Loading

எனதழகா – 3❤️

அர்ஜுன் தனது கேபினில் இருப்பவளைப் பார்த்து ஒரு நொடி அதிர்ந்து பின் நக்கலாக பார்த்தான்.

“என்ன மேடம் எங்களை எல்லாம் நியாபகம் இருக்கா? காலேஜ் எல்லாம் சொல்லாம  போய்டீங்க? அவ்வளவு வேண்டாதவர்களா ஆகிட்டோமா நாங்க?”

“அப்படிலாம் இல்ல… நான் …”கைகளை பிசைந்துக் கொண்டே சொல்ல வந்தததை சொல்ல முடியாமல் திணறினாள்.

அவள் செய்வதை கைக் கட்டி முறைத்துப் பார்த்தான்.” என்ன காண்டாகுதா? பின்ன என்னடா ? மரியாதைலாம் கொடுத்து நக்கலா வேற கேள்வி கேட்குற?” என்றாள்.

“உன்னிடம்  பேசி ஜெயிக்க முடியுமா?”

“டேய் …. டேய்…. காதல் தோல்வியான அடுத்தவங்க மனசுலையும் சோகத்த நிரப்பாதீங்கடா…..நான் நல்ல விஷயம் சொல்ல வந்துருக்கேன்”

அர்ஜுன் இதைக் கேட்டு அதிர்ச்சி ஆகி வாயைத் திறந்து கொண்டு பார்த்தான் இவளுக்கு எப்படி தெரியும் என்று. உள்ளே வந்த அசோக் இச்சம்பாஷனைகளைக் கேட்டு ஒரு நொடி அதிர்ந்து விட்டு பின் சிரித்து விட்டான் .

அதில் சுயநினைவுப் பெற்று இருவரையும்  முறைக்க  முயற்சி செய்தவன் அதில் தோல்வி பெற்று இருவருடனும் சேர்ந்து சிரித்தான். நண்பனின் சிரிப்பைக் கண்டு கண்கள் கலங்கினாள் ஆதிரா. ஆதிரா அர்ஜுனின் ஆருயிர் பால்ய தோழி. நலம் விரும்பிக் கூட.

சிறு வயதில் பவித்ரா பிறந்தநாளுக்காக கருணை  இல்லத்திற்கு சென்ற போது அர்ஜுனுக்கு கிடைத்த இரு நட்புகள் ஆதிரா மற்றும் அசோக்.

இவர்களின் படிப்புக்கு சிறு வயதிலிருந்தே வசுதேவர் ஸ்பான்சர் ஆக உள்ளார். படிப்பில் கெட்டியான இவ்விருவரும் வெற்றி அடைந்தனர் அவர் அவர் வாழ்க்கையில். இதில் வசுதேவர்க்கு எப்பொழுதும் பெருமிதம் இருக்கும்.

ஆகாஷ் மற்றும் ரியா பள்ளியில் கிடைத்த நட்பு. ஜவரும் பஞ்ச பாண்டவர்கள் போல் இருப்பர் .

ஆதிரா மற்றும் ஆகாஷ் MBBS படித்து விட்டு , ஆகாஷ் நரம்பியல் நிபுணருக்கு படித்துக் முடித்து ஒரு பெரிய மருத்துவமனையில் வேலைச் செய்துக் கொண்டிருக்கிறான். ஆதிரா லண்டனில் உதவித்தொகையில் மகப்பேறு நிபுணருக்கு படித்து முடித்து ஊட்டியில் ஒரு மருத்துவமனையில் வேலையில் உள்ளாள்.

“சிரிச்சது போதும் என்ன விஷயம் அதிசயமாக இந்த பக்கம் காத்து அடிக்குது? ” என்று  அர்ஜுன் கேட்டான்.

” காத்து அடிக்குது காத்து அடிக்குது” ஆதிரா பாடினாள்.”ஜீம்சுசக்கு ஜும்சுசக்கு” என்று கோரஸாக பாடினான் அசோக்.

காசி மேட்டில் காத்து அடிக்குது” என்று ஆதிரா  பாடி அசோக்குடன் அர்ஜுனை பார்த்தாள்.

