Loading

எனதழகா – 13❤️

ஆதிராவை அவள் வீட்டில் விட்டு  ஆபிஸிற்கு செல்லும் வழியிலேயே அர்ஜுன் ஆகாஷிற்கு கால் செய்தான்.

“குட்மார்னிங் சார்,  டாக்டர் ஒரு சர்ஜரில இருக்காங்க. அவங்க வர்றதுக்கு இன்னும்  2 ஹவர்ஸ் மேல ஆகும். எதுவும் முக்கியமான விஷயமா சார்? ” என்று ஒரு நர்ஸ் கால் அட்டண்ட் செய்து கூறினாள்.

அர்ஜுன்”இல்லை, நத்திங் இம்பார்டண்ட் வந்ததற்கு அப்புறம் கால் பண்ணால் போதும். எதுவும் எமர்ஜென்ஸியா ? “

“எஸ் சார். மிட் நைட்டில் ஒருத்தருக்கு முடியலைனு  கேசவ் சார் சொன்னாங்க. அதுதான் சார் நைட் இரண்டு மணிக்குலாம் வந்துடாங்க. நாலு மணிக்கு ஆப்ரேஷன் ஆரம்பிச்சுட்டாங்க”

அர்ஜூன் , ” ஓகே. வந்தவுடனே கூப்பிட சொல்லுங்க மிஸ் ” என்று கூறி வைத்து விட்டு அடுத்ததாக  ரியாவிற்கு கால் செய்தான்.

காபி ஷாபினில்  தன் கோபம் தணியும் வரை அமைதியாக கண்மூடி அமர்ந்திருந்தாள். ஆனால், அவன் முகமே திரும்ப திரும்ப அவள் ஞாபகத்திற்கு வந்தது. வந்தவுடன் அவள் உதட்டில் புன்னகையும்  அவனால் ஏற்படும் கன்னச் சிவப்பும் சிலிர்ப்பை உண்டாகியது. ஆனால், மறுநிமிடமே அவன் தன்னை அவமானப்படுத்தியது தோன்றி அவள் முகம் சிவப்படைந்தது ,ஆனால் கோபத்தினால்.

இவ்வாறு அவள் மனதினில் ஒரு  பனிப் போர் நடந்துக்கொண்டிருந்தது.அந்த நேரம் அவளுக்கு கால் வந்தது.

அர்ஜுன் அவள் கால் எடுத்தவுடன் “ஈவ்னிங் எதுவும் செடியூல் வச்சுக்காத.ஆதிரா நிச்சயதார்த்ததுக்கு ஷாப்பிங் போக போறோம். நீ நேரா நம்ம மாலுக்கு வந்திடு . எனக்கு கால் வருது. மறக்காமல் வந்திடு” என்று படபடவெனக் கூறி வைத்து விட்டான்.

ரியாவும் ஒன்றும் கூறாமல் வைத்து விட்டாள். பின்பு ஆதிராவுக்கு அழைத்து காபி ஷாபிற்கு அழைத்தாள். வழக்கம் போல் அவள் புலம்ப ஆரம்பிக்க “வேணாம் தாயி,நானே உன் வீட்டிற்கு வருகிறேன் “என்று கூறி ஆதிரா வீட்டிற்கு சென்றாள்.

போகும் வழியில் தன்னை யாரோ ஃபாலோ செய்வது போல் தோன்ற வண்டியை நிறுத்தி திரும்பி பார்த்தாள். லட்சக்கணக்கில் செல்லும் வண்டிகளில் தன்னை யார் பின் தொடர போகிறார்கள். தன் கற்பனையே என்று நினைத்து சென்ற விட்டாள்.

ஆதிராவின் அப்பார்ட்மெண்டில் காலிங் பெல் அடித்து விட்டு அவள் திறப்பதற்கு  காத்துக் கொண்டிருந்த பொழுது பின்புறத்தில் இருந்து ஒரு குரல் “மேம்” என்று.ரியா திரும்பி அதிர்ந்து விட்டாள்.அந்தோம் கதவும் திறக்க ஆதிராவை கட்டியணைத்து அழுது கரைந்தாள்.

