று நினைத்து பிரித்தார்.

அதனால் தான் அர்ஜுனுக்கு வசுதேவர் மேல் கோபம். இப்பொழுது கல்யாணமும் ஊட்டியில் என்று நினைத்து பொங்கி விட்டான். ஆனால், ஆதிராவுக்கு பிடிக்கின்றது என்பதால் அமைதியாகி விட்டான்.

மாலில்  ரியாவை எடுத்த போட்டோவை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான். முதன் முதலில் சைட்டில் பார்த்த ஞாபகம் வந்தது அபிஷேக்கிற்கு.

அவளது மீன் போன்ற கண்களும், கூர் நாசியும், ஆரஞ்சு சுளைகளைப் போன்ற உதடுகளும், அவளின் மினுமினுப்பான முடியும், அதை அழகாக பட்டர்ஃபிளை கட் செய்துப் போட்ட போனி டெய்லும், அவள் வயதுக்கு உற்ற உயரம் இல்லாமல் சிறு குழந்தை போல் இருப்பவள் மனதால் கூட யார் மனதையும் புண்படுத்த தெரியாதவள். தாத்தாவிற்கு இக்கால முறையினை அழகாக எடுத்துக் கூறுபவள். தெரியாதவர்களிடம் சிறு புன்னகை கூட அரிது என்றிருப்பவள் தனது நண்பர்களிடம் சிறு குழந்தையாக இருப்பாள்.

அவளை கிட்டதட்ட ஏழு வருடங்களாக பின் தொடர்கிறான். அவளின் ஒவ்வொரு அசைவைகளையும் ஞாபகங்களாக சேர்த்து வைத்திருக்கிறான்.

டேபிளிக்கு அருகில் உள்ள லாக்கரில் இருந்து ஒரு ஓவியத்தை எடுத்தான்.அதில் ரோஹித்துடன் அர்ஜுன் மற்றும் ஆதிரா சண்டையிடும் பொழுத அருகில் நின்ற ரியாவின் வரைப்படம்.அதை தத்ரூபமாக வரைந்திருந்தான் அபி.

அன்றிலிருந்து இன்று வரை காதலை சேமித்துள்ளான். ஆரியனை வம்பிழுத்த குழுவில் ஒருவனாக இருந்தவனே அபி.

இத்தனை வருடமாக  அவளுக்கே தெரியாமல் பின் தொடர்ந்தவனுக்கு அவளே தன்னை பார்ப்பாள் என்று நினைக்கவில்லை.

அவள் பார்த்த நொடி மேனி சிலிர்த்தது. எங்கு தான் பார்த்தால் திரும்பி விடுவாளோ என்ற அச்சத்தில் திரும்பாமல் இருந்தான்.அந்நிமிடமும்,அவளை கண்டுக் கொள்ளாமல் இருந்ததால் மூக்கு விடைக்க நின்றதும் அவன் மனக்கண் முன் தோன்றிக்கொண்டே இருந்தது.

அந்த இரு நிகழ்வுகளையும் வரைபடமாக உருவாக்கிக் கொண்டிருந்தான்.

இது எதுவும் தெரியாமல் உடையும், உணவும் கிடைத்த மகிழ்ச்சியிலும், வெகு நாட்கள் கழித்து நண்பர்களுடன்  கழித்த பொழுதினால் மனம் ஆனந்தம் அடைந்ததிலும் துயில் கொண்டாள்.

அபி  வரைந்து முடித்து அவள் வரைப்படத்திற்கு  முத்தம் கொடுத்து காதலை சொல்லும் நாளுக்காக காத்துக் கொண்டிருந்தான்.

அவனுக்கு தெரியவில்லை ரியாவிற்கு தெரியும் பொழுது இவனே அவளை காதலிக்கவில்லை என்று கூறுவான் என்று.

கீர்த்தி☘️

                     

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்