தலையில் அடித்துக் கொண்டு “ஜீம்சுசக்கு ஜும்சுசக்கு” என்று சிரித்துக கொண்டே பாடினான்.

” அது எங்க அஜ்ஜு ” என்று ஆதிரா தனது நண்பனை கழுத்தோடு கட்டிக் கொண்டாள்.

“வளருங்கடா “ஆதிராவை தலையில் கொட்டிக் கூறினான். “வாழுங்கடா” என்று அசோக் இருவரின் கழுத்தைக் கட்டிக் கொண்டே….

அசோக்”சரிடி போதும் போதும் வந்த விஷயத்தை சொல்லு”. உனக்கு தெரியாத விஷயங்களா  என்று சந்தேகப் பார்வைப் பார்த்தான் அர்ஜுன்.

“ஆமா, ஏன் இரண்டு பேரும் பேசிக்கிறது இல்ல?” என்று கேட்டாள் ஆதிரா.ஆதிராவை மெச்சுதலாகப் பார்த்தனர் இருவரும்.

“நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லையே”என்று கூறி அர்ஜுன் தாடையைத் தடவினான்.

“அப்போ சொல்ல மாட்ட” என்று அவனைப் போலவே தாடையைத் தடவினாள்.

அசோக்”அய்யோ , உன்னிடம் சொல்லாமல் எங்களுக்கு தனிப்பட்ட விஷயம் இல்லை. நான் பிறகு சொல்கிறேன் “.ஆதிரா “எப்பவும் போலத்தானா இல்ல சிரீயஸா?

அர்ஜுனன் கடுப்பாகி ” என்ன விஷயம் ஆதி? “. ஆதி என்று கூறினாலே கோபமாகிறான் என்று புரிந்ததால் அவள் அமைதியாகி விட்டாள்.

அவர்கள் மனநிலையை மாற்றும் பொருட்டு ஆதிரா அசோக் சட்டைக் பட்டனைப் பிடித்து சுற்றிக் கொண்டே “அது… அது….”.

” உவக்” “ச்சீ” என்று கோரஸாக கூறினர். முறைத்து   கொண்டே “இந்நேரம் நான் சொல்ல வருவதை தெரிந்து வைத்திருப்பீர்களே?” என்று கேட்டாள்.

அசோக்”நீயும், தாத்தாவும் சேர்ந்து உன் தனிப்பட்ட விஷயத்தில் தலையிடக் கூடாது என்று லண்டனுக்கு செல்லும் போதே கூறிய நியாபகம் எனக்கு?”

ஆதிரா கண்களை விரித்து , ஒரு புருவம் உயர்த்தி  “அதனால் எனக்கு பாதுகாப்பு போடவில்லையா?” என்று நக்கலாக கேட்டாள்

அர்ஜுன் “பாதுகாப்பு போடவில்லை என்று சொல்லவில்லையே. உன்னை பத்தி நீயே சொல்லாமல் எந்த விஷயமும் எங்களுக்கு தெரியவராது. நீ எங்கு தங்குகிறாய், நீ எங்கு போகிறாய் வருகிறாய், உன் ஹாஸ்பிட்டலில் உள்ள சக நண்பர்கள். இப்படி எதுவுமே நான் உன் பாடிகார்ட்ஸிடம் கேட்பதில்லை உன் பாதுகாப்பைத் தவிர”

ஆதிரா “பரவாயில்லை தாத்தாவிற்கு மதிப்பு கொடுத்துள்ளாய்”. அசோக்” பயமும் தான்” என்று முணுமுணுத்தான். மூவரும் தாத்தா பேசுவதை நினைத்து பார்த்து சிரித்து கொண்டனர்.

வசுதேவர் என்ன தான் இக்காலத்திற்கு வந்தாலும் அவரும் ஒரு சில விஷயங்களில் பழமைவாதியே. யாராவது ஏதாவது தவறாக செய்தால் சத்தம் போட மாட்டார். மாறாக ஆலோசனை வழங்க ஆரம்பத்தி விடுவார். 

சில நேரங்களில் அது ஒரு மணி நேரம் ஏன் இரண்டு, மூன்றுமணி நேரங்கள் கூட ஆகலாம். அதற்கு பயந்தே அவர் சொல்வதை கேட்டுக் கொள்வர் அனைவரும்.