ஆபிஸின் உள்ளே நுழையும் போதே  அர்ஜுன் மற்றும் அசோக்கிற்கு ஒரு வித வித்தியாசம் தோன்றியது. அனைவரும் அவர்களுக்குள்ளேயே சலசலத்துக் கொண்டனர்.

அர்ஜுனின் கேபினின் அருகில் சென்றவுடன் பிரகாஷ் மற்றும் சாரா வேகமாக  இவர்கள் அருகில் ஓடி வந்து  “சார், மிஸ்டர் ராகவேந்தர் வந்திருக்கிறார்” ஒருச்சேரக்  கூறினார்.

“வாட்?” என்று அதிர்ந்த நின்ற அசோக்கை தட்டி ஒரு நிலைக்கு கொண்டு வந்தான். தன்னையும் நிலைப்படுத்திக் கொண்டான்.

கதவைத் திறந்து அர்ஜுன் மற்றும் அசோக் ஒரு சேரக் “வணக்கம் சார். வெல்கம் “.

ராகவேந்தர்”ஹலோ , யங் ஜென்டில் மென். தேங்க யூ ஃபார் வெல்கம்மிங் ஹாப்பி டு சீ யூ”

அசோக் , “இட்ஸ் அவர் பிளஸர்  சார். ரொம்ப நேரம் வெயிட் பண்ணுறீங்களா சார்?”

ராகவேந்தர், ” நோ மேன். வந்து அஞ்சு நிமிஷம் தான் ஆகுது.”

அர்ஜூன், “சார் பீவரேஜஸ் ?”

ராகவேந்தர் “எனி ஃபிரஸ் ஜூஸ்?”

“சூயர் சார்” என்று கூறி பெல் அழுத்தி அவருக்கு ஆர்டர் செய்து விட்டு அவரை நிமிர்ந்து பார்த்தான்.

சிரித்துக் கொண்டே “அர்ஜுன், கேன் ஐ கால் யூ அஸ் அர்ஜுன் ஆர் மிஸ்டர் அர்ஜுன் ?” என்று ராகவேந்தர் கேட்க

அர்ஜுன்”சார், யூவர் விஸ்”. ராகவேந்தர் , “ஓகே அர்ஜுன். நான் நேரடியா விஷயத்துக்கு வரேன். என் கம்பெனி பத்தி எல்லாமே தெரியும். அதுல சில டெக்னாலஜிஸ் கொண்டு வரணும்னு இருக்கேன். அத நான் இன்னொரு கம்பெனிக்கு கொடுத்தேன். ஆனால், சரியா படல. சோ, நான் அக்கிரிமெண்ட  ஸ்டாப் பண்ணிட்டேன். இதுல அதுக்கான டீடெயிஸ் இருக்கு. பாத்துட்டு சொல்லு” என்று கூறி ஃபைலை அவன் முன் தள்ளினார்.

அதை வாங்கிய அர்ஜுன் திறந்து பார்க்காமல்” ஒகே சார். நாங்க பண்ணுறோம்” என்றான்.

ராகவேந்தர் நக்கலாக சிரித்தார் நீயும் அவ்வளவுதானா என்று. அசோக் அவருக்கு அருகிலுள்ள  நாற்காலியில் அமர்ந்ததால் அவரிடம் திரும்பி “உங்க சிரிப்பு புரியுது சார். முடியுமா முடியாதானு டீடெயிஸ் பார்க்காம நீங்க என்பதால் ஒகே சொல்றோம்னு நினைக்கிறிங்க ” என்று பொறுமையாக கூறினான்.

மெச்சுதலாக பார்த்த ராகவேந்தரிடம் அர்ஜுன், ” சார், உங்களுக்கு தெரியுமா தெரியாதானு எங்களுக்கு தெரியலை. நாங்க இந்த ப்ராஜெக்ட் கிடைக்க அவ்ளோ ட்ரை பண்ணோம். பட் அப்போ கிடைக்கலை. அதனால் நாங்க முன்னாடியே ஸ்டடி பண்ணது தான். நீங்க எக்ஸ்ட்ரா ஏதாச்சும் சேர்த்து இருந்தால் கூறுங்கள் ” என்று நிமிர்வுடன் கூறினான்.