அசோக்” சரி சொல்லு , எப்படி போகிறது உன் வாழ்க்கை, உன் வேலை எல்லாம்”.

“எல்லாம் சூப்பர் டா. பயிற்சி காலமும் அருமையா போகுது. அதே மருத்துவமனையில் வேலை பார்க்கும் ஒரு பெண்ணோடு தான் ஒரே அறையில் இருக்கிறேன். இரவு டியுட்டிலாம் வரும். கற்றுக் கொள்ள வேண்டும் என்று சென்று விடுவேன். அதுவும் மருத்துவமனைக்கு அருகிலேயே என்னுடைய விடுதி இருப்பதனால் “.

“அப்போ திருந்தி விட்டாய்?” அசோக் அதிர்ச்சியாக கேட்டான்.

“திருத்தவும் இல்லை வருந்தவும் இல்லை. கொலை கேசுல உள்ள போய் விடக் கூடாதுனு ஒரு சபதம் எடுத்திக்கிறேன். அதனால் தான் இவ்வளவு மெனகெட்டு செய்கிறேன்” என்று ஆதிரா கூறினாள்.

திருந்தாத ஜென்மம் என்று தன் தலையில் அடித்துக் கொண்டான் அசோக்.

“நீ ஏன் ப்ரோ சிரமப்படுற? நான் எதுக்கு இருக்கேன் ? “என்று நன்றாக தலையை அடித்தத்தோடு இல்லாமல் தலை முடியை பிடித்து  ஆட்டி விட்டு தான் நகர்ந்தாள்.

ஒரு நிமிடம்  கண் கலங்கி விட்டது அசோக்கிற்கு.

“பிசாசு, பிசாசு மாறி அடிக்கிற,ச்சீ….நீ எல்லாம் ஒரு டாக்டர் ” என்று அவன் தலையை தடவிக் கொண்டே கூறினான்  அசோக்.

தன் கூலர்ஸை ஸ்டைலாக மாற்றிக் கொண்டே சிரித்தாள். எவ்வளவு முன்னேறினாலும் அவளின் குழந்தை தனம்  மாறாமல் இருப்பதே அவளுக்கு அழகு.

அசோக்கும், அர்ஜுனும் அவள் செயலை ரசித்தனர். அவர்களுக்கு இவள் தோழி, அம்மா,மகள் போன்றவள் .

சிறிது நேரம் அமைதியாகி பின்பு,
அவர்களை நிமிர்ந்து பார்க்காமல் தயங்கி தயங்கி  “ஒரு நாள் நான் வேலையில் இருக்கும் பொழுது என் அருகில், முகத்தில் மாஸ்க் அணிந்து தலையில் தொப்பி அணிந்து கொண்டு என்னை பார்த்துக் கொண்டே இருந்தான்”

அர்ஜுன் அவள் வதனத்தை முதலில் இருந்தே கவனித்துக் கொண்டுத் தான் இருந்தான். அதனால் அமைதியாக அடுத்து சொல் என்பது போல் பார்த்தான்.

அவள் இவ்வளவு கூறியும் சந்தோஷமாக எதுவும் கேட்காமல் இருப்பது  அவளுக்கு கிலி உண்டாகியது.

இருந்தும் தைரியத்தை உண்டாக்கி   “அவன் ரோஹித், நம்ம ஸ்கூல் சீனியர்”.

எதிர்பார்த்தேன் என்பது போல் அர்ஜுன் பார்த்தான். அசோக் அவளை முறைத்துக் கொண்டிருந்தான்.

“அவன் எனக்காகத் தான் வந்தானாம்!”

ரோஹித்தை சந்தித்த நாள் அர்ஜுனுக்கு நினைவலைகளாக தோன்றியது.

அப்பொழுது கதவு தட்டும் சத்தம் கேட்டு  நிதர்சனதிற்கு வந்தான்.

ஆதிரா இவ்விஷயத்தில்  நண்பர்களுக்கு  மகிழ்ச்சியை தருபவளா இல்லை சோகத்தைக் இன்னும் சேர்க்கப் போகிறவளா?

கீர்த்தி☘️

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்