“யங் பாய்ஸ் ஆர் ஆல்வேஸ் இன் ஃபையர் மோட் ரைட்” என்று ராகவேந்தர் கூறி அசோக்கின் தோளைத் தட்டினர்.

பின்பு அவர் அனைத்தையும் கூற பொறுமையாக கேட்டு கொண்டவர்கள் , அர்ஜூன் அவனுடைய லேப்டாப்பை அவரிடம் திருப்பி அவர் சொல்லும் ப்ராஜெக்ட் இவர்கள் உருவாக்கிக் கொண்டிருப்பதைக் காட்டினார்கள்.

அதிர்ச்சியடைந்த அவர் மேலும் சில விஷயங்களைக் கூறியவர் கடைசியாக இதை ஒரு மாதத்திற்குள் எனக்கு முடித்துத் தர வேண்டும் என்று கூறினார்.

அதில் அதிர்ந்த இருவரும்  “டோன்ட் வேஸ்ட் யூர் ஆப்பர்சுனிட்டி அண்ட் யூர் டேலண்ட்” என்று கூறி விடைபெற்றுக் கொண்டார்.

அவர் இவர்களிடம் செய்கிறாயா என்று கேட்காமல் செய் என்று கூறிச் சென்று விட்டார். அதனால் இவர்களுக்கு ஆனந்தமே.

ஏற்கனவே செய்யும் ப்ராஜெக்ட்களுக்கு மத்தியில் இதையும் சேர்த்து எப்படி முடிக்க வேண்டும் என்று புதிய அட்டவணையை உருவாக்க பிராகஷிடம் கூறினர்.இதற்கு நல்ல  டீம்  உறுப்பினர்களை 
தேர்ந்தெடுக்கும் வேலையை சாராவிடம் கொடுத்தனர்.

🏠ஆதிரா அப்பார்ட்மெண்ட்ஸ்

ஆதிராவைக் கட்டிக் கொண்டு அழுத ரியா ,”தேங்க்ஸ்டி, என் மனநிலையை புரிஞ்சுக்கிட்டதுக்கு. நல்லவேளை சாப்பாடு ஆர்டர் பண்ண. எனக்கு கோபம் கோபமா வருது அவனை நினைச்சாலே. அதான் தாத்தாக்கு போன் பண்ணி லீவ் சொல்லிட்டேன் “

“என்னது, உனக்காக வாங்குனேனா? நமக்கு பசிக்குதுனு வாங்குனோம். சரி , நம்மளும் அப்படியே வச்சுக்குவோம்.”என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு ரியாவிடம் ,”லீவ் சொன்னதுக்கு தாத்தா ஒன்னும் சொல்லலாயா?” கேட்டாள் ஆதிரா.

ரியா”எப்போவாச்சும் லீவ் எடுக்கிறதுனால ஒன்னும் சொல்ல மாட்டாங்க. பிட்சா சொல்லலையா. எனக்கு பிடிக்கும்னு உனக்கு தான் தெரியுமே? “

ஆதிரா மனதிற்குள் “உனக்காகவா  வாங்குனேன் உனக்கு பிடிச்சதா பார்த்து வாங்க கிராதகி” திட்டிக் கொண்டே ரியாவுக்கு பிடித்த உணவை ஆர்டர் செய்தாள்.

பின்பு, உணவு வந்தவுடன் இருவரும் சாப்பிட்டு கொண்டே அபிஷேக் பற்றி பேசினர்.

ரியாவின் போட்டோவை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தவன், “குள்ளச்சி, நீ இன்னும் வளரவேயில்லை ” என்று கூறி அவள் போட்டோவிற்கு முத்தம் கொடுத்தான் அபிஷேக்.

கீர்த்தி☘️

 

                          

